சனி, 28 ஏப்ரல், 2012

இருட்டோடு வாழ பழகி கொண்டார்கள் தமிழக மக்கள்...!

                சென்ற ஆண்டு தமிழகத்தில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில், நான் ஆட்சிக்கு வந்தால் என் தலைமையிலான அரசு மின்வேட்டினை முற்றிலுமாக விலக்கிக்கொள்ளும் என்ற வாக்குறுதியை மக்களுக்கு கொடுத்து தான் செல்வி. ஜெயலலிதா வெற்றி பெற்று ஆட்சியில் உட்கார்ந்திருக்கிறார்.  ஆனால் இவர்கள் ஆட்சிக்கு வந்து ஓராண்டு முடியப்போகிறது. ஆனால் இன்னும் இன்று வரை மின்வெட்டு விலக்கிக்கொள்ளப்படவில்லை என்பது மட்டுமல்ல. மின்வெட்டின் நேரம் அதிகரிப்பு செய்தது தான் இவர் செய்த சாதனை. தமிழகம் முழுதும் பாரபட்சமில்லாமல் பன்னிரெண்டு மணி நேரம் வரை மின்வெட்டு நடைமுறையில் உள்ளது.
                  இதில் அண்மையில் பிளஸ் 2 மற்றும் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு வேறு நடந்தது. அந்த சமயத்தில் கூட இந்த தேர்வு எழுதும் குழந்தைகளுக்குக் கூட இந்த அரசு இரக்கம் காட்டவில்லை. வயதானவர்கள் மற்றும் நோயாளிகள் மின்வெட்டு நேரத்தில் காற்றில்லாமல் அவதிப்படுகிறார்கள். இதில் இப்போது கடுமையான கோடை வேறு. சுவையாய் சாப்பிடுவதற்கு மிக்சி போடமுடியவில்லை. கிரைண்டர் போடமுடியவில்லை. மக்களது பொன்னான பன்னிரெண்டு மணி நேரத்தையும் விழுங்கிக் கொண்டிருந்த தொலைகாட்சியை பார்க்க முடியவில்லை. இளைஞர்கள் கம்ப்யூட்டரில் பேஸ்புக்கில் தன் நண்பர்களோடு உறவாட முடியவில்லை. இப்படி தான் மின்வெட்டால் அன்றாடம் எவ்வளவோ அல்லல்களும், எரிச்சல்களும் மட்டுமே  ஒவ்வொரு வீட்டிலும் அரங்கேறிக்கொண்டிருக்கின்றன.
                அனால் தமிழக மக்களிடையே இதுவரை எந்த ஒரு முணுமுணுப்போ அல்லது  சலசலப்போ ஏற்படவில்லை. இதற்காக போராடவேண்டும் - எதிர்ப்புக்குரல் கொடுக்கவேண்டும்  என்கிற எண்ணம் கூட இந்த  மக்களுக்கு வரவில்லையே என்பது தான் வியப்பாக இருக்கிறது.  மின்வெட்டோடும், இருட்டோடும் தமிழக மக்கள் பழகி விட்டார்கள் என்பது தான் அதற்கு காரணம் என்பதை யாரும் மறுக்கமுடியாது. 
                    
மின்வெட்டால் தமிழக வீடுகளில் மாற்றங்கள்...           
        ஆனால் இந்த மின்வெட்டால் தமிழக வீடுகளில் ஏகப்பட்ட மாற்றங்கள் வந்திருக்கிறது என்பதை பார்க்கும் போது ஆச்சரியமாகவும், மகிழ்ச்சியாகவும் இருக்கிறது. ஏனென்றால், தமிழக மக்கள் இருபது ஆண்டுகளுக்கு பின்னால் சென்றிருக்கிறார்கள் என்பதை தான் நாம் ஒவ்வொரு வீட்டிலேயும் பார்த்துக்கொண்டிருக்கிறோம்.
           ஆம்... தமிழக வீடுகளில் தாத்தா, பாட்டி, அப்பா, அம்மா, குழந்தைகள் என்ற உறவுகள் மேம்பட்டிருக்கிறது. மின்வெட்டினால் தொலைகாட்சி சீரியல்கள் ஆக்கிரமித்த நேரங்களில் எல்லா வீடுகளிலும் குடும்பமாக - கூட்டமாக உட்கார்ந்து பேசுகிறார்கள். ஒருவரையொருவர் பார்த்துக்கொள்ளமலும் - பேசிக்கொள்ளாமலும், சீரியல் ஒரு பக்கம், பேஸ்புக் ஒரு பக்கம் என்று குடும்பம் பிரிந்திருந்த நிலை மாறி, இன்று எல்லோரும் தாத்தா, பாட்டி, அப்பா, அம்மா, பிள்ளைகள் என அனைவரும் கூடிப் பேசுகிறார்கள். ஒன்றாக கூடி ரசித்தும், ருசித்தும், பேசிக்கொண்டும், சிரித்துக்கொண்டும் சாப்பிடுகிறார்கள். இரவு நேரங்களில் அநேகமாக எல்லா வீடுகளிலும் ''candlelight dinner'' தான். அல்லது மாடியில் ''நிலாச்சோறு'' சாப்பிடுகிறார்கள்.  இந்த புதிய அனுபவம் குழந்தைகளுக்கு பிடித்துப்போய்விட்டது. பெரும்பாலான பாட்டிகளும், அம்மாக்களும் குழந்தைகளையும், பெரியவர்களையும்  சுற்றி உட்கார வைத்து சாதத்தைப் பிசைந்து உருண்டையாக்கி கையில் கொடுத்து உணவருந்தச் செய்கிறார்கள்.  தொலைகாட்சி  சீரியலினால் சிரிப்பைத் தொலைத்த மக்கள் இப்போது ஒன்றாக கிண்டலும், கேலியும், கதையுமாக பேசிப்பேசி சிரிக்கிறார்கள். தாத்தா - பாட்டிகள் அந்தக்கால கதைகளையும், அனுபவங்களையும் தங்களின் பேரக்குழந்தைகளுக்கு சொல்லிச்சொல்லி மாய்கிறார்கள் என்றால் பார்த்துக்கொள்ளுங்களேன்.
            இப்போது தான் கண்டுகொள்ளாமல் விடப்பட்ட விளையாட்டுகளான கேரம், செஸ், சீட்டுக்கட்டு, பல்லாங்குழி, சில்லு போன்ற விளையாட்டுகள் எல்லாம் உயிர்பெற்றிருக்கின்றன. தெருக்குழந்தைகள் எல்லோரும் ஒன்று கூடி விளையாடுகிறார்கள். மின்வெட்டு நேரத்தில் காற்றில்லை என்று வெளியே வந்து உட்காரும் போது தான் பக்கத்து வீட்டிலிருப்பவர்களும், எதிர்வீட்டிலிருப்பவர்களும் நம் மக்களின் கண்களுக்கு தெரிகிறது. மீண்டும் நட்பு தழைக்கத் தொடங்கியிருக்கிறது.
             இருபது ஆண்டுகளுக்கு முன்பு எல்லா வீடுகளிலும் பயன்படுத்தப்பட்ட அம்மி, உரல், பனை ஓலை விசிறி எல்லாம் இப்போது மீண்டும் புதிய விருந்தாளிகளாக பல பேர் வீட்டுக்குள்ளே நுழைந்திருக்கின்றன என்பதும் ஒரு நல்ல மாற்றமே.
               இப்போது தமிழக மக்களிடையே மின்வெட்டு என்பது ஒரு சந்தோஷமான நிகழ்வாக மாறிவிட்டது. ஒரு வேலை மின்வெட்டு விலக்கிகொள்ளப்படுமேயானால் தமிழக மக்கள் சமீப காலமாக பெற்ற இந்த சந்தோஷங்களை எல்லாம் இழப்பார்கள்.

வியாழன், 26 ஏப்ரல், 2012

அடப்பாவிகளா... விவசாயிகளை கொல்லுவதற்காகவா ஆட்சி செய்கிறீர்கள்...?


