சனி, 16 ஜூன், 2012

அய்யோ பாவம் பிரணாப்.... பிரதமர் பதவி ஒரு கனவாகவே போச்சே...?

             கனவு என்பது தனிப்பட்ட மனிதர்களின் சொத்து. அதை யாராலும் தடுக்க முடியாது. ஆனால் அந்த கனவு நிறைவேறாமல் அடுத்தவரால் கெடுக்க முடியும். அப்படிக் கெடுப்பதையும் யாராலும் தடுக்க முடியாது. அப்படி நிகழ்ச்சி தான் நேற்று நடந்தேறியது. 
         இந்தியா போன்ற ஜனநாயக நாட்டில் யார் வேண்டுமானாலும் தான் இந்த நாட்டின் பிரதமராக வேண்டும் என்று ஆசைப்படுவது என்பது தவறில்லை. எல்லோரும் இந்நாட்டு மன்னர்கள் என்று தான் நம்மை பெருமைபடுத்துகிறார்கள். 
        





 
                      அப்படி தான் நம் நாட்டின் நிதியமைச்சராக இருக்கும் பிரணாப் முகர்ஜியும் பல ஆண்டுகளாக ஒரு கனவு கண்டார். அந்த கனவு என்ன என்பதை இந்த நாடே அறியும். 1969 - ஆம் ஆண்டிலிருந்தே நாடாளுமன்றத்தின் மாநிலங்களவை உறுப்பினராகவே இருந்து வந்தார். என்றாலும்  மறைந்த பிரதமர் இந்திர காந்தி அம்மையாரின் நம்பிக்கைக்குரியவராக இருந்ததாலேயே, அவர்  காலத்திலிருந்தே காங்கிரஸ் அமைச்சரவைகளில் சகல அதிகாரங்களையும்  அனைத்து சக்திகளையும்  கொண்ட அமைச்சராகவே உலா வந்தார் . அதனாலாலேயே  இந்திரா  காந்தி இறந்த போதே  இந்த பிரதமர் பதவி என்ற  ''வடைக்காக'' பிரணாப் ஏங்கினார்  என்பதை காங்கிரஸ்காரர்களால் மறுக்கவோ மறைக்கவோ முடியாது. இந்திரா காந்தி இறந்த பிறகு தனக்கு கிடைக்கும் என்று எதிர்ப்பார்த்து காத்திருந்த பிரதமர் பதவியை   இந்திராவின் மகன் ராஜீவ் காந்தி தட்டிப் பறித்துக்கொண்டார். அந்த கோபத்தில் தான் காங்கிரஸ் கட்சியை விட்டு விலகி ராஷ்ட்ரிய சமாஜ்வாடி  காங்கிரஸ் என்ற கட்சியை ஆரம்பித்தார். 
               அதன் பிறகு ராஜீவ் காந்தி எதிர்பாராதவிதமாக கொல்லப்பட்டு விட, காலியாகிப்போன பிரதமர் பதவி நரசிம்மராவிற்கு கிடைத்துவிட்டது. பிறகு நரசிம்மராவே பிரணாப் முகர்ஜியை  அழைத்தபோது மீண்டும் காங்கிரசில் ஐக்கியமானார். 1969 - ஆம் ஆண்டிலிருந்து மக்களை சந்திக்காத மாநிலங்களவை உறுப்பினராகவே  இருந்து வந்த பிரணாப் முகர்ஜி 2004 - ஆம் ஆண்டிலிருந்து மேற்கு வங்கத்தின் சாங்கிப்பூர் தொகுதியிலிருந்து மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்களவை உறுப்பினாராக இருந்து வருகிறார். 2004 - ஆம் ஆண்டில் கூட சோனியா காந்தி பிரதமராக அமரமுடியாத சூழ்நிலையில் தனக்கு அந்தப் பதவி கிடைக்கும் என்று ஏங்கி எதிர்ப்பார்த்திருந்த வேளையில் இப்போது  அந்த பதவியை தட்டிப் பறித்தவர் மன்மோகன் சிங்.
            எப்படியோ பல்வேறு அதிகாரங்களையும், சக்திகளையும் கொண்ட  உயர் பதவிகளில் இருந்தாலும், தான்  பிரதமர் ஆவது என்பது  மட்டும் பிரணாப்பின்  நீண்ட நெடிய கனவாகவே இருந்து வந்தது. 
     

          இந்த சூழ்நிலையில் ஜனாதிபதி தேர்தல் வரவே, பிரணாப் முகர்ஜியை அரசியலிலிருந்தே - காங்கிரஸ் கட்சியிலிருந்தே - அமைச்சரவையிலிருந்தே - ஏன் நாடாளுமன்றத்திலிருந்தே அப்புறப்படுத்துவதற்கு சோனியாவிற்கு மிகப்பெரிய வாய்ப்பாக அமைந்துவிட்டது. இப்போது  பிரணாப் முகர்ஜியின்  பிரதமர் பதவி கனவிற்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுவிட்டது. பாவம் பிரணாப்...! இனி நாடாளுமன்றத்தின் பக்கமே தலைவைத்துப் படுக்க முடியாது. இவரைப் பொறுத்தவரை பிரதமர் பதவி ஒரு கனவாகவே போய்விட்டது.

1 கருத்து:

Vinoth John சொன்னது…

பிரணாப் முகர்ஜி- ஐ திருமதி சோனியா அவர்கள் ஜனாதிபதி பதவிக்கு தேர்ந்து எடுத்து இருப்பது சுத்தமாக இளைய சமுதாயத்துக்கு பிடிக்கவில்லை..

அப்துல் காலம் என்றொரு மா மனிதர்.எங்கள் வழிகாட்டி அமர்ந்த அந்த இடத்தில்..பிரதிபா பாட்டில் என்றொரு ......... சொல்லவிரும்பவில்லை..அடுத்து பிரணாப்..

காங்கிரஸ் என்றாலே ஊழல் தானா ? கேவலமாக இருக்கிறது..அவர்கள் முன் நிறுத்தும் ஜனாதிபதிகளும் அவர்களை போன்று தானை இருப்பார்கள்..