சனி, 14 மே, 2011

தேர்தல் முடியும் வரை காத்திருந்து விலையை உயர்த்துவது அயோக்கியத்தனமானது

         நேற்று 14 மே 2011 நள்ளிரவு முதல் மத்திய அரசும் தனியார் எண்ணெய் கம்பனிகளும் சேர்ந்து பெட்ரோலின் விலையில்  ஐந்து ரூபாய் உயர்த்தி இருக்கிறார்கள். ஓட்டுக்காக தேர்தல் முடியும் வரை காத்திருந்து, முடிந்த பின் உயர்த்துவது என்பது அயோக்கியத்தனமானது, தான்தோன்றித்தனமானது. தருதலைத்தனமானது.
                   ஐந்து மாநிலங்களிலும் சமிபத்தியத் தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கும் அதன் கூட்டாளிகளுக்கும் வாக்களித்த மக்களுக்கு மத்திய அரசு தரும் பரிசு இது தான். அனில் அம்பானி, முக்கேஷ் அம்பானி, டாட்டா, பிர்லா போன்ற பெருமுதலாளிகளுக்குபல லட்சக் கோடி அளவில் வரிச்சலுகைகளையும் மானியங்களையும் அள்ளித்தரும் மத்திய அரசு பொது மக்களுக்களின் மீது வரிச்சுமையை ஏற்றுவதும், மானியங்களை வெட்டுவதுமான செயல்களை செய்து கொண்டிருக்கும் மன்மோகன் தலைமையிலான மத்திய அரசு மேலும் மேலும் பெட்ரோல் - டீசல் விலைகளை உயர்த்துவது கண்டிக்கத்தக்கது. ஏறிக்கொண்டேப்போகும் அத்தியாவசிய பொருட்களின் விலையை குறைக்கத் துப்பில்லாத - யோக்கியதை இல்லாத மத்திய அரசு பெட்ரோல் விலையை உயர்த்தி, அத்தியாவசியப்பொருட்களின் விலைகள் மேலும் உயர்வதற்கு வழிச்செய்கிறது.
                 மத்திய அரசின் தான்தோன்றித்தனமான இந்தச் செயலைக் கண்டித்து பொதுமக்கள் போராட்டத்தில் இறங்கவேண்டும். எகிப்த்து மக்களும் லிபிய மக்களும் இந்தப் போராட்டப் பாடத்தை தான் நமக்குக் கற்றுத் தருகிறார்கள்.

கருத்துகள் இல்லை: