இந்த தேசத்தை அன்று வெள்ளைக்காரன் கொள்ளையடித்தான். சுதந்திரம் அடைந்த பிறகு அறுபது ஆண்டுகளாக காங்கிரஸ்கட்சிக்காரன் கொள்ளையடித்தான். தாங்கள் தேசபக்தர்கள் - ஊழலுக்கு எதிரானவர்கள் - வித்தியாசமானவர்கள் என்ரெல்லாம் தம்பட்டம் அடித்துக்கொண்டு ஆட்சிக்கு வந்த பாரதீய ஜனதாகட்சிக்காரன்களும் இப்போது கொள்ளையடிக்கிறானுங்க. இந்த தேசம் என்ன அட்சய பாத்திரமா...? இத்தனை பேர்களும் கடந்த இருநூறு ஆண்டுகளாக அள்ள அள்ள குறையாமல் வளர்ந்துகொண்டே இருக்கிறது.
உலகம் வியக்கும் வண்ணம் மெகா ஊழல் புரிந்து பேர்போனவர்கள் காங்கிரஸ்கட்சிக்காரர்கள். ஊழலைகளையும் வகைவகையாய் செய்துவிட்டு அதை மறைப்பதற்கு வழிகளையும் கண்டுபிடித்து தப்பித்தவர்கள் தான் இவர்கள். ஆனால் பாரதீய ஜனதாகட்சிக்காரன்களோ இப்பொது உலகத்தையே உலுக்கும் வண்ணம் மாபெரும் ஊழலை செய்துகொண்டிருக்கிறார்கள். அது தான் இன்றைக்கு ஊடகங்கள் எல்லாம் மூடி மறைத்துக்கொண்டிருக்கிற ''வியாபம்'' ஊழல் என்ற ''பயங்கரவாத'' ஊழல் எனப்படுவது. இந்த ஊழலைப் பற்றி ஊடகங்களும் வாயை திறக்கவில்லை. அதேக்கட்சியை சேர்ந்த பிரதமர் மோடியும் வாயை திறக்கவில்லை. இன்று வெளிநாட்டிற்கு பறந்துவிட்டார். ஊரே பற்றி எரிகிறது. அவர் ''வேலை'' அவருக்கு....!
''வியாபம்'' என அழைக்கப்படும் தொழில் முறை தேர்வு வாரியம், மத்தியப்பிரதேச மாநிலத்தில் அரசுப் பணியாளர்கள் தேர்வு வாரியமாக செயல்பட்டு வருகிறது. இந்த வாரியத்தில் கடந்த நான்கு ஆண்டுகளாக அரசுப்பணிகளுக்கு தேர்வு செய்வதில் ஏராளமான முறைகேடுகள் நடந்திருப்பது தெரியவந்துள்ளது. இந்த ''வியாபம்'' ஊழல் என்பது கடந்த 2012-ஆம் ஆண்டில் தொடங்கி இன்று வரையில் இந்த முறைகேடுகளில் சம்பந்தப்பட்டவர்கள் மற்றும் அறிந்தவர்கள் என மொத்தம் 48 பேர்களை பலி வாங்கி இருக்கிறது. ''வியாபம்'' முறைகேடுகள் வெளியே தெரியாவண்ணம் ஒரு இளம்பெண்ணில் தொடங்கி அதே கட்சியை சேர்ந்த அம்மாநில கவர்னரின் சொந்த மகன் உட்பட 48 பேர்களை மர்மமான முறையில் கொன்று குவித்திருக்கிறார்கள். இந்த ஊழல் என்பது தொகையை வைத்துப்பார்த்தால், வெறும் 2000 கோடி ரூபாய் ஊழல் தான். என்றாலும் இது ''வித்தியாசமான மெகா ஊழல்'' என்று தான் சொல்லவேண்டும். தொகையை வைத்து அல்ல. இந்த ஊழலில் சம்பந்தப்பட்டவர்கள் பாரதீய ஜனதாக்கட்சியை சேர்ந்த மாநில முதலமைச்சர் மற்றும் மாநில ஆளுநர் உட்பட 3000க்கும் மேற்பட்டவர்கள் என்பதும், இந்த ஊழல் இதுவரையில் 48 பேர்களை பலிவாங்கியிருக்கிறது என்பதும் தான் இந்த ஊழல் ஒரு மெகா ஊழல் என்ற பெருமையை அடைகிறது.
பாரதீய ஜனதாக்கட்சிக்காரர்கள் ''ஆயிரம் தலை வாங்கிய அபூர்வ சிந்தாமணிகள் ஆயிற்றே. கொலை செய்வது என்பது பாரதீய ஜனதாக்கட்சிக்கு ஒன்றும் புதிதல்லவே. ஏற்கனவே 2002 ஆம் ஆண்டு குஜராத் மாநிலத்தில் ஆயிரக்கணக்கான இஸ்லாமியர்களை கொன்று குவித்தவர்கள் தானே அவர்கள் என்பதை யாரும் மறந்திருக்கமுடியாது.
இவர்கள் ஆட்சியில் இன்னும் என்னவெல்லாமோ இந்த நாடு பார்க்கபோகிறதோ... தெரியவில்லை...!
இவர்கள் ஆட்சியில் இன்னும் என்னவெல்லாமோ இந்த நாடு பார்க்கபோகிறதோ... தெரியவில்லை...!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக