ஞாயிறு, 25 நவம்பர், 2012

காசு கொடுத்து மக்கள் வாயை மூடி ரேஷன் கடைகளை இழுத்து மூடுவதற்கு மன்மோகன் சிங் திட்டம்..!



















             பொருளாதார மேதைகளான மன்மோகன் சிங் -  ப.சிதம்பரம் -  அலுவாலியா கூட்டாளிகள் அடுத்து பொது விநியோக முறையை சீரழித்து ரேஷன் கடைகளை இழுத்து மூடும் வேலைக்கு தற்போது அச்சாரம் 
இட்டிருக்கிறார்கள். சில்லறை வர்த்தகத்தில் அந்நியரை அனுமதிப்பது என்ற அரசின் தான்தோன்றித்தனமான - தறுதலைத்தனமான திட்டத்திற்கு எதிராகவே தற்போது பாராளுமன்றம் கொந்தளித்துக் கொண்டிருக்கிறது. இந்த சூழ்நிலையில் இந்திய மக்களின் உணவு பாதுகாப்பிற்கு வெட்டு வைக்கும் வகையில் இன்னொரு தருதளைத்தனத்தை அரங்கேற்ற மன்மோகன் சிங் - ப.சிதம்பரம் - அலுவாலியா கூட்டணி 
துடித்துக்கொண்டிருக்கிறது. இந்திய பெருமுதலாளிகள் வயிறு வெடிக்கும் அளவிற்கு 5 இலட்சம் கோடிக்கு மேல் மானியத்தை கொட்டிக் கொடுக்கும் மன்மோகன் சிங், காலாகாலமாக  ரேஷன் உணவு பொருட்கள்,  பெட்ரோல், டீசல், சமையல் கேஸ் போன்றவற்றிற்கு சாதாரண மக்களுக்கு கொடுக்கப்படும் சிறு தொகையிலான மானியத்திற்கு மட்டும் ''பணம் என்ன மரத்திலா காய்க்கிறது..." என்று கேள்விக் கேட்கிறார்.
            அப்படி சிறு மானியத்தின் மூலம் இயங்கும் பொது விநியோக முறையை ஒழித்துக்கட்டி மக்களுக்கு கொடுக்கப்படும் அந்த சிறு மானியத்தைக் கூட வெட்டுவதற்கு மன்மோகன் சிங் - ப.சிதம்பரம் துணிந்திருக்கிறார்கள். இதன் மூலம் தற்போது ரேஷன் கடைகளில் கொடுக்கப்படும் உணவு பொருட்கள் விநியோகம் நிறுத்தி விட்டு, அதற்கு பதிலாக, அந்த உணவு பொருட்களுக்கு  அரசு இதுவரை கொடுத்து வந்த மானியத்தொகையை வரும் புத்தாண்டு முதல் - ஜனவரி 2013 முதல்  நேரடியாக பொது மக்களின் கைகளிலேயே கொடுத்துவிடுவார்களாம். அந்த தொகையுடன் அவர்கள் தங்களது காசை கூட சேர்த்து வெளிச்சந்தையில் வாங்கிக்கொள்ளவேண்டுமாம். ஆண்டு ஒன்றுக்கு இப்படியாக சேரும் மானியத்தொகை என்பது 32,000 ரூபாயாம். பொது மக்களின் நாக்கில் மன்மோகன் சிங் தேனைத் தடவுகிறார் என்பதை மக்கள் புரிந்துகொள்ளவேண்டும். காசு கொடுத்து மக்களை மயக்கும் திட்டத்தில் மத்திய அரசு இறங்கியுள்ளது. இந்த மக்களை மயக்கும் வேலைகளின் விளைவுகள் தான் என்ன என்பதையும் மக்கள் ஆராய்ந்து புரிந்து கொள்ளவேண்டும்.

ஒன்று :   இந்த மானியத் தொகையை மக்கள் கைக்கு கொடுக்கும் இந்த புதிய முறை எத்தனை  நாளைக்கு நீட்டிக்கும் என்று தெரியவில்லை. ''பணம் காய்க்கும் மரம் அரசிடம் இல்லை''    என்று  சொல்லி திடீரென நிறுத்திவிடுவார்கள்.  
இரண்டு:    ரேஷன் கடைகளை இழுத்து மூடுவதற்கான சுலபமான வழி இது. இனி நாட்டில் ரேஷன் கடைகளோ, உணவுப் பொருட்கள் விநியோகமோ நாட்டில் இருக்காது.
மூன்று:  ரேஷன் கடைகளே இருக்காது என்கிற போது, உணவு பொருட்களை விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்து கிடங்கில் பாதுகாத்து மக்களுக்கு ரேஷன் கடைகளின்     மூலம் விநியோகம் செய்ய உதவி புரியும் இந்திய  உணவுக் கழகம் இனி  மூடப்படும்.
நான்கு:  இது வரையில் மக்கள் ரேஷன் கடைகளில் எப்போது உயராத  ஒரே  விலைக்கொடுத்து தான் பொருள் வாங்கிவந்தார்கள்.  ஆனால் அரசு கொடுக்கும் மானியத் தொகையும் உயராது. ஒரே மாதிரியான தொகையை தான் அரசு கொடுக்கும். ஆனால் வெளிச் சந்தையில் நாளுக்கு ஒரு விலை விற்கும். தினமும் விலை உயர்ந்து கொண்டே போகும். மக்கள் தன்  கை காசை அதிகமாக செலவழிக்க வேண்டிய கட்டாயம் ஏற்படும். இதனால் ''பணவீக்கம்'' என்பது மேலும் மேலும் அதிகரிக்கும்.
ஐந்து:      உணவுக் கழகமே மூடப்படும் நிலையில், ஏற்கனவே கொஞ்சம் கொஞ்சமாக உணவுப் பொருட்களை கொள்முதல் செய்து வந்த பன்னாட்டு பெருமுதலாளிகள் கையில் கொள்முதல் முழுதும் சென்று விடும். விவசாயிகளுக்கோ அல்லது உற்பத்தியாளருக்கோ நியாயமான விலை கிடைக்காமல் போய்விடும்.
ஆறு:        எதிர்காலத்தில் ''உணவு பாதுகாப்பு'' என்பது கேள்விக்குறியாகிவிடும்.
ஏழு:          நாட்டில் மிகப்பெரிய உணவுப்பஞ்சம் தலைவிரித்தாடும்.
எட்டு:         மக்களின் அடிப்படை உரிமைகளில் ஒன்றான ''உணவு உரிமை'' என்பது மயக்க ஊசிப் போடாமலேயே ஆட்சியாளர்களால் ''மயக்கி'' பறிக்கப்படும்.  
 இனி இழப்பதற்கு ஒன்றுமில்லை..!

சனி, 24 நவம்பர், 2012

மதவாதிகளையும் பிரிவினைவாதிகளையும் வளர்க்கும் அமெரிக்கா - துணைபோகும் இந்தியா...!

           உலக வரைப்படத்திலிருந்து சோசலிச நாடுகளை ஒழித்துக்கட்டவும், மனித குலத்தின் மாண்புகளில் இருந்து சோசலிசத்தை அழித்துவிடவும் கங்கணம் கட்டிக்கொண்டு அலைந்துகொண்டிருக்கும் ஏகாதிபத்தியமும், முதலாளித்துவமும் வளர்த்துவிடப்பட்டவர்  தான் தலாய்லாமா என்ற இந்த புத்தமத சாமியார்.    சீன நாட்டின் ஒன்றுபட்ட பகுதியாக இருக்கக்கூடிய திபெத் பகுதியை தனி நாடாக பிரிக்கப்படவேண்டும் என்று அங்குள்ள பிரிவினையை விரும்பும் ஒருசில மக்களை மதத்தலைவர் என்ற முறையில் ஒன்று திரட்டி தேசவிரோத செயல்களில் ஈடுபடுபவர்.    இந்தியாவிலுள்ள இமாச்சலபிரதேச  மாநிலத்திலுள்ள‌ ''தரமஷாலா'' - வில் சட்டவிரோத திபெத் நாட்டின் அரசை நடத்திக்கொண்டிருப்பவர். அவருக்கு எப்படி இவ்வளவு தைரியம் வந்தது. பக்கத்து நாட்டில் தேசவிரோத செயல் புரியும் இவருக்கு இடம் கொடுத்து பாதுகாப்பு கொடுத்து வருவது இந்திய அரசு என்பதும், அதேப்போல் இவர் சட்டவிரோத அரசை நடத்துவதற்கு நிதி கொடுத்து உதவி செய்வது அமெரிக்க ஏகாதிபத்தியம் என்பதும் குறிப்படத்தக்கது. சோசலிசத்தையும் சோஷலிச நாடுகளையும் ஒழித்துக்கட்டுவதற்கு, மதவாதிகளையும், பிரிவினைவாதிகளையும் வளர்ப்பதில் என்றைக்குமே அமெரிக்க ஏகாதிபத்தியம் தயங்கியதே கிடையாது. அதற்காக எவ்வளவு நிதி வேண்டுமானாலும் செலவு செய்வார்கள். ஆனால் இவ்வாறு அமெரிக்க மற்றும் திபெத் மக்கள் நிதியில் உருவாக்கப்பட்ட  தர்மஷாலாவில் உல்லாச‌ விடுதி நடத்தும் ஒரு தொழிலதிபர் தான் இந்த தலாய்லாமா என்பதை யாரும் மறந்துவிடக்கூடாது. இஸ்ரேல் நாட்டைச் சேர்ந்த இராணுவ வீரர்கள் இங்கு அவ்வப்போது வந்து ஓய்வெடுத்து செல்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இதன் மூலம் இந்த தலாய்லாமாவிற்கும் அமெரிக்காவிற்கும் இஸ்ரேல் நாட்டிற்கும் உள்ள நெருக்கம் நன்கு விளங்கும். மேலும் இவர் பேருக்கு தான் சாமியார். மற்றபடி பகட்டான வாழ்க்கை வாழும் ஒரு சுகபோகவாதியாவார். அதனால் உலகளவில் பல திரைப்பட நட்சத்திரங்கள் இவருடைய விசிறியாக இருக்கிறார்கள் என்பது இவருடைய பகட்டு நன்கு புரியும். இந்த சாமியார் சில சமயங்களில் விளம்பரங்களில் கூட நடிக்கும் நட்சத்திரமாகவும் இருக்கிறார். 
                மேற்கத்திய முதலாளித்துவ  அரசியல் சிந்தனைக்கும், சிந்தனையாளர்களுக்கும் இவரது வார்த்தைகள்  பொன்மொழியாக பயன்படுகிறது. இவர் ''வோக்'' என்ற  ஃபாஷன் பத்திரிக்கையின் கெளவரவ ஆசிரியராகவும் வேலை செய்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இவர் இந்தியாவில்  தஞ்சம் புகுவதற்கு முன்பு  1960 - ஆம் ஆண்டுகளிலேயே திபெத்தில் 1000 அறைகள் கொண்ட 14 மாடி ''பொட்டாலா'' அரண்மனையில் வாழ்ந்தவர்.  இவரை சுற்றி இருந்த  திபெத்தியர்கள் வறுமையில் வாடும்போது இவருக்கு மட்டும் இந்த வாழ்க்கை தேவையானதாக இருந்தது. ஏனெனில், மக்களின் பார்வையில் இவர் மிகவும் புனிதம் மிகுந்தவர். மேட்டுக்குடியினைச் சார்ந்தவர். எனவே அதில் ஒன்றும் தவறு கிடையாது என்று மக்கள் நினைத்தார்களோ இல்லையோ... தலாய்லாமா நினைத்தார்.
                  
மேலும் இவர் உலக வாழ்க்கையைத் துறந்த துறவியாகத் தானே காட்சியளிக்கிறார். அவர் ஒரு  ''புத்த பிச்சு'' - வாக அல்லவா காட்சியளிக்கிறார். ஆனால்  உலகில் எந்த மூலையில் மக்களைக் கொன்று குவிக்கும் போர்கள் நடந்தாலும் அதைப் பற்றி எவ்வித மூச்சும் விடமாட்டார். ஆப்கானிஸ்தான் மற்றும் இராக் போன்ற நாடுகள் உடனான அமெரிக்காவின் கொலைவெறிப் போரினை பற்றி எந்தவிதமான எதிர்ப்பும் காட்டாதவர். அமெரிக்காவை கண்டித்து ஒரு வார்த்தைக் கூட இவர் உதிர்க்கவில்லை. இருப்பினும் அமைதிக்கான நோபல் பரிசு இவருக்கு வழங்கப்பட்டது. இஸ்ரேல் எப்போதும்  பாலஸ்தீனர்கள்  மீது தாக்குதல் நடத்தி அப்பாவி மக்களை கொன்று குவித்தாலும், இஸ்ரேலை தட்டிக்கேட்காமல்,   இஸ்ரேலுக்கே  சென்று பாலஸ்தீனர்களிடம் ''வன்முறை வேண்டாம்'' என்று 'அமைதிப் புறா'வைப் போல் அறிவுரைக் கூறியவர் இவர் சீனாவிடமிருந்து தப்பி வருவதற்கு முன்பு, இவர் ஏதோ சீனாவினை எதிர்த்து வன்முறையில் ஈடுபடாதவர் போல  இவர் உதிர்த்த இந்த அறிவுரை என்பது சாத்தான் வேதம் ஓதுவது போல இருக்கும்.
 
             உலக அமைதி குலைவதற்கும், ஆப்கானிஸ்தான் மற்றும் இராக் போன்ற நாடுகள் சீரழிவதற்கும் காரணமாக இருந்த அப்போதைய அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ்ஷை பார்த்து,
''பிரெசிடெண்ட் புஷ்ஷை நேசிக்கின்றேன்'' என வெளிப்படையாக பறை சாற்றியவர் தான் இந்த தலாய்லாமா. அண்மையில் கூட  ஆப்கானிஸ்தான்  போரைப் பற்றியும், ஈராக் போரைப் பற்றியும்  பேசும் போது, ''அப்போர்கள் எந்த வகையைச் சேர்ந்தது என சொல்வது கடினம'' என  போர் வெறி பிடித்த அமெரிக்காவின் மீது அருள் பாலித்திருக்கிறார்.

முற்போக்குக் கலை இலக்கியம் வளர்த்ததில் முன்னோடி - மார்க்சிய அறிஞர் தோழர் '‘பி.ஜி.’'


தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் 
கலைஞர்கள் சங்கம் அஞ்சலி...!

        மார்க்சிய அறிஞரும், கேரளத்தின் மூத்த முற்போக்குக் கலை இலக்கியவாதியுமான பி.கோவிந்தப்பிள்ளை மறைவுக்கு தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்- கலைஞர்கள் சங்கம் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளது. கேரள திரைப்படக்கழக முன்னாள் தலைவரும், “பி.ஜி.” என்று அன்புடன் அழைக்கப்பட்டவருமான கோவிந்தப்பிள்ளை, கடந்த சில நாட்களாக உடல்நலம் குன்றி திருவனந்தபுரத்தில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்தார். அங்கு அவர் வியாழனன்று (நவ.22) காலமானார். அவருக்கு அஞ்சலி செலுத்தி தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் சார்பில் மாநிலத் தலைவர் ச. தமிழ்ச்செல்வன், பொதுச்செயலாளர் சு. வெங்கடேசன் இருவரும் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:

          1926 மார்ச் 25 அன்று கேரளத்தின் பெரும்பாவூர் பகுதியைச் சேர்ந்த புல்லுவழி கிராமத்தில் பிறந்தவரான தோழர் பி. கோவிந்தப்பிள்ளை, மாணவப்பருவத்திலேயே நாட்டின் விடுதலைப்போராட்டத்தில் பங்கேற்று சிறைவாசம் அனுபவித்தவர்.
          பின்னர் மார்க்சிய சிந்தனையாளராகப் பரிணமித்து, சிறந்த எழுத்தாளராகவும் ஆய்வாளராகவும் திகழ்ந்தவர். சிறையில் இருந்த காலத்தில் தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மொழிகளையும் கற்றுக் கொண்டவர். கேரள மாநில முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கத்தின் வளர்ச்சியில் ஒரு முக்கிய இடம் வகித்தவரான தோழர் பி.ஜி. மார்க்சிய கண்ணோட்டத்துடன் கலை இலக்கியப் பிரச்சனைகளையும் பண்பாட்டுத்தள நிகழ்வுகளையும் ஆராய்ந்தார். பிற்போக்குவாதிகளின் திசை திருப்பல்களுக்கு எதிராக, மக்கள் கலை இலக்கியத்தை வளர்ப்பதில் வெற்றிகரமாகப் பங்களித்தார்.
             ஆழ்ந்த வாசிப்பு ஆர்வம் கொண்டவரான பி.ஜி., அரசியல், சமுதாயம், தத்துவம், கலை-இலக்கியம் என பல்வேறு துறைகள் தொடர்பாக ஏராளமான கட்டுரைகள் எழுதியுள்ளார். தன் வாழ்க்கையின் கடைசிக் கட்டம் வரையில் படிப்பதிலும் எழுதுவதிலும் இடையறாது ஈடுபட்டிருந்தார். சுமார் 30,000 புத்தகங்கள் கொண்ட ஒரு சிறு நூலகத்தையே தமது இல்லத்தில் அமைத்திருந்தார் என்பதிலிருந்து, புத்தக வாசிப்பிலும் ஆய்விலும் அவருக்கு இருந்த காதலைப் புரிந்து கொள்ள முடியும். வளரும் கலை இலக்கியவாதிகளுக்கு அவரது இந்த ஈடுபாடு ஒரு சிறந்த முன்னுதாரணம் என்றால் மிகையில்லை.
              கேரள மாநில திரைப்பட வளர்ச்சிக் கழகத் தலைவராகவும் செயல்பட்டு, சமுதாய அக்கறை கொண்ட திரைப்படங்கள் உருவாவதற்குத் துணை நின்றவரான பி.ஜி. தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்- கலைஞர்கள் சங்கத்தோடும் நெருங்கிய உறவு கொண்டிருந்தார். நெல்லையிலும் திருப்பரங்குன்றத்திலும் நடைபெற்ற சங்கத்தின் மாநில மாநாடுகளிலும், திருச்சி குணசீலத்தில் நடந்த இலக்கிய முகாமிலும் கலந்துகொண்டு ஊக்கமளித்தார். தமுஎகச படைப்பாளிகளுக்கும் கேரள படைப்பாளிகளுக்கும் இடையே நட்புறவுப் பாலமாகச் செயல்பட்டார். தமிழகத்தின் பண்பாட்டுத் தள நிகழ்ச்சிப் போக்குகளைக் கூர்மையாகக் கவனித்து கருத்துப் பரிமாற்றம் செய்துவந்தார்.
           அவ்வகையில் தோழர் பி.ஜி.யின் மறைவு தமுஎகச-வுக்கும் ஈடு செய்ய முடியாத பேரிழப்பாகும். மக்கள் மீது நேயத்துடன் தத்துவார்த்தப் புரிதலிலும் புத்தக வாசிப்பிலும் தீவிர எழுத்திலும் முனைப்புடன் ஈடுபடுத்திக் கொள்வதுதான் அவருக்குச் செலுத்தும் உண்மையான அஞ்சலியாக இருக்க முடியும். அன்னாருக்கு தமுஎகச தனது அஞ்சலியை சமர்ப்பிக்கிறது. அவரது பிரிவால் துயருற்றிருக்கும் குடும்பத்தினர் மற்றும் கேரள முற்போக்குக் கலை இலக்கியவாதிகளுக்கும் மார்க்சிய இயக்கத்தினருக்கும் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

நன்றி : தீக்கதிர்

வியாழன், 22 நவம்பர், 2012

கசாப்பின் திடீர் தூக்கும், இன்றைய இரவு விருந்தும் பாராளுமன்றத்தை முடக்கவா மிஸ்டர் மன்மோகன் சிங்...?

        இன்று நவம்பர் 22 - ஆம் தேதி சொன்னது போல் பாராளுமன்றத்தின் குளிர்காலக் கூட்டத்தொடர் ஆரம்பமானது. இது குளிர்காலக் கூட்டத்தொடர் என்பதாலேயே இந்த கூட்டத்தொடர் தேதி நெருங்க நெருங்க பிரதமர் மன்மோகன் சிங்குக்கு குளிர் சுரமே வந்துடுத்து.

420 ஆண்டு பாரம்பரியத்தை சிதைக்கும் மதவெறி அமைப்புகள்...!

          420 ஆண்டுகளுக்கு முன்னர் கட்டப்பட்ட சார்மினாரின் பாரம்பரியத்தை சிதைக்கும் விதமாக அதன் அருகிலேயே இந்துக் கோவில் கட்டப்பட்டிருப்பது குறித்தும், அதனால் ஏற்படும் சர்ச்சை குறித்தும் தற்போது தீவிரமாக விவாதிக்கப்பட்டு வருகிறது. 4 கூம்பு கோபுரங்களை கொண்ட சார்மினார் கட்டுமானத்திற்கு அருகே, மிகச்சிறிய அளவிலான பாக்யலட்சுமி கோவில் கட்டப்பட்டு உள்ளது. இந்த கோவில், பழமை வாய்ந்தது என்று இந்து அமைப்புகள் கூறினாலும், 60 ஆண்டுகளுக்கு முன்னர் எடுக்கப்பட்ட சார்மினாரின் புகைப்படத்தை ஆய்வு செய்தபோது, அதில், இந்த பாக்யலட்சுமி கோவில் இல்லை. கடந்த சில ஆண்டுகளுக்குள் திடீரென முளைத்த இக்கோவிலைச் சுற்றி காவிக்கொடிகள் சார்மினாரின் பாரம்பரியத்திற்கு பங்கம் விளைவிக்கும் வகையில் கட்டப்பட்டுள்ளன. கோவில் நிகழ்ச்சியின் போது, அங்கு போடப்படும் தார்பாலின் பாய் சார்மினார் கட்டிடத்தில் சேர்த்து கட்டப்படுகிறது. இதனால் சமீபத்தில் இது குறித்து சர்ச்சை எழுந்து, பதற்றம் ஏற்பட்டது.  இந்த நிலையில், கடந்த 10 நாட்களில் வாகனங்கள் எரிக்கப்பட்டன. அந்த வழியே செல்லும் மக்களும் தாக்கப்பட்டதுடன் கடை களும் நொறுக்கப்பட்டன.          சார்மினார் விவகாரத்தில், ஆந்திராவை ஆட்சி செய்யும் காங்கிரஸ் அரசு உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என மஜிலிஸ்-எ-இதாதுல்-முஸ்லீமின் (எம் ஐ எம்) கட்சி மாநிலத்திலும், மத்தியிலும் காங்கிரசுக்கு அளித்த ஆதரவை விலக்கிக் கொண்டது. சார்மினார் பாரம்பரியம் பாதிக்கப்படக்கூடாது என போராட்டத்தை முன்னின்று நடத்தும் அமைப்பாக எம்.ஐ.எம் உள்ளது. ஹைதராபாத்தின் பாரம்பரிய கட்டிடம் சிதைக்கப்படுவது குறித்து, எதிர்த்து பேச யாரும் தயாராகாத நிலையில் இந்து அமைப்புகள், அந்த இடத்தை ஆக்கிரமிப்பதில் தீவிரம் காட்டுகின்றன. சார்மினாரை பாதுகாக்க வேண்டிய பொறுப்பு இந்தியத் தொல்லியல் துறைக்கு உள்ளது. 1951ம் ஆண்டு முதல் இந்த நானூறு ஆண்டு கட்டிடம், தேசிய நினைவுச் சின்னமாக ஆனது. ஹைதராபாத்தின் பாரம்பரியத்தை பாதுகாக்க இந்திய தொல்லியல் துறை தவறியுள்ளது என குற்றம் சாட்டப்படுகிறது. 60 ஆண்டுகளுக்கு முன்னர் புகைப்படம் எடுக்கப் பட்ட சார்மினார் கோபுர வடிவத்தை பார்க்கும், அந்த கால கட்டத்தில் பயன் படுத்தப்பட்ட கார்கள் சாலையில் ஓடுவதை காண முடிகிறது. அந்த புகைப்பட ஆதாரம் மூலம் சார்மினார் அருகே பாக்யலட்சுமி கோவில் இல்லை என்பது மிகத் தெளிவாக தெரிகிறது. பழமையான வழிப்பாட்டுத் தலம் என இந்து அமைப்புகள் கூறும் வாதம் நம்பகத்தன்மையை இழந்து விட்டது. மிகச்சிறிய அளவில் வைக்கப்பட்ட பாக்யலட்சுமி கோவில் நாளடைவில் கொஞ்சம் கொஞ்சமாக ஆக்கிரமித்து தனது, கட்டிடப் பகுதியை விரிவுப்படுத்திக் கொண்டிருக்கிறது. இந்தக் கோவிலால், சார்மினாருக்கு ஒவ்வொரு நாளும் அச்சுறுத்தல் நீடிக்கவே செய்கிறது.

நன்றி : The Hindu
தமிழாக்கம் : தீக்கதிர் 

செவ்வாய், 20 நவம்பர், 2012

நடுநிலைமையுடன் நேர்பட பேசும் நீதியரசர் மார்கண்டேய கட்சு...!

எழுதுகிறேன்...

கருத்துரிமையின் குரல்வளையை நெரிக்கும் ஆட்சியாளர்களும், காவல்துறையும்....!


            அச்சம் தவிர்... தீயோர்க்கு அஞ்சேல்... நேர்பட பேசு.... ரௌத்திரம் பழகு... என்ற பாடங்களை புரட்சிக்கவி பாரதி கற்றுக்கொடுத்த நாடு இது.

திங்கள், 19 நவம்பர், 2012

இப்படியும் ஒரு நாட்டு அதிபர் இந்த உலகத்துல இருக்கிறார்.. ..!





             பொதுவாகவே நம்ப ஊருல எல்லாம் கவுன்சிலரா ஆகிட்டாலேயே நம்ப அண்ணாத்தைங்க போடுற ஆட்டத்தை நாம்மால பார்க்கவே சகிக்காது. வெள்ளை வெளேருன்னு பேண்ட்  சட்டைய போட்டுகினு. கருப்புக்கண்ணாடிய  மாட்டிகினு. கையில பிரேஸ்லெட்டும் மோதிரமுமா திரிந்துகிட்டு. செல்போன காதுல வெச்சிகிட்டு இங்கேயும் அங்கேயும் அலைஞ்சிகிட்டு. விலை உயர்ந்த காருல தான் சுத்தி சுத்தி வந்துகிட்டு இருப்பாங்க. கவுன்சிலருக்கே இவ்வளவு பந்தான்னா.... எம். எல். ஏ. - எம். பி.-ன்னா இன்னும் சொல்லவே வேண்டாம். பிரதமர், மத்திய அமைச்சர், முதலமைச்சர், மாநில அமைச்சர், கவர்னர் - இப்படி ஏதாவது என்றால் அதையும் சொல்லவே வேண்டாம். ஒரே பந்தா தான்.
         இப்படியெல்லாம் நம் நாட்டு அரசியல்வாதிகளை பார்த்து பழகிவிட்ட நமக்கு, இப்படியெல்லாம் ஒரு பந்தாவும் இல்லாமல், ஒரு சாதாரண கிராமத்தானைப் போல் ரொம்ப ரொம்ப சிம்பலான ஒரு அதிபரை பார்க்கும் போது நமக்கெல்லாம் மிகவும் ஆச்சரியமாக இருக்கிறது. உலகமய - தாராளமய தாக்குதல்களுக்கு பிறகு வெகுண்டெழுந்த இலத்தின் அமெரிக்க மக்கள் மெல்ல மெல்ல முதலாளித்துவ ஆட்சிகளுக்கு முடிவு கட்டி, தங்கள் இடதுசாரிகளே பொருத்தமானவர்கள் என்கிற மனமாற்றத்திற்கு வந்ததின் காரணமாக, வெனிசுலா, அர்ஜென்டினா, பிரேசில், சிலி, பொலிவியா, உருகுவே - என நீண்டு கொண்டே போகிறது. இவைகள் எல்லாவற்றிற்கும் கியூபா தான் வழிகாட்டியாகவும், கலங்கரை விளக்கமாகவும் விளங்குகிறது.
             இப்படியாக இடதுசாரி தலைமையில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு வெற்றிநடைபோடும் நாடுகளில் ஒன்றான உருகுவே நாட்டில் கடந்த  2009  - ஆம் ஆண்டு நடைபெற்ற அதிபர் தேர்தலில்   இடதுசாரி தலைவர்  ஹோஸே முயீகா வெற்றிபெற்று அந்நாட்டின் அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டார். 1960 - களில் ''கியூபா புரட்சி'' நடைபெற்ற போது தாமும் இடதுசாரியாகி 14 ஆண்டுகள் சிறையில் கழித்திருக்கிறார். அதனால் தான்  ஆட்சி செய்யும் போதும் இப்போதும் இந்த கம்யூனிச சிந்தனை என்பது இவர் கூடவே வந்திருக்கிறது.
            ஹோஸே முயீகா அதிபர் தேர்தலில் வெற்றி பெற்று,  இவர் அதிரடியாக அறிவித்த முதல் விஷயம் என்ன தெரியுமா...? ''அதிபருக்கான வழக்கமான மாளிகையே எனக்கு வேண்டாம்'' என்ற அவரது அறிவிப்பு தான் எல்லோரையும் ஆச்சரியப்பட வைத்தது. மாளிகையே வேண்டாமென்று பிறகு என்னகே போனார்...? மாளிகையை மட்டுமல்ல.. ஆள், அம்பு, சேனை, சங்கு ஊதிக்கொண்டே சிகப்பு விளக்கு சுழலும் கார் - என எந்த ஒரு பட்டாளத்தையும் அவர் தன்னுடன் வைத்துக் கொள்ளவில்லை.
                   உருகுவே நாட்டு அதிபராகிவிட்ட பிறகு அவர் வாழ்ந்த இடம் எங்கே தெரியுமா...? கோரைப் புற்கள் களைகட்டி வளர்ந்திருக்க புதர் நிறைந்த பூமி, நட்ட நடுவே ஒரு தகரக் கொட்டகை,  காயம்பட்டு நொண்டிச் செல்லும்  ஒரு நாய்,  வீட்டுக்கு வெளியே காயப் போட்டிருக்கும் துணிமணிகள் -  இங்கு தான் உருகுவே நாட்டு அதிபர் முயீகா வாழ்ந்து வருகிறார் என்றால் நம்பவா முடிகிறது. கண்டிப்பாக நம்பித்தான் ஆகவேண்டும். அதுமட்டுமல்ல, இவரது பாதுகாப்புக்கு இரண்டே இரண்டு போலீஸ்காரர்கள் மட்டுமே இவருக்கு காவல்...! மேலும் அவரது இந்த வீட்டுக்கு குடிநீர் இணைப்பு கூட கிடையாது. கிணற்று தண்ணீரைத்தான் பயன்படுத்துகிறார்.
           ''என் விருப்பத்தில் அடிப்படையில் நான் தேர்வு செய்த வாழ்க்கை முறை தான் இது'' என்று வாயார சொல்லி மகிழ்கிறார் ஹோஸே முயீகா. இவர் வாழும் இந்த குடில் மனைவியின் பண்ணை நிலம் என்பது குறிப்பிடத்தக்கது.  இங்கே மலர் செடிகளை கணவனும் மனைவியும் வளர்க்கின்றனர்.
             உருகுவே அதிபர் என்ற பதவிக்காக இவருக்கு கிடைக்கும் 12 ஆயிரம் டாலர் வருமானத்தை இவர் என்ன செய்கிறார் தெரியுமா? இவரது வருமானத்தில்  90 சதவீதத்தை சமூக நலப் பணிகளுக்காக அள்ளிக் கொடுத்துவிடுகிறாராம். ''என் வாழ்க்கையின் பெரும்பங்கை இப்படியெ கழித்துவிட்டேன். இப்பொழுதும் இப்படித்தான் வாழ விரும்புகிறேன்'' என்றார் மூயிகா. உருகுவேயில் அதிபராக இருப்பவர் ஆண்டுதோறும் தமது சொத்து மதிப்பை வெளியிட்டாக வேண்டும் என்பது சட்டமாகும். அதன்படி  2010 - ஆம் ஆண்டில்  இவரது சொத்து மதிப்பு என்பது 1800 டாலர் தான் . 1987ஆம் ஆண்டு வெளிவந்த வொக்ஸ்வாகன் பீடில் கார்,  தற்போது தன் மனைவிக்கு சொந்தமான நிலம், டிராக்டர், வீடு ஆகியவற்றை தான் சொத்தாகக் காட்டியிருக்கிறார். ஆக மொத்தமாக 2,15,000 டாலராம். இப்படியும் சில மனிதர்கள் அதிபர்களாக இருந்து ‘வரலாறு' படைக்கின்றனர்....!

ஞாயிறு, 18 நவம்பர், 2012

இரத்தவெறி பிடித்து அலையும் இஸ்ரேல் - ஐ. நா. சபை என்ன புடுங்கிகிட்டா இருக்கு...?









       
         கடந்த ஐந்து நாட்களாக இஸ்ரேல் திடீரென பாலஸ்தீன நாட்டின் காசா நகரின் மீது தொடர்ந்து ஏவுகணை தாக்குதல்களை நடத்தி வருகிறது. இஸ்ரேல் ஐந்தாவது நாளாக இன்றைக்கு கூட பாலஸ்தீனத்தின் பிரதமர் அலுவலகத்தையும், ஊடகங்களின் தலைமை அலுவலகத்தையும் ஏவுகணை மூலம் தகர்த்து நிர்மூலமாக்கியது. இந்த ஏவுகணை தாக்குதல்களில் இதுவரை பல குழந்தைகள் உட்பட 50 - க்கும் மேற்பட்ட பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டிருக்கின்றனர். அதே போல் 500 - க்கும் மேற்பட்டவர்கள் படுகாயம் அடைந்து மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இவர்களிலும் பல குழந்தைகள் அடங்குவர்.
            ஐந்து நாட்களாக இந்த படுகொலைகள் நடந்துகொண்டிருக்கின்றன. உலக நாடுகள் அனைத்தும் கொஞ்சம் கூட பதறாமல் பாராமுகமாய் இருக்கின்றன. ஒபாமாவின் வெற்றியை கொண்டாடும் ஏகாதிபத்திய - முதலாளித்துவ ஆதரவுபெற்ற சர்வதேச ஊடகங்களும், பால்தாக்கரேவின் மரணத்திற்கு ஒப்பாரி வைக்கும் பாசிச குணம் படைத்த இந்திய ஊடகங்களும் ஒரு முறை கூட இஸ்ரேலின் இந்த கொடூரச் செயலை கண்டித்து வாயை திறக்கவில்லை. உலக போலிசாக தன்னை காட்டிக்கொள்ளும் அமெரிக்கா  தன் செல்லக்குழந்தையின் இந்த செயலை பார்த்து ரசித்துக்கொண்டிருக்கிறது. சுதந்திர மூச்சுக்காற்றை சுவாசிக்க முடியாமல் துடித்துக் கொண்டிருக்கும் அமைதியான ஒரு நாட்டின் மீது இரத்தவெறி பிடித்த இன்னொரு  நாடு தாக்குதல் நடத்திகிறது. ஆனால் ஐ.நா சபை அதை தட்டிக்கேட்காமல் என்ன புடுங்கிகிட்டு இருக்கிறது என்று தெரியவில்லை.  

அட மூடர்களே....மும்பை தாதாவை மகாத்மா ரேஞ்சிக்கு உயர்த்துகிறீர்களே... நியாயமா...?

                அம்மாடியோ.... இன்னிக்கு இந்தியாவில யாரு வீட்டுக்குப் போனாலும் ஒரே ஒப்பாரி சத்தமாக தான் இருக்கிறது. எல்லா தொலைக்காட்சிகளிலும் பால் தாக்கரேவின் இறுதி ஊர்வலம் தான் காட்டுகிறார்கள். ஒரு மும்பை தாதாவின் பெருமைகளையும், மகிமைகளையும் அவர்களால் சொல்லி சொல்லி மாளவில்லை. பத்திரிக்கைகளும், தொலைக்காட்சிகளும் சேர்ந்து பால் தாக்கரேவை ஒரு மகாத்மா ரேஞ்சிக்கு - ஒரு மகான் ரேஞ்சிக்கு உயர்த்திக் காட்டி இந்திய மூளைகளுக்கு அவர்களுக்கே தெரியாமல் காவி வண்ணம் பூசுகிறார்கள்.
          பால் தாக்கரே யாரு...? தேசத்திற்கு தியாகங்கள் செய்து சுதந்திரம் வாங்கிக்கொடுத்தவரா...? அல்லது தேச பக்தி, ஒற்றுமை, ஒருமைப்பாடு - இவைகளை உயர்த்திப் பிடித்த உத்தமத் தலைவரா....? அல்லது தொழிலாளர்களின் உரிமைகளுக்காக - பெண்விடுதலைக்காக போராடிய போராளியா...? அல்லது மும்பையிலுள்ள  ஏழை - எளிய மக்களின் தோழனா...? இதுல எதுவுமே இல்ல... இதற்கு எதற்கு இத்தனைக் கூப்பாடு...?
          யார் இந்த பால் தாக்கரே...? மில் தொழிலாளர்களையும், தொழிற்சங்கத் தலைவர்களையும் அடக்கி - ஒடுக்கி, முதலாளிகளுக்கும், நிர்வாகத்திற்கும் விசுவாசம் காட்டும் அடிவருடியாய், அடியாளாய்  இருந்து பல ஆயிரம் கோடி ரூபாய்க்கு அதிபதியான கோடீஸ்வரன் தானே இவர்.  மும்பை - மராத்தி என்ற பிராந்திய உணர்வும் இன உணர்வும் கொண்டு மும்பையில் குடியேறிய தமிழர்களையும், குஜராத்திகளையும், பீகாரிகளையும் அடித்து விரட்டி தேச ஒற்றுமைக்கு ஊறு விளைவித்த தாதா தானே இவர்...? இஸ்லாமியர்களுக்கு எதிராக விஷம் கக்கியவர் தானே இந்த பால் தாக்கரே...?
இவரது இஸ்லாமிய எதிர்ப்பு நடவடிக்கைகள் தான், நமது நாட்டின் மிக சிறந்த ஓவியர் 
எம். எப். ஹுசைன் இந்தியாவிற்குள் நுழையமுடியாமல் வெளிநாட்டிலேயே செத்து மடிந்தார். இதையெல்லாம் நாடு மறந்திருக்குமா என்ன....? நாடு மறந்திருக்கலாம். நம்மால் மறக்க முடியுமா...?
               இப்படிப்பட்ட ஒரு தாதாவைத் தான் - ஹிட்லரின் மறு உருவமாய் வாழ்ந்து மடிந்த ஒருவரைத் தான் இன்றைக்கு பத்திரிகை உலகமும், தொலைக்காட்சிகளும், ஆட்சியாளர்களும் தலையில் தூக்கி வைத்து கொண்டாடுகிறார்கள். ஒரு தேசத்தலைவர்  அளவுக்கு உயர்த்திப் பிடிக்கிறார்கள் என்பதைப் பார்க்கும் போது நமக்கே கோபம் வருகிறது.
         பால் தாக்கரே நேற்று இறந்ததிலிருந்து தொலைக்காட்சிகளின் பார்வை அனைத்தும் மும்பை பக்கம் திரும்பிவிட்டது. பத்திரிக்கைகளுக்கும் சொல்லவே வேண்டாம். ஒரு மாதத்திற்கு இந்த படம் தான் ஓடும். முகநூலில் கூட பால் தாக்கரே பற்றி தான் தாக்கு தாக்குன்னு தாக்குறாங்க. எதைப்பார்த்தாலும் பால் தாக்கரேவின் புராணங்கள் தான். பாசிச குணம் படைத்த முதலாளித்துவ ஊடகங்கள் ஒரு பக்கம் மூளைச்சலவை செய்துகொண்டிருக்கிறது.
      இன்னொரு பக்கம், இந்த தேசத்திற்காக பாடுபட்ட தேசத்தலைவர் இறந்துவிட்டது போன்ற பிரம்மிப்பை இந்திய குடியரசுத் தலைவரும், பிரதமரும், காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியா காந்தியும் சோககீதம் வாசித்திருக்கிறார்கள். பிரதமர் மன்மோகன் சிங்கோ விருந்து சாப்பிடாமல் பண்ண ஆர்டரை கேன்சல் பண்ணிட்டு வெளிநாட்டுக்கு போய்விட்டார். என்னயா நடக்குது நாட்டுல...? புரியவே இல்லை....!
        இது எல்லாவற்றிலும் கேவலமான விஷயம் என்னவென்றால்...? மறைந்த அந்த மாபெரும் மனிதரை அரசு மரியாதையோடு அடக்கம் செய்யப்படுவது தான் ஒரு புரியாத புதிராக இருக்கிறது. பால் தாக்கரேவின் உடலின் மீது காவல் துறையினர் முழு அரசு மரியாதையுடன் தேசியக்கொடியை போர்த்தி அஞ்சலி செலுத்துகிறார்கள். ஒரு தாதா  என்கிற பெருமையைத் தவிர அவர் இந்நாள் - முன்னாள் முதலமைச்சரோ அல்லது அமைச்சரோ அல்லது எம்.எல்.ஏ - எம். பி யோ அல்லது கவுன்சிலரோ கூட இல்லை. ஒரு சாதாரண மனித உடலுக்கு மூவர்ணக்கொடியை போர்த்தலாமா....? அது தேசியக்கொடியை அவமரியாதை செய்தது போல் ஆகாதா....? அதற்கென்று கட்டுப்பாடுகள் கிடையாதா...?
               அதேப்போல் பொது சுடுகாட்டில் தகனம் செய்யாமல், பொது மக்கள் கூடும் இடமான  ''சிவாஜி பூங்காவில்'' தகனம் செய்து, நினைவுச் சின்னம் எழுப்புகிறார்கள். சிவாஜி பூங்கா பால் தாக்கரேவுக்கு மிகவும் பிடித்த இடமாம். இந்திய சுதந்திரம் பெற்ற பிறகு, மும்பை நகரில் பொது மக்கள் கூடும் பகுதியில் - பொது மக்கள் மத்தியில் ஒரு அரசியல் தலைவருக்கு இது போல் தகனம் செய்வது என்பது இதுவே முதல் தடவையாம். அப்படியொரு பெருமைக்கு உரியவரா இவர்...? என்பது தான் நமது கேள்வி.

''மும்பையின் ஹிட்லர்'' பால் தாக்கரே மரணம் - மும்பை இனி மெல்ல வாழும்...!

              கடந்த சில நாட்களாகவே மும்பைநகரம் பதட்டமான சூழ்நிலையில் இருந்துவந்ததை பத்திரிகை மற்றும் தொலைக்காட்சி வாயிலாக தெரிந்துகொள்ள முடிந்தது. மும்பை மட்டுமே வாழுமிடமாக கொண்ட சிவசேனா கட்சியின் தலைவர் பால் தாக்கரே கடந்த சில நாட்களாகவே நோய்வாய்ப்பட்டு உயிருக்கு போராடியிருந்தது தான் காரணம். சில பேர் வாழும் போதும் பிரச்சனை. மாண்ட பின்பும் பிரச்சனை தான். அது போல் நேற்று  இறந்தபின்பும் மும்பை நகரம் மேலும் அதிகமான அளவிற்கு  பதட்டமாக காணப்படுகிறது. மக்களின் பாதுகாப்புக் கருதி ஆயிரக்காக்கான காவலர்களை அரசு இறக்கிவிட்டிருக்கிறது. காவல்துறையோ பொது மக்கள் யாரும் வீட்டை விட்டு வெளியே வரவேண்டாம் என்று எச்சரிக்கை வேறு விடுத்திருக்கிறார்கள்.
            ''மும்பை தாதா'' என்றும் ''மும்பை ஹிட்லர்'' என்றும் சிவசேனா கட்சியினராலும், அவரது மற்ற ''கூட்டாளிகளாலும்'' அன்போடு அழைக்கப்பட்டவர் தான் இந்த பால் தாக்கரே. இவரது இளம்வயதிலிருந்தே இவர் ''மதம் பிடித்தவர்'' - இந்து மதம் பிடித்தவர். இந்து மதம் தான் இவரது மூச்சும், பேச்சும். ''தீவிரவாத அமைப்புகளில் 'தற்கொலைப் படை' இருப்பது போல் இந்துக்களிலும் 'தற்கொலை படை' அமைக்கப்பட வேண்டும்'' என அசாதாரணமாக பேசியவர். அந்த அளவிற்கு இந்து மதம் பிடித்தவர். இந்து மதத்தின் மீது இவருக்கு இருந்த பிடிப்பால், இந்து மதத்தின் அடையாளமாக கருதப்பட்ட 'சத்திரபதி சிவாஜி' இவரது குலதெய்வம் என்றால் பார்த்துக்கொள்ளுங்களேன். அதனால் தான் இவரால் ஆரம்பிக்கப்பட்ட கட்சிக்கு 'சிவசேனா' - 'சிவாஜி படை' என்று பெயரிட்டார். இவர் இந்துமதம் பிடித்தவர் மட்டுமல்ல, வேற்று மதத்தினரை - குறிப்பாக இஸ்லாமியர்களை எதிரிகளாக நடத்தியவர். அதனால் பாகிஸ்தான் என்றால் இவருக்கு கசப்பு மருந்து சாப்பிடுவது போலிருக்கும். அண்மையில் பாகிஸ்தான் கிரிக்கெட் அணி இந்திய கிரிக்கெட் அணியுடன் விளையாடுவதற்கு இந்தியா வரவிருக்கிறது என்ற செய்தியை கேட்ட உடன், கடந்த வாரம் நோய்வாய்ப்பட்டு மூச்சு விடவே திணறிக் கொண்டிருந்தவர், படுக்கையை விட்டு எழுந்து பாகிஸ்தான் அணியின் வருகையை எதிர்த்து குரல் எழுப்பிய மாவீரன் தான் இவர். சிவசேனா கட்சியின் வளர்ச்சிக்குப் பின் பாகிஸ்தான் கிரிக்கெட் அணி இதுவரையில் மும்பையில் ஆடாமல் பார்த்துக்கொண்டவர். முன்பு ஒருமுறை, இந்திய கிரிக்கெட் ஆட்டக்காரர் மராத்தியரான சச்சின் டெண்டுல்கரின் எதிர்கால வருமானத்திற்கே வேட்டுவைக்கும்படி  பால் தாக்கரே பேசிய போது, சுதாரித்துக்கொண்ட டெண்டுல்கர் ''முதலில் நான் இந்தியன், அடுத்தது தான் மராத்தியன்'' என்று புத்திசாலித்தனமாக பேசி, தன் தேசபக்தியை வெளிப்படுத்தி, ஒரு சிக்ஸர் அடித்து பால் தாக்கரேவின் வாயை அடைத்து, தன்  வருமானத்தை நிலைப்படுத்திக்கொண்டார். அதை கேட்ட விசுவாமித்திரரான பால் தாக்கரே பதிலுக்கு ''மராத்தியர்களின்  மனங்களிலிருந்து நீ விலக கடவாய்'' சச்சினைப் பார்த்து சாபமிட்டார்.
             அதுமட்டுமல்ல உலகமகா கொடூரன் - சர்வாதிகாரி ஹிட்லர் இவரது ஆதர்ஷ குரு என்பது குறிப்பிடத்தக்கது. ''ஹிட்லர் எனக்கு பிடித்த தலைவர். நான் அவரை தீவிரமாக பின்பற்றுகிறேன். ஹிட்லரின் தலைமைப்பண்பு என்னை பிரமிக்க வைத்திருக்கின்றது. அவரைப்போன்ற ஒரு தலைவர் தான் இந்தியாவை ஆளவேண்டும்'' என்று அறிவுப்பூர்வமாக வெளிப்படையாகவே  பேசிய பால் தாக்கரே போன்று ஒரு அதிசய தலைவரை இந்தியாவில் வேறெங்கும் பார்க்கமுடியாது. இயற்கையிலேயே இவர் ஒரு 'கார்டூனிஸ்ட்' என்பதால்  இப்படி ஏதாவது வேடிக்கையாக நடந்துகொள்வார்.
                  இனவுணர்வுகளை - மாநில உணர்வுகளை  தூண்டி மகாராஷ்டிரா மக்களை - குறிப்பாக மும்பை மக்களை ஒரு குறுகிய வட்டத்துக்குள்ளேயே வைத்திருந்தார். தனக்கென தனியான பத்திரிகை ஆரம்பித்து, கார்டூனிஸ்டாக இருந்து, சிவசேனா கட்சியை நிறுவியது வரை,  மும்பை, மகாராஷ்டிரா இரண்டும் மராத்தியர்களால் மராத்தியர்களுக்காக ஆளப்படவேண்டியவை என்பது தான் அவரது பிரதானமான கொள்கையாக இருந்து வந்திருக்கிறது. குஜராத்தியர்கள், மார்வாடியர்கள், பீகாரிகள்  மற்றும் தென்னிந்தியர்களின் மும்பை நோக்கிய 'குடிப்பெயர்வு' நடைபெறுவதை எதிர்த்து,  மராத்தியர்களின் வேலை வாய்ப்புக்களை வேற்றினத்தவர்கள் தட்டிப்பறிப்பதை அனுமதிக்க முடியாது என்று கோஷமிட்டு 'தாதா' பாணியிலான வன்முறையை கட்டவிழ்த்து விட்டு, தேச ஒற்றுமையையும், ஒருமைப்பாட்டையும் குழித்தொண்டிப் புதைத்தவர்.
           இவர் இஸ்லாமியர்களுக்கும், வேற்றினத்தவர்களுக்கும் மட்டும் எதிரானர் அல்லர். கம்யூனிஸ்ட்களுக்கும், இடதுசாரிக்கட்சிகளின் ஆளுமையிலிருந்த தொழிற்சங்கங்களுக்கும் எதிராகவும் வன்முறை பாணியிலான அரசியலை வளர்த்தவர். கம்யூனிஸ்ட்களின் வளர்ச்சியையும், தொழிற்சங்கங்களின் வளர்ச்சியையும் பொறுத்துக்கொள்ள முடியாமல் அவ்வியக்கங்களை வன்முறை, கலவரம் மற்றும் கொலைகளின் மூலம் நிர்மூலம் ஆக்கியவர்.
தொழிலாளர்கள் மீது அக்கறை உள்ள கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் கம்யூனிஸ்ட் தொழிற்சங்கத்தை சேர்ந்த ஏராளமான தலைவர்களும், தொண்டர்களும் இவரது கண்ணசைவிலும், கையசைவிலும் கொல்லப்பட்டிருக்கிறார்கள். மகாராஷ்ட்ராவில் குறிப்பாக மும்பையில் உள்ள அனைத்து தொழிற்சங்கங்களும் சிவசேனா தலைமையிலான தொழிற்சங்கமாகத்தான் இருக்கும். மும்பையில் அனைத்து அரசுத்துறை அலுவலகங்களும், வங்கி, எல். ஐ. சி போன்ற பொதுத்துறை அலுவலகங்களும், தனியார் துறை அலுவலகங்களும் இவரது சிவசேனா கட்சியின் கட்டுப்பாட்டுக்குள் இருப்பதால், மேற்கூறிய இந்த அலுவலகங்களின் நுழைவு வாயிலில் கண்டிப்பாக ஒரு விநாயகர் சிலை வைக்கப்பட்டிருக்கும். இது இங்கே எழுதப்படாத சட்டமாகும். அதுமட்டுமல்ல, இவர்களது தொழிற்சங்கமானது தொழிலாளர்கள் மீது அக்கறை இல்லாமல், முதலாளிகளுக்கும், நிர்வாகத்திற்கும் சாதகமாக செயல்படக்கூடிய தொழிற்சங்கமாகும். அதனால் தான் நியாயமான கோரிக்கைகளுக்காக போராடுகிற தொழிலாளர்களுக்கு எதிராகவும், தொழிற்சங்க நடவடிக்கைகளுக்கு எதிராகவும் வன்முறையை கட்டவிழ்த்து விடுவது மட்டுமல்லாது, தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி நடத்தப்படும் வேலைநிறுத்தத்தையும் மிரட்டல்கள் மூலம் வெற்றிபெறாமல் செய்துவிடுவது என்பதையும் யாராலும் பாராட்டாமல் இருக்கமுடியாது. 
               இப்படியான போற்றுதலுக்கும், பெருமைக்கும், புகழ்ச்சிக்கும் சொந்தமான புண்ணியவானான பால் தாக்கரே மறைந்துவிட்டார். அவரோடு சேர்ந்து இதுவரை அவரை அலங்கரித்து வந்த வன்முறையும், கொலையும், மிரட்டலும், பதட்டமும், அமைதியின்மையும் மறைந்து போகட்டும். மும்பையில் இனி மெல்ல அமைதி மலருட்டும். மும்பையில் இனி மெல்ல அமைதி வாழட்டும்.
பின் குறிப்பு : இந்த புண்ணியவானின் வாழ்க்கை வரலாறு மராத்திய பாடப்புத்தகத்திலோ அல்லது சி. பி. எஸ். சி பாடப்புத்தகத்திலோ வராமல் இருந்தால் சரி.

வெள்ளி, 16 நவம்பர், 2012

மூடப்பட்ட பல்கலைக்கழகம் - வேடிக்கைப்பார்க்கும் கழக அரசு.....!

           தாழ்த்தப்பட்ட சமூகத்தை சேர்ந்தவன் என்பதாலேயே நந்தனுக்கு ஆலயத்தில் நுழைய அனுமதி மறுத்த சிதம்பரத்தில், சமூகத்தில் பின்தங்கிய, பொருளாதாரத்தில் பின்தங்கிய, பிற்படுத்தப்பட்ட குடும்பங்களின் இளைஞர்கள் கல்லூரியில் - பல்கலைக்கழகத்தில் நுழைந்து படிக்கவேண்டும் என்ற உயர்ந்த நோக்கத்தோடு தொடங்கப்பட்ட பல்கலைக்கழகம் தான் அண்ணாமலை பல்கலைக்கழகம் என்பதை நாடறியும். பிரிட்டிஷ் ஆட்சிக்காலத்தில், அன்றைய ஆட்சியாளர்களோடு நெருக்கமானவர்களும், உயர்சாதி குடும்பத்தை சேர்ந்தவர்களும் மட்டுமே உயர்கல்விக்காக கல்லூரிகளுக்கும் பல்கலைக்கழகத்திற்கும் போகமுடியும் என்ற காலகட்டத்தில், சிதம்பரத்தில் ராஜா சர் அண்ணாமலை செட்டியார் அவர்களால் சாதாரண மக்களின் உயர்கல்விக்காக 1920 - ஆம் ஆண்டு மீனாட்சி கல்லூரி தொடங்கப்பட்டு, பின்னர் 1928 - ஆம் ஆண்டு அண்ணாமலை பல்கலைக்கழகமாக உருவெடுத்தது.
            ஆரம்பத்திலிருந்தே இப்பல்கலைக்கழகத்தில் அலுவலக ஊழியர்களும், பேராசிரியர்களும் பின்தங்கிய மற்றும் பிற்படுத்தப்பட்ட குடும்பங்களிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டு பணியிலமர்த்தப்படுவதாலும், அதே குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்களுக்கே இந்த பல்கலைக்கழகத்தில் குறைந்த செலவில் படிக்க வாய்ப்பளிக்கப்படுவதாலும் வசதிபடித்தவர்கள் மற்றும் உயர்சாதியினர்கள் மத்தியில் பல்கலைக்கழகத்தைப் பற்றிய ஏளனங்களும், கேளிக்கைகளும், உண்மையல்லாத தவறான கருத்துகளும் மக்கள் மத்தியில் தூவப்பட்டன என்பது இப்பல்கலைக்கழகத்தின் வளர்ச்சியை இந்தக் கூட்டத்தினரால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை என்பதையே காட்டுகிறது.
         இப்படியாக பல ஆண்டு காலமாக எதிர்நீச்சல் போட்டு வளர்ந்த அண்ணாமலை பல்கலைக்கழகமானது, ராஜா சர் அண்ணாமலை செட்டியார் மறைவிற்கு பிறகு சிறிதளவும், ராஜா முத்தையா செட்டியார் மறைவிற்கு பிறகு முழுவதுமாகவும், நிர்வாக திறமையின்மை, வேலைவாய்ப்பு மற்றும் கல்வி வணிகமயம், ஊழல் மற்றும்  நிதி முறைகேடு போன்ற காரணங்களால் இன்றைக்கு சீரழிந்து போயிருக்கிறது என்பது தான் நிதர்சனமான உண்மை. இலஞ்சமாக பணத்தைப் பெற்றுக்கொண்டு தேவைக்கு அதிகமான ஊழியர்களையும், ஆசிரியர்களையும் பணியிலமர்த்தியதும், 7000 கோடி ரூபாய் அளவிலான நிதி முறைகேடுகளும் தான் இந்த பல்கலைக்கழகம் சீரழிந்துப் போனதற்கு முக்கிய காரணங்களாகும்.
            இந்த பிரச்சனைகளிலிருந்து மீள்வது எப்படி என்ற எந்த விதமான ஆய்வும் செய்யாமலும், 7000 கோடி அளவிலான நிதி முறைகேடுகளை விசாரணை செய்யாமலும் பல்கலைக்கழக நிர்வாகம் முன்னறிவிப்பு ஏதுமின்றி திடுதிப்பென சென்ற வாரம்  காலவ்ரையரையன்றி மூடிவிட்டது என்பது அதிர்ச்சியளிக்கக்கூட்டியது மட்டுமல்ல கண்டிக்கத்தக்கது.  அதை விட பிரச்சனைகளுக்கு தீர்வாக பணியில் இருக்கின்ற  ஆசிரியர்களையும், ஊழியர்களையும் பழிவாங்குவது என்பது முறையாகாது. நேர்மையானதுமல்ல. பழம்பெருமை வாய்ந்த பல்கலைக்கழகம், பல இலட்சம் பட்டதாரிகளையும், கல்வியாளர்களையும், ஆராய்ச்சியாளர்களையும் உருவாக்கித் தந்த பல்கலைக்கழகம், ஆயிரக்கணக்கான ஊழியர்களையும், ஆசிரியர்களையும் கொண்ட பல்கலைக்கழகம், பல்கலைக்கழகத்திலேயே நேரடியாக பயிலும் ஆயிரக்கணக்கான மாணவ - மாணவியர்களையும், இலட்சக்கணக்கான இளைஞர்கள், வயதானவர்கள், வெளியிடங்களில் பணியிலிருப்பவர்கள், குடும்பத்தலைவிகள், வசதியில்லாதவர்கள் என வித்தியாசமில்லாமல் தொலைதூரக்கல்வி பயில்பவர்களையும் வாழ்க்கையில் - சமூகத்தில் உயர்த்தி முன்னேற்றும் ஒரு உன்னதமான பல்கலைக்கழகம் மூடப்பட்டது என்பது அது எந்த ஒரு உயர்ந்த நோக்கத்தோடு இந்த பல்கலைக்கழகம் ஆரம்பிக்கப்பட்டதோ அந்தப் பணியில் தோற்றுவிட்டதாக பொருளாகிவிடும்.
           ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்கள் வயிற்றில் அடிக்கின்ற, மாணவ - மாணவிகளின் எதிர்காலக் கனவுகளில் மண்ணை வாரி போடுகின்ற பல்கலைக்கழகத்தின் நிர்வாகத்தை துளிக்கூட கண்டிக்காமல், கொஞ்சம் கூட சலனமே இல்லாமல் தமிழக அரசு வேடிக்கைப்பார்த்துக் கொண்டிருப்பது அதைவிட கொடுமையானது. கடுமையாக கண்டிக்கத் தக்கது. இப்படிப்பட்ட சூழ்நிலையில் பல்கலைக்கழகத்தை திறக்கத் கோரியும், வேலை உத்திரவாதம் வற்புறுத்தியும்  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைமையில் அனைத்துக் கட்சி போராட்டக்குழு சிதம்பரத்தில் தொடர்ந்து போராடி வருகிறது.

அயர்லாந்து நாட்டின் மூடநம்பிக்கையும் முட்டாள்தனமும் செய்த கொலை...!

           அயர்லாந்து நாட்டின் கால்வே நகரில் பூஸ்டன் அறிவியல் ஆராய்ச்சி மையத்தில் விஞ்ஞானியாக பணியாற்றி வருகிற  இந்தியாவை சேர்ந்த பிரவீன் ஹலப்பான்னாவர்(வயது 36) அவர்களின்  மனைவி சவீதா ஹலப்பான்னாவர்(வயது 31) என்பவர் அதே நாட்டில் பல் மருத்துவராக பணியாற்றி வந்தார்.  4 மாத கர்ப்பிணியான சவீதா, இரத்தத்தில் பாக்டீரியா அதிகம் உள்ள செப்டிகேமியா என்ற நோயால் அவதிப்பட்டு வந்துள்ளார். இந்த சூழ்நிலையில் திடீரென அவரது வயிற்றிலிருந்த  கரு இறந்துவிட்டதாகக் கூறப்படுகிறது. இதனால் உடனடியாக தனது கருவை கலைக்க வேண்டி பலமுறை ஹால்வேயில் உள்ள யுனிவர்சிட்டி மருத்துவமனைக்கு சென்றுள்ளார்.
         ஆனால், கத்தோலிக்க கிறிஸ்தவ நாடான அயர்லாந்து நாட்டில் மத நம்பிக்கை அடிப்படையில் ''கருக்கலைப்பு'' என்பது பாவச்செயலாகும் என்பதும், கருக்கலைப்பு என்பது குற்றமாகும் என்பதும் ஆண்டாண்டு காலமாக நடைமுறையில் இருக்கும் சட்டமாகும். கருக்கலைப்பு என்பது மதத்திற்கும், சட்டத்திற்கும் எதிரானது என்பதால்,  உயிருக்குப் போராடிக்கொண்டிருந்த அந்த பெண்ணிற்கு  கருக்கலைப்பு செய்ய முடியாது என்று கூறி மருத்துவர்கள் மறுத்துவிட்டனர்.
இந்த சூழ்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு, இறந்த கருவால் சவீதாவின் வயிற்றில் தொற்று ஏற்பட்டு உடல்நிலை பாதிக்கப்பட்டு உயிரிழந்தார்.
          மூடநம்பிக்கையாலும் முட்டாள்தனத்தாலும் ஒரு பெண்ணின் கொன்றிருக்கிறது. இறந்துவிட்ட கருவை அகற்றிவிட்டு ஒரு தாயின் உயிரைக் காப்பாற்ற வேண்டும் என்கிற குறைந்தபட்ச அறிவைக்கூட மதம் மழுங்கடித்துவிட்டதா...? அல்லது அதை சட்டம் தான் அனுமதிக்காதா...? என்பது தான் நமது கேள்வியாக இருக்கிறது. அது மட்டுமல்ல மதத்தின் பெயரிலான அந்த சட்டம் என்பது அந்த மதத்தை சேர்ந்தவர்களையும், அந்த நாட்டை சேர்ந்தவர்களையும் மட்டுமே கட்டுப்படுத்துமே அன்றி மற்ற நாட்டவர்கள் மீதோ அல்லது மற்ற மதத்தினர்கள் மீதோ அதே சட்டத்தை திணிப்பது என்பது எப்படி முறையாகும்....?
          மிக வேகமான அறிவியல் வளர்ச்சியை காணும் இந்த காலக்கட்டத்தில், அறிவுப்பூர்வமான - அறிவியல்பூர்வமான சிந்தனையில்லாமல், இதுபோன்ற மதத்தின் பெயரிலான மூடநம்பிக்கைகளையும், முட்டாள்தனமான சட்டங்களையும்
பார்த்து மனிதகுலமே வெட்கப்படவேண்டும். இனியேனும் காலமாற்றத்திற்கு தகுந்தாற்போல் - அறிவியல் வளர்ச்சிகளுக்கு ஏற்றாற்போல் ஆட்சியாளர்கள் தங்கள் சிந்தனைகளையும் மாற்றிக்கொள்ளவேண்டும். பகுத்தறிவோடு சட்டங்கள் இயற்றப்படவேண்டும். இதுபோன்ற முட்டாள்தனமான சட்டங்கள் நீக்கவேண்டும். இது இந்தியா உட்பட எல்லா நாட்டிற்கும் எல்லா மதத்திற்கும் பொருந்தும்.

‘சஸ்பென்ஸ் இருந்தால்தான் படம் ஓடும்’ - சில்லரை வர்த்தகத்தில் அந்நிய முதலீடு மீதான திமுக நிலை...?

           சில்லரை வர்த்தகத்தில் அந்நிய முதலீட்டை எதிர்த்து நாடாளுமன்றத்தில் தீர்மானம் கொண்டுவரப்பட்டால் திமுகவின் நிலை என்ன என்பது தொடர்ந்து மர்மமாக உள்ளது. சில்லரை வர்த்தகத்தில் அந்நிய முதலீட்டை எதிர்ப்பதாக திமுக கூறியது. 
           நாடாளுமன்றத்தில் எந்தக் கட்சியாவது தீர்மானம் கொண்டு வந்தால் அதை திமுக ஆதரிக்கும் என்று அதன் தலைவர் கருணாநிதி அறிவித்தார். சில்லரை வர்த்தகத்தில் அந்நிய முதலீட்டை எதிர்த்து இடதுசாரிக்கட்சிகள் செப்டம்பர் 20 -ம் தேதி பொது வேலைநிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்தன. இதற்கு திமுக ஆதரவு தெரிவித்தது. இந்நிலையில், மத்திய உள்துறை அமைச்சர் ப. சிதம்பரம் செவ்வாயன்று திமுக தலைவர் கருணாநிதியை சென்னையில் அவரது இல்லத்தில் சந்தித்தார். இதுகுறித்து கேட்டதற்கு ப.சிதம்பரம், இது மரியாதை நிமித்தமான சந்திப்பு என்று கூறினார். சிதம்பரம் தனக்கு தீபாவளி வாழ்த்து தெரிவிக்க வந்ததாக கருணாநிதி கூறினார்.
          சில்லரை வர்த்தகத்தில் அந்நிய முதலீட்டை எதிர்த்து தீர்மானம் கொண்டு வரப்பட்டால் அப்போது அது குறித்து திமுக முடிவெடுக்கும் என்றும் கருணாநிதி கூறினார். இந்நிலையில் புதனன்று செய்தியாளர்களிடம் பேசிய அவர், நாடாளுமன்றத்தில் சில்லரை வர்த்தகத்திற்கு எதிராக தீர்மானம் கொண்டு வரப்பட்டால் சிறு மற்றும் நடுத்தர வர்த்தகர்களின் நலனைக் கருத்தில் கொண்டு திமுக முடிவெடுக்கும் என்று கூறினார். தமிழகத்திலுள்ள சிறு மற்றும் நடுத்தர வர்த்தகர்கள் சில்லரை வர்த்தகத்தில் அந்நிய முதலீடு தங்களை பெருமளவு பாதிக்கும் என்று அஞ்சுகின்றனர். இது தொடர்பாக நாங்கள் விவாதித்து வர்த்தகர்களின் நலனைக் கருத்தில்கொண்டு முடிவெடுப்போம் என்றும் அவர் தெரிவித்தார். 
           நான் 100 படங்களுக்கு திரைக்கதை, வசனம் எழுதியுள்ளேன். சஸ்பென்ஸ் இருந்தால் தான் ஒரு திரைப்படம் வெற்றி பெறும் என்று அவர் கூறினார். சில்லரை வர்த்தகத்தை எதிர்த்து வாக்கெடுப்புடன் கூடிய தீர்மானத்தை இடதுசாரிக்கட்சிகள் நாடாளுமன்றத்தில் கொண்டுவந்தால் அதை திமுக ஆதரிக்குமா என்று கேட்டதற்கு, கட்சியின் நாடாளுமன்றக்குழு உறுப்பினர்களுடன் ஆலோசித்து உரிய முடிவு எடுக்கப்படும் என்று அவர் கூறினார். சில்லரை வர்த்தகத்தில் அந்நிய முதலீடு தொடர்பாக அரசுக்கு எதிராக நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டுவரப்பட்டால் தமது கட்சி அதை ஆதரிக்கும் என்று திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி கூறியுள்ளார். அரசின் முடிவை நிராகரிக்க வேண்டும் என்று நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் வாக்கெடுப்புடன் கூடிய தீர்மானம் கொண்டுவர இடதுசாரிக்கட்சிகள் முடிவு செய்துள்ளன. இந்நிலையில் யாராவது தீர்மானம் கொண்டு வந்தால் ஆதரிப்போம் என்று கூறிய திமுக தலைவர், தற்போது ஆலோசித்து உரிய முடிவெடுப்போம் என்று கூறியுள்ளார்.
 நன்றி :


courtesy : The Hindu

புதன், 14 நவம்பர், 2012

குழந்தைகளை கொண்டாடுவோம்...!

குழந்தைகளை கொண்டாடுவோம்...
இன்று ஒரு நாள் மட்டுமல்ல...
ஆண்டு முழுதும்...
நம் ஆயுள் முழுதும்...
குழந்தைகள் பட்டாம்பூச்சிகள்
அவர்களை பறக்கவிடுங்கள்...
சுதந்திரமாக பறக்கவிடுங்கள்...
சந்தோஷமாய் பறக்கவிடுங்கள்...

இன்னும் எழுதுகிறேன்...

வியாழன், 8 நவம்பர், 2012

நிலுவை வரிகளை வசூலித்தாலே விலையேற்றம் தேவையில்லை...!

           இந்திய சமூக விஞ்ஞான கழகம் சார்பில் சென்னையில் நேற்று முன் தினம்  6 - ஆம் தேதியன்று  நடைபெற்ற வி.பி.சிந்தன் நினைவு சொற்பொழிவு நிகழ்ச்சியில் ‘12 - வது ஐந்தாண்டுத் திட்டமும் சாமானிய மக்களும்’ என்ற தலைப்பில் உரையாற்றிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் சீத்தாராம்யெச்சூரி எம்.பி., கூறியது வருமாறு: 
           ஆவடி மாநாட்டில் சோசலிசம் பேசிய காங்கிரஸ் இன்று தனியார் மயமே சகலத்திற்கும் தீர்வு என்ற பாதையில் சென்றுகொண்டிருக்கிறது. இந்தியா சுதந்திரம் அடைந்த போது முதல் ஐந்தாண்டு திட்டத்தை அரசு தீட்டவில்லை. டாடா, பிர்லா போன்ற பெரும் தொழிலதிபர்கள் தான் தீட்டினர். அப்போதிலிருந்தே அரசு எப்படி செயல்படவேண்டும் யாருக்காக திட்டங்கள் உருவாக்கப்பட வேண்டும் என்பதை முதலாளி வர்க்கம் கட்டளையிடத் துவங்கி விட்டது.
          
விலை உயர்வின் பின்னணி

       கடந்த ஞாயிற்றுக்கிழமை தில்லி ராம்லீலா மைதானத்தில் காங்கிரஸ் கட்சி தனது தோல்விகளை மறைக்க பேரணி நடத்தியுள்ளது. சோனியா காந்தியும் மன்மோகன்சிங்கும் இளவரசர் ராகுல் காந்தியும் பொருளாதார சீர்திருத்தங்கள் செய்யாவிட்டால் நாட்டை முன்னேற்ற முடியாது என்றுகூறியிருக்கிறார்கள். அரசு நலத்திட்டங்களில் பொது முதலீட்டை குறைத்து தனியார் முதலீட்டை மத்திய அரசு ஊக்குவித்து வருகிறது. இப்படி தனியார் முதலீடு அதிகரிக்கப்பட்டதால் தான் நெடுஞ்சாலையில் நுழைவு வரி என்ற பெயரில் அதிக கட்டணம் வசூலிக்கப்படுகிறது. மின்சாரம் உள்பட பல அத்தியாவசிய தேவைகளுக்கு மக்கள் அதிக விலை கொடுக்கவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. 12வது ஐந்தாண்டு திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை சமீபத்தில் ஒப்புதல் வழங்கியுள்ளது. இது அனைத்து மாநில முதலமைச்சர்களை கொண்ட தேசிய வளர்ச்சிக் கவுன்சில் கூட்டத்தில் (என்டிசி) இதுவரை தாக்கல் செய்யப்படவில்லை. இதற்கான தேதியையும் மத்திய அரசு இதுவரை இறுதிப்படுத்தவில்லை. மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ள அந்த திட்டத்திற்கான வரைவு அறிக்கை பொது வலைத்தளங்களிலும் வெளியிடப்படவில்லை. இந்தத் திட்டத்திற்கான அணுகுமுறை அறிக்கையை திட்டக்குழு 2011 ஆம் ஆண்டே வெளியிட்டுவிட்டது. ஆனால் கடந்த ஏப்ரல் 1 முதல் துவங்கிய 2012-13 - ஆம் நிதியாண்டில் இருந்து இது அமலுக்கு வந்திருக்கவேண்டும். ஆனால் அரசு அதற்கு விடுமுறை விட்டுவிட்டது போலும். தனியார் முதலீட்டை ஊக்கப்படுத்தும் பல அம்சங்கள் அதில் அடங்கியிருப்பதால் தான் திட்ட அறிக்கையை மத்திய அரசு மறைக்கிறது. 1950-ஆம் ஆண்டு முதல் திட்டக்குழு அமைக்கப்பட்டபோது நாட்டில் உள்ள அனைத்து மக்களும் சமமான உரிமைகளை பெற்று வாழ உறுதி அளிக்கப்பட்டது. நாட்டில் உள்ள அனைத்து வளங்களையும் அரசு கையகப்படுத்தி பொது நோக்கங்களுக்காக பயன்படுத்தும் என்று அதில் கூறப்பட்டடது. ஆனால் வெட்கக்கேடான விஷயம் என்ன வென்றால் 12-வது ஐந்தாண்டு திட்டத்தை நாடாளுமன்றத்தில் கூட இது வரை விவாதிக்க அரசு தயாராக இல்லை என்பதுதான். தனியார் முதலீட்டை பெற்றால் தான் நிதிப்பற்றாக் குறையை போக்க முடியும் என்றும் அரசாங்கப் பொது செலவு குறையும் என்றும், அரசு வாதிடுகிறது. தனியார் பெருநிறுவனங்களுக்கு கடந்த பட்ஜெட்டில் அரசு 5.25லட்சம் கோடிக்கு வரிச்சலுகை அளித்தது. ஆனால் நாட்டின் நிதிப் பற்றாக்குறை எவ்வளவு என்றால் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தியில் 6.9 சதவீதம். அதாவது 5.22 லட்சம் கோடி. அந்த வரிச்சலுகையை நிறுத்தியிருந்தால் இந்த பற்றாக்குறையை போக்கியிருக்கமுடியும். நிலுவை வரியை வசூலித்தாலே அரசுக்கு ஏராளமான நிதி கிடைக்கும். பெட்ரோல், டீசல், சமையல் எரி வாயு விலையை உயர்த்த வேண்டிய அவசியம் இல்லை. நாட்டில் உள்ள அனைத்து மக்களுக்கும் 25 கிலோ அரிசி அல்லது கோதுமையை இலவசமாக வழங்கமுடியும். இதற்கு ஆண்டுக்கு வெறும் 8000கோடி ரூபாய் தான் செலவாகும்.

பிபிபி - முக்கியத்துவம்

          ஆனால் பிபிபி எனப்படும் அரசு - தனியார் கூட்டு முதலீட்டை அதிகரிப்பதற்கே முக்கியத்துவம் அளிக்கிறது. இதன் காரணமாக டில்லி விமான நிலையம் உலகிலேயே அதிக கட்டணம் வசூலிக்கும் விமான நிலையமாக தற்போது மாறியுள்ளது. காரணம் அந்த விமான நிலைய புதுப்பிக்கும் பணியை ஒரு தனியார் நிறுவனம் தான் மேற்கொண்டது. ஐநா சபையின் புத்தாயிரதாண்டு குறிக்கோள்படி உலகில் அனைத்து நாடுகளிலும் வறுமையை குறைக்கவேண்டும் என்று முடிவு செய்யப்பட்டது. அதிகார பூர்வ புள்ளி விவரங்கள் படி கிராமபுறத்தில் நாள் ஒன்றுக்கு 2200 கலோரிகளும் நகர்ப்புறத்தில் 2100 கலோரி உணவும் மக்கள் உட்கொள்ளவேண்டும் என்று அப்படிப்பட்டவர்களே வறுமையில்லாத மக்கள் என்று கூறப்பட்டது. நம் நாட்டில் இரு பிரிவு மக்களும் 2400 கலோரி உணவை உட்கொண்டல் வறுமையில்லாத மக்கள் என்று திட்டக்குழு கூறியது. ஆனால் திட்டக்குழுவே எடுத்த கணக்கெடுப்பின் படி கிராமப்புற பகுதிகளில் உள்ள 69 விழுக்காட்டினரும் நகரப் புறத்தில் உள்ள 64.5 விழுக்காட்டினரும் அந்த அளவுக்கு கலோரிகளை அடையவில்லை என்பது தெரியவந்துள்ளது. இது 2004-2005ஆம் ஆண்டு கணக்கு. 2009-10ஆம் நிதியாண்டில் இது மேலும் வீழ்ச்சி அடைந்து முறையே 76 மற்றும் 68 விழுக்காடாக அதிகரித்துவிட்டது. வேலைவாய்ப்பை பொறுத்த வரை அதிகாரப்பூர்வ புள்ளிவிவரப்படி 2004-2005 ஆம் ஆண்டு மற்றும் 2009-10 ஆம் ஆண்டு 15 வயதுக்கு மேற்பட்டவர்களில் அனைத்து சுயவேலை வாய்ப்பு உள்பட ஆண்டு வளர்ச்சி விகிதம் 0.82 விழுக்காடு தான். இதற்கு முந்தைய ஐந்தாண்டுத் திட்ட சர்வேயின் படி இது 2.7 விழுக்காடாக இருந்தது. ஆண்டு பொருளாதார வளர்ச்சி 8 விழுக்காடு உயர்ந்துள்ள போதிலும் உற்பத்தித் துறையில் வேலைவாய்ப்பு சரிந்துள்ளது. உலக வறுமை குறித்த உலக வங்கியின் அறிக்கையில் 2012ஆம் ஆண்டு இந்தியா மொத்தமுள்ள 79 நாடுகளில் 65வது இடத்தில் உள்ளது. சமீபத்திய புள்ளிவிவரப்படி உலகில் எடை குறைவான குழந்தைகள் உள்ள 129 நாடு களின் பட்டியலில் இந்தியா 2வது இடத்தை பிடித்துள்ளது. மிகக் குறைந்த மக்கள் தொகை கொண்ட பசிபிக் பகுதியில் உள்ள தைமூர் என்ற தீவு நாடு கூட இந்தியாவை விட முன்னேறியுள்ளது.

மறுக்கப்படும் சுகாதாரம்

        12வது ஐந்தாண்டு திட்டம் சுகாதாரத்துறையிலும் தனியார் முதலீட்டை ஊக்குவிக்கிறது. இதன் மூலம் அரசு நிதி தனியார் மருத்துவமனைகளுக்கும் தனியார் காப்பீட்டு நிறுவனங்களுக்குத் தான் செல்கிறதே தவிர. மக்களுக்கு தேவையான சுகாதார வசதிகள் கிடைக்கவில்லை. அதாவது அரசாங்கப் பணத்தை கொண்டு தனியார் மருத்துவமனைகள் கொழுத்து வருகின்றன. இந்தியாவில் உள்ள 500 பெரும் நிறுவனங்கள் கடந்த மார்ச் மாதத்தோடு 3 ஆண்டுகளில் வைத்துள்ள ரொக்க கையிருப்பு ரூ.9.3 லட்சம் கோடியாகும். இந்த நிதியே இந்தியாவில் ஆண்டுக்கு 40ஆயிரம் கிலோ மீட்டர் நீளத்திற்கு ஆறு வழிச்சாலைகளை அமைக்க போதுமானது. ஆனால் தற்போது நிதியில்லை என்றுகூறி ஆண்டுக்கு வெறும் 800 கி.மீ நீளத்திற்கே 6 வழிச்சாலைகள் அமைக்கமுடிகிறது. இப்படி முதலாளித்துவம் பெரும் நிதியை திரட்டிவைத்துள்ளது. மறுபுறம் மக்கள் நாள்தோறும் வாங்கும் சக்தியை இழந்து வருகிறார்கள். உலக பொருளாதார மந்தநிலை நிலைமையை மேலும் சிக்கலாக்கிவிட் டது. உலக பொருளாதார மந்தநிலையால் உலக நாடுகளுடனான இந்தியாவின் ஏற்றுமதி கடுமையாக பாதித்துள்ளது. எனவே நிதியாண்டு முடிவில் இந்தியா ஏற்கனவே திட்டமிட்டுள்ளபடி வளர்ச்சி விகிதத்தை எட்டமுடியாது. முதலாளிகள் வைத்துள்ள பெரும் நிதி ஆக்கப்பூர்வமான முறையில் முதலீடாக மாறாமல் ஊக வணிபத்தில் முதலீடு செய்யப்பட்டு சூதாட்டம் நடத்தப்படுகிறது. இதனால் ரியல் எஸ்டேட் என்ற பெயரில் நிலங்களின் விலையும் தங்கத்தின் விலையும் மாறி மாறி உயர்ந்துவருகிறது. இதனால் வேலை வாய்ப்பை பெருக்காத, மக்களின் வாழ்க்கைதரத்தை மேம்படுத்தாத முன்னேற்றம் தான் ஏற்பட்டுள்ளது. பெருமளவிலான மக்கள் இயக்கங்கள் மூலமே அரசின் புதிய தாராளமய பொருளதார கொள்கையை முறியடிக்கமுடியும். இந்தியாவில் தற்போது போதுமான வளமும் போதுமான அறிவுச் சொத்தும் உள்ளது. நாட்டை வளப்படுத்தே இதுவே போதுமானது. தோழர் வி.பி.சிந்தன் நினைவு சொற்பொழிவில் இந்த இலக்கை எட்ட மேலும் சக்தியாக நாம் போராட உறுதி ஏற்போம். 
இவ்வாறு சீத்தாராம் யெச்சூரி பேசினார்.

புதன், 7 நவம்பர், 2012

நூற்றாண்டைக் காணும் தோழர். சமர் முகர்ஜிக்கு செவ்வணக்கம்...!

