Network
marketing firm Amway's India chairman and CEO William S Pinckney and
two company directors were arrested in Kerala on Monday,27th May, 2013,
on charges of financial irregularities. The two directors are Sanjay Malhotra and Anshu Budhraja, crime branch sources said. The
arrests were made on a warrant issued in three cases registered by
Wayanad Crime Branch in 2011 on charges of violation of the Price Chits
and Money Circulation Schemes (Banning Act), crime branch sources said.
புதன், 29 மே, 2013
''AMWAY INDIA'' HEAD ARRESTED....!
லேபிள்கள்:
Amway's India,
chairman and CEO
மாவோயிஸ்ட் சிக்கல் வெறும் சட்டம் ஒழுங்கு பிரச்சனையா...?
கட்டுரையாளர் : தோழர். அ. குமரேசன்
பத்திரிக்கையாசிரியர் மாவோயிஸ்ட்டுகளின் வன்முறைகள் சத்திஸ்கர் மாநிலத்திற்கு மட்டும் உரியதல்ல. பல மாநிலங்களிலும் பரவியிருக்கிற தேசியப் பிரச்சனை அது. மே 25 அன்று சத்திஸ்கரின் பஸ்தார் பகுதியில் காங்கிரஸ் கட்சியின் தலைவர்களும் தொண்டர்களும் மாவோயிஸ்ட்டுகளால் சுட்டுக்கொல்லப்பட்டது கடுமையான கண்டனத்திற்கு உரிய வெறித்தனமான செயல். கோபத்திற்கு நியாயமான காரணங்கள் இருக்கின்றன, கோபத்தை வெளிப்பத்தியிருக்கும் கொலைவழி ஒரு சதவீதம் கூட ஏற்க இயலாதது. கொல்லப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு எனது இரங்கல்களையும் தெரிவித்துக்கொள்கிறேன்.
காங்கிரஸ்
கட்சியின் ஊர்வலத்திற்கு சரியான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யத் தவறியிருக்கிறது மாநில
பாரதிய ஜனதா கட்சி அரசு. பாதுகாப்பு ஏற்பாடுகளில் குறைபாடு இருந்ததை மாநில முதலமைச்சர்
ஒப்புக்கொண்டிருக்கிறார். அந்த அளவில் இதில் மாநில பாஜக அரசுக்குப் பொறுப்பிருக்கிறது.
ஆனால், மாவோயிஸ்ட்டுகள் பிரச்சனை இந்த அளவுக்கு வளர்ந்ததில் மத்திய அரசுக்குத் தான்
பெரும் பங்கு இருக்கிறது. இன்றைய மன்மோகன் சிங் அரசை மட்டும் சொல்லவில்லை, முந்தைய வாஜ்பாய் அரசு, அதற்கும் முந்தைய அரசுகள் என
எல்லா மத்திய ஆட்சியாளர்களுக்கும் ஒட்டுமொத்த மத்திய அரசுக் கட்டமைப்புக்கும் இதில்
பொறுப்பிருக்கிறது. மத்திய
அரசு மக்கள் மீது திணித்த பொருளாதாரக் கொள்கைகள் பழங்குடி மக்களையும் தலித் மக்களையும்
அந்நியப்படுத்துவதாக இருந்தன. கனிம வளம் மிக்க அவர்களது நிலங்களைக் கைப்பற்றி டாட்டாக்களுக்கும்
பிர்லாக்களுக்கும் அம்பானிகளுக்கும் தாரை வார்த்தது மத்திய அரசு. தொழில் வளர்ச்சி என்ற
பெயரில் இந்த மக்களின் வாழ்வதாரங்கள் பறிக்கப்பட்டன, அவர்களது பரம்பறை
வன உரிமைகள் நசுக்கப்பட்டன. அந்த மக்களின் கல்வி, மருத்துவம்,
குடிநீர், சாலைவசதி போன்ற தேவைகள் புறக்கணிக்கப்பட்டன.
இப்படிப்பட்ட துரோகங்களால் ஏற்பட்ட ஏமாற்றமும் ஏக்கமும் ஆத்திரமும் அதிதீவிரவாதம் பேசும்
மாவோயிஸ்ட்டுகளுக்கு விளைநிலமாகியது.
''இடதுசாரி
அதிதீவிரவாதம் ஒரு இளம்பருவக் கோளாறு'' என்றார் லெனின். தவறான தத்துவத்தைக் கைக்கொண்டவர்கள்
இந்த அதிதீவிரவாதிகள். இந்தியா விடுதலை பெற்ற நாடு என்பதையே ஏற்காதவர்கள். இந்தியாவில்
முதலாளித்துவம் எந்த அளவிற்கு வளர்ந்திருக்கிறது, நாட்டின்
அரசியலிலும்
சமூக வாழ்க்கையிலும் எந்த அளவுக்குத் தாக்கம் செலுத்துகிறது என்ற உண்மை
நிலைமைகளை மதிப்பிடத்
தவறியவர்கள். வெளிநாட்டு நிறுவனங்களின் கமிஷன் ஏஜென்டுகளான தரகு
முதலாளிகள்தான் இந்திய
மக்களின் வர்க்க எதிரிகள் என்று கணித்தவர்கள். அந்த எதிரியை ஒழிக்கவென
சாகசவாதப் பாதையாக ஆயுதங்களைத் தூக்கியவர்கள். போராளிகள், தியாகிகள்
என்றாலும் அந்தப் போராட்டத்தையும் தியாகத்தையும் சரியான இலக்கின்றி
வீணாக்குகிறவர்கள்.
இல்லாத
அந்த எதிரியை எதிர்த்துப் போராடக் கிளம்பினார்கள். இல்லாத எதிரியோடு எப்படி மோதுவது? ஆகவே உள்ளூரில் ஒரு போஸ்ட்மேன், ஊராட்சிமன்ற உறுப்பினர்,
சாதாரண போலீஸ் கான்ஸ்டபிள்... என இவர்களைத்தான் அந்த வர்க்க எதிரியின்
ஆட்கள் என கொலை செய்யத் தொடங்கினார்கள். அரசால் கைவிடப்பட்டிருந்த கிராமங்களைத் தங்களது
ஆதிக்கத்திற்குக் கொண்டுவந்தார்கள். அந்த மக்களுக்கு மருத்துவ உதவி வழங்குவதற்காக ஒரு
ஆம்புலன்ஸ் வந்தால் கூட அதை அரசின் ஆயுத வண்டியாக சித்தரித்து வெடிவைத்துத் தகர்த்தார்கள்.
பள்ளிக்கூடங்களை முடக்கினார்கள்.
மாவோயிஸ்ட்டுகளை
எதிர்கொள்வதற்காக அரசு உதவியுடன் அமைக்கப்பட்ட ''சல்வா ஜூடூம்'' அமைப்போ, காவல்துறையை விடவும் மோசமாக கிராம மக்களின் மனித உரிமைகளைக் காலில் போட்டு
மிதித்தது. பாலியல் வன்கொடுமை, மிரட்டிப் பணம் பறிப்பது போன்ற
எல்லாவகையான அத்துமீறல்களையும் சல்வா ஜூடூம் ஆட்கள் செயல்படுத்தினார்கள். இது கிராம
மக்களை மேலும் தனிமைப்படுத்தியது. உச்சநீதிமன்றம் தலையிட்டு, ஆயுதப் படை போன்ற சல்வா ஜூடூம் சட்டவிரோதமான அமைப்பு என்று தீர்ப்பளித்த பின்னர்தான்
அது கலைக்கப்பட்டது.
இப்போதும்
மத்திய காங்கிரஸ் கூட்டணி அரசு கடந்த காலத் தவறுகளிலிருந்து பாடம் கற்றுக்கொள்ளவில்லை.
உதாரணமாக, நிலம் கையகப்படுத்துதல் சட்ட முன்வரைவு ஒன்றை மன்மோகன் சிங்
அரசு தயாரித்திருக்கிறது. பாஜக-வின் அமளி ஒத்துழைப்புடன் முடக்கப்பட்ட நாடாளுமன்ற கூட்டத்தில்
அந்த சட்ட முன்வரைவு மக்கள் பிரதிநிதிகளின் விவாதத்திற்கு வைக்கப்படவில்லை. ஏற்கெனவே
சட்டத்திற்குப் புறம்பாகக் கைப்பற்றப்பட்ட வன மக்கள் நிலங்களை, இனி சட்டப்படி சில பணக்கட்டுகளை வீசிக் கையகப்படுத்தவும், பின்னர் அவற்றை உள்நாட்டு - வெளிநாட்டு கார்ப்பரேட் கம்பெனிகளின் சுரண்டலுக்கு
ஒப்படைப்பதுமே இந்தச் சட்ட முன்வரைவின் நோக்கம். இது சட்டமாகுமானால், பழங்குடி மக்களும் தலித் மக்களும் மேலும் மேலும் அந்நியப்படுததப்படுவதற்கும்,
அதைப் பயன்படுத்திக்கொண்டு மாவோயிஸட்டுகள் தங்களது வன்முறை ஆதிக்க அரசியலைத்
தொடர்வதற்குமே ஏதுவாகும். மாவோயிஸ்ட்டுகளின்
தாக்குதலில் இறந்தவர்கள் காங்கிரஸ்காரர்கள் என்றாலும், தேர்தல் ஆதாயக் கண்ணோட்டத்துடன் இதை வைத்து பிணவாத அரசியல் செய்கிற முயற்சிகளில்
காங்கிரஸ் கட்சி ஈடுபடக்கூடாது.
வெறும்
சட்டம் ஒழுங்கு பிரச்சனையாக மாவோயிஸ்ட் பிரச்சனையைப் பார்ப்பது தவறு. மத்திய திட்டக்குழுவே
கூட இதை சட்டம் ஒழுங்குப் பிரச்சனையாக மட்டும் பார்க்கக்கூடாது என்று கூறியிருக்கிறது.
அப்படிப் பார்ப்பதால்தான் ராணுவத்தை அனுப்புவது, பாதுகாப்புப்
படையை
அனுப்புவது என்ற நடவடிக்கைகளில் அரசு இறங்குகிறது. நேருக்கு நேராக
சீருடையோடு மோதுகிற எதிரிப்படையோடு சண்டைபோடுவதற்குப் பயிற்சி பெற்ற
ராணுவத்தால் கிராம சமூகங்களோடு கலந்து செயல்படுகிற மாவோயிஸ்ட்டுகளைக் கையாள
முடியாது. மக்கள் துன்புறுத்தப்படுவதற்குத்தான் ராணுவக் கெடுபிடிகள்
இட்டுச் செல்லும். இதை ஒரு அடிப்படையான சமூகப்
பொருளாதாரப் பிரச்சனையாகப் புரிந்துகொண்டு அதற்கேற்ற வழிமுறைகளை வகுக்க
வேண்டும். சும்மா
சில நூறு கோடி ரூபாய்களை அந்த வட்டாரங்களில் வீசினால் போதும் என்று அரசு
கருதுவதும்
தவறு. தற்போதைய ஊழல் கட்டமைப்பில் அந்தப் பணத்தில் கடைசித் துளிகள் மட்டுமே
மக்களைச்
சென்றடையும்.
வலுவான
பாதுகாப்பு ஏற்பாடுகளோடு, கிராம மக்களை நேரடியாக ஈடுபடுத்துகிற,
அவர்களிடம் பொறுப்பை ஒப்படைக்கிற நடவடிக்கைகள், ஜனநாயக அரசியல் செயல்பாடுகள் என மிகப்பெரிய, மிக நீண்டகாலம்
ஆகக்கூடிய பன்முக அணுகுமுறைகள் வகுக்கப்பட்டாக வேண்டும். இனியும் காலம் தாழ்ததாமல்
தொடங்கியாக வேண்டிய இந்த அணுகுமுறைகளை, இதில் அக்கறையுள்ள அனைத்து
சக்கிகளோடும் கூடி விவாதித்து வகுக்கிற அரசியல் உறுதிப்பாடு ஆட்சியாளர்களுக்குத் தேவை.
லேபிள்கள்:
அதிதீவிரவாதம்,
சல்வா ஜூடூம் அமைப்பு,
மாவோயிஸ்ட்கள்
செவ்வாய், 28 மே, 2013
மன்மோகன் சிங் ஐ.பி.எல் - க்கு நன்றி சொல்லவேண்டும்...!
லேபிள்கள்:
ஊழல் மயம்,
ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி,
மன்மோகன் சிங்
புதன், 22 மே, 2013
மன்மோகன் சிங் - சோனியா கூட்டணி அரசின் 4 ஆண்டுகள் - மிக மோசமான முன்னுதாரணம்...!
லேபிள்கள்:
4 ஆண்டுகள்,
காங்கிரஸ் கூட்டணி ஆட்சி,
சோனியா - மன்மோகன் சிங்
இமயமலையைக் கடந்து ஒரு கைகுலுக்கல்...!
மக்கள் சீனாவும் இந்தியாவும் கூடி வாழ முடிவெடுத்திருக்கின்றன. ஆசியா
உலக அமைதியின் நங்கூர மாக மாறவேண்டுமானால் இவ்விரு நாடுகளும் கைகோர்த்துக்
கொண்டு செயல்பட வேண்டும்.
நாம் மாறிக்கொண்டிருக்கும் ஒரு கால கட்டத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். ஆயினும், சில விஷயங்கள் மட்டும் எப்போதுமே நிலைத்து நிற்கக்கூடியதாகவும், புத்துயிர் அளிக்கக்கூடியதாகவும், அனைவரையும் ஈர்க்கக்கூடியதாகவும் இருந்திடும். இந்தியாவும் அதேபோன்று ஒரே சமயத்தில் பழமையும், இளமையும் கலந்ததொரு நாடாகும். நான் சீனப் பிரதமரான பிறகு, சீன அரசாங்கத்தின் தூதுக்குழு ஒன்றிற்குத் தலைமையேற்றுப் பயணம் செய்திடும் முதல் நாடு இந்தியா தான். சீனாவுக்கும் இந்தியாவுக்கும் இடையே பல்வேறு துறைகளில் ஆழமான முறையில் நட்புறவையும், கூட்டுறவையும் மேம்படுத்திட சில துல்லியமான பங்களிப்புகளைச் செய்திட முடியும் என்ற நம்பிக்கையுடனும் மிகுந்த ஆவலுடனும் வந்திருக்கிறேன்.
நாம் மாறிக்கொண்டிருக்கும் ஒரு கால கட்டத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். ஆயினும், சில விஷயங்கள் மட்டும் எப்போதுமே நிலைத்து நிற்கக்கூடியதாகவும், புத்துயிர் அளிக்கக்கூடியதாகவும், அனைவரையும் ஈர்க்கக்கூடியதாகவும் இருந்திடும். இந்தியாவும் அதேபோன்று ஒரே சமயத்தில் பழமையும், இளமையும் கலந்ததொரு நாடாகும். நான் சீனப் பிரதமரான பிறகு, சீன அரசாங்கத்தின் தூதுக்குழு ஒன்றிற்குத் தலைமையேற்றுப் பயணம் செய்திடும் முதல் நாடு இந்தியா தான். சீனாவுக்கும் இந்தியாவுக்கும் இடையே பல்வேறு துறைகளில் ஆழமான முறையில் நட்புறவையும், கூட்டுறவையும் மேம்படுத்திட சில துல்லியமான பங்களிப்புகளைச் செய்திட முடியும் என்ற நம்பிக்கையுடனும் மிகுந்த ஆவலுடனும் வந்திருக்கிறேன்.
மனிதகுல
நாகரிகத்தின் தூண்கள் :
சீனாவும் இந்தியாவும் பல்லாயிரம் காலத்திற்கும்
மேலான நீண்ட நெடிய வரலாற்றுப் பாரம்பரியத்தைப் பெற்றுள்ள நாடுகளாகும்.
மிகவும் பழமையான மனித குல நாகரிகங்களில் சீன நாகரிகமும், இந்திய
நாகரிகமும் அடங்கும். அவை இரண்டும் கிழக்கத்திய நாடுகளின் நாகரிகத்தின்
இரு தூண்களைப் பிரதிநிதித்துவப்படுத்துகின்றன. விண்ணைத் தொடும் இமயமலையினால் கூட இரு நாடுகளுக்கும் இடையிலான பரஸ்பர ஈர்ப்பையும், அறிவொளி
பரிமாற்றத்தையும் தடுத்திட முடியவில்லை. அறிவிற்கு சிறந்த ஃபாஹீன், யுவான் சுவாங் ஆகிய இரு சீனத் துறவிகளும்,
பண்டைக்கால இந்தியாவைச் சேர்ந்த போதி தர்மரும் சீனாவுக்கும் இந்தியாவுக்கும் இடையே மதம் மற்றும் கலாச்சாரப் பரிவர்த்தனைகளுக்குக் கணிசமான
அளவில் பங்களிப்பினைச் செய்திருக்கிறார்கள். நான் மாணவனாக இருந்த
காலங்களிலேயே இந்தியா மீது அளப்பரிய ஆர்வத்தைக் கொண்டிருந்தேன். புகழ்
பெற்ற ‘‘மகாகவி’’ ரவீந்திரநாத் தாகூர் அவர்களின் மிகவும் ஆழ்ந்த
தத்துவார்த்த மற்றும் மறக்கமுடியாத பல கவிதை வரிகளும் அவரது காலத்தில்
வாழ்ந்த சீன அறிஞர்கள் பலருடன் அவர் கொண்டிருந்த அறிவாழமிக்க நட்புணர்வும்
எனக்கு மிகுந்த மனக்கிளர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன. நான் பீகிங்
பல்கலைக் கழகத்தில் படித்துக் கொண்டிருந்த காலத்தில், இந்தியக் கலாச்சாரம்
(ஐனேடிடடிபளைவ) பற்றி நன்கறிந்த சீனப் பேராசிரியர் ஒருவர் இருந்தார். அவருடன் நான் நன்கு அறிமுகமாகி இருந்தேன். அவர் தன் வாழ்நாள் முழுவதையும்
புராதன இந்தியக் கலாச்சாரத்தைப் பயில்வதற்கும் போதிப்பதற்குமே செலவழித்தார். அவரது பங்களிப்புக்களை அங்கீகரிக்கும் விதத்தில் அவர் இந்திய அரசால், பத்ம பூஷன் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டார். உண்மையில், தலைமுறை
தலைமுறையாய், நம் இரு கலாச்சாரங்களும் ஒன்றிலிருந்து மற்றொன்று நிறைய
கற்றுக்கொண்டு, பயன்பெற்று தலைத்தோங்கி வளர்ந்திருக்கின்றன. நான்
முதன்முதலாக இருபத்தேழு ஆண்டுகளுக்கு முன்பு இந்தியாவிற்கு வந்திருந்தபோது,
அதன் இதமான கதிரொளியால், சுடரொளி வீசும் வண்ணங்களால், மிக அற்புதமான
கலைகளால், கடினமாகவும் திறமையுடனும் உழைத்திடும் மக்களால், அவர்களுடைய
வேற்றுமையிலும் ஒற்றுமையுடன் வாழும் வியத்தகு வாழ்க்கை நெறியால் மிகவும்
கவரப்பட்டேன்.
நான் அறிந்தவரை, 21ஆம் நூற்றாண்டின் இந்தியா புதிய
புதிய கண்டுபிடிப்புகளின் மூலம் வளர்ச்சியால் மிகவும் வேகமாக
வளர்ந்துகொண்டிருக்கிறது. ‘‘தெற்கு ஆசியாவின் சிலிகான் பள்ளத்தாக்கு’’
என்று அழைக்கப்படும் பெங்களூரு இந்தியாவில் உள்ள தகவல் தொழில்நுட்ப
விற்பன்னர்களில் மூன்றில் ஒரு பங்கினர் வாழ்ந்து
கொண்டிருக்கிறார்கள். இந்நகரம் இந்தியாவின் தகவல் தொழில்நுட்ப மையமாக
மட்டுமல்ல, ஆசியாவின் மென்பொருள் சேவைகளின் மையமாகவும் விளங்குகிறது.
இந்தியாவில் உற்பத்தித்துறையும் மிகவும் வேகமாக
முன்னேறிக் கொண்டிருக்கிறது. வர்த்தக ரீதியான வாகனங்களை உற்பத்தி செய்வதில் டாட்டா மோட்டார்ஸ் நிறுவனம் உலகின் முதல் ஐந்து நிறுவனங்களில் ஒன்றாக
விளங்குகிறது. டாட்டா குளோபல் பெவரேஜஸ்
நிறுவனம் தேயிலை உற்பத்தியில் உலகின் மிகப்பெரிய இரண்டாவது நிறுவனமாக
விளங்குகிறது. ஆப்பிள் நிறுவனத்தின் மறைந்த தலைவர் ஸ்டீவ் ஜாப்ஸ்
யோகாவும், தியானமும் கற்றுக் கொள்வதற்காகவே இந்தியாவிற்குப் பயணம்
செய்தார் என்று நான் படித்திருக்கிறேன். இப்போது, சீன இளைஞர்களில்
கணிசமான எண்ணிக்கையினர் இந்தியாவின் உன்னதமான கலாச்சாரத்தையும்,
வரலாற்றின் தடங்களையும் ஆராய்ந்து அறிந்து பெருமிதம் கொள்ளும் நோக்கத்துடன் இந்தியாவிற்கு வந்துகொண்டிருக்கின்றனர். ஆசிய நாடுகளில்
அடுத்தடுத்து வாழ்ந்து கொண்டிருக்கும் சீனாவும், இந்தியாவும் கூடி வாழ
முடிவெடுத்திருக்கின்றன. நவீன காலத்தில் நம்முடைய லட்சியங்கள்
முன்னெப்போதையும்விட மிகவும் வலுவாகப் பின்னப்பட்டிருக்கின்றன. நம்முடைய
மக்கள் பரஸ்பரம் இரக்கம் கொண்டு, தங்கள் நாடுகளில் அவர்கள் மேற்கொண்ட தேசிய
விடுதலைப் போராட்டத்தின்போது ஆதரவும் உதவியும் செய்துள்ளது தொடர்பாக
மனதைத் தொடும் எண்ணற்ற வரலாற்று நிகழ்வுகளை விட்டுச் சென்றுள்ளார்கள்.
அதன் பின்னர், நம் இரு நாடுகளும் இணைந்து சமாதான சகவாழ்வைத் தொடர ஐந்து
அம்சங்களைக் கொண்ட பஞ்சசீலக் கொள்கையை உருவாக்கின. அது நம் இரு
நாடுகளுக்குமே சர்வதேச உறவுகளை முன்னெடுத்துச் செல்ல மிக முக்சியமான
அடிப்படை விதிகளாக மாறியுள்ளன. நம் இரு நாடுகளுமே வளர்முக நாடுகளின்
உரிமைகளையும் நலன்களையும் உயர்த்திப்பிடித்திட, தெற்குத் தெற்கு ஒத்துழைப்புக்கு இறுதி வடிவம் கொடுத்திட, தோளோடு தோள்நின்று, செயல்பட்டுக்
கொண்டிருக்கின்றன.
இன்று, இமயமலையைத் தாண்டி இப்போது மேற்கொள்ளப்படும் கை குலுக்கல் மிகவும் வலிமையானதாகும். பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்கான பணியிலும், மக்களின் வாழ்க்கைத் தரங்களை முன்னேற்றுவதற்கான செயல்பாடுகளிலும், நாட்டை புதுப்பிப்பதற்கான முயற்சிகளிலும் இரு நாடுகளுமே ஓர் அமைதியான மற்றும் மன உளைச்சலற்ற அண்டை நாட்டவரைப் பெற்றிருப்பதும், நாடுகளுக்கிடையிலான பிரச்சனை எதுவாக இருந்தாலும் அதனைப் பேச்சு வார்த்தைகள் மற்றும் ஒத்துழைப்பு மூலமாக தீர்வு கண்டு வெற்றிகாண விழைவதும் அவசியமாகும்.
இன்று, இமயமலையைத் தாண்டி இப்போது மேற்கொள்ளப்படும் கை குலுக்கல் மிகவும் வலிமையானதாகும். பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்கான பணியிலும், மக்களின் வாழ்க்கைத் தரங்களை முன்னேற்றுவதற்கான செயல்பாடுகளிலும், நாட்டை புதுப்பிப்பதற்கான முயற்சிகளிலும் இரு நாடுகளுமே ஓர் அமைதியான மற்றும் மன உளைச்சலற்ற அண்டை நாட்டவரைப் பெற்றிருப்பதும், நாடுகளுக்கிடையிலான பிரச்சனை எதுவாக இருந்தாலும் அதனைப் பேச்சு வார்த்தைகள் மற்றும் ஒத்துழைப்பு மூலமாக தீர்வு கண்டு வெற்றிகாண விழைவதும் அவசியமாகும்.
ஆசிய நாடுகளில் மிகவும் வலுவாக உள்ள இந்தியா,
உலக அளவில் மிகவும் செல்வாக்குடன் காணப்படும் மாபெரும் நாடான இந்தியா,
சர்வதேச விவகாரங்களில் அளித்திடும் முக்கியத்துவமான பங்களிப்பு நாளும்
அதிகரித்துக் கொண்டிருக்கிறது. ‘பிரிக்ஸ்’ (பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா, தென்னாப்பிரிக்கா ) நாடுகளில் ஓர் உறுப்பு நாடாகத் திகழும்
இந்தியா, தன்னுடைய ஆரோக்கியமான பொருளாதார வளர்ச்சியுடன், தெற்காசிய
நாடுகளின் அமைதிக்கும் வளத்திற்கும் குறிப்பாகவும், ஆசிய பசிபிக் நாடுகளில் பொதுவாகவும், தன் குறிப்பிடத்தக்க பங்களிப்பினை ஆற்றி வருகிறது.
இந்தியாவின் வளர்ச்சி கண்டு சீனா மிகவும் மகிழ்ச்சி கொள்கிறது. இருநாடுகளிலும் அனைத்துத் துறைகளிலும் பொருளாதாரம் மற்றும் சமூக வளர்ச்சிக்கு
உதவிடும் வகையில் சீன - இந்திய ஒத்துழைப்பை உயர்த்திடவும் விரிவுபடுத்திட
வும் சீனா எப்போதும் தயாராக இருக்கிறது. இரு நாடுகளுக்கும் இடையே வரலாறு
விட்டுச்சென்றுள்ள சில சிக்கலான பிரச்சனைகள் இன்னமும் இருக்கின்றன என்பதை
மறுப்பதற்கில்லை. ஆனால், பெரும் நாடுகளாக விளங்கும் நம் இரு நாடுகளின்
பொதுவான பண்புகளாகத் திகழும் வளமான வரலாற்று அனுபவம் மற்றும் தொலைநோக்குப்
பார்வை, நாமிருவரும் நட்புறவுடனும் நல்லெண்ணத்துடனும் வாழ்ந்திடவும் நம்
பிரச்சனைகள் அனைத்தையும் ஒரு நீண்ட கால அடிப்படையில் தீர்த்துக்
கொண்டிடவும் நமக்கு உதவிடும். கடந்த சில ஆண்டுகளில் நாம் மேற்கொண்ட கூட்டு
முயற்சிகள் இரு தரப்பினரும், தாவாவுக்குரிய எல்லைப் பிரதேசங்களில்
சமாதானத்தையும் அமைதியையும் கொண்டுவரவும், பிரச்சனைகள் அனைத்தையும்
பகுத்தறிவுக்கு ஒத்த முறையில் மிகவும் நேர்மையாகவும், பக்குவமாகவும்
பேசிப் படிப்படியாகத் தீர்த்துக்கொள்ளவும் கற்றுக்கொண்டிருக்கிறோம்.
சீனாவிற்கும் இந்தியாவிற்கும் இடையிலான பொதுவான நலன்கள் அவற்றின்
வித்தியாசங்கள் அனைத்தையும் விஞ்சி நிற்பவைகளாகும். இரு நாடுகளும்
ஒன்றையொன்று சந்தேகத்துடன் பாவிப்பதற்குப் பதிலாக, பரஸ்பரம் நம்பிக்கையை
வளர்த்துக்கொள்ள முன்வர வேண்டும் என இரு நாடுகளுமே ஒப்புக்கொண்டுள்ளன. நம்
முன்னேற்றப்பாதையில் நன்கு முன்னேறிக் கொண்டிருக்கும் நாம் இருவருமே
நமக்கிடையேயிருக்கும் பிரச்சனைகளைத் தீர்த்துக் கொள்ள மதிநுட்பத்தையும்
பகுத்தறிவையும் நம்சக்தியையும் நன்கு பயன்படுத்துவோமேயானால், நம்மால்
களையமுடியாத தடைகள் என்று எதுவுமே இல்லை என்றே நான் நம்புகிறேன். நம்
பிரச்சனைகளை நாம் வெளிப்படைத் தன்மையுடன் எதிர்கொண்டு, ஒருவர்க்கொருவர்
உண்மையுடன் பேசினோமேயானால் அவற்றிற்கு முறையான தீர்வுகளை நம்மால்
நிச்சயமாகக் காண முடியும்.
இன்றியமையாத ஏழு அம்சங்கள் :
சீனம் வளர்ந்து கொண்டிருக்கும் மற்றும் அமைதியை விரும்பும் ஒரு மாபெரும் நாடாகும். சீனர்கள் மிகவும் மதிக்கும் மாண்பு என்னவெனில், ‘‘மற்றவர்கள் உனக்குச் செய்யக்கூடாது என்று எதை நீ கருதுகிறாயோ அதை நீ மற்றவர்களுக்குச் செய்யாதே’’ என்பதேயாகும். இத்தத்துவம் அக்கம்பக்கத்திலிருப்பவர்களுடன் நட்புடனும் நன்னம்பிக்கையுடனும் இருக்க வேண்டியது அவசியம் என்பதை வலியுறுத்திக்கூறுகிறது. சீனம் முன்பிருந்ததைவிட நன்கு வளர்ந்திருக்கிறது. ஆனாலும் இன்றும் அது ஒரு வளர்முக நாடுதான். ஒருநாள் அது மிகவும் வலுவான நாடாக மாறினாலும்கூட, நிச்சயமாக அது பிறநாடுகளால் தூஷிக்கப்படக்கூடிய மேலாதிக்கப்பாதையை எப்போதுமே மேற்கொள்ளாது. அந்நியர்கள் பலராலும் மேற்கொள்ளப்பட்ட இத்தகைய இழிநடவடிக்கைகள், யுத்தங்கள் மற்றும் குழப்பங்கள் காரணமாக நாங்கள் ஏராளமாகவே பாதிக்கப்பட்டிருக்கிறோம். அதே போன்ற துன்பதுயரங்கள் மீண்டும் ஒரு முறை எவருக்கும் ஏற்பட அனுமதிக்கப்படக்கூடாது என்பது எங்களுக்கு நன்றாகவே தெரியும். நவீனமயத்தை எய்திட சீனா செல்ல வேண்டிய பாதை வெகுதூரத்திலிருக்கிறது. சீனா போன்ற மக்கள்தொகை நிறைந்த மாபெரும் நாட்டினை வெற்றிகரமாக நடத்திச் செல்வதற்கு, இன்றியமையாத ஏழு அம்சங்களுக்கு மிகவும் உயர்ந்தபட்ச முன்னுரிமைகள் அளிக்கப்பட வேண்டும். அவை, எரிபொருளுக்கான விறகு, அரிசி, சமையல் எண்ணெய், உப்பு, சோயா குழம்பு, உணவுக்கு மண மூட்டும் புளிப்புச்சுவை மற் றும் தேயிலை ஆகியவைகளாகும். இந்த ஏழும் நாள்தோறும் வழங்கப்பட வேண்டியது அவசியம். வேறு வார்த்தைகளில் சொல்வதானால், நம் மக்களின் அன்றாட வாழ்க்கைத் தேவைகளுக்கான அத்தியாவசியத் தேவைகள் அனைத்தையும் பூர்த்தி செய்யவேண்டியது நம் உடனடிக் கவலைகளாகும். சீன மக்கள் அனைவருக்கும் சிறந்த கல்வி, மிகவும் உத்தரவாதத்துடன் கூடிய வேலைவாய்ப்புகள், மிகவும் நம்பகமான சமூகப் பாதுகாப்பு, மிகவும் வசதியான குடியிருப்பு வீடுகள், மிகவும் வண்ணமயமான கலாச்சார வாழ்க்கை மற்றும் நிலையான மற்றும் வளமான தேசம் ஆகியவற்றை விரும்புகிறார்கள். இவை அனைத்தையும் எங்கள் மக்களுக்கு வழங்குவது என்பதும் நாட்டை நவீனமயமாக்குவது என்பதும் அவ்வளவு எளிதான ஒன்றல்ல. சுயசார்பு வளர்ச்சிக்கு நாங்கள் அதிக முனைப்பு காட்ட வேண்டும்.
சீனம் வளர்ந்து கொண்டிருக்கும் மற்றும் அமைதியை விரும்பும் ஒரு மாபெரும் நாடாகும். சீனர்கள் மிகவும் மதிக்கும் மாண்பு என்னவெனில், ‘‘மற்றவர்கள் உனக்குச் செய்யக்கூடாது என்று எதை நீ கருதுகிறாயோ அதை நீ மற்றவர்களுக்குச் செய்யாதே’’ என்பதேயாகும். இத்தத்துவம் அக்கம்பக்கத்திலிருப்பவர்களுடன் நட்புடனும் நன்னம்பிக்கையுடனும் இருக்க வேண்டியது அவசியம் என்பதை வலியுறுத்திக்கூறுகிறது. சீனம் முன்பிருந்ததைவிட நன்கு வளர்ந்திருக்கிறது. ஆனாலும் இன்றும் அது ஒரு வளர்முக நாடுதான். ஒருநாள் அது மிகவும் வலுவான நாடாக மாறினாலும்கூட, நிச்சயமாக அது பிறநாடுகளால் தூஷிக்கப்படக்கூடிய மேலாதிக்கப்பாதையை எப்போதுமே மேற்கொள்ளாது. அந்நியர்கள் பலராலும் மேற்கொள்ளப்பட்ட இத்தகைய இழிநடவடிக்கைகள், யுத்தங்கள் மற்றும் குழப்பங்கள் காரணமாக நாங்கள் ஏராளமாகவே பாதிக்கப்பட்டிருக்கிறோம். அதே போன்ற துன்பதுயரங்கள் மீண்டும் ஒரு முறை எவருக்கும் ஏற்பட அனுமதிக்கப்படக்கூடாது என்பது எங்களுக்கு நன்றாகவே தெரியும். நவீனமயத்தை எய்திட சீனா செல்ல வேண்டிய பாதை வெகுதூரத்திலிருக்கிறது. சீனா போன்ற மக்கள்தொகை நிறைந்த மாபெரும் நாட்டினை வெற்றிகரமாக நடத்திச் செல்வதற்கு, இன்றியமையாத ஏழு அம்சங்களுக்கு மிகவும் உயர்ந்தபட்ச முன்னுரிமைகள் அளிக்கப்பட வேண்டும். அவை, எரிபொருளுக்கான விறகு, அரிசி, சமையல் எண்ணெய், உப்பு, சோயா குழம்பு, உணவுக்கு மண மூட்டும் புளிப்புச்சுவை மற் றும் தேயிலை ஆகியவைகளாகும். இந்த ஏழும் நாள்தோறும் வழங்கப்பட வேண்டியது அவசியம். வேறு வார்த்தைகளில் சொல்வதானால், நம் மக்களின் அன்றாட வாழ்க்கைத் தேவைகளுக்கான அத்தியாவசியத் தேவைகள் அனைத்தையும் பூர்த்தி செய்யவேண்டியது நம் உடனடிக் கவலைகளாகும். சீன மக்கள் அனைவருக்கும் சிறந்த கல்வி, மிகவும் உத்தரவாதத்துடன் கூடிய வேலைவாய்ப்புகள், மிகவும் நம்பகமான சமூகப் பாதுகாப்பு, மிகவும் வசதியான குடியிருப்பு வீடுகள், மிகவும் வண்ணமயமான கலாச்சார வாழ்க்கை மற்றும் நிலையான மற்றும் வளமான தேசம் ஆகியவற்றை விரும்புகிறார்கள். இவை அனைத்தையும் எங்கள் மக்களுக்கு வழங்குவது என்பதும் நாட்டை நவீனமயமாக்குவது என்பதும் அவ்வளவு எளிதான ஒன்றல்ல. சுயசார்பு வளர்ச்சிக்கு நாங்கள் அதிக முனைப்பு காட்ட வேண்டும்.
அதற்கு ஓர் அமைதியான சர்வதேச சூழல்
அவசியமாகும். நாங்கள் அண்டை நாட்டவர்களுடன் நல்லிணக் கத்துடனும், உலகில்
உள்ள அனைவருடனும் நட்புடனும் வாழவேண்டியது அவசியமாகும். சமாதானமுறையிலான
வளர்ச்சிப் பாதையேப் பின்பற்றப்படவேண்டும் என்பதே சீன மக்களின்
தடுமாற்றமற்ற உறுதியான நிலைப்பாடும், நடவடிக்கையுமாகும்.
தொடரும்
சீர்திருத்தங்கள் :
சீனா தன்னுடைய துரிதமான வளர்ச்சிக்கு சீர்திருத்தங்களைத் தொடரவும் அதேபோன்று அயல்நாடுகளின் ஒத்துழைப்பைப் பெறவும் கடன்பட்டிருக்கிறது. உலகமயம் கோலோச்சக்கூடிய இன்றைய சகாப்தத்தில் நாடுகளுக்கு இடையிலான உறவுகள் என்பவை ஒன்றையொன்று சார்ந்தே அமைந்திருக்கின்றன. இன்றைய சர்வதேச ஒழுங்கு மற்றும் அமைப்பில் சீனா நன்கு பயனடைந்தே இருக்கிறது. இத்தகைய சீர்திருத்த அமைப்புமுறையை முன்னெடுத்துச் செல்வதில் இந்தியாவுடனும் இதர நாடுகளுடனும் ஒத்துழைத்துச் செயல்பட சீனா தயாராகவே இருக்கிறது. சீனா, சர்வ தேசக் கடமைகளைத் தன் நாட்டின் பலத்துடன் முன்னெடுத்துச்செல்லும். உலகோடு ஒட்ட ஒழுகிட திறந்த மனதுடன் நாங்கள் தயாராகவே இருக்கிறோம். அதேபோன்று உலகமும் எங்களை அமைதியான முறையில் திறந்த மனதுடன் அணுகிடும் என்று நம்புகிறோம். சீனாவும் இந்தியாவும் வடிவத்திலும் மக்கள் தொகையிலும் மாபெரும் நாடுகளாகும். இரண்டு நாடுகளிலும் சேர்ந்து, மக்கள்தொகை 2.5 பில்லியனை (250 கோடியை)த் தாண்டிவிட்டது. இது உலக மக்கள் தொகையில் சுமார் 40 விழுக்காடாகும். உலகில் மிகவும் முக்கியமான சந்தைகளாக நம் இரு நாடுகளும் கருதப்படுகின்றன. ஆயினும், சென்ற ஆண்டில் நம் இரு நாடுகளின் வர்த்தகம் 70 பில்லியன் அமெரிக்க டாலர்களுக்கும் குறைவேயாகும். நம் நாட்டின் வலிமை மற்றும் அந்தஸ்துடன் ஒப்பிட் டோமானால் இது போதுமானதல்ல.
சீனா தன்னுடைய துரிதமான வளர்ச்சிக்கு சீர்திருத்தங்களைத் தொடரவும் அதேபோன்று அயல்நாடுகளின் ஒத்துழைப்பைப் பெறவும் கடன்பட்டிருக்கிறது. உலகமயம் கோலோச்சக்கூடிய இன்றைய சகாப்தத்தில் நாடுகளுக்கு இடையிலான உறவுகள் என்பவை ஒன்றையொன்று சார்ந்தே அமைந்திருக்கின்றன. இன்றைய சர்வதேச ஒழுங்கு மற்றும் அமைப்பில் சீனா நன்கு பயனடைந்தே இருக்கிறது. இத்தகைய சீர்திருத்த அமைப்புமுறையை முன்னெடுத்துச் செல்வதில் இந்தியாவுடனும் இதர நாடுகளுடனும் ஒத்துழைத்துச் செயல்பட சீனா தயாராகவே இருக்கிறது. சீனா, சர்வ தேசக் கடமைகளைத் தன் நாட்டின் பலத்துடன் முன்னெடுத்துச்செல்லும். உலகோடு ஒட்ட ஒழுகிட திறந்த மனதுடன் நாங்கள் தயாராகவே இருக்கிறோம். அதேபோன்று உலகமும் எங்களை அமைதியான முறையில் திறந்த மனதுடன் அணுகிடும் என்று நம்புகிறோம். சீனாவும் இந்தியாவும் வடிவத்திலும் மக்கள் தொகையிலும் மாபெரும் நாடுகளாகும். இரண்டு நாடுகளிலும் சேர்ந்து, மக்கள்தொகை 2.5 பில்லியனை (250 கோடியை)த் தாண்டிவிட்டது. இது உலக மக்கள் தொகையில் சுமார் 40 விழுக்காடாகும். உலகில் மிகவும் முக்கியமான சந்தைகளாக நம் இரு நாடுகளும் கருதப்படுகின்றன. ஆயினும், சென்ற ஆண்டில் நம் இரு நாடுகளின் வர்த்தகம் 70 பில்லியன் அமெரிக்க டாலர்களுக்கும் குறைவேயாகும். நம் நாட்டின் வலிமை மற்றும் அந்தஸ்துடன் ஒப்பிட் டோமானால் இது போதுமானதல்ல.
ஆயினும் நாம் நம் வர்த்தகத்தைiயும்
வணிக ஒத்துழைப்புகளையும் மிகப் பெரிய அளவில் விரிவாக்கிட, மேம்படுத்திட
மிகப் பெரிய அளவில் வாய்ப்பு வசதிகள் இருக்கின்றன. இருதரப்பிலும்
செயல்பட்டு தீர்த்துக் கொள்ள வேண்டிய முக்கியமான பிரச்சனைகளில் இதுவும்
ஒன்று. உலகப் பொருளாதாரத்தை உந்தித்தள் ளும் உந்துசக்தியாக (என்ஜினாக) ஆசியாவை உலகம் பார்க்கிறது. சீனா மற்றும் இந்தியா ஆகிய இரு வல்லமை நாடுகளின்
பங்கேற்பில்லாமல் இது சாத்தியமாகாது. ஆசியா, உலக அமைதியின் நங்கூரமாக மாற
வேண்டுமானால், நம் இரு நாடுகளும் கைகோர்த்துச் செயல்பட வேண்டியது
அவசியமாகும்.உலகிலேயே மிகவும் அதிக மக்கள் தொகை நாடுகளான சீனாவும் இந்தியாவும் நல்லிணக்கத்துடன் வாழவும், பொதுவான வளர்ச்சியை எய்திடவும் தவறுமேயானால், மக்கள் ஆவலுடன் எதிர்பார்க்கும் ஆசிய நூற்றாண்டு வந்திடாது. ஆசியாவின் எதிர்காலம் சீனாவும் இந்தியாவும் ஒற்றுமையுடனிருப்பதையே சார்ந்திருக்கிறது. சீனாவும் இந்தியாவும் ஒன்றிணைந்து நல்லிணக்கத்துடனும் வளமாகவும் வாழுமேயானால், நம் இரு நாட்டின் சந்தைகளும் ஒரேபுள்ளியில்
குவியுமேயானால், அது ஆசியாவுக்கும் உலகிற்கும் பெரிய அளவில் உண்மையான
முறையில் நலம் பயக்கும், சீனாவின் வளர்ச்சி இந்தியாவுக்கான வாய்ப்புகளுக்கு உறுதியளிக்கிறது. அதேபோன்று இந்தியாவின் வளர்ச்சியும் சீனாவுக்கான
வாய்ப்புகளுக்கு உறுதி அளிக்கிறது. நம் பொதுவான வளர்ச்சி நம் இருநாட்டு
மக்களுக்கும் பயனளித்திடும், உலகிற்கும் அதிகமான அளவில் சிறந்த வாய்ப்புகளை அளித்திடும்.
நன்றி : தி இந்து நாளேட்டில், 2013 மே 20 அன்று வெளியான கட்டுரை
தமிழில்: ச.வீரமணி
நன்றி :
நன்றி : தி இந்து நாளேட்டில், 2013 மே 20 அன்று வெளியான கட்டுரை
தமிழில்: ச.வீரமணி
நன்றி :
லேபிள்கள்:
சீன பிரதமர் லீ கேகியாங்,
சீனாவும் இந்தியாவும்
செவ்வாய், 21 மே, 2013
உலக நாடுகளை காப்பாற்ற இந்தியாவும் சீனாவும் கைகோர்ப்போம்...!
லேபிள்கள்:
இந்திய - சீன நல்லுறவு,
சீன பிரதமர் லீ கேகியாங்
வெள்ளி, 17 மே, 2013
இந்திய ஜனநாயக வாலிபர் சங்க போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி...!
இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் - DYFI - யை வாழ்த்துவோம்....!
புதுச்சேரி செஞ்சி
சாலை மைதானத்திற்கு எதிரில் திறந்தவெளி மீன், பழம் மற்றும் காய்கறி
மார்க்கெட் பல ஆண்டுகளாக இயங்கி வந்தது. இத்தனைக் காலமாக சம்பந்தப்பட்ட
அந்த வியாபாரிகள் மழையிலும், வெயிலிலும் கஷ்டப்பட்டு வியாபாரம்
செய்துவந்தனர். எனவே தங்களுக்கு கூரைப் போட்ட மார்க்கெட் வளாகம் ஒன்று தேவை
என்று பலமுறை கோரிக்கை வைத்து போராடிவந்ததன் விளைவாக அரசு 6 மாதத்திற்கு
முன்பு தான் சில கோடிகளை செலவு செய்து நவீன மார்க்கெட் வளாகம் ஒன்றை
புதுச்சேரி நகராட்சி கட்டி முடித்தது.
அந்த வளாகம் கட்டி முடிக்கப்பட்டு 6 மாதத்திற்கு
மேலாகியும் மக்களின் பயன்பாட்டிற்கு திறக்கப்படாமல் மூடப்பட்டே கிடந்தது.
அடிக்கின்ற வெயிலில் மீன், காய்கறி மற்றும் பழ வியாபாரிகள் வெந்து
அவதிப்பட்டனர். இதைக் கண்ட புதுச்சேரி இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்
தோழர்கள் அந்த வியாபாரிகள் மத்தியில் ''கையெழுத்து இயக்கம்'' ஒன்றை நடத்தி,
புதுச்சேரி நகராட்சி ஆணையரை சந்தித்தனர். ஆனால் எந்த நடவடிக்கையும்
இல்லை.
பிறகு வாலிபர் சங்கத் தோழர்கள் ''தெருமுனைப்
பிரச்சாரம்'' ஒன்றை நடத்தினார்கள். அதற்கும் எந்தவிதமான சலனமும் சலசலப்பும்
இல்லை. நகராட்சி ஆணையரை அணுகியபோது திறப்புவிழா நடத்துவதற்கு நிதி இல்லை
என்று கைவிரித்திருக்கிறார். யானை வாங்க முடிந்தது. ஆனால் அதற்கு அங்குசம் வாங்க முடியவில்லையாம்.
அதனால் சென்ற மே 5 - ஆம் தேதியன்று வாலிபர் சங்கத் தோழர்கள் 17 பேர் அந்த
புதிய கட்டிடத்தை சுற்றி ''பிச்சை எடுக்கும் போராட்டம்'' நடத்தினார்கள்.
அந்த பகுதியில் வியாபாரம் செய்யும் வியாபாரிகளிடம் திறப்புவிழா செலவுக்காக
பிச்சை எடுத்தார்கள். இதைக்கண்ட ''சட்டம் - ஒழுங்கை காப்பாற்றத்
துடிக்கும்'' புதுச்சேரி போலீஸ் போராட்டம் நடத்திய அந்த 17 தோழர்களையும்
கைது செய்தனர். பிச்சை எடுத்த பணமான ரூ 170-ஐ புதுச்சேரி நகராட்சிக்கு DD -
ஆக அனுப்பி வைத்தனர்.
இந்த தொடர் போராட்டங்களின் விளைவாக சென்ற மே 15 - ஆம் தேதி ஒரு வழியாக புதுச்சேரி அரசு அந்த வளாகத்திற்கு திறப்புவிழா நடத்தியது.
வியாபாரிகள் மற்றும் மக்களின் பயன்பாட்டுக்கு திறந்துவிட்டது. இது
புதுச்சேரி இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத் தோழர்களின் தொடர்
முயற்சிகளினாலும், தொடர்ச்சியாக தளராமல் நடத்திய போராட்டங்களும் தான் இந்த
வெற்றிக்கு காரணம். இதற்காக போராட்டங்களில் தொடர்ச்சியாக ஈடுபட்ட இந்திய
ஜனநாயக வாலிபர் சங்கத்தின் புதுச்சேரி பிரதேச செயலாளர் தோழர். சரவணன்
உள்ளிட்ட தோழர்களை நெஞ்சார பாராட்டுகிறோம்.
ஜெயலலிதாவின் இரண்டாண்டு சாதனை - இரண்டு விஷயங்களை நெஞ்சார பாராட்டலாம்...!
லேபிள்கள்:
அண்ணாமலை பல்கலைக்கழகம்,
அம்மா உணவகம்,
இரண்டாண்டு சாதனை,
ஜெயலலிதா
வியாழன், 16 மே, 2013
சூதாடிகள் விளையாடும் களம் கிரிக்கெட் மைதானம் - இளைஞர்கள் புறக்கணிக்க வேண்டும்...!
லேபிள்கள்:
ஐ.பி.எல்.,
கிரிக்கெட் சூதாட்டம்,
தடை,
புறக்கணிப்பு
இந்திய இளைஞர்களுடன் சீன நாட்டுப் பிரதமர் சந்திப்பு...!
உலகப் பொருளாதாரத்தை இயக்கும் என்ஜினாக மாறுவோம்
- சீனப் பிரதமர் லீ கேகியாங்
இந்தியாவும் சீனாவும் கட்டாயம் கைகுலுக்கிக் கொள்ளவேண்டும் என்றும், உலக பொருளாதாரத்தை இயக்குகிற என்ஜினாக ஆசியாவை உருவாக்குவதற்கு இரு நாடுகளின் உறவும் மிக முக்கியமானது என்றும் சீனப் பிரதமர் லீ கேகியாங் கூறினார்.
இந்தியாவும் சீனாவும் கட்டாயம் கைகுலுக்கிக் கொள்ளவேண்டும் என்றும், உலக பொருளாதாரத்தை இயக்குகிற என்ஜினாக ஆசியாவை உருவாக்குவதற்கு இரு நாடுகளின் உறவும் மிக முக்கியமானது என்றும் சீனப் பிரதமர் லீ கேகியாங் கூறினார்.
இந்தியாவிலிருந்து 100 இளைஞர்களைக் கொண்ட பிரதிநிதிகள் குழு
ஒன்று சீனப் பயணம் மேற்கொண்டுள்ளது. இக்குழுவிற்கு சீன அரசின் சார்பிலும்,
சீன கம்யூனிஸ்ட் கட்சி சார்பிலும் பெய்ஜிங்கில் உள்ள கட்சியின்
தலைமையகத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இந்நிகழ்வில் பிரதமர் லீ
கேகியாங் நேரடியாக கலந்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது. 27 ஆண்டுகளுக்கு முன்பு கட்சியின்
இளைஞர் அமைப்பின் தலைவராக இருந்தபோது இந்தியாவுக்கு இளம் பிரதிநிதியாக
தான் பயணம் மேற்கொண்டதை மகிழ்ச்சியுடன் அவர் நினைவு கூர்ந்தார். சீனப்
பிரதமராக பொறுப்பேற்றிருக்கும் லீ, எதிர்வரும் மே 19 - ஆம் தேதி முதல்முறையாக
இந்தியாவுக்கு பயணம் மேற்கொள்கிறார். இந்தப் பயணம், தனது இளமைக்கால
இந்தியப் பயணத்தை நினைவூட்டுவதாக அவர் குறிப்பிட்டார்.
“21ம் நூற்றாண்டு ஆசியா - பசிபிக் பிராந்தியத்திற்கு சொந்தமான நூற்றாண்டு, அதிலும் குறிப்பாக உலகப் பொருளாதாரம் மற்றும் அரசியலில் ஆசியாவுக்கு மிக முக்கியமான பங்கு இருக்கிற நூற்றாண்டு என்று உலகின் பல பகுதி மக்களும் நம்புகிறார்கள். உலகப் பொருளாதாரத்தை இயக்குகிற பொறியாக ஆசியா விளங்கும் என்பது உறுதி” என்று லீ கூறினார்.“இந்தக் கண்ணோட்டம் உண்மையாக வேண்டுமானால், இந்தியாவும், சீனாவும் கட்டாயம் கைகுலுக்கிக் கொள்ளவேண்டும். இருதரப்பு தொடர்புகள், பரிமாற்றங்கள் மேலும் வலுவடைய வேண்டும். நம் இரு நாடுகளும் ஆசியாவின் வலுவான சக்திகளாக எழுந்து நிற்கவேண்டும். உண்மையிலேயே ஆசியப் பொருளாதாரத்தை, இந்த உலகின் பொருளாதாரத்தையே இயக்குகிற முக்கிய இயக்கு சக்தியாக மாற்றவேண்டும்” என்றும் லீ கூறினார்.
“நம் இரு நாடுகளின் மாபெரும் சந்தைகளுக்கிடையே பொருத்தமான தொடர்பை ஏற்படுத்துவது மிகப் பிரம்மாண்டமான பொருளாதார வளர்ச்சியையும் வளத்தையும் ஏற்படுத்தும். இந்த இரு நாடுகளுமே உலகப் பொருளாதாரத்திற்கு ஊக்கமளிக்க முடியும். உலகின் எதிர்காலத்திற்கே ஆசிய மக்கள்தான் நம்பிக்கை அளிக்க முடியும். அதிலும் குறிப்பாக இரு நாடுகளின் இளையதலைமுறையினர்தான் அந்த நம்பிக்கையின் உந்துசக்தியாக இருக்க முடியும்” என்றும் அவர் கூறினார்.
“21ம் நூற்றாண்டு ஆசியா - பசிபிக் பிராந்தியத்திற்கு சொந்தமான நூற்றாண்டு, அதிலும் குறிப்பாக உலகப் பொருளாதாரம் மற்றும் அரசியலில் ஆசியாவுக்கு மிக முக்கியமான பங்கு இருக்கிற நூற்றாண்டு என்று உலகின் பல பகுதி மக்களும் நம்புகிறார்கள். உலகப் பொருளாதாரத்தை இயக்குகிற பொறியாக ஆசியா விளங்கும் என்பது உறுதி” என்று லீ கூறினார்.“இந்தக் கண்ணோட்டம் உண்மையாக வேண்டுமானால், இந்தியாவும், சீனாவும் கட்டாயம் கைகுலுக்கிக் கொள்ளவேண்டும். இருதரப்பு தொடர்புகள், பரிமாற்றங்கள் மேலும் வலுவடைய வேண்டும். நம் இரு நாடுகளும் ஆசியாவின் வலுவான சக்திகளாக எழுந்து நிற்கவேண்டும். உண்மையிலேயே ஆசியப் பொருளாதாரத்தை, இந்த உலகின் பொருளாதாரத்தையே இயக்குகிற முக்கிய இயக்கு சக்தியாக மாற்றவேண்டும்” என்றும் லீ கூறினார்.
“நம் இரு நாடுகளின் மாபெரும் சந்தைகளுக்கிடையே பொருத்தமான தொடர்பை ஏற்படுத்துவது மிகப் பிரம்மாண்டமான பொருளாதார வளர்ச்சியையும் வளத்தையும் ஏற்படுத்தும். இந்த இரு நாடுகளுமே உலகப் பொருளாதாரத்திற்கு ஊக்கமளிக்க முடியும். உலகின் எதிர்காலத்திற்கே ஆசிய மக்கள்தான் நம்பிக்கை அளிக்க முடியும். அதிலும் குறிப்பாக இரு நாடுகளின் இளையதலைமுறையினர்தான் அந்த நம்பிக்கையின் உந்துசக்தியாக இருக்க முடியும்” என்றும் அவர் கூறினார்.
லேபிள்கள்:
இந்திய இளைஞர்கள்,
சீன நாட்டுப் பிரதமர்
மக்களையே சந்திக்காமல் தேர்ந்தெடுக்கப்படும் ஒரு பிரதமர் - ஜனநாயகத்தில் இப்படியும் ஒரு கோளாறு....!
பிரதமர் என்பவர் மக்களவைத்தேர்தலில் போட்டியிட்டு மக்களை
சந்தித்து வாக்குகளை பெற்று மக்கள் பிரதிநிதியாக தேர்ந்தெடுக்கப்பட்டால்
தான் அவருக்கு மக்களை பற்றிய சிந்தனையும், மக்களைப் பற்றிய அக்கறையும்,
இன்னும் சொல்லப்போனால் நாளை அடுத்தத் தேர்தலில் மக்களை சந்திக்க வேண்டுமே
என்ற மக்களைப் பற்றிய அச்சமும் இருக்கும். பிரதமரை மக்களால்
தேர்ந்தெடுக்கப்படும் முறைதான் உண்மையான ஜனநாயகம் ஆகும். அப்போது தான் பிரதமரின் திட்டங்களும், செயல்பாடுகளும் மக்களைச் சார்ந்ததாக இருக்கும்.
ஆனால் நம் நாட்டு பிரதமரோ, மக்களை சந்திக்காமல் - மக்களின் தயவு
இல்லாமல் - மக்களின் ஓட்டுக்களை பெறாமல், சட்டமன்ற உறுப்பினர்களால் -
அதுவும் அவருக்கு சம்பந்தமில்லாத மாநில சட்டமன்ற உறுப்பினர்களால்
மாநிலங்களவை உறுப்பினராக தேர்ந்தேடுக்கப்பட்டு, ''நேர் வழியில்'' வராமல்,
''பின்பக்க வழியில்'' வந்து பிரதமாராக பொறுப்பேற்று கொள்வதால், மக்களைப்
பற்றிய உண்மையான சிந்தனையோ, அக்கறையோ அவருக்கு கிடையாது என்பது அவரது
நடவடிக்கைகளிலிருந்தும், செயல்பாடுகளிலிருந்தும், அரசை நடத்தும்
விதங்களிலிருந்தும் நம்மால் புரிந்துகொள்ள முடியும். இது தான் நம்
ஜனநாயகத்தில் உள்ள கோளாறு.
யார் இந்த நாட்டின் பிரதமராக
வரவேண்டும் என்பதை மக்கள் தான் தீர்மானிக்க வேண்டுமே தவிர அவரை
முன்மொழியும் அமெரிக்க ஏகாதிபத்தியமோ, இந்திய-வெளிநாட்டு பெருமுதலாளிகளோ
அல்லது அவரை வழிமொழியும் சட்டமன்ற உறுப்பினர்களோ அல்ல என்பதை இந்திய மக்கள்
புரிந்து கொள்ளும் காலம் வரும்.
லேபிள்கள்:
அஸ்ஸாம்,
மன்மோகன் சிங்,
ராஜ்யசபா தேர்தல்,
ஜனநாயகத்தில் கோளாறு
புதன், 15 மே, 2013
தமிழ் மொழிக்கு சமாதி கட்டிவிட்டு தமிழன்னைக்கு சிலையா...?
தமிழக சட்டமன்றத்தில் தினம் ஒரு அறிவிப்பை
வெளியிடும் தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா நேற்று ஒரு அறிவிப்பை வெளியிட்டார்.
அதைக் கேட்டதும் அதிர்ச்சியாகவும், கோபமாகவும் இருந்தது. அந்த அறிவிப்பு
என்னான்னா....? மதுரையில் அமெரிக்காவில் இருக்கும் சுதந்திர தேவியின் சிலை
போல் ரூ.100 கோடி செலவில் தமிழன்னைக்கு வானுயர்ந்த சிலை ஒன்று
வைக்கப்போவதாக அறிவித்திருந்தார். அறிவிக்கும் போதே சொல்லப்படுகிற
இந்த செலவு என்பது சிலை செய்யும் வேலையை ஆரம்பிக்கும் போது இரண்டு மடங்காக
ஆகிவிடும். சிலை வேலை முடித்து திறந்து வைக்கும் போது அதன் செலவு என்பது
நான்கு மடங்காக ஆகிவிடும். இது தான் உண்மை. இப்படி பல கோடிகளை செலவு
செய்து எனக்கு சிலை வையுங்கன்னு தமிழன்னை இந்த தமிழகத்து ''அன்னையின்''
கனவுல வந்து சொன்னாங்களா என்ன...? சிலை வைப்பதை பார்த்து நிச்சயமாக
தமிழன்னை மகிழ்ச்சி அடையமாட்டாள். இந்த நிதியை கொண்டு முதலில் தமிழை வாழ
வையுங்கள் என்று ஓங்கி ஒரு குட்டு குட்டியிருப்பாள்.
அன்றே நம் பாட்டன் பாரதி சொன்ன ''தமிழ் இனி
மெல்லச்சாகும்'' என்ற தீர்க்கதரிசன வரிகள் தான் என் நினைவுக்கு வருகிறது.
ஆனால் தமிழ் தானாக சாகவில்லை. தமிழகத்தை மாறி மாறி ஆட்சி
செய்துகொண்டிருக்கும் திராவிட முன்னேற்றக்கழகமும், அண்ணா திராவிட
முன்னேற்றக்கழகமும் சேர்ந்து தான் தமிழ் மொழியையே சாகடித்து குழித்தோண்டி புதைத்து சமாதி கட்டிய ''பெருமைக்குரியவர்கள்''
முதலில் இந்தி எதிர்ப்பு கோஷத்தை வைத்து ஆட்சிக்கு வந்த
திராவிடமுன்னேற்றக் கழகம், இந்தியை தமிழகத்தின் உள்ளே அனுமதிக்க முடியாது
என்று சொல்லி தமிழகத்தில் ஆங்கிலவழி கல்வி முறையை அனுமதித்து தமிழை
துரத்தியடித்தது. அதேப்போல் அதிமுக - வும் அதற்கு சளைத்தது அல்ல. தமிழ்வழி
கல்வி மூலம் அறிவு வளர்ச்சியோ சுய வளர்ச்சியோ இருக்காது என்று சொல்லி
அவர்கள் பங்குக்கு நிறைய அரசு பள்ளிகளை ஆங்கிலவழி கல்வி முறைக்கு மாற்றி
வருகிறது. மொத்தத்தில் இவ்விரு கட்சிகளும் தமிழ் மொழியை கொன்று குழி தோண்டி
புதைத்துவிட்டன என்பது தான் உண்மை.
இதையும் மீறி தமிழன்னைக்கு சிலை வைத்தால், அது தமிழூக்கு பெருமை
சேர்க்காது. மாறாக அது திராவிட கட்சிகளினால் சமாதியாக்கப்பட்ட தமிழுக்கு
''நினைவுச் சின்னமாக'' தான் அமையும்.
லேபிள்கள்:
சிலை,
தமிழ் மொழி,
தமிழன்னை
திங்கள், 13 மே, 2013
பாகிஸ்தான் புதிய பிரதமரின் வரவேற்கத்தக்க மாற்றம்....!
சென்ற
சனிக்கிழமையன்று நம் அண்டை நாடான பாகிஸ்தானில் பொதுத்தேர்தல் நடத்தப்பட்டு
அடுத்த நாளே ஓட்டுக்கள் எண்ணப்பட்டு தேர்தல் முடிவுகளும்
அறிவிக்கப்பட்டதில் பாகிஸ்தான் முஸ்லீம் லீக் கட்சி அதிக இடங்களில்
வெற்றிப்பெற்று தனிப்பெரும் கட்சியாக ஆட்சிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.
அக்கட்சியின் தலைவரான முன்னாள் பிரதமர் நவாஸ் ஷரிப் மூன்றாவது முறையாக
பாகிஸ்தானின் பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டதை தொடர்ந்து நம் நாட்டின்
பிரதமர் மன்மோகன்சிங் பிரதமாராக பதவியேற்கவுள்ள நவாஸ் ஷரிப்க்கு
வாழ்த்துக்களை தெரிவித்திருந்தார்.
இதனை அடுத்து தனது
பதவியேற்பு நிகழ்ச்ச்சியில் பங்கேற்கும்படி மன்மோகன்சிங்கிற்கு நவாஸ் ஷரிப்
அழைப்பு விடுத்திருக்கிறார். அதுமட்டுமல்லாமல், மன்மோகன்சிங் பங்கேற்றால்
தான் மிகவும் மகிழ்ச்சியடைவேன் என்று நவாஸ் ஷரிப் கூறியிருப்பது என்பது
வரவேற்கத்தக்க மாற்றமாகும்.
இப்படியாக இரு நாட்டு
தலைவர்களும் பரஸ்பரம் நட்புப் பாராட்டியிருப்பது பாராட்டத்தக்க -
வரவேற்கத்தக்க நிகழ்வுகளாகும். இந்த நட்பு எந்தவிதமான பாதகமில்லாமலும்,
விரிசல்களில்லாமலும் மேலும் மேலும் வளரவேண்டும் - உயர வேண்டும்.
லேபிள்கள்:
நவாஸ் ஷரிப்,
பாகிஸ்தான்,
மன்மோகன்சிங்
சனி, 11 மே, 2013
இலங்கை - ஆழமான அரசியல் பிரச்சனைக்கு அதீத முழக்கங்கள் மட்டும் தீர்வாகாது....!
இலங்கை
தமிழர்கள் பிரச்சனையில் திடீர் அக்கறை காட்டுபவர்களும், அக்கறையே
காட்டாமல் ஒதுங்கி நிற்பவர்களும், உலகில் எந்த மூலையில் எது நடந்தாலும்
நமக்கென்னன்னு தானுண்டு தன் குடும்பமுண்டு என்றிருப்பவர்களும் கண்டிப்பாக இந்த பேட்டியை படிக்கவேண்டும்.
இலங்கை தமிழர் பிரச்சனை 60 ஆண்டுகளாக தொடர்கிறது. அங்கு ஆட்சிக்கு
வந்த எந்த அரசாங்கத்தாலும் பிரச்னைக்கு தீர்வுகாண முடியவில்லை. 30
ஆண்டுகளாக நடைபெற்ற உள்நாட்டுப் போரிலும் பல ஆயிரம் பேர் மடிந்துள்ளனர்.
இலங்கைத் தமிழ் மக்களின் வாழ்வுரிமை பாதுகாக்கப்பட வேண்டும் என்ற அக்கறை
எல்லா தரப்பிலும் உள்ளது. இந்த ஆழமான அரசியல் பிரச்சனைக்கு ''அதீத
முழக்கங்கள்'' மட்டும் தீர்வாகாது என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்
கட்சியின் தமிழ் மாநிலச்செயலாளர் தோழர். ஜி. ராமகிருஷ்ணன் கூறியுள்ளார்.
''செம்மலர்'' - மே மாத இதழுக்கு அவர் அளித்த விரிவான பேட்டியின் ஒரு பகுதி கீழே தரப்பட்டுள்ளது.
**********************************************
கேள்வி:
தனி ஈழம் தீர்வாகாது என்று 80-களில் மார்க்சிஸ்ட் கட்சி கூறியது சரியாக இருக்கலாம். ஆனால் இன்றும் அதையே கூறுவது சரியல்ல என்று ஒரு வார இதழில் கேள்வி-பதில் பகுதியில் குறிப்பிட்டுள்ளார்கள். ஒன்றுபட்ட இலங்கைக்குள் நல்லது ஒன்றுமே நடக்காத போது தனி ஈழம்தான் தீர்வு என்று கோருவது எப்படித் தவறாகும்? எல்லோரும் ஒரு வழியில் போனால் மார்க்சிஸ்ட் கட்சி மட்டும் இப்பிரச்சனையில் ஏன் தனி வழியில் போகிறது? என்றெல்லாம் விமர்சனங்கள் வருகின்றன அல்லவா?
ஜி.ஆர்:
எங்கள் மீது வைக்கப்படும் விமர்சனங்கள், அள்ளி வீசப்படும் அவதூறுகள் என எல்லாவற்றையும் நாங்கள் அறிந்துதான் இருக்கிறோம். விமர்சனங்களைப் பரிசீலிப்பதும் அவதூறுகளைப் புறந்தள்ளுவதும் தான் சரியான அணுகுமுறை. தனி வழியில் போகும் ஆசையில் எழுந்ததல்ல மார்க்சிஸ்ட் கட்சியின் நிலைப்பாடு. விருப்பு வெறுப்புகளுக்கும் முன் முடிவுகளுக்கும் அப்பாற்பட்டு புறநிலை யதார்த்தங்களின் அடிப்படையில் வரலாற்றுப் பின்னணியில் தான் மார்க்சிஸ்ட்டுகள் முடிவு எடுக்கிறார்கள். தவிர, உங்கள் கேள்வியில் குறிப்பிடுவது போல, தனி ஈழம் என்னும் கோரிக்கையின் பின்னால் எல்லோரும் இருப்பதாகச் சொல்வதும் சரியல்ல.. அதை விளக்கமாகப் பார்க்க வேண்டும். இலங்கையில் வாழும் தமிழ் மக்களுக்கு நல்லது நடக்க வேண்டும் என்பதுதான் நம் முடைய அடிப்படையான நோக்கம். தனி நாடு கேட்டால் நல்லதை விடத் தீங்குதான் தமிழர்களுக்கு வந்து சேரும் என்பதுதான் தொடர்ந்து எமது புரிதலாகவும் நிலைபாடாகவும் இருக்கிறது. தமிழகத்தில் இருப்பவர்களை விடுங்கள். இலங்கையில் வாழும் தமிழ் மக்கள் எல்லோருமே தனி ஈழம் கேட்கவில்லை என்பதை இந்த நேரத்திலாவது - இவ்வளவு அழிவுக்குப் பிறகாவது - நிதானத்துடன் நாம் பார்க்க வேண்டும். நடைமுறையில் சாத்தியமில்லாத முழக்கம் அது. இலங்கை அரசின் மீது ஒரு அரசியல் நெருக்கடியும் அழுத்தமும் உருவாக்குவதற்கான உத்தியாகவே (PRESSURE TACTICS) தனி நாடு கோரிக்கையை ஆரம்பத்தில் முன்வைத்தார்கள். அதன் மூலம் தமிழ் மக்களுக்கான சம உரிமையுடன் கூடிய அரசியல் தீர்வைப் பெற முடியும் என்றுதான் அவர்கள் நம்பினார்கள்.
தமிழ் மக்கள் மூன்று பிரிவாக இலங்கையில் இருக்கிறார்கள். யாழ்ப்பாணம் உள்ளிட்ட வடக்குப் பகுதியிலும் கிழக்கு மாகாணத்திலும் வாழும் பூர்வீகத்தமிழர்கள் என்று அழைக்கப்படுபவர்கள் ஒரு பிரிவு. மலையகத்தமிழர் என்றழைக்கப்படும் தோட்டத் தொழிலாளிகளான இரண்டாவது பிரிவினர். தமிழ் முஸ்லிம்கள் மூன்றாம் பிரிவினர். மலையகத்தமிழர்களும் தமிழ் முஸ்லிம்களும் தனி ஈழம் கேட்கவில்லை. தென்னிலங்கையில் கொழும்பிலும் அதைச் சுற்றிய பகுதிகளிலும் 2 லட்சம் தமிழர்கள் வாழ்கிறார்கள். அவர்களும் தனி நாடு கேட்கவில்லை. கொழும்பின் முன்னணி வியாபார வர்க்கத்தின் பகுதியாக தமிழர்கள் கணிசமாக அங்கே வாழ்கிறார்கள். 1947-ல் பாகிஸ்தான் தனி நாடாக பிரிந்தபோது நிகழ்ந்ததைப்போல லட்சக்கணக்கான மக்களின் இடப்பெயர்வையும், துயரத்தையும் தனிநாடு கோரிக்கை தமிழர்களுக்குக் கொண்டுவரும். தமிழ் முஸ்லிம்கள் நீண்ட நெடுங்காலமாக சிங்களர் பெரும்பான்மையாக உள்ள கட்சிகள், அமைப்புகளோடுதான் நெருக்கமாக இருந்து வருகின்றனர். புலிகளோடு நீண்டகாலப் பகைச் சூழல்தான் அவர்களுக்கு இருந்துள்ளது. சமீபத்தில் சென்னையில் எங்களைச் சந்தித்த இலங்கை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் ஒருவர் கூறியதை இங்கே எடுத்துரைக்க வேண்டும். சமீபத்தில் நடந்து முடிந்த கிழக்கு மாகாணத் தேர்தலில் தமிழர்களுக்கு பெரும்பான்மை கிட்டவில்லை. தமிழ் முஸ்லிம்களிடம் நாம் கூட்டணி அமைக்கலாம். முதல்வர் பதவியை நீங்களே எடுத்துக்கொள்ளுங்கள் என்று ஒரு திட்டத்தை முன்வைத்தோம். ஆனால் அவர்கள் அதை ஏற்கவில்லை. சிங்களர்களுடன்தான் கூட்டு வைத்து அமைச்சரவை அமைத்துள்ளனர் என்று கூறினார். புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்த பகுதியிலிருந்து 48 மணி நேரத்தில் பல்லாயிரக்கணக்கான முஸ்லிம் மக்கள் வெளியேற வேண்டும் என புலிகள் உத்தரவிட்டு விரட்டியடித்த கொடுமை முஸ்லிம் மக்கள் மனங்களில் ஆறாவடுவாக இன்றும் உள்ளது. இலங்கையின் ஆளும் அரசு தமிழர்களுக்கு தீமையைத் தவிர வேறு ஏதும் செய்ய வில்லையே என்கிற வெறுப்பிலிருந்து அந்தக் கடைசிக்குச் சென்று தனி ஈழம்தான் தீர்வு என்று கோருவது நடைமுறையில் அவர்களுக்கு நன்மை பயக்காது. கால தாமதம் ஏற்பட்டாலும் சர்வதேச மற்றும் இந் திய அளவில் நிர்ப்பந்தங்களை ஏற்படுத்தியும் இலங்கையின் உள்நாட்டிலுள்ள ஜன நாயக சக்திகளின் முன்னெடுப்பிலும் ஓர் நிரந்தர அரசியல் தீர்வைக் காண வேண்டும். இன்றைய உடனடித் தேவைகளுக்கான முழக்கங்களை எழுப்புவதே சரியாக இருக்கும். தமிழர் வாழும் பகுதியிலிருந்து ராணுவத்தை விலக்குதல், தமிழ்ப்பகுதிகளைச் சிங்களமயமாக்கும் முயற்சிகளை நிறுத்துதல், போரினால் சொல்லவொண்ணாத் துயருக்கு ஆளாகியிருக்கும் தமிழ் மக்களுக்கு சமாதானமும் அவர்களின் மனக்காயங்களுக்கு ஆறுதலும் தரும் விதமான அணுகு முறையும் மீள் குடியமர்வுக்குத் தேவையான சகல ஏற்பாடுகளும் உடனடியாகச் செய்யப்பட வேண்டும். புலிகள் என்கிற சந்தேகத்தின் பேரில் பிடித்துச்செல்லப்பட்ட அல்லது காணாமல் போன பத்தாயிரத்துக்கும் மேற் பட்ட இளைஞர்கள், யுவதிகள் வீடு திரும்ப வேண்டும். ஓர் அர்த்தமுள்ள பேச்சுவார்த்தையைத் துவக்கி தமிழர்களுக்கு சம அந்தஸ்தும் சம உரிமையும் கூடிய மாநில சுயாட்சியுடன் காவல்துறை மற்றும் இதர நிர்வாக உரிமைகளுடன் கூடிய தமிழ் மாநிலம் அமைக்கப்பட வேண்டும். இது போல அம்மக்கள் என்ன தேவையில் இப்போது இருக்கிறார்களோ அதற்கான முழக்கங்களை எழுப்ப வேண்டும். அதுதான் அவர்களுக்கு உதவியாக இருக்கும்.
சின்னச்சின்ன இரண்டு நாடுகளாக (ஏற்கனவே அது சின்ன நாடுதான்) இலங்கை பிரிவது என்பது ஏகாதிபத்தியம் நுழைவதற்கான பாதையை அகலத்திறப்பதாகும். அது இலங்கைக்கும் இந்தியாவுக்கும் மட்டுமல்ல. இந்தப் பிராந்தியத்துக்கே ஆபத்து.
கேள்வி:
இலங்கையை நட்பு நாடென்று மதிப்பதை மத்திய அரசு கைவிட வேண்டும் என்னும் கோரிக்கை பற்றி..
ஜி.ஆர் :
நட்பு நாடு இல்லை என்று முடிவு செய்தால் தூதரகங்களை மூட வேண்டும்.பேச்சுவார்த்தைக்கு இருக்கும் கொஞ்ச நஞ்ச வாய்ப்பும் இல்லாமல் போய் விடும். அங்கே தமிழ் மக்களுக்கு என்ன நடந்தாலும் நமக்கு தகவல் கிடைப்பதில் துவங்கி தலையிடுவதுவரை சிக்கலாகுமல்லவா?
கேள்வி :
பொருளாதாரத்தடை விதிப்பது இலங்கை அரசை நிர்ப்பந்திக்க உதவுமல்லவா?
ஜி.ஆர் :
நாம் பொருளாதாரத் தடை என்றால் இலங்கை மேலும் மேலும் சீனா, அமெரிக்கா உள்ளிட்ட பிற நாடுகளைச் சார்ந்து நிற்கும் நிலைக்குத் தள்ளப்படும். பொருளாதாரத்தடை பெரிதும் ஏழை எளிய மக்களைத்தான் பாதிக்கும். இராக்கிலும், கியூபாவிலும் நமக்குக் கிடைத்திருக்கும் அனுபவம் அதுதானே. தவிரவும் இலங்கையிலிருந்து நமக்கு இறக்குமதியை விட ஏற்றுமதிதான் அதிகம். அதிலும் குறிப்பாக தமிழகத்திலிருந்துதான் ஏற்றுமதி அதிகம். (நான் கொழும்பில் உள்ள ஒரு துணிக்கடைக் குச் சென்ற போது அந்த வியாபாரி சொன்னது ‘நாங்க சென்னை பாண்டி பஜாரிலிருந்து தான் இந்தத் துணிகளையெல்லாம் வாங்கி வருகிறோம். வேணுமானா வாங்கிக்கிங்க..) இலங்கையில் மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனங்களும் தனியார் நிறுவனங்களும் கணிசமாகப் பொருள் முதலீடு செய்துள்ளன என்பதையும் சேர்த்துப் பார்க்க வேண்டும். இலங்கை அரசை நிர்ப்பந்திக்க அரசியல் ரீதியான உபாயங்களைக் கையாள வேண்டும்.
கேள்வி :
போர்க்குற்றங்கள் தொடர்பாக சர்வதேச விசாரணை வேண்டும் என் பதை மார்க்சிஸ்ட் கட்சி ஏன் ஏற்கவில்லை. உள்ளக விசாரணை என்ற பேரில் கொலை யாளியையே நீதிபதியாக்குவது எந்த வகையில் நியாயமாகும்?
ஜி.ஆர் :
சர்வதேச விசாரணை என்ற பேரில் அமெரிக்க ஏகாதிபத்தியம் உள்ளே நுழைந்துவிடக்கூடாது என்பதுதான் நமது கவலை. அதன் பொருள் விசாரணையை ராஜ பக்ஷேயின் கையில் ஒப்படைத்துவிட வேண்டும் என்பதல்ல. ஐ.நா. மனித உரிமைக் கவுன்சிலுடன் கலந்து பேசி (அப்படி ஒரு குறிப்பு இப்போது நிறைவேற்றப்பட்டுள்ள தீர்மானத்திலும் இருக்கிறது) சுயேச்சையான, சர்வதேச நம்பகத்தன்மை கொண்ட இலங் கைக்கு வெளியில் உள்ள சர்வதேச மதிப்புடைய நீதிமான்களையும் கொண்ட குழு அமைக்கப்பட வேண்டும். இலங்கையிலுள்ள தமிழர்களிலிருந்தும் கூட அத்தகைய மதிப்புமிக்க நீதிமான்கள் விசாரணைக் குழுவில் சேர்க்கப்பட வேண்டும். இத்தகைய சுயேச்சையான விசாரணையை ஏற்றிட இலங்கை அரசை நிர்ப்பந்திக்க வேண்டும். விசாரணைக்குழு முற்றிலும் வெளியிலிருந்து என்று தீர்மானம் வந்தால் இப்போது ஐ.நா.மனித உரிமைக் கவுன்சிலில் இத்தீர்மானத்தை ஆதரித்த நாடுகளும் கூட ஆதரித்திருக்காது என்பது தான் அமெரிக்கப் பிரதிநிதி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரனிடம் கூறிய பதில் (அவரே இதை எம்மிடம் கூறினார்). அவரவர் நாட்டுப் பிரச்சனைகளோடு பொருத்தித்தான் அவர்கள் இதைப் பார்ப்பார்கள். இத்தகைய சர்வதேச அரசியல் சூழலையும் நாம் புரிந்துகொள்ள வேண்டும். அமெரிக்கா சென்ற ஆண்டும் இந்த ஆண்டும் இலங்கைக்கு எதிரான ஒரு தீர்மானத்தை முன்மொழிந்தது தமிழர்கள் பால் அவர்கள் கொண்ட அக்கறையால் அல்ல. உலகத்திலேயே மனித உரிமை மீறலில் இலங்கை உள்ளிட்ட வேறு எந்த நாட்டையும் விட அமெரிக்காவே முதலிடத்தில் உள்ளது என்பதை லேசில் மறந்துவிட முடியாது. இலங்கையை தன் நலன்களுக்கு ஏற்ப அடிபணியச்செய்ய அமெரிக்கா இதன் மூலம் முயல்கிறது. திரிகோணமலையில் அமெரிக்க ராணுவ மையம் மற்றும் வர்த்தகத் தேவைகள் என அமெரிக்காவின் நிகழ்ச்சி நிரலில் வேறு பலவும் நிச்சயமாக இருக்கிறது.
கேள்வி:
நடந்து முடிந்துள்ளது இனப் படுகொலை என்று அறிவிக்க வேண்டும் என திமுக,அதிமுக உள்ளிட்ட பல கட்சிகள் கேட்கின்றன.மார்க்சிஸ்ட் கட்சி அப்படி கோரவில்லை அல்லவா?
ஜி.ஆர் :
முள்ளிவாய்க்காலில் 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தமிழ் மக்கள் ஒரே நேரத்தில் கொல்லப்பட்டதால் அது இனப்படுகொலைதான் என்கிற உணர்வு ஏற்பட்டுள்ளது. அது எல்லோருடைய மனங்களையும் உறைய வைத்துள்ள கொடுமை. ஆனால் சர்வதேச அளவில் என்ன புரிதல் இருக்கிறதெனில் ஆயுதமற்ற மக்களின் மீது ஆயுதத் தாக்குதல் தொடுத்து அழிப்பது இனப்படுகொலை என்கிறார்கள். இங்கே ஆயுதபாணிகளான இலங்கை ராணுவத்துக்கும் விடுதலைப்புலிகளுக்கும் நடந்த போரில் அப்பாவித்தமிழர்கள் இரு தரப்பாலும் கொல்லப்பட்டுள்ளனர் என்றே ஐ.நா. பொதுச் செயலாளர் நியமித்த மூவர் குழு குறிப்பிடுகிறது. ஆகவே மனித உரிமை மீறல்களும் போர்க்குற்றங்களும் கடுமையான அளவுக்கு நடந்துள்ள போர் என்று கணிக்கிறார்கள். இனப்படுகொலை என்று குறிக்கவில்லை. இலங்கையின் பிற பகுதிகளில் வாழும் தமிழர்கள் தாக்கப்படவில்லை என்பதையும் சுட்டிக் காட்டுகிறார்கள். உரிய, நம்பகமான விசாரணையும் போர்க் குற்றவாளிகள் தண்டிக்கப்படுவதும் தேவை என்றுதான் மார்க்சிஸ்ட் கட்சி கோருகிறது.
கேள்வி:
கியூபா, சீனா உள்ளிட்ட கம்யூனிஸ்ட் நாடுகள் இலங்கை அரசை ஆதரிக்கும் நிலை சரியா?
ஜி.ஆர் :
சோசலிச நாடுகள் எடுக்கும் நிலைபாட்டை நாம் ஆதரிக்க வேண்டும் என்றோ அங்கீகரிக்க வேண்டும் என்றோ நாம் கூறவில்லை. நாம் மாறுபடலாம். அவர்கள் ஒரு அரசு என்கிற முறையில் அரசுக்கு அரசு உறவு என்பதை சர்வதேச அரசியல் சூழலின் அடிப்படையில் பார்க்கிறார்கள். கம்யூனிஸ்ட் அகிலத்தைக் கலைக்கும் போது தோழர் ஸ்டாலின் கூறியதை நினைவில் கொள்ள வேண்டும். இறையாண்மைமிக்க ஒரு நாட்டின் அரசு என்ற வகையில் கம்யூனிஸ்ட் கட்சி ஆட்சியில் உள்ள ஒரு சோசலிச நாடு கம்யூனிஸ்ட்டுகளை ஒடுக்கும் ஓர் அரசுடன் கூட நட்பு பாராட்ட வேண்டிய சூழல் வரும். அதை அந்நாட்டில் உள்ள கம்யூனிஸ்ட் கட்சிகள் அந்த உறவை ஏற்க வேண்டும் என்கிற அவசியமில்லை என்றார். இலங்கை அரசை குற்றவாளிக்கூண்டில் நிறுத்த வேண்டும் என்பதே நமது நிலைபாடு.
கேள்வி : இலங்கைத்தமிழர் பிரச்சனைக் காக மார்க்சிஸ்ட் கட்சி ஒன்றுமே செய்ய வில்லை என்று ஒரு சாரார் கூறுகிறார்கள்..
ஜி.ஆர்: கிளிநொச்சியிலிருந்து விடுதலைப்புலிகள் பின் வாங்க நேர்ந்த சமயத்திலேயே 2009 பிப்ரவரியிலேயே மதுரையிலிருந்து தோழர் பிரகாஷ் காரத் வேண்டுகோள் விடுத்தார். “யுத்தத்தை நிறுத்த உடனடியாக இந்திய அரசும் ஐ.நா. சபையும் தலையிட வேண்டும். விடுதலைப் புலிகளுக்கும் இலங்கை அரசுக்கும் இடையில் பேச்சுவார்த்தை மூலம் ஓர் அரசியல் தீர்வுகாண முயலவேண்டும். யுத்தம் ஒரு போதும் தீர்வாகாது. அப்பாவி மக்கள் எக்காரணம் கொண்டும் பலியாகிவிடாமல் பாதுகாக்கப்பட வேண்டும்” என்றார். புலிகளை நாங்கள் ஆதரிக்காதபோதும் அன்று அவர்களோடு பேசுங்கள் என்றுதான் சொன்னோம். ஆனால் இந்திய அரசோ ஐ.நா.சபையோ தலையிடாததால் மனிதப் பேரழிவு நிகழ்ந்தது. ஆர்ப்பாட்டங்கள், மனிதச் சங்கிலிகள், தில்லி சென்று தர்ணா என தமிழகத்தில் எல்லாக்கட்சிகளும் செய்த போராட்டங்களை விடவும் மார்க்சிஸ்ட் கட்சி ஒன்றும் குறைவாக இருந்துவிடவில்லை. புலிகளை யும் தனி ஈழத்தையும் நாங்கள் ஒருபோதும் ஆதரிக்காததால் (பல கட்சிகள் அவ்வப்போது பல்டிகள் அடித்ததுபோல அடிக்காமல்) தமிழக மீடியாக்களும் எங்கள் போராட்டங்களை வெளியிடவில்லை. தமிழக மீடியாக்களில் கணிசமான பகுதியினர் தனி ஈழ ஆதரவு நிலைபாட்டை எடுத்ததும் புலிகளை அளவுக்கு மீறி விமர்சனமின்றி முன்னிறுத்தியதும் நடந்தது. தமிழக எல்லைக்குள் மட்டும் இயங்கும் அரசியல் கட்சிகளும் மீடியாக்களும் அவரவர் நலன் சார்ந்து இலங்கைப் பிரச்சனையைப் பயன்படுத்திக்கொள்வது தொடர்ந்து நடக்கிறது. அங்கு வாடும் தமிழ் மக்களின் நலன்களை விட இவர்களின் சொந்த அரசியல்/வர்த்தக நலன்கள் பிரதானமாக இருக்கின்றன. இது மிகப்பெரிய சோகம்தான். இப்போதும் இலங்கைத் தமிழர் பிரச்சனைக்கு யுத்தம் தீர்வாகாது என்பதும் தனி ஈழம் தீர்வாகாது என்பதும்தான் எங்கள் நிலைபாடு.1987 ராஜீவ்-ஜெயவர்த்தனா ஒப்பந்தம் ஒரு நல்ல ஒப்பந்தம்தான் .அதை ஒன்றுமில்லாமல் செய்ய இலங்கை அரசும் விடுதலைப்புலிகளும் கூட்டாக செயல்பட்டார்கள். இந்திய அமைதி காக்கும் படையை இலங்கை மண்ணை விட்டு வெளியேற்ற புலிகளும் இலங்கை அரசும் கைகோர்த்தது வரலாறு. தனி ஈழத்துக்குக் குறைவான கோரிக்கையை யார் வைத்தாலும் அவர் சிங்களரோ தமிழரோ அவர்கள் கொல்லப்பட்டார்கள். கதிர்காமர், அமிர்தலிங்கம், நீலம் திருச்செல்வம் எனக் கொல்லப்பட்ட தமிழர் தலைவர்கள் எத்தனை பேர்? அங்கே தனி ஈழம் தீர்வல்ல என்றால் கொல்லப்பட் டார்கள்.இங்கே தனி ஈழம் தீர்வல்ல என்று சொன்னால் இனத் துரோகி என முத்திரை குத்துவார்கள். இரண்டும் ஒரே அரசியலின் இரு வடிவங்கள் தாம். வரலாற்றை சுயபரிசீலனை செய்ய இப்போதாவது நாம் முன்வர வேண்டாமா? சமாதான முயற்சிகள் எல்லா வற்றையும் சீர்குலைத்ததில் புலிகளுக்குப் பங்கில்லையா? புலிகள் போரில் கொல்லப்பட்டுவிட்டதால்-களப்பலி ஆகிவிட்டதால்- அவர்களின் பாதை விமர்சனத்துக்குள்ளாக்கப்படாமல் விடப்பட வேண்டுமா? அது எதிர்காலத்துக்குப் பயன்படுமா? எங்கள் உறுதியான ஊசலாட்டமில்லாத நிலைபாடு காரணமாக - அது சிலருக்கு உவப்பாக இல்லை என்பதால்- எங்கள் போராட்டங்கள் பேசப்படவில்லை என்பது தான் உண்மை.
கேள்வி : இப்போது இலங்கைப் பிரச்சனையைப் பொறுத்தவரை செய்ய வேண்டியது என்ன?
ஜி.ஆர் : இன்னும் தமிழகத்தில் இனவாத உணர்வைத்தூண்டிக்கொண்டிருப்பது இலங்கையில் சிக்கலில் இருக்கும் தமிழ் மக்களுக்கு மேலும் தீங்கு விளைவிக்கும் என்பதை உணர வேண்டும். திருச்சியில் பயணியாக வந்த பௌத்ததுறவி தாக்கப்பட்டதற்கு கொழும்பில் தமிழர்கள் கடையடைப்புச் செய்து கண்டனம் செய்தார்கள் என்பதை மறந்துவிடக்கூடாது. தமிழ் நாட்டுக் கட்சிகளும் அமைப்புகளும் தம் அரசியலுக்காக அல்லாமல் உண்மையிலேயே இலங்கைத் தமிழர்களுக்கு இப்போது என்ன தேவையோ அதற்கான முழக்கங்களை முன்வைத்து இந்திய அரசை நிர்ப்பந்திக்க வேண்டும். அதீதமான கோரிக்கைகளைக் கைவிட்டு யதார்த்த நிலைமைக்கேற்ப குறைந்த பட்ச செயல்திட்டத்தோடு பேச வேண்டும்.
கேள்வி: இலங்கைக்குள் எந்த மாற்றமும் நடக்காமல் நமக்கு எப்படி நம்பிக்கை வரும்? இந்திய அரசு போல ஒரு ஏற்பாடு இலங்கையில் இல்லையே? அங்கு ஜனாதிபதி பதவி அதீத அதிகாரத்துடன் இருக்கிறதே?
ஜி.ஆர் : ஆம். உண்மைதான் ஆனாலும் 6 ஆண்டுகளுக்கு ஒருமுறை தேர்தல் நடத்தி மக்களைச் சந்திக்க வேண்டிய நிர்ப்பந்தம் அங்கு இருக்கத்தானே செய்கிறது. இன்றைய அடக்குமுறைச் சூழலில் சிங்கள மக்கள் மத்தியில் உள்ள ஜனநாயக எண்ணம் கொண்டவர்களும் பேசத் தயங்குகிற நிலை உள்ளது. ஆனால் உயர்கல்வியைத் தனியார் மயமாக்கும் சட்டத்தை சமீபத்தில் இலங்கை அரசு கொண்டு வந்த போது தமிழ் மாணவர்களும் சிங்கள மாணவர்களும் ஒன்றுபட்டுப் போராடி அச்சட்டத்தை திரும்பப்பெற வைத்துள்ளனர். சிங்கள மீடியாக்களும் ஆளும் கட்சியும் சிங்களப் பேரினவாதத்தைத் தூண்டிக் கொண்டே இருக்கும் இன்றைய இலங்கை நிலையைக் கணக்கில் கொண்டு இங்கு நாம் இயங்க வேண்டும். அதீத முழக்கங்களால் நாம் அங்குள்ள தமிழர்களை திசை திருப்பக் கூடாது. பொருளாதார ரீதியாக இலங்கை அர சின் கொள்கைகளால் கடுமையான நெருக் கடிக்கு ஆளாகியுள்ள சிங்கள, தமிழ், தமிழ் முஸ்லிம், மலையகத் தமிழ் மக்கள் அனை வரும் ஒன்றிணைந்து போராடுவது தவிர்க்க முடியாது. கால அவகாசம் எடுக்கலாம். இக்கூட்டில்தான் தமிழ் மக்களுக்கான நிரந்தர அரசியல் தீர்வும் பிறக்கும்.
லேபிள்கள்:
அரசியல் தீர்வு,
இலங்கை பிரச்சனை,
தோழர். ஜி. ராமகிருஷ்ணன்
வேதனைகளை வென்று சாதனை படைத்த பெண்மணி....!
எஸ்.ஜெயப்ரபா என்ற பெண் மதுரை
மாவட்டத்திலுள்ள மேலூர் வட்டத்தைச் சேர்ந்த நொண்டி கோவில்பட்டி கிராமத்தில் வசிப்பவர்.இவரது தந்தை
பஞ்சர் ஓட்டும் தொழில் செய்து வருகிறார். தாயார் வீட்டை கவனித்துக் கொள்கிறார்.
ஜெயப்ரபாவை அவரது 14 வயதில் அவர்கள் 'குல' வழக்கப்படி எல்லோருமாக சேர்ந்து அவரது தாய் மாமனுக்கு
மணம் முடித்துவிட்டார்கள். 16 வயதில் 'குடும்ப சிக்கல்' காரணமாக கணவரிடம் இருந்து
பிரிவு ஏற்பட்டது. குழந்தை திருமணம் சட்டப்படி செல்லாது என்பதால் விவாகரத்துக்கு அவசியமில்லாமல் போய்விட்டது.
அதன் பிறகு படிப்பைத் தொடர்வதற்காக தன் பெற்றோர்களிடம் கடுமையாக போராடி தனி தேர்வராக நேரடியாக பத்தாம் வகுப்பு தேர்வு எழுதி தேர்ச்சியும் பெற்றார். 11- ஆம் வகுப்பு சேர்வதற்கும் தொடர்ந்து போராட வேண்டியிருந்தது. ஒரு வழியாக வீட்டில் சம்மதித்து விட்டார்கள். அடுத்த சிக்கல் பள்ளித் தரப்பில் இருந்து வந்தது. மேலூர் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் திருமணமான மாணவிகளை பள்ளியில் சேர்த்துக்கொள்வது இல்லை என்பதும், பயின்று கொண்டு இருக்கும் போதே மாணவிகளுக்கு திருமணம் நடந்தால் அவர்களை பள்ளியில் இருந்து நீக்கி விடுவது என்பதும் ஒரு ''கொள்கை முடிவாகவே'' தீவிரமாக அமல்படுத்தி வரும் பள்ளி என்பதால் ஜெயப்ரபாவை பள்ளியில் சேர்த்துக் கொள்வதில் சிரமம் இருந்தது. ஆனால் இந்து பத்திரிக்கையின் தலையீட்டினால் அந்த மாணவிக்கு தீர்வு கிடைக்க பள்ளியில் இடமும் கிடைத்தது.
ஆனால் இன்று அண்மையில் வெளியான +2 தேர்வு முடிவில் அந்தப் பெண் ஜெயப்ரபா 1136 மதிப்பெண்களை பெற்று அவரை சேர்த்துக்கொள்ள தயங்கிய அந்த பள்ளியிலேயே முதல் மாணவியாக தேர்ச்சி பெற்றுள்ளார் என்பது அந்தப் பள்ளிக்கு மட்டுமல்லாமல் பெண்ணினத்திற்கே பெருமையளிக்கும் நிகழ்வாகும். வேதனைகளை முறியடித்து சாதனையை வென்ற ''சாதனைப் பெண்மணி'' ஜெயப்ரபாவை மனதார வாழ்த்துவோம்.
அதன் பிறகு படிப்பைத் தொடர்வதற்காக தன் பெற்றோர்களிடம் கடுமையாக போராடி தனி தேர்வராக நேரடியாக பத்தாம் வகுப்பு தேர்வு எழுதி தேர்ச்சியும் பெற்றார். 11- ஆம் வகுப்பு சேர்வதற்கும் தொடர்ந்து போராட வேண்டியிருந்தது. ஒரு வழியாக வீட்டில் சம்மதித்து விட்டார்கள். அடுத்த சிக்கல் பள்ளித் தரப்பில் இருந்து வந்தது. மேலூர் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் திருமணமான மாணவிகளை பள்ளியில் சேர்த்துக்கொள்வது இல்லை என்பதும், பயின்று கொண்டு இருக்கும் போதே மாணவிகளுக்கு திருமணம் நடந்தால் அவர்களை பள்ளியில் இருந்து நீக்கி விடுவது என்பதும் ஒரு ''கொள்கை முடிவாகவே'' தீவிரமாக அமல்படுத்தி வரும் பள்ளி என்பதால் ஜெயப்ரபாவை பள்ளியில் சேர்த்துக் கொள்வதில் சிரமம் இருந்தது. ஆனால் இந்து பத்திரிக்கையின் தலையீட்டினால் அந்த மாணவிக்கு தீர்வு கிடைக்க பள்ளியில் இடமும் கிடைத்தது.
ஆனால் இன்று அண்மையில் வெளியான +2 தேர்வு முடிவில் அந்தப் பெண் ஜெயப்ரபா 1136 மதிப்பெண்களை பெற்று அவரை சேர்த்துக்கொள்ள தயங்கிய அந்த பள்ளியிலேயே முதல் மாணவியாக தேர்ச்சி பெற்றுள்ளார் என்பது அந்தப் பள்ளிக்கு மட்டுமல்லாமல் பெண்ணினத்திற்கே பெருமையளிக்கும் நிகழ்வாகும். வேதனைகளை முறியடித்து சாதனையை வென்ற ''சாதனைப் பெண்மணி'' ஜெயப்ரபாவை மனதார வாழ்த்துவோம்.
லேபிள்கள்:
எஸ்.ஜெயப்ரபா,
சாதனைப் பெண்மணி,
தேர்வு முடிவு
புதன், 8 மே, 2013
மோடி ''வித்தை'' கர்நாடக மாநிலத் தேர்தலில் பலிக்கவில்லை....!
ஒரு
மகா ஊழல் கட்சியை இறக்கிவிட்டு இன்னொரு மகா ஊழல் கட்சிக்கு ஆட்சி செய்ய
வாய்ப்பளித்திருக்கிறார்கள் கர்நாடக மாநில மக்கள். இதற்கு ஏதோ காங்கிரஸ்
கட்சியை விரும்பி மக்கள் ஓட்டுப் போட்டார்கள் என்று பொருளில்லை.
கடந்த ஐந்து ஆண்டுகால பாரதீய ஜனதா கட்சியின் ஊழல் மிகுந்த ஆட்சியின் மீது
மக்களுக்கு ஏற்பட்ட வெறுப்பும், அந்த காவிக் கட்சிக்குள்ளேயே
ஒற்றுமையின்மையால் ஏற்பட கோஷ்டிப்பூசலின் மீது மக்களுக்கு ஏற்பட்ட
அதிருப்தியும் தான் காங்கிரஸ் கட்சிக்கு சாதகமான வாக்குகளாக மாறிவிட்டது.
இது காங்கிரஸ் கட்சியே எதிர்ப்பார்க்காத வெற்றி. மத்தியில் நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக பல்வேறு ஊழல்களில் சாதனை புரிந்துவரும் சோனியா - மன்மோகன் சிங் தலைமையிலான காங்கிரஸ் கட்சியின் மீது நாடு முழுதும் மக்கள் வெறுப்பில் இருக்கும் சூழ்நிலையில் கர்நாடக மாநில மக்கள் மட்டும் பாரதீய ஜனதா கட்சி என்ற ஒரு மகா ஊழல் கட்சியை இறக்கிவிட்டு இன்னொரு மகா ஊழல் கட்சியான காங்கிரசுக்கு ஆட்சி செய்ய வாக்களித்தது என்பது வியப்பாகத் தான் இருக்கிறது.
இதுல எப்படியாவது ஆட்சியை தக்க வைத்துக்கொள்ள வேண்டும் என்று பாரதீய ஜனதா கட்சி பல்வேறு ''மோடி'' வித்தைகளையெல்லாம் காட்டிப்பார்த்தது. பிரதமர் பதவியை அடையத் துடிக்கும் மோடிக்கு கர்நாடக மாநிலத் தேர்தல் களம் என்பது ஒரு ''பரிசோதனைக் கூடம்'' என்று தான் சொல்லவேண்டும். ஆனால் பரிசோதனை ''புஸ்ஸுன்னு'' போய்விட்டது. மோடியின் இலச்சணம் இவளவு தான் என்பதை இனிமேலாவது பாரதீய ஜனதாக் கட்சி புரிந்துகொள்ளட்டும். இப்படியாக தான் 2014 - நாடாளுமன்றத் தேர்தல் முடிவும் இருக்கும் என்பதையும் பாரதீய ஜனதாக் கட்சி புரிந்துகொள்ளட்டும்.
அதே சமயத்தில் காங்கிரஸ் கட்சியும், பாரதீய ஜனதாக் கட்சியும் 2014 - நாடாளுமன்றத்தேர்தலிலும் மாற்றத்தை விரும்பி மக்கள் தங்களுக்குத் தான் வாக்களிப்பார்கள் என்று மனப்பால் குடிக்க வேண்டாம். பாரதீய ஜனதாக் கட்சியின் மீது வெறுப்புக்கொண்டு அதிருப்தியிலிருந்த கர்நாடக மக்கள் எப்படி பாரதீய ஜனதா கட்சியை தூக்கி எறிந்தார்களோ, அதேப்போல் நாடு முழுதும் காங்கிரஸ் கட்சியின் மீதும் பாரதீய ஜனதாக் கட்சியின் மீதும் அதிருப்தியில் இருக்கும் மக்கள், இந்த இரண்டு மகா ஊழல் கட்சிகளையும் தூக்கி எறிவார்கள் என்பது தான் நாம் பார்க்கப்போகும் உண்மை.
இது காங்கிரஸ் கட்சியே எதிர்ப்பார்க்காத வெற்றி. மத்தியில் நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக பல்வேறு ஊழல்களில் சாதனை புரிந்துவரும் சோனியா - மன்மோகன் சிங் தலைமையிலான காங்கிரஸ் கட்சியின் மீது நாடு முழுதும் மக்கள் வெறுப்பில் இருக்கும் சூழ்நிலையில் கர்நாடக மாநில மக்கள் மட்டும் பாரதீய ஜனதா கட்சி என்ற ஒரு மகா ஊழல் கட்சியை இறக்கிவிட்டு இன்னொரு மகா ஊழல் கட்சியான காங்கிரசுக்கு ஆட்சி செய்ய வாக்களித்தது என்பது வியப்பாகத் தான் இருக்கிறது.
இதுல எப்படியாவது ஆட்சியை தக்க வைத்துக்கொள்ள வேண்டும் என்று பாரதீய ஜனதா கட்சி பல்வேறு ''மோடி'' வித்தைகளையெல்லாம் காட்டிப்பார்த்தது. பிரதமர் பதவியை அடையத் துடிக்கும் மோடிக்கு கர்நாடக மாநிலத் தேர்தல் களம் என்பது ஒரு ''பரிசோதனைக் கூடம்'' என்று தான் சொல்லவேண்டும். ஆனால் பரிசோதனை ''புஸ்ஸுன்னு'' போய்விட்டது. மோடியின் இலச்சணம் இவளவு தான் என்பதை இனிமேலாவது பாரதீய ஜனதாக் கட்சி புரிந்துகொள்ளட்டும். இப்படியாக தான் 2014 - நாடாளுமன்றத் தேர்தல் முடிவும் இருக்கும் என்பதையும் பாரதீய ஜனதாக் கட்சி புரிந்துகொள்ளட்டும்.
அதே சமயத்தில் காங்கிரஸ் கட்சியும், பாரதீய ஜனதாக் கட்சியும் 2014 - நாடாளுமன்றத்தேர்தலிலும் மாற்றத்தை விரும்பி மக்கள் தங்களுக்குத் தான் வாக்களிப்பார்கள் என்று மனப்பால் குடிக்க வேண்டாம். பாரதீய ஜனதாக் கட்சியின் மீது வெறுப்புக்கொண்டு அதிருப்தியிலிருந்த கர்நாடக மக்கள் எப்படி பாரதீய ஜனதா கட்சியை தூக்கி எறிந்தார்களோ, அதேப்போல் நாடு முழுதும் காங்கிரஸ் கட்சியின் மீதும் பாரதீய ஜனதாக் கட்சியின் மீதும் அதிருப்தியில் இருக்கும் மக்கள், இந்த இரண்டு மகா ஊழல் கட்சிகளையும் தூக்கி எறிவார்கள் என்பது தான் நாம் பார்க்கப்போகும் உண்மை.
லேபிள்கள்:
கர்நாடக மாநிலத் தேர்தல்,
தேர்தல் தோல்வி,
நரேந்திர மோடி
செவ்வாய், 7 மே, 2013
கூடங்குளம் அணுமின் நிலையம் - அறிவுப்பூர்வமான - அறிவியல்பூர்வமான தீர்ப்பு...!
லேபிள்கள்:
அச்சம் தவிர்,
உச்ச நீதிமன்றம்,
கூடங்குளம்,
தீர்ப்பு
திங்கள், 6 மே, 2013
ஊழல் சாக்கடையில் உழலும் காங்கிரஸ் கட்சி - வெட்கமில்லாமல் நடமாடும் சோனியா - மன்மோகன் சிங்...!
லேபிள்கள்:
ஊழல் ஆட்சி,
காங்கிரஸ் கட்சி,
சோனியா - மன்மோகன் சிங்
60 ஆண்டுகளாக நீடிக்கும் இலங்கைப் பிரச்சனை - அரசியல் தீர்வே நிரந்தரத் தீர்வு
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச்செயலாளர்
தோழர். ஜி.ராமகிருஷ்ணன் மதுரையில் ஆற்றிய உரை :-
தமிழ் வளர்ச்சிக்கான குரல்தமிழ் மக்களுக்கும், தமிழர் நலனுக்கும்,
தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கும் கம்யூனிஸ்ட்டுகள் ஆற்றிய பணி மகத்தானது.
மொழிவழி மாநிலக் கோரிக்கை எழுப்பிய இயக்கம் கம்யூனிஸ்ட் இயக்கம்.
தமிழகத்தை மொழிவழி மாநிலமாக அறிவிக்கக்கோரி தோழர்கள் பி.ராமமூர்த்தி,
ப.ஜீவானந்தம், என்.சங்கரய்யா ஆகியோர் பல ஆண்டுகள் போராடியுள்ளனர். அன்று
திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் இருந்தன. ஆனால், தமிழகத்தில்
மொழிவழி மாநிலமாக உருவாக்கியப் பெருமை கம்யூனிஸ்டுகளைத் தான் சேரும்.
ஒன்றுபட்ட சென்னை ராஜதானிக்கு சென்னை எனப்பெயர் சூட்ட வேண்டும் என்று
பெரும்பாலான கட்சிகள் கோரிக்கை வைத்தன. அப்போது சென்னையோடு ஆந்திராவின் பல
பகுதிகள் இருந்தன. ஆனாலும், அவை சென்னைக்குச் சொந்தம் என தைரியமாக குரல்
கொடுத்தவர் கம்யூனிஸ்ட் இயக்கத்தின் மகத்தான தலைவர் பி.சுந்தரய்யா. மொழிவழி
மாநிலம் அமைந்த போது ஒன்றுபட்ட சென்னை மாகாணத்தின் சட்டமன்ற உறுப்பினராக
தோழர் பி.ராமமூர்த்தி இருந்தார். 1952 - ஆம் ஆண்டு முதல் சட்டமன்றத்
தேர்தலில் மதுரைச்சிறைச்சாலையில் இருந்தே தோழர் பி.ராமமூர்த்தி வெற்றி பெற்றார். அவர் சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவராக இருந்தார். வண்ணாரப்பேட்டை
தொகுதியில் இருந்து தோழர் ப.ஜீவானந்தம் சட்டமன்ற உறுப்பினராக
தேர்ந்தெடுக்கப்பட்டார்.
அப்போது தமிழக
சட்டமன்றத்தில் ஆங்கிலத்தில் தான் பேச முடியும். ஆனால், ஆங்கிலத்தில் பேச
மாட்டோம்: தமிழில் தான் பேசுவோம் என பேசிய பெருமை பி. ராமமூர்த்தியையும்,
ப.ஜீவானந்தத்தையும் சாரும். சென்னை ராஜதானி
என்ற பெயரை தமிழ்நாடு என அறிவிக்க வேண்டும் என்று 75 நாள் உண்ணாவிரதம்
இருந்து உயிர்நீத்த விருதுநகர் தியாகி சங்கரலிங்கனார், தனது உடலை கம்யூனிஸ்ட்டுகளிடம் தான் ஒப்படைக்க வேண்டும் என்று உயில் எழுதி வைத்தார்.
அவரது உடலை கே.டி.கே.தங்கமணி, கே.பி.ஜானகியம்மாள் ஆகியோர் பெற்று இறுதி
நிகழ்ச்சியை நடத்தினர். நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த பி.ராமமூர்த்தி
சென்னை மாகாணத்திற்கு தமிழ்நாடு என பெயர் சூட்ட வேண்டும் என்று
நாடாளுமன்றத்தில் முதல் முதலாக குரல் கொடுத்தார்.
மாநிலங்களவை உறுப்பினராக இருந்த அண்ணா, நாங்கள் முன்மொழிய வேண்டிய தீர்மானத்தை
பி.ராமமூர்த்தி முன்மொழிந்தார். அதை ஆதரிக்கிறேன் என்று பேசிய பேச்சுகள்
நாடாளுமன்ற குறிப்புகளில் உள்ளது. தமிழ்மொழிக்கு மட்டுமின்றி தமிழகத்தின்
பொருளாதார வளர்ச்சிக்கு அயராது பாடுபட்டவர்கள் கம்யூனிஸ்டுகள். 2 ஆயிரம்
மெகாவாட் மின்சாரத்தைத் தரக்கூடிய நெய்வேலி அனல் மின்நிலைய துவக்கப்பணிகள் துவங்கிய போது, பீறிட்ட நீருற்றை நிறுத்த முடியாமல் பணிகளைக்
கைவிட்டனர். ஜெர்மனியில் சர்வதேச மாநாட்டில் கலந்து கொண்டிருந்த
பி.ராமமூர்த்தி அந்த நாட்டின் உதவியோடு நெய்வேலி அனல் மின் நிலைய பணிகளை
முடிக்க அயராது பாடுபட்டார். மேட்டூர் அணைக்கட்டு, சேலம் உருக்காலை,
திருச்சி பெல் தொழிற்சாலை உருவாகியதில் கம்யூனிஸ்ட்டுகளின் மகத்தான
பங்களிப்பு உள்ளது . 1967 ஆம் ஆண்டு சட்டமன்ற
உறுப்பினர்களாக இருந்த என்.சங்கரய்யா, ஏ.பாலசுப்பிரமணியம், என்.வரதராஜன்
ஆகியோர் ஆற்றிய பணி மகத்தானது.
கம்யூனிஸ்ட்
கட்சி, இலங்கைத்தமிழர் நலனுக்காக கம்யூனிஸ்ட் கட்சி கடந்த 60 ஆண்டுகளாக
குரல் கொடுத்து வருகிறது. இலங்கைத் தமிழர்களின் துயரங்களுக்கு நிரந்தத்
தீர்வு காணவேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. 1987 ஆம் ஆண்டு
ஏற்படுத்தப்பட்ட இந்திய - இலங்கை ஒப்பந்தத்தின்படி, இலங்கை தமிழர்களுக்கு
சம அந்தஸ்து வழங்கப்பட வேண்டும் என்பதை, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி
தொடர்ந்து வலியுறுத்தி வந்திருக்கிறது. இந்த ஒப்பந்தத்தை விடுதலைப் புலிகள்
ஏற்க மறுத்துவிட்டனர். மேலும், இலங்கை அரசுடன் இணைந்து, இந்திய ராணுவத்தை
வெளியேற வைத்தனர். அதன்பிறகு, நார்வே நாட்டினர் முன்னிலையில் சமரசப்
பேச்சுக்கான முயற்சியும் தோல்வியில் முடிந்ததால், போர்மூளும் ஆபத்து
ஏற்பட்டது.
2008,2009 - ஆம் ஆண்டு இலங்கையில் நடைபெற்ற யுத்தத்தில் 40 ஆயிரம்
அப்பாவி தமிழர்கள் கொல்லப்பட்டுள்ளனர். தமிழர்களின் வீடுகள் தரை
மட்டமாக்கப்பட்டன. மருத்துவமனைகள் மீது இலங்கை ராணுவம் குண்டு வீசித்தாக்கியது. ஐ.நா.மன்றத்தின் அலுவலகத்தின் மீதும் குண்டு வீசப்பட்டது. யுத்தம்
முடிந்து 4 ஆண்டுகளாகியும் தமிழர்களின் பிரச்சனைகள் தீர்க்கப்படாமல்
உள்ளது. பிரபாகரனின் மகன் பாலச்சந்திரன் படுகொலை செய்யப்பட்ட செய்தி
அனைவரின் நெஞ்சையும் பதறவைத்தது. இலங்கையில் 50 ஆயிரம் தமிழர்கள்
விதவைகளாக்கப்பட்டுள்ளனர். காணாமல் போன இளைஞர்கள் பற்றிய தகவல் இல்லை.
ஐ.நா. பொதுச்செயலாளர், கொழும்பு சென்ற போது ராஜ பக்சே அளித்த
வாக்குறுதிகள் இதுவரை நிறைவேற்றப்படவில்லை. அதிகாரபரவல் அளிக்கப்படாது.
வடக்கு , கிழக்கு மாகாணங்களை இணைத்து சுயாட்சி தமிழர்களுக்கு வழங்க
முடியாது என கடந்த 2 மாதங்களுக்கு முன்பு ராஜபக்சே திமிராக அறிவித்தார்.
அண்மையில்
தமிழகத்தில் மாணவர்கள், வாலிபர்கள் மத்தியில் போராட்ட அலை எழுந்தது.
இலங்கை தமிழர்களுக்கு ஆதரவாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் பல
இயக்கங்களை தொடர்ந்து நடத்தியுள்ளது. சாத்தியமுள்ள கோரிக்கைகளை முன்வைக்க
வேண்டும். இலங்கையில் தனி ஈழம் அமைவது தான் தீர்வு என சில அமைப்புகள் சொல்வதை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஏற்கவில்லை. பூர்வீக தமிழர்கள், மலையக
தமிழர்கள், தமிழ் பேசும் இஸ்லாமியர்கள் என இலங்கையில் மூன்று பகுதிகளில்
தமிழர்கள் வசிக்கிறார்கள். இவர்கள் யாரும் தனி ஈழத்தை ஆதரிக்கவில்லை. இந்த
நிலையில் ஈழம் என்ற கோரிக்கை சாத்தியமா? இலங்கை தமிழர் பிரச்சனைக்கு
தீர்வு சொல்வது அந்த நாட்டு மக்களின் முடிவாகும். பிரச்சனைகளைத் தீர்க்க
நடை முறை சாத்தியமுள்ள கோரிக்கைகளை முன்வைக்க வேண்டும். இலங்கை அரசுக்கு
எதிராக பொருளாதார முற்றுகை நடத்த வேண்டும் என்று சிலர் கோரிக்கை வைக்கிறார்கள்.
இலங்கையின் தலைநகர் கொழும்புவில் நடைபெறும் ஜவுளி
வர்த்தகத்தை நடத்துபவர்கள் இலங்கையைச் சேர்ந்த தமிழர்கள் தான். இந்த
பொருளாதார முற்றுகையால் அவர்கள்தான் பாதிக்கப்படுவார்கள். இந்தியா,
இலங்கைக்கு நட்பு நாடு என கருதக்கூடாது என்ற கோரிக்கையையும் சிலர்
முன்வைக்கிறார்கள். இலங்கையில் தமிழர்கள் வாழும் பகுதியில் நடைபெறும்
புனர்வாழ்வு நடவடிக்கைகளுக்கு இந்தியா உதவி செய்து வருகிறது. இலங்கை நட்பு
நாடு இல்லையென்று கருதினால், தமிழர்கள் பகுதியில் நடைபெறும்
புனரமைப்புப் பணிகளை எப்படி அமல்படுத்துவது? இலங்கையில் உள்ள சிங்களர்கள்
அனைவரும் தமிழர்களுக்கு எதிரிகள் அல்ல.
இலங்கையில் உயர்கல்வி
தனியார் மயமாக்க நடைபெற்ற முயற்சியை எதிர்த்து சிங்களர், தமிழர் மாணவர்கள்
ஒன்றிணைந்து சர்வாதிகார ராஜபக்சேயின் முடிவை மாற்றியமைத்தனர்.
இப்படிப்பட்ட ஒற்றுமை உணர்வு வளர்க்கப்பட வேண்டும். இலங்கையில்
போர்க்குற்றம் இழைத்தவர்களுக்கு தண்டனை வழங்கப்பட வேண்டும். அதற்கு
சுயேட்சையான விசாரணை நடத்தப்பட வேண்டும். அதற்கு இந்தியா ராஜ்ய ரீதியான
நிர்ப்பந்தத்தை ஏற்படுத்த வேண்டும். தமிழர்கள் வாழும் பகுதியில் அதிகார
பரவல் ஏற்பட இந்தியா அரசு உதவ முன்வர வேண்டும். இலங்கை தமிழர்களுக்கு அரசியல் தீர்வு தான் நிரந்தரத் தீர்வாக இருக்க முடியும். தமிழர்களுக்கு
சமஅந்தஸ்து, அதி காரப்பரவல், அடிப்படை உரிமைகள் கிடைக்க மார்க்சிஸ்ட்
கம்யூனிஸ்ட் கட்சி தொடர்ந்து குரல் கொடுக்கும்.
லேபிள்கள்:
அரசியல் தீர்வு,
இலங்கைப் பிரச்சனை,
ஜி.ராமகிருஷ்ணன்
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)