ஞாயிறு, 30 டிசம்பர், 2012

புதுச்சேரியில் உலாவரும் ''சிதம்பர ரகசியம்''...!



          கடந்த ஒரு மாதமாக புதுச்சேரியில் மாநிலம் முழுதுமே எல்லா வங்கிகளிலும், ரேஷன் கடைகளிலும், ஆதார் கார்டு மையங்களிலும், ஜெராக்ஸ் கடைகளிலும் கூட்டம் அலைமோதுகிறது.
        மக்கள் தங்களுடைய அனைத்து வேலைகளையும் விட்டுட்டு தினமும் இந்த நான்கு இடங்களிலும் கூடிவிடுகின்றனர். இந்த இடங்களில் தங்கள் வேலை முடிந்தவுடன் எதோ சாதனை புரிந்தது போன்று ''அப்பாடி.... வந்த வேலை முடிந்தது...." என்று பெருமூச்சி விட்டு செல்கின்றனர். புதுச்சேரியில் தான் இதை பார்க்கமுடிகிறது. எதற்காக இப்படி அலைமோதுகிறார்கள் இந்த மக்கள்...?
           மத்திய அரசு வருகிற ஜனவரி 1 - ஆம் தேதி - புத்தாண்டு தினத்தன்று ''உங்கள் பணம் உங்கள் கையில்'' என்ற கவர்ச்சிகரமான திட்டத்தை தொடங்கவிருக்கிறது. இந்த என்பது மன்மோகன் சிங் - ப.சிதம்பரம் ஆகிய புத்திசாலிகளின் மூளைகளில் உதித்த உன்னத திட்டம் ஆகும். இந்த திட்டத்தின் மூலம், இதுவரையில் மத்திய அரசு ரேஷன் பொருட்களுக்கும், சமையல் எரிவாயுக்கும் கொடுத்துவந்த மானியத்தை இனிமேல் நம் கைகளிலேயே தந்துவிடுவார்களாம். அரசு தருகிற அந்த ''கொஞ்சப்'' பணத்தோடு, நாம் ''நிறைய'' நம் பணத்தையும் சேர்த்து இதுவரையில் ரேஷன் கடையில் வாங்கி வந்த பொருட்களை வெளியில் வாங்கிக்கொள்ள வேண்டுமாம். இந்த திட்டம் என்பது நம் பாக்கெட்டை காலிப் பண்ணுவதற்கான வேலை தான் என்பதை மக்கள் புரிந்துகொள்ளவில்லை. நாம் வாங்கப்போகும் அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர உயர அரசு கொடுக்கும் மானியம் உயராது. அது அப்படியே தான் இருக்கும். அதேப்போல் நாம் வாங்கப்போகும் எரிவாயுவின் விலை உயர உயர அரசு கொடுக்கும் மானியம் உயராது. அது அப்படியே தான் இருக்கும். விலைவாசிக்கு தகுந்தாற்போல் நம் பாக்கெட்டும் காலியாகும். ''கையில வாங்கினேன் பையிலப் போடல... காசுப் போன இடம் தெரியல...'' என்ற மக்கள் கவிஞன் பட்டுக்கோட்டைக் கல்யாணசுந்தரம் எழுதிய பாடல் தான் ஞாபகம் வருகிறது.
         பலகீனமாக இருந்த நாய்க்கு அது வாலை வெட்டி அதுக்கே சூப் வெச்சி கொடுக்கிற கதை தான் இது. நாய் வாலை  வெட்டி நாயிற்கே சூப் வெச்சிக் கொடுத்தா அந்த திட்டத்திற்கு என்ன பெயர் வைப்பார்கள் தெரியுமா...''உங்கள் வால் உங்கள் வாயில்...'' அது போல் தான் இந்த ''உங்கள் பணம் உங்கள் கையில்...'' என்பதை மக்கள் புரிந்துகொள்ள வேண்டும்.
           ''உங்கள் பணம் உங்கள் கையில்'' திட்டப்படி மக்களுக்கு தங்கள் கையில் பணம் கிடைக்க வேண்டுமென்றால், இப்போது தங்கள் கையில் இருக்கும் பணத்தை செலவு செய்தாக வேண்டும். அது தான் அந்த நான்கு இடங்களிலும் தினமும் அவ்வளவுக் கூட்டம் கூடுகிறது.
          பேருல தான் உங்கள் பணம் உங்கள் கையில் - னு  இருக்கே தவிர, அரசு பணத்தை மக்கள் கையில்  தரமாட்டார்கள். குடும்பத்தலைவரின் வங்கிக்கணக்கில் தான் போடுவார்களாம். மாதம் தோறும் அந்த குடும்பத்தலைவர் வங்கியிலிருந்து பணத்தை எடுத்துக்கொண்டு கடைக்குப் போயி சரக்கு வாங்கிகிட்டு வருவாராம். ஆனால் அந்த குடும்பத்தலைவர் எந்தக் ''கடைக்கு'' போயி என்ன ''சரக்கை'' வாங்கிகிட்டு வாருவார் என்பது அந்த குடும்பத்தலைவிக்குத் தான் தெரியும்.
          அந்தப் பணத்தைப் பெறுவதற்கு வங்கிக் கணக்கு இல்லாதார்கள் வங்கிகளில் கணக்கு ஆரம்பிக்கிறார்கள். அதனால் அனைத்து வங்கிகளிலும் மக்கள் கூட்டம். ரேஷன் கடையில் வங்கிக் கணக்கு புத்தகத்தின் ஜெராக்ஸ் காப்பியும், ஆதார் கார்டின் ஜெராக்ஸ் காப்பியும் தரவேண்டும். அதனால் ரேஷன் கடைகளில் மக்கள் கூட்டம். ஆதார் கார்டு இல்லாதவர்கள் ஆதார் மையங்களில் கூடுகிறார்கள். அதனால் அங்கே மக்கள் கூட்டம். இவை எல்லாவற்றுக்கும் வங்கிப் புத்தகம், ரேஷன் கார்டு, ஆதார் கார்டு, வாக்காளர் அடையாள அட்டை - இவைகளின் ஜெராக்ஸ் காப்பி தேவை. அதனால் ஜெராக்ஸ் கடைகளில் கூட்டம்.
          இத்தனை இடங்களிலும் கூட்டம் கூட்டமாக மக்கள் கூடுவதால் தான் புதுச்சேரியே ஒரே பரபரப்பாக இருக்கிறது.
           இந்த திட்டத்தை ஆரம்பத்தில் மத்திய அரசு 50 மாவட்டங்களில் மட்டுமே நடைமுறைப்படுத்துகிறது. அந்த ஐம்பதில் ஒன்று புதுச்சேரி என்பது குறிப்பிடத்தக்கது. ஏன் புதுச்சேரியையும் ஐம்பதில் ஒன்றாக சேர்த்தார்கள் என்பதில் தான் ''சிதம்பர ரகசியமே'' இருக்கிறது. அது என்ன ''சிதம்பர ரகசியம்''...? இரகசியம் எல்லாம் ஒன்னும் இல்லை. புதுச்சேரியில் இன்று வெளிப்படையாக பேசப்படுகின்ற இரகசியம் தான்.
          சென்ற 2009 - ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத்தேர்தலில் சிவமான கங்கையில் ருத்திரத்தாண்டவம் ஆடியவரால் வெற்றிபெற முடியாமல் போனது என்பதும், மறு எண்ணிக்கை என்ற பெயரில் வெற்றிபெற்றவராக அறிவிக்கப்பட்டது என்பதும், அது சம்பந்தமான வழக்கு ஒன்றும் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது என்பதும் மக்கள் மறந்திருக்க முடியாது. வருகின்ற 2014 - ஆம் ஆண்டில் நடைபெறவிருக்கின்ற நாடாளுமன்றத்தேர்தலில் அந்த சிவமான கங்கைக்காரரான ருத்திரத்தாண்டவத்தாரால் தமிழ்நாட்டில் உள்ள 39 தொகுதிகளிலும் டெபாசிட்டுக் கூட வாங்கமுடியாது என்ற செய்தி அம்பலத்திற்கு வந்ததையடுத்து, ''பிரதமர் வேட்பாளர்'' என்று கூட அறிவிக்கப்படலாம் சொல்லப்படுகின்ற அவர் நிச்சயம் வெற்றிபெற்றாக வேண்டும் என்ற சூழ்நிலையில் அவரது பார்வை புதுச்சேரியில் விழ, பின் அவரது பாதத்தை புதுச்சேரியில் பதிக்க தொடங்கினார். கடந்த காலங்களில் மோகன் குமாரமங்கலம், பாலாபழனூர் போன்ற வெளிமாநிலத்தைச் சேர்ந்தவர்களை புதுவை மக்கள் வெற்றிபெறச் செய்திருக்கிறார்கள் என்பதால், புதுச்சேரி தான் ருத்திரத்தாண்டவத்தாருக்கு பாதுகாப்பான தொகுதி என்ற அடிப்படையில்  காங்கிரஸ் கட்சியும் அதற்கான வேலைகளை தொடங்கியிருப்பதாக சொல்லப்படுகிறது.
          அவரின் வெற்றியை உறுதிப்படுத்துவதற்காகத் தான் ''உங்கள் பணம் உங்கள் கையில்'' திட்டத்தை முதல் கட்டமாக புத்தாண்டு தினத்தன்றே தொடங்குவதற்கு, தாண்டவத்தாரே புதுச்சேரிக்கு நேரில் வங்கி அதிகாரிகளை முடுக்கிவிட்டிருக்கிறார் என்றால் பார்த்துக்கொள்ளுங்களேன்.
          இந்தத் திட்டத்தின் மூலம் அவர்  ''உங்கள் பணம் உங்கள் கையில்'' என்பதைப் போல் ''உங்கள் ஓட்டு எங்கள் பையில்'' என்று தேர்தல் நேரத்தில் ''காசு போட்டா ஓட்டுப்போடும் எந்திரமான மக்களிடம்'' போய்  நிற்பார் என்று தான் மக்கள் எதிர்ப்பார்த்துக்கொண்டிருக்கிறார்கள். 

சனி, 29 டிசம்பர், 2012

பிரார்த்தனையை நிறுத்தி விடு...! கோபத்தைக் குவித்து விடு...!












அ . குமரேசன்
பத்திரிகை ஆசிரியர்
        கோடிக்கணக்கானவர்களின் பிரார்த்தனைகளோடு அவர் சிங்கப்பூர் மருத்துவமனை கொண்டுசெல்லப்பட்டார். மேலும் பல கோடிப்பேர் விரைவில் அவர் குணம் பெற பிரார்த்தித்தார்கள். இன்று அவரது ஆத்மா சாந்தியடையப் பிரார்த்திக்கிறார்கள்.

அவர் இறந்துவிட்ட செய்தியோடுதான் இன்றைய நாள் தொடங்குகிறது. இனியாவது பிரார்த்தனைகளை (அட அது எந்த மதத்தின் கடவுளை நோக்கியதாக இருந்தாலும்) விட்டுத்தொலையுங்கள். அவரது உயிரைக் காப்பாற்ற உதவாத பிரார்த்தனைகளால் அவரது ஆத்மா சாந்தி அடைந்தால் என்ன, அடையாவிட்டால் என்ன?

பிரார்த்தனைகள் ஆண்டவனாகப்பட்டவன் பார்த்துக்கொள்வான் என்று நம்பவைத்து நம் நியாய ஆவேசங்களைத் தணியவைப்பதற்கே. நம்மால் எதுவும் செய்ய முடியாது என்று நம்மை ஒதுஙகவைத்து அயோக்கியவர்களைக் காப்பாற்றுவதற்கே.

தில்லிப் பேருந்துப் பாலியல் வன்கொடுமையை இழைத்த குற்றவாளிகள் மீது கோபப்படுவது, அவர்களுக்கு உயர்ந்தபட்ச தண்டனை வழங்கக்கோருவது, கடுமையான சட்டங்கள் தேவை என வலியுறுத்துவது... இவை மட்டும் போதுமா?. நாடு முழுவதும் இப்படிப்பட்ட வேட்டைகளுக்கு இலக்காக்கப்படுகிற பெண்களுக்காக, அவர்களைத் தாக்குகிற ஆணாதிக்க ஆணவத்திற்கு எதிராக யோசிக்க வேண்டாமா?

பெண் என்றால் இப்படியிப்படித்தான் இருக்க வேண்டும் என்று வரம்புகட்டுகிற பழைய/புதிய பண்பாட்டு பீடாதிபதிகள் மீது உங்கள் கோபத்தைக் குவியுங்கள்.

அன்பான அம்மாவாய், அடக்கமான மனைவியாய் வீட்டோடு இருந்தால் ஆண்கள் தவறு செய்ய மாட்டார்கள் என்று போதிக்கிற மதவாதிகள் மீது
உங்கள் கோபத்தைக் குவியுங்கள்.

பெண்ணைக் கடவுளாகச் சித்தரிப்பது நம்ம கலாச்சாரமாக்கும் என்று சொல்லிக்கொண்டே அவளைக் கோவிலின் கருவறைக்குள் கூட அனுமதிக்காத ஆகமவாதிகள் மீது உங்கள் கோபத்தைக் குவியுங்கள்.

ஆண் தனது வக்கிரப்பார்வையை மாற்றிக்கொள்ள வேண்டும் என்று கட்டளையிடாமல், பெண் தனது உடலை வெளிக்காட்டுகிற ஆடைகளை அணியலாகாது என்று அவள் மீது புடவைகளையும் பர்தாக்களையும் அங்கிகளையும் போர்த்துகிற வன்மர்கள் மீது உங்கள் கோபத்தைக் குவியுங்கள்.

சாதித்தூய்மையைக் காக்க வேண்டிய பெண் காதல் திருமணம் செய்துகொள்வதன் மூலம், அதிலும் தாழ்த்தப்பட்ட சாதியினரின் விந்துக்களைப் பெறுவதன் மூலம் சமூகத்தை மாசுபடுத்துகிறாள் என்று கூறி, அவளது வாழ்க்கைத் துணை தேர்வு உரிமையைக் கொச்சைப்படுத்தி நிராகரிக்கிற சாதியவாதிகள் மீது உங்கள் கோபத்தைக் குவியுங்கள்.

பெண்ணும் ஆணும் பழகினால் அது பாலியல் நோக்கம் கொண்டதுதான், அதில் நட்போ தோழமையோ இருக்க முடியாது என்று அறிவித்து, அப்படிப் பழகுகிறவர்களுக்குப் பாடம் கற்பிப்பதாகக் கையில் தாலிக்கயிறு அல்லது ரர்க்கிக் கயிறுடன் அலைகிற பண்பாட்டு அடக்குமுறையாளர்கள் மீது உங்கள் கோபத்தைக் குவியுங்கள்.

“பொம்பளையா லட்சணமா அடக்க ஒடுக்கமா அழகா என்கிட்ட வா... உன்னை நான் ஏத்துக்கிடுறேன்” என்று வசனம் பேசுகிற சூப்பர் ஸ்டார்களின் மீது உங்கள் கோபத்தைக் குவியுங்கள்.

ஒரு பக்கம் இப்படிப்பட்ட பரபரப்பான “கற்பழிப்பு” செய்திகளை வெளியிட்டுக் கொண்டே, பெண்ணை வெறும் போகப்பொருளாக அரைகுறை அம்மணத்தோடு நிறுத்தும் நுகர்வுப்பொருள் விளம்பரங்களைக் கூச்சமில்லாமல் வெளியிடும் ஊடகங்கள் மீது உங்கள் கோபத்தைக் குவியுங்கள்.

இப்படிப்பட்ட செய்திகள் வரும்போதெல்லாம், பெண்களைப் பாதுகாக்க உரிய சட்டங்கள் கொண்டுவருவோம் என்று பேட்டிகொடுத்துவிட்டு, பெண்ணை மேலும் மேலும் ஓரங்கட்டுவதற்கான பொருளாதாரத் துரோகக் கொள்கைகளைச் செயல்படுததும் ஆட்சியாளர்கள் மீது உங்கள் கோபத்தைக் குவியுங்கள்.

வன்முறைகளையும் ஊழல்களையும் ஒடுக்குமுறைகளையும் எதிர்ப்பதாகச் சொல்லிக்கொண்டே, இந்த அடிப்படையான அம்சங்கள் குறித்துச் சிந்திக்க விடாமல் தடுத்து. மையமான அரசியல் போராட்டங்களில் மக்கள் பங்கேற்க விடாமல் கெடுத்து, உலக-உள்நாட்டு சுரண்டல் கூட்டங்களுக்குத் தொண்டாற்றுகிற நுனிப்புல் மேய்ச்சல்காரர்கள் மீது உங்கள் கோபத்தைக் குவியுங்கள்.

அரசியல் - சமுதாய - பொருளாதார போராட்டங்கள் ஒன்றையொன்று சார்ந்தவை, இந்த நாட்டைப் பொருததவரையில் வர்க்க - வர்ண - பாலினப் பாகுபாட்டுப் போராட்டங்கள் ஒன்றிலிருந்து ஒன்று பிரிக்க முடியாதவை என்ற புரிதலோடு போராட்டக் களம் காண்கிற இயக்கங்களோடு சேர்ந்து உங்கள் கோபத்தைக் குவியுங்கள்.

நம் கோபத்தின் வெப்பம் இவ்வாறு குவிகிறபோது எழுகிற நெருப்பில்தான் இந்த இழிவுகள் எரிந்து சாம்பலாகும்.

இப்படியுமொரு கண்ணியமிக்க அரசியல் கட்சியைப் பாருங்கள்...!


              கடந்த இரண்டு நாட்களாக மேற்கு வங்க மாநிலத்திலிருந்து இரண்டு அரசியல் கட்சித் தலைவர்கள் உதிர்த்த பெண்களுக்கு எதிரான பாலியல் ரீதியான கருத்துக்கள் நாடு முழுதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
              பத்து நாட்களுக்கு முன்பு புதுடெல்லியில் ஓடும் பஸ்ஸில் மருத்துவக் கல்லூரி மாணவிக்கு நேர்ந்த மிகப்பயங்கரமான பாலியல் வன்முறைக்கு எதிராக இந்தியா கேட் அருகில் நடைபெற்றப் போராட்டத்தில் கலந்து கொண்ட  இளம் பெண்களையும், வயதில் மூத்தப் பெண்களையும் பாலியல் ரீதியாக கொச்சைப்படுத்தி பத்திரிக்கையாளர்கள் மத்தியில் காங்கிரஸ் கட்சியின் மேற்கு வங்கத்தைச் சேர்ந்த எம். பி. அபிஜித் முகர்ஜி பேசியது என்பது நாடு முழுதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. அவர் இப்படி பேசியதற்காக அவர் சார்ந்திருக்கக்கூடிய காங்கிரஸ் கட்சியோ வெட்கப்படவில்லை. வேதனைப்படவில்லை. பெண்களை அப்படி தரக்குறைவாகப் பேசிய அபிஜித் முகர்ஜி மீது கோபமும் படவில்லை.  காரணம் அவர் வேறு யாரும் இல்லை. இந்த நாட்டின் முதல் குடிமகனின் தவப்புதல்வன் என்பது தான்.  இதில என்ன வேடிக்கை என்றால், குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி கூட தவறு செய்த தன் மகனை கண்டிக்கவும் இல்லை. தண்டிக்கவும் இல்லை. அதுமட்டுமல்ல, இப்படி பேசியதற்காக அபிஜித் முகர்ஜி இதுவரை வருத்தம் தெரிவிக்கவோ அல்லது மன்னிப்பு கேட்கவோ முயற்சி கூட  செய்யவில்லை. மாறாக இப்படி பேசியதற்காக காங்கிரஸ் கட்சியும், அவரது சகோதரியும் வருத்தம் தெரிவித்தார்கள்.  இப்படியும் கண்ணியமான ஒழுங்கீனமான அரசியல் கட்சி. அதிலும் மத்தியில் ஆளும் கட்சி. வெட்கக்கேடு. இவர்களுக்கு ஓட்டுப் போட்டதற்காக நாமெல்லாம் தலைகுனிய வேண்டும்.
           இதேப்  போல் நேற்று முன் தினம் மேற்குவங்க மாநிலத்திலேயே நடைபெற்ற இன்னொரு சம்பவம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நடத்திய பேரணியொன்றில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சட்டமன்ற உறுப்பினரும், இடது முன்னணியின் சட்டமன்றக்குழு துணைத்தலைவருமான அனிசூர் ரகுமான் பேசும் போது அந்த மாநிலத்தின் முதலமைச்சரான மம்தா பானர்ஜியை பாலியல் ரீதியாக கொச்சைப்படுத்தி பேசியிருக்கிறார். இதற்கு காரணம் மேற்குவங்க  மாநில சட்டமன்றத்திலும், வெளியிலும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சித் தொண்டர்களுக்கும்  தோழர்களுக்கும் எதிராக மம்தா பானர்ஜி முதலமைச்சராக பதவியேற்ற நாளிலிருந்து எடுத்துவரும் நடவடிக்கைகளாலும், மம்தா பானர்ஜி கட்சி குண்டர்களின் தாக்குதல்களாலும் உண்டான கோபத்தின் வெளிப்பாடு தான் அவரை அவ்வாறு பேசவைத்திருக்கிறது என்பது உண்மை தான் என்றாலும் அது கண்டிக்கத் தக்கதே என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி
தன் கட்சித் தோழரையே தொலைக்காட்சியில் பொதுமக்கள் மத்தியில் ''நமக்கு எதிரான ஒரு பெண் முதல்வரை அரசியல் ரீதியாக எதிர்கொள்ளவேண்டுமே தவிர பாலியல் ரீதியாக அல்ல. அவ்வாறு அவரை பாலியல் ரீதியாக கொச்சைப்படுத்திப் பேசியது என்பது ஏற்றுக்கொள்ள முடியாதது'' என்றும், அவ்வாறு பேசியது கண்டிக்கத்தக்கது என்றும் அக்கட்சியின் தலைமைக்குழு உறுப்பினர் தோழர் பிருந்தா காரத் பேசியது என்பது வித்தியாசமாக இருந்தது. அதுமட்டுமல்ல அவ்வாறு பேசிய அனிசூர் ரகுமானை கட்சித் தலைமை அலுவலகத்திற்கு அழைத்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சித் தலைமை அவருக்கும் எச்சரிக்கைக் கடிதமும் அளித்துள்ளது என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது. அதன் பிறகு அவ்வாறு பேசியதற்காக அனிசூர் ரகுமான் பத்திரிக்கையாளர்கள் மத்தியில், முதலமைச்சர் மம்தா பானர்ஜியிடமும், மக்களிடமும் மன்னிப்புக் கேட்டார்.
           இப்படிப்பட்ட கண்ணியமும், ஒழுக்கமும், நேர்மையும் இந்தியாவில் வேறு எந்த அரசியல் கட்சிகளிடமும் பார்க்க முடியாது என்பது தான் என் தாழ்மையான கருத்து. அதிலும் தமிழகத்தில் வாழ்ந்துகொண்டிருக்கும் நாம் நாற்பது ஆண்டுகளுக்கு மேலான திராவிடக்கட்சிகளின் ஆட்சி என்பதும், வளர்ச்சி என்பதும் தமிழக சட்டமன்றத்திலும், வெளியிலும் எதிர்க்கட்சியிலிருக்கும் பெண் தலைவர்களையும், பெண் உறுப்பினர்களையும் பாலியல் ரீதியாக கொச்சைப்படுத்திப் பேசுவது தான் வழக்கமாக பார்த்திருக்கிறோம். அப்படிப் பேசுவது தான் இந்தக் கட்சிகளின் தலைவர்களின், பேச்சாளர்களின்  திறமையாகவும் வீரமாகவும் காட்டித் தான் இவர்கள் தங்கள் கட்சிகளை வளர்த்துகொண்டிருக்கிறார்கள் என்பதும் நமக்கு தெரியும்.
            இந்தியாவில் இப்படிப்பட்ட அசுத்தமான, ஒழுங்கீனமான கட்சிகளுக்கு மத்தியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஒழுக்கமான, கண்ணியமான கட்சியாக காட்சியளிக்கிறது.

வியாழன், 27 டிசம்பர், 2012

சூப்பர் ஸ்டார் சச்சின் டெண்டுல்கருக்கு ஆஸ்கார் விருது...!

        "மேலே இருக்கும் படத்தில் வலது புறம் இருப்பது யாரு?" அப்படின்னு கேட்டா, "இதெல்லாம் ஒரு கேள்வியா, அவருதான் ஹிந்தி சூப்பர் ஸ்டார் என்று சின்னக் குழந்தையும் சொல்லுமே" என்பீர்கள்.   அவர் ஒரு தலை சிறந்த நடிகர் அப்படின்னு மட்டும்தான் நீங்க நினைச்சுகிட்டு இருந்திருப்பீங்க.  ஆனா, அது உண்மையில்லை!!  அவர் நடிக்கவும் செய்கிறார் என்பதென்னவோ உண்மைதான், ஆனால் அவர் நடிகர் இல்லை.  முதன்மையில் அவர் சேற்றில் விழுந்து பாடுபடும் ஒரு ஏழை விவசாயி!!  விவசாயம் தான் அவர் உயிர் மூச்சே. நடிப்பு என்பதெல்லாம் இரண்டாம் பட்சம் தான். இதை வேற யாரும் சொல்லவில்லை, அவர் வாயாலே சாரி........  எழுத்தால சட்டத்துக்கு முன்னாடி தெரிவித்த தகவல்தான் இது!  "அய்யய்யோ, அப்ப இடதுபக்கம் குடை பிடிச்சுகிட்டு நிக்கிறவர் யாரு? தோட்டக்காரனா?"  அதைப் பத்தி தானே இந்தப் பதிவில் பார்க்கப் போறோம்!!  அதுசரி ரெண்டுபேரும் கையில என்னமோ வச்சிருக்காங்களே அது என்ன?  அது ஊட்டச் சத்து மிக்க பானம், இதைக் குடிச்சா எழும்பெல்லாம் ரொம்ப ஸ்ட்ராங்கா ஆயிடுமாம். அதை கிழவனும் குடிச்சிட்டு தெம்பா இருக்கலாம்னு விவசாயி சொல்றாரு, இன்னொருத்தர், இதில் பத்து பாட்டில் தினமும் உள்ளே தள்ளுவது  தான் "சீக்ரெட் ஆ ஃ ப்  மை எனர்ஜி"  அப்படிங்கிறார்.  [காசை வீசி எரிஞ்சா பொறுக்கிக்கிட்டு நாய் மூத்திரம் நல்லதுன்னு சொல்றதுக்கும் ஆளுங்க ரெடியா இருக்காங்க, அதப் பாத்திட்டு தண்ணீருக்குப் பதிலா  நாய் மூத்திரமே தான் வேணுமின்னு தேடித் தேடி காசு குடுத்து வாங்கி குடிக்க நாம் இருக்கோம்.]
             சரி அதெல்லாம் போகட்டும்.  விஷயத்துக்கு வருவோம்.   இப்போ நாம் பார்க்கப் போவது, 2001-02 மற்றும் 2004-05 நிதியாண்டுகளில் நடந்த ஒரு சங்கதி.  டெண்டுல்கர் அந்த வருடங்களில் ESPN Star Sports, PepsiCo மற்றும் Visa ஆகிய நிறுவனங்களில் இருந்து தொலைக்காட்சி விளம்பரங்களில் நடித்ததற்காக அந்நிய செலாவானியாக [Foreign currency] Rs.5,92,31,211 [ரூபாய் ஐந்து கோடியே தொண்ணூற்று இரண்டு லட்சத்தி சொச்சம்] பெற்றிருக்கிறார்.  இந்த வருமானத்திற்காக அவருக்கு வருமான வரியாக ரூ.2,08,59,707 [ரூபாய் இரண்டு கோடியே  எட்டு லட்சத்தி சொச்சம்] செலுத்த வேண்டும் என்று வருமான வரித்துறையினர் [(CIT-A)- Commissioner of Income Tax-Appeal] நோட்டிஸ் விட்டனர்.
                   இதை எதிர்த்து நம்ம பூஸ்ட் மட்டும் குடிக்கும் பாப்பா என்ன பண்ணுச்சு தெரியுமுங்களா?  ஐயா, இந்த  CIT-A எனக்கு கிரிக்கெட் ஆடுவது தான் முதல் தொழில்னு தப்பா நினைச்சுகிட்டு இருக்காருங்க.  அது நெசமில்லீங்க.  அடிப்படையில நான் ஒரு கலைஞனுங்க, நடிப்புதான் பிரதான தொழிலுங்க.  கிரிக்கெட்டெல்லாம் அப்புறம்தானுங்க.  அதனால என்னோட தொழில் மூலமா சம்பாரிச்ச பணத்துக்கு u/s 80RR of the Act படி வரிச்சலுகை குடுங்க அப்படின்னு கேட்டுச்சு.  இதை விசாரிச்ச ஆணையமும், "ஆமாங்க இவர் ஒரு நடிகர்தான், நடிப்பு எல்லாத்தலும் முடியாது, மூஞ்சியில பவுடரை பூசிகிட்டு, வெப்பத்தை உமிழும் மின் விளக்குகள் முன்னாடி நின்னு சொந்தக் கற்பனை, படைப்பாற்றல் எல்லாம் பயன்படுத்தி நடிச்சு தெறமையைக் காட்டி மக்களை கவர்வது லேசு இல்ல, இவரு நெசமாவே நல்ல நடிகன் தான்" அப்படின்னு சான்றிதழ் குடுத்து கேட்ட இரண்டு கோடி சொச்ச வரிச்சலுகையும் குடுத்துடுச்சு!!  அதனால, இன்னைக்கு TV விளம்பர நடிகரா தொழில் பண்ணும் இவர் நாளைக்கு ஹாலிவுட் படத்தில வாய்ப்பு வந்து நடிச்சு தெறமை காட்டி ஆஸ்கார் கூட வாங்கினாலும் ஆச்சரியப் பட என்ன இருக்கு?  ஒரு நாள் போட்டியில் ஓய்வு பெறுவதை அறிவித்த போது இவர் கண்ணீர் விட்டிருக்காரு.  அது கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதை நினைத்த வருத்தத்தாலா, சினிமாவில் வருவது மாதிரி நடிப்பா, இல்லை கிரிக்கெட் ஆடும் வாய்ப்பை  இழந்து விட்டோமே, இனிமே இந்த அளவுக்கு விளம்பரங்களில் நடிச்சு பணத்தை மேலும் சேர்ப்பது இயலாதேன்னு துக்கமாங்கிறது ஆண்டவனுக்குத்தான் வெளிச்சம்.
              இன்னொரு நிகழ்வையும் நாம் இங்க சொல்லணும்.  இது 2002-03 வாக்கில் நடந்தது.  அப்போது டெண்டுல்கர் ஆஸ்திரேலிய மாபெரும் கிரிகெட் வீரர் மறைந்த டான் பிராட்மன் அவர்களின் டெஸ்ட் சாதனையான 29 சதங்களை சமன் செய்தார்.  இதைப் பாராட்டி ஃபியட் நிறுவனம் அவருக்கு  '360 Modena Ferrari' என்ற 75 லட்சம் ரூபாய் மதிப்புள்ள காரை பரிசளிக்க விரும்பியது. காரை சும்மா குடுக்க அவன் என்ன இனா வானாவா?  டெண்டுல்கர் மைக்கேல் ஷூ மேக்கர் என்னும் கார் ரேஸ் வீரருடன்  இணைந்து அந்தக் காரின் விளம்பரத் தூதுவராகவும் இருப்பார்.  2002 ஆம் ஆண்டு இங்கிலாந்தில்,  சில்வர்ஸ்டோன்  என்னுமிடத்தில் இருவரும் சந்தித்த போது  ஷூ மேக்கர், ஃபியட் சார்பில் டெண்டுல்கருக்கு அந்தக் காரை பரிசளித்தார்.                 
           அதை இந்தியாவுக்குக் கொண்டு வர வேண்டுமே?  ஆடு அரைப்பணம், ......க்கு  முக்கால் பணம் என்னும் கிராமத்து பழமொழி இங்கே வேலை செய்ய ஆரம்பித்தது. அந்தக் கார் கிரிக்கெட் விளையாடி பரிசாகப் பெற்றது அல்ல.  எனவே அதை இந்தியாவுக்குள் கொண்டு வர அதன் விலையில் 120% வரியாகச் செலுத்த வேண்டும்.  அதாவது ஒரு கோடியே பதிமூணு இலட்சம் ரூபாய்கள்.  ஒன்னும் தெரியாத நம்ம பாப்பா குடுக்குமா?  வரிச்சலுகை கேட்டுச்சு.  நிதியமைச்சகமும் என்னென்னமோ பண்ணி 2003 ஆம் வருடம் சலுகை கொடுத்தது.
               நம்ம பாப்பா சில வருடங்கள் அந்தக் காரை வச்சிருந்து விட்டு அப்படியே சூரத்தில் இருக்கும் ஜெயெஷ் தேசாய் என்ற ஒரு வியாபாரிகிட்ட அதைத் தள்ளிட்டு காசாக்கிடுச்சு.  டேய் எவ்வளவுடா குடுத்தேன்னு அவனைக் கேட்டா, "இந்தாபா, காரைப் பத்தி என்ன வேணுமின்னாலும் கேளு, ஆனா எம்புட்டு குடுத்தே, அந்த பாசக்கார பூஸ்டு பேபிய உனக்கு எப்படி தெரியும், அது இதுன்னு கேட்கிறா மாதிரியா இருந்தா எடத்தை காலி பண்ணு" அப்படிங்கிறான்.  அவனுக்கு இதே காரை புதுசாவே வாங்க முடியுமாம்.  ஆனாலும், மைக்கேல் ஷூ மேக்கர்,  டெண்டுல்கர் அப்படின்னு ரெண்டு கர்.... கர்.... சம்பந்தப் பட்ட இதை நான் புர்.... புர்.... என்று ஓட்டினா அதுவே போதும், வாழ்வே வெற்றிங்கிறானாம்!!

அன்புள்ள மோடிக்கு, ஹிட்லர் எழுதுவது… !

அன்புள்ள நரேந்திர மோடிக்கு
         நான் என்னை அறிமுகம் செய்துகொள்ளவேண்டிய அவசியம் இருக்காது. நாம் இதுவரை சந்தித்துக் கொண்டதில்லை என்றாலும் உன்னை என்னுடைய சகோதரனாகவே கருதிவந்தேன். இப்போது உன்னை குருவாக ஏற்றுக்கொண்டுவிட்டேன். இனவெறுப்பு அல்லது இனஅழித்தொழிப்பு என்னும் பெயரால் என் செயல்கள் இன்று அழைக்கப்படுகின்றன. மனித குலத்தின் விரோதியாகவும், படுபயங்கர சாத்தானாகவும் என்னைப் பலர் உருவகப்படுத்துகிறார்கள். 
          பல லட்சக்கணக்கானவர்களை நான் கொன்றேனாம். குழந்தைகள் என்றும் பெண்கள் என்றும் வயதானவர்கள் என்றும் பாராமல் யூதர்களை நான் தேடித்தேடி சிறைப்பிடித்து அழித்தேனாம். என்ன ஓர் அபாண்டமான குற்றச்சாட்டு! ஜெர்மனியைச் சுத்தப்படுத்தியவன் நான். கசடுகளைக் கண்டறிந்து களைவது ஒரு குற்றமா? நோயைக் கண்டுபிடித்து அழிப்பது தவறாகுமா? 
           நல்லவேளை, நரேந்திர மோடி, என்னை நீ நன்கு அறிந்து வைத்திருக்கிறாய். ஏன், உன் இயக்கத்தில் உள்ள பலரும் என்னைப் பற்றிய மிகச் சரியான மதிப்பீட்டையே உருவாக்கி வைத்திருக்கிறார்கள். அந்த வகையில் எனக்கு மகிழ்ச்சி தான். மீடியாவை எப்படி கையகப்படுத்திக் கொள்ள வேண்டும், வலுவான ஒரு பிரசாச வாகனமாக எப்படி அதனை மாற்றியமைக்க வேண்டும் என்பதை உலகுக்குக் கற்றுக்கொடுத்தவன் நான். குழந்தைகள் முயல்களைப் போல் தாவிவந்து பூங்கொத்து கொடுத்து என்னை வரவேற்பது போலவும், லட்சக்கணக்கான ஜெர்மானிய வீரர்கள் என் தலைமையின் கீழ் உற்சாகத்துடன் களத்துக்குச் செல்வது போலவும் பல புகைப்படங்களை வெளியிட்டு என் மக்களை நான் ஈர்த்திருக்கிறேன். 
          ஆஹா ஹிட்லரைப் போன்ற தலைவர் இந்த அகிலத்தில் உண்டா என்று வாய்பிளக்கச் செய்திருக்கிறேன். ஆனால், நீ என்னை மிஞ்சிவிட்டாய், நரேந்திர மோடி. என்னைக் கடந்து நீ வெகு தூரம் சென்று விட்டாய். மூன்று நாள்களாக நீ நடத்திய உண்ணாவிரதத்தைக் கண்டு நான் வெலவெலத்துப் போய்விட்டேன். என்னவொரு சாதுர்யம்! என்னவொரு மேதாவிலாசம்! நீ எத்தனை கூர் மதி படைத்தவன் என்பதைப் புரிந்து கொள்ள இந்த ஒரு சம்பவம் போதாதா? 
          பிப்ரவரி 2002ல் குஜராத் கலவரத்தால் வெடித்த போது நான் இப்படிச் சொல்லிக்கொண்டேன். ‘பாவம் மோடி, இனி அவன் மீண்டும் அரசியலுக்குள் காலடி எடுத்து வைக்க முடியாது!’ உன் ஆசிர்வாதத்துடனும் அங்கீகாரத்துடனும் ஆயிரக்கணக்கான முஸ்லிம்கள் குஜராத்தில் கொல்லப்பட்ட போது, பெண்கள் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட போது, உயிர் பயத்துடன் முஸ்லிம்கள் குஜராத்தைக் காலி செய்து கொண்டு ஓடிய போது, உன் சகாப்தம் முடிந்து விட்டது என்று கருதினேன். 
             காலம் இறுதித் தீர்ப்பெழுதி விட்டது என்று பயந்தேன். எனக்கு நானே தீர்ப்பெழுதிக் கொண்டு விட்டது உனக்குத் தெரியும். எந்த மூளையைப் பயன்படுத்தி யூதர்களை அகற்றினேனோ அந்த மூளையை நானே சிதறிடித்துவிட்டேன். நான் தோல்வியடைந்துவிட்டேன். என்னால் யூதர்களை மட்டுமே வெற்றி கொள்ள முடிந்தது. உலகத்தை அல்ல. என் ஜெர்மனி இன்று என்னைக் கைவிட்டுவிட்டது! உனக்கும் இப்படிப்பட்ட நிலைமை தான் வந்து சேரும் என்று நினைத்தேன். எப்படி உதித்தது இந்த உண்ணாவிரத யோசனை? யார் சொன்னது? என் அருமை கெப்பல்ஸால்கூட இப்படியொரு திட்டத்தைத் தீட்டியிருக்க முடியாது! 
             மூன்று தினங்கள். வெள்ளாடை உடுத்தி தேவகுமாரன் போல் நீ நடந்து வந்தாய். அலங்கரிக்கப்பட்ட, குளிரூட்டப்பட்ட மேடையில் பாந்தமாக அமர்ந்திருந்தாய். கேள்விக் கணைகளைத் திறமையாகவும் பொறுமையாகவும் எதிர்கொண்டாய். உலகமே உன்னைத் திரும்பிப் பார்த்தது. என் மீதும் குஜராத் மீதும் வீசப்பட்ட கற்களை நான் அமைதியாகச் சேகரித்து வந்தேன். அந்தக் கற்களைக் கொண்டு தான் குஜராத்தை பலமாகக் கட்டமைத்தேன்!’ எவ்வளவு அழுத்தமான வாசகம்! உன் எதிரிகளின் அத்தனைக் குற்றச்சாட்டுகளையும் ஒரு நொடியில், ஒரு வாக்கியத்தில் தகர்த்து உதிர்தது விட்டாய், மோடி! அமைதியாக காரியத்தைச் சாதித்து விட்டாய்! உன் சித்தாந்தமும் என்னுடையதும் ஒன்று தான். உன் அணுகுமுறையும் என்னுடையதும் ஒன்றுதான். ஆனால், உன் செயல்திட்டம் அபாரமானது. 
                யூதர்கள் அழிக்கப்பட வேண்டியவர்கள் என்பதை முடிவெடுத்தவுடன் நான் என் ராணுவத்தை தான் அழைத்தேன். அவர்களிடம் தான் பொறுப்பை ஒப்படைத்தேன். ஜெர்மனியிலும் ஜெர்மனியைத் தாண்டியும் பல வதை முகாம்களை அவர்கள் உருவாக்கினார்கள். வீடுகளில் புகுந்து, இனம் கண்டு யூதர்களை இழுத்து வந்தார்கள். நூறு நூறாக, ஆயிரம் ஆயிரமாகக் கொன்றார்கள். ஆனால் நீயோ இஸ்லாமியர்களை அழிக்க இந்துக்களைப் பயன்படுத்திக் கொண்டாய். யோசித்துப் பார்த்தால் இதைவிட அற்புதமான ஒரு திட்டத்தை யாராலும் வகுக்க முடியாது என்றே தோன்றுகிறது. 
          செய்ய வேண்டியதைச் செய்துவிட்டு நீ அழகாக ஒதுங்கிக் கொண்டு விட்டாய். ம், விளையாடு என்று பச்சைக்கொடி காட்டி விட்டு நீ புன்னகையுடன் பின் நகர்ந்து விட்டாய். யூதர்கள் ஜெர்மனியின் இதயத்தை அழிக்க வந்த கிருமிகள் என்பதை ஜெர்மானியர்கள் நம்பினார்கள். நம்ப வைத்தேன். ஆனால், அவர்களையே யூதர்களுக்கு எதிராகத் திருப்பி விடும் கலையை நான் கைக்கொள்ளவில்லை. நீ என் சகோதரன் அல்ல, என் குரு என்று நான் அழைத்ததன் காரணம் இப்போது புரிகிறதா? மோடி, நீ காந்தி பிறந்த மண்ணில் இருந்து தோன்றியிருக்கிறாய். 
                 விமானப் படைகளைக் கொண்டு தான் இரண்டாம் உலகப் போரில் பிரிட்டனை என்னால் வீழ்த்த முடிந்தது. ஆனால், காந்தி உண்ணாவிரதம் மூலமாகவே பிரிட்டனை விரட்டியடித்து விட்டாராமே! எப்பேர்ப்பட்ட சாதனை! எனக்கும் கூட மிஸ்டர் காந்தியிடம் இருந்து ஒரு கடிதம் வந்தது. அகிம்சையின் முக்கியத்துவம் பற்றி. யூதர்களுடன் ஒன்றிணைந்து வாழ்வது பற்றி. சத்தியத்தின் முக்கியத்தும் பற்றி. யூதர்களுக்கும் கூட அவர் கடிதம் எழுதியிருக்கிறார் என்று கேள்விப்பட்டேன். வன்முறையை உதறிவிட்டு, அன்பாலும் நேசத்தாலும் என்னை வீழ்த்த வேண்டுமாம்! ஓவென்று சிரித்துவிட்டு காந்தியை நான் மறந்து போனேன். ஆனால், நீ மறக்கவில்லை. மூன்று நாள் உணவை மறுத்ததன் மூலம், உன் ஒட்டுமொத்த எதிரிகளையும் நீ வாயடைக்கச் செய்துவிட்டாய். 
            ‘குஜராத்தில் சிறுபான்மையினருக்காக நீங்கள் என்ன செய்திருக்கிறீர்கள்?’ பந்தலில் இந்தக் கேள்வி உன்னிடம் கேட்கப்பட்ட போது நான் கூர்மையாக உன் முகத்தை தான் பார்த்துக் கொண்டிருந்தேன். ஒரு அசைவும் இல்லை உன்னிடம். விரிந்த புன்னகை விரிந்த படியே இருந்தது. உன் கண்கள், புருவம், கன்னம் எதிலும் அசைவில்லை. நீ துடிக்கவில்லை. பதறவில்லை. (ஒருமுறை தொலைக்காட்சி பேட்டியில் நீ தயங்கியும் சீறியும் பயந்தும் நடுங்கியதைப் பார்த்திருக்கிறேன்!) நீ உன் உதடுகளை இயல்பாகப் பிரித்தாய். 
                பிறகு சொன்னாய். ‘சிறுபான்மையினருக்காக நான் எதுவும் செய்யவில்லை. பெரும்பான்மையினருக்காகவும் எதுவும் செய்யவில்லை. நான் குஜராத்துக்காக உழைக்கிறேன். குஜராத்தின் முன்னேற்றத்துக்காகவே பணியாற்றுகிறேன். சிறுபான்மை, பெரும்பான்மை என்று மக்களை நான் பிரித்து பார்ப்பதில்லை.’ சொல்லி முடித்துவிட்டு, அடுத்த கேள்வி என்ன என்பது போல் ஒரு பார்வை பார்த்தாயே! அந்த இடத்தில் நான் மீண்டும் இறந்து போனேன். 
          என் அகந்தை அழிந்த சமயம் அது. நீ என்னை உலுக்கியெடுத்து விட்டாய், நரேந்திர மோடி. என் அத்தனை சாதனைகளையும் நீ துடைத்து அழித்து விட்டாய். முதல் முதலாகப் பயத்தை நான் தரிசித்தது உன்னிடம்தான். நடைபெற்றதை ‘கலவரம்’ என்று அழைக்கும் துணிச்சல் உனக்கு மட்டும்தான் இருக்கிறது. சடலங்கள் புதைக்கப்பட்ட கையோடு தேர்தலில் நின்று, வாக்கு சேகரித்து, வெற்றி பெறும் தீர்க்கமும் தீரமும் உன்னிடம் மட்டும் தான் இருக்கிறது. 
                  நான் கேள்விப்பட்டது நிஜமா என்று தெரியவில்லை. குஜராத்துக்கு மட்டுமின்றி முழு இந்தியாவுக்கும் நீ தலைமை தாங்கப் போகிறாயாமே! உண்மைதானா? அதற்கான முன்னோட்டம் தான் இந்த உண்ணாவிரதமா? நிச்சயம் நீ வெற்றி பெறுவாய் நரேந்திர மோடி. ஆரிய ரத்தம் தூய்மையானது. உலகை ஆளும் திறன் கொண்டது. நீ மெய்யான ஆரியன். நீ வெல்வாய்! குஜராத்தைப் போலவே இந்தியாவையும் மோடி வளர்த்தெடுக்க வேண்டும் என்று பலர் என் காதுபடப் பேசிக் கொண்டார்கள். நான் சிரித்துக் கொண்டேன். நீயும் சிரித்துக்கொண்டுதான் இருப்பாய் அல்லவா? 
                                                                                                         அன்புடன் 
                                                                                                 அடால்ஃப் ஹிட்லர் 

ஞாயிறு, 23 டிசம்பர், 2012

On victory margins, Jyoti Basu is ahead by far

By Vidya Subrahmaniam

Third-term Modi is in the company of three who far outshine him in terms of seat and vote shares
       As super hero-sized victories go, there is clearly no one among India’s galaxy of Chief Ministers, including the much-hailed and ostensibly Delhi-bound Narendra Modi, who can beat the record of West Bengal's Jyoti Basu.
         Jyoti Basu who was Chief Minister for close to five terms stretching over 23 long years, consistently registered blockbuster victories for the Left Front which held over three-fourths of the seats in the four terms between 1977 and 1996 — 225; 228; 242 and 241 in a house of 294. Even when the numbers dipped in 1996, the LF had a two-thirds majority, winning 202 or 68.70 per cent of the seats. The LF’s vote share ranged from 47 per cent to 51 per cent.
          Naveen Patnaik and Sheila Dikshit are both three-time Chief Ministers. Mr. Patnaik who was in alliance with the Bharatiya Janata Party between 2000 and 2004, completely overshadowed his partner. The Biju Janata Dal won 81 per cent of the seats it contested in 2000. The corresponding figure for the BJP was 60.31 per cent. The BJD won 72.61 per cent of the seats it contested in 2004. The corresponding figure for the BJP was 50.79 per cent. In 2009, Mr. Patnaik dumped the BJP citing sectarian violence in Kandhamal. The move won him a bounty: The BJD won a three-fourths majority with a seat share of 103 in the 129-member Orissa Assembly. Mr. Patnaik, whose party polled 39 per cent of the valid votes, achieved this feat in a three-way contest among the BJP, the BJD and the Congress.
           Ms. Dikshit was sworn in immediately after the 1998 Delhi Assembly election which fetched the Congress 52 of 70 seats or almost a three-fourths majority. In 2003, she won a two-thirds majority with 47 seats, and in 2009, against all expectations, she won 43 or 61 per cent of the seats.
         On Thursday, as results poured in from Gujarat, TV anchors competed to paint Mr. Modi in hagiographic shades, declaring that he was headed for a two-thirds majority. As time passed, the seat projection came down from 130 to 120 and stayed there even though expected tally hovered between 116 and 115 on the Election Commission of India’s website. In the end, the BJP in Gujarat wound up with 115 of 182 seats (63 per cent) — two short of the 117 it had in 2007.
             Significantly, the record for winning the highest share of seats and votes in Gujarat goes to the Congress. In 1980, it won 141 seats for a vote share of 51.04 per cent. Madhav Singh Solanki who became Chief Minister topped this in the next election with a phenomenal 149 seats for a vote share of 55.55 per cent.
Courtesy :THE HINDU/22-12-2012 
(This article has been corrected for an editing error)

சனி, 22 டிசம்பர், 2012

மக்கள் என்றால் கடிதம் - மோடி என்றால் பயணமா...?

       
       முதலமைச்சர் ஜெயலலிதா பதவியேற்ற நாளிலிருந்து இன்றுவரை மாநில நலனுக்காக அல்லது மக்களின் நலனுக்காக பேசுவதற்கோ அல்லது விவாதிப்பதற்கோ பிரதமரையோ அல்லது மத்திய அமைச்சர்களையோ எத்தனை முறை சந்தித்திருப்பார் என்று கேட்டால் ஒன்று... இரண்டு என்று விரல் விட்டு எண்ணிவிடலாம்.
           மின்சாரப் பிரச்சனையாக இருந்தாலும் சரி... காவிரி நதிநீர் பிரச்சனையாக இருந்தாலும் சரி... இலங்கைத் தமிழர், தமிழக மீனவர்கள் மீதான இலங்கை கடற்படையின்  துப்பாக்கி சூடு, தமிழக மீனவர்கள் இலங்கை படையால் கைது, முல்லை பெரியாறு இப்படி எந்தப் பிரச்சனைகளாக இருந்தாலும் முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா அனைத்துக் கட்சித் தலைவர்களையோ அல்லது அமைச்சர்களின் குழுக்களையோ அழைத்துக்கொண்டு தலைநகரில் பிரதமரையோ அல்லது மத்திய அமைச்சர்களையோ சந்தித்துப் பேசாமல், கோட்டையில் உட்கார்ந்த இடத்திலிருந்து ஒரு கடிதத்தை எழுதியனுப்பிவிடுவார். இது இவரது பழக்கமாக இருந்துவருகிறது.
             ஆனால் அண்மையில் குஜராத் மாநிலத்தில் நடைபெற்ற சட்டமன்றத்தேர்தலில் மூன்றாவது முறையாக வெற்றி பெற்று வருகிற டிசம்பர் 26 - ஆம் தேதியன்று நான்காவது முறையாக முதலமைச்சர் பதவியேற்கவிருக்கும் நரேந்திர மோடியின் பதவியேற்பு விழாவிற்கு இதே தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா குஜராத் மாநில தலைநகர் அகமதாபாத்திற்கு நேரில் செல்வது என்பது நியாயம் தானா...? தன்னுடைய பதவியேற்பு விழாவில் மோடி கலந்துகொண்டதற்காக இது ஜெயலலிதா காட்டும் நன்றிக் கடனா...? அல்லது 2014 பாராளுமன்றத் தேர்தலுக்கான வியூகமா...? என்னமோ மக்களுக்கு புரிந்தால் சரி...!

வியாழன், 20 டிசம்பர், 2012

மீண்டும் சாதி வெறியாட்டம் - தமிழக அரசு வேடிக்கைப் பார்க்கிறது...!

        தருமபுரியை தொடந்து இப்போது கடலூர் மாவட்டத்தில் சிதம்பரத்திற்கு அருகில் பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சார்ந்த கல்லூரியில் படிக்கும் பெண்ணை காதலித்ததற்காக அதேக் கல்லூரியில் படிக்கும் தலித் இனத்தைச் சேர்ந்த இளைஞனை  அதே சாதிவெறிக்கூட்டம் கொன்றிருக்கிறது.  
              நம் சாதிப் பெண்களை காதலித்தால் அவன் தலித்தாக இருந்தால் அவனை கழுத்தை அறுத்து கொள்ளுங்கள் என்று சாதிவெறிக் கூட்டத்தின் தலைவர்கள் பேசியது  அடிப்படையில் தான் இது போன்ற கொலைகளும், வீடுகள் எரிப்புகளும் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றன. ஆனால் சாதிவெறியாட்டம் போடும் அப்படிப்பட்ட தலைவர்களை கைது செய்யாமல்  தமிழக அரசும், காவல்துறையும் வாய் மூடி வேடிக்கைப் பார்த்துக்கொண்டிருக்கின்றன. அதனால் ஏற்பட்ட துணிச்சல் தான் தருமபுரி சம்பவத்திற்குப் பிறகு இன்று சிதம்பரத்தில் தன்கள் வெறியாட்டத்தை அரங்கேற்றியிருக்கின்றார்கள்.

உலகம் அழியும் என்பது புரளியே - புதுச்சேரி அறிவியல் இயக்கம்



      ''உலகம் அழியும்'' என்ற புரளியை நம்பி மக்கள் பீதியோ அச்சமோ அடையவேண்டாம் என்றும், உலகம் அழியும் என்பது வெறும் கற்பனையே அதை யாரும் நம்பவேண்டாம் என்றும் புதுச்சேரி அறிவியல் இயக்கம் நேற்று 19.12.2012 அன்று மக்களிடம் கூறியுள்ளது.
          புதுச்சேரி அறிவியல் இயக்கத்தைச் சேர்ந்த நிர்வாகிகள் துணைத்தலைவர் 
ஆர். தட்சிணாமூர்த்தி தலைமையில் புதுச்சேரி பத்திரிக்கையாளர்களை சந்தித்தனர்.
          ''மாயன் நாட்காட்டி அடிப்படையில் டிசம்பர் 21 - ஆம் தேதியன்று உலகம் அழியும் என்ற புரளி மக்களிடையே பரப்பப்பட்டு வருகிறது. மனிதகுல வரலாற்றில் தனது தொடர் முயற்சியால் அறிவியல் துறையில் மிக உயர்ந்த நிலையில் வளர்ந்து இருக்கும் இக்காலக்கட்டத்தில் இப்படிப்பட்ட வதந்திகள் அறிவியலின் பேரால் பரப்பப்படுவது என்பது துரதிஷ்டவசமானது. குறிப்பாக சில மத அமைப்புகளும், சில தனி நபர்களும் இத்தகைய அறிவியலுக்கு புறம்பான வேலைகளை செய்து வருவதும், அதன் அடிப்படையில் சிறப்பு யாகங்கள், தொழுகைகள், பிரார்த்தனைகள் என மக்களிடம் அச்சம் ஊட்டும் நடவடிக்கைகளில் ஈடுபடுவதும் தேவையற்றது. இப்படிப்பட்ட புரளிகளை நம்பி மக்கள் அச்சம் அடையத் தேவையில்லை. இதற்காக சிறப்பு வழிபாடுகளையோ, சடங்குகளையோ செய்யத்தேவையில்லை.   இந்த புரளிக்கான  காரணங்களை அறிவியல் ரீதியாக புரிந்துகொள்ள வேண்டும்'' என்றும், மற்றும் ஊடகங்கள் மூலமாக மக்களிடையே உலவி வரும் மாயன் சம்பந்தப்பட்ட தகவல்கள் பற்றியும், நாசாவின் பெயரால் சில தனிநபர்களும், ஊடகங்களும் பொய்யான தகவல்களை பரப்பி வருவதையும் மக்கள் நம்பவேண்டாம் என்றும் அந்த பத்திரிக்கையாளர்கள் கூட்டத்தில் விரிவாக எடுத்துக்கூறினார்கள். 

செவ்வாய், 18 டிசம்பர், 2012

உலகம் அழியப்போகிறது என்பதெல்லாம் வெறும் கற்பனையே...!


              21 டிசம்பர் 2012 உலகம் அழியும் நாள். ''ருத்ரம் 2012'' அமெரிக்க திரைப்படத்தில் தொடங்கி இன்று வரை அனைத்துத் தொலைக்காட்சிகளும் செய்தித்தாள்களும் மக்களிடையே பீதியையும், அச்சத்தையும் உருவாக்கியிருக்கும் நாள் இது தான். அமாவாசை, பவுர்ணமி, சூரிய கிரகணம், சந்திர கிரகணம் போன்ற இயற்கை நிகழ்வுகளை இன்றைய வானவியல் அறிஞர்கள் முன்கூட்டியே சொல்வதைப் போல், உலகம் அழியும் இந்த நாளையும்  3000 ஆண்டுகளுக்கு முன்பே ''மாயன் நாகரீகம்'' என்று சொல்லக்கூடிய ''மத்திய அமெரிக்க நாகரீகம்''  எழுதியிருப்பதாக ஒரு கட்டுக்கதையை அவிழ்த்துவிட்டு இன்றைக்கு  மதவாதமும், முதலாளித்துவமும் வாழ்ந்துகொண்டிருக்கின்றன. இது அமெரிக்காவிலிருந்து அனுப்பப்பட்ட கட்டுக்கதை என்பதை முதலில் நாம் உணரவேண்டும்.
           மத்திய அமெரிக்காவில் வாழ்ந்த மாயன் கி.மு.3113 ஆண்டிலிருந்து கி.பி.2012 - ஆம் ஆண்டு வரை தான் நாட்காட்டி என்ற ஆரூடம்  எழுதி வைத்திருப்பதாகவும், அந்த நாட்காட்டியில் 2012 டிசம்பர் 21 - க்கு பிறகு இல்லை எனவும், அதனால் டிசம்பர் 21 அன்று உலகம் அழியும் என்றும் பலவிதமான  கட்டுக்கதைகள்  கடந்த ஓராண்டு காலமாக மக்களிடையே உலாவந்து, இப்போது அந்த நாள் நெருங்க நெருங்க மக்களிடையே பீதியையும், அச்சத்தையும் கிளப்பிவிட்டு மதவாதமும், முதலாளித்துவமும் குளிர் காய்ந்துகொண்டிருக்கின்றன. மதமும் முதலாளித்துவமும் வாழ்ந்தால் தான் ஏகாதிபத்தியம் வாழமுடியும். இவை இரண்டும் தான் ஏகாதிபத்தியத்தை காப்பாற்றுகின்றன.
          அதனால் மக்களின் பீதியையும் அச்சத்தையும் பயன்படுத்திக்கொண்டு  இந்துமதவாதிகள் ''ஹோமம் நடத்துங்கள் கடவுள் நம்மை காப்பாற்றுவார்'' என்று சொல்லி மக்களை அழைத்து ஒரு பக்கம் ஹோமம் நடத்துகிறார்கள். இன்னொரு பக்கம் ''ஜெபம் செய்யுங்கள் தேவன் நம்மை காப்பாற்றுவார்'' என்று சொல்லி ஒரு பக்கம் மக்களை அழைத்து ஜெபக்கூட்டம் நடத்துகிறார்கள். மற்றொரு பக்கம் லாமாக்கள் என்று சொல்லக்கூடிய புத்தபிச்சுக்கள் மக்களிடையே இது போன்ற பீதியை கிளப்பிவிடுகிறார்கள்.  இவர்கள் அனைவரும் வெவ்வேறு மதங்களாகவும், வெவ்வேறு விதமான பிரார்த்தனையாகவும் இருந்தாலும் இவர்கள் நோக்கம் என்பது ஒன்று தான். இப்படியெல்லாம் செய்து அழியப்போகும் உலகத்தை காப்பாற்ற வேண்டும் என்ற எண்ணம் இல்லை. உலகம் இந்த குறிப்பிட்ட தேதியில் அழியாது என்பது இவர்களுக்கும் தெரியும். இந்த மூடநம்பிக்கையை வைத்து மதத்தை வளர்க்கவேண்டும் என்பது தான் இவர்கள் அனைவரின் ஒரே நோக்கம். எப்படியும் டிசம்பர் 21 அன்று உலகம் அழியப்போவதில்லை. அந்த நாள் நல்ல விதமாக கழிந்த பிறகு மறு நாள் 22 - ஆம் தேதியன்று '' இதோ பார்த்தீர்களா.... நாங்கள் செய்த ஹோமத்தால் தான் உலகம் அழியாமல் காப்பற்றுப்பட்டுவிட்டது'' என்றும் '' நாங்கள் செய்த ஜெபத்தால் தான் உலகம் அழியாமல் காப்பாற்றுவிட்டது'' என்றும் சொல்லி மதங்களுக்கு அப்பால் இருக்கும் மக்களையும், வேற்று மதத்தில் இருப்போரையும் தங்கள் மதத்தின் பால் இழுப்பதற்கும், அதன் மூலம் தங்கள் மதத்தை வளர்த்துக் கொள்வதற்குமான ஒரு ஏற்பாட்டுக்காகத் தான் அழிந்து போன மாயனுக்கு உயிர் கொடுத்திருக்கிறார்கள்.
          இன்னொரு பக்கம், ''இந்த நாள் எப்படி?'',  ''நிஜம்'', ''உண்மைக்கதை'', ''நடந்தது என்ன..?'', ''நம்பினால் நம்புங்கள்'' - போன்ற ஆரூடங்கள், ஜோசியங்கள்,   கட்டுக்கதைகள் மூலம் மக்களின் மூலைகளில் மூடநம்பிக்கைகளை விதை
த்து அதன் மூலம் இலாபம் பார்க்கிற செய்தித்தாள் நிறுவனங்களும், தொலைக்காட்சி நிறுவனங்களும் கடந்த சில மாதங்களாக இந்த மாயனைத் தான் கடவுளாக நம்பியிருக்கின்றனர். இவர்களும் டிசம்பர் 21 உலக அழிவைப் பற்றிய பல்வேறு கட்டுக்கதைகளை மக்களின் மூலையில் ஏற்றி வைத்திருக்கிறார்கள். மக்களும் செய்தித்தாள்களில் சொல்லப்படுவதும், தொலைக்காட்சிகளில் சொல்லப்படுவதும் உணமையாக தான் இருக்கும் என்று நம்பி பீதியில் இருக்கிறார்கள் என்பது தான் உண்மை. இப்படியாக மக்களின் பீதியையும், அச்சத்தையும் பயன்படுத்தி இவர்கள் ஒரு பக்கம் இலாபம் சம்பாதிக்கிறார்கள்.
            அறிவியல் அறிவும், பகுத்தறிவும் வளராத காலத்தில் - மாந்தரீகம், ஆரூடம், ஜோசியம் - போன்ற மூடநம்பிக்கைகள் மட்டுமே வளர்ந்திருந்த காலக்கட்டத்தில் சொல்லப்பட்டவைகளை, இன்று அறிவியல் அறிவும், பகுத்தறிவும், அறிவியலும், அறிவியல் கண்டுபிடிப்புகளும், அறிவியல் தொழிற்நுட்பங்களும் வளர்ந்திருக்கும் இந்த
அறிவியல் யுகத்தில் மக்களை மீண்டும் பின்னோக்கி அழைத்துச் செல்லும் வேலைகளை நாட்டில் இன்றைக்கு மதங்களும், ஊடகங்களும் தொடர்ச்சியாக செய்து கொண்டு தான் இருக்கின்றன. ஆனால் மத்திய - மாநில அரசுகளோ, நாட்டிலுள்ள மற்ற அறிவியல் அமைப்புகளோ இன்றுவரையில் வாயையே திறக்காமல் மவுனம் சாதிக்கின்றன. மக்களிடம் ஏற்பட்டிருக்கக்கூடிய பீதியையும், அச்சத்தையும் போக்கவேண்டும் என்ற குறைந்தபட்ச அறிவு கூட ஆட்சியாளர்களுக்கு இல்லை என்பது தான் உண்மை. அதேப்போல் வதந்திகளை பரப்பி பீதியை உண்டாக்குவோர் மீதும் எந்தவிதமான நடவடிக்கைகளையும் எடுக்காமல் இருக்கின்றார்கள். அண்மையில் சீன நாட்டில் உலக அழிவு சம்பந்தமான வதந்திகளை பிரச்சாரம் செய்த நூற்றுக்கும் மேற்பட்டோரை கைது செய்திருக்கிறார்கள். ஆனால் இங்குள்ள ஆட்சியாளர்கள், இதுபோன்ற வதந்திகளை பரப்புவோர் மீது குறைந்தபட்சம் எச்சரிக்கையாவது செய்திருக்க வேண்டும். ஆனால் அதை கூட செய்யவில்லை. ஏனென்றால் ஆட்சியாளர்களின் தவறான போக்கால் பாதிக்கப்பட்ட மக்களை திசைத்திருப்புவதற்கு  ஆட்சியாளர்களுக்கு இது போன்ற வதந்திகள் அவசியம் தேவைப்படுகின்றன. இது போன்ற வதந்திகளும், புரளிகளும், இவைகளால் ஏற்படும் அச்சங்களுமே மத்திய - மாநில ஆட்சியாளர்களை வாழ வைத்துக்கொண்டிருக்கின்றன.
              மதங்களும், கடவுள்களும், தேவையில்லாத சடங்குகளும், சம்பிரதாயங்களும், மூடநம்பிக்கைகளும், மூடப்பழக்கவழக்கங்களும், வதந்திகளுமே ஏகாதிபத்தியத்தையும், முதலாளித்துவத்தையும், இவையிரண்டையும் நம்பியிருக்கக்கூடிய ஆட்சியாளர்களையும் அழியாமல் காப்பாற்றுகின்றன. அவைகள்  அத்தனையும் ஒழிந்தால தான் இந்த மூவரையும் ஒழித்துக்கட்ட முடியும் என்பதை தான் இன்று உலகம் அழியும் என்று நம்பக்கூடிய மக்கள் உணரவேண்டும்.

திங்கள், 17 டிசம்பர், 2012

கொடூரன் ஒருவனால் தன் கண்களையும் கனவுகளையும் தொலைத்துவிட்ட வினோதினிக்கு உதவி செய்யுங்கள்...!

           ஒரே நாளில் கொடூரன் ஒருவனால் தன் கண்களையும் கனவுகளையும் தொலைத்துவிட்ட வினோதினிக்கு 16-12-2012 ஞாயிறு அன்று 23-வது  பிறந்த நாள்.
          படித்து முடித்து வேலைக்கு சேர்ந்த பின்னர் வரவிருந்த இந்த பிறந்த நாளை தன் தோழிகளுடன் ஊருக்கு வந்து கொண்டாடுவேன் என்று தன் பெற்றோரிடம் கூறியிருந்த வினோதினிக்கு
அன்று தன்னுடைய பிறந்த நாள் என்பது தெரியாது.  அவரது பெற்றோர்களுக்கும் சொல்லாமல் மறைக்க வேண்டிய பரிதாப நிலை. ''இன்னைக்கு பிறந்த நாள்னு தெரிஞ்சா ரொம்ப கஷ்டப்படுவா....'' என்று சொல்லும்போதே அவரது தந்தைக்கு கண்ணீர் அருவியாய் கொட்டுகிறது. இத்தனை ஆண்டுகளாய் பிறந்தநாள் வாழ்த்து சொன்னவர்கள் கூட வாய்விட்டு சொல்லமுடியாத சூழ்நிலை. 
      முகம் - பார்வை இரண்டையும் இழந்து பகலா...இரவா.. என்ன தேதி.. என்ன நேரம்.. எதுவும் தெரியாமல் கருகிய மலராய் படுக்கையில் கிடக்கிறார் வினோதினி.
         காதலிக்க மறுத்த காரணத்தால் ஒரே நாளில் தன் கனவுகளையெல்லாம் தொலைத்து நிற்கும் இந்த பெண்ணின் மருத்துவ சிகிச்சைக்கு ஏதேனும் உதவி செய்யுங்கள். வசதியில்லாத வினோதினியின் குடும்பத்திற்கு உங்கள் உதவிக்கரங்களை நீட்டுங்கள். 

JAYAPALAN (வினோதினியின் தந்தை) 
603899558
INDIAN BANK
KILPAK BRANCH
IFCS CODE: IDIB000k037
contact : ramesh 9944161416


(அந்த பெண் மீது வீசிய ஆசிட் சிறிது அவன் மீதும் தெரித்ததால் சிறு காயத்துடன் கொடூரன் சுரேஷ்)

Sitaram Yechury was conferred the ''Order of Communist Party of Russian Federation''

          Comrade Sitaram Yechury, Head of the International Department and Polit Bureau member of the CPI(M) was presented with a ‘Order of CPRF’ medal commemorating the 90th anniversary of the foundation of the USSR. CPRF General Secretary Com. Gennady Zhuganov presented the medal to Com. Sitaram Yechury during the international forum of communist parties organised  by CPRF in Moscow.
           

International forum of communist parties begins in Moscow


          December 15, in Moscow, in the hotel complex "Izmailovo" started an international forum "The communist movement today and tomorrow." It is attended by the leaders of the communist parties of Brazil, China, Greece, India, China, Cuba, Lebanon, Portugal, Ukraine and the Czech Republic. The Russian delegation was headed by Chairman of the Central Committee of the Communist Party, GA Zyuganov.
 
          "Roundtable" led Secretary of the Communist Party, the Deputy Chairman of the State Duma International Affairs Committee Leonid Kalashnikov. 
 
         "Today we are completing preparations for the XV Congress of our party and invite all communist forces - said the leader of the Communist Party. - I am glad that many of you have already responded to our invitation." GA Zyuganov said that in the year of the Congress of the Russian Communist Party will celebrate 20 years. "We are the best traditions of the Communist Party, but have been working in other circumstances: the opposition. We have a vision of how to build renewed socialism" - said Gennady Andreyevich.
 
        The leader of the Communist Party, to form and timely modernization of its political program of the party regularly participates in international forums and meetings, actively cooperating with all the communist and left-wing parties in the world. "We recently sent to China for training a group of our young politicians and journalists. They saw what a huge effect give it economic reforms", - said G. Zyuganov.
 
          Goes on in the Communist Party, and advocacy. "We have released a few films of our best experiences in today - said Gennady Andreyevich. - We have also introduced a bill on people's enterprises. This form of management was born in the Soviet Union and went around the world. Today there are many companies in China, Vietnam and India. "
  
         In addition, according to GA Zyuganov, the Communist Party was released two films from the experience of brotherly Belarus, "where the socialist foundations of life have largely been saved."
         Another topic raises the Russian communist leader - is approaching a new world economic crisis.
            "The global crisis, which has already got a hole almost 200 countries, covering over the world, and, in my opinion, worsen in the next year", - said G. Zyuganov.
        Prepared to meet him, according to the leader of the Communist Party, the Communist and left-wing forces to use the best international experience and jointly develop new tactics of the struggle for socialism. "The left turn is almost inevitable," - said Gennady Andreyevich.
           "If we look at how the world is struggling with a crisis, we observe interesting patterns - continued Russian communist leader. - The highest GDP growth rates in the years showed China under the Communist Party - an increase of 10-12 percent in many areas, has shown good results socialist Vietnam. As we see success stories come from those countries that have effective system of state regulation of the economy. "
            On the other hand, as noted, GA Zyuganov, the western world, led by the U.S. has successfully stuck in a crisis, and out of these countries also have to look in the left-reform. "Obama in the United States is trying to cancel the privileges of the rich, introduces social security, actively funding public education ... The united Europe is trying to put a muzzle on bankers and support government programs, decisions which are of a socialist character," - said the leader of the Communist Party,
 
           "We see that those who proclaimed yesterday the stability of liberal values, has assured that American liberalism was defeated," - concluded Zyuganov. As noted, GA Zyuganov, completing his speech, the Communist Party is ready to fill the ideological vacuum created by the crisis of capitalism. To do this, the Communist Party, in particular, held a plenary session in which formulated the new models of the ideological and theoretical work. Concrete measures to combat the economic crisis, according to the leader of the Russian communists, were announced at the last before the All-Russian Congress of the labor collectives. Zyuganov urged foreign comrades see the results of the Russian Communist Party.
 
           Then the leader of the Communist Party handed the leaders of the world Communist movement commemorative medal "In commemoration of the 90th anniversary of the USSR." Communist Party of the Russian Federation at the "round table" as represented by First Deputy Chairman of the Central Committee of the Communist Party, the first vice-speaker of the State Duma Ivan Millers and secretary of the Communist Party, the State Duma deputy DG Novikov.

புதுச்சேரியில் இந்தியா - வியட்நாம் நட்புறவு விழா - பாகம் - 2











        ஐந்தாவது இந்தியா - வியட்நாம் நட்புறவு விழா இன்று மாலை புதுவையில் நடைபெற்றது. ஏற்கனவே இரண்டு முறை இந்தியாவில் மேற்குவங்கம் - பீகார், கேரளம் - ஆந்திர மாநிலம் ஆகிய மாநிலங்களில் நடைபெற்றிருக்கிறது. இரண்டு முறை வியட்நாம் நாட்டில் இந்த விழாவை நடத்தியிருக்கிறார்கள். இந்த முறை புதுச்சேரி மற்றும் சென்னையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. புதுச்சேரியிலுள்ள அகில இந்திய சமாதான ஒருமைப்பாட்டுக் கழகம் தான் இந்த விழாவிற்கான முழு பொறுப்பும் ஆகும். புதுச்சேரியில் ஆளும்கட்சியாக என். ஆர். காங்கிரசாக இருப்பதால் இந்த சமாதான ஒருமைப்பட்டு அமைப்பை  காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர்களே ஆக்கிரமிப்பு செய்துள்ளதாலோ என்னவோ இந்த விழா என்பது வெறும் ஆட்டம் - பாட்டம் - கொண்டாட்டம் மட்டுமே கொண்டே நிகழ்ச்சியாகவே நடத்தப்பட்டது. இந்த விழாவில் யாரும் ஒரு சிறு துளி அளவு கூட  வியட்நாம் நாட்டைப்பற்றியோ, பிரஞ்சு மற்றும் அமெரிக்க ஏகாதிபத்தியத்திடம் இருந்து விடுதலை அடைந்தது பற்றியோ, வியட்நாம் நாட்டின் மக்கள் தலைவர் ஹோ - சி- மின் பற்றியோ, அந்த நாட்டின் அரசியல் - ஆட்சிமுறை பற்றியோ திட்டமிட்டு மேடையில் பேசாமல் பார்த்துக்கொண்டார்கள். சோஷலிச வியட்நாமில் ஆட்சியாளர்களிடம் ஊழல் இல்லை, தீவிரவாதம் இல்லை, குண்டுவெடிப்பு இல்லை இது போன்ற நல்ல தகவல்களையும் திட்டமிட்டு மறைத்துவிட்டார்கள். இது போன்ற தகவல்களை எல்லாம்  இன்றைய இளையத்தலைமுறையினர்களுக்கு சொல்லவேண்டாமா...? எதற்காக இந்த விழா...? வெறும் ஆட்டம் - பாட்டத்திற்கு மட்டும் தானா...? விழா மேடையிலும் சரி, விழா சம்பந்தப்பட்ட விளம்பரங்களிலும் சரி வியட்நாம் நாட்டின் தலைவர் ஹோ-சி-மின் படத்தையும் போடாமல் தவிர்க்கப்பட்டிருக்கிறது.
            ''சரித்திரம் தேர்ச்சி கொள்'' என்று நம்ப பாரதி சொன்னது போல் எப்போது தான் இவர்கள் சரித்திரத்தை மற்றவர்களுக்கு சொல்லப்போகிறார்கள்...? படிக்கப்போகிறார்கள்...? நம்ப நாட்டின் சரித்திரத்தையே அரைகுறையாக கொடுத்த ஆட்சியாளர்கள் எங்கிருந்து மற்ற நாட்டின் சரித்திரத்தை சொல்லபோறாங்க...?
            ஆனால் வியட்நாம் நாட்டின் கலைஞர்களின் குழு வியட்நாம் நாட்டின் மக்கள் தலைவர் ஹோ-சி-மின் பற்றிய வாழ்த்துப் பாடல் பாடினார்கள். வியட்நாம் மொழியில் பாடியதால் நமக்கு புரியவில்லையே என்றாலும், பாடலின் இடையிடையே ''ஹோ-சி-மின்'' பெயரை உரத்தி உச்சரிக்கும்  போது கேட்பதற்கே  நம் மனதிற்கு நெகிழ்ச்சியாகவும், எழுச்சியாகவும் இருந்தது.
         அண்டை நாடுகளோடு நட்புறவும் நல்லுறவும் கொள்ள இது போன்ற கூட்டு விழாக்கள் தேவை தான். ஆனால் அந்த நாட்டைப் பற்றிய தகவல்களை சொல்லி  நம் மக்களின் மனதில் நல்லெண்ணத்தை வளர்க்காமல் எப்படி நட்புறவு வளர்க்கமுடியும் என்பது தான் நமது கேள்வி....? 

ஞாயிறு, 16 டிசம்பர், 2012

Comrade Sitaram Yechury is conferred the ''Order of CPRF''

         P. F. Dorokhim, Coordinator of Russia - India Inter-Parliamentary group accompanied by A. P. Tarnaev representing the Communist Party of Russian Federation (CPRF) visited AKG Bhavan,  the CPI(M) Party headquarters in New Delhi on December 5. They had discussions with Com. Sitaram Yechury, Head of the International Department and Polit Bureau member of the CPI(M). 
         They once again reiterated the invitation to the CPI(M) to attend the meeting of communist parties organised by the CPRF on December 15-16, 2012. Sitaram Yechury thanked them for the invitation and stated that the Party had decided to take part in the meeting. Com. Sitaram Yechury will be participating in the meeting. 
        On behalf of the CPRF, they presented Sitaram Yechury with a ‘Order of CPRF’ medal commemorating the 90th anniversary of the foundation of the USSR.

மதத்தையும் தாண்டிய மனிதநேயம்...!

மதத்தையும் தாண்டிய மனிதநேயம்...!


































































நன்றி :




மறுபடியும் நான் பிறப்பேன்...!

மறுபடியும் நான் பிறப்பேன்....!



மக்களுக்கு
ஆசை காட்டி
காசை வாங்கி
நாட்டை விற்ற பாவிகளே...
இன்று மட்டும்
நான் இருந்திருந்தால்
என் கைத்தடியால்
உங்கள் மண்டையை
பிளந்திருப்பேன்.
அடிமைப் பதருகளே...
நீங்கள்
அந்நியனிடம் கைநீட்டவா
இன்பச்சுதந்திரம்
பெற்றுத்தந்தேன்.
உங்களுக்கு மட்டும் தானடா
இது
ஆனந்த சுதந்திரம்.
மக்களெல்லாம்
ஏனிந்த சுதந்திரம்
என்றல்லவா கேட்கிறார்கள்...?
பொழுதெல்லாம் தேசத்தை
கூவி விற்கும் மூடர்களே...
நான் மறைந்து விட்டேன்
என்று நினைத்தீரோ...?
எதிரே வரமாட்டேன்
எனத் துணிந்தீரோ...?
நான் மறுபடியும்
பிறப்பேன்
மீண்டும் எரிமலையாய்
வெடிப்பேன்.
அந்நியனுக்கு எதிராக அல்ல
கொள்ளையர்களே
உங்களுக்கு எதிராக.
கொள்ளைகொண்டு போகும்
என் தேசத்தை காப்பாற்ற
நான் மறுபடியும்
பிறப்பேன்..!

*இது பாரதியின் பிறந்தநாளன்று நான் எழுதிய கவிதை

சனி, 15 டிசம்பர், 2012

கோவணத்தையும் உருவப் போறாராம் மன்மோகன் சிங்... ஜாக்கிரதை...!

                       இன்றைக்கு புதுடெல்லியில் இந்திய தொழில் கூட்டமைப்பு FICCI ஏற்பாடு செய்திருந்த கருத்தரங்கில் மன்மோகன் சிங் ஒரு ''அபாய சங்கை'' ஊதியிருக்கிறார்.நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கான சீர்திருத்தக் கொள்கைகள் தொடர்ந்தும் நடைமுறைப்படுத்தப்படுமாம். அதுவும் வேகமாக நடைமுறைப்படுத்தப்படுமாம். அப்படின்னா என்ன அர்த்தம்...?ஜெனங்க கொஞ்ச நெஞ்சம் போட்டிருக்கிற கோவணத்தையும் உருவிடுவாருன்னு அர்த்தம். ஜெனங்களை ஒட்டுத் துணி இல்லாம அலையவிட்டுடுவாருன்னு அர்த்தம். தனது அமெரிக்க எஜமான் இட்ட கட்டளைய சிறப்பா செய்யப்போறாருன்னு அர்த்தம். அப்படின்னா இதற்கு பேரு தான் சீர்த்திருத்தமா...?
         உண்மையிலேயே சீர்த்திருத்தம் என்றால் என்ன...? அம்மணமா அலைந்தவனை ஆடை அணிய சொல்லுறது ஒரு வகை சீர்த்திருத்தம். குழந்தைத் திருமணம் கூடாதுன்னு தடுக்கிறது ஒரு வகை சீர்த்திருத்தம். கணவன் இறந்துட்டா மனைவி உடன்கட்டை ஏறி உயிர் துறப்பதை ஒழித்து கட்டியது என்பது ஒரு வகை சீர்த்திருத்தம். சமூக விடுதலை, பெண் விடுதலை - இவைகளுக்காக போராடுவது என்பது கூட ஒரு வகை சீர்த்தித்தம் தான். இதெல்லாம் சமூக சீர்த்திருத்தம்.
             அனால் மன்மோகன் சிங்கோ சொல்லுவது ''பொருளாதார சீர்த்திருத்தமாம்''. அப்படி என்ன பொருளாதார சீர்த்திருத்தம் செய்யப்போறாரு என்று கேட்டால், பெட்ரோல் - டீசல் - சமையல் காஸ் விலைகளை மனசாட்சியே இல்லாம உயர்த்த போறாருங்க.  நாம் அன்றாடம் பயன்படுத்துற பருப்பு, சமையல் எண்ணெய், மளிகை சாமான்கள், காய்கறிகளின் விலைகளை தாறுமாறாக உயர்த்த போறாருங்க. கண்டபடி வரிவிதிப்புகள் இருக்கும். ஜெனங்க கட்ட வேண்டிய வங்கி வட்டிகளை அதிகப்படுத்திடுவாரு. ஜெனங்களுக்கு கொடுக்கவேண்டிய வட்டிகளை குறைச்சிடுவாரு. மக்களுக்கு நியாயமாக கொடுக்க வேண்டிய மானியத்தை வேட்டிடுவாரு.   வேலையின்மையும், வேலையிழப்பும் அதிகமாகும். மக்களுக்கு சொந்தமான பொதுத்துறைப் பங்குகளை தயக்கமே இல்லாமல் தைரியமாக வித்துடுவாரு. இப்படியாக ஜெனங்கப் போட்டிருக்கக்கூடிய சட்டை, துண்டு, வேட்டி எல்லாவற்றையும் ஒவ்வொன்றாக உருவிட்டு, கடைசியாக ஜெனங்களுக்கு ஏதாவது போக்குக்காட்டிட்டு அவங்க போட்டிருக்க கோவணத்தையும் உருவிடுவாரு. அதுமட்டுமல்ல.... இன்னொரு பக்கம் பெருமுதலாளிகளுக்கு வரிச்சலுகையை தாராளமாக தருவாரு. அதுமட்டுமா... மானியங்களை அவர்களுக்கு கொட்டிக்கொடுப்பாரு. ஒரு பக்கம் ஜெனங்க மேல மிகப்பெரிய சுமையை தூக்கி வைப்பாரு. இன்னொரு பக்கம் பெருமுதலாளிகளை குஷிப்படுத்திடுவாறு. இதற்கு பேரு தான் பொருளாதார சீர்த்திருத்தமாம். மன்மோகன் சிங் சொல்லுறாரு. இப்படி செய்தால் தான் நாட்டில அவர் ''எதிர்பார்க்கிற'' பொருளாதார வளர்ச்சி இருக்குமாம்.
         இதை மட்டும் சொல்லலைங்க.   இதுவரையில் அரசு மேற்கொண்ட ''பொருளாதார சீர்திருத்த'' நடவடிக்கைகள் ஒரு தொடக்கம் தானாம்.  இன்னமும் ஏராளமான ''சீர்திருத்தக் கொள்கைகள்'' நடைமுறைப்படுத்தப்பட வேண்டியிருக்கிறதாம்.  அப்படி செய்தால் மன்மோகன் சிங்கை ''ஒரு செயல்படும் பிரதமர்ன்னு'' அமெரிக்கா  ஒத்துக்குமாம். இன்னுமொரு பொன்மொழியை மன்மோகன் சிங் உதிர்த்திருக்கிறார். இந்த மாதிரியான ''பொருளாதாரச் சீர்திருத்தங்களை'' எதிர்க்கக் கூடியவர்கள் ''பழமைவாதிகளாம்''. யாரை சொல்கிறார் என்று புரிகிறதா....? மக்களை பாதிக்கின்ற - மக்கள் மீது சுமையை ஏற்றுகின்ற - ஏழை மக்களை மேலும் ஏழ்மை ஆக்குகின்ற இதுபோன்ற ''முட்டாள்தனமான'' பொருளாதாரச் சீர்த்திருத்தத்தை எதிர்ப்பவர்கள் இடதுசாரிகள். தான் என்பதை நாடு மறந்துவிடக்கூடாது. பெருமுதலாளிகளுக்கு சலுகைகளை அள்ளிக்கொடுத்து, அவர்களை மேலும் செழிக்கச் செய்யும் ''தறுதலைத்தனமான'' பொருளாதாரச் சீர்த்திருத்தத்தை எதிர்ப்பவர்கள் இடதுசாரிக் கட்சிகளை சேர்ந்தவர்கள் என்பதை நாடு மறந்துவிடக்கூடாது.
          அப்படியென்றால் பிரதமர் மன்மோகன் சிங் இதன் மூலம் என்ன திருகு வேலை செய்கிறார் என்றால்.... ''மக்களுக்காக நான் சீர்த்திருத்தம் செய்யப்போறேன். அதை இடதுசாரிக் கட்சிகள் எதிர்க்கின்றன. அப்படியென்றால் அவர்கள் உங்களுக்கு எதிரானவர்கள்'' என்று சொல்லாமல் சொல்லி, வெறும் இலவசங்களுக்கும், தொலைக்காட்சி சீரியல்களுக்கும், மூடநம்பிக்கைகளுக்கும் மயங்கிப்போன சிந்தனை இல்லாத இந்திய மக்களை இடதுசாரிக்கட்சிகளுக்கு எதிராக திருப்புவதற்கான திருகு வேலையையும் மன்மோகன் செய்திருக்கிறார்.
          ''பொருளாதார சீர்த்திருத்தம்'' என்ற பெயரில் மன்மோகன் சிங் தலைமையிலான காங்கிரஸ் - திமுக கூட்டணி அரசு செய்யும் மோசடி வேலைகளை மக்கள் எப்படி எதிர்கொள்ளப்போகிறார்கள் என்பது தான் நமது கேள்வி...?