தனக்கென்று தனியாக சுதந்திரமே இல்லாமல் நம் நாட்டு பிரதமர் இன்று காலை சுதந்திரதினத்தை கொண்டாடினார். முதல்ல மன்மோகன் சிங்கிற்கு சுதந்திரத்தை கொடுங்கப்பா.. பாவம்.. அவரால சுதந்திரமா நடமாடவே முடியல... சுதந்திரமா கொடியேத்த முடியல... எங்கோ உயரமான இடத்துல - மக்களுக்கும் அவருக்கும் தொடர்பே இல்லாத இடத்துல கண்ணாடிக் கூண்டுக்குள்ள ''ஷோகேஸ்'' பொம்மை மாதிரியே நின்னுகிட்டு பேசறாரு... அப்பக்கூட அவரா அவர் விருப்பத்திற்கு சுதந்திரமா பேச முடியுதா... முடியலையே... அமெரிக்க எஜமா சொல்லுற மாதிரியும், இத்தாலி அம்மா சொல்லுற மாதிரியும், இந்திய பெருமுதலாளிங்க சொல்லுற மாதிரியுமில்ல அவர் பேசவேண்டியிருக்கு... அடப்பாவமே... சாப்புடறது எப்படின்னு தான் தெரியல... இதத்தான் சாப்பிடணும்ன்னு மாதாமாதம் எழுதிக்கொடுத்துடுவாங்களோன்னு சந்தேகமாத்தான் இருக்குது... முதல்ல பிரதமர் கையில சுதந்திரத்தை கொடுங்கப்பா... பொது மக்களே நெருங்கமுடியாத பிரதமர்... இவர் பொதுமக்களுக்காக எப்படி சிந்திப்பார்.... பொதுமக்களுக்காக என்ன பேசுவார்... மக்களைப் பற்றி சிந்திக்காத பிரதமரின் சுதந்திரதின உரை....
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக