சரித்திரமாகி விட்ட மாணவர்களின் நாயகன் கலாம்...!
இராமேஸ்வரத்தில் பிறந்த தமிழ் பேசும் இஸ்லாமியர். இவர் படித்தது சாதாரண அரசு பள்ளி. உயந்தது இஸ்ரோ விஞ்ஞானியாய். இந்திய ஏவுகணைகளுக்கும் ராக்கெட்டுகளுக்கும் அக்னி சிறகுகளை கொடுத்து உலக வல்லரசுகளே வியக்கும் வண்ணம் இந்தியாவின் புகழை விண்ணில் பறக்கச்செய்தார். பதிலுக்கு இந்த நாடு இவரை குடியரசு மாளிகையில் அமரவைத்து அழகு பார்த்தது. குடியரசுத்தலைவர் பதவி ஓய்வுக்கு பின்னும் இவர் ஓய்ந்துவிடவில்லை. ஓய்வெடுக்கவில்லை. இவரது அறிவாயுதத்தை எடுத்துக்கொண்டு ஓய்வில்லாமல் பள்ளிகளுக்கும் கல்லூரிகளுக்கும் படையெடுத்தார். வெற்றி கண்டார். மாணவ மாணவியர்களை தன் அறிவாலும், கருத்தாலும் ஈர்த்தார். அவர்களை கனவு காண சொன்னார். விடிந்த பிறகும் தூங்கியல்ல... அவர்கள் எதிர்காலம் விடியும்வரை தூங்காமல் கனவு காண சொன்னார். நமது பிறப்பு ஒரு சம்பவமாக இருக்கலாம். ஆனால் இறப்பு ஒரு சரித்திரமாக இருக்கவேண்டும் என்று அவர்களுக்கு அன்புக் கட்டளையிட்டார். ஆம்... இன்று அவரே சரித்திரமாகி விட்டார். கலாம் காலம் ஆகிவிட்டார்...!
நமது கண்ணீர் அஞ்சலி
1 கருத்து:
அன்னாரின் புகழும் சேவையும் காலத்தால் அழியாது
கருத்துரையிடுக