                      அண்மையில் இரண்டு நாட்களுக்கு முன்பு,  மகாராஷ்டிரா மாநிலத்தில் விதர்பா பகுதியில் 45 வயதான பருத்தி விவசாயி ஒருவர் கடன் பிரச்னை காரணமாக தற்கொலை செய்துகொண்டார் என்றும்,  தற்கொலை செய்துகொள்வதற்கு  முன்பு  அவர் எழுதிவைத்த கடிதத்தில் காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சிக்கு வாக்களிக்காதீர்கள் என்று பொதுமக்களை அவர் கேட்டுக்கொண்டுள்ளார் என்றும் செய்தித்தாள்களில் செய்தி வெளியாகியிருந்தன. கஜானந்த் கோத்தீகர் என்ற அந்த விவசாயி டிராக்டர் ஒன்றை வாங்கி இருக்கிறார். ஆனால் பருத்தி விலைகள் மிகவும் குறைவாக இருந்ததால் டிராக்டருக்காக வாங்கிய 1 லட்ச ரூபாய் கடனை திருப்பிச் செலுத்த முடியவில்லை. தனது இளைய மகளுக்கான திருமண ஏற்பாடும் அவரை மேலும் கடனில் ஆழ்த்தியது. இதனால் கடிதம் எழுதிவைத்துவிட்டு அவர் தற்கொலை செய்துகொண்டார் என்று அந்த செய்தி தெரிவிக்கிறது. 
            இவர் பி.டி வகை பருத்தியை தான் பயிர் செய்திருந்தார். மான்சான்ட்டோ போன்ற பன்னாட்டுக் கம்பெனிகள் மிகுந்த இலாபம் அடைவதற்காக,  அந்த கம்பெனிகள் பி. டி வகை விதைகளை விற்பனை செய்வதற்கு மத்திய அரசு அனுமதியளித்தது. ஆனால் விவசாயிகளிடம் சொல்லப்பட்டதோ இந்த பி. டி வகை விதைகளை பயிரிட்டால் விவசாயிகளுக்கு அதிக இலாபம் கிடைக்கும் என்ற ஏமாற்று வார்த்தைகளைத் தான்.   மத்திய அரசு மற்றும் பன்னாட்டுக் கம்பெனிகளின் பசப்பு ஏமாற்று வார்த்தைகளை நம்பித்தான் மகாராஷ்டிரா மற்றும் ஆந்திர மாநிலங்களில் அப்பாவி விவசாயி பெருமக்கள் பி. டி. வகை விதைக்கு மாறினார்கள். ஆனால் மத்திய - மாநில அரசுகளும், பன்னாட்டு நிறுவனங்களும் சொன்னது போல் இலாபம் கிடைக்கப்பெறாமல், குறிப்பாக பருத்தி விவசாயிகள் படுகுழியில் தள்ளப்பட்டனர். விவசாயத்திற்காக வாங்கிய கடன் அவர்களின் கழுத்தை நேருக்க ஆரம்பித்தது. கடன் தொல்லை தாங்கமாட்டாமல் விவசாயப் பெருமக்கள் தற்கொலை செய்துகொண்டு தங்களை தாங்களே உயிரை மாய்த்துக்கொள்கிறார்கள். 
             மத்தியில் நரசிம்மராவ் -  மன்மோகன்சிங் கூட்டாளிகளின் காங்கிரஸ் ஆட்சிக்காலத்தில் தொடங்கப்பட்டு, மன்மோகன்சிங் - சரத் பவார் - சிதம்பரம் - பிரணாப் முகர்ஜி கூட்டாளிகளின் காங்கிரஸ் ஆட்சி வரை கடைபிடிக்கப்பட்டுவரும்   கடுமையான பொருளாதாரக் கொள்கை தான் இதுமாதிரியான விவசாயிகளின் தற்கொலைகளுக்கு பிரதான காரணம் என்பதை யாராலும் மறுக்கமுடியாது. கடந்த 1995 - ஆம் ஆண்டிலிருந்து - கடந்த 17 ஆண்டுகளில்  இந்தியாவில் இதுவரையில் 2,50,000 - க்கும் மேற்பட்ட விவசாயிகள் தற்கொலை செய்துகொண்டு மாண்டுப்போயிருக்கிறார்கள் என்பது இந்த தேசம் வேதனையும் வெட்கமும் படவேண்டிய விஷயமாகும். கம்யூனிஸ்ட்டுகள் ஆட்சி செய்த மேற்கு வங்கம் - கேரள மாநிலங்கள் மற்றும் தற்போது ஆட்சி செய்யும் திரிபுரா மாநிலங்கள் நீங்கலாக,   ஆந்திரா,  மகாராஷ்டிரா உட்பட நாட்டிலுள்ள 18 மாநிலங்களில் தான் இது போன்ற விவசாயிகளின் தற்கொலை என்பது வேதனையும் சாதனையுமாக நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. இப்போது மம்தா ஆட்சிக்கு வந்த பிறகு மேற்கு வங்கத்திலும் விவசாயிகள் தற்கொலை என்பது கணக்கு தொடங்கப்பட்டிருக்கிறது என்பதையும் கவனிக்க வேண்டும்.
              இந்தியாவில் 12 மணி நேரத்திற்கு ஒரு விவசாயி தற்கொலை செய்து கொள்வதாக புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன. இது தான் இன்றைய ஆட்சியாளர்களின் மகத்தான சாதனையாகும்.
                இரண்டு நாட்களுக்கு முன்பு விதர்பாவில் தற்கொலை செய்துகொண்டு இறந்து போன பருத்தி விவசாயி, தனது தற்கொலை குறிப்பில் பருத்திக்கு நல்ல விலை கிடைக்க மத்திய அரசும், மாநில அரசும் நடவடிக்கை எடுக்கும் என்று எதிர்பார்த்திருந்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார். விவசாயிகளின் துயரம் குறித்து கவலைப்படாத காங்கிரஸ் - தேசியவாத காங்கிரஸ் அரசுக்கு அடுத்தமுறை வாக்களிக்காதீர்கள் என்று பொதுமக்களை அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.விதர்பா பகுதியில் கடந்த 24 மணி நேரத்தில் 5 விவசாயிகள் தற்கொலை செய்துகொண்டுள்ளனர். இந்த ஆண்டு ஜனவரியில் இருந்து இதுவரை 325 விவசாயிகள் தற்கொலை செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

கருணாநிதியின் விபரீதக் கோரிக்கை..!

                    முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் கடந்த கால அரசியல் வாழ்க்கையை ஆராய்ந்து அலசிப் பார்த்தால், தனது ''சொந்த'' கட்சியிலேயே தன்னுடைய செல்வாக்கு குறைந்தாலோ அல்லது தமிழக அரசியலில் தன்னுடை செல்வாக்கு குறைவது போல் தெரிந்தாலோ அல்லது தான் பங்குவகிக்கும் மத்திய அரசில் தனது செல்வாக்கு குறைவது போல் உணர்ந்தாலோ உடனே கருணாநிதி மக்களை கவருவது போல் அதிரடியாக ஏதாவது ஒரு அறிக்கையை வெளியிடுவார் என்பதை யாரும் மறந்திருக்க முடியாது.  இதன் மூலம் அனைத்து மட்டத்திலும் சரிந்து வரும் தனது செல்வாக்கை உயர்த்திக்கொள்ள முயற்சி செய்வார் என்பதையும் யாராலும் மறுக்கமுடியாது. இதைத் தான் கடந்த காலங்களில் கருணாநிதியின் அரசியல் வாழ்க்கையாக  தமிழகம்  பார்த்து வருகிறது.
               அண்மைக் காலங்களில் கருணாநிதி தன் சொந்த வாழ்க்கையிலும் சரி, அரசியல்  வாழ்க்கையிலும் சரி ஏகப்பட்ட சோதனைகள் சந்தித்து வருகிறார் என்பதை நாம் அறிவோம். சமீபத்தில் நடைபெற்ற சங்கரன்கோயில் தொகுதி இடைத்தேர்தலில் இவரது கட்சிக்கு ஏற்பட்ட தோல்வி - டெபாசிட்டே கிடைக்காத நிலைமை,  இன்னொரு பக்கம் கட்சிக்குள்ளேயே தன் இரு பிள்ளைகளின் அதிகாரப்போட்டி,  கட்சியின் தலைமையை நோக்கி இவரது மகன் ஸ்டாலின் வளருவதை விரும்பாத கட்சியின் மூத்தத் தலைவர்கள் இவருக்கு எதிராகவே திரும்பியிருக்கும் நிலைமை - இப்படி அடுக்கடுக்கான சோதனைகள் - சோதனை மேல் சோதனைகள் அவரது செல்வாக்கின் சரிவைத் தான் காட்டுகின்றன.
              இந்த சூழ்நிலையில் தான் சமீபத்தில் ஒரு புயலைக் கிளப்பினார். இலங்கையில் ''தமிழீழம்'' என்ற தனிநாடு உருவாவதற்கு ஐநா சபை இலங்கையில் வாக்கெடுப்பு நடத்த வேண்டும்  என்றும், ஐநா சபையால்  இது போன்று வாக்கெடுப்புகள் நடத்தப்பட்டு தான் தெற்கு சூடான் போன்ற நாடுகள் உருவாக்கப்பட்டது என்கிற ''விபரீத'' கோரிக்கையை வைத்தார். இலங்கை தமிழர்கள் மீது எதோ அக்கறை இருப்பது போல் காட்டிக்கொள்ள இப்படியொரு நாடகத்தை அரங்கேற்ற நினைத்தார்.   இந்த கோரிக்கை என்பது ஏற்கனவே வைகோ, திருமாவளவன், சீமான், நெடுமாறன் போன்றவர்கள்,  இலங்கையில் விடுதலைப் புலிகளுக்கு எதிரான இலங்கை அரசின் இராணுவ நடவடிக்கையின் போதே எழுப்பப்பட்டு ஓய்ந்து போன கோரிக்கை தான் இது. கூர் மழுங்கிய இந்த கத்தியை இப்போது கருணாநிதி  தன் கையில் எடுத்துக் கொண்டு கூர் சீவி வெறும் காற்றில் சுழற்றி தன் செல்வாக்கினை உயர்த்திக் கொள்ளலாம் திட்டம் போட்டு களத்தில் இறங்கினார்.
               இவரது இந்த கோரிக்கைக்கு இலங்கையில் அதன் ஆட்சியாளர்களிடமிருந்தே எதிர்ப்பு குரல் வந்தது. அவர்கள் பேச்சிலும் விபரீதங்கள் இருந்தன என்பதையும் நாம் கவனிக்க வேண்டும். இந்தியாவில் வேண்டுமானால் கருணாநிதி,  தமிழ்நாடு மற்றும் காஷ்மீர் போன்ற பகுதிகளை இந்தியாவிலிருந்து பிரித்து தனிநாடு கேட்கட்டும் என்று அவர்கள் பதிலுக்கு விஷத்தை கக்கியிருக்கிறார்கள். இது இப்படியான விபரீதங்களில் தான் போய் முடியும்.
             தன் சொந்த நாட்டின் ஒற்றுமைக்கும், இறையாண்மைக்கும் எதிராகவே கருத்து சொல்லவோ அல்லது செயல்படவோ கூடாது என்கிற போது பக்கத்து நாட்டின் இறையாண்மைக்கு எதிராக கருத்து சொல்வது என்பது நியாயமாகாது. அது மட்டுமல்ல, இலங்கையில் அல்லல்படும் தமிழர்களுக்கு இதுவே தீர்வாகாது. ஐநா வாக்கெடுப்பு நடத்துவது ஒருபுறம் இருக்கட்டும். இலங்கைத் தமிழர்களுக்கு என்ன வேண்டும் என்பதை கருணாநிதி முதலில் புரிந்து கொள்ளட்டும். இலங்கை தமிழர்களை நேரில் சந்தித்து அவர்கள் எதிர்ப்பார்க்கும் தீர்வு என்ன என்பதை கேட்டறிந்து அதற்கேற்றார் போல் கருணாநிதி போராடியிருந்தால் வரவேற்றிருக்கலாம்.
                       ஆனால் அவர் அதை செய்யவில்லையே. இலங்கைக்கு சென்று தமிழர்களை சந்தித்து அவர்கள் நிலைப் பற்றியும், அவர்களது எதிர்ப்பார்ப்புகளையும் நேரில் சென்று தெரிந்து வர மத்திய அரசு மிகப்பெரிய வாய்ப்பைக் கொடுத்தும் அதை கருணாநிதி நழுவவிட்டது  என்பது தமிழர்களாலேயே ஏற்றுக்கொள்ள முடியாது. அவர்களின் தேவை என்ன என்பதை தெரிந்துகொள்ளாமலேயே, அவர்களுக்கெதிரான - ஒரு நாட்டின் இறையாண்மைக்கு எதிரான கோரிக்கையை வைப்பது என்பது விபரீதமானது மட்டுமல்ல அவரது செல்வாக்கை எந்த விதத்திலும் உதவாது.     

ஞாயிறு, 15 ஏப்ரல், 2012

தமிழர்களை முட்டாள்களாக ஆக்குவதில் ஜெயலலிதாவும், கருணாநிதியும் எப்படி ஒத்துப்போகிறார்கள்...?

               ஒரு பக்கம் ஐக்கிய நாடுகளின் சபையில் மனித உரிமைகள்  அமைப்பில் இலங்கை அரசுக்கு எதிராக அமெரிக்கா கொண்டுவந்த கண்டனத் தீர்மானத்தை ஆதரித்து வாக்களித்த இந்திய அரசு, அடுத்து இலங்கை தமிழர்களுக்கு மறுவாழ்வு கொடுக்கப்படுவதை நேரில் பார்வையிடுவதற்கு மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் சுஷ்மா ஸ்வராஜ் தலைமையில்  அனைத்துக் கட்சியை சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர்கள் அடங்கிய இந்தியக் குழு  ஒன்றை இலங்கைக்கு அனுப்புவது என்று முடிவு செய்தது. அதற்காக அந்தக் குழுவில் காங்கிரஸ் கட்சி, பாரதீய ஜனதா கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, அதிமுக, திமுக உள்ளிட்ட கட்சிகளின் பாராளுமன்ற உறுப்பினர்களை மத்திய அரசே முடிவு செய்து நியமித்திருந்தது. 
                இந்த முடிவை ஆரம்பத்தில் ஏற்றுக்கொண்ட தமிழகக் கட்சிகளான திமுக மற்றும் அதிமுக ஆகிய இரு கட்சிகளும், குழுவை அறிவித்த நாளிலிருந்து இரவெல்லாம் தூங்காமல் குழம்பிக்கொண்டேயிருந்தன. 
             காரணம் பக்கத்து நாட்டு அரசு அனுப்பும் குழுவென்பதால், இலங்கை அதிபர் இராஜபக்சே சும்மா வெறுமனே பேசிவிட்டு எப்படியும் வெறுங்கையோடு அனுப்பமாட்டார்.  அறுசுவை விருந்தும், இராஜ உபசரிப்பும் நிச்சயம் நடைபெற வாய்ப்புள்ளது. அவ்வளவு தூரம் போயிட்டு கையை நனைக்காமல் வரமுடியாது.  அப்படியே  அந்த விருந்தில் கலந்துகொண்டாலும்,  அடுத்த நாளே இந்திய - இலங்கை பத்திரிகைகளில் புகைப்படத்தோடு செய்தி வெளியாகிவிடும். இது தான் இலங்கைத் தமிழர்களுக்காக போராடுகிற லட்சணமா என்று தமிழக மக்கள் திமுக - அதிமுக முகத்தில் காறித்துப்புவார்கள் என்கிற பயம் முதலமைச்சர் ஜெயலலிதாவிற்கும், முன்னால் முதல்வர் கருணாநிதிக்கும் வந்துவிட்டது. 
               சென்ற முறை இதேப்போல் இந்தியாவிலிருந்து சென்ற குழுவில் இடம்பெற்ற திமுகவை சேர்ந்த டி. ஆர். பாலு, கனிமொழி, திருமாவளவன் கூட்டத்தினர் அதிபர் இராஜபக்சே அளித்த விருந்தில் பங்குகொண்ட ''திருக்காட்சிகள்'' பத்திரிகைகளில் வந்ததையும், அதைப்பார்த்த தமிழக மக்கள் காறித்துப்பியதையும், இன்னும் முகத்தில் எச்சில் காயாமல் வழிந்து கொண்டிருக்கும் திமுகவும், அதைப் பார்த்து சந்தொஷப்பட்டுப்போன அதிமுகவும் இன்னும் மறக்கவில்லை என்பது அவர்கள் இருவரும் எடுத்த ஒரே மாதிரியான முடிவிலிருந்து தெரிகிறது. 
               தமிழக மக்களுக்கு ஒரு பெருத்த சந்தேகம் என்னன்னா...? இப்படியான முடிவுகளை எடுப்பதில் மட்டும் ஜெயலலிதாவும், கருணாநிதியும் எப்படி ஒத்து போகிறார்கள் என்று தெரியவில்லையே. ஒரு வேளை இவர்களை நம்பி ஓட்டுப்போடும் நாம் தான் முட்டாள்களோ...? என்று விழிக்கிறார்கள்.          

வெள்ளி, 13 ஏப்ரல், 2012

மம்தாவின் அராஜகம் ஓயவில்லை....!



                 மேற்குவங்கத்தில் மம்தாவின் அராஜக போக்கும், ஜனநாயகத்திற்கு எதிரான போக்கும் கட்டுக்கடங்காமல் போய்கொண்டிருக்கிறது.   மேற்குவங்க மாநிலத்தில் அறிவிக்கப்படாத அவசரநிலை சட்டம் நடைமுறையில் உள்ளதோ என்கிற கேள்வி மக்கள் மனதில் எழுந்துள்ளது. பதினைந்து நாட்களுக்கு முன்பு தான் மேற்குவங்க அரசு நூலகத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட எதிர்க்கட்சியினரின் பத்திரிக்கைகளுக்கும், ஆங்கில பத்திரிக்கைகளுக்கும் தடைவிதித்திருந்தார். அது ஜனநாயகத்தின் குரல்வளையை நெறிக்கும் செயல் என்று பத்திரிகை உலகமும், ஜனநாயகத்தின் மீது நம்பிக்கையுள்ளவர்களும் எதிர்ப்பு தெரிவித்தனர். 
            அந்த எதிர்ப்பு அலை ஓய்வதற்குள், அடுத்து பள்ளிப் பாடப்புத்தகத்தில் உள்ள காரல் மார்க்ஸ் மற்றும் ரஷ்யப் புரட்சி பற்றியப் பாடங்களை நீக்கி மம்தா உத்தரவிட்டது என்பது மேற்குவங்கம் மட்டுமல்லாது நாடு முழுவதுமிருந்து எதிர்ப்பு கிளம்பியது. 
           இதையெல்லாம் கண்டுகொள்ளாமல், மதம் பிடித்த யானை மண்ணை அள்ளி தன் தலையிலேயே போட்டுக்கொள்வது போல் அடுத்து,  நேற்று வியாழக்கிழமை இரவு, அம்பிகேஷ் மகாபத்ரா என்ற மேற்குவங்க  ஜாதவ்புர் பல்கலைக்கழக  வேதியியல் துறைப் பேராசிரியர் மம்தாவின் உத்தரவின் பேரில் கைது செய்யப்பட்டிருக்கிறார். இவர் மம்தாவை விமர்சனம் செய்து கார்ட்டூன் தயார் செய்து வெளியிட்டார் என்பது தான் அவர் மீதான குற்றச்சாட்டு. இது கருத்து சுதந்திரத்திற்கு எதிரானது. அது மட்டுமல்ல இந்திய மக்களுக்கு கருத்து தெரிவிக்கும் உரிமை என்பதை இந்திய அரசியலமைப்புச் சட்டமே கொடுத்திருக்கிறது. கார்ட்டூன் வெளியிட்டதற்காக அந்த பேராசிரியரை கைது செய்ததன் மூலம் மம்தா இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தையே மீறியிருக்கிறார் என்று தான் பொருள். 
                  தொடர்ந்து நடைபெற்றுக்கொண்டிருக்கும் மம்தாவின்   அராஜகப் போக்கு என்பது நாம் மறந்துவிட்ட சர்வாதிகாரி ஹிட்லரை தான்  நமக்கெல்லாம் நினைவுப்படுத்துகிறது....
Courtesy : The Hindu / 14.04.2012
           போகிற போக்கைப் பார்த்தால், அந்த கார்ட்டூனைப் பார்த்து வாய்விட்டு சிரித்ததற்காக பொதுமக்களும் தண்டிக்கப்படுவார்களோ என்கிற அச்சம் எழுகிறது.   இன்றைக்கு 14. 04. 2012 தேதியிட்ட இந்து பத்திரிகையில் வந்திருக்கும் கார்ட்டூனைப் பார்க்கும் போது நமக்கெல்லாம் அப்படித் தான் தோன்றுகிறது.

செவ்வாய், 10 ஏப்ரல், 2012

ஓய்வறியா உன்னதத் தலைவர் மறைந்தார் - மக்கள் சேவையில் பூத்த செம்மலர் விடைபெற்றது.



ஓய்வறியா செஞ்சூரியனே விடைபெற்று  சென்றாயோ......!
                நேற்று தான் கட்சியின் மாநாடு முடிந்தது. இன்னும் தோழர்களுக்கு மாநாட்டு உற்சாகமும், கொண்டாட்டமும் குறையவே இல்லை. அதற்குள் நம் மரியாதைக்குரிய தோழர் என். வரதராஜன் அவர்கள் மறைந்து விட்டார் என்ற செய்தி பேரிடியாய் இதயத்தைத் தாக்கியது. தள்ளாத வயதிலும் தளராமல் தலைமை தாங்கி அவர் நடத்தியப் போராட்டங்கள்  தான் எத்தனை... எத்தனை... அத்தனையும் நம்மைத் தளரச் செய்யாமல் இயங்கச் செய்த போராட்டங்கள் ஆயிற்றே. அவர் எழுச்சிமிக்க போராளி தான். என்றாலும் அவரது பேச்சிலே அமைதியும்,  இனிமையும், சாந்தமும் இருக்கும். 
                 அதே சமயத்தில் உழைப்பாளி மக்களின் பிரச்சனையாக இருந்தாலும், தலித் மக்களின் பிரச்சனையாக இருந்தாலும் அவர் குரலில் எரிமலையாய் நெருப்புத் தெறிக்கும். தீண்டாமைக்கு எதிராய் தீயாய் எழுந்தவர். இவர் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநிலச் செயலாளராக இருந்த போது தான்,  தீண்டாமைக்கெதிரான போராட்டங்கள் புது வடிவம் பெற்றது. தலித் மக்களின் விடுதலைக்காகவும், தீண்டாமைக்கெதிராகவும் போராடுவதற்கும், அவர்களின் உரிமைகளை பெற்றுத் தருவதற்கும், அவர்களை பாதுகாப்பதற்கும் தீண்டாமை ஒழிப்பு முன்னணி அமைப்பை உருவாக்கியதில் மிகப்பெரிய பங்கு வகித்தவர். இந்த முன்னனி என்பது மற்ற மாநிலங்களுக்கு முன்னுதாரணமாகவும், அவர்களெல்லாம் பின்பற்றக்கூடியதாகவும் விளங்கி வருகிறது. அந்த தீண்டாமை ஒழிப்பு முன்னணி உருவாக்கம் என்பது தோழரின் கருத்தில் உருவானதே என்று சொன்னால் அது மிகையாகாது.
                உத்தபுரம் தீண்டாமை சுவர் இடிப்புப் போராட்டம் என்பது தோழர் என். வி அவர்களின் நீண்ட நெடிய போராட்ட வாழ்க்கையில் ஒரு மைல் கல் என்றே சொல்லலாம். அதுமட்டுமல்ல, சமுதாயத்தில் தாழ்த்தப்பட்ட  மக்கள் போராடிப் பெற்ற இடஒதுக்கீடு என்கிற உரிமையின்  சிறு துளிக்கூட கடைசி மனிதன் வரை சென்றடையாதது கண்டு நொந்துப்போனார். குறிப்பாக தலித் மக்களிடையே கடைக்கோடியில் இருக்கும்  அருந்ததி இனமக்கள் கல்வி, வேலைவாய்ப்பு, பொருளாதாரம் போன்ற வாழ்வாதாரங்கள் கிடைக்கப்பெறாமல் மிகவும் பின்தங்கிய நிலையில் அவதிப்பட்டுக்கொண்டிருந்த சூழ்நிலையில் அவர்களை தோள் கொடுத்துத் தூக்கிவிடும் தோழனாய்-  தலைவனாய்  இருந்து போராடினார். அவரது அந்தப் போராட்டத்தின் விளைவாகத்தான், கருணாநிதி தலைமையிலான முந்தைய தமிழக அரசு அருந்ததி இன மக்களுக்கு இரண்டு சதவீதமான உள் ஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்தியது. 
                 அருந்ததி இன மக்களுக்கான இரண்டு சதவீதமான உள் ஒதுக்கீடு பெற்றுத்தந்ததில் தோழர் என். வரதராஜன் அவர்களுக்கு மிகப்பெரிய பங்கு உண்டு. இது மாதிரியான வீரம் செறிந்தப் போராட்டங்களும், நிகழ்வுகளும் தோழரின் வரலாற்றில் மட்டுமல்ல, எதிர்காலத்தில் பாட்டாளிவர்க்க வரலாற்றில் இடம் பெறக்கூடியது என்றால் அது  மிகையாகாது.
               இப்படிப்பட்ட ஒப்பற்றத் தலைவர் - ஒரு உன்னதமான தலைவர் தனது இறுதி மூச்சு வரை கட்சி - இயக்கம் - மக்கள் என்று தான் ஓய்வில்லாமல் உழைத்துக்கொண்டிருன்தவர். நேற்று வரை கோழிக்கூட்டில் கட்சி மாநாட்டில் கலந்துகொண்டு விட்டு, இன்று காலை தான் சென்னையில் வீடு திரும்பினார். நேற்று தான் இவரை கட்சியின் மத்தியக்குழுவிலிருந்து மாநாடு விடுவித்தது. அதற்காகவே காத்திருந்தார் போல் கட்சிப்பணி முடித்த களைப்பில் - ஓய்வரியாமல் உழைத்த களிப்பில் அவரது இதயம் ஓய்வு பெற்றது. ஆம்... தோழர். என். வி நம்மை விட்டு பிரிந்தார்.
                யார் ஆறுதல் கூறினாலும், அவரது பிரிவால் வாடும் நம்மை தேற்றுதல் கடினம். ஆனால் அவர் விட்டுச் சென்ற போராட்டங்களை மேலும் செழுமைப்படுத்தி முன்னெடுத்துச் செல்வோம். இது மறைந்த தோழருக்கு நாம் செய்யும் அஞ்சலி... மரியாதை....வீரவணக்கம்...

ஞாயிறு, 8 ஏப்ரல், 2012

காந்தி எப்போது தேசத்தந்தை ஆனார் ? - காந்தியைப்பற்றிக் கூட தெரியாத பிரதமர் அலுவலகமும், உள்துறை அமைச்சகமும்...!









   


ஒரு குழந்தைக் கேட்டக் கேள்வியினால்
தேசத்திற்கே விடைகிடைத்தது...!               

            தகவல் அறியும் உரிமை சட்டம் நடைமுறைக்கு வந்து பல ஆண்டுகள் ஆனாலும் அதை பயன்படுத்துவதற்கே தயங்குகிற இந்த காலத்தில், உத்திரபிரதேச மாநிலம் லக்னோவை சேர்ந்த   ஐஸ்வர்யா என்ற பத்து வயது பள்ளி மாணவி தகவல் அறியும் உரிமை சட்டத்தின் மூலமாக கேட்ட கேள்வியினால் மத்திய அரசே ஆடிப்போயிருக்கிறது. அந்த அளவிற்கு அந்த மாணவி கேட்டக் கேள்வியினால் பிரதமர் அலுவலகம் மற்றும் உள்துறை அமைச்சகம் உட்பட மத்திய அரசு அலுவலகங்கள் எல்லாம் பரபரப்பாகியிருக்கிறது. 
           அப்படி என்ன கேள்வியை அந்த மாணவி கேட்டாள்...?  இதுவரையில் யாரும் கேட்காத கேள்வியை அல்லவா கேட்டாள். பெரியவர்களுக்கே தோன்றாதக் கேள்வி அல்லவா அது.
           அவள் கேட்ட கேள்வி என்ன தெரியுமா...?  ''எப்போது மகாத்மா காந்தி இந்திய நாட்டின் தந்தை ஆனார் ? அதாவது எந்த ஆண்டில் அவருக்கு அத்தகைய பட்டம் வழங்கப்பட்டது'' என்று கேட்டாளே ஒரு கேள்வி  அந்த சிறு பெண் ஐஸ்வர்யா. 
             அவ்வளவு தான். முதலில் பிரதமர் அலுவலகத்திற்கு இந்த கேள்வியை அவர் கேட்டிருக்கிறார். பிரதமர் அலுவலக அதிகாரிகள் எங்களை இண்டர்வியு - ல கூட இப்படி கேள்வி கேட்டதில்லை. இவ்வளவு கஷ்டமான கேள்வியை கெட்டுவிட்டதே இந்தப் பெண் என்று அவர்களெல்லாம் விழித்தார்கள்.
                     இந்த கேள்விக்கு பிரதமர் அலுவலகத்தால் தகுந்த பதில் தர முடியாததால்,   அந்த கேள்வியை சாமர்த்தியமாக உள்துறை அமைச்சகத்திற்கு அனுப்பி வைத்துவிட்டது. அங்கேயும் இதே நிலைமை தான். நல்ல வேளை ''தேசத்தந்தையா.... காந்தியா... அவரு யாருன்னு'' கேட்காம போய்ட்டாங்க. 
         உள்துறை அமைச்சகமும் அல்லாடிப்போக அந்த கேள்வியைத் தூக்கி தேசிய ஆவணக் காப்பக அலுவலகத்திற்கு ( National Archives of India - NAI  ). அனுப்பிவைத்துவிட்டு நிம்மதியா ஆயிட்டாங்க.  
              தேசிய ஆவணக் காப்பகமும் ஒன்றும் விதிவிலக்கல்ல. அவர்களுக்கும் அந்தக் கேள்விக்கான பதில் கிடைக்கவில்லை. மாணவியின் கேள்விக்கு பதில் கண்டு பிடிக்க இயலாததால்,  அந்த ஆவணக் காப்பகத்தின் துணை இயக்குனரும், தகவல் அதிகாரியுமான ஜெயபிரபா ரவீந்திரன் கேள்விக்கேட்ட அந்த மாணவியையே ஆவணக்காப்பகத்திற்கு வரும்படியும், காப்பகத்திலுள்ள ஆவணங்களைத் தேடி நீயாக அந்தக் கேள்விக்கான பதிலை கண்டுபிடித்துக்கொள்ளலாம் என்றும் அழைப்பு விடுத்திருக்கிறார்.
                இது என்ன கேவலம் பாருங்க. இந்த தேசத்தின் விடுதலைக்காக போராடியவர்களை இந்த அரசு மறந்திருக்கிறது என்று பார்க்கும் போது வேதனையாகத் தான் இருக்கிறது. காந்தியை தலையில் தூக்கிக்கொண்டு ஆடும் இந்த ஆட்சியாளர்களுக்கே தெரியவில்லை என்றால், தேசபக்தியும் இல்லாமல், இந்த தேசத்தின் விடுதலைக்காக பாடுபட்ட தலைவர்களைப் பற்றியும் தெரியாமல்,  இந்த ஆட்சியாளர்கள் என்ன ஆட்சி செய்துகொண்டிருக்கிறார்கள். அப்படியென்றால் தேசத்தைப் பற்றிய சிந்தனைக்கூட இல்லாமல் யாருக்காக ஆட்சி செய்து கொண்டிருக்கிறார்கள்.
             ஆட்சியாளர்கள் பள்ளிப் பாடத்திட்டத்தில்  '' மகாத்மா காந்தி ''தேசத்தந்தை'' என்று அனைவராலும் அன்புடன் அழைக்கப்படுகிறார்''  என்று
மட்டும் எழுதிவிட்டால் போதுமா...? குழந்தைகள் கேட்கும் கேள்விக்கு ஆசிரியர்கள் மட்டுமல்ல, ஆட்சியாளர்களும் பதில் சொல்ல தெரிந்திருக்க வேண்டாமா...?
                இன்றைய இளையத் தலைமுறையினருக்கு இந்த தேசத்தின் வரலாற்றைப் பற்றிச் சொல்லித்தரவேண்டிய ஆட்சியாளர்களே.. நீங்கள் ஒரு முறை தேச வரலாற்றை புரட்டிப்படியுங்கள்.  அப்போதாவது உங்களுக்கு தேசபக்தி வருகிறதா என்று பார்ப்போம். 

காந்தி எப்போது தேசத்தந்தையானார்...?

               இந்திய தேசியப் படையை அமைத்து நமது தேச விடுதலைப் போராட்டத்தில் மிகப்பெரும்  பங்கு வகித்த மாவீரன் நேதாஜி 1944 - ஆம் ஆண்டு ஜூலை 6 - ஆம் தேதி அன்று சிங்கப்பூர் வானொலியில் உரையாற்றும் போது காந்தியை ''தேசத்தந்தை'' என்று குறிப்பிட்டு பேசினார். காந்தியை தேசத்தந்தை என்று முதன்முதலில் அழைத்தது மாவீரன் நேதாஜி தான் என்பது குறிப்பிடத்தக்கது. 
                அதேப்போல், 1947 - ஆம் ஆண்டு ஏப்ரல் 28 - ஆம் தேதியன்று நடைபெற்ற மாநாட்டில் பேசும் போது   இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் தலைவர்களில் ஒருவரான சரோஜினி நாயுடு அம்மையார் அவர்களும் காந்தியை பற்றி குறிப்பிடும் போது இவ்வாறாக குறிப்பிட்டார் என்றும் வரலாறு சொல்கிறது.
             இன்றைய ஆட்சியாளர்கள் வரலாற்றைப் படைக்கவில்லை என்றாலும் பரவாயில்லை.  குறைந்தது நம் வரலாற்றை படியுங்கள். அப்போதாவது தேசபக்தி வருகிறதா என்று பார்ப்போம்.

சனி, 7 ஏப்ரல், 2012

கார்ல் மார்க்ஸ் உலகத்திற்கே வெளிச்சம் தரும் சூரியன் - ஆயிரம் மம்தா வந்தாலும் மறைத்துவிடமுடியாது...

கார்ல் மார்க்சை 
மறைத்து விட்டு                                               
உலக வரலாற்றை 
படிக்கமுடியாது...!
       
        எப்போதோ ஒரு முறை கவிஞர் வைரமுத்து எழுதிய ஒரு அற்புதமான கவிதை வரிகள் என் நினைவிற்கு வருகிறது.
           
                                                          
            '' மின்சாரமும்   
                மார்க்சியமும்
                இல்லாமல் 
                இனி
                உலகம் இயங்காது'' 
என்பது தான் அந்த கவிதை வரிகள். அதில் சொல்லப்பட்ட கருத்து என்பது உண்மையிலும் உண்மையானது.
                  மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா தனது அடுத்தக்கட்ட அடாவடித்தனத்தை நிகழ்த்தி இருக்கிறார். மேற்கு வங்க பள்ளிப் பாடத்திட்டத்தில் வரலாற்றுப்பாடத்தில் ரஷ்யப்புரட்சி, மாமேதை கார்ல் மார்க்ஸ், ஏங்கெல்ஸ் பற்றிய பாடங்களை மம்தா தடை செய்து நீக்கியிருக்கிறார்.  ரஷ்யப்புரட்சி மற்றும் கார்ல் மார்க்ஸ் போன்ற வரலாறுகளை தவிர்த்து உலக வரலாற்றைப் படிக்க முடியாது என்ற குறைந்த பட்ச அறிவுக்கூட மம்தாவிற்கு இல்லை. 
             மூன்று ஆண்டுகளுக்கு முன் உலகளவில் நிகழ்ந்த ''பொருளாதார வீழ்ச்சிக்கான'' தீர்வை, அமெரிக்கா மற்றும்  ஐரோப்பா போன்ற முதலாளித்துவ நாடுகளெல்லாம் ''யாரை''  வேண்டாமென்று தூக்கி எரிந்தார்களோ அவரைத் தான் தேடினார்கள். அவர் எழுதிய புத்தகத்தை தான் தேடினார்கள். ஆம்... அவர்கள் தேடியது கார்ல் மார்க்சை தான். அவர் எழுதிய ''தாஸ்  கேபிடல்'' என்ற ''மூலதனம்'' புத்தகத்தைத் தான் தேடினார்கள். ஏனென்றால் பொருளாதார வீழ்ச்சிக்கு அதில் தான் தீர்வு கிடைத்தது. அதனால் தா அமெரிக்காவிலும், இங்கிலாந்திலும் தாஸ் கேப்பிட்டல் மிக அதிகமான பிரதிகள் அச்சிடப்பட்டு விற்கப்பட்டன.
            பிரான்ஸ் நாட்டு அதிபர் கூட ''எல்லோரும் கார்ல் மார்க்ஸ் எழுதிய தாஸ் கேபிட்டலை படியுங்கள். அதில் தான் பொருளாதார வீழ்ச்சிக்கு தீர்வு இருக்கிறது'' என்று சொன்னதாக பத்திரிகைகளில் வந்த செய்தியை மம்தா படித்திருக்கமாட்டார். 
                 எல்லோரும் பைபிள் படியுங்கள் என்று சொள்ளக்கூடிய போப்பாண்டவர் கூட ''எல்லோரும் தாஸ் கேபிட்டல் படியுங்கள். அதில் தான் பொருளாதார வீழ்ச்சிக்கு தீர்வு இருக்கிறது'' என்று சொன்னதாக வந்த செய்தியை மம்தா கேள்விப்பட்டிருக்கமாட்டார். 
          சென்ற ''ஆயிரமாண்டின்'' மாமனிதனாக கருதப்பட்ட மாமேதை கார்ல் மார்க்சையும், அவர் கருவாக்கி உருவாக்கிய கம்யூனிசத்தத்துவங்களையும் யாராலும் அழித்துவிட முடியாது. நேற்று - இன்று - நாளை என முக்காலத்திற்கும் பொருத்தமானவர் தான் கார்ல் மார்க்ஸ். உலகம் பொருளாதார வீழ்ச்சியில் தத்தளிக்கும் போது கார்ல் மார்க்ஸ் தான் கைகொடுத்து உதவுவார். இதெல்லாம் மம்தா அறிவதற்கு வாய்ப்பில்லை தான். மம்தாவிற்கு கற்பூர வாசனை தெரிவதற்கு நியாயமில்லை தான்.   

வெள்ளி, 6 ஏப்ரல், 2012

குடியரசுத்தலைவர் பதவிக்கு நல்ல மனிதரை தேர்ந்தெடுங்கள்...!

 அர்ப்பணிப்பு உணர்வுள்ள தலைவர்கள் தேவை...!

                        எல்லா வளங்களும் மிகுதியாய் உள்ள நம் நாட்டில், நல்ல தலைவர்கள் இல்லை என்பது தான் இந்த நாட்டின் துரதஷ்டமான நிலையாகும்.  தற்போதைய குடியரசுத்தலைவர் திருமதி. பிரதீபா பாட்டில் அவர்களின் ஐந்தாண்டுப் பதவிக்காலம் வருகிற ஜூலை மாதம் முடிவடையும் சூழ்நிலையில் அந்த உயர்ந்தப்பதவியை அடைவதற்கு இப்போதே காங்கிரஸ் கட்சியிலும், பாரதீய ஜனதா கட்சியிலேயும் ஏகப்பட்ட போட்டாப்போட்டி கிளம்பியிருக்கிறது. 

                இந்த இருக்கட்சிகளுக்கும் தனிப்பட்ட வெற்றி வாய்ப்பு என்பது கேள்விக்குறியாக இருப்பதால், குடியரசுத்தலைவர் மற்றும் குடியரசுத்துணைத்தலைவர் ஆகிய பொறுப்புகளையும்   இவ்விருக்கட்சிகளும் ஆளுக்கொன்றாக பிரித்துக்கொண்டு தங்களது கட்சிகளைச்சேர்ந்த ஒருவரை அந்தப்பதவிகளுக்கு நியமிப்பது போன்ற பேரங்களும் ஒருப்பக்கம் திரைமறைவில் நடந்தவண்ணம் இருக்கின்றன.  இன்னொருப்பக்கம் அதிக வாக்குகளை வைத்திருக்கும் மாநிலக்கட்சித் தலைவர்களை சந்தித்து ஆதரவு கோருவதுமான நிகழ்வுகள் நடந்துகொண்டிருக்கின்றன. 
               இது மாதிரி நிகழ்வுகளெல்லாம் நடப்பது என்பது வழக்கமான ஒன்று தான். ஆனால் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு ஊடகங்களெல்லாம்  புதிய குடியரசுத்தலைவராக தேர்ந்தெடுக்கப்படுவதற்கு வாய்ப்புள்ளவர்கள் யாரென்பதை இப்போதே ஊகமாக வெளியிட்டு மக்களுக்கு மூளைச்சலவை செய்ய ஆரம்பித்திருப்பது தான் வயிற்றெரிச்சலாக இருக்கிறது. அதுமட்டுமல்ல அந்த பெயர்களை படிக்கும் போது நமக்கெல்லாம்  குலைநடுங்குகிறது என்பது தான் உண்மை. 
                   புதிய குடியரசுத்தலைவராக காங்கிரஸ் கட்சி பரிசீலிப்பதாக சொல்லப்படும் பெயர்கள் தற்போதைய பிரதமர் மன்மோகன் சிங், நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி மற்றும் உள்துறை அமைச்சர் ப. சிதம்பரம் ஆகிய இந்த ''தன்னலமில்லாத'' மாமனிதர்களைத் தான் என்று கேள்விப்படும்போது உண்மையிலேயே குலை நடுங்குதடா சாமீ. மக்கள் வாக்களித்து ஆட்சி செய்ய தேர்ந்தெடுத்திருக்கிறார்கள் என்பதற்காக, மக்கள் நேரிடையாக வாக்களிக்க வாய்ப்பில்லாத குடியரசுத்தலைவர் பதவியை தன்னிச்சையாக எடுத்துக்கொள்ள  அதற்கு கடுகளவும் லாயக்கில்லாதவர்கள்   எல்லாம் ஆசைப்படுகிறார்கள்.
             நல்லத் தலைவர்கள் இல்லாமல் இந்த தேசம் எப்படியெல்லாம் தவிக்கிறது என்பதை இப்போதாவது நம் நாட்டு மக்கள் புரிந்துகொள்ள வேண்டும்.   தேசபக்தியுள்ள... நேர்மையான... தூய்மையான.... மக்கள் நலனில் அக்கறையுள்ள... அநீதிகளை கண்டு கோபப்படுகிற... தன்னலமற்ற தலைவர்கள் என்பதே நம் நாட்டில் அரிதாகிவிட்டது என்பது ஒரு வேதனையான விஷயமாகும் என்ற உண்மையை மக்கள் புரிந்துகொள்ளவேண்டும்.
               காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா காந்தி தன் மகன் ராகுல் காந்திக்கு பிரதமாராக பட்டாபிஷேகம் செய்து பார்க்கவேண்டும் என்பதற்காகவும், 2014 - ஆம் ஆண்டில் நடைபெறவுள்ள பொதுத்தேர்தலில் மீண்டும் மன்மோகன் சிங்கின் முகத்தைக் காட்டி ஓட்டுக்கேட்டால்,  வரலாறு   காணாத  ஊழல் மற்றும் கடுமையான விலைவாசி உயர்வினால் பாதிக்கப்பட்டிருக்கிற மக்கள் காங்கிரஸ் கட்சிக்கு எதிராக வாக்களித்து விடுவார்கள் என்ற அச்சத்தில் ராகுல் காந்தியை பிரதமர் வேட்பாளராக நிறுத்த வேண்டும் என்பதற்காகவும் மன்மோகன் சிங்கை குடியரசுத்தலைவராக்கி விடலாம் என்று சோனியா காந்தி யோசித்து வருவதாக சொல்லப்படுகிறது.
                 காங்கிரஸ் கட்சி யோசித்துள்ள மன்மோகன் சிங்கோ... பிரணாப் முகர்ஜியோ... ப.சிதம்பரமோ... இவர்கள் மூன்று பேருமே எந்த வகையில் குடியரசுத் தலைவர் பதவிக்கு பொருத்தமானவர்கள் என்பதை எண்ணிப்பாருங்கள். இவர்கள் இந்த தேசத்தை கூறுபோட்டு விற்கத்  துடிப்பவர்கள்.   கொஞ்சம் கூட தேசப்பக்தியோ... மக்களைப்பற்றிய சிந்தனையோ இல்லாதவர்கள். நீதி, நேர்மை, தூய்மை இவைகளெல்லாம் என்ன விலை என்று கேட்கக்கூடியவர்கள். தன் குடும்பம் - தன் மக்கள் என்று தன்னலத்துடன், தவறான முறையில் சொத்து சேர்க்கத் துடிப்பவர்கள்.
               மறைந்த முன்னாள் குடியரசுத்தலைவர் கே. ஆர். நாராயணன் போன்றவர்களெல்லாம் பணியாற்றிப் பெருமை சேர்த்த குடியரசுத்தலைவர் பதவியில், மன்மோகன் சிங், பிரணாப் முகர்ஜி, ப.சிதம்பரம் -  இவர்களைப்போன்றவர்கள் அமர்ந்தால் குடியரசுத்தலைவர் பதவியும், குடியரசுத்தலைவர் மாளிகையும் மாசுபடிந்து நாறிவிடும். 

            எனவே, இந்திய மக்களே... குடியரசுத்தலைவர் பதவிக்கு நல்ல மனிதரை தேர்ந்தெடுக்க குரல் கொடுங்கள்.


வியாழன், 5 ஏப்ரல், 2012

மக்கள் நலனை பாதுகாக்க அயர்வின்றி போராடுவோம் - பிரகாஷ் காரத் எழுச்சியுரை

            கோழிக்கோட்டில் கட்சியின் 20வது அகில இந்திய மாநாட்டை துவக்கி வைத்து உரையாற்றிய அவர் கூறியதாவது:- 2008 ஆம் ஆண்டில் நமது கட்சிக் காங்கிரஸ் நடந்ததற்குப் பின்னுள்ள காலகட்டம் உலகப் பொருளாதார நெருக்கடியைக் கண்டதானதாகும். 1930 -களில் ஏற்பட்ட பெருமந்தத்திற்குப் பிறகு உருவான கடுமையான நெருக்கடியாகும். 21 -  ஆம் நூற்றாண்டில் முதலாளித்துவத்தின் தொட ரும் இந்த நெருக்கடி ஒரு திருப்புமுனையாகும்.
         மூலதனத்தால் உந்தப்படும் முதலாளித்துவ உலகமயமாக்கல் நிலைத்து நிற்காது என்பதை இது அடிக்கோடிட்டுக் காட்டுகிறது. இதன் தாக்கமானது ஐரோப்பாவில் உள்ள வளர்ந்த முதலாளித்துவ நாடுகள் மற்றும் அமெரிக்காவைக் கடுமையாகத் தாக்கியுள்ளது. பெரிய வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களை ஆளும் வர்க்கம் கைதூக்கிவிட்டுள்ளது. மக்கள் மீது கடுமையான சிக்கன நடவடிக்கைகளை சுமத்தியுள்ளன. இதன்விளைவாக வேலையின்மை, இருப்பிடமின்மை மற்றும் உழைக்கும் மக்களின் சமூகப்பாதுகாப்பு பலன்கள் மீதான தாக்குதல்கள் போன்றவை அதிகரித்து வருகின்றன.உழைக்கும் வர்க்கம் மற்றும் உழைக்கும் மக்களின் மற்ற பிரிவினர், வாலிபர்கள் மற்றும் மாணவர்கள் தங்களின் வாழ்வாதாரங்கள் மற்றும் வாழ்க்கைத்தரம் மீதான தாக்குதலுக்கு எதிராக பரவலான போராட்டங்களை நடத்திக் கொண்டிருக்கிறார்கள். கிரீஸ், போர்ச்சுக்கல், ஸ்பெயின் மற்றும் மற்ற ஐரோப்பிய நாடுகளில் நடக்கும் பொது வேலை நிறுத்தங்கள், வால் ஸ்டிரீட்டைக் கைப்பற்றுவோம் இயக்கம், பெரிய அளவிலான மாணவர் மற்றும் வாலிபர் அணிதிரட்டல்கள் ஆகியவை நவீன-தாராளமயக் கொள்கைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்று கோருகின்றன.
          நவீன-தாராளமய அமைப்புக்கு எதிராக நடக்கும் அனைத்துப் போராட்டங்களுக்கும் கட்சி தனது ஆதரவை அளிக்கிறது. தனது மேலாதிக்கத்தைத் தக்க வைத்துக் கொள்ள அமெரிக்கா தலைமையிலான ஏகாதிபத்தியம் தனது முரட்டுத்தனமான நடவடிக்கைகளைத் தொடர்கிறது. இந்தக் காலகட்டத்தில் லிபியா மீதான நேட்டோ தாக்குதலை நாம் பார்த்தோம். சிரியாவைக் குறி வைத்துள்ளார்கள். ஈரானுக்கெதிராக இஸ்ரேலுடன் கைகோர்த்துக் கொண்டு பதற்றங்களை உருவாக்குகிறார்கள். அரபு நாடுகளில் எழுந்துள்ள மக்கள் எழுச்சி களை தங்கள் வசமாக்கிக் கொள்ளவும், திசைதிருப்பவும் ஏகாதிபத்தியம் மேற் கொள்ளும் தலையீடுகளை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கடுமையாகக் கண்டிக்கிறது. சிரமமான நிலையிலும் சுதந்திர நாட்டுக்காகவும், இஸ்ரேலிய ஆக்கிரமிப்புக்கு எதிராகவும் போராடி வரும் பாலஸ்தீன மக்களுக்கு முழுமையாக ஆதரவைத் தெரிவித்துக் கொள்கிறோம்.தெற்கு ஆசியாவில் உள்ள அனைத்து இடது, ஜனநாயக மற்றும் முற் போக்கு சக்திகளுக்கு நமது கட்சி ஆதரவு தெரிவித்துக் கொள்கிறது.
           நமது பிராந்தியத்தில் நவீன-தாராளமயக் கொள்கைகள் மற்றும் ஏகாதிபத்திய செல்வாக்கு ஆகியவற்றால் உருவான பொதுவான பிரச்சனைகளாக இருக்கும் ஏராளமான வறுமை, பெரும் அளவிலான ஏற்றத்தாழ்வு உள்ளிட்ட பிரச்சனைகளை அந்த சக்திகள் சந்திக்கின்றன.

கொடூரத் தாக்குதல் தொடுக்கும் தாராளமயம்

           ஐ.மு.கூட்டணி-2 ஆட்சிக்கு வந்து கிட்டத்தட்ட மூன்று ஆண்டுகள் நிறைவு பெற்றுவிட்டன. ஏழை மக்களின் மீது கடுமையான தாக்குதலை ஏற்படுத்தும் வகையில் உணவு மற்றும் அத்தியாவசியப் பண்டங்களின் விலைகள் உயர்ந்துள்ளன. இதுபோன்ற அம்சங்களைக் கொண்ட மோசமான ஆட்சியாக இது இருக்கிறது. விவசாய நெருக்கடிக்கு தீர்வு காணப்படாததால் மீண்டும் விவசாயிகள் தற்கொலை செய்து கொள்கிறார்கள். இந்த ஆட்சியின் நவீன-தாராளமயக் கொள் கைகள் உழைக்கும் மக்கள் மீது கூடுதல் சுமையை ஏற்படுத்தியுள்ளது. வறுமைக் குறியீடுகளையே மோசடியாக நிர்ணயிக்கிறார்கள். இருபதாண்டு கால தாராளமயம், எப்போதும் இல்லாத அளவுக்கு ஏற்றத் தாழ்வை அதிகரித்திருக்கிறது. இதனால் வாழ்க்கைக்கு தேவையான அடிப்படையான விஷயங்கள் கூட கிடைக்காத கோடிக்கணக்கான மக்கள் இருக்கையில், சில பெரும் பணக்காரர்களையும் இது உருவாக்கியது.
             நவீன-தாராளமயத்திற்கு எதிரான போராட்டத்தை பிரதானமானதாக மார்க்சிஸ்ட் கட்சி எடுத்துக் கொள்கிறது. பிப்ரவரி 28 அன்று நடந்த தொழிலாளர்களின் வேலைநிறுத்தம் நாடு முழுவதுமுள்ள உழைக்கும் வர்க்கத்தின் பதிலடியாக அமைந்தது. இனிவரும் போராட்டங்களுக்கு இது முன்னோட்டமாக அமையும். இதற்கான பணியை எவ்வாறு செய்ய வேண்டும் என்பதை கட்சி மாநாடு விவாதிக்கும்.உயர்மட்ட ஊழலைப் பொறுத்தவரை ஐ.மு.கூட்டணி அரசு புதிய கட்டத்தை எட்டியுள்ளது. இது வரை காணாத அளவிலான ஊழல்கள் கடந்த எட்டு ஆண்டு கால ஆட்சியில் நடந்திருக்கிறது. இது நவீன-தாராள மயக் கொள்கையின் வெளிப்பாடாகும். பெரும் வர்த்தகம், ஆளும் அரசியல் வாதிகள் மற்றும் அரசு அதிகாரிகளுக்கிடையில் கூட்டு உள்ளது.
         இவர்கள் பொதுப் பணத்தை சூறையாடி வருகிறார்கள். அரசு அதிகாரிகள் மட்டத்தில் உள்ள ஊழலைக் களைய லோக்பால் அவசியம்தான். ஆனால் அதுமட்டுமே போதாது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் இடதுசாரிகள் மட்டுமே ஊழலை எதிர்த்து நம்பகத் தன்மையுடைய போராட்டத்தை நடத்தக்கூடியவர்கள். மேற்கு வங்கம் மற்றும் கேரளாவில் இருந்த அரசுகள், திரிபுராவில் தற்போதுள்ள அரசு ஆகியவை உயர்மட்ட ஊழல்கள் இல்லாதவை என்பது குறிப்பிடத்தக்கது.

மதவெறி பாஜக

            நாட்டின் மதச்சார்பற்ற ஜனநாயக அமைப்பு மற்றும் மதிப்பீடுகளுக்கு எதிரான நிகழ்ச்சி நிரலோடு இந்துத்துவா சக்திகள் அலைகின்றன. பாஜக ஆட்சியில் இருக்கும் கர்நாடகம், மத்தியப்பிரதேசம் மற்றும் குஜராத் ஆகிய மாநிலங்களில் சிறுபான்மையினர் தாக்குதலை எதிர்நோக்குகிறார்கள். இதை வைத்து உழைக்கும் மக்களைப் பிரிக்கிறார்கள். வலதுசாரி நவீன-தாராளமயக் கொள்கைகளுக்கு வலு சேர்க்கிறார்கள். சிறுபான்மையினரின் உரிமைகளுக்காகப் போராடுவதில் மார்க்சிஸ்ட் கட்சி முன்னிற்கிறது. அதே வேளையில், சிறுபான்மையினருக்கும் இருக்கும் மதவெறி மற்றும் தீவிரவாதம் ஆகியவற்றிற்கு எதிராகக் குரலும் கொடுக்கிறது. 
          அமெரிக்காவுக்குச் சாதகமான வெளியுறவுக் கொள்கையை மன்மோகன் சிங் தலைமையிலான அரசு கடைப்பிடிக்கிறது. இது நாட்டு நலனுக்கு எதிராக உள்ளது. ஈரானிலிருந்து இறக்குமதியாகும் கச்சா எண்ணெய் அளவு குறைகிறது. ஐ.நா.பாதுகாப்பு கவுன்சிலில் சிரியாவுக்கு எதிராக வாக்களித்துள்ளனர். அமெரிக்காவுடனான கூட்டு, உள்நாட்டுப் பொருளாதாரக் கொள்கைகளையும் தீர்மானிக்கிறது. இந்தியாவில் வால்மார்ட் கடைகள் அனுமதிக்கப்படவேண்டும் என்று அமெரிக்க நிர்வாகம் தொடர்ந்து கோரி வருகிறது. அமெரிக்காவுட னான போர்க்கூட்டணி உத்தியை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உறுதியாக எதிர்த்து நிற்கும். மேற்கு வங்கத்தில் கட்சி பின்னடைவைச் சந்தித்தது. கடந்த மூன்றாண்டுகளில் மார்க்சிஸ்ட் கட்சி மீது கடுமையான தாக்குதல் நடக்கிறது. கடந்த கட்சிக் காங்கிரசுக்குப் பிறகு 570  - க்கும் மேற்பட்ட கட்சி உறுப்பினர்கள் மற்றும் ஆதரவாளர்கள் கொல்லப்பட்டுள்ளனர். சட்டமன்றத் தேர்தலுக்குப்பிறகு இது அதிகரித்துவிட்டது. மக்களின் ஜனநாயக உரிமைகள் பறிக்கப்படுகின்றன. இந்தப் பிரச்சனைகளில் மக்களிடம் சென்று அவர்களைத் திரட்டும் பணியை மார்க்சிஸ்ட் கட்சி செய்கிறது. 

ஒரே முகம்தான்

         பொருளாதாரக் கொள்கைகளைப் பொறுத்தவரை, காங்கிரசுக்கும், பாஜகவுக்கும் எந்த வேறுபாடும் இல்லை. இரண்டுமே நவீன-தாராளமயத்தை ஆதரிக்கின்றன. ஊழலைப் பொறுத்த வரையில், இரண்டில் ஒன்றைத் தேர்வு செய்வது என்பது சாத்தியமில்லை. கனிமக் கொள்ளையரோடு கர்நாடகத்தில் பாஜகவினர் கூடிக்குலாவும் மோசடிகள் அரங்கேறுகின்றன. உயர் மட்ட ஊழலில் மத்தியில் உள்ள காங்கிரஸ் தலைமையிலான அரசின் 2ஜி அலைக்கற்றை போன்ற உயர்மட்ட ஊழல்கள் போலவே பாஜக ஆளும் மாநிலங்களிலும் ஊழல்கள் நடக்கின்றன. அண்மையில் நடந்த ஐந்து மாநிலச் சட்டமன்றத் தேர்தல்கள் ஐக்கிய முற்போக்கு கூட்டணி மற்றும் தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆகிய இரண்டுமே தோல்வியுற்றதைக் காட் டின.
                   நம்மைப் பொறுத்த வரை, இடது மற்றும் ஜனநாயக சக்திகளால்தான் மாற்றைத் தர முடியும். இதைக் கட்டுவதற்கு, முதலில் நமது கட்சியைப் பலப்படுத்த வேண்டும். வலுவான மார்க்சிஸ்ட் கட்சி என்பது, இடதுசாரி ஒற்றுமையைப் பலப்படுத்தும் மற்றும் பிற ஜனநாயக சக்திகளையும் நமது பக்கம் கொண்டு வரும். இதைச் செய்ய, உழைக்கும் மக்கள், விவசாயிகள், விவசாயத் தொழிலாளர்கள், வாலிபர்கள் மற்றும் பிறரின் பிரச்சனைகளைக் கட்சி கையில் எடுக்கும். தலித்துகள், ஆதிவாசிகள், பெண்கள் மற்றும் சிறுபான்மையினரின் பிரச்சனைகளுக்காக சளைக்காமல் போராடும். புரட்சிகரப் பாதையைத் தீர்மானிக்க இந்தியாவில் உள்ள திட்டவட்ட நிலைமைகளுக்கேற்ப மார்க்சியம் -லெனினியத்தை பயன்படுத்த வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நம்புகிறது. வெளிநாடுகளில் ஏற்பட்ட புரட்சிகளை நாம் ஒருபோதும் காப்பியடிக்க முயற்சித்ததில்லை. தத்துவார்த்தப் புரிதலை தொடர்ந்து நாம் மேம்படுத்திக் கொள்ள வேண்டும். நம்முன் எழும் சவால்களைச் சந்திக்க நம்மை நாமே தயார்ப்படுத்திக் கொள்ள வேண்டும். கட்சியின் 20வது மாநாடு இந்தப்பணியைச் செய்யும் என்றார்.

Inaugural Speech of Com. Prakash Karat, General Secretary, CPI(M)

Opening Speech of  Com. Prakash Karat, General Secretary of the CPI(M) 
at the Inaugural Session of the 20th Congress of the CPI(M)

Comrade Ramachandran Pillai, President of the inaugural session, Comrade A. B. Bardhan, veteran leader of the Communist Party of India,
Comrade delegates and observers, Guests and friends,

           I hereby declare open the 20th Congress of the Communist Party of India (Marxist). I convey my warm greetings to all the delegates, observes and special invitees assembled here. I welcome Comrade A. B. Bardhan who has come here after the completion of the 21st Congress of Communist Party of India at Patna.

Comrades and friends,
             The Party Congress is being held in Kerala after a gap of 22 years. Kerala blazed a new trail by electing the first Communist ministry in 1957. The CPI(M) in this period has grown stronger and led many popular struggles in defence of the interests of the working people. On this occasion, I greet the lakhs of Party members and supporters.
               We are holding our Congress in Kozhikode which has a significant place in the history of the Communist Party and the working class movement in Kerala. Kozhikode was the political capital of the old Malabar province under British rule. It became the centre of the working class movement in Malabar. The tile workers and the textile workers became the backbone of the trade union movement here. The Kozhikode area also saw a strong peasant movement against jenmi-landlordism. As the main centre of the anti-imperialist movement in Malabar, Kozhikode witnessed many significant events during the freedom struggle.
It was in this city that the first Communist Party unit was formed in 1937. It consisted of four members – P. Krishna Pillai, EMS Namboodiripad, K. Damodaran and N. C. Sekhar.
We pay tribute to the eight valiant Communist martyrs of Onchiyam who died in police firing in 1948. We salute the memory of all those who laid down their lives in the anti-imperialist and anti-feudal struggles in Malabar.

Comrades and friends,
            The four years since our last Party Congress in 2008 have been marked by a global capitalist crisis, the severest since the great depression of the 1930s. This first prolonged crisis of capitalism in the 21st century marks a turning point. It has underlined the unsustainability of finance-driven capitalist globalization. The impact of this crisis has hit the people of the advanced capitalist countries in Europe and the United States. The ruling classes have bailed out the big banks and financial institutions and imposed severe austerity measures on the people. The result has been growing unemployment, homelessness and vicious attacks on the social security benefits of the working people.
The working class and other sections of the working people, including the youth and students, are protesting and there have been widespread struggles against the attacks on their livelihoods and living standards. The general strikes in Greece, Portugal, Spain and other European countries, the ‘Occupy Wall Street’ movement and the big student and youth mobilizations are demanding an end to the neo-liberal policies. Our Party extends its support and solidarity to all the struggles being waged against the neo-liberal order.
Imperialism led by the United States continues its aggressive measures to maintain its hegemony. In this period, we have seen the NATO aggression in Libya. They are targeting Syria. They are ratcheting up tensions in tandem with Israel against Iran. The CPI(M) denounces these imperialist interventions which are designed to hijack and divert from the popular uprisings in the Arab countries. The CPI(M) expresses its full solidarity with the Palestinian people who are struggling against Israeli occupation and for an independent State in difficult conditions.
              Our Party extends its support and solidarity with all the Left, democratic and progressive forces in the countries of South Asia. They are facing the common problems of our region – mass poverty, high levels of inequality due to the neo-liberal policies and imperialist domination.

Comrades and friends,
              It is nearly three years since the UPA-II government came into office after the Lok Sabha elections. These three years are a dismal record of continuous price rise of food and essential commodities which constitutes a savage assault on the poorer sections; once again, there is the recurrence of farmer’s suicides in different parts of the country with no respite from the agrarian crisis. The exploitation of workers has intensified sharply with the share of wages in the net value dropping steadily. Hunger and malnutrition among children are a shameful blot on our society.
                The UPA government in its pursuit of neo-liberal policies has heaped more burdens on the working people. It seeks to deny the reality of poverty by fixing fraudulent poverty lines. It refuses to bring a food security bill which can guarantee a minimum quantum of foodgrains under a universal Public Distribution System. It allows speculation in food and essential commodities through futures trading by which private companies and traders are heaping huge profits by pushing up prices.
The two decades of liberalization has led to unprecedented increase in inequalities. As a result, India has produced some of the richest people in the world while keeping the vast millions deprived of the basic necessities of life.
            The CPI(M) considers the fight against the neo-liberal policies as a central task. It will, in the coming days, endeavour to widen and intensify the struggles against the working people who are bearing the brunt of these attacks. The February 28 general strike by the Central trade unions and the national federations saw the militant response of the working class and employees all over the country. This should be the precursor for united struggles of different sections of the working people. The Party Congress will discuss how we should undertake this work in the coming days.
              The UPA government has set a new record in high level corruption. In the eight years of the UPA rule, corruption and the loot of natural resources have reached unparalleled heights. This is an outcome of the neo-liberal regime. There is a nexus of big business, ruling politicians and bureaucrats who are siphoning off public funds and the loot of scarce resources. There is a need for an effective Lokpal Bill to curb corruption among public servants, but that alone is not enough. The fight against corruption should be directed against the neo-liberal regimes and the corrupt nexus which facilitates the loot of public funds and scarce resources. The CPI(M) and the Left alone have the credibility to fight corruption. The Left-led governments that existed in West Bengal and Kerala and which continues in Tripura have no blemish of high level corruption. The CPI(M) will wage a determined fight against corruption and to bring in a whole range of measures, including electoral reforms, which can help to curb money power in politics.

