ஜூலை 12 - மலாலா தினம். சென்ற ஆண்டு ஐ.நா அறிவித்தது.
அந்த நாள் பாகிஸ்தானிய புரட்சிப் பெண் மலாலா யூசுப் சாய் பிறந்தநாள்.
பாகிஸ்தானில் மலாலா தான் வாழும் பகுதியில் பெண்களை ஊக்குவித்து கல்வி
கற்கச் செய்தார் என்பதற்காக, சென்ற ஆண்டு பிற்போக்கு தீவிரவாதிகளான
தாலிபான்களின் தோட்டாவுக்கு டாட்டா காட்டி மரணப்படுக்கையிலிருந்து திரும்பி
வந்தவர். மதத்தின் பேரால் பெண்கள் புத்தகத்தை தொடக்கூடாது என்று சொல்லும்
பிற்போக்குத்தனமான தீவிரவாதக் கூட்டத்திற்கு மத்தியில் ஒரு தீரமிக்க
வெள்ளைப் புறாவாக காட்சியளித்தார் என்பதற்காகவே - உலகில் மற்ற
சிறுமியர்களுக்கு உதாரணமாக வாழ்கிறார் என்பதற்காகவே ஐ.நா சபை அவரது
பிறந்தநாளை மலாலா தினமாக அறிவித்து அவரது தீரமிக்க செயலை
கவுரவப்படுத்துகிறது.
அதேப் போல் இந்த ஆண்டும், மலாலா தினத்தன்று - ஜூலை 12 - ஆம்
தேதியன்று ஐ.நா.சபை மலாலாவின் பிறந்தநாளை மலாலாவை ஐ.நா.சபைக்கே வரவழைத்து
கொண்டாடியது என்பது உலகமே அவரை கொண்டாடியது போல் இருந்தது. ஐ. நா. சபையில்
நூற்றுக்கணக்கானோர் மத்தியில் உரையாற்றினார். அனைவரும் அவரது உரையை
கூர்ந்து கவனித்தார்கள். ஐ.நா பொதுச்செயலாளர் பான் - கீ- மூன் கூட
மலாலாவின் உரையை கூர்ந்து கவனித்தார். ஒரு சிறுமியின் உரையில் அப்படியொரு
முதிர்ச்சியை உலகம் பார்த்தது.
''ஒரு
ஆசிரியர், ஒரு குழந்தை, ஒரு புத்தகம், ஒரு பேனா - இவைகளால் உலகத்தை
மாற்றமுடியும்'' - இந்த வார்த்தைகள் இன்றும் ஒலித்துக்கொண்டே இருக்கின்றன.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக