உடன்பிறப்புக்களே.... உங்க கலைஞர் அய்யா
உங்களை வெச்சி காமடி - கீமடி பண்ணலியே...?
தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சர் கலைஞர் அய்யா இருக்காருங்களே... அவரு ஓய்வு பெற்றதிலிருந்து கொஞ்ச நாளா ஏதாவது உளறிகிட்டே இருக்காருங்க... ஓ.. சாரி... பேசிகிட்டே இருக்காருங்க... ஓய்வுபெற்ற பின் தமிழக மக்கள் அவரை மறந்துடப் போறாங்கன்னு அவருக்கு பயம் வந்துடுது. இது மாதிரியான நேரங்களில் அவர் மக்கள் மனசில ஆழமா பதியறதுக்கு வழக்கமா ஏதாவது செய்வாரு. வழக்கமா இந்தி பிரச்சனையை தான் கையிலேடுத்துப்பார்... இந்தி பிரச்சனை - வடக்கு வாழ்கிறது - தெற்கு தேய்கிறது போன்ற இவைகள் எல்லாம் இப்ப காலாவதியாயிடுத்து. இன்றைக்கு அவருடைய பேரன் - பேத்திகளே இந்தி படிக்க ஆரம்பிச்சிட்டாங்க.... அவரு என்ன செய்வாரு பாவம்..
அதனால இந்தி பிரச்சனையை கையிலெடுக்காமல், கொஞ்ச நாட்களுக்கு முன்பு இதேப்போல் காலாவதியான வேறுவொரு பிரச்னையை கருணாநிதி கையிலெடுத்தார். சென்ற ஏப்ரல் 25 - ஆம் தேதியன்று வடசென்னையில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில், இதுவரையில் தனக்கு நிறைவேறாத கனவாக இருப்பது தனி ஈழம் தான் என்றும், பக்கத்து நாடான இலங்கையில் தனி ஈழ நாடு பெற்றுத் தராமல் நான் சாகமாட்டேன் என்றும் வீராவேசமாக பேசி, உயிரே இல்லாத இயக்கமான ''டெசோ'' என்கிற தமிழீழ ஆதரவாளர்கள் அமைப்புக்கு உயிர் கொடுத்தார். இலங்கையில் தமிழினம் தலைநிமிர உடல், பொருள், ஆவி அனைத்தையும் தரத் தயங்கமாட்டேன் என்றும் நீட்டி முழங்கினார். இப்படி எல்லாம் பேசியதன் மூலம் இலங்கைத் தமிழர்கள் மீது தனக்குள்ள ''நீங்காத'' பாசத்தை காட்டி ( தான் ஆட்சியிலிருக்கும் போது செய்யாமல் ) தமிழக மக்கள் மத்தியில் ஆச்சரியத்தையும் அதிர்ச்சியையும் உண்டாக்கினார். தேர்தல் தோல்வியால் சோர்ந்து போன தன்னுடைய தொண்டர்களையும் இதன் மூலம் உற்சாகப்படுத்தினார்.
இதைத் தொடர்ந்து, ஏப்ரல் 30 - ஆம் தேதியன்று சென்னையில் தமிழீழ ஆதரவாளர்கள் அமைப்புக் கூட்டத்தை கூட்டினார். அந்தக் கூட்டத்தில், இலங்கை தமிழர் பிரச்சனை தீர்வதற்கு தனித்தமிழ் ஈழம் அமைவதைத் தவிர வேறு வழியில்லை என்றும், தனித்தமிழ் ஈழம் விரைவில் அமைய தமிழர்கள் வாழும் பகுதியில் ஐ நா மன்றம் பொது வாக்கெடுப்பு நடத்தவேண்டும் என்றும், அதற்கு இந்திய அரசு எல்லாவிதமான முயற்சி மேற்கொள்ளவேண்டும் என்றும் மத்திய அரசை வலியுறுத்தி தீர்மானம் ஒன்றை நிறைவேற்றினார். அவர் முன்மொழிந்த இந்தத் தீர்மானத்தை அவரது உடன்பிறப்புக்கள் பாராளுமன்றத்தில் வழிமொழிந்தனர்.
முதலில், வரும் ஆகஸ்ட் 5 - ஆம் தேதியன்று விழுப்புரத்தில் ''டெசோ'' மாநாடு நடத்தப்படும் என்றும் அந்த மாநாட்டில் தனித்தமிழ் ஈழத்திற்கான தீர்மானம் நிறைவேற்றப்படும் என்றும் அறிவித்தார். பிறகு, அந்த மாநாட்டின் தேதியையும், இடத்தையும் மாற்றி அறிவித்தார். ஆகஸ்ட் 12 - ஆம் தேதி சென்னையில் நடைபெறும் என்று மாற்றி அறிவித்து அதற்கான வேலைகளையும் முடுக்கிவிட்டார்.
இதற்கிடையில், மத்திய உள்துறை அமைச்சர் பானா சீனா ( ப. சிதம்பரம் தான் ) சென்னைக்கு வந்து இந்த ''டெசோ'' தலைவரை சந்தித்துவிட்டுப் போனார். இந்த சூழ்நிலையில் தான் மத்திய அரசும் விடுதலைப்புலிகள் அமைப்பின் மீதான தடையை நீட்டித்து உத்தரவு பிறப்பித்து, தமிழகத்தில் விடுதலைப்புலிகள் ஆதரவு சக்திகள் பலம் பெற்று வருவது என்பது வருத்தமளிக்கிறது என்றும் அறிவித்தது.
இதன் பிறகு தற்போது இவரது பேச்சில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. நேற்று முன் தினம் நடைபெற்ற பத்திரிக்கையாளர்கள் கூட்டத்தில் வரும் ''டெசோ'' மாநாட்டிம் தனி ஈழம் கோரி தீர்மானம் நிறைவேற்றப்பட மாட்டாது என்று இவ்வளவு ஏற்பாடுகளுக்குப் பின்னர் கருணாநிதி அறிவித்தது என்பது ''உடன்பிறப்புக்கள்'' மத்தியில் மீண்டும் அதிர்ச்சியையும் ஆச்சரியத்தையும் உண்டாகியுள்ளது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக