இன்று மார்ச் 19 இருபத்தைந்து ஆண்டுகளுக்கு முன் 1987 - இல் இந்தியாவின் மிக உயர்ந்த பொதுத்துறை நிறுவனமான எல். ஐ. சி - இல் சேர்ந்த நாள்.. சமூக அக்கறையை எனக்கு ஊட்டி வளர்த்த அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கத்தில் என்னை இணைத்துக்கொண்ட நாள்... 25 ஆண்டுகள் எல். ஐ. சி. பணி... சங்கப்பணி... மக்கள் சேவையில் - தேச நலப்பணியில் 25 ஆண்டுகள்.. பெருமையாய் இருக்கிறது. மிகுந்த பெருமையுடன் நான் பயணித்து வந்த இருபத்தைந்து ஆண்டுகளை திரும்பிப் பார்க்கிறேன்..
இன்று என்னை புதுப்பித்துக் கொண்டு சமூக மாற்றத்திற்கான ஆழமான நம்பிக்கையுடன் என் சங்கமும், செங்கொடியும் வழிகாட்டும் பாதையில் முன்னே செல்கிறேன்... இந்த நாளில் எனை ஈன்ற என் தாய் - தந்தை, கல்விக்கண் திறந்த என் ஆசிரியர்கள், எனக்கு பணி கொடுத்து அதற்கேற்ற ஊதியம் கொடுத்து சமூகத்தில் எனை உயர்த்திய என் நிறுவனம் எல். ஐ. சி., சுயநலம் நீக்கி சமூக அக்கறையை என்னுள் வளர்த்த என் சங்கம், என்னை உயர்ந்த மனிதனாக்கிய என் செங்கொடி இயக்கம், நான் பணிபுரியும் இயக்கங்களான எல். ஐ. சி. முகவர்கள் சங்கம், முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கம், சி. ஐ. டி. யு., புதுவை அறிவியல் இயக்கம், தீண்டாமை ஒழிப்பு முன்னணி, விளிம்பு நிலை மக்கள் வாழ்வாதார மையம், என் நல விரும்பிகளான என் அன்பு உடன்பிறப்புகள், என் அருமை நண்பர்கள், என் இனிய தோழர்கள், என் அனைத்து இயக்கங்களுக்கும் திரைமறைவில் துணை நிற்கும் என் அன்பு மனைவி, என் பாசமிகு மகள்கள் அனைவருக்கும் இந்த நாளில் என் நெஞ்சார்ந்த நன்றியினை உரித்தாக்குகின்றேன்...
2 கருத்துகள்:
Revolutionary Greetings Comrade!
Long Live AIIEA!
தோழர் பொன்மலை கணபதி அவர்களுக்கு மிக்க நன்றி...
கருத்துரையிடுக