சனி, 30 மார்ச், 2013

ஆட்சியைக் காப்பாற்றிக்கொள்ள முலாயம்சிங் காலில் விழுந்த காங்கிரஸ் கட்சி....!


























































எழுதுகிறேன்...

கற்பதைக் கற்கண்டாய் மாற்றிய ஓர் அரசுப் பள்ளி....!

          
கட்டுரையாளர் : தோழர் ஜி. இராமகிருஷ்ணன்,                                    
                             மாநிலச் செயலாளர், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி.           
       
       கல்வி கற்பதற்கான உரிமைக் குறியீடுகளை எய்துவது குறிப்பாக மொத்தப் பள்ளிச் சேர்க்கை மற்றும் இடை நிற்றல் அளவுகளில் மிகச் சிறப்பாகக் கருதப்படும் மாநிலங்களுள் தமிழகம் ஒன்று என மாநில நிதியமைச்சர் சமர்ப்பித்த நடப்பாண்டுக்கான ஆண்டு நிதிநிலை அறிக்கையில் பள்ளிக் கல்வி குறித்து மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது. இக்கூற்று சரியானதே. இருப்பினும் தமிழகத்தில் பள்ளிக் கல்வி நிலை குறித்து நாம் திருப்தி அடைந்துவிடக்கூடாது. திருப்தி அடைந்தால் இத்துறையில் உள்ள குறைபாடுகளைப் போக்கிட முடியாது. 
        உதாரணமாக, ''அசர்'' (ஆய்வு நிறுவனம்) செய்த ஆய்வின் அடிப்படையில் ஐந்தாம் வகுப்பு மாணவர்களில் 53 விழுக்காடு குழந்தைகள் இரண்டாம் வகுப்பிற்கான பாடத்தை வாசிக்க இயலாத நிலையில் உள்ளனர். கடந்த ஆண்டு அரசுப் பள்ளிகளில் இந்த விழுக்காடு 58 சதவிகிதமாக இருந்தது. மேலும், மாணவர் சேர்க்கை விகிதத்தைப் பொருத்தவரை மக்கள் அரசுப் பள்ளிகளை விடுத்து தனியார் பள்ளிகளை நாடும் போக்கு அதிகரித்துள்ளது என்று கூறப்பட்டுள்ளது. தமிழகத்தில் பள்ளிக் கல்வி, குறிப்பாக அரசுப் பள்ளிகளில் நிலவும் மேற்கண்ட குறைபாட்டுக்கு கல்வித் தரம் உயராதது முக்கியமான காரணங்களில் ஒன்று.
           கற்பிக்கும் முறை, கல்வி பெறும் சூழல், தாய்மொழியில் திறன், குழந்தைகளின் வாசிப்புத் திறன் போன்ற அம்சங்களைக் கொண்டே கல்வித் தரம் மதிப்பீடு செய்யப்படுகிறது. இந்த அம்சங்கள் அல்லாமல் பள்ளிகளில் அடிப்படைக் கட்டுமானங்களும் கல்வித் தரம் உயர அவசியம். கல்வித் தரத்தை உயர்த்துவதில் அரசுக்கு முக்கியப் பங்கு உள்ளது. மாறி வரும் சூழலுக்கேற்ப ஆசிரியர்களுக்குப் பயிற்சி, தேவையான அடிப்படைக் கட்டுமானங்களை உருவாக்குவது, ஆசிரியர்களை ஊக்குவிப்பது, பள்ளிக்கு உள்ளேயும் வெளியேயும் நல்ல ஆரோக்கியமான சூழலை உருவாக்குவது போன்றவைகளுக்கு ஆசிரியர்களை அரவணைத்து மாற்றங்களை உருவாக்குவதில் அரசுக்கு முக்கியப் பங்கு உள்ளது. கல்வித்தரம் உயர மாநில, மாவட்ட அளவிலான இத்துறை சார்ந்த அதிகாரிகளுக்கும் பொறுப்பு உள்ளது. கல்வித் தரம் சம்பந்தப்பட்ட ஒவ்வொரு அம்சத்திலும் “அசர்” போன்ற ஆய்வு சுட்டிக்காட்டும் குறைபாடுகளைப் போக்கிட இத்துறை சார்ந்த அதிகாரிகளின் தலையீடும் அவசியமானது.கல்வித் தரம் உயர தேவையான பல அம்சங்களில் ஆசிரியர்களின் பங்கும் முக்கியமான ஒன்று. ஆசிரியர்களின் பாத்திரம், பங்களிப்பு சிறப்பாக உள்ள பள்ளிகளில் தரமும் உயர்கிறது. அரசுப் பள்ளிகளைத் தவிர்த்து மாணவர்கள் தனியார் பள்ளிகளுக்குச் செல்லும் போக்கும் தடுக்கப்படுகிறது. 
        தமிழகத்தில் சிறப்பாகச் செயல்படும் அரசு ஆரம்பப்பள்ளிகளில் ஒன்றான இராமம்பாளையம் ஆரம்பப்பள்ளிக்குச் செல்லும் வாய்ப்பு  கிடைத்தது. கோவை மாவட்டத்திலுள்ள  ஜடையன் பாளையம் ஊராட்சிக்கு உட்பட்டது இராமம் பாளையம் கிராமம். கோவையிலிருந்து 38 கி. மீட்டர் தொலைவிலுள்ள இராமம்பாளையம் அரசு ஆரம்பப்பள்ளி தற்போது அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.
         இப்பள்ளி 1930-இல் துவங்கப்பட்டது. சுமார் 1,000 பேர் வசிக்கக் கூடிய இக்கிராமத்திலுள்ள மக்கள் சமீப காலம் வரை தங்களது குழந்தைகளை இப்பள்ளியில் சேர்க்காமல் தனியார் மெட்ரி குலேஷன் பள்ளிகளில் சேர்க்கத் துவங்கினார்கள். இந்நிலை இராமம்பாளையத்திலுள்ள அரசுப் பள்ளிக்கு மட்டுமல்ல, தமிழகத்திலுள்ள பெரும்பான்மையான அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கும் இதே நிலைமைதான். காரமடை ஒன்றியத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய ஆரம்பப் பள்ளிகள், அரசு நிதி உதவி பெறும் தனியார் பள்ளிகள் மற்றும் நகராட்சிப் பள்ளிகளில் கடந்த ஐந்தாண்டுகளில் மாணவர்கள் எண்ணிக்கை தொடர்ச்சியாகக் குறைந்து வந்துள்ளது. கடந்த 5 ஆண்டுகளில் 3 வகையான அரசுப்பள்ளிகளில் 1,898 மாணவர்கள் எண்ணிக்கை குறைந்துள்ளது. இது கவலையளிக்கக்கூடியது. ஒருபகுதி மாணவர்கள் தனியார் பள்ளிகளுக்குச் செல்கிறபோது ஏழைக் குடும்பங்களைச் சார்ந்த, குறிப்பாக தலித் மற்றும் பிற்படுத்தப்பட்ட குடும்பங்களைச் சார்ந்த குழந்தைகள் வேறு வழியில்லாத நிலையில் அரசுப் பள்ளிகளில் சேர்கின்றனர். அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் மாணவர்கள் எண்ணிக்கை குறைந்து வருவது காரமடை ஒன்றியத்தில் மட்டுமல்ல, தமிழ்நாடு முழுவதும் இதே நிலைமைதான். இந்நிலைமையை மாற்றிட அரசுக்கும் பொறுப்பு இருக்கிறது, ஆசிரியர்களுக்கும் பொறுப்பு இருக்கிறது. ஆசிரியர்கள் முயன்றால் அரசுப் பள்ளிகளில் மாணவர்களின் எண்ணிக்கை குறைவதை தடுப்பது மட்டுமல்ல, எண்ணிக்கையை உயர்த்தவும் முடியும் என்பதற்கு இராமம்பாளையம் அரசு ஆரம்பப் பள்ளி சிறந்த முன்னுதாரணமாகத் திகழ்கிறது. இராமம்பாளையம் பள்ளியில் கடந்த ஆண்டு மாணவர்கள் எண்ணிக்கை 27 மட் டுமே. நடப்பு ஆண்டில் மாணவர்கள் எண்ணிக்கை 62 ஆக உயர்ந்துள்ளது. இதில் தலித் மாணவர்கள் 53 பேர். பிற்படுத்தப்பட்ட மாணவர்கள் 8 பேர், மலைவாழ் வகுப்பைச் சார்ந்தவர் 1. மாநிலம் முழுவதும் அரசுப் பள்ளிகளில் மாணவர்கள் எண்ணிக்கை குறைந்து வருகிற நிலையில், இராமம்பாளையம் பள்ளியில் மட்டும் உயர்வதற்கு என்ன காரணம்? தற்போது ஈராசிரியர் பள்ளியாகச் செயல்படும் இப்பள்ளியில் தலைமை ஆசிரியராக 56 வயதுடைய சரஸ்வதியும், உதவி ஆசிரியராக 35 வயதான இளைஞர் பி.பிராங்ளின் என்பவரும் பணிபுரிந்து வருகிறார்கள். தலைமை ஆசிரியர் இரண்டாண்டுகளுக்குப் பிறகு ஓய்வுபெற உள்ளார். கணிதம் படித்து ஆசிரியராகப் புதிதாகப் பணியில் சேர்ந்த பிராங்ளின் கல்வித் தரத்தை உயர்த்துவது என்ற முடிவோடு பணியைத் துவங்கினார். இந்த இரண்டு ஆசிரியர்களும் எடுத்த முயற்சிதான் மேற்கண்ட மாற்றத்திற்கு காரணம். இளம் ஆசிரியர் பிராங்ளின் எடுத்த முயற்சிக்கு தலைமை ஆசிரியர் முழு ஒத்துழைப்பு கொடுத்து செயலாற்றியதும் ஆசிரியர்கள் முயற்சிக்கு இராமம்பாளையம் கிராம மக்கள் ஆதரவு அளித்ததும்தான் இந்த மாற்றத்திற்கு காரணம். குழந்தைகள் எளிதில் அமர்ந்து கல்வி கற்க ஏதுவான வட்ட மேசையும், குழந்தைகள் உட்கார இருக்கையும், இருக்கையில் புத்தகங்களை வைத்துக்கொள்ள சிறிய காப்பறையும் உள்ளன.
குழந்தைகள் தங்கள் புத்தகங்களை வீட்டுக்குச் செல்கிறபோது சுமந்து செல்ல வேண்டியதில்லை. தேவையான புத்தகம், நோட்டுகளை மட்டும் எடுத்துச் சென்றால் போதும். தரையிலிருந்து குழந்தைகளுக்கு எட்டும் உயரம் வரை சுவற்றிலேயே கரும்பலகை, சுவர்முழுவதும் பசுமையான பின்னணியில் வனம் மற்றும் பல விலங்கு களின் ஓவியம், டைல்ஸ் பதித்த தரை என குழந்தைகள் பள்ளிக்குச் சென்றால் வகுப்பறையில் விரும்பி மகிழ்ச்சியாகக் கற்க ஏதுவான சூழலில் இரண்டு வகுப்பறைகளும், திட்டமிட்ட முறையில் உருவாக்கப்பட்டுள்ளன. கோடை காலத்தில் பயன்படுத்த குளிர் சாதன வசதி, சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வசதி, வகுப்பறையில் நுழைவு வாயிலிலேயே ஆள் உயரக் கண்ணாடி, சமச்சீர் கல்வி முறை, குழந்தைகளுடன் சரிசமமாக அமர்ந்து கல்வி கற்பிக்கும் முறை ஆகியவை வகுப்பறையின் ஒட் டுமொத்த சூழலையே முற்றாக மாற்றிவிட்டது. மாணவர்களுக்கு ஆங்கிலப் பயிற்சி, நாளிதழ்களை வாசிக்கப் பழக்கப்படுத்துவது என சிறப்பு முயற்சிகளையும் ஆசிரியர்கள் மேற்கொண்டுள்ளனர். இதனால் கற்பது சுமையல்ல, கற்பது கற்கண்டே என்ற உணர்வை மாணவர்களுக்கு உருவாக்கிவிட்டார்கள். ஆசிரியர்களுக்கென்று தனி மேசை, நாற்காலி பள்ளியில் இல்லை. பாடப் புத்தகங்கள் வைப்பதற்கும், கற்பதற்கான புத்தகங்களும் அதற்காகவே உருவாக்கப்பட்ட ரேக்குகளில் மிக நேர்த்தியாக அடுக்கப்பட்டிருப்பது ஆச்சரியம் அளிக்கிறது. 11 கணிப்பொறிகள் கொண்ட தனியான அறையும், எல்சிடி புரொஜக்டருடன் கூடிய கணிப்பொறி அமைப்பும் உள்ளன. கணினி அறை மற்றும் வகுப்பறைகளுக்கு தடையில்லா மின்சாரம் கிடைக்க யுபிஎஸ் ஏற்பாடும் செய்யப்பட்டுள்ளது. குழந்தைகளே விரும்பி கடைப்பிடிக்கும் அளவிற்கு தூய்மையாக இருக்க வேண்டியதன் தேவை உணர்த்தப்பட்டதால் டெட்டால் போட்டு கைகழுவும் பழக்கமும், குப்பைகளைத் தவறாமல் குப்பைக் கூடையில் சேகரிக்கும் வழக்கமும் உள்ளன. கடந்த 4 - 5 ஆண்டுகளாக பிராங்ளின் மற்றும் தலைமையாசிரியர் சரஸ்வதி ஆகியோர் எடுத்த முன்முயற்சியால் ஓர் அரசுப் பள்ளி இவ்வளவு வியத்தகு முன்னேற்றங்களை கண்டுள்ளது. அடிப்படையில் விவசாயிகளாக இருக்கும் இவ்வூர் மக்கள் அனைவரும் ஆசிரியர்களின் சீரிய முயற்சிக்கு மேலான ஒத்துழைப்பை அளித்து வருகின்றனர். குறிப்பாக கிராமக் கல்விக்குழு தலைவர் மகேஷ், ஓய்வுபெற்ற ஆசிரியர் ஆர்.ஆர்.ஈஸ்வரன் மற்றும் கிராமத்தைச் சார்ந்தவர்கள் ஆசிரியர்களுக்கு உறுதுணையாக உள்ளனர். ஜடையம்பாளையம் ஊராட்சித் துணைத்தலைவராக உள்ள ஆர்.கே.பழனிச்சாமி பள்ளிக்கு நிதியுதவி செய்து வருகிறார். ஊர் மக்களின் ஒத்துழைப்புடன் மாதிரி வகுப்பறை உருவாக்கப்பட்டு செயல்படத் துவங்கிய நிலையில், அங்கு ஆய்வு செய்ய வந்த மாவட்ட ஆட்சியர் இதே போல் இன்னொரு வகுப்பறையை உருவாக்க ரூ.3 லட்சம் நிதியை ஒதுக்கித் தந்துள்ளார். பள்ளிக்கான சுற்றுச் சுவரும் ஊர்மக்களின் உதவியுடன் கட்டப்பட்டுள்ளது.
        அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிக ளில் சேரும் குழந்தைகள் தலித் மற்றும் பிற்படுத்தப்பட்ட ஏழைக் குடும்பங்களைச் சார்ந்தவர்கள்தான். இப்பள்ளிகள் தரமானதாக இருந்தால்தான் குழந்தைகளின் எதிர்காலம் ஒளிமயமாக அமையும். ஏழைக் குழந்தைகளின் எதிர்காலம் ஆசிரியர்களின் கையில் தான் உள்ளது. இராமம்பாளையம் பள்ளியை நடுநிலைப் பள்ளியாக உயர்த்தினால் மேலும் வகுப்பறை கள் கட்டுவதற்கான இடத்தை வழங்கவும் ஊர் மக்கள் தயாராக உள்ளார்கள். தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள் எல்லாம் இராமம்பாளையம் பள்ளிகளாக உருவாகிட ஆசிரியர்களின் முயற்சி முக்கியமானது. இராமம்பாளையம் பள்ளி மாநிலம் முழுவதுமுள்ள அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கும் அரசுக்கும் சமூகத்திற்கும் உணர்த்தும் பாடத்தைப் புரிந்து கொண்டால் மாற்றம் நிச்சயம். அரசின் ஆதரவு, ஊர் மக்களின் உதவியும் அடிப்படையானது. இராமம்பாளையம் ஆரம்பப்பள்ளி நல்லாசிரியர்களைப் போற்றுவோம். அனைத்து அரசு மற்றும் உள்ளாட்சி அமைப்புகள் நடத்தும் பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகள் அனைத்தும் இதுபோன்று மாறட்டும்.

 நன்றி : NewsHunt / 29.03.2013

வெள்ளி, 29 மார்ச், 2013

Fidel Castro & Jyoti Basu among those honoured by Bangladesh....!

        
         Cuban revolutionary leader Fidel Castro,  former British Prime Minister Lord Harold Wilson; and former West Bengal Chief Minister Jyoti Basu were among the 69 ‘foreign friends’ honoured by Bangladesh on Sunday for their contribution to the country’s liberation war in 1971.

         This is the sixth phase of the awards, given out to ‘foreign friends’, a process that began during the current government of Prime Minister Sheikh Hasina.
          Friends from Cuba, United Kingdom, Pakistan, India, Nepal, Japan, the United States, Australia and Sweden have been awarded in two categories — ‘Friends of Liberation War Honour’ and ‘Liberation War Honour’.
       Fidel Castro and Harold Wilson have been awarded ‘Liberation War Honour’. Representatives of Mr. Castro and two-time British Prime Minister Mr. Wilson received the honours. Jyoti Basu has been awarded ‘Friends of Liberation War Honour’.
        The highest honour was awarded to former Indian Prime Minister Indira Gandhi in July 25 last year. Her daughter-in-law Sonia Gandhi accepted the honour on her behalf.  Indian President Pranab Mukherjee was awarded ‘Liberation War Honour’ on March 5 this year.
                 Prime Minister Sheikh Hasina presented them with the citations and the awards in a ceremony at the capital’s Bangabandhu International Conference Centre on Sunday.
          Ten prominent Pakistani nationals were honoured this time. They included: Begum Naseem Akhtar, Dr. Iqbal Ahmed, Mir Ghaus Bakhsh Bizenjo, all politicians; Zafar Malik, a lawyer; Faiz Ahmed Faiz, a poet; and Begum Tahira Mazhar Ali, Human rights activist among others. Human rights activist Asma Jahangir, daughter of former politician and civil servant Malik Ghulam Jilani and journalist Hamid Mir, son of Waris Mir, another journalist, received the awards on behalf of their fathers.
          Several prominent Indian military and civil personalities, including Lt. Gen. Jagjit Singh Aurora; Lt Gen. Sagat Singh; Vice Admiral Swaraj Prakash; Major General Antony Harold Edward Michigan received ‘friends of liberation war awards’ this time.
          So far, 206 individuals and organisations have been given the honour for their contributions to Bangladesh’s liberation war.
courtesy : The Hindu

மோடி ஆளும் குஜராத் மாநிலத்தின் இலட்சணம் இது தான்...!

 THE REALITY BEHIND                      
 GUJARAT MODEL.....!                  
 Do you know....?                    

• Wages : 

       The wage rates of casual and regular workers of both men and women workers in rural and urban areas are very low compared to other States. As per the latest National Sample Survey Office statistics, the daily wage rates of casual men and women workers in rural areas are lower than the corresponding rates in India, with the State ranking 14th (Rs.69) and ninth (Rs.56) in men’s and women’s wage rates respectively among the major 20 States. In the case of urban casual workers’ daily wages, the State ranked seventh (Rs.109) and 14th (Rs.56) for male and female wage rates. In the case of regular rural workers also the State ranked 17th (Rs.152) and ninth (Rs.108) in the male and female wage rates respectively. The corresponding ranks for urban areas are 18th (Rs.205) and 13th (Rs.182) respectively among the major 20 States in India. According to NSSO 2011 figures about 98 per cent of the women workers and about 89 per cent of the male workers in the State are engaged in informal work .

• Nutrition : 

        The NFHS-3 tells us that 47 per cent of children below the age of three in the State were underweight. That figure was 45 per cent in NFHS-2. That’s about twice the average for sub-Saharan Africa. It is also marginally higher than the nationwide average of 46 per cent. The percentage of Gujarat’s children who are ‘wasted’ also went up from 16 to 17 per cent between the two NFHS surveys
     According to statistics from a report of the Ministry of Statistics and Programme Implementation, “Children in India, 2012—A Statistical Appraisal”, between 40 and 50 per cent of children in Gujarat are underweight, which bursts one more myth in Gujarat’s story of growth. Other States in this low weight category are Meghalaya, Chhattisgarh, Uttar Pradesh and Odisha. Human Development Report 2011 said around half of Gujarat’s children were malnourished.

• Gujarat is the 7th worst state in adult men having a body mass index of less than 18.5.

• Infant mortality

        Infant mortality is high in Gujarat, which ranks 11th countrywide in the rate of decline of infant mortality. According to “Children in India, 2012”, the infant mortality rate in Gujarat was still high, with 44 fatalities of infants per 1,000 live births.
        In its 2012 State-wise report, the United Nation’s Children’s Fund (UNICEF) said, “Almost every second child in Gujarat under the age of five years is undernourished and three out of four are anaemic. Infant and maternal mortality rates have reduced very slowly in the last decade…. One mother in three in Gujarat struggles with acute under-nutrition….”

• Child marriage : 
 
Gujarat ranks fourth in reported cases of child marriage.

• School dropout rate : United Nations Development Programme (UNDP) statistics show that Gujarat ranks 18th when it comes to success in keeping children in schools. 59% school drop out

• The school life expectancy of children in Kerala (which ranks first) is 11.33 years, while that of children in Gujarat is 8.79 years.

• Percentage of reduction of poverty : 

Statistics of the NSSO show that the percentage of reduction of poverty between 2004 and 2010 was the lowest in Gujarat, at 8.6 per cent.

• Water : 
 
           According to Census 2011, 43 per cent of the rural households in Gujarat get water supply on their premises and 16.7 per cent get treated water from a common tap

• Toilets:        

         The data show that 67 per cent of rural households in the State have no access to toilets and members of more than 65 per cent of the households defecate in the open, very often polluting common water sources. Waste collection and disposal are matters practically unheard of. The State ranks 10th in the use of latrines

• Comprehensive Environmental Pollution Index (CEPI) : 

        Anything over 70 on this index is considered to have crossed critical levels, that is, the pollution exceeds the capacity of the environment to handle it and it becomes a dangerous health hazard. According to statistics from the Central Pollution Control Board, Ankleshwar and Vapi in Gujarat top the list of 88 severely polluted industrial areas in India. Ankleshwar has a CEPI rating of 88.50 while Vapi’s is 88.09. Of the 88 areas, eight are in Gujarat


• Employment growth : 

       NSSO data show that in Gujarat , growth in employment has dropped to almost zero in the past 12 years

• Human Development Index : 

          Gujarat (0.519) stands 11th in Human Development Index among the states in India. Where Kerala(0.790) stands first.

• Sex ratio : 

Gujarat (918) stands 24th . where kerala(1084) stands first.

• Vaccination coverage : 

       In Gujarat percentage of children between 12-23 months of age who received all recommended vaccines is 45 % . that is in 19th among the states in India.

• Gujarat stands 12th in literacy among the states in india

• In Gujarat 28.2% man and 32.3 % women are underweight .

• In Gujarat percentage of children delivered in hospital is only 55%
 
courtesy : Pravda Meethal

மக்கள் நலன் சார்ந்த கொள்கைகளை அமல்படுத்தக் கூடிய அரசு தேவை : சீதாராம் யெச்சூரி

         
     ''மக்கள் நலன் சார்ந்த கொள்கைகளை அமல்படுத்தக்கூடிய அரசுதான் இன்றைய தேவை'' என்று மார்க்சிஸ்ட்
கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக் குழு உறுப்பினர் சீதாராம் யெச்சூரி தெரிவித்துள்ளார்.
      இது குறித்து சீதாராம் யெச்சூரி எழுதியுள்ள கட்டுரையில் தெரிவித்துள்ளதாவது :
        "தேர்தல் நெருங்கும் சமயத்தில் புதிய கூட்டணிகள் குறித்த பேச்சுகள் எழுவது வழக்கமானதே. ஆனால், 2014இல் பொதுத்தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், இப்போதே தேர்தல் கூட்டணி பற்றிய பேச்சுகள் தொடங்கியுள்ளதற்கு காரணம், மத்திய அரசு, சிறுபான்மையாக மாறிவிட்டதுதான். மத்தியில் உள்ள காங்கிரஸ் தலைமையிலான அரசு ஸ்திரமற்ற நிலையில் உள்ளது. அக்கூட்டணியிலிருந்து திரிணமூல் காங்கிரஸ் விலகியபோதே, அது ஒரு சிறுபான்மை அரசாக மாறிவிட்டது. இப்போது திமுக வெளியேறிவிட்ட நிலையில், காங்கிரஸ் கூட்டணி மேலும் பலவீனமடைந்துவிட்டது. வெளியிலிருந்து ஆதரவு தரும் சமாஜவாதி, பகுஜன் சமாஜ் ஆகிய கட்சிகளின் ஆதரவுடன்தான் ஆட்சியில் தொடர முடியும் என்ற நிலையில் காங்கிரஸ் கூட்டணி உள்ளது. இது போன்று வெளியிலிருந்து ஆதரவைப் பெறுவதற்கு சலுகைகள் அளிப்பதாகக் கூறியோ அல்லது மிரட்டியோதான் ஆட்சியில் நீடிக்கின்றனர் என்பது தெளிவாகத் தெரிகிறது. சமாஜவாதி கட்சி, மூன்றாவது அணி குறித்து பேசத் தொடங்கியுள்ளது. பொருளாதார மந்த நிலை, விலைவாசி உயர்வு உள்ளிட்டவற்றால் மக்கள் மிகுந்த பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர். இதிலிருந்து விடுபடும் வகையில் மாற்றம் வராதா என்று அவர்கள் தவிக்கின்றனர். அவர்கள் தரும் நெருக்கடி காரணமாகத்தான், சமாஜவாதி மூன்றாவது அணி குறித்த கருத்தை தெரிவித்து வருகிறது. மக்கள் விரும்பும் மாற்றம், காங்கிரஸ் மற்றும் பாஜக அல்லாத அரசு வந்தால் மட்டும் ஏற்பட்டுவிடாது. மாற்றுக் கொள்கைகளை அமல்படுத்துவதன் மூலம்தான் மாற்றத்தைக் கொண்டு வர முடியும். இப்போதைய தேவை மாற்று அரசு மட்டுமல்ல, மக்கள் நலன் சார்ந்த கொள்கைகளை அமல்படுத்தக் கூடிய அரசும்தான்'' என்றார் சீதாராம் யெச்சூரி.
 நன்றி :
NewsHunt

புதன், 27 மார்ச், 2013

இந்தியாவின் வெளியுறவுக் கொள்கைக்கே வேட்டு வைக்கும் ஜெயலலிதாவின் தீர்மானம்....!




























        தமிழ்நாட்டில் வர வர  ஜெயலலிதாவும், கருணாநிதியும் இலங்கைத் தமிழர்கள் மீது போட்டிப்போட்டுக்கொண்டு பாசமழை பொழிகிறார்கள். பாசமழைப் பொழிவதில் இந்த இரண்டு பேரில் யார் தான் மிக அதிகமாக பொழிகிறார்கள் என்பதைப் பார்த்து வருகிற பாராளுமன்றத்தேர்தலில் தமிழக மக்கள் தங்களுக்கே ஓட்டுப் போடுவார்கள் என்ற நினைப்பில் இவங்க இரண்டு பேரும் நடத்துகிற உள்நாட்டு யுத்தமிருக்கே அது இலங்கையில் நடந்த உள்நாட்டு யுத்தத்தையும் மிஞ்சிவிடும் போலிருக்கு. இந்த இரண்டு பேரும் நாட்டின் பின்விளைவுகள்  எதையும் கருத்தில் கொள்ளாமல் அம்புகளையும், அஸ்திரங்களையும் மாறி மாறி வானத்தை நோக்கி விட்டுகிட்டே இருக்காங்க என்பது வேடிக்கையாய் இருக்கிறது.
         இவர்கள் இருவரும் தமிழக அரசியலையும், இந்திய அரசியலையும் விட்டுபுட்டு சர்வதேச அரசியலில் சஞ்சரிக்க ஆரம்பிச்சுட்டாங்க. இந்திய நாட்டின் வெளியுறவுக் கொள்கையையே கேள்விக்குறிக்கு உள்ளாக்குகிறார்கள். மாநில அரசியல்வாதிகளால் நாட்டின் வெளியுறவுக்கொள்கையே நெருக்கடிக்குள்ளாகிறது என்று நமது குடியரசு துணைத்தலைவர் ஹமீது அன்சாரி வேதனையுடன் குறிப்பிட்டார். அந்த அளவிற்கு ஜெயலலிதாவும், கருணாநிதியும் நாட்டின் வெளியுறவுக்கொள்கையை கையில் எடுத்துக்கொண்டு பின்விளைவுகளையும் ஆபத்தையும் உணராமல் விளையாடிக்கொண்டிருக்கிறார்கள்.
        # ஏற்கனவே இலங்கை மீது பொருளாதார தடை விதிக்க வேண்டும் என்று சட்டமன்றத்தில் முதலமைச்சர் ஜெயலலிதா தீர்மானம் நிறைவேற்றி இலங்கை தமிழர்கள் மீது தனக்கிருக்கிற அக்கறையை காட்டினார் என்பதை நாடே பார்த்தது.
        # இலங்கை தடகள விளையாட்டு வீரர்கள் கலந்துகொள்வார்கள் என்பதற்காக தமிழகத்தில் நடத்துவதாக இருந்த ''ஆசிய தடகளப் போட்டியை'' தமிழகத்தில் நடத்தக்கூடாது என்று ஜெயலலிதா மத்திய அரசுக்கு தெரிவித்தார்.
        # இந்திய பெருமுதலாளிகளின் சுரண்டல் விளையாட்டான ஐ. பி. எல். கிரிக்கெட் போட்டியில் சென்னையில் நடக்கும் போட்டியில் இலங்கைக் கிரிக்கெட் வீரர்களை நீக்கவேண்டும் என்று ஜெயலலிதா கடுமையாக கேட்டுக்கொண்டார்.
        # இலங்கையில் வரும் நவம்பர் மாதம் நடைபெறவிருக்கிற காமன்வெல்த் மாநாட்டில் இந்திய கலந்துகொள்ளாது புறக்கணிக்கவேண்டும்  என்று பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு முதலமைச்சர் ஜெயலலிதா கடிதம் எழுதினார்.
        # இவை எல்லாவற்றிற்கும் சிகரம் வைத்தார் போல், இன்று காலை தமிழக சட்டமன்றத்தில், இலங்கையுடனான ராஜ்ய உறவுகளையும், நட்புறவையும் இந்திய  அரசு துண்டித்துக்கொள்ள வேண்டும் என்றும், தமிழர்கள் அடங்கிய ''தனி ஈழம்'' உருவாக்கவேண்டும் என்றும் மத்திய அரசை வலியுறுத்தி  முதலமைச்சர் ஜெயலலிதாவே ஒரு தீர்மானத்தை கொண்டுவந்து நிறைவேற்றியிருக்கிறார். ஒரு மாநில முதலமைச்சரே அண்டை நாடுகளுடனான நட்பு, அமைதி, பரஸ்பர உதவி போன்றவை அடங்கிய இந்திய அரசின் வெளியுறவுக் கொள்கையை கேள்விக்குறியாக்கி இருப்பது என்பது வேதனைக்குரிய செயலாகும். அண்டை நாடுகளுடனான ராஜ்ய உறவுகள் சம்பந்தப்பட்ட விஷயங்களை கையில் எடுக்கும் போது கவனமும், நிதானமும் மிக மிக முக்கியமானது என்பது ஒரு முதலமைச்சருக்கு தெரியாமல் இருக்காது.
          ஜெயலலிதாவும், கருணாநிதியும் விளையாடும் இது போன்ற வெளியுறவு கொள்கை மீதான விளையாட்டுகள் இவர்கள் நினைப்பது போல் தேர்தலுக்கோ, ஓட்டுக்கோ உதவாது. மாறாக இலங்கையில் எஞ்சியிருக்கக்கூடிய தமிழர்களுக்கு எதிராக அமைந்துவிடும் என்பதை இவர்கள் கருத்தில் கொல்லவேண்டும். இலங்கையில் வாழக்கூடிய தமிழர்களின் வாழ்வாதாரத்தை உறுதிபடுத்துவதற்கு என செய்யவேண்டுமோ அதைப் பற்றிய சிந்தனையில் இவர்கள் இறங்கவேண்டும். இதைத்தான் இலங்கைத் தமிழர்களும்  எதிர்ப்பார்க்கிறார்கள்.

செவ்வாய், 26 மார்ச், 2013

காமன்வெல்த் மாநாட்டை புறக்கணிக்கச் சொல்வது சிறுபிள்ளைத்தனமானது....!


எழுதுகிறேன்....

Travelling through Suffering India


 
 
    

Travelling from the finance capital of India, Mumbai, the Western Sangharsh Sandesh Jatha covered 2717 kilometres through Maharashtra, Madhya Pradesh, Uttar Pradesh and Haryana to reach Delhi. Starting from Hutatma Chowk, (Martyr's square : now a dysfunctional symbol of British Bombay – Flora fountain) a location that hosts many corporate headquarters and the Stock Exchange, a perfect reference for what we call the 'Shining India', it travelled through one of the most backward regions in the country – Dhule, Nandurbar, and Bundelkhand – the 'Suffering India', of the majority.
        The jatha had started from the land of Lokmanya Bal Gangadhar Tilak, who gave the call, 'Freedom is my birth right and I shall have it' and passed through the land of Rani of Jhansi who was martyred in the first war of Indian independence. All through, the people we met, identified themselves with the six-main slogans of the jatha and paraphrased them: 'land for the landless, food for all, jobs for all, education for all and health for all, are our birth rights and we shall have them'.
        The agony among the people in all the areas we had visited was palpable. The severe drought conditions in Dhule and Nandurbar of Maharashtra had forced many of the farmers to abandon the villages and migrate to cities. Those remaining in these regions, told us that cultivation will be difficult for the next five years because there are no sources of water even over 2000 feet underground. The government has done precious little to increase the area under irrigation in this region. The peasants expressed their distress at the present situation and were apprehensive that this region too would soon become a hotbed for suicides like in the other parts of Maharashtra. Experiencing such a daily struggle for life, the jatha moved to Madhya Pradesh.
          Garlanding the statue of B R Ambedkar in Mhow, his birth place, we were reminded of his famous concluding speech in the Constituent Assembly, commending the Constitution for approval – We have created a society that grants one person one vote and one vote one value. But are yet to create a society where one person has the same one value. Our jatha carried the 'sandesh' to strengthen popular struggles – Sangharsh – to end such social and economic disparities. As Ambedkar said: “How long will we continue to live like this?”
           Holding a public meeting in front of the statue of Rani of Jhansi, Laxmibai, the precise spot assumed to be where she was killed, one could not help but contemplate how insidiously the BJP government in Madhya Pradesh is spreading communal poison, whereas here lies a Rani, who performed her pooja every morning, took up a sword to fight the British and proclaimed the Lal Quila's Mughal, Bahadur Shah Zafar as the Head of Independent India. The BJP decrying the minorities as 'Babur ka aulad', is openly discriminating against them. The need to wage a struggle against these communal forces brings back onto agenda the task of consolidating the syncretic character of Indian civilisation against the divisive policies of caste, gender and communalism.
               From an area of institutionalised communalism, we entered the land of caste based khap panchayats. This only reinforced the long distance and way Indian revolution has to travel to establish a society where we can find a true expression of liberty, equality and fraternity.
            One could see a growing popular perception for sharpening struggles on all these scores. The responsibility of Indian communists grows more than of anybody else to intensify the struggles and mitigate the sufferings of the majority of our people.

இசையால் இதயங்களை வசமாக்கிய டி. எம். சௌந்தரராஜனுக்கு விருது...!

91 வது பிறந்த நாளைக் கொண்டாடும் டி.எம்.எஸ். பிறந்த நாள் கேக் வெட்டுவதற்கு பினராயி விஜயன் உதவுகிறார்.
       தமிழ்த் திரையுலகில் பாடல்களுக்கு என்று ஒரு தனியிடம் உண்டு. பாடல்கள் அவற்றின் மொழி வளத்தால் மட்டும் பாராட்டு பெறுவதில்லை. அவற்றை பாடுகிறவர் தான் மக்களிடம் அதை எடுத்துச் செல்கின்றனர். மக்களின் மனதில் பதிய வைக்கின்றனர். அந்தப் பாடல்கள் சாகாவரம் பெறுகின்றன. சாகாவரம் பெற்ற பாடல்களை நூற்றுக்கணக்கில் பாடி தமிழ்த் திரை ரசிகர்களின் மனதை மட்டும் அல்லாது, தென்னிந்திய ரசிகர்களின் மனதையும் கொள்ளை கொண்ட ஒரு பாடகர் டி.எம்.சௌந்திரராஜன் என்பதை அனைவரும் ஏற்றுக்கொள்வார்கள். அவர் தனது 91வது வயதை மார்ச் 24 அன்று நிறைவு செய்தார். தம்முடைய 60 ஆண்டுகளுக்கு மேலான திரைப்பட வாழ்வில் 11 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தமிழ் திரைப்பாடல்களும் 2500க்கும் மேற்பட்ட பக்திப்பாடல்களும் பாடியுள்ளார். அவருக்கு திருவனந்தபுரத்தில் உள்ள ''ஸ்வரலயா இசை'' நிறுவனமும் ''கைரளி தொலைக்காட்சி'' நிறுவனமும் இணைந்து “வாழ்நாள் சாதனையாளர்” விருது வழங்கி கௌரவித்தன. ஞாயிற்றுக்கிழமையன்று மாலையில் கழக்குட்டம் அல்-சஜ் கருத்தரங்க மையத்தில் நடந்த விழாவில் இந்த விருது அவருக்கு வழங்கப்பட்டது.
       இந்த விழாவில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கேரள மாநிலச்செயலாளர் பினராயி விஜயன், பின்னணிப்பாடகர் கே.ஜே.ஜேசுதாஸ், பின்னணி பாடகர்கள் மாதுரி, சுஜாதா, உன்னி மேனன், விஜய் ஜேசுதாஸ், ஸ்வேதா மேனன், எம்.ஜெயச்சந்திரன் ஆகியோர் கலந்து கொண்டனர். எம்.ஜெயச்சந்திரனுக்கு ஸ்வரலயா விருது அளிக்கப்பட்டது. பிறந்தநாள் கொண்டாடும் டி.எம்.எஸ். கேக் வெட்டினார். அவரை பினராயி விஜயன் கேக் வைக்கப்பட்டிருந்த இடத்துக்கு அழைத்துச் சென்று கேக் வெட்ட உதவினார். பின்னர் அவர் டி.எம்.எஸ்.சுக்கு கேக் ஊட்டி விட்டார். அவருக்குப்பின் ஜேசுதாஸ், ஜெயச்சந்திரன் ஆகியோர் கேக் ஊட்டி விட்டனர். டி.எம்.சௌந்திரராஜனுக்கு ஜேசுதாசும், ஜெயச்சந்திரனும் வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கினர். அவருக்கு விருதும் ரூ.1 லட்சத்துக்கான காசோலையும் வழங்கப்பட்டது. 1922ம் ஆண்டில் புரோகிதம் செய்யும் சௌராஷ்டிரா குடும்பத்தில் துகுளுவா மீனாட்சி ஐயங்கார் சௌந்திரராஜன் பிறந்தார். ஏழு வயதில் கர்நாடக இசையைக் கற்க தொடங்கிய அவர், தனது 21ம் வயதில் மேடைகளில் பாட ஆரம்பித்தார். 1946ல் தயாரிப்பு தொடங்கி 1950ல் வெளியான கிருஷ்ணவிஜயம் திரைப்படத்தில் ‘ராதே என்னை விட்டு ஓடாதேடி’ என்ற பாடல்தான் அவருடைய முதல் பாடல். அதையடுத்து மந்திரிகுமாரியில் ‘அன்னமிட்ட வீட்டிலே’ என்ற பாடலைப்பாடினார். தமிழ்த்திரையுலகில் பிரவேசித்த அவர் பின்னணிக்குரல் கொடுக்காத கதாநாயகர்களே இல்லை என்ற அளவுக்கு அவர் உயர்ந்தார். கூண்டுக்கிளியில் ‘கொஞ்சும் கிளியான பெண்ணை’ என்ற பாடலுக்கு சிவாஜிகணேசனுக்கு முதல் முதலாக இவர் குரல் கொடுத்தார். இந்தப் பாடலைக் கேட்ட எம்.ஜி.ஆர். மலைக்கள்ளனில் அவரை தனக்கு பின்னணி பாடவைத்தார். 'எத்தனை காலம்தான் ஏமாற்றுவார்' என்ற பாடல் இவர் எம்.ஜி.ஆருக்கு பாடிய முதல் பாட்டு. இருவரும் ஓய்வு பெறும் வரை அவர்களின் பாடல் குரலாக டி.எம்.எஸ். திகழ்ந்தார். நடிகர்களின் குரலுக்கொப்ப தன்னுடைய குரலை மாற்றிக்கொண்டு பாடுவதில் வல்லவரான டி.எம்.எஸ். திரைப்படங்களில் ஜெமினி கணேசன், என்.டி.ராமாராவ், எம்.ஆர்.ராதா (சரக்கு இருந்தா அவுத்து விடு-குமுதம்), எஸ்.எஸ்.ராஜேந்திரன், ஜெய்சங்கர், ஏ.நாகேஸ்வரராவ், ரவிச்சந்திரன், நாகேஷ், காந்தாராவ், டி.எஸ்.பாலையா, ஜக்கையா என இவர் பின்னணி பாடிய நடிகர்களின் பட்டியல் நீளமானது. 2010ம் ஆண்டில் தமிழ்ச் செம்மொழி மாநாட்டு கீதத்திலும் இவர் குரல் உள்ளது.
நன்றி :

திங்கள், 25 மார்ச், 2013

ஆன்மீகமும், ஆட்சியாளர்களும் கைவிட்ட பிருந்தாவன் விதவைப் பெண்கள்....!


 
         உத்திரபிரதேச மாநிலத்தில் மதுரா மாவட்டத்தில் பிருந்தாவனம் (விருந்தாவன்) என்ற நகரம் ''புண்ணிய நகரம்'' என்றும், ''புனித ஸ்தலம்'' என்றும் ஆன்மீகவாதிகளால் போற்றப்பட்டு வருகிறது. மதுராவிலுள்ள கிருஷ்ணன் கோயிலுக்கு செல்பவர்கள் கண்டிப்பாக விருந்தாவன் செல்லாமல் வரமாட்டார்கள். ஏனென்றால் அந்த நகரம் கிருஷ்ணனை திருமணம் செய்துகொள்ள தவமாய் தவமிருந்த மீரா வாழ்ந்து மறைந்த இடம் என்ற நம்பிக்கையில் அந்த நகரம் முழுதும் ஏராளமான ஆசிரமங்கள் இருக்கின்றன. எந்த ஆசிரமங்களுக்கு சென்றாலும் இது மீரா தொடங்கிவைத்த ஆசிரமம் என்று ஒரு கதை சொல்லுவார்கள். அந்த ஆசிரமத்திற்கு உள்ளே சென்று பார்த்தால், ஏராளமான பெண்கள் 14 - 15 வயதிலிருந்து முதுமையடைந்த பெண்கள் வரை வெள்ளைப்புடவை அணிந்து நெற்றியில் நாமம் இட்டு தலையில் முக்காடு போட்டு கைத்தட்டிக் கொண்டு மீராவின் பஜனைப் பாடல்களை பாடிக்கொண்டிருப்பார்கள். இது போன்று பல ஆசிரமங்கள் மீராவின் பெயரில் இயங்கிக்கொண்டிருந்தன.

யார் இவர்கள்...?

           உத்திரபிரதேசம் மற்றும் பக்கத்து மாநிலங்களான மேற்குவங்கம், பீகார், ஒடிஸா போன்ற பகுதிகளிலிருந்து பெற்றோர்களினாலும் உறவினர்களாலும் அழைத்துவரப்பட்டு இந்த ஆசிரமத்தில் சேர்க்கப்படும் அத்தனைப் பெண்களும் கணவனை இழந்தப் பெண்கள் என்பது குறிப்படத்தக்கது. குழந்தைப் பருவத்தில் 14 - 15 வயதில் திருமணமாகி கணவனை இழந்த குழந்தைகள் உட்பட இளம்பெண்களும் மற்றும் வயதான பெண்களும் அவர்களில் அடங்குவர். அதுமட்டுமல்லாது, இவர்களில் பெரும்பாலானோர்  வயதான பணக்காரனுக்கு இரண்டாவது மனைவியாக வாழ்க்கைப்பட்டவர்களும் இருக்கிறார்கள். இந்த பகுதிகளில் வாழும் இளம் வயது பெண்கள் தங்களின் கணவன் மறைந்த பிறகு வேறொரு துணையைத் தேடிக்கொள்ளும் உரிமை பெண்களுக்கும் கிடையாது. கணவனை இழந்த தன்  மகளுக்கு வேறொரு துணையை அமைத்துத் தரும் பொறுப்பும் அவர்களின் பெற்றோர்களுக்கும் கிடையாது. மாறாக பிற்போக்குத்தனமான எண்ணங்களும் வழக்கங்களும் தான் இன்றைக்கும் அங்கு புரையோடி இருக்கின்றன. கணவனை இழந்த அந்தப் பெண்ணின் மனதில் வேறு எந்தவித எண்ணங்களும், ஆசைகளும், கற்பனைகளும் இயற்கையாக எழுந்துவிடக்கூடாது என்பதற்காக பாதிக்கப்பட்ட அந்தப் பெண்ணை இந்த மீரா ஆசிரமத்தில் சேர்த்து விடுகிறார்கள். அதுமட்டுமல்ல அத்தோடு அந்தப் பெண்ணையும் மறந்துவிடுவார்கள். கணவன் இறந்த பிறகு தன்  சொந்த பிள்ளைகளால் இங்கு அழைத்து வரப்பட்டு விடப்பட்டப் பெண்களும் இருக்கிறார்கள்.
         அதேப்போல் ஆசிரமத்திலும், அந்தப் பெண்களின் இயற்கையான எண்ணங்களையும், ஆசைகளையும் திசைத்திருப்புவதற்கு எந்நேரமும் கிருஷ்ணனையே வணங்கிக்கொண்டிருக்க வேண்டும் என்று மீரா பஜனையை பாடிக்கொண்டேயிருப்பார்கள். கூடவே அந்தப் பெண்களும் கைகளைத் தட்டிக்கொண்டு பாடிக்கொண்டே இருப்பார்கள்.  பாதிக்கப்பட்ட அந்தப் பெண்களின் கவனம் முழுதும் ''ஹரே கிருஷ்ணா... ஹரே கிருஷ்ணா...'' துதிப்பதிலேயே இருக்கச் செய்து மூளைச் சலவை செய்துவிடுவார்கள்.  இவர்கள் சாப்பிடும் உணவில் சுவைக்குப் பயன்படுத்தப்படும் உப்பே இருக்காது என்பது  கொடுமையானது. பெரும்பாலான காலங்களில் இவர்கள் பிச்சையெடுத்து தான் சாப்பிடுகிறார்கள் என்பது அதைவிடக் கொடுமையானது.
                அதுமட்டுமல்லாது அவர்கள் பயன்படுத்தும் இடம் காற்றோட்ட வசதியுடனோ, சுத்தமாகவோ, சுகாதாரமாகவோ இருக்காது. அவர்கள் அருந்துவதற்கு குடிநீர் கூட சுத்தமான குடிநீர் கிடையாது. இவர்களுக்கு எழுத படிக்கத் தெரியாது. இவர்களுக்கென்று ரேஷன் கார்டு கிடையாது. முதியோர் பென்ஷன் கிடையாது. இவர்கள் அறிந்ததெல்லாம் கிருஷ்ணனும், மீரா பஜனையும் தான் என்பது தான் வேடிக்கையானது. ஆனால் இதுவரை இவர்கள் துதித்த கிருஷ்ணனும் காப்பாற்றவில்லை. இவர்கள் மூச்சிறைக்க பஜனைப் பாடினார்களே அந்த மீராவும் காப்பாற்றவில்லை. வழக்கம் போல் மத்திய - மாநில  இவர்களை கண்டுகொள்ளவே இல்லை.
         ஆனால் இவர்களின் இந்த அவல நிலையை கண்டு  ''சுலப் இன்டர்நேஷனல்'' என்ற தன்னார்வ தொண்டு நிறுவனம் ஒன்று உச்சநீதி மன்றம் செல்ல, நீதிமன்றமோ அந்த பாதிக்கப்பட்ட பெண்களை பாராமரிக்கும் பொறுப்பை அவர்களிடமே சென்ற ஆகஸ்ட் மாதம் கொடுத்தது என்பது சற்றே ஆறுதலான விஷயமாகும். அந்த தொண்டு நிறுவனமானது, விருந்தவன் நகரில் ஆசிரமங்களிலும், வாடகை வீடுகளிலும் என எங்கெல்லாம் கணவனை இழந்த பெண்கள்  வசித்துக்கொண்டிருக்கிறார்களோ அவர்களைத் தேடிக் கண்டுப்பிடித்து அரசே நடத்தும் ஐந்து ஆசிரமங்களில் தங்கவைத்து பராமரிக்கிறார்கள். இதுவரை 700 பெண்களை கண்டுபிடித்து பராமரிக்கிறார்கள்.  இவர்களுக்கு மாதம்தோறும் ரூ.2000 உதவித்தொகை வழங்கிவருகிறார்கள். எழுத படிக்க கற்றுக்கொடுக்கிறார்கள். இவர்கள் தங்களுக்கென்று வருமானத்தை ஏற்படுத்திக் கொள்வதற்கு பூக் கட்டுவது, ஊதுபத்தி செய்வது போன்ற சுயதொழில் சொல்லிக்கொடுக்கிறார்கள். இவர்களுக்கென்று சிறப்பு மருத்துவ வசதிகளும் செய்யப்பட்டிருக்கிறது. கொஞ்சம் கொஞ்சமாக அந்தப் பெண்களின் மனநிலையிலும், வாழ்நிலையிலும் ''சுலப் இன்டர்நேஷனல்''  தொண்டு நிறுவனம் மாற்றங்களை கொண்டுவந்திருக்கிறது என்று தான் சொல்லவேண்டும்.
          நேற்று ஞாயிற்றுக்கிழமை அந்த தொண்டு நிறுவனம் ஏற்பாடு செய்திருந்த ஹோலிப்பண்டிகையை அந்தப் பெண்கள் புதிய அனுபவத்துடனும், மிகுந்த மகிழ்ச்சியுடனும் தங்கள் மீது வண்ண வண்ண மாவுகளை வீசிக்கொண்டும், பூக்களை வீசிக்கொண்டும் சிறப்பாக கொண்டாடினார்கள் என்பது தான் இதுவரை விருந்தவனமே கண்டிராத காட்சிகளாகும். இத்தனை காலமாய் பாலைவனத்தில் வாழ்ந்து கொண்டிருந்த இவர்கள் வாழ்க்கையிலும் வண்ண வண்ண மலர்கள் பூத்து மனம் வீசத் தொடங்கியிருக்கிறது என்பதை பார்க்கும் போது நிம்மதியாகவும், மகிழ்ச்சியாகவும் இருக்கிறது. இந்த நேரத்தில் அந்த தொண்டு நிறுவனத்தையும் பாராட்டாமல் இருக்கமுடியாது.

உலக நாடுகளுக்கு வழிகாட்டுகிறது ஈக்வடார்...!

        
         “எனதருமைத் தோழனே, ஈக்வடார் மக்கள் தந்த இந்த மாபெரும் வெற்றியை உனக்குச் சமர்ப்பிக்கிறேன்...” - தனது மரணத்திற்கு இரண்டு வாரத்திற்கு முன்பு, கடந்த பிப்ரவரி 16ம் தேதி ஈக்வடார் நாட்டின் ஜனாதிபதி ரபேல் கோரியாவிடமிருந்து இப்படியொரு நெகிழ்ச்சிமிக்க கடிதத்தைப் படித்துக்கொண்டிருந்தார் வெனிசுலா ஜனாதிபதி ஹியூகோ சாவேஸ். 
         மூன்றாவது முறையாக ரபேல் கோரியா, ஈக்வடார் நாட்டின் ஜனாதிபதியாக பெருவாரியான வாக்குகளைப் பெற்று மகத்தான வெற்றி பெற்றிருக்கிறார். ஜனாதிபதி தேர்தலைத் தொடர்ந்து நடைபெற்ற நாடாளுமன்றத்தேர்தலிலும் கோரியாவின் “தேசக்கூட்டுறவு இயக்கம்” எனும் கட்சி பிரம்மாண்டமான வெற்றியைப்பெற்றிருக்கிறது. ஜனாதிபதி தேர்தலில் 58 சதவீத வாக்குகளைப் பெற்ற கோரியா, தன்னை எதிர்த்துப்போட்டியிட்ட வலதுசாரிப் பெரும் முதலாளி கில்லர்மோ லஸ்ஸோவையும், அமெரிக்கக் கைக்கூலியாக ஐந்து ஆண்டுகள் இந்நாட்டை ஆட்சி செய்த முன்னாள் ஜனாதிபதி லூசியோ குடிரெஸ்ஸையும் படுதோல்வி அடையச்செய்தார்.
          நாடாளுமன்றத்தில் கோரியாவின் கட்சி 70 சதவீதத்திற்கும் அதிகமான இடங்களைக் கைப்பற்றியுள்ளது. 2000 - ஆம் ஆண்டில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சியை திடீரென ராணுவக் கலகத்தின் மூலம், அமெரிக்கக் கைக்கூலி ராணுவ அதிகாரியான குடிரெஸ் வீழ்த்திவிட்டு ஆட்சிக்கு வந்தார். மக்களுக்கு நன்மை செய்யப்போவதாக அறிவிப்புகள் வெளியிட்டு அதிகாரத்தைக் கைப்பற்றிய இவர், அரியணை ஏறிய அடுத்த நிமிடத்தில் இருந்தே வாஷிங்டனின் கொள்கைகளை அமலாக்கத் துவங்கினார். ஐந்து ஆண்டுகள் சொல்லொண்ணாத் துயரத்தில் ஆழ்ந்து, கொதித்தெழுந்த ஈக்வடார் மக்கள் 2005 - ஆம் ஆண்டில் வீதியிலிறங்கி குடிரெஸ் ஆட்சிக்கு எதிராக மிகப்பெரும் கிளர்ச்சியை நடத்தினார்கள். இடதுசாரிச் சிந்தனைகளை மக்கள் மத்தியில் விதைத்து இயக்கம் நடத்திய ரபேல் கோரியா, மக்கள் நாயகனாக வலம் வந்தார். அடுத்த ஆண்டே நாடு முழுவதும் மக்கள் செல்வாக்குடன் ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டார். மூன்றாண்டுகள் கழித்து 2009 - ஆம் ஆண்டில்  நடந்த தேர்தலில் மீண்டும் மாபெரும் வெற்றி பெற்றார்.  இதோ மூன்றாவது முறையாக மீண்டும் ரபேல் கோரியா.
        ''இனி எவராலும் நமது நாட்டின் இந்த மகத்தான புரட்சியை தடுத்து நிறுத்திவிட முடியாது. இந்த நாட்டை மேலும் மேலும் புரட்சிகரப் பாதையில் கொண்டு செல்லும் வல்லமை நமக்கு இருக்கிறது'' என்பதை ஈக்வடார் மக்கள் நிரூபித்திருக்கிறார்கள். ''கடந்த ஆறு ஆண்டுகளில் அமலாக்கப்பட்ட சோசலிசக் கொள்கைகளுக்குக் கிடைத்த மாபெரும் வெற்றி இது'' என்று பிப்ரவரி 16ம் தேதி தேர்தல் முடிவுக்குப்பிறகு மக்களிடையே உரையாற்றினார் கோரியா.
       கோரியாவின் எழுச்சிக்கு முன்பு பத்து ஆண்டுகளில் 7 ஜனாதிபதிகளைப் பார்த்தது ஈக்வடார். தென் அமெரிக்கக் கண்டத்தின் வடமேற்குப் பகுதியில் அமைந்திருக்கும் இந்த நாடு குறிப்பிடத்தக்க அளவிற்கு பெட்ரோலிய வளம் கொண்டது. கோரியாவின் ஆட்சி மலர்வதற்கு முன்பு மொத்தப் பெட்ரோலிய வளமும் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டுப் பெருமுதலாளிகளுக்கு விருந்தாகிக் கொண்டிருந்தது. ஈக்வடாரில் நடக்கும் அனைத்தையும் வாஷிங்டனே தீர்மானித்துக் கொண்டிருந்தது. இதற்கு முற்றுப்புள்ளி வைத்தார் கோரியா. வெனிசுலாவில் சாவேஸ் செய்ததைப் போலவே, ஈக்வடாரின் பெட்ரோலிய வளத்தை தேசியமயமாக்கினார். அமெரிக்க பெட்ரோலியக் கம்பெனிகளின் ஆர்டர்கள் முடிந்தவுடன், அவற்றுக்கு மீண்டும் அத்தகைய வாய்ப்பு கொடுக்காமல் துணிச்சலாக நிராகரித்தார். வேறு வழியின்றி படிப்படியாக அமெரிக்கக் கம்பெனிகள் வெளியேற வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது. அமெரிக்கா இல்லையென்பதால் குடி ஒன்றும் முழுகிப்போய்விடவில்லை. மக்கள் சீனம் உள்ளே நுழைந்தது. சீனாவுக்கும் ஈக்வடாருக்கும் இடையே 200 கோடி டாலர் அளவிற்கு பெட்ரோலிய வர்த்தக உடன்பாடு கையெழுத்தானது. எஞ்சியிருந்த அமெரிக்க மற்றும் ஐரோப்பிய பெருமுதலாளிகளின் கம்பெனிகளிடம் பெட்ரோலிய வயல்களுக்கான குத்தகைத் தொகை வெறும் 18 சதவீதமாக இருந்ததை 80 சதவீதமாக உயர்த்தினார் கோரியா. இதன்மூலம் கிடைத்த மிகப்பெரும் வருமானம் முழுவதையும் மக்கள் நலத்திட்டங்களுக்கு திருப்பிவிட்டார். பல்வேறு சமூகத் துறைகளில் 25 சதவீதம் அளவிற்கு அரசின் செலவினம் அதிகரித்தது. மத்திய வங்கியை அரசின் முழுக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்தார்.
        இந்த வங்கி இனிமேல் கல்வி, வீட்டுவசதி, விவசாயம், பொதுஅடிப்படை வசதிகள் ஆகியவற்றுக்கு மட்டுமே அதிக அளவில் கடன் தரவேண்டுமென உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. நாடு முழுவதும் அமைக்கப்பட்டிருந்த ‘மக்கள் கூட்டுறவுக்குழுக்களுக்கு’ சமூகக் கடன்கள் வழங்கப்பட்டன. கல்வி இலவசமாக்கப்பட்டது. மொத்தமுள்ள ஒரு கோடியே 50 லட்சம் மக்கள் தொகையில் 19 லட்சம் ஏழைக் குடியானவர்களுக்கு, விதவைத் தாய்மார்களுக்கு, வயது முதிர்ந்தவர்களுக்கு அரசின் அனைத்து உதவிகளோடு, கூடுதலாக மாதம் 50 டாலர் உதவித்தொகையும் அளிக்கப்பட்டது. வேலையின்மை வெகுவேகமாக வீழ்ச்சியடைந்தது. வறுமை விகிதம் 2006 - ஆம் ஆண்டில் 38 சதவீதத்திலிருந்து தற்போது 29 சதவீதமாக வீழ்ச்சியடைந்துள்ளது. சாவேஸைப் போலவே இவரது ஆட்சியையும் ஒழித்துக்கட்ட 2010 - ஆம் ஆண்டில் அமெரிக்க உதவியோடு கலக முயற்சி நடந்தது. வெனிசுலாவைப் போலவே இங்கும் மக்கள் களத்தில் இறங்கி முறியடித்தார்கள். நெருக்கடியால் கலங்கி நிற்கும் முதலாளித்துவ உலகிற்கு ஈக்வடாரும் வழிகாட்டுகிறது!

''சிறந்ததோர் இந்தியாவை உருவாக்கப் போராட்டங்களைத் தீவிரப்படுத்துவோம்'' - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி

          மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் நாட்டின் நான்கு முனைகளிலிருந்தும் நடத்தப்பட்ட ''மாற்றுப்பாதைக்கான போர் முழக்கப் பயணம்'' 2013 மார்ச் 19 அன்று தில்லி ராம்லீலா மைதானத்தில் நடைபெற்ற வரலாற்றுச் சிறப்புமிக்க பேரணி / பொதுக் கூட்டத்தில் சங்கமித்தது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அறைகூவலுக்கிணங்க, மிகப்பிரம்மாண்டமான அளவில் நடைபெற்ற இப்பேரணி, ஊழல் மற்றும் மக்கள் விரோதக் கொள்கைகள் என்னும் இரு அரக்கர்களுக்கு எதிராக புதிய ராம்லீலாவினை நடத்த வேண்டும் என்று மக்களுக்கு அறைகூவல் விடுத்தது. பேரணியின் கரு என்பது நாட்டில் அனைத்து மக்களுக்கும் ஒரு நாகரிகமான வாழ்வாதாரத்தை அளிக்கக்கூடிய விதத்தில் நாட்டில் போதுமான அளவிற்கு வளங்கள் இருக்கின்றன என்பதும் அவற்றை மக்களுக்கு அளிப்பதன் மூலம் சிறந்ததோர் இந்தியாவை உருவாக்க முடியும் என்பதுமேயாகும்.
           தற்போது நாட்டின் வளங்கள் மெகா ஊழல்கள் மூலமாக சூறையாடப்பட்டு வருகின்றன அல்லது நாட்டில் பெரும்பான்மையாகவுள்ள மக்களின் வாழ்வைச் சீர்கேடு அடையக் கூடிய விதத்தில், நாகரிகமானதொரு வாழ்க்கையை வாழ்வதற்கான அடிப்படை உரிமைகளை அவர்களுக்கு மறுக்கக்கூடிய விதத்தில், அவர்களின் பொருளாதாரச் சுமைகளை அதிகரித்திடும் அதே சமயத்தில் நாட்டில் விரல்விட்டு எண்ணக்கூடிய ஒருசிலருக்கு சுகபோக வாழ்க்கையையும் கொள்ளை லாபத்தையும் குவிக்கக்கூடிய விதத்தில் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. நாட்டு மக்கள் அனைவருக்கும் சிறந்ததோர் இந்தியாவை உருவாக்க வேண்டுமானால் இத்தகைய கொள்கைகள் மாற்றப்பட வேண்டும். நாட்டில் தற்போது இருந்து வரும் இருவித இந்தியர்களுக்கும் இடையிலான இடைவெளி மேலும் அதிகரிக்கக்கூடிய விதத்தில் ஆட்சியாளர்கள் தற்போது கடைப்பிடித்து வரும் கொள்கையை ஏற்றுக்கொள்ள முடியாது. சிறந்ததோர் இந்தியாவை உருவாக்க வேண்டும் எனில் கீழே குறிப்பிட்டுள்ளவாறு மக்களின் ஆறு அடிப்படை உரிமைகளும் உத்தரவாதப்படுத்தப்பட வேண்டியது அவசியமாகும். இதனை நாட்டில் ஆட்சியாளர்கள் கடைப்பிடித்து வரும் கொள்கையின் திசைவழியை மாற்றியமைப்பதன் மூலம் செய்திட முடியும்.
              (1) நிலம் மற்றும் வீட்டுமனைகளுக்கான உரிமை : உபரியாக உள்ள நிலங்களை நிலமற்றவர்களுக்கு விநியோகிப்பதன் மூலம் நிலச்சீர்திருத்தக் கொள்கைகளை அமல்படுத்துக. நிலமற்ற குடும்பங்கள் ஒவ்வொன்றிற்கும் வீட்டுமனைகளை உத்தரவாதப்படுத்துக.
       (2) விலைவாசியைக் கட்டுப்படுத்து மற்றும் உணவு உரிமையை வழங்கிடு : அதிகபட்சமாக ஒரு கிலோ 2 ரூபாய் விலையில் மாதந்தோறும் 35 கிலோ உணவு தானியங்களை அனைத்துக் குடும்பத்தினருக்கும் வழங்கக்கூடிய விதத்தில் பொது விநியோக உரிமையை அமல்படுத்து. மோசடியான வறுமைக் கணக்கீட்டின் அடிப்படையில் உருவாக்கப்பட்டுள்ள வறுமைக்கோட்டுக்கு மேல் / வறுமைக்கோட்டுக்குக் கீழ் என்பதை ரத்துசெய். உணவு தானியங்கள் மற்றும் இதர அத்தியாவசியப் பொருள்கள் மீதான முன்பேர வர்த்தகத்தை நிறுத்திடு.
               (3) கல்வி உரிமை மற்றும் சுகாதார உரிமை : கல்விநிலையங்களையும் சுகாதார சேவைகள் அளிக்கும் நிறுவனங்களையும் தனியார் மயமாக்குவதை நிறுத்திடு. கல்விக்கும் சுகாதாரத்திற்கும் ஒதுக்கீடுகளை அதிகப்படுத்திடு. கல்வி உரிமைச் சட்டத்தை அமல் படுத்துவதை உத்தரவாதப்படுத்திடு. சுகா தாரத்துறையில் பொதுச்சேவைகளை வலுப்படுத்திடு. தனியார் நிறுவனங்கள் முறையாகச் செயல்படுவதை உத்தரவாதப்படுத்திடு.           
              (4) வேலை உரிமை : வேலைவாய்ப்புகளை அதிகரிப்பதை உத்தரவாதப்படுத்தும் வகையில் பொது முதலீட்டை அதிகரித்திடு. அரசு நிறுவனங்களில் வேலைக்கு ஆள் எடுப்பதற்குத் தற்போதுள்ள தடையை விலக்கிக்கொள், ஒரு காலவரையறையை நிர்ணயித்து அதற்குள் அனைத்துக் காலியிடங்களையும் நிரப்பிடு. குறிப்பாக தலித் / பழங்குடியினர் / இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் காலியிடங்களை நிரப்பிடு. மகாத்மாகாந்தி தேசிய கிராமப்புற வேலைவாய்ப்புத் திட்டத்தின்கீழ் வேலை செய்யும் நாட்களின் எண்ணிக்கையை அதிகரித்திடு, அவர்களுக்கு விலைவாசிக் குறியீட்டெண்ணுடன் இணைக்கப்பட்ட குறைந்தபட்ச ஊதியத்தை வழங்கிடு, நகர்ப்புறங்களில் உள்ளோருக்கும் வேலை நாட்களை உத்தரவாதப்படுத்தக்கூடிய விதத்தில் அதனை விரிவுபடுத்திடு.
              (5) சமூக நீதியை உத்தரவாதப்படுத்து : பெண்களுக்கு எதிரான வன்முறைக்குக் கடிவாளமிடு. நாடாளுமன்றம் / சட்டமன்றங்களில் பெண்களுக்கு மூன்றில் ஒரு பங்கு இடங்களை அளித்திடு. தீண்டாமைக் கொடுமை மற்றும் தலித்துகளுக்கு எதிரான பாகுபாடுகளுக்கு முற்றுப்புள்ளி வைத்திடு. பழங்குடியினரின் நிலம் மற்றும் வன உரிமைகளைப் பாதுகாத்திடு. முஸ்லிம் சிறுபான்மையினருக்கு, கல்வி மற்றும் வேலைகளில் சமவாய்ப்புகளை வழங்கிடு.
        (6) லஞ்ச ஊழலுக்கு முற்றுப்புள்ளி வைத்திடு : புலனாய்வு மேற்கொள்வதற்கு சுயேச்சையான அதிகாரங்களுடன் கூடிய லோக்பால் சட்டத்தை நிறைவேற்று, வெளி நாட்டு வங்கிகளில் போடப்பட்டுள்ள கறுப்புப் பணத்தைக் கொண்டுவா. இழப்புக்குப் பொறுப்பான கார்ப்பரேட்டுகளிடமிருந்து இழப்புகளை மீட்டிடு. லஞ்ச ஊழல் பேர் வழிகளை சிறைக்கு அனுப்பிடு. நமது பிரதமர் ‘‘பணம் மரங்களில் காய்ப்பது அல்ல’’ என்று சமீபத்தில் கூறியது போல ஆளும் வர்க்கங்கள் அடிக்கடி வாதிடுகின்றன. இவ்வாறு இவர்கள் கூறுவதன் உட்பொருள், மக்கள் மீது மேலும் மேலும் சுமைகளை ஏற்ற வேண்டும் என்பதற்காகத் தான். அத்தியாவசியப் பொருள்களின் விலைகளை மேலும் உயர்த்துவதையும், ஏழை மக்களுக்கு அளித்து வந்த மானியங்களை மேலும் வெட்டிக் குறைப்பதையும் நியாயப்படுத்த வேண்டும் என்பதற்காகத்தான். இவ்வாறு இவர்கள் அடிக்கடி கூறி வருகின்றனர். 
         சமீபத்தில் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப் பட்ட 2013-14ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டில் சென்ற ஆண்டு நிதிப் பற்றாக்குறை சுமார் 5.21 லட்சம் கோடி ரூபாய் என்று குறிப்பிட்டிருக்கிறது. அதே ஆண்டில் அரசுக்கு வர வேண்டிய நிதிவருவாயை வசூலிக்காமல் விட்ட தொகை மட்டும் 5.73 லட்சம் கோடி ரூபாயாகும். வேறு வார்த்தைகளில் சொல்வதானால், நிதிப் பற்றாக்குறையில் சுட்டிக்காட்டியிருக்கும் தொகையை விட 52 ஆயிரம் கோடி ரூபாய்க்கும் மேலே கூடுதலாக வரி வருவாயை வசூலிக்காமல் அரசு கைவிட்டிருக்கிறது. இவ்வாறு கைவிடாமல் இவ்வரிகளை வசூலித்திருந்தால், இந்த நிதிப் பற்றாக்குறையே ஏற்பட்டிருக்காது. ஆயினும் நிதிப் பற்றாக்குறையைக் குறைக்கிறோம் என்ற பெயரில் பெரும்பான்மையான மக்கள் மீது மேலும் சுமைகளை ஏற்றி, மக்களை மேலும் வறுமையில் தள்ளுவதற்கே நடவடிக்கை எடுத்திருக்கிறது. இவ்வாறு மக்களுக்கு இவர்கள் அநீதி இழைப்பதை இனியும் ஏற்றுக்கொள்ள முடியாது. மேலும் இந்த வரிகள் வசூலிக்கப்பட்டிருக்குமானால், அவ்வாறு வசூலித்து, நமக்கு அதிகம் தேவைப்படுகிற உள்கட்டமைப்பு வசதிகளைப் பெருக்குவதற்காக, குறிப்பாக நம்முடைய விவசாயத்துறையில் முன்னேற்றத்தை ஏற்படுத்தக்கூடிய விதத்தில் நீர்ப்பாசன வசதிகளை ஏற்படுத்துவதற்காக, பொது முதலீட்டில் ஈடுபடுத்தப்பட்டிருக்குமானால், அதன்மூலமாக நம்முடைய விவசாயிகள் தற்கொலை செய்வதைத் தடுத்து நிறுத்தி இருக்க முடியும். மற்றும் லட்சக்கணக்கான வேலை வாய்ப்புகளையும் உருவாக்கி இருக்க முடியும். மேலும் இதன் மூலம் தொழில்வளர்ச்சியிலும் உத்வேகத்தை ஏற்படுத்தி, நாட்டு மக்களின் உள்நாட்டுத் தேவைகளையும் அதிகரித்திருக்க முடியும்; நம் நாட்டின் ஒட்டுமொத்த பொருளாதார வளர்ச்சியையும் அதிகரித்திருக்க முடியும். மக்கள் போராட்டங்களை வளர்த்தெடுப்பதன் மூலம் இத்தகைய மாற்றுக்கொள்கைத் திசைவழியை உத்தரவாதப்படுத்திட வேண்டும். மற்றொரு வகையில் வாதிட்டோமானால் நாட்டில் நடைபெற்ற மெகா ஊழல்கள் தடுக்கப்பட்டிருக்குமானால் நாட்டில் அனைவருக்குமான உணவுப் பாதுகாப்பு, கல்வி, சுகாதாரம் மற்றும் மக்களின் வாழ்வாதாரங்களை முன்னேற்றக்கூடிய அனைத்து அம்சங்களுக்கும் போதுமான அளவிற்கு வளங்களை வழங்குவதையும் சாத்தியமாக்கி இருக்க முடியும். 2ஜி அலைக்கற்றை ஊழலில் மட் டும் 1 லட்சத்து 76 ஆயிரம் கோடி ரூபாய் கொள்ளையடிக்கப்பட்டிருக்கிறது.இவ்வாறு கொள்ளையடிக்கப்படுவது தடுக்கப்பட்டு அதனை உணவுப் பாதுகாப்பிற்குத் திருப்பிவிட்டிருந்தால் மட்டுமே வறுமைக்கோட்டுக்குக் கீழ் / வறுமைக் கோட்டுக்கு மேல் என்ற பாகுபாடு எதுவுமின்றி நாட்டில் உள்ள அனைத்துக் குடும்பத்தினருக்கும் மாதத்திற்கு 35 கிலோ உணவு தானியங்களை கிலோ 2 ரூபாய் விலைக்குத் தாராளமாக வழங்கிட முடியும். நிலக்கரிப் படுகை ஒதுக்கீட்டு ஊழலில் சம்பந்தப்பட்டுள்ள 1.86 லட்சம் கோடி ரூபாய் கொள்ளையடிக்கப்படுவது தடுத்து நிறுத்தப்பட்டிருக்குமானால், நாட்டில் உள்ள பள்ளிக்கூடங்களில் படிக்கும் ஒவ்வொரு மாணவ - மாணவியருக்கும் புத்தகங்கள், சீருடைகள், மதிய உணவு ஆகியவற்றை அரசாங்கத்தின் மூலமாகவே இலவசமாக வழங்குவதை உத்தரவாதப்படுத்திட முடியும். மக்கள் போராட்டங்களை வலுப்படுத்துவதன் மூலமாக ஆளும் வர்க்கங்கள் இவ்வாறு நாட்டின் வளங்களைச் சூறையாடுவதை தடுத்து நிறுத்தியாக வேண்டும். 
         ராம்லீலா மைதானத்தில் பேரணி-பொதுக்கூட்டம் நடைபெற்றுக் கொண்டிருந்த சமயத்தில் ஐ.மு.கூட்டணி-2 அரசாங்கத்தின் ஓர் அங்கமாக இருந்து வந்த திமுக, ஆட்சிக்கு அளித்து வந்த ஆதரவைத் திரும்பப்பெற்றுக்கொண்டதாக அறிவித்த செய்தி கிடைக்கப் பெற்றது. இதன்மூலம் அரசாங்கத்திற்குப் பெரிய அளவில் உறுதியற்றத் தன்மை ஏற்பட்டிருக்கிறது. ஏற்கனவே இது ஒரு சிறுபான்மை அரசாங்கம்தான். பகுஜன் சமாஜ் கட்சி மற்றும் சமாஜ்வாதி கட்சி ஆகியவை ஆட்சியில் பங்கேற்காமல் வெளியிலிருந்து ஆதரவு அளித்து வருவதை அடுத்தே உயிர்பிழைத்து ஆட்சியை நடத்திக் கொண்டிருக்கிறது.
            இப்போதைய அரசியல் உறுதியற்றத் தன்மையும் இயற்கையாகவே மாற்று அரசாங்கம் குறித்த கேள்வியை எழுப்பி இருக்கிறது. சிறந்ததோர் இந்தியாவை உருவாக்குவதற்காகத் தேவைப்படும் மாற்றுக் கொள்கைகளை அமல்படுத்தும் கண்ணோட்டத்துடன் ஆராய்கையில், பாஜகவும் மாற்றாக அமையமுடியாது என்பது திண்ணம். அதன் பொருளாதாரக் கொள்கைகள் நடைமுறையில் நவீன தாராளமயச் சீர்திருத்தக் கொள்கையிலிருந்து கொஞ்சமும் மாறுபட்டவை அல்ல. பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசாங்கம் ஆட்சியிலிருந்த சமயத்தில்தான், சில்லரை வர்த்தகத் துறையில் அந்நிய நேரடி முதலீட்டிற்கான அனுமதியைப் பரிந்துரைத்திருந்தது. இதனை அப்போது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எதிர்த்து, கிளர்ச்சி இயக்கங்களை நடத்தியபோது, பாஜகவின் இந்நடவடிக்கையை காங்கிரஸ் கட்சியும் எதிர்த்தது. இப்போது, காங்கிரஸ் தலைமையிலான ஐ.மு. கூட்டணி அரசாங்கம் அதேபோன்று சில்லரை வர்த்தகத்தில் அந்நிய நேரடி முதலீட்டை அனுமதித்திருக்கிறது. இப்போது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியுடன் சேர்ந்துகொண்டு பாஜகவும் எதிர்க்கிறது. பாஜக ஆட்சியில் இருக்கையில் பொதுத்துறைப் பங்குகளைத் தனியாருக்குத் தாரை வார்க்கும் நடவடிக்கைகளை வேகவேகமாக எடுத்தது. அதன் முதல் 13 நாள் அரசாங்கத்தில் மக்களவையில் நடைபெறும் நம்பிக்கை வாக்கெடுப்பின்போது நிச்சயமாகக் கவிழ்ந்து விடுவோம் என்று தெரிந்தபின், மக்களவை நடைபெற்றுக்கொண்டிருக்கையிலேயே, அவசரம் அவசரமாக அமைச்சரவையைக் கூட்டி, திவாலாகிப்போன பன்னாட்டு நிறுவனமான என்ரான் நிறுவனத்துடன் மின்சாரம் வாங்குவதற்காக ஒப்பந்தம் ஒன்றை ஏற்படுத்திக்கொண்டதையும், அதன் மூலம் நாட்டு மக்களைக் அந்நிறுவனம் கொள்ளையடித்திட அனுமதிக்கப்பட்டதையும் நன்கறிவோம். இப்போதைய நாடாளுமன்றக் கூட்டத்தொடரிலேயும், ஓய்வூதிய நிதிகளைத் தனியாருக்குத் தாரைவார்ப்பதற்காக ஐ.மு. கூட்டணி அரசாங்கம் கொண்டுவந்த முன்மொழிவை பாஜக ஆதரித்ததன் மூலம், நம் நாட்டின் கோடிக்கணக்கான ஊழியர்களின் நிதியை உலக நிதி நிறுவனங்கள் சூறையாடிச் செல்ல வழிவகை செய்யப்பட்டிருக்கிறது. பாஜக, ஆர்எஸ்எஸ் இயக்கத்தின் அரசியல் அங்கமாக,  மதச்சார்பற்ற ஜனநாயகக் குடியரசை, வெறிபிடித்த சகிப்புத்தன்மையற்ற ‘இந்து ராஷ்ட்ரமாக’ மாற்றியமைக்க வேண்டும் என்ற குறிக்கோளோடு செயல்படுகின்ற அதே சமயத்தில், ஐ.மு.கூட்டணி அரசாங்கம் கடைப்பிடித்து வரும் நவீன தாராளமய சீர்திருத்தங்கள் என்னும் அதே மக்கள் விரோதக் கொள்கைகளையே இதுவும் பின்பற்றி வருகிறது.
          எனவே, நாட்டிற்குத் தேவை, காங்கிரஸ் எதிர்ப்பு, பாஜக எதிர்ப்பு அரசியல் கட்சிகளை ஆட்சி அமைத்திட ஒரு மாற்றுக் குழுவை உருவாக்குவது என்பது மட்டுமல்ல. மாறாக நாட்டிற்கும் நாட்டு மக்களுக்கும் தேவைப்படுவது என்னவெனில் ஒரு மாற்றுக் கொள்கைத் திசைவழியாகும். இவ்வாறு கொள்கைத் திசைவழியில் மாற்றத்தை ஏற்படுத்தக்கூடிய விதத்தில் ஓர் அரசியல் மாற்றை மக்கள் போராட்டங்களை வலுப்படுத்துவதன் மூலமே கொண்டுவர முடியும். நம்முடைய நாட்டில் இவ்வாறு கொள்கைத் திசைவழியை மாற்றியமைக்கக்கூடிய விதத்தில் மக்கள் போராட்டங்களை வலுப்படுத்துவது என்பதே நம்முன் உள்ள பணியாகும். இது காலத்தின் கட்டாயமாகும். இத்தகு உயர்நிலைக்கு மக்கள் போராட்டங்களை எடுத்துச் செல்வதற்காக, ராம்லீலா மைதானத்தில் நடைபெற்ற பேரணியானது வரும் மே 15 முதல் 31 தேதிகளில் நாடு முழுவதும் உள்ள மத்திய, மாநில அரசு அலுவலகங்களின் முன்பு ஒன்றிய, மாவட்ட, மாநில அளவில் முற்றுகைப்போராட்டங்களை நடத்திடுமாறு அறைகூவல்விடுத்திருக்கிறது. மிகவும் வலுவான வகையில் ஒத்துழையாமை இயக்க அளவிற்கு சிறை நிரப்பும் போராட்டமாக இது அமைந்திட வேண்டும். மாற்றுக்கொள்கைக்கான போர்முழக்கப் பயணத்திற்கு நாட்டு மக்கள் மிகவும் எழுச்சியுடன் ஆதரவு அளித்து வரவேற்றதைப் போல, வரவிருக்கும் காலங்களில் மக்களுக்காக, சிறந்ததோர் இந்தியாவை உருவாக்குவதற்காக, நடைபெறவிருக்கும் வலுவான போராட்டங்களில் பெரும் எண்ணிக்கையில் பங்கேற்க வேண்டுமென்று நாட்டு மக்கள் அனைவரையும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அறைகூவி அழைக்கிறது.
தமிழில்: ச.வீரமணி
நன்றி :
 

சனி, 23 மார்ச், 2013

Huge Rally at Ramlila Grounds Calls for Mass Struggle for Alternative Policies....!


         CPI(M) calls for wide spread movement to establish the six fundamental demands raised for the people. In a massive rally on 19th March at Ramlila Maidan in Delhi it announced a programme of Dharna or sit in demonstration with civil disobedience in the districts, blocks offices across the country from 15th to 31st May keeping the demands in forefront of land, food security, employment, Right to education and health, equal rights for women. The movements are to be launched from people’s gathering. If necessary one will court arrest also, announced CPI(M) General Secretary Prakash Karat. 
          This is but the initiation of a bigger struggle for implementation of alternative policies aimed at the betterment of the people. The thousands and thousands of people gathered in the heart of the capital resolved to launch a non-stop united struggle with other Left Parties across the country. The rally marked the convergence of four Jathas from across the four corners of the Country that traversed about 10,000km distance. The top leadership of the CPI(M) led these Jathas from various parts of the country. It started on 24th February from Kanyakumari with the Southern Jatha. In between 14th to 16th March the four Jathas reached New Delhi. After this was this gathering. The motive behind this Sangharsh Sandesh Jatha was to explain in front of the people about the necessity of struggle to establish the alternative policies. To carry the message of struggle to the masses. As CPI(M) Polit Bureau member said in this rally that people want struggle. People want to be a part of the struggle. At the call of the CPI(M) people had gathered in the heart of the capital as a part of the struggle and had left with the news of struggle.
In the gathering, the President of the meeting Prakash Karat in his commencing speech at the very onset made it clear about the very purpose of the meeting by saying when others are thinking about the forth coming election, this meeting is not for vote but for struggle. At the beginning of his speech he said in this gathering the bidi workers of solapur, the land labourers of Bihar-Uttar Pradesh are there and the toiling masses are there. This is the real India.
           Prakash Karat said gradually the state of the toiling masses is worsening. The land of the farmers are being taken away, there is no food security, lakhs and lakhs of youth remain unemployed, there is no scope for education and health for all, atrocities on women is increasing. The central policies are for the multimillionaires; it is being framed for the benefit of the richest. All the assets of the country from land-factories-mines are being handed over to the multimillionaires. Due to the policies of the Government, prices of commodities are rising. In this year’s Central Budget there has been curtailment on subsidies on things, which are of use to the common people. Subsidies on petroleum product have been curtailed. After decontrol, the price of petrol has risen 21 times. The price of diesel is now going to rise every month. The farmers of this country are in trouble but Government subsidy is being curtailed. From 1999 onwards 2lakhs 90thousand farmers have committed suicide. The Government is unperturbed. Now by allowing 100 percent foreign investment in retail business, the livelihood of four crores of retail businessmen is going to be endangered.
           He said unless the UPA Government can be removed from its seat, the condition of the people will not change. What is the alternative? The BJP is walking in their path of same liberalization policies, pampering the national and international capital. On the other hand they are competing with Congress in corruption. In recent times The BJP Chief Minister of Karnataka has been jailed for illegal mining corruption. BJP’s Narendra Modi’s Gujrat model is being talked about but what actually is this model that the multimillionaires know very well. They are being given land for no cost, electricity with no surcharge, tax benefit. So that they can ensure more profit. Gujrat is lagging behind in education-health. Gujrat is in the forefront in child malnutrition. The minorities have been awarded a second-class citizen status. This model will cause the downfall of the country.
          Karat said that the only option against these policies of liberalization is to fight for the cause of the alternative policy. Through the mass struggle of poor, labours, farmers, youth, women, tribals a strong alternative policy has to be framed. The non-congress, non-BJP parties have to think whether the condition of the poor people can improve without an alternative policy. They should come forward but whether they come or not CPI(M) along with other Left Parties will continue with the fight for an alternative policy.
            CPI(M) Polit Bureau members, Sitaram Yechury, Biman Bose, Brinda Karat, Manik Sarkar also addressed the gathering.
          The huge gathering of poor people under the banner of the red flag in the heart of the capital will take back the message of struggle to all the parts of the country. In the coming days the struggle of the poor for the alternative policies will spread to the nook and corner of the country. That is the message of the huge rally at Ramlila Grounds, New Delhi.

புதுச்சேரி பிரஞ்ச் - இந்திய விடுதலைப் போராட்ட வீரர் தோழர். வீ. இராமமூர்த்தி மறைந்தார்....!

           பிரஞ்ச் - இந்திய விடுதலை போராட்ட வீரரும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின்  முதுபெரும் தோழரும், புதுச்சேரி ''தீக்கதிர்'' நாளிதழின் நிருபர் தோழர். ஆர். முருகன் அவர்களின் தந்தையாருமான தோழர். இராமு என்கிற வீ. இராமமூர்த்தி அவர்கள் இன்று காலை 9 மணிக்கு காலமானார். பிரஞ்ச் -இந்திய விடுதலைப் போராட்டத்தில் தோழர். வ. சுப்பையா மற்றும் தோழர். டி. கே. இராமானுஜம் ஆகியத் தோழர்களோடு இணைந்து புதுச்சேரியின் விடுதலைக்காக போராடியவர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஆரம்பக்கால உறுப்பினரான இவர், கட்சியின் முடிவின்படி தன் இறுதிக்காலம் வரை அரசிடமிருந்து விடுதலைப்போராட்ட வீரர்களுக்கான பென்ஷனை பெறாதவர். சொந்தமாக ஒரு வீடு கூட இல்லாமல், புதுச்சேரி பாரதிபுரத்தில் பொது சாக்கடையின் பக்கத்தில் சிறு குடிசையில் வாழந்து வந்தார். சாக்கடை நாற்றத்தோடும், கொசுக்களோடும் தான் அவர் கடைசி வரை வாழ்ந்திருக்கிறார் என்பதை பார்க்கும்போது என் நெஞ்சம் வெடித்துப்போனது. கடைசி வரையில் கட்சிப் போராட்டங்களில் கலந்துகொள்வதிலும், கட்சிக் கிளைக் கூட்டங்களில் கலந்துகொள்வதிலும் அவர் தவறியதே இல்லை. புத்தகங்களை படிப்பதில் அதிக ஈடுபாடு கொண்டவர். அவர் படித்த புத்தகங்களை மற்றத் தோழர்களுக்கும் கொடுத்து படிக்கச் செய்வார். தேசத்தின் மீதும், கட்சியின் வளர்ச்சியின் மீதும் மிகுந்த அக்கறை காட்டியவர். கடைசிக்காலம் வரையில் யாருடைய உதவியையும் எதிர்பாராமல் வறுமையில் வாடினாலும், இறுதிவரையில் ஒரு மார்க்சிஸ்டாகவே வாழ்ந்து மறைந்தார். அதனால் தான் அதிசயமாய் சுதந்திரப் போராட்ட வீரன் பகத் சிங் மறைந்த நாளிலேயே இவரும் மறைந்திருக்கிறார். அவரது மறைவு அவரின் குடும்பத்தாருக்கு மட்டுமல்லாது, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கும் மாபெரும் இழப்பு ஆகும்.
         மறைந்தத் தோழருக்கு என் கண்ணீர் அஞ்சலியையும், வீரவணக்கத்தையும் தெரிவித்துக்கொள்கிறேன்.

இலங்கை உண்மையான ஜனநாயக சமத்துவ கூட்டாட்சி குடியரசு நாடாக மாறவேண்டும்....!






















எழுதுகிறேன்....!

வியாழன், 21 மார்ச், 2013

AIDWA PRESS RELEASE ON THE CRIMINAL LAW AMENDMENT BILL, 2013


           AIDWA notes with disappointment that the Criminal Law Amendment Bill, 2013 passed by the UPA Government in the Lok Sabha today to amend the rape laws has not taken into consideration the objections and issues that have been repeatedly raised by AIDWA and other women's organizations. We reiterate that the opportunity to provide comprehensive justice for women who have been subjected to sexual violence should not be lost, and call for their inclusion even at this stage. Some of the objections to the Bill are as under:

• Despite comprehensive suggestions made by the Verma Committee in the laws relating to sexual assaults the bill does not change patriarchal and anti-women provisions like Sections 354 and S509 of the archaic Indian Penal Code relating to molestation and “eve teasing” .These only punish assaults and gestures which “outrage the modesty of a woman” and are demeaning and insulting to woman.

• Further, the Bill retains the marital rape exception and states that sexual intercourse or sexual acts with a wife is not rape. This is against the provisions of the Indian Constitution which considers women as equal human beings who have a right to live with dignity and be free from violence within and outside marriage. The government is however not willing to recognize and punish sexual violence within the marriage. The Verma Committee report had pointed out that this exception “stems from an outdated notion of marriage which regarded wives as no more than the property of their husbands….”.

• Apart from this, while the proposed Government Bill of 2010 had added that if rape is committed by a person in a position of social, economic and political dominance this would be considered an aggravated form of offence, the present Bill completely dilutes this suggestion and removes the words “social, economic and political” from Clause (k) under Section 376(2) of the IPC. This clause was meant to address rape which is often committed with impunity by those in positions of power on women from the most vulnerable sections of our society. Rapes by higher caste men on Scheduled Caste and Scheduled Tribe women should be considered an aggravated form of rape.

• AIDWA and other national women’s organisations had pointed out that young boys who are in a consensual relationship with a young girl who may be between 16 and 18 years of age must be protected from the criminal consequences of statutory rape. The social reality is that there are many instances of consensual sexual activity between girls who may be between the ages of 16 and 18 and boys who may be the same age or slightly older and it would lead to injustice if these young boys were prosecuted for rape. It had therefore suggested that such consensual activity should be exempted from the purview of statutory rape provided the accused person was not more than five years older. However, this suggestion has not been inserted in the law.

Apart from this AIDWA had demanded that command responsibility must be recognized as recommended in the Verma Committee Report and made other suggestions regarding the non inclusion of death penalty in the Bill and other procedural changes which have not been inserted. AIDWA therefore demands that these changes should be incorporated in the final Act and the Bill passed in the current session of parliament to ensure substantial justice for women.

இலங்கைத் தமிழர்கள் அமைதியை தான் விரும்புகிறார்கள்... தமிழீழம் அல்ல...!