புதன், 27 மார்ச், 2013

இந்தியாவின் வெளியுறவுக் கொள்கைக்கே வேட்டு வைக்கும் ஜெயலலிதாவின் தீர்மானம்....!




























        தமிழ்நாட்டில் வர வர  ஜெயலலிதாவும், கருணாநிதியும் இலங்கைத் தமிழர்கள் மீது போட்டிப்போட்டுக்கொண்டு பாசமழை பொழிகிறார்கள். பாசமழைப் பொழிவதில் இந்த இரண்டு பேரில் யார் தான் மிக அதிகமாக பொழிகிறார்கள் என்பதைப் பார்த்து வருகிற பாராளுமன்றத்தேர்தலில் தமிழக மக்கள் தங்களுக்கே ஓட்டுப் போடுவார்கள் என்ற நினைப்பில் இவங்க இரண்டு பேரும் நடத்துகிற உள்நாட்டு யுத்தமிருக்கே அது இலங்கையில் நடந்த உள்நாட்டு யுத்தத்தையும் மிஞ்சிவிடும் போலிருக்கு. இந்த இரண்டு பேரும் நாட்டின் பின்விளைவுகள்  எதையும் கருத்தில் கொள்ளாமல் அம்புகளையும், அஸ்திரங்களையும் மாறி மாறி வானத்தை நோக்கி விட்டுகிட்டே இருக்காங்க என்பது வேடிக்கையாய் இருக்கிறது.
         இவர்கள் இருவரும் தமிழக அரசியலையும், இந்திய அரசியலையும் விட்டுபுட்டு சர்வதேச அரசியலில் சஞ்சரிக்க ஆரம்பிச்சுட்டாங்க. இந்திய நாட்டின் வெளியுறவுக் கொள்கையையே கேள்விக்குறிக்கு உள்ளாக்குகிறார்கள். மாநில அரசியல்வாதிகளால் நாட்டின் வெளியுறவுக்கொள்கையே நெருக்கடிக்குள்ளாகிறது என்று நமது குடியரசு துணைத்தலைவர் ஹமீது அன்சாரி வேதனையுடன் குறிப்பிட்டார். அந்த அளவிற்கு ஜெயலலிதாவும், கருணாநிதியும் நாட்டின் வெளியுறவுக்கொள்கையை கையில் எடுத்துக்கொண்டு பின்விளைவுகளையும் ஆபத்தையும் உணராமல் விளையாடிக்கொண்டிருக்கிறார்கள்.
        # ஏற்கனவே இலங்கை மீது பொருளாதார தடை விதிக்க வேண்டும் என்று சட்டமன்றத்தில் முதலமைச்சர் ஜெயலலிதா தீர்மானம் நிறைவேற்றி இலங்கை தமிழர்கள் மீது தனக்கிருக்கிற அக்கறையை காட்டினார் என்பதை நாடே பார்த்தது.
        # இலங்கை தடகள விளையாட்டு வீரர்கள் கலந்துகொள்வார்கள் என்பதற்காக தமிழகத்தில் நடத்துவதாக இருந்த ''ஆசிய தடகளப் போட்டியை'' தமிழகத்தில் நடத்தக்கூடாது என்று ஜெயலலிதா மத்திய அரசுக்கு தெரிவித்தார்.
        # இந்திய பெருமுதலாளிகளின் சுரண்டல் விளையாட்டான ஐ. பி. எல். கிரிக்கெட் போட்டியில் சென்னையில் நடக்கும் போட்டியில் இலங்கைக் கிரிக்கெட் வீரர்களை நீக்கவேண்டும் என்று ஜெயலலிதா கடுமையாக கேட்டுக்கொண்டார்.
        # இலங்கையில் வரும் நவம்பர் மாதம் நடைபெறவிருக்கிற காமன்வெல்த் மாநாட்டில் இந்திய கலந்துகொள்ளாது புறக்கணிக்கவேண்டும்  என்று பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு முதலமைச்சர் ஜெயலலிதா கடிதம் எழுதினார்.
        # இவை எல்லாவற்றிற்கும் சிகரம் வைத்தார் போல், இன்று காலை தமிழக சட்டமன்றத்தில், இலங்கையுடனான ராஜ்ய உறவுகளையும், நட்புறவையும் இந்திய  அரசு துண்டித்துக்கொள்ள வேண்டும் என்றும், தமிழர்கள் அடங்கிய ''தனி ஈழம்'' உருவாக்கவேண்டும் என்றும் மத்திய அரசை வலியுறுத்தி  முதலமைச்சர் ஜெயலலிதாவே ஒரு தீர்மானத்தை கொண்டுவந்து நிறைவேற்றியிருக்கிறார். ஒரு மாநில முதலமைச்சரே அண்டை நாடுகளுடனான நட்பு, அமைதி, பரஸ்பர உதவி போன்றவை அடங்கிய இந்திய அரசின் வெளியுறவுக் கொள்கையை கேள்விக்குறியாக்கி இருப்பது என்பது வேதனைக்குரிய செயலாகும். அண்டை நாடுகளுடனான ராஜ்ய உறவுகள் சம்பந்தப்பட்ட விஷயங்களை கையில் எடுக்கும் போது கவனமும், நிதானமும் மிக மிக முக்கியமானது என்பது ஒரு முதலமைச்சருக்கு தெரியாமல் இருக்காது.
          ஜெயலலிதாவும், கருணாநிதியும் விளையாடும் இது போன்ற வெளியுறவு கொள்கை மீதான விளையாட்டுகள் இவர்கள் நினைப்பது போல் தேர்தலுக்கோ, ஓட்டுக்கோ உதவாது. மாறாக இலங்கையில் எஞ்சியிருக்கக்கூடிய தமிழர்களுக்கு எதிராக அமைந்துவிடும் என்பதை இவர்கள் கருத்தில் கொல்லவேண்டும். இலங்கையில் வாழக்கூடிய தமிழர்களின் வாழ்வாதாரத்தை உறுதிபடுத்துவதற்கு என செய்யவேண்டுமோ அதைப் பற்றிய சிந்தனையில் இவர்கள் இறங்கவேண்டும். இதைத்தான் இலங்கைத் தமிழர்களும்  எதிர்ப்பார்க்கிறார்கள்.

5 கருத்துகள்:

வேகநரி சொன்னது…

சிறந்த கட்டுரை.
ஜெயலலிதாவும் கருணாநிதியும் அபாயகரமான விளையாட்டு விளையாடிக்கொண்டிருக்கிறார்கள்.

பெயரில்லா சொன்னது…

ENNA ABAAYAM...KASHMIR KURITHA KAMUNIST DESA PAKTHARKALIN UNARVU PULLARIKKIRATHU....

Ram சொன்னது…

ஜெயா அமெரிக்க அடி வருடியாக இருந்து தன்னால் முடிந்த ஆகாயம் பார்க்கிறார். இது பல்நாட்டு அரசியல் சதுரங்க விளையாட்டின் ஒரு பகுதியே. இதில் ஒன்றும் கவலை பட ஒன்றும் இல்லை.

கறுத்தான் சொன்னது…

//பொதுவுடைமை கொள்கை திசை எட்டும் சேர்ப்போம் //என்று முழக்கம் வைத்து கொண்டு மார்க்சியதிர்ற்கு எதிரான நிலை ஏன் ? தரகு முதலாளிய பார்பனிய ஒடுக்குமுறை கட்டமைபே இந்தியா....... இந்த அமைப்பு பல்வேறு தேசிய இனங்களை ஒடுக்கி அவைகளின் விடுதலைமறுத்தே பிழைத்து வருகிறது................. தேசம் பற்றிய மார்க்சிய வரையறை என்ன ?அதன் அடிபடையில் இந்தியா என்பது என்ன ? இதை எல்லாம் தெளிந்து விட்டு ஒடுக்கும் இந்தியாவின் வெளியுறவு கொள்கை பற்றி கவலை படுங்கள்

பெயரில்லா சொன்னது…

More than 300 years of slavery has not been erased the 60 years of independence.Tamil do not have self respect.This is the only race in India Britishers took them as slave to many of their colonies.Earlier they were salve to white man. Now
they are salve to white lady. They
would be salve for ever.
M.Baraneetharan.