ஞாயிறு, 19 ஏப்ரல், 2015

சிபிஐ(எம்) - ன் புதிய தலைமைக்குழு உறுப்பினர்களை வாழ்த்துகிறோம்...!

 

                இன்று விசாகப்பட்டினத்தில் நிறைவடைந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 21-ஆவது அகில இந்திய மாநாட்டில் வரும் மூன்று ஆண்டுகளுக்கு கட்சிக்கு வழிகாட்டும்  பதினாறு பேர் கொண்ட அரசியல் தலைமைக்குழு தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறது. புதிதாய் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசியல் தலைமைக்குழு உறுப்பினர்கள் அனைவருக்கும் புரட்சிகர நல்வாழ்த்துகளை உரித்தாக்குகிறோம். 
                 அரசியல் தலைமைக்குழுவின் உறுப்பினர்களில் ஒருவராக தமிழ்நாடு மாநிலச்செயலாளர்   தோழர்.ஜி.ராமகிருஷ்ணன் அவர்களும் தேர்ந்தெடுக்கப் பட்டிருக்கிறார்  என்பது நம்மக்கெல்லாம் பெருமையையும், மகிழ்ச்சியையும், உற்சாகத்தையும் அளிக்கிறது.  1998-ஆம் ஆண்டு இவரது அரசியல் வகுப்பு ஒன்று தான் நான்  செங்கொடி இயக்கத்திற்குள் நுழைவதற்கு காரணமாய் அமைந்தது. அற்புதமான ஆசிரியர். என்னுடைய அரசியல் ஆசான் கட்சியின் உச்சி வரை உயர்ந்து நிற்கிறார் என்பதில் பெருமையாய் இருக்கிறது. தமிழ்நாட்டின் ஆளுமை தேசத்தின் ஆளுமையாய் விஸ்வரூபம் எடுக்கிறது.
           தோழரின் புதிய பணி  சிறக்க எங்கள் குடும்பத்தார் அனைவரின் சார்பிலும் புரட்சிகர நல்வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன். 
         வாழ்க தோழர். ஜி. ராமகிருஷ்ணன்..!                 

1 கருத்து:

நா.முத்துநிலவன், புதுக்கோட்டை சொன்னது…

புதிய பொதுச்செயலாளர் தோழர் சீதாராம் யெச்சசுரி அவர்களுக்கும், அரசியல் தலைமைக்குழுவில் புதிதாக இணைந்திருக்கும் நம் அன்புத்தோழர் ஜி.ராமகிருஷ்ணன் அவர்களுக்கும் நம் தோழமை வாழத்துகளைத் தெரிவித்துக் கொள்வோம். நன்றி தோழரே.