எண்டோசல்ஃபான்
(கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து திரட்டப்பட்டது)
எண்டோசல்ஃபான் | |
---|---|
(IUPAC) ஐயுபிஏசி பெயர் | |
பிற பெயர்கள் | பென்சோபின், என்டோசெல், பாரிசல்ஃபான், ஃபேசர், தியோடன், தியோனெக்ஸ் |
வேதியியல் குறிப்புகள் | |
CAS எண் | |
en:KEGG | C11090 |
எளிமைப்படுத்தப்பட்ட மூலக்கூறுகளின் உள்ளீட்டு தனிக்குறிப்பீடு(SMILES) | Cl[C@@]3(Cl)[C@]1(Cl)C(/Cl)=C(/Cl)[C@@]3(Cl)[C@H]2[C@@H2]OS(=O)O[C@@H2][C@H]12 |
InChI | InChI=1/C9H6Cl6O3S/c10-5-6(11)8(13)4-2-18-19(16)17-1-3(4)7(5,12)9(8,14)15/h3-4H,1-2H2 |
பண்புகள் | |
Molecular formula | C9H6Cl6O3S |
Molar mass | 406.93 g mol-1 |
அடர்த்தி | 1.745 கி/கசெமீ |
உருகுநிலை | 70-100 °C, 343-373 K, 158-212 °F |
நீரில் கரைமை | 0.33 மி.கி/லி |
தீநிகழ்தகவு | |
EU classification | Yes (T, Xi, N) |
முதன்மையான தீநிகழ்தகவுகள் | T, Xi, N |
NFPA 704 | |
R-phrases | வார்ப்புரு:R24/25 வார்ப்புரு:R36 R50/53 |
Except where noted otherwise, data are given for materials in their standard state (at 25 °C, 100 kPa) Infobox disclaimer and references |
எண்டோசல்ஃபான் (Endosulfan) ஓர் ஆக்கவுரிமை நீங்கிய ஆர்கனோகுளோரின் பூச்சிக்கொல்லியும் மென்னுண்ணிக் கொல்லியும் ஆகும். நச்சுத்தன்மை மற்றும் உயிரிகளில் திரட்டுக் குணங்களாலும் நாளமில்லா சுரப்பிகளை சீர்குலைப்பதாலும் நிறமற்ற திடநிலையிலுள்ள இந்த வேளாண்வேதிப் பொருள் மிகவும் சர்ச்சைக்குள்ளாகிவுள்ளது. இதனால் இம்மருந்து ஐரோப்பிய ஒன்றியம், ஆத்திரேலியா, நியூசிலாந்து மற்றும் சில ஆசிய மேற்கு ஆபிரிக்க நாடுகள் உட்பட 63 நாடுகளில் தடை செய்யப்பட்டுள்ளது ; ஐக்கிய அமெரிக்கா, பிரேசில் மற்றும் கனடாவில் படிப்படியாக விலக்கப்படுகிறது. இது சீனா, இந்தியாபோன்ற நாடுகளில்இன்னமும் பயன்படுத்தப்படுகிறது. இதனை பேயர் நிறுவனம், மக்தேசிம் ஆகா நிறுவனம் மற்றும் இந்திய அரசுத்துறை நிறுவனமான இந்துஸ்தான் இன்செக்டிசைட்ஸ் லிமிடெட் ஆகியனவுடன் பல நிறுவனங்கள் தயாரித்து வருகின்றன. சூழல் மாசுபடுதலை கருத்தில்கொண்டு உலகளவில் இதன் தயாரிப்பையும் பயன்பாட்டையும் இசுடாக்ஃகோம் மரபொழுங்கின் கீழ் தடை செய்திட முயற்சிகள் எடுக்கப்படுகின்றன.
இன்று இந்தியாவில்.....
உலகளவில் இந்தியா எண்டோசல்ஃபானின் மிகப்பெரும் பயன்பாட்டாளராகவும் முக்கிய தயாரிப்பாளராகவும் விளங்குகிறது. மூன்று நிறுவனங்கள் - எக்செல் கார்ப் கேர், இந்துஸ்தான் இன்செக்டிசைட்ஸ் மற்றும் கோரமண்டல் பெர்டிலைசர்ஸ் ஆண்டுக்கு 4500 டன் மருந்தை உள்நாட்டுப் பயன்பாட்டிற்கும் 4000 டன் மருந்தை வெளிநாட்டு ஏற்றுமதிக்காகவும் தயாரிக்கின்றன.2001ஆம் ஆண்டில் கேரளாவில் எண்டோசல்ஃபான் தெளிப்பிற்கும் அப்பகுதியில் காணப்பட்ட சில சிறுவர்களின் குறைபாடான வளர்ச்சிக்கும் இடையேயுள்ள தொடர்பு ஆயப்பட்டது. துவக்கத்தில் எண்டோசல்ஃபான் பயன்பாடு தடை செய்யப்பட்டாலும் பூச்சிக்கொல்லி தயாரிப்பு நிறுவனங்களின் அழுத்தத்தால் தடை தளர்த்தப்பட்டது. அங்குள்ள நிலைமை "போபால் விஷவாயு சம்பவத்திற்கு இணையானது" என பேசப்பட்டது. 2006ஆம் ஆண்டு கேரளாவில் எண்டோசல்ஃபான் தாக்கத்தால் இறந்ததாக அறியப்பட்ட 135 பேர்களின் உறவினர்களுக்கு ரூ.50000 ஈட்டுத்தோகையாகக் கொடுக்கப்பட்டது. முதல் அமைச்சர் வி. எஸ். அச்சுதானந்தன் நச்சுத்தன்மையால் பாதிக்கப்பட்டோருக்கு "அரசே அவர்களின் சிகிட்சை, உணவு மற்றும் மறுவாழ்விற்கான ஆதரவை ஏற்கும் " என உறுதிமொழி அளித்தார்.
பல சமூக செயல்திறனாளர்களும் சமூக அமைப்புகளும் இமருந்தின் நச்சுத்தன்மையால் தாக்கப்பட்டோருக்கு மறுவாழ்வு அளிக்க முன்வந்துள்ளன. இந்தியாவில் இதனை தடை செய்ய அவர்கள் கோரி வருகின்றனர். ஆனால் இந்திய அரசு இதனை ராட்டர்டேம் மற்றும் இசுடாக்ஃகோம் மரபொழுங்குகளில் சேர்ப்பதை எதிர்த்து வருகிறது.
அகமதாபாத்தில் உள்ள தேசிய தொழில்சார் நலக் கழகம் (NIOH) கேரளாவின் வடக்கு மாவட்டமான காசர்கோட்டில் உள்ள பத்ரி சிற்றூரில் எண்டோசல்ஃபான் தொடர்பால் ஏற்பட்டதாகக் கருதப்படும் "வழக்கமிலா நோய்களின் ஆய்வு அறிக்கை"யை வெளியிட்டது. இதனை திரும்பப் பெறுமாறும் பூச்சிக்கொல்லிக்கு தடை விதிக்கக் கூடாது என்றும் இதன் தயாரிப்பில் ஈடுபடும் தொழிலகங்களின் ஏராளமான தொழிலாளர்கள் நவம்பர் 15,2010 அன்று ஓர் பேரணியை நடத்தினர். நாடாளுமன்ற உறுப்பினரான ராசேந்திரசிங் ராணா இப்பேரணித் தொழிலாளர்களை ஆதரித்து பிரதமர் மன்மோகன் சிங் மற்றும் தொடர்புள்ள அமைச்சருக்கும் இந்த அறிக்கையை திரும்பப் பெற வலியுறுத்தி கடிதம் எழுதினார். எண்டோசல்ஃபான் தடையால் தொழிலாளர்களின் வாழ்க்கை பாதிக்கப்படும் என்று பாவ்நகர் சட்டப்பேரவை உறுப்பினர் திருமதி. விபாரி தாவேயும் பேரணியில் கலந்துகொண்டு மாவட்ட ஆட்சித்தலைவரிடம் எண்டோசல்ஃபானுக்கு தடை விதிக்கக்கூடாது என்று விண்ணப்பம் கொடுத்தனர்..
கேரள அரசின் மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் நவம்பர் 10, 2010 இல் கேரளாவில் எண்டோசல்ஃபான் பயன்பாட்டிற்கு தடை விதித்தது. இதனைத் தொடர்ந்து பெப்ரவரி 18, 2011இல் கர்நாடக அரசும் தனது மாநிலத்தில் 60 நாட்களுக்கு தடை விதித்தது. தேசிய அளவில் இவ்வாறான தடையை விதிக்க இயலாது என்று நடுவண் வேளாண் அமைச்சர் சரத் பவார் கூறியுள்ளார். மத்திய சுற்றுசூழல் அமைச்சர் ஜெயராம் ரமேஷ் எண்டோசல்ப்பானால் மக்களுக்கு ஏற்பட்ட இந்த எண்ணிக்கையிலான பாதிப்பை வைத்துக்கொண்டு அதை தடை செய்யமுடியாது என்று கூறுகிறார்.
பாவ்நகர் பேரணியில் கொடுக்கப்பட்ட மனுவினைத் தொடர்ந்து குஜராத் அரசு எண்டோசல்ஃபான் தாக்கம் குறித்த புதிய ஆய்வினை மேற்கொள்ள ஓர் குழுவினை ஏற்படுத்தியது. இக்குழுவில் தேசிய தொழில்சார் நலக் கழகத்தின் முன்னாள் துணை இயக்குனரும் உறுப்பினராக உள்ளார். இக்குழு உலக சுகாதார அமைப்பு, FAO, பன்னாட்டு புற்றுநோய் ஆய்வு முகமையகம் போன்ற அமைப்புகளின் ஆய்வுகள் எண்டோசல்ஃபான் புற்றுநோய்க்காரணியோ (carcinogenic), உறுப்பு மாறுபாடுகளை விளைவிக்கக்கூடியதோ (teratogenic), மரபணு மாற்ற முகமையோ (mutagenic) அல்லது மரபணு நச்சுத்தன்மையோ (genotoxic) கொண்டவை அல்ல என்று நிலைநிறுத்தியிருப்பதாகக் கூறியுள்ளது. இக்குழு எண்டோசல்ஃபானை எதிர்கொண்ட விவசாயிகள் மீது நடத்திய இரத்த சோதனைகளில் வேதிப்பொருளின் எந்தக் கூறும் காணப்படவில்லை என சொல்லப்படுகிறது. இந்த குழுவின் ஆய்வும் கண்டுபிடிப்புகளும் யாரை திருப்திப்படுத்த என்று தெரியவில்லை. இதனிடையில் கேரளாவில் இந்தப் பூச்சிக்கொல்லி மருந்திற்கு எதிரான போராட்டம் வலுத்து வருகிறது. நாடு தழுவிய தடையை மத்திய அரசு விதிக்கக் கோரி ஏப்ரல் 25,2011 அன்று மாநில முதலமைச்சர் வி. எஸ். அச்சுதானந்தன் உண்ணாநோன்பு போராட்டம் நடத்தினார். அதேப்போல் கேரளா மக்கள் எண்டோசல்பானை தடைவிதிக்கக் கோரி
ஏப்ரல் 29, 2011 அன்று மாநிலம் தழுவிய கடையடைப்புப் போராட்டம் நடத்தினர்.
3 கருத்துகள்:
Um Good work in free time Sir ...
Hats OFF .
Uthaya
Um Good work in free time ...
Hats off having knowledge in all field ...
Regards
Uthaya
மிக்க நன்றி..
கருத்துரையிடுக