கார்ல் மார்க்சை
மறைத்து விட்டு
உலக வரலாற்றை
படிக்கமுடியாது...!
எப்போதோ ஒரு முறை கவிஞர் வைரமுத்து எழுதிய ஒரு அற்புதமான கவிதை வரிகள் என் நினைவிற்கு வருகிறது.
'' மின்சாரமும்
மார்க்சியமும்
இல்லாமல்
இனி
உலகம் இயங்காது''
என்பது தான் அந்த கவிதை வரிகள். அதில் சொல்லப்பட்ட கருத்து என்பது உண்மையிலும் உண்மையானது. மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா தனது அடுத்தக்கட்ட அடாவடித்தனத்தை நிகழ்த்தி இருக்கிறார். மேற்கு வங்க பள்ளிப் பாடத்திட்டத்தில் வரலாற்றுப்பாடத்தில் ரஷ்யப்புரட்சி, மாமேதை கார்ல் மார்க்ஸ், ஏங்கெல்ஸ் பற்றிய பாடங்களை மம்தா தடை செய்து நீக்கியிருக்கிறார். ரஷ்யப்புரட்சி மற்றும் கார்ல் மார்க்ஸ் போன்ற வரலாறுகளை தவிர்த்து உலக வரலாற்றைப் படிக்க முடியாது என்ற குறைந்த பட்ச அறிவுக்கூட மம்தாவிற்கு இல்லை.
மூன்று ஆண்டுகளுக்கு முன் உலகளவில் நிகழ்ந்த ''பொருளாதார வீழ்ச்சிக்கான'' தீர்வை, அமெரிக்கா மற்றும் ஐரோப்பா போன்ற முதலாளித்துவ நாடுகளெல்லாம் ''யாரை'' வேண்டாமென்று தூக்கி எரிந்தார்களோ அவரைத் தான் தேடினார்கள். அவர் எழுதிய புத்தகத்தை தான் தேடினார்கள். ஆம்... அவர்கள் தேடியது கார்ல் மார்க்சை தான். அவர் எழுதிய ''தாஸ் கேபிடல்'' என்ற ''மூலதனம்'' புத்தகத்தைத் தான் தேடினார்கள். ஏனென்றால் பொருளாதார வீழ்ச்சிக்கு அதில் தான் தீர்வு கிடைத்தது. அதனால் தா அமெரிக்காவிலும், இங்கிலாந்திலும் தாஸ் கேப்பிட்டல் மிக அதிகமான பிரதிகள் அச்சிடப்பட்டு விற்கப்பட்டன.
பிரான்ஸ் நாட்டு அதிபர் கூட ''எல்லோரும் கார்ல் மார்க்ஸ் எழுதிய தாஸ் கேபிட்டலை படியுங்கள். அதில் தான் பொருளாதார வீழ்ச்சிக்கு தீர்வு இருக்கிறது'' என்று சொன்னதாக பத்திரிகைகளில் வந்த செய்தியை மம்தா படித்திருக்கமாட்டார்.
எல்லோரும் பைபிள் படியுங்கள் என்று சொள்ளக்கூடிய போப்பாண்டவர் கூட ''எல்லோரும் தாஸ் கேபிட்டல் படியுங்கள். அதில் தான் பொருளாதார வீழ்ச்சிக்கு தீர்வு இருக்கிறது'' என்று சொன்னதாக வந்த செய்தியை மம்தா கேள்விப்பட்டிருக்கமாட்டார்.
சென்ற ''ஆயிரமாண்டின்'' மாமனிதனாக கருதப்பட்ட மாமேதை கார்ல் மார்க்சையும், அவர் கருவாக்கி உருவாக்கிய கம்யூனிசத்தத்துவங்களையும் யாராலும் அழித்துவிட முடியாது. நேற்று - இன்று - நாளை என முக்காலத்திற்கும் பொருத்தமானவர் தான் கார்ல் மார்க்ஸ். உலகம் பொருளாதார வீழ்ச்சியில் தத்தளிக்கும் போது கார்ல் மார்க்ஸ் தான் கைகொடுத்து உதவுவார். இதெல்லாம் மம்தா அறிவதற்கு வாய்ப்பில்லை தான். மம்தாவிற்கு கற்பூர வாசனை தெரிவதற்கு நியாயமில்லை தான்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக