வெள்ளி, 3 ஏப்ரல், 2015

மாநிலங்களை வழிநடத்தும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சித்தலைவர்கள்...!


                 கடந்த ஆறு மாத காலமாக மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை நடத்தப்படும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கிளை மாநாடுகள், இடைக்குழு மாநாடுகள், மாவட்ட மாநாடுகள் என நாடு முழுதும் ஜனநாயக முறைப்படி நடத்தப்பட்டு முடிவடைந்த பின், மாநில மாநாடுகள் அனைத்து மாநிலங்களிலும் மக்கள் மற்றும் தொழிலாளர்கள் நலன் சார்ந்த கோரிக்கைகளை முன்வைத்து செம்மையாகவும், சிறப்பாகவும் நடைபெற்று முடிவடைந்த நிலையில், தற்போது வருகின்ற  14 முதல் 19-ஆம் தேதி வரை  விசாகப்பட்டினத்தில் நடைபெறவிருக்கின்ற 21-ஆவது கட்சிக்காங்கிரசை நோக்கி நாடு முழுதிலும் உள்ள மார்க்சிஸ்ட் கட்சித் தோழர்கள் புறப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். 
             அனைத்து 25 மாநிலங்களில் நடைபெற்ற மாநில மாநாடுகளில் எதிர் வரும்  மூன்று ஆண்டுக்கான மாநிலக்குழு, மாநில செயற்குழு, மாநில செயலாளர் மற்றும் அகில இந்திய காங்கிரஸ்-இல் பங்கேற்கப்போகும் பிரதிநிதிகள் என அனைத்து மாநிலப் பொறுப்புகளுக்கும் அதிக காலங்கள் கட்சியில் செயல்படக்கூடிய, கட்சி வளர்ச்சிப்பணிகளிலும், போராட்ட இயக்கங்களிலும், களப்பணியிலும் துடிப்புடனும்,  அர்ப்பணிப்புணர்வுடனும், போராட்டக்குணத்துடனும் செயல்படும் தோழர்கள் ஜனநாயக முறைப்படி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். இவர்களே கட்சியின் மாநிலத் தலைவர்களாக இருந்துகொண்டு, கூடி முடிவெடுத்து, அந்த முடிவுகளை  நாட்டின் கடைக்கோடி கிராமக் கிளையின் கடைசி ஊழியர் வரை அளித்து, நடத்தப்படும்  பல்வேறு இயக்கங்களுக்கும், களப்பணிகளுக்கும், போராட்டங்களுக்கும் வழிகாட்டக்கூடியவர்களாக செயல்படுவார்கள். அவ்வாறு மாநாட்டில் முறைப்படித் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநிலக்குழுவிலிருந்து மாநிலக்குழுவிற்கு வழிகாட்டக்கூடிய அனுபவமிக்க  மூத்த தோழர்  ஒருவர்  கட்சியின் மாநிலச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்படுவார்.
              மேலே அண்மையில் தமிழ்நாட்டில் சென்னையில் நடைபெற்ற 21-ஆவது கட்சியின் மாநில மாநாட்டில் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநிலச்செயலாளர் தோழர்.ஜி.ராமகிருஷ்ணன் அவர்களும், மாநிலக்குழு உறுப்பினர்களும், அனைத்து மாநிலச்செயலாளர்களும் - இவர்களும், விசாகப்பட்டினத்தில் நடைபெறவுள்ள கட்சிக்காங்கிரசில் தேர்ந்தெடுக்கப்படவுள்ள கட்சியின் அரசியல் தலைமைக்குழுவும், மத்தியக்குழுவும் தான் எதிர்கால இந்தியாவை வழிநடத்தப் போகிறவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.    

1 கருத்து:

nerkuppai thumbi சொன்னது…

....இவர்களும், விசாகப்பட்டினத்தில் நடைபெறவுள்ள கட்சிக்காங்கிரசில் தேர்ந்தெடுக்கப்படவுள்ள கட்சியின் அரசியல் தலைமைக்குழுவும், மத்தியக்குழுவும் தான் எதிர்கால இந்தியாவை வழிநடத்தப் போகிறவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.....
சமீபத்தில் நடந்த பாராளு மன்றத் தேர்தலில் இரண்டு கம்யூனிஸ்டுகளும் சேர்ந்து பத்து தான். ஒன்பது மார்க்சிஸ்டுகள். இவர்கள் பெரும்பான்மை பெற்று அதாவது273 பேர் வந்தால் நாட்டை வழிநடத்துவர்.
அந்த நாளும் வந்திடாதோ!