காந்தியைக் கொன்றவர்கள் தான்
நரேந்திர தபோல்கரையும் கொன்றுள்ளார்கள் .....!
மராட்டிய மாநில முதலமைச்சர் குற்றச்சாட்டு !
டாக்டர் நரேந்திர தபோல்கர் செவ்வாய்கிழமை காலை நடைப்பயிற்சிக்கு போகும் போது சுட்டுக் கொல்லப்பட்டார் !
புனே நகரத்தில் நடந்த இந்த சம்பவம் மராட்டிய மாநிலத்தை பரபரப்பில் ஆழ்த்தி உள்ளது !
மராட்டிய மாநில முதலமைச்சர் பிருத்விராஜ் சவான் " காந்தியைக் கொன்றவர்கள் தான் தபோல்கரையும்கொன்றுள்ளார்கள் " என்று குறிப்பிட்டுள்ளார் !
மிராஜ்
நகரத்தில் மருத்துவ கல்லூரியில் படித்து பட்டம் பெற்ற தபோல்கர் மருத்துவச்
சேவையை விட்டு விட்டு மக்களின் மூட நம்பிக்கையை ஒழிக்க பணி செய்ய
ஆரம்பித்தார்!
அவருடைய அண்ணன் தேவதத்தா சொசலிஸ்ட் கட்சியில் இருந்தார் !
தபோல்கர் மக்களிடையே செல்வாக்கு செலுத்திவரும் போலிச்சாமியார்கள், பூசாரிகள் ஆகியவர்களை எதிர்த்து இயக்கங்களை நடத்திவந்தார் !
இதற்காக
அகில பாரதிய மூடநம்பிக்கை ஒழிப்பு சங்கத்தில் சேர்ந்து பணியாற்றினார் !
இந்த அமைப்பின் தலைமை பா.ஜ.க விடம் இருந்தது ! ''திருடனிடமே சாவியைக் கொடுத்த
நிலைமையை'' உணர்ந்த தபோல்கர் மராட்டிய மூடநம்பிக்கை ஒழிப்பு இயக்கத்தை
ஆரம்பித்தார் !
சர்வதேச
பகுத்தறிவாளர் அமைப்புகளுடன் தொடர்பு கொண்டார் ! மூடநம்பிக்கையினை
ஒழிக்க சட்டமன்றத்தில் ஒரு மசோதாவை கொண்டுவரச் செய்தார் ! எல்லா கட்சிகளும்
அதனை ஆதரித்தன ! பா.ஜ.க வும், சிவசேனை மட்டும் அதனை கடுமையாக எதிர்த்தன !
வினாயக
சதுர்த்தி பூஜை செய்யும் பக்தர்களிடம் சிலையை ஆற்றிலோ
குளத்திலோ போடாதீர்கள் என்று பிரச்சாரம் செய்தார் ! அதுவும் புனே
நகரத்தில் கடுமையாக செய்தார் ! விநாயக சதுர்த்தி அடுத்தமாதம் வரவிருக்கும்
நேரத்தில் பலநகரங்களில் இவருடைய குரல் பிரதி பலித்தது !
பொதுக்
குளத்தில் தலித்துகள் தண்ணிர் எடுக்கக் கூடாது என்று மேல்சாதியினர் குரல்
கொடுத்த மாநிலம் இது ! ஒவ்வொரு கிராமத்திலும் ஒரு பொதுக்கிணறு
தோண்டவேண்டுமென்று இயக்கம் நடத்தினார் தபோல்கர் ! ஒரே கிணறு தான் என்றால்
எல்லாப்பயல்களும் ஒரே இடத்தில தானே தண்ணீர் எடுக்க வேண்டும் !
தபோல்கரின் இத்தகைய செயல்பாடுகள் இந்து வெறியர்களின் பகைமையை சம்பாதித்திருக்கக்கூடும் என்று சமூக ஆர்வலர்களும் செயல்வீரர்களும் கருதுகிறார்கள் !
செவ்வாய்கிழமை காலை நடைப்பயிற்சிக்கு சென்றவரை மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் சுட்டு கொன்றிருக்கிறார்கள் !
மதத்தின் பெயரால், மூடநம்பிக்கையை வளர்த்து மக்களைச் சுரண்டும் போக்கை எதிர்த்து இயக்கம் நடத்திய டாக்டர்.நரேந்திர தபொல்கர் என்ற உண்மையான பகுத்தறிவாளர் அதற்காக தன் உயிரையே கொடுத்திருக்கிறார் !
(லண்டன் பி.பி.சி தமிழோசை நிருபர் தபோல்கர் பற்றி நேற்று
மாலை கேட்ட பொதும் இதனையே என் பேட்டியில் குறிப்பிட்டேன் )
நன்றி : காஷ்யபன் வலைப்பூ
1 கருத்து:
மனித தன்மை இல்லாத மிருகங்கள் இப்படி செய்துள்ளன ...
கருத்து வலிமை , உண்மை இல்லாமல் வெறும் வன் முறை நடந்துள்ளது ..
அவலம்.
கருத்துரையிடுக