Comrades and friends,
                The Hindutva forces have an agenda which is inimical to the secular-democratic system and values. The minorities face constant attacks and suppression of their rights in states where the BJP is in government like Karnataka, Madhya Pradesh and Gujarat. Communalism is embedded in the strategy of the ruling classes. They use it to divide the working classes and to bolster the rightwing neo-liberal policies. The record of the BJP governments in Gujarat, Madhya Pradesh and Karnataka show how they act as agents of big business and the landlords. The CPI(M) is a consistent fighter for the rights of the minorities; at the same time, it seeks to counter communalism and extremism within the minorities.
                The Manmohan Singh government has pursued a foreign policy which is influenced by its strategic ties with the United States. Such an approach is detrimental to the country’s interests. Notwithstanding its official pronouncements, the UPA government is succumbing to US pressures and reducing oil imports from Iran. It has voted with the US and its allies in the UN Security Council on Syria. It seeks to exempt foreign suppliers of nuclear equipment from liability and payment of damages in the case of nuclear accidents. The domestic economic policies are influenced by the strategic alliance with the United States. The government wants Walmart to open its supermarkets in India as this is the persistent demand of the US administration.
The CPI(M) will resolutely fight against the strategic alliance with the United States which has political, military and economic dimensions.
             The CPI(M) and the Left suffered serious reverses in the Lok Sabha elections in 2009 and subsequently in the West Bengal assembly elections. In Kerala, the LDF lost the election though very narrowly. For the past three years, West Bengal has witnessed a severe attack on the CPI(M) and the Left. The ruling classes and imperialism have targeted the CPI(M) and the Left in West Bengal as it is the strongest base of the Party. Since the last Party Congress, more than 570 members and supporters were killed. After the Assembly elections, the attacks have been more widespread with the capturing of Party and trade union offices and thousands had to leave their homes. Under the TMC-led government there is a wholesale attack on democratic rights. Land of patta holders is sought to be snatched away, the elected panchayats are made defunct, democratic rights in universities and colleges suspended and the right of the workers and employees curtailed.
               Our Party has examined and identified the shortcomings and weaknesses in the political and organisational spheres that are there and taken steps to correct them. Our Party is going to the people and mobilizing them on their issues. The CPI(M) in West Bengal has a mass base of millions of people built up over the decades through class struggles and sacrifices. It cannot be cowed down by violence and repression. On this occasion, we pay tribute to all those who have been martyred for the cause of the Party and the Left movement. We want to assure the people and the Party in West Bengal that we shall mobilise all the democratic forces to oppose the violence and defend democracy in West Bengal.

Comrades and friends,
             There is no difference between the Congress and the BJP as far as economic policies are concerned. Both are wedded to neo-liberalism. There is nothing to choose between the Congress and the BJP as far as corruption is concerned. The BJP government’s nexus with the mining mafia and the loot of mineral resources in Karnataka reveals the same pattern of high level corruption as the 2G spectrum scandal under the aegis of the Congress-led government at the Centre.

Comrades and friends,
             The recent political developments showed the failure of the two combinations – the UPA and the NDA – to consolidate and grow. The Assembly elections to the five states have reflected this trend. As more and more, the bankruptcy and venality of the present order becomes apparent, the people are looking for an alternative.
             According to us, such an alternative can be provided only by the Left and democratic forces. In order to build the Left and democratic alliance and forge such an alternative, it is necessary first of all to strengthen the CPI(M), expand its base and influence all over the country. A strong CPI(M) can strengthen Left unity and thereby rally other democratic forces to present a Left and democratic platform. In order to do so, the CPI(M) will take up all the issues of the working class, the peasantry, the agricultural workers, youth, and other sections of the working people to launch struggles and united movements. It will relentlessly champion the cause of the dalits, adivasis, women and minorities who suffer from social oppression.
The Party will cooperate and have joint actions with other democratic and secular parties on people’s issues, federalism and defence of secularism.
             The CPI(M) has always believed in applying Marxism-Leninism to the concrete conditions of India, to chalk out its revolutionary path. We have never tried to emulate models abroad. We have to constantly update our ideological understanding and equip ourselves to meet the challenges of the contemporary era. The 20th Congress of the CPI(M) will undertake this task.
              Let us bend all our energies and resources to develop a strong all-India Party. The entire Party should be
geared up to go to the people and take up their causes. The 20th Congress will provide us the ideological purpose and the political direction to do so. 

புதன், 4 ஏப்ரல், 2012

சிவந்தது கோழிக்கோடு - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய மாநாட்டுப் பதிவுகள்...!

           

           கோழிக்கோட்டில் கட்சியின் அகில இந்திய மாநாட்டினை முன்னிட்டு ''சோஷலிசத்திற்கே எதிர்காலம்'' என்ற கண்காட்சியினை பொதுச்செயலாளர் தோழர். பிரகாஷ் காரத் சென்ற வாரம் திறந்து வைத்தார்.


                                                                                                                 

தோழர். எஸ். ராமச்சந்திரன் பிள்ளை
    மாநாட்டினையொட்டி 
    கோழிக்கோட்டில் ஆங்காங்கே 
     கருத்தரங்கங்கள் நடத்தப்பட்டு வருகின்றன.

          



  தோழர். பிருந்தா காரத்
தோழர். டி. கே. ரங்கராஜன்









                                                                                                                                   
                                                                 
மாநாட்டினையொட்டி கோழிக்கோடு பகுதிகளை சுற்றி  மாநகராட்சி மேயர் தோழர்.Prof.A K பிரேமஜம், மாவட்டச்செயலாளர் தோழர். T P ராமகிருஷ்ணன் மற்றும் கட்சியின் தலைவர்களும்,  செந்தொண்டர்களும் சேர்ந்து சுத்தம் செய்தனர்.







                                                                                                                  
                                                             
                சென்ற ஏப்ரல் ஒன்றாம் தேதி கய்யூர் தியாகிகள் நினைவிடத்திலிருந்து மாநாட்டுக்கான கொடிக்கம்பம் புறப்பட்டது.... புன்னபுரா - வயலார் தியாகிகள் நினைவிடத்திலிருந்து மாநாட்டில் ஏற்றப்பட வேண்டிய செங்கொடியை கேரள மாநில
முன்னாள் முதலமைச்சர் தோழர். வி. எஸ். அச்சுதானந்தன் எடுத்துக்கொடுக்க கொடி பயணம் புறப்பட்டது....
         மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 20வது அகில இந்திய மாநாடு துவங்குவதை பிரகடனப்படுத்தும் வகையில் கோழிக்கோடு கடற்கரையில் செவ்வாயன்று மாலை கொடியேற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது. 
                 மாநாட்டுக்கொடியை பல்லாயிரக்கணக்கானோரின் எழுச்சிமுழக்கங்களுக்கிடையே கட்சியின்கேரள மாநிலச் செயலாளர் பினராயி விஜயன் ஏற்றி வைத்தார். ஓஞ்சியம் உட்பட பல்வேறு இடங்களிலிருந்து எடுத்துவரப்பட்ட தியாகிகள் ஜோதி உட்பட தியாக ஜோதிகளும் பெற்றுக்கொள்ளப்பட்டன. 
      மாநாட்டினையொட்டி கோழிக்கோடு தாகூர் ஹாலில் நேற்று இரவு கட்சியின் பொதுச்செயலாளர் தோழர். பிரகாஷ் காரத் ''தியாகிகள் சுடரை'' ஏற்றிவைத்தார்.
                                                                                                                             
                                                                                  

                          
              மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 20 - வது அகில இந்திய மாநாடு எழுச்சியுடன் கோழிக்கோட்டில் துவங்கியது. நேற்று  புதனன்று காலை 9.15 மணிக்கு 20வது அகில இந்திய மாநாட்டிற்காக எழுதப்பட்ட பாடலுடன் மாநாடு துவங்கியது. இந்தியமாணவர் சங்கம், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தைச் சேர்ந்த 20 தோழர்கள் உலக நடப்பு துவங்கி உள்ளூர் நிகழ்வுகள் வரை நவீன, தாராளமய, தனியார்மயக் கொள்கைகளின் தாக்கத்தால் மக்கள் படும் சிரமங்களையும், அதற்காக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நடத்திவரும் போராட்டங்களையும் தத்துரூபமாக நிகழ்த்திக்காட் டினர்.
           இந்த நாட்டையும் நாட்டுமக்களையும் பாதுகாக்கும் பணியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தம்மை அர்ப்பணித்துக் கொள்ளும். உழைப்பாளி மக்களின் போராட்டத்தைத் தொடர்ந்து செங்கொடி உயரும். அதற்கான போராட்டத்தை முன்னெடுத்துச் செல்லும் என்ற உணர்ச்சிகரமான நிகழ்வுகளுக்கு  இடையில் காலை 9.45 மணிக்கு கட்சியின் மூத்ததலைவரும் மத்தியக்குழு உறுப்பினருமான தோழர் ஆர்.உமாநாத் மாநாட்டு வளாகத்தில் கூடியிருந்த பிரதிநிதிகள், பார்வையாளர்கள், செந்தொண்டர்களின் உற்சாக முழக்கங்களுக்கிடையே கொடி ஏற்றி வைத்தார்.மாநாட்டுக்கொடியை ஏற்றியபோது 20 வது மாநாட்டின் வெற்றியை குறிக்கும் வகையில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட அரிவாள் சுத்தியல் பொறிக்கப்பட்ட, வண்ண வண்ண பலூன்கள் வானில் மிதந்து சென்றன. 
          தொடர்ந்து கட்சியின் பொதுச்செயலாளர் பிரகாஷ்காரத், அரசியல் தலைமைக்குழு உறுப்பினர்கள் எஸ்.ராமச்சந்திரன் பிள்ளை, சீத்தாராம் யெச்சூரி, மாணிக்சர்க்கார், பிருந்தா காரத், கே.வரதராசன், பிமன் பாசு, நிருபம்சென், பி.வி. ராகவலு, கொடியேறி பாலகிருஷ்ணன், பினராயி விஜயன் உள்ளிட்டவர்களும், அவர்களைத் தொடர்ந்து மத்தியக்குழு உறுப்பினர் கள், மாநாட்டுப் பிரதிநிதிகள் தியாகிள் ஸ்தூபிக்கு மல ரஞ்சலிசெலுத்தினர்.