அமைதிக்கான நோபல் விருதை வென்ற முதல் ஆப்பிரிக்கப் பெண்மணியான வன்கரி மாதாய் நீண்டகாலமாக புற்று நோயில் அவதிப்பட்டு நேற்று திங்கட்கிழமை மாலை மரணம் அடைந்தார். அவருக்கு வயது 71. அவர் நிறுவிய சுற்றுச் சூழல் நிறுவனம் ( Green Belt Movement ) அவரது மறைவைத் தெரிவித்தது.
வன்கரி மாதாய் 2004ம் ஆண்டு நோபல் பரிசு வென்றார். சுற்றுச்சூழல் மற்றும் சமூக நடவடிக்கைகளை ஒருங்கிணைத்து சிறந்த சேவை ஆற் றியதற்காக அவருக்கு நோபல் பரிசு அளிக்கப்பட்டது. பசுமை வளைய இயக்கத்தின் நிறுவனராக அவர் இருந்தார். இந்த பசுமை இயக்கம் மூலம் ஏழைப் பெண்களை திரட்டி, 3 கோடி மரங்களை நட்டு, சுற்றுச்சூழலின் நண்பனாக திகழ்ந்தார்.
பசுமை இயக்க நிறுவனத்தின் துணைச் செயல் இயக்குநரான எட்வர்டு வாகெனி கூறுகையில், மாதாய் திங்கட்கிழமை மாலை நைரோபி மருத்துவமனையில் மரணம் அடைந்தார். இந்த ஆண்டு துவக்கத்தில் இருந்து அவர் புற்றுநோய்க்காக இந்த மருத்துவமன யில் சிகிச்சை பெற்றார் என்றார்.
கென்யாவில் அடக்கு முறை ஆட்சி நடைபெற்ற தருணத்தில் உறுதியுடன் செயல்பட்டு சேவையாற்றியவர் மாதாய் என நோபல் கமிட்டி புகழாரம் சூட்டியது. ஜனநாயகப் போராட்டத்திற்கு மரம் ஒரு அடையாளம் என்ற அடையாளத்தை ஏற்படுத்தியவர் மாதாய் ஆவார். அவர் 2004ம் ஆண்டு நோபல் பரிசைப் பெற்ற பின்னர் நிகழ்த்திய ஏற்புரையில் கென்யாவின் கிராமப்புறப் பகுதிகளில் கிடைத்த உந்துதல் காரணமா கவே சுற்றுச்சூழலில் மிகுந்த ஆர்வம் ஏற்பட காரணமாக அமைந்தது என்றார்.
இளமைப் பருவத்தில் பணப் பயிர்களுக்காக வனப்பகுதிகள் அழிக்கப்பட்டன. இதன் காரணமாக பல்லுயிரிப் பெருக்க சேதம் அடைந்தது. நீர்நிலையைப் பாதுகாப்பதற்கான வனப் பகுதித் திறனும் அழிந்தது. இந்த நிலையில் மாதாய் தனது பசுமை இயக்கம் மூலம் பல லட்சம் மரங்களை நட்டு, இயற்கையை பாதுகாத்தார். அந்த இயக்கம் மூலம் அமைதி மற்றும் ஜனநாயகத்தை வலியுறுத்தினார்.
மாதாய் மறைவுக்கு கென்யா மக்கள் தொடர்ந்து அஞ்சலி செலுத்தி வருகிறார்கள். மாதாய் மறைவை ட்விட்டரில் கண் ணீருடன் எழுதிய நபர் ஒருவர் சூரியன் இன்று உதிக்காததில் ஆச்சரியம் இல்லை என குறிப்பிடப்பட்டுள்ளது. மாதாய்க்கு 3 குழந்தைகள் உள்ளனர்.
நன்றி : தீக்கதிர்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக