வியாழன், 15 ஆகஸ்ட், 2013

தேசபக்த உணர்வு கொள் - தேசத்தை காத்தல் செய்...!ஓ... இளைஞனே...
பெண்ணே...
உனக்குள்
ஒரு சக்தி இருக்கிறது...
தேசத்தை மாற்று...
தேசபக்த உணர்வு கொள்
தேசத்தை காத்தல் செய்...
புறப்பட்டு
தேசம் உனக்காக
காத்திருக்கிறது...
பாரத நாட்டின்
விடுதலைக்காக மீண்டும்
போராட வா..!
மற்றுமொரு
சுதந்திர போராட்டம்...
நாமே பாரதியாய்
பகத்சிங்காய் நேதாஜியாய்
மாறுவோம்...

நமக்குள்
வல்லமை இருக்கிறது
இந்த ''மா நிலத்தை''
மாற்றுவோம்...
அரசியல் விடுதலை
பொருளாதார விடுதலை
சமூக விடுதலை -
இவைகளை கொண்ட
மாற்றுப் பாதையில்
நல்லரசை ஏற்றுவோம்
இந்திய ''மா மன்றத்தில்''... 

கருத்துகள் இல்லை: