ஜனாதிபதித் தேர்தலில் இரண்டு வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள்.
ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் சார்பில் பிரணாப் முகர்ஜியும், பாஜக ஆதரவுடன் பி.ஏ.சங்மாவும் (ஏற்கனவே அஇஅதிமுக, பிஜூ ஜனதா தளம் ஆதரவைப்
பெற்றிருந்த) போட்டியிடுகின்றனர். இந்தத் தேர்தல் இரண்டு
வேட்பாளர்களுக்கிடையில் நடக்கும் போட்டியாக மட்டும் அமையவில்லை. இதையொட்டி
எழுந்துள்ள அரசியல் சூழலில், மறு அரசியல் அணிச்சேர்க்கையை மனதில் கொண்டு,
குட்டையைக் குழப்பி ஆதாயம் பெற முயலும் வேலைகளும் நடைபெறுகின்றன. காலாவதியான கொள்கைகளால் பொருளாதார நிலைமை மோசமடைந்துள்ளது
உள்ளிட்ட சிக்கலான பின்னணியில் தான் ஜனாதிபதித் தேர்தலை ஐக்கிய
முற்போக்குக் கூட்டணி அரசு சந்திக்கிறது.
கூட்டணிக்கட்சிகளிடையே
ஒத்திசைவு இன்மை மற்றும் அரசியல் மற்றும் கொள்கை முடிவுகளை எடுக்க திறனற்ற
தன்மை உள்ளிட்ட பிரச்சனைகளையும் இந்த அரசு சந்திக்க வேண்டியுள்ளது.
விலைவாசி உயர்வு, ஊழல் ஆகியவை காங்கிரஸ் மற்றும் ஐக்கிய முற்போக்குக்
கூட்டணி அரசின் ஆதரவு தளத்தை வெகுவாக அரித்துள்ளன. இந்த தேர்தலில் பாஜகவின்
நம்பகத்தன்மையும் சிதைந்துள்ளது. மும்பையில் நடைபெற்ற அக்கட்சியின்
தேசிய செயற்குழுக்கூட்டத்தில், தலைவர்களின் கோஷ்டிப் பூசல் பகிரங்கமாக
வெடித்ததோடு அரசியலில் நரேந்திரமோடிக்கு எதிரான அதிருப்தியும் அதிகரித்து
வருகிறது. பாஜகவில் ஆர்எஸ்எஸ் - இன் தலையீடு அறிந்த ஒன்று தான். தற்போதைய
நிகழ்ச்சிப் போக்குகள் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்குள்ளும் கொந்தளிப்பை
ஏற்படுத்தியுள்ளது. ஐக்கிய ஜனதாதளம் தனது நிலைபாட்டில் உறுதியாக உள்ளது.
சங்மாவையோ, பாஜகவின் ஆதரவு பெற்ற வேட்பாளர் யாரையுமோ ஆதரிப்பதில்லை என
அக்கட்சி தெளிவாகக் கூறிவிட்டது. ஜனாதிபதி தேர்தல் என்பது ஐக்கிய
முற்போக்குக் கூட்டணி, தேசிய ஜனநாயகக் கூட்டணியின் பலவீனத்தை
வெளிப்படுத்துவதாக அமைந்துவிட்டது. ஐக்கிய முற்போக்குக் கூட்டணியைப்
பொறுத்தவரை வேட்பாளரை முன்மொழிவது தொடர்பாக திரிணாமுல் காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் கட்சிக்கிடையே விரிசல் ஏற்பட்டது. இதை தனித்துப் பார்க்கக்
கூடாது. ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசுடன் பல்வேறு விஷயங்களில்
திரிணாமுல் காங்கிரஸ் ஏற்கனவே முறைத்துக் கொண்டுள்ளது. மேற்குவங்கத்தில்
காங்கிரஸ் கட்சி மற்றும் அதன் ஆதரவுத்தளத்தை சிதைப்பதில் திரிணாமுல்
காங்கிரஸ் முனைப்பாக உள்ளது. இந்த நோக்கத்தை நிறைவேற்றிக்கொள்ள ஆயுத
ரீதியிலான தாக்குதலைக் கூட திரிணாமுல் பயன்படுத்திக் கொள்கிறது.
தேசிய
ஜனநாயகக் கூட்டணியை விரிவுபடுத்த பாஜக விரும்புகிறது. ஆனால் நடைமுறையில்
அந்தக் கூட்டணி சுருங்கிக் கொண்டே வருகிறது. ஜனாதிபதித் தேர்தல்
பிரச்சனையில் ஐக்கிய ஜனதா தளம் மற்றும் சிவசேனை ஆகிய கட்சிகள் பிரணாப்
முகர்ஜியை ஆதரிக்க முடிவு செய்துள்ளன.காங்கிரஸ் மற்றும் பாஜக-வுக்கு
மாற்றாக பிராந்திய அளவிலான கட்சிகள் ஆதாயம் அடைந்துள் ளன. இந்தக் கட்சிகள்
காங்கிரஸ் மற்றும் பாஜகவை முற்றாகச் சார்ந்திருக்க விரும்பவில்லை. மாறாக
தங்களது நலன் அடிப்படையில், சில சமயங்களில் சந்தர்ப்பவாத அடிப்படையிலும்
முடிவெடுத்துள்ளன. எனினும் அந்தக் கட்சிகள் எடுத்துள்ள பொதுவான நிலைபாடு
கூட்டாட்சிக் கோட்பாட்டை உறுதிப்படுத்துவதாக அமைந்துள்ளது என்பது சாதகமான
போக்காகும்.
நடைபெற
உள்ள ஜனாதிபதித் தேர்தலின் பின்னணி இதுதான். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்
கட்சியைப் பொறுத்தவரை, ஜனாதிபதித் தேர்தல் என்பது ஒரு அரசியல் பிரச்சனை
என்ற முறையில் அணுகி அரசியல் ரீதியான நிலை பாட்டையே எப்போதும் எடுத்து
வந்துள்ளது. அண்மையில் நடை பெற்ற கட்சியின் 20வது அகில இந் திய மாநாடு
காங்கிரஸ் தலைமை யிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசையும் அதன் பொருளாதாரக் கொள்கைகளையும் எதிர்த் துப்போராட அழைப்பு விடுத்தது. அதே நேரத்தில்
பாஜக மற்றும் அதன் மதவெறி நிகழ்ச்சி நிரலை எதிர்ப்பது என்றும் கட்சி முடிவு
செய்தது. நவீன தாராளமயமாக்கல் கொள்கை, வகுப்புவாதம் மற்றும் அதிகரித்து
வரும் ஏகாதிபத்திய சார்பு நிலை ஆகியவற்றை எதிர்த்து கட்சி போராடும். மக்கள்
பிரச்சனைகளில், காங்கிரஸ் அல் லாத மதச்சார்பற்ற கட்சிகளின் ஆதரவைப் பெற்று
கூட்டு இயக் கங்கள் மற்றும் போராட்டங்களை கட்சி நடத்துவது என்றும் முடிவு
செய்யப்பட்டது. இடது ஜனநாயக மாற்றை உருவாக்க கட்சி பணியாற்றும்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் இடதுசாரி சக்திகளைப் பலப்படுத்த
வேண்டுமானால் மேற்கு வங்கத்தில் கடுமையான தாக்குத லுக்கு உள்ளாகியுள்ள
கட்சி மற்றும் இடதுசாரி இயக்கத்தை பாதுகாப்பது அவசியமாகும்.இத்தகைய
புரிதலின் அடிப்படையில்தான் ஜனாதிபதித் தேர்தலில் கட்சி தனது அணுகுமுறையை
வடிவமைத்தது. ஜனாதிபதி தேர் தலில் பிரணாப்முகர்ஜியை ஆத ரிப்பது என்று
மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு முடிவு செய்தது.
இந்த முடிவு எடுக்கப்பட்டதற்கான அடிப்படைகளை விளக்கியாக வேண்டும்.
1991
மக்களவைத் தேர்தலுக் குப் பிறகு பாஜக ஆதரவு பெற்ற வேட்பாளரை ஆதரிக்கும்
பேச்சுக்கே இடமில்லை என்பதுதான் கட்சி எடுத்த நிலையாகும். ஏனென்றால் பாஜக
தனது வலிமையை பெருக்கிக் கொண்டுள்ள நிலையில் அரசியல் சாசன தலைமைப்
பொறுப்பை அக்கட்சி கைப்பற்ற முயல்வதை தடுப்பது பிரதான அரசியல் கடமையாக
அமைந்தது. இந்துத் துவா சக்திகளின் செல்வாக்கு ஜனா திபதி பதவி வரை செல்வது
என் பது அரசியல் சாசனத்தின் மதச் சார்பற்ற ஜனநாயக நெறிமுறை களுக்கு
தீங்கிழைப்பதாக அமையும்.இத்தகைய மதிப்பீட்டின் அடிப் படையில்தான் 1992
ஜனாதிபதித் தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளரான சங்கர் தயாள் சர்மாவை ஆதரிப்பதென கட்சி முடிவு செய்தது. 1992 முதல் தற் போது வரை
நரசிம்மராவ் அர சினால் அறிமுகப்படுத்தப்பட்டு, பின் வந்த அரசுகளாலும்
பின்பற் றப்பட்ட நவீன தாராளமயமாக்கல் கொள்கையை எதிர்த்து கட்சி
தொடர்ச்சியாகப் போராடி வந்துள் ளது. அதே நேரத்தில் அரசியல் சாசனத்தின் மதச்
சார்பற்ற தன்மை பாதுகாக்கப்பட வேண்டும் என்பதற்கு முன்னுரிமை
அளிக்கப்பட்டு வந்துள்ளது. இத்தகைய புரிதலின் அடிப்படை யில்தான்
சங்கர்தயாள் சர்மா, கே.ஆர்.நாராயணன், பிரதீபா பாட்டீல் ஆகியோரை ஜனாதிபதி
தேர்தலில் கட்சி ஆதரித்தது. தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சியில் இருந்த 2002
தேர்தல் மட்டுமே ஒரே ஒரு விதிவிலக் காகும். ஏ.பி.ஜெ.அப்துல்கலாமை பாஜக
தேர்தலில் வேட்பாளராக நிறுத்தியது. காங்கிரசும் அவரை ஆதரிப்பதாக
அறிவித்தது. பாஜக அல்லாத கட்சிகளிடையே வேறு யாரும் நம்பகமான வேட்பாளரை
நிறுத்தாத நிலையில் இடதுசாரிக் கட்சிகள் தனது சொந்த வேட்பாளரை
நிறுத்தின.தற்போதைய ஜனாதிபதி தேர் தலில் பிரணாப் முகர்ஜி வேட்பா ளராக
நிறுத்தப்பட்டுள்ளதால், காங் கிரசுக்கும் திரிணாமுல் காங்கிர சுக்குமான
விரிசல் மேலும் ஆழ மாகியுள்ளது. டாக்டர் கலாமை வேட்பாளராக நிறுத்த
திரிணாமுல் காங்கிரஸ் முயற்சித்தது. பாஜக வின் முழு ஆதரவையும் பெறலாம்
என்பதே இதற்குக் காரணமாகும். இந்த முயற்சி தோல்வியடைந்ததால் திரிணாமுல்
காங்கிரஸ் கட்சி தேர்தலை புறக்கணிப்பதாக அறிவிக்கலாம்.
அல்லது தனது
நிலையை மாற்றிக்கொண்டு பிர ணாப்முகர்ஜியை ஆதரிக்கலாம். மார்க்சிஸ்ட்
கம்யூனிஸ்ட் கட்சி தனது நிலைபாட்டை எடுப்பதற்கு முன்பு ஆளும் கூட்டணியில்
ஏற் பட்டுள்ள விரிசலையும் கவனத் தில் கொள்ள வேண்டியது அவ சியமாகும்.ஐக்கிய
முற்போக்குக் கூட்டணி யில் இடம்பெறாத பல்வேறு கட்சி களும் கூட பிரணாப்
முகர்ஜிக்கு ஆதரவு தெரிவித்துள்ளதை மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கவனத்
தில் எடுத்துக்கொண்டது. சமாஜ் வாதி கட்சி, பகுஜன் சமாஜ் கட்சி,
மதச்சார்பற்ற ஜனதா தளம், ஐக்கிய ஜனதா தளம் ஆகிய கட்சிகள் பிர
ணாப்முகர்ஜிக்கு ஆதரவு தெரி வித்துள்ளன. வேறு மதச்சார்பற்ற எதிர்க்கட்சிகள்
ஆதரிக்க முன்வந் தால் தான் வேறு வேட்பாளரை நிறுத்துவதற்கான சாத்தியக்கூறு
களை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பரிசீலிக்க முடியும். ஆனால் அதிமுக
மற்றும் பிஜூ ஜனதா தளம் கட்சிகளைத் தவிர ஏனைய மதச்சார்பற்ற எதிர்க்கட்சிகள்
அனைத்தும் ஐ.மு.கூ. வேட்பா ளரை ஆதரிப்பதென முடிவு செய்துவிட்டன. அதிமுக
மற்றும் பிஜூ ஜனதா தளம் ஆதரவு பெற்ற வேட்பாளரான சங்மாவை ஆதரிப்பதென
பாஜகவும் தற் போது முடிவு செய்துவிட்டது. பிர ணாப் முகர்ஜி பரவலான ஒப்பு
தலைப் பெற்ற ஒரு வேட்பாளராக உருவெடுத்துள்ளார். பாஜக மற்றும் மம்தா
பானர்ஜி, டாக்டர் கலாமை போட்டியிட வைப்பதற்கான முயற் சிகளில் தீவிரமாக
ஈடுபட்ட தையும் கவனத்தில் கொள்ள வேண்டும். 2002 தேர்தலில் சமாஜ் வாதி
கட்சியின் தேர்வு அப்துல் கலாமாக இருந்தபோதும் கூட தற்போது முயற்சிக்குப்
பின்னால் செல்ல முலாயம் சிங் மற்றும் சமாஜ் வாதி கட்சி மறுத்துவிட்டது
குறிப் பிடத்தக்க ஒன்றாகும்.ஐ.மு.கூட்டணி வேட்பாளரை பல கட்சிகள்
ஆதரிப்பதால் அந் தக் கூட்டணி ஒன்றும் பல மடைந்துவிடப் போவதில்லை. மாறாக,
தனது சொந்த வேட் பாளரை வெற்றி பெற செய்வதற்கு கூட கூட்டணிக்கு வெளியில்
உள்ள கட்சிகளை காங்கிரஸ் கட்சி சார்ந்திருக்க வேண்டியுள்ளது என் பதே
வெளிப்பட்டுள்ளது. மேலும், இந்த சக்திகள் காங்கிரஸ் கட்சியை சமமான நிலையில்
வைத்து நடத்த முயலும். காங்கிரஸ் கட்சி இவர் களை புறந்தள்ளிவிட முடியாது.
சமதூரம் இல்லை
காங்கிரஸ்
மற்றும் பாஜகவை எதிர்த்து போராடுவது என்ற கட்சி யின் அரசியல் நிலைபாட்டின்
பொருள், அனைத்துப் பிரச்சனை களிலும் இந்த இரு கட்சிகளையும் சமதூரத்தில்
வைத்து பார்க்க வேண்டுமென்பது அல்ல. உதார ணமாக, ஜனாதிபதி தேர்தலை
பொறுத்தவரை பெரும்பாலான முதலாளித்துவ கட்சிகளின் ஆதர வுடன்தான் ஜனாதிபதி
தேர்வு செய்யப்படுகிறார். அதே நேரத் தில், அரசியல் சாசனத்தின் தலை மைப்
பொறுப்பில் உள்ளவர் மதச் சார்பின்மை விஷயத்தில் உறுதி யான நிலை எடுப்பவராக
இருக்க வேண்டும். பாஜகவின் செல்வாக் கிற்கு வழிவகுப்பவராக இருக்கக் கூடாது.
எனவேதான் பாஜக ஆத ரவு பெற்ற வேட்பாளரை மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி
எதிர்க்கிறது.பொருளாதாரக் கொள்கை களை எதிர்த்த போராட்டத்தை பொறுத்தவரை
காங்கிரஸ் மற்றும் ஐக்கிய முற்போக்கு கூட்டணி அர சுக்கு எதிராக அழுத்தம்
தரப்பட வேண்டும். ஜனாதிபதி தேர்தல் பிரச்சனையில் காங்கிரஸ் தலை மையிலான
அரசை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆதரிப்பதாக குற்றம்சாட்டும் சமதூரத்தை
பின் பற்ற வேண்டும் என்போர், காங் கிரஸ் கட்சிக்கு எதிராக, விலை வாசி
உயர்வு மற்றும் மக்களுக்கு எதிரான நடவடிக்கைகளுக்கு எதி ரான போராட்டங்கள்
மற்றும் வெகு ஜன போராட்டங்கள் உருவாகும் போது பாஜகவுடன் மார்க்சிஸ்ட்
கம்யூனிஸ்ட் கட்சி கைகோர்ப்ப தாக குற்றம்சாட்டுகின்றனர்.
இத் தகைய
பாணியில் மார்க்சிஸ்ட் கம் யூனிஸ்ட் கட்சியின் அரசியல் நிலைபாட்டை
வியாக்கியானம் செய்யக் கூடாது.மத்திய அமைச்சரவை மற்றும் நிதியமைச்சர்
பொறுப்பிலிருந்து பிரணாப் முகர்ஜியை அகற்றுவ தால் மத்திய அரசின் பொருளா
தாரக் கொள்கை எதுவும் மாறிவிட போவதில்லை. ப.சிதம்பரமாக இருந்தாலும் சரி,
பிரணாப் முகர்ஜி யாக இருந்தாலும் சரி அல்லது அமைச்சர் பொறுப்பில் இருக்கும்
யாராக இருந்தாலும், ஆளும் வர்க்கத்தின் கொள்கையை காங் கிரஸ் கட்சி
முன்னெடுத்துச் செல் வதால் அந்தக் கொள்கைகள் தொடரவே செய்யும். உண்மையில்
நவீன தாராளமயமாக்கல் கொள் கையை மென்மேலும் தீவிரமாக அமல்படுத்துமாறு
சர்வதேச நிதி மூலதனம் நிர்ப்பந்தித்து வருவது அப்பட்டமாக
தெரியவருகிறது.சில்லரை வர்த்தகத்தில் அந்நிய முதலீட்டை அனுமதிப்பது குறித்த
பிரச்சனையும் இந்த சர்ச்சையின் போது விவாதிக்கப்படுகிறது. 4 கோடி மக்களின்
வாழ்வாதாரம் சம் பந்தப்பட்ட மிக முக்கியமான பிரச் சனை இது. இந்த முயற்சி
எதிர்க் கப்பட வேண்டும்; முறியடிக்கப்பட வேண்டும். ஐக்கிய முற்போக்கு
கூட்டணிக்கு வெளியில் உள்ள கட் சிகள் அனைத்தையும் அணி திரட்டுவதன் மூலமே
இதை செய்ய முடியும். ஐக்கிய முற் போக்குகூட்டணியை ஆதரிக்கும் கட்சிகள்
மற்றும் தேசிய ஜனநாயக கூட்டணியில் இடம் பெற்றுள்ள கட்சிகளும் கூட இந்த
அணிவகுப் பில் இணைய வேண்டியிருக்கும். வால்மார்ட் நுழைவை எதிர்த்து வலுவான
வெகுஜன இயக்கத்தை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நடத்தியது. மேலும்
இத்தகைய நிறுவனங்கள் இந்தியாவில் கடை கள் திறப்பதையும் எதிர்த்து
போராடியது. அனைத்து எதிர்க்கட் சிகளும் இந்தப் பிரச்சனையை ஒன்றுபட்டு
எதிர்த்தன. நவீன தாராளமயமாக்கல் கொள்கைக்கு எதிரான போராட்டத்தை முன்னெ
டுத்துச் செல்வது குறித்த உத்தியை ஜனாதிபதி தேர்தலுக்கான வேட் பாளர்
தேர்வுடன் முடிச்சுப்போடு வது தேவையற்ற குழப்பத்தையே ஏற்படுத்தும்.
புறக்கணிப்பது குறித்து...
ஜனாதிபதி
தேர்தலை மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஏன் புறக் கணிக்கவில்லை என்ற
கேள்வி முன்வைக்கப்படுகிறது. ஐக்கிய முற்போக்கு கூட்டணி மற்றும் பாஜக ஆதரவு
வேட்பாளருக்கு வாக்களிப்பதற்கு பதிலாக, யாருக் கும் வாக்களிக்காமல்
இருந்து விட்டால் என்ன என்று வினவப் படுகிறது.ஜனாதிபதி தேர்தலை புறக்
கணிப்பது என்பது மேற்குவங்கத் தில் மம்தா பானர்ஜி மற்றும் திரி ணாமுல்
காங்கிரஸ் எடுத்துள்ள அதே நிலைபாட்டை எடுப்பதாக அமையும். இந்த நிலைபாடு அர
சியல் ரீதியாக பலவீனமானது; ஏற் றுக் கொள்ள இயலாதது. இதே திரி ணாமுல்
காங்கிரஸ் தான் மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு எதி ராக பயங்கரவாத
வன்செயல் களை கட்டவிழ்த்துவிட்டுள்ளது. சட்டமன்ற தேர்தலுக்கு பிறகு கட்சி
மற்றும் இடது முன்னணியின் ஊழியர்கள், ஆதரவாளர்கள் 68 பேர் படுகொலை
செய்யப்பட் டுள்ளனர். ஜனநாயகத்தின் மீதான தாக்குதல் அனைத்து முனை களுக்கும்
விரிவுபடுத்தப்பட்டுள் ளது. காங்கிரஸ் கட்சியும் கூட தப்ப முடியவில்லை.
திரிணாமுல் காங் கிரஸ் எடுத்துள்ள அதே நிலையை கட்சியும் எடுப்பது என்பது
மேற்கு வங்கத்தில் இடதுசாரிகளின் நல னுக்கு தீங்கிழைக்கும். அந்த மாநி
லத்தில் திரிணாமுல் காங்கிரசை எதிர்த்து நடத்திவரும் போராட் டத்தை
பலவீனப்படுத்தும். மேற்கு வங்கத்தில் கடுமையான தாக்குத லுக்குள்ளாகியுள்ள
இடதுசாரி இயக்கம் மற்றும் உழைக்கும் மக்க ளின் உரிமைகளை பாதுகாக்க வேண்டிய
கடமை மிகப்பெரிய இடதுசாரிக் கட்சி என்ற முறையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்
கட்சிக்கு உண்டு.
இடதுசாரிகளின் வலுவான தளத்தில் கட்சியை
பாதுகாப்பது என்பது தேசிய அளவில் இடது சாரி இயக்கத்தை முன்னெடுத்துச் செல்ல
உதவும்.மேலும், இது மேற்குவங்கம் சம்பந்தப்பட்ட பிரச்சனை மட்டு மல்ல;
தேசிய அளவில் தேர்தலை புறக்கணிப்பது என்பது களத்தி லிருந்து கட்சி விலகிக்
கொள்வது என்றே பொருள்படும். அரசியல் நிகழ்ச்சிப் போக்குகளில் கட்சியின்
தலையீட்டிற்கு இது ஏதுவாக அமையாது.2009ம் ஆண்டிலிருந்தே இடது சாரி கட்சிகளை
தனிமைப்படுத்த வேண்டும் என்ற நோக்கத்துடன் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி
மற் றும் இடதுசாரி கட்சிகளை பல வீனப்படுத்த ஆளும் வர்க்கம் திட்டமிட்ட
முறையில் தாக்குதல் நடத்தி வருகிறது. நவீன தாராள மயமாக்கல் கொள்கைகளுக்கு
எதிராக போராடிவரும் இடதுசாரி சக்திகளை பலவீனப்படுத்த வேண் டும் என்ற ஆளும்
வர்க்கத்தின் முயற்சிகளை மனதில்கொண்டு, எந்தவிதமான மாயைகளுக்கும் இடம்
தராமல் ஆளும் கூட்டணி யில் உள்ள முதலாளித்துவ கட்சி களிடையே ஏற்பட்டுள்ள
விரி சலை பயன்படுத்திக் கொள்ள கட்சி முயல்வதே சரியாக இருக் கும். இந்த
தருணத்தில் தேர்தல் புறக்கணிப்பு என்பது இந்த நோக் கத்திற்கு உதவுவதாக
அமையாது.
இடதுசாரிக் கட்சிகளின் நிலை
ஜனாதிபதி தேர்தலை பொறுத்த
வரை இடதுசாரிக் கட்சிகளால் ஒன்றுபட்ட நிலையை எடுக்க முடியவில்லை.
மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி மற்றும் அகில இந் திய பார்வர்டு பிளாக்
ஆகிய கட்சி கள் பிரணாப் முகர்ஜியை ஆதரிப் பது என்று முடிவெடுத்துள்ளன.
சிபிஐ மற்றும் ஆர்எஸ்பி ஆகிய கட்சிகள் தேர்தலை புறக்கணிக்க
முடிவெடுத்துள்ளன. கடந்த காலத் திலும் கூட ஜனாதிபதி தேர்தலில் 4 இடதுசாரி
கட்சிகளும் ஒன்று பட்ட நிலை எடுக்க இயலாமல் போயுள்ளது. உதாரணமாக 1992
தேர்தல் முதலே காங்கிரஸ் வேட் பாளரை ஆதரிக்க மறுத்து ஆர் எஸ்பி
புறக்கணித்து வந்துள்ளது.ஜனாதிபதி தேர்தல் பிரச்சனை யில் இடதுசாரி கட்சிகள்
மாறுபட்ட நிலைபாட்டை எடுத்துள்ளதால் இடதுசாரி கட்சிகளின் ஒற்றுமை
பாதிக்கப்பட்டுவிடாது. பெரும் பாலான அரசியல் மற்றும் பொரு ளாதார
பிரச்சனைகளை பொறுத்த வரை இடதுசாரிக் கட்சிகளுக்கு பொதுவான ஒன்றுபட்ட
நிலைபாடு உள்ளது. இந்த அடிப்படையில் தான் உணவுப் பாதுகாப்பை வலி
யுறுத்தியும், ஒருங்கிணைந்த பொதுவிநியோக முறையை உறுதி செய்யக் கோரியும்
இடதுசாரிக் கட் சிகள் ஒன்றுபட்ட பிரச்சாரம் மற்றும் இயக்கத்திற்கு அழைப்பு
விடுத் துள்ளன. ஜூலை 1ம்தேதி முதல் இந்தப் பிரச்சார இயக்கம் ஒன்று பட்ட
முறையில் துவங்கிடவுள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக