பேயாட்சி நடந்தால்...?
மேற்குவங்க மாநிலத்தில் உள்ள அரசு நூலகங்களில் அரசியல் கட்சி சார்பு பெற்ற மற்றும் அனைத்து ஆங்கில பத்திரிகைகள் வைக்க தடை விதித்து ''பேயாட்சி'' நடத்தும் முதல்வர் மம்தா உத்தரவிட்டுள்ளார். அதே சமயத்தில், அரசு ஆதரவு பெற்ற தனது கட்சி மற்றும் சில வங்கமொழி பத்திரிகைகளுக்கு மட்டும் தாராளமாக அனுமதியளித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. நூலகங்களில் பத்திரிக்கைகளை தடை செய்வது என்பது பொதுமக்களின் பத்திரிக்கைகளை படிக்கும் உரிமையை பறிப்பதாகும். இது ஜனநாயகத்தின் குரல்வளையையே நெரிக்கும் செயலாகும். தனது ஆட்சியின் இலட்சணங்களை - விமர்சனங்களை மக்கள் தெரிந்து கொள்ளாமல் இருப்பதற்காகவே மம்தா அரசியல் முதிர்ச்சி இல்லாமல் செய்த செயல்.
என்ன தான் பத்திரிக்கைகளை மேற்கு வங்க மக்களிடமிருந்து விலக்கி வைத்தாலும், மம்தாவின் ''அவல'' ஆட்சியின் ''பெருமைகள்'' மக்களுக்கு தெரியாமலா போய்விடும்...
மம்தாவின் இந்த அராஜகச் செயலை மேற்கு வங்க மாநில மக்கள் மட்டுமல்ல இந்திய மக்கள் அனைவரும் கண்டிக்கவேண்டும்.
மேற்கு வங்கத்தில் தற்போது அரசு மற்றும் அரசு நிதி உதவி பெறும் நூலகங்கள் என மொத்தம் 2842 நூலகங்கள் மாநிலம் முழுவதும் உள்ளன. இந்த நூலகங்கள் எல்லாம் முன்பு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமையிலான இடதுசாரிகள் ஆட்சிக்காலத்தில் தொடங்கப்பட்டது. அத்தனை நூலகங்களிலும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ''கண சக்தி'' பத்திரிகை உட்பட அனைத்து எதிர்க்கட்சியினரின் பத்திரிக்கைகளும் இந்த நூலகங்களில் நுழைவதை மம்தா தடை செய்திருக்கிறார். நல்ல வேலை சி. பி. எம் - னால் ஆரம்பிக்கப்பட்ட நூலகங்கள் என்பதால் அத்தனையையும் மூடிவிடாமல் விட்டு விட்டார்களே...! மமதையில் எதையும் செய்வார் மம்தா..!
நன்றி : The Hindu / 31.03.2012 |
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக