கேரளா மாநிலத்தில் அண்மையில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் வெற்றிபெற்ற பெரும்பாலான சட்டமன்ற உறுப்பினர்கள் தேர்தல் ஆணையம் அனுமதியளித்த தொகையை விட குறைவாகவே தேர்தல் செலவினை செய்து மற்ற மாநில அரசியல்வாதிகளுக்கேல்லாம் முன்னுதாரணமாக விளங்குகிறார்கள்.அவர்கள் அனைவரும் சேர்ந்தே சராசரியாக ரூ.9 லட்சம் மட்டுமே தேர்தலுக் கென்று செலவு செய்திருக்கிறார்கள் என்பது ஆச்சரியமான விஷயம் தான். ஏனென்றால், தேர்தல் ஆணையமோ அவர்கள் செலவு செய்ய அனுமதித்த தொகையோ ரூ.16 லட்சமாகும்.
கட்சிவாரியாக பார்க்கும் பொது, 19 முஸ்லீம் லீக் கட்சி உறுப்பினர்களும் சராசரியாக ரூ.10.54 லட்சமும், 34 காங்கிரஸ் கட்சி உறுப்பினர்களும் சராசரியாக ரூ.10.04 லட்சமும், 13 சி பி ஐ கட்சி உறுப்பினர்களும் சராசரியாக ரூ. 8.91 லட்சமும், 45 மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர்களும் சராசரியாக ரூ. 8.12 லட்சமும் தேர்தலுக்காக செலவு செய்திருக்கிறார்கள் என்பதை பார்க்கும் போது, தமிழ்நாட்டில் உள்ள திராவிட கட்சிகளின் அரசியல் கலாச்சாரம் என்பது நம்மை முகம் சுளிக்க வைக்கிறது.
தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்ற உறுப்பினர்களில் மிகக் குறைந்த அளவே தேர்தல் செலவுகளை செய்தவர் என்ற பெருமைக்குரியவர் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த தோழர். கே. குன்னிராமன் ஆவார். இவர் செய்த தேர்தல் செலவு வெறும் ரூ. 2,49,667 என்பது குறிப்பிடத்தக்கது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக