"இந்தியாவின் பிகாசோ" என்று ஓவியக் கலை வல்லுனர்களால் அன்புடன் அழைக்கப்படும் அற்புதமான ஓவியக் கலைஞர் எம்.எப். ஹுசைன் இன்று
( ஜூன் 9 - வியாழக்கிழமை ) காலை லண்டனில் காலமானார்.
பலவண்ண ஓவியங்களை இந்த உலகத்திற்கு தந்தவர். அதேப்போல் பல இளம் ஓவியர்களை உருவாக்கியவர். இவரது கலைத்திறனைப் பாராட்டி
இந்திய அரசு இவருக்கு பத்மஸ்ரீ, பத்மபூஷன், பத்மவிபூஷன் போன்ற உயரிய விருதுகளை அளித்து கௌரவப்படுத்தியிருக்கிறது. நாட்டில் பலபேர் இவருக்கு "பாரதரத்னா" விருது வழங்கவேண்டுமென்று மத்திய அரசிடம் கோரிக்கை வைத்தனர். கலை உலகத்தில் இந்தியாவின் அடையாளமாகவே மதிக்கப்பட்டார். ஓவியக்கலையில் அவரது எண்ணங்களும் ரசனைகளும் இறுதிவரை இளமைக்குறையாத 95 வயது கிழவர்.
இவர் ஒரு இஸ்லாமியர் என்பதால், இந்து மதவெறி கூட்டத்தினர் இவர் வரைந்த சரஸ்வதி ஓவியத்தில் குற்றம் கண்டுபிடித்து இவருக்கு இடைஞ்சல்கள் கொடுத்தனர். இவர் திரைப்பட இயக்குனராகவும் பணியாற்றியிருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இவர் மாநிலங்களவை உறுப்பினராகவும் பொறுப்பு வகித்திருக்கிறார்.
தன இறுதி காலத்தில் நாடற்றவராக வாழ்ந்த போது கத்தார் நாடு தான் அவரை பெருமனதுடன் தன் நாட்டுப் பிரஜையாக ஏற்றுக்கொண்டது.
“நான் என் தாய் நாடான இந் தியாவை நேசிக்கிறேன். ஆனால் என் தாய்க்கு நான் வேண்டாதவனாகிவிட்டேன்.
எனக்காகக் குரல் கொடுக்க அங்கு யாரும் இல்லை" என வருத்தப்பட்டார்.
இப்படிப்பட்ட உன்னதமான கலைஞனின் மரணம் என்பது கலைத்துறையில் ஒரு வெற்றிடத்தை தான் உருவாக்கி இருக்கிறது. இவரது இறப்பு என்பது கலை உலகத்திற்கு குறிப்பாக இந்தியாவிற்கு ஒரு பேரிழப்பாகும். வண்ணங்களுக்கு உயிர் ஊட்டிய அற்புதமான கலைஞனின் மூச்சுக்காற்று நின்று போய்விட்டது. எப்போதும் அவர் கையிலிருக்கும் தூரிகை இன்று ஓய்வு பெற்றுவிட்டது.
2 கருத்துகள்:
ஆழ்ந்த அனுதாபங்கள்.
dont shed tears for him. he is always fond of denigrating hindu gods. let him do it for muslims.
கருத்துரையிடுக