இந்த முகம் நினைவிருக்கிறதா..? இது திரைப்படத்திலோ.. தொலைக்காட்சியிலோ வரும் சோகக்காட்சியல்ல..! கடந்த பிப்ரவரி 2002 - இல் குஜராத்தில் பாரதீய ஜனதா கட்சியின் முதலமைச்சர் திருவாளர் நரேந்திர மோதி அரங்கேற்றிய மதவெறி - நரவேட்டை கோரத்தாண்டவத்தை நேரில் கண்டு பாதிக்கப்பட்ட குதுபுதீன் அன்சாரி என்கிற இஸ்லாமிய இளைஞர் தான் இவர்.
சுமார் 1044 சிறுபான்மை மக்களை நரவேட்டையாடி, அவர்களின் சொத்துக்களை தீயிட்டு நாசப்படுத்தி விட்டு சாதனை படைத்த வெற்றி களிப்பில் சங் பரிவார் என்ற மதவெறி கூட்டத்தை சேர்ந்த இளைஞர் தான் இவர். மதவெறி இஸ்லாமிய குழந்தைகளைக்கூட விட்டு வைக்கவில்லை.
ஒரு இந்து இளைஞனின் இஸ்லாமிய காதல் மனைவியின் வயிற்றில் வளர்ந்த சிசுவை - ஒரு இந்துவின் குழந்தை ஒரு முஸ்லிம் பெண் வயிற்றில் வளரக்கூடாது என்று கூறி கூரிய வாளால் அந்தப் பெண்ணின் வயிற்றைக் கிழித்து ஒரு பாவமும் அறியா அந்த சிசுவை வெளியே எடுத்து துண்டுத் துண்டாக வெட்டி நெருப்பில் போட்டிருக்கிறார்கள் இரக்கமில்லா மதவெறிக் கூட்டத்தினர்.
சிறுபான்மை இனத்தவரான எசன் ஜப்ரி என்கிற முன்னாள் காங்கிரஸ் எம். பி ஒருவர் இந்த குஜராத் மதக்கலவரத்தில் வெட்டி வீழ்த்தப்பட்டதை நாடு மறந்திருக்க முடியாது. மனித நேயம் இல்லா மதவெறிக்கூட்டம், ''பெஸ்ட் பேக்கிரி'' என்ற ரொட்டிக் கடையை நடத்தி வந்த இஸ்லாமிய குடும்பத்தினர் 14 பேரை அப்படியே அந்த பேக்கிரி கட்டிடத்திலேயே பூட்டி, தீயிட்டு கொளுத்தி கொலை செய்ததை இன்று நினைத்துப் பார்த்தாலும் நெஞ்சம் பதறுகிறது.
ஆர். எஸ். எஸ் - பாரதீய ஜனதா கட்சியின் மற்றொரு மதவெறி அமைப்பான பஜ்ரங் தல் என்கிற மதவெறிக் கூட்டம் 1999 - ஆம் ஆண்டு ஜனவரி 23 அன்று, ஒரிசா மாநிலத்தில் மனோஹர்பூர் கிராமத்தில் மலைவாழ் மக்களுக்கு சேவை புரிந்து வந்த கிருத்துவ பாதிரியார் கிரகாம் ஸ்டெய்ன்ஸ் மற்றும் அவரது இரண்டு மகன்கள் மூன்று பேரையும், இரவில் தூங்கிக் கொண்டிருந்த போது வேனோடு சேர்த்துக் கொளுத்தப்பட்டு கொல்லப்பட்டதையும் இந்த நாடு மறந்திருக்க முடியாது.
இந்து மதத்தைச் சேர்ந்தவர்களின் ஓட்டுக்களை பெறுவதற்காக, ஆர்.எஸ்.எஸ் பல்வேறு பா.ஜ.க., சங்பரிவார், பஜ்ரங் தல், இந்து முன்னணி போன்ற பல்வேறு இந்து மதவாத அமைப்புகள், மக்களின் மத உணர்வுகளைத் தூண்டி அதில் குளிர் காய நினைக்கிறார்கள்.
எதிர்காலத்தில் இது போன்ற மதக் கலவரங்களை தடுத்து சிறுபான்மை மக்களை காக்கும் பொருட்டு, மத்திய அரசு மதக் கலவர தடுப்பு மசோதாவை கொண்டு வரப் போவதாக, இன்று சனிக்கிழமை புதுடெல்லியில் கூடிய தேசிய பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில் பிரதமர் அறிவித்தார். உடனே மதவாத அமைப்புகளான பா.ஜ.க உள்ளிட்ட அதன் கூட்டணி கட்சிகளும் அதிமுக உள்ளிட்ட மாநில கட்சிகளும் இந்த மதக் கலவர தடுப்பு மசோதாவை அறிமுகக் கட்டத்திலேயே எதிர்த்துள்ளன. ஆனால் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மட்டுமே இந்த மசோதாவை வரவேற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
3 கருத்துகள்:
மதக் கலவரத்தையே மூலதன்மாகக் கொண்டு தொழில் நடத்தும் இந்துத்துவா வெறியர்களுக்குப் பிடிக்காதுதான்.
நான் இந்து என்று சொல்லாதவர்கள் இந்தியாவை விட்டு வெளியேற வேண்டும், என்று இந்தியாவைப் பல முறை இசுரேலுக்கும், அமெரிக்க மற்ற நாடுகளுக்கும் விற்ற சுப்பிரமணியன் சாமி என்ற மத வெறியன் சொல்லிக் கொண்டு அலைகிறான்.
இதையெல்லாம நடு நிலையாளர்கள்
கவணிக்க வேண்டும்.
மதம், கடவுள் தனிப் பட்டக் கருத்துக்கள், அவை பொது இடத்திற்கு வரக்கூடாது. பொது இடத்திலே ஒழுக்கம் தான் முக்கியம்.
பக்தி என்று சொல்லி ஊரை ஏமாற்றும் சாமியார்களையும், மத வெறியர்களையும் சிறையில் தள்ள வேண்டும்.
அற்புதமான கருத்து.. மிக்க நன்றி..
People first . . Religion next
கருத்துரையிடுக