                   தேசத்தின் மிக மூத்த மார்க்சிஸ்ட் தலைவர் சமர்முகர்ஜி நவம்பர் 7 அன்று தமது நூறாவது வயதைத் தொடுகிறார். தேசம் போற்றுகிற தோழர் சமர் முகர்ஜியின் நூறாவது பிறந்த நாளை முன்னிட்டு மேற்கு வங்கத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி விரிவான அளவில் நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்துள்ளது. சமர் முகர்ஜி உயர்த்திப் பிடிக்கிற கொள்கைகளை வங்க மக்களிடையே பிரச்சாரம் செய்கிற விதத்தில் அவரது நூறாவது பிறந்தநாள் விழா அமைகிறது. இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் ஸ்தாபகத் தலைவர்களில் ஒருவரான காகா பாபு என்று தோழர்களால் அன்புடன் அழைக்கப்பட்ட முசாபர் அகமதுவின் பிறந்த நூற்றாண்டு விழாவும் சமர் முகர்ஜியின் நூறாவது பிறந்த நாள் விழாவுடன் இணைந்து நடத்தப்படுகிறது. 1930 அக்டோபர் காந்திஜி அறைகூவல் விடுத்த ஒத்துழையாமை இயக்கத்தில் பங்கேற்றதால் சமரேந்திரலால் என்ற பள்ளி மாணவனையும் மச்சுனன்பரின் முகர்ஜியையும் பிரிட்டிஷ் போலீஸ் கைது செய்து கொல்கத்தா பிரெசிடென்சி ஜெயிலில் அடைத்தது. ஹெளரா மாவட்டத்தின் பிதாம்பர் பள்ளி மாணவர்களான இவர்களை, வகுப்பைப் புறக்கணித்து சுதந்திரப் போராட்டத்தில் பங்கேற்றதற்காக பிரிட்டிஷ் போலீஸ் கைது செய்தது. காங்கிரஸ் ஊழியர்களான அரசியல் கைதிகளுடன் 17 வயது நிரம்பாத சமரேந்திரலாலுக்கும் பரினுக்கும் ஓராண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. சிறையில் சமரேந்திரலாலின் ஆரம்ப நாட்கள்... மூன்றாம் வகுப்பு சிறைக் கைதிகளை ஒடுக்குவதற்காக நியமிக்கப்பட்ட கொடூரனாகிய ஹவில்தார் ஃபக்தே பகதூர்சிங்கின் மேற்பார்வையில் இந்த 17 வயது இளைஞன் இருந்தார். இந்த கொடூர சிறை அதிகாரி உள்பட மற்ற அதிகாரிகள் வரும்போது சிறைக் கைதிகள் “சலாம் சர்க்கார்’’ என்று மிகப் பணிவுடன் கூறவேண்டும் என்பது சட்டம்.
           அரசியல் கைதிகள் இந்தச் சட்டத்தின்படி நடந்து கொள்ள வேண்டியதில்லை என்று சமரேந்திரலாலும் பரினும் மறுத்தனர். இதைக் கேள்வியுற்ற மற்ற சிறைக்கைதிகளுக்கும் துணிவு பிறந்தது. சிறைச் சட்டங்களை மீறுவதற்கு துணிவு வந்த ஒரு அரசியல் கைதி. அந்த சிறை அதிகாரியான ஃபக்தே பகதூர் சிங்கை கீழே தள்ளிவிட்டார். ஆனால் இந்தச் சம்பவத்தால் மற்றொரு முறை அவர் சிறை அதிகாரியால் தாக்கப்பட்டார். இன்று கொல்கத்தாவில் தில்குஷ் தெருவின் 1 ஆம் நம்பர் வீட்டில் பிறரின் உதவியுடன் மட்டுமே நடமாடுகிற இந்த மா மனிதர்தான் அன்றைய சமரேந்திரலால். காங்கிரஸ் ஊழியராக இருந்த அந்த மாணவர்தான் இன்று நூறு வயதை எட்டியுள்ளார். இப்போது அவருடைய பெயர் பழைய சுரேந்திரலால் அல்ல. காங்கிரஸ் ஆடையை எப்போதோ களைந்து விட்டார். பிரிட்டிஷ் அரசை எதிர்த்துப் போராடிய அவர் இப்போது காங்கிரஸ் ஆட்சியை எதிர்த்துப் போராடுகிறார். அவரது போராட்ட வாழ்க்கை நூறிலும் தொடர்கிறது. இந்தியாவில் உள்ள அனைத்து கம்யூனிஸ்ட்டுகளும் ஒரு மூத்த வழிகாட்டித் தலைவராக அவரை கௌரவிக்கிறார்கள். 
         பிரிட்டிஷ் கம்பெனியின் ஊழியராக இருந்த சசீந்திரலால் முகர்ஜி-கொலாப் சுந்திரி தேவி ஆகியோரின் மகனாக 1913 நவம்பர் 7ல் பிறந்த சமரேந்திரலால் என்ற திருமணமாகாத இவரின் 85 ஆண்டுகால போராட்ட வாழ்க்கை மற்ற போராளிகளுக்கு ஒரு பாட நூலாகும். சிறை அனுபவங்கள் சமரேந்திரலாலை ஒரு புரட்சியாளனாக உருவாக்கியது. 1931ல் காந்தி-இர்வின் சந்திப்பின்படி சமரேந்திராவும் அவரைச் சேர்ந்தோரும் விடுதலை செய்யப்பட்டார்கள். என்றாலும் பள்ளிகளில் அவர்கள் அனுமதிக்கப்படவில்லை. அதன்பிறகு கொல்கத்தா பௌ பஜார் பள்ளியில் பத்தாம் வகுப்பில் சேர்ந்து படித்தார். சொந்த ஊரான ஆம்தயில் உள்ள காங்கிரஸ் கமிட்டிச் செயலாளராக செயல்பட்ட போதுதான் மெட்ரிக்குலேசன் படிப்பில் அவர் தேர்ச்சி பெற்றார். பிறகு கொல்கத்தா பல்கலைக்கழகத்திலிருந்து அதிக மதிப்பெண்களுடன் இளங்கலைப் பட்டம் பெற்றார். 1930களில் இந்திய அரசியலில் அலையடித்த சிவப்புக் காற்றில் வங்கமும் கலந்தது. அந்தச் செங்காற்று சமர் முகர்ஜியின் சிந்தையிலும் அலை வீசியது. அது காங்கிரஸ் நடவடிக்கைகளில் அவருக்கு அதிருப்தி ஏற்பட்ட காலமாகும். இயல்பாக அவர் கவனமெல்லாம் காங்கிரஸ் சோஷலிஸ்ட் கட்சியின் பக்கம் திரும்பியது. தொடர்ந்து அவர் படிப்படியாக கம்யூனிஸ்ட் கட்சியை நோக்கி வந்துவிட்டார். அன்று கம்யூனிஸ்ட் கட்சியின் ஊழியராக இருந்த பினாய்ராயுடன் அவருக்கு ஏற்பட்ட நட்பு காரணமாக கம்யூனிஸ்ட் சித்தாந்தத்தின்பால் அவர் ஈர்க்கப்பட்டார். 1936 முதல் ஹெளரா சணல் மில் தொழிலாளர்களையும் சணல் விவசாயிகளையும் ஒன்று திரட்டுவதில் அவர் கவனம் செலுத்தினார். 1938ல் அகில இந்திய மாணவர் சங்கத்தின் ஹெளரா மாவட்டத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். கம்யூனிஸ்ட் கட்சியுடனான நெருக்கம் மேலும் மேலும் அதிகரித்தது. 1940ல் அவர் கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினரானார். சணல் மில் தொழிலாளர்களின் போராட்டத்திற்கு தலைமை வகித்ததற்காக கைது செய்யப்பட்டு 14 மாதங்கள் சிறையில் அடைக்கப்பட்டார். 1946ல் கொல்கத்தா நகரத்தில் நடந்த திட்டமிட்ட இந்து-முஸ்லீம் வகுப்புக் கலவரத்திலிருந்து சாமான்ய மனிதர்களை பாதுகாக்க சமர்முகர்ஜி நடத்திய தீரம் மிக்க பணிகள் வங்க வரலாற்றின் ஒரு பகுதியாகும். 1947ல் தேசம் விடுதலை பெற்றதைத் தொடர்ந்து கிழக்கு வங்கத்திலிருந்து வந்த அகதிகளுக்கு உதவுகிற பணிகளை அவர் சிறப்பாகச் செய்தார். 1948ல் கொல்கத்தாவில் நடந்த கட்சியின் இரண்டாவது மாநாட்டில் பிரதிநிதியாகப் பங்கேற்றார்.
             அக்காலத்தில் கட்சி தடை செய்யப்பட்டபோது மீண்டும் அவர் கைது செய்யப்பட்டு மூன்று மாத சிறைதண்டனைக்குப் பிறகு விடுதலை செய்யப்பட்டார். பின்னர் கட்சியின் மீது அடக்குமுறை ஏவப்பட்டதால் அவர் தலைமறைவாக இருந்து கட்சிப் பணியாற்றினார். 1957ல் கட்சியின் மாநிலக்குழு உறுப்பினராகத் தேர்வு செய்யப்பட்டார். 1962ல் இந்திய- சீனப் போரின்போது கம்யூனிஸ்ட்டுகள் அநியாயமாக வேட்டையாடப்பட்டனர். அப்போது அவர் மீண்டும் தலைமறைவானார். 1964ல் கொல்கத்தாவில் நடைபெற்ற கட்சியின் 7வது அகில இந்திய மாநாட்டிற்கான தயாரிப்புப் பணிகளில் தீவிரமாய் இருந்தபோது அவர் கைது செய்யப்பட்டு மித்னாபூர் சிறையில் அடைக்கப்பட்டார். அகில மாநாட்டின் பிரதிநிதியாக இருந்தபோதும்கூட அவரால் மாநாட்டில் பங்கேற் இயலவில்லை. 1964ல் சமர் முகர்ஜி கட்சியின் மத்தியக்குழு உறுப்பினரானார். 1978ல் அரசியல் தலைமைக்குழு உறுப்பினரானார். 1992-2002 காலத்தில் கட்சியின் கட்டுப்பாட்டுக்குழு தலைவராகப் பணியாற்றினார். இப்போது மத்தியக் கமிட்டியின் சிறப்பு அழைப்பாளராக உள்ளார். 1957ல் அவர் சட்டமன்ற உறுப்பினரானார். 1971ல் ஹெளரா நாடாளுமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். ஏகேஜியுடனான தனது நாடாளுமன்ற அனுபவங்களை உணர்ச்சிப் பூர்வமாக சமர் முகர்ஜி இன்றும் நினைவு கூர்கிறார்.
தேசாபிமானியிலிருந்து தமிழில் தி.வ. - சங்கர்

ஞாயிறு, 4 நவம்பர், 2012

மக்களின் காதில் பூமாலையையே சுற்றுகிறது காங்கிரஸ் கட்சி...!

எழுதுகிறேன்...

அறிவியல் மக்களுக்காக - புதுவை அறிவியல் இயக்க மாநாடு...!








          




    புதுவை அறிவியல் இயக்கத்தின் 14 - ஆவது மாநாடு இன்று புதுவையில் மிக சிறப்பாக நடைபெற்றது. அறிவியல் அறிஞர்களும், விஞ்ஞானிகளும், முற்போக்கு சிந்தனையாளர்களும் பங்கேற்ற அறிவியல் மாநாடு இது.
           கணித மேதை ஸ்ரீனிவாச இராமானுஜத்தின் 125 - ஆவது பிறந்தநாளை முன்னிட்டு நடப்பு ஆண்டு ''கணித ஆண்டாக'' மத்திய அரசால் அறிவிக்கப்பட்டதால் ''வரலாற்றில் கணிதமும் கணிதத்தின் வரலாறும்''  என்ற தலைப்பில் எழுத்தாளர் ஆயிஷா இரா. நடராஜன் ஆற்றிய உரைவீச்சு மாநாட்டு அரங்கத்தையே சூடாக்கியது. ஊடகங்களும், கட்டுரையாளர்களும் இராமானுஜத்தின் திறமைகளையும், கண்டுபிடிப்புகளையும் மதத்தோடும், சாதியோடும்,  கடவுளோடும் சம்பந்தப்படுத்தி எழுதுவதை உரக்க சாடினார். அதுமட்டுமல்ல, ''சிந்தனை சிற்பி'' சிங்கரவேலரோடு இராமானுஜத்திற்கு இருந்த தொடர்பையும், நட்பையும் எடுத்துரைக்கும் போது மெய் சிலிர்த்தது.
         அதேப்போல், இயற்பியல் விஞ்ஞானி டாக்டர். இந்துமதி அவர்களின் சிறப்புரையில், சமீபத்தில் கண்டுபிடிக்கப்பட்ட ''ஹிக்ஸ் போஸான்'' என்ற புதிய அணுத் துகள்  பற்றிய உரை மதிய உணவையே மறக்க செய்தது. நீண்ட நாட்களுக்கு பின்னர் ஒரு அறிவியல் பாடம் கேட்டது போல் இருந்தது.
         முன்னதாக தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் தலைவர்  பேராசிரியர். மணி  மாநாட்டை தொடக்கி வைத்து உரையாற்றினார். அதேப்போல், தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் தொடக்கக் கால தலைவர்களில் ஒருவரான பேராசிரியர். மோகனா அவர்களின் அறிவியல்பூர்வமான உரை நம்முடைய சிந்தனையை அறிவியலை நோக்கித் திருப்பியது.
         அறிவியலோடு வாழ புதுவை அறிவியல் இயக்கம் புதுவை மக்களை மீண்டும் அழைத்துச் செல்லும் என்ற நம்பிக்கையில் மாநாடு முடிந்து விடைபெற்றோம்.