வெள்ளி, 29 ஜூன், 2012

பொன்னுலகை நோக்கி நம்மை அழைத்துச் செல்லும் நாளேடு ''தீக்கதிர்'' -க்கு வயது 50...!

 

பொன்னுலகை நோக்கிய பயணத்தில்  ''தீக்கதிர்''...


''தீக்கதிர் நமது கட்சியின் ஒளிவிளக்கு.

தீக்கதிர் நம்மை கட்டி வளர்க்கும் தாய்.

தீக்கதிர் மாரீச மானல்ல!

கட்சிப் பணிகளை கொண்டுள்ள

கஸ்தூரிமான்.

இதை மறவாதீர்கள்!

இனி தீக்கதிர் பரப்பப்போகும் கோடிச் சூரிய பிரகாசத்திலே உழைக்கும் வர்க்கம் புது முறுக்குகொள்ளும். ஏட்டின் செந்நாக்குகள் தெறித்து விழும் திசை எங்கும் அறிவுத் தீ தெறித்துவிழும். திசை எங்கும் அறிவுத் தீ வான்முட்டக் கிளம்பும்”
            1963ஆம் ஆண்டு ஜூன் 29ந்தேதி உதயமான முதல் தீக்கதிர் ஏட்டின் தலையங்கத்தில் தெறித்து விழுந்த வரிகளில் சிலவே மேலே சுட்டப்பட்டவை.
            பேரெழுச்சிமிக்க இந்தப் பிரகடனத்துடன் தனது பயணத்தை துவக்கிய தீக்கதிர், 50 ஆண்டுகளை எட்டியுள்ளது.
                 எத்தகைய மகத்தான லட்சியத்துடன் தீக்கதிர் தனது பயணத்தை துவக்கியதோ, அதிலிருந்து சற்றும் தடுமாறாமல், தடம் மாறாமல் நடைபோட்டு வந்துள்ளது.
            உலகத்தை தனது உள்ளங்கையில் வைத்து உருட்டி விளையாட நினைக்கும் ஏகாதிபத்தியங் களின் முகத்திரையை கிழிப்பதில் முன்னின்று வருகிறது தீக்கதிர்.
          இந்தியத் திருநாடு விடுதலை பெற்ற போதும், தொடர்ச்சியாக வந்த ஆட்சியாளர்களின் முதலாளித்துவ சார்பு கொள்கைகளால், மக்களின் வாழ்க்கையை நோக்கி சுதந்திர வெளிச்சத்தின் வீச்சு வரவேயில்லை. விடுதலையின் பலன் கடைக் கோடி குடிசை வரை வரவேண்டும் என்பதற்காக தொடர்ச்சியாக இடைவிடாத போராட்டத்தை இந்திய, தமிழக தொழிலாளி வர்க்கம் நடத்தி வந்துள்ளது. அந்தப் போராட்டக்களத்தில் உழைக்கும் மக்களின் போர்வாளாகவும் கேடயமாகவும் திகழ்ந்தது, திகழ்கிறது தீக்கதிர் என்றால் அது மிகையல்ல.
            இந்தியா பல வண்ண மலர்கள் பூத்துக் குலுங்கும் ஒரு பூக்காடு. மதத்தால், மொழியால், இனத்தால் வேறுபட்டிருந்தாலும் உணர்வால் அனைவரும் இந்தியரே. ஜனநாயகம், மதச்சார்பின்மை, கூட்டாட்சி என்ற உயரிய கோட்பாடுகளால் பின்னப்பட்டிருக்கிறது இந்த தேசம். அவசரநிலைக் காலம் துவங்கி எத்தனையோ முறை, இந்த விழுமியங்களை அறுத்தெறிய ஆளும் வர்க்கம் முயற்சிகளை மேற்கொண்டபோதெல்லாம், அதை தடுத்து நிறுத்தும் பேராயுதமாக தீக்கதிர் சுழன்று வந்துள்ளது.
                தீண்டாமைக் கொடுமை உள்ளிட்ட சாதிய ஒடுக்குமுறைகளுக்கு எதிராக சமரசமற்ற போராட்டத்தை நடத்தி வந்துள்ளது நமது ஏடு. தீக்கதிரின் பேரொளிபட்ட பிறகே மறைக்கப்பட்டிருந்த பல தீண்டாமைச் சுவர்கள் வெளிச்சத்திற்கு வந்து பொடிப் பொடியாக நொறுக்கப்பட்டன என்பது நேற்றைய வரலாறு மட்டுமல்ல; இன்றைக்கும் நீளும் நிஜம்.
                  பெண்களுக்கு எதிராக காலம் காலமாக தொடுக்கப்பட்டு வரும் பாலியல் ஒடுக்குமுறைகளுக்கு எதிராக நின்று பாலின சமத்துவத்திற்காக படை நடத்துகிறது தீக்கதிர்.
             சமூக நீதிக்கான சமர்க்களத்தில் ஒடுக்கப்பட்ட அனைத்துப் பகுதி மக்களின் போர்க்குரலாக முழங்கி வந்துள்ளது தீக்கதிர். அறுக்கப்பட்ட நாவுகளிலிருந்து வெடித்துக் கிளம்பும் பேரோசையாக, திசைகள் அதிர ஒலித்து வருகிறது தீக்கதிர் ஏடு.
               விடுதலை பெற்ற இந்தியாவில் கூட்டாட்சி நிலை பெற வேண்டுமானால், மொழிவழி மாநிலங்கள் அமைய வேண்டும் என்று அழுத்தமாக குரல் கொடுத்தவர்கள் கம்யூனிஸ்ட்டுகள். மாநிலங்களின் உரிமைக்காக மங்காத பேரொளியாக சுடர்கிறது தீக்கதிர்.
              தமிழகத்தில் அனைத்துத் துறைகளிலும் தமிழே தலைமை தாங்க வேண்டும். மத்திய ஆட்சி மொழிகளில் ஒன்றாக தமிழ் உள்ளிட்ட மொழிகள் மலர்ந்திட வேண்டும் என்று போராடும் அதே நேரத்தில் இன, மொழி அடிப்படையிலான பிரிவினைவாத திருகல்களை எதிர்கொண்டு, இந்திய ஒருமைப் பாட்டை உறுதியோடு பற்றி நிற்கிறது நமது ஏடு.
             அரசியல், சமூக, பண்பாட்டுத் தளத்தில் புதிய வெளிச்சம் தேடும் போராளிகளின் கையில் ஒளி விளக்காக திகழ்கிறது தீக்கதிர் ஏடு.
              மார்க்சியம், லெனினியம் எனும் மகத்தான வெளிச்சத்தின் விளைச்சலாய் வெளிவந்த தீக்கதிர் தனது லட்சியப் பயணத்தில் அரை நூற்றாண்டை எட்டிப்பிடித்திருப்பது சாதாரணமானதல்ல; சாதனைச் சரித்திரம். நெருப்பாறுகளை கடந்து நீந்தி வந்த இந்த பொன்விழா பயணத்தில் தோள் கொடுத்த அனைத்து தோழர்களுக்கும், ஆதரவாளர்களுக்கும் தீக்கதிர் தனது நன்றியை காணிக்கையாக்குகிறது.
                  எல்லோருக்கும் எல்லாம் கிடைக்கிற பொன்னுலகை நோக்கிய பயணத்தில் தீக்கதிர் பீடுநடை போடும் என இந்நாளில் மீண்டும் உறுதியேற்கிறது.

வீட்டுக்கொரு தீக்கதிர் வாங்குவோம்....! 

செவ்வாய், 26 ஜூன், 2012

ஜனாதிபதி தேர்தல் : சிபிஎம் அணுகுமுறை - பிரகாஷ் காரத்

    ஜனாதிபதித் தேர்தலில் இரண்டு வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள். ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் சார்பில் பிரணாப் முகர்ஜியும், பாஜக ஆதரவுடன் பி.ஏ.சங்மாவும் (ஏற்கனவே அஇஅதிமுக, பிஜூ ஜனதா தளம் ஆதரவைப் பெற்றிருந்த) போட்டியிடுகின்றனர். இந்தத் தேர்தல் இரண்டு வேட்பாளர்களுக்கிடையில் நடக்கும் போட்டியாக மட்டும் அமையவில்லை. இதையொட்டி எழுந்துள்ள அரசியல் சூழலில், மறு அரசியல் அணிச்சேர்க்கையை மனதில் கொண்டு, குட்டையைக் குழப்பி ஆதாயம் பெற முயலும் வேலைகளும் நடைபெறுகின்றன. காலாவதியான கொள்கைகளால் பொருளாதார நிலைமை மோசமடைந்துள்ளது உள்ளிட்ட சிக்கலான பின்னணியில் தான் ஜனாதிபதித் தேர்தலை ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு சந்திக்கிறது.
          கூட்டணிக்கட்சிகளிடையே ஒத்திசைவு இன்மை மற்றும் அரசியல் மற்றும் கொள்கை முடிவுகளை எடுக்க திறனற்ற தன்மை உள்ளிட்ட பிரச்சனைகளையும் இந்த அரசு சந்திக்க வேண்டியுள்ளது. விலைவாசி உயர்வு, ஊழல் ஆகியவை காங்கிரஸ் மற்றும் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசின் ஆதரவு தளத்தை வெகுவாக அரித்துள்ளன. இந்த தேர்தலில் பாஜகவின் நம்பகத்தன்மையும் சிதைந்துள்ளது. மும்பையில் நடைபெற்ற அக்கட்சியின் தேசிய செயற்குழுக்கூட்டத்தில், தலைவர்களின் கோஷ்டிப் பூசல் பகிரங்கமாக வெடித்ததோடு அரசியலில் நரேந்திரமோடிக்கு எதிரான அதிருப்தியும் அதிகரித்து வருகிறது. பாஜகவில் ஆர்எஸ்எஸ் - இன் தலையீடு அறிந்த ஒன்று தான். தற்போதைய நிகழ்ச்சிப் போக்குகள் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்குள்ளும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. ஐக்கிய ஜனதாதளம் தனது நிலைபாட்டில் உறுதியாக உள்ளது. சங்மாவையோ, பாஜகவின் ஆதரவு பெற்ற வேட்பாளர் யாரையுமோ ஆதரிப்பதில்லை என அக்கட்சி தெளிவாகக் கூறிவிட்டது. ஜனாதிபதி தேர்தல் என்பது ஐக்கிய முற்போக்குக் கூட்டணி, தேசிய ஜனநாயகக் கூட்டணியின் பலவீனத்தை வெளிப்படுத்துவதாக அமைந்துவிட்டது. ஐக்கிய முற்போக்குக் கூட்டணியைப் பொறுத்தவரை வேட்பாளரை முன்மொழிவது தொடர்பாக திரிணாமுல் காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் கட்சிக்கிடையே விரிசல் ஏற்பட்டது. இதை தனித்துப் பார்க்கக் கூடாது. ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசுடன் பல்வேறு விஷயங்களில் திரிணாமுல் காங்கிரஸ் ஏற்கனவே முறைத்துக் கொண்டுள்ளது. மேற்குவங்கத்தில் காங்கிரஸ் கட்சி மற்றும் அதன் ஆதரவுத்தளத்தை சிதைப்பதில் திரிணாமுல் காங்கிரஸ் முனைப்பாக உள்ளது. இந்த நோக்கத்தை நிறைவேற்றிக்கொள்ள ஆயுத ரீதியிலான தாக்குதலைக் கூட திரிணாமுல் பயன்படுத்திக் கொள்கிறது.
        தேசிய ஜனநாயகக் கூட்டணியை விரிவுபடுத்த பாஜக விரும்புகிறது. ஆனால் நடைமுறையில் அந்தக் கூட்டணி சுருங்கிக் கொண்டே வருகிறது. ஜனாதிபதித் தேர்தல் பிரச்சனையில் ஐக்கிய ஜனதா தளம் மற்றும் சிவசேனை ஆகிய கட்சிகள் பிரணாப் முகர்ஜியை ஆதரிக்க முடிவு செய்துள்ளன.காங்கிரஸ் மற்றும் பாஜக-வுக்கு மாற்றாக பிராந்திய அளவிலான கட்சிகள் ஆதாயம் அடைந்துள் ளன. இந்தக் கட்சிகள் காங்கிரஸ் மற்றும் பாஜகவை முற்றாகச் சார்ந்திருக்க விரும்பவில்லை. மாறாக தங்களது நலன் அடிப்படையில், சில சமயங்களில் சந்தர்ப்பவாத அடிப்படையிலும் முடிவெடுத்துள்ளன. எனினும் அந்தக் கட்சிகள் எடுத்துள்ள பொதுவான நிலைபாடு கூட்டாட்சிக் கோட்பாட்டை உறுதிப்படுத்துவதாக அமைந்துள்ளது என்பது சாதகமான போக்காகும். 
              நடைபெற உள்ள ஜனாதிபதித் தேர்தலின் பின்னணி இதுதான். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைப் பொறுத்தவரை, ஜனாதிபதித் தேர்தல் என்பது ஒரு அரசியல் பிரச்சனை என்ற முறையில் அணுகி அரசியல் ரீதியான நிலை பாட்டையே எப்போதும் எடுத்து வந்துள்ளது. அண்மையில் நடை பெற்ற கட்சியின் 20வது அகில இந் திய மாநாடு காங்கிரஸ் தலைமை யிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசையும் அதன் பொருளாதாரக் கொள்கைகளையும் எதிர்த் துப்போராட அழைப்பு விடுத்தது. அதே நேரத்தில் பாஜக மற்றும் அதன் மதவெறி நிகழ்ச்சி நிரலை எதிர்ப்பது என்றும் கட்சி முடிவு செய்தது. நவீன தாராளமயமாக்கல் கொள்கை, வகுப்புவாதம் மற்றும் அதிகரித்து வரும் ஏகாதிபத்திய சார்பு நிலை ஆகியவற்றை எதிர்த்து கட்சி போராடும். மக்கள் பிரச்சனைகளில், காங்கிரஸ் அல் லாத மதச்சார்பற்ற கட்சிகளின் ஆதரவைப் பெற்று கூட்டு இயக் கங்கள் மற்றும் போராட்டங்களை கட்சி நடத்துவது என்றும் முடிவு செய்யப்பட்டது. இடது ஜனநாயக மாற்றை உருவாக்க கட்சி பணியாற்றும். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் இடதுசாரி சக்திகளைப் பலப்படுத்த வேண்டுமானால் மேற்கு வங்கத்தில் கடுமையான தாக்குத லுக்கு உள்ளாகியுள்ள கட்சி மற்றும் இடதுசாரி இயக்கத்தை பாதுகாப்பது அவசியமாகும்.இத்தகைய புரிதலின் அடிப்படையில்தான் ஜனாதிபதித் தேர்தலில் கட்சி தனது அணுகுமுறையை வடிவமைத்தது. ஜனாதிபதி தேர் தலில் பிரணாப்முகர்ஜியை ஆத ரிப்பது என்று மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு முடிவு செய்தது. இந்த முடிவு எடுக்கப்பட்டதற்கான அடிப்படைகளை விளக்கியாக வேண்டும்.

1992க்குப் பிறகு பின்பற்றப்பட்ட அணுகுமுறை

              1991 மக்களவைத் தேர்தலுக் குப் பிறகு பாஜக ஆதரவு பெற்ற வேட்பாளரை ஆதரிக்கும் பேச்சுக்கே இடமில்லை என்பதுதான் கட்சி எடுத்த நிலையாகும். ஏனென்றால் பாஜக தனது வலிமையை பெருக்கிக் கொண்டுள்ள நிலையில் அரசியல் சாசன தலைமைப் பொறுப்பை அக்கட்சி கைப்பற்ற முயல்வதை தடுப்பது பிரதான அரசியல் கடமையாக அமைந்தது. இந்துத் துவா சக்திகளின் செல்வாக்கு ஜனா திபதி பதவி வரை செல்வது என் பது அரசியல் சாசனத்தின் மதச் சார்பற்ற ஜனநாயக நெறிமுறை களுக்கு தீங்கிழைப்பதாக அமையும்.இத்தகைய மதிப்பீட்டின் அடிப் படையில்தான் 1992 ஜனாதிபதித் தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளரான சங்கர் தயாள் சர்மாவை ஆதரிப்பதென கட்சி முடிவு செய்தது. 1992 முதல் தற் போது வரை நரசிம்மராவ் அர சினால் அறிமுகப்படுத்தப்பட்டு, பின் வந்த அரசுகளாலும் பின்பற் றப்பட்ட நவீன தாராளமயமாக்கல் கொள்கையை எதிர்த்து கட்சி தொடர்ச்சியாகப் போராடி வந்துள் ளது. அதே நேரத்தில் அரசியல் சாசனத்தின் மதச் சார்பற்ற தன்மை பாதுகாக்கப்பட வேண்டும் என்பதற்கு முன்னுரிமை அளிக்கப்பட்டு வந்துள்ளது. இத்தகைய புரிதலின் அடிப்படை யில்தான் சங்கர்தயாள் சர்மா, கே.ஆர்.நாராயணன், பிரதீபா பாட்டீல் ஆகியோரை ஜனாதிபதி தேர்தலில் கட்சி ஆதரித்தது. தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சியில் இருந்த 2002 தேர்தல் மட்டுமே ஒரே ஒரு விதிவிலக் காகும். ஏ.பி.ஜெ.அப்துல்கலாமை பாஜக தேர்தலில் வேட்பாளராக நிறுத்தியது. காங்கிரசும் அவரை ஆதரிப்பதாக அறிவித்தது. பாஜக அல்லாத கட்சிகளிடையே வேறு யாரும் நம்பகமான வேட்பாளரை நிறுத்தாத நிலையில் இடதுசாரிக் கட்சிகள் தனது சொந்த வேட்பாளரை நிறுத்தின.தற்போதைய ஜனாதிபதி தேர் தலில் பிரணாப் முகர்ஜி வேட்பா ளராக நிறுத்தப்பட்டுள்ளதால், காங் கிரசுக்கும் திரிணாமுல் காங்கிர சுக்குமான விரிசல் மேலும் ஆழ மாகியுள்ளது. டாக்டர் கலாமை வேட்பாளராக நிறுத்த திரிணாமுல் காங்கிரஸ் முயற்சித்தது. பாஜக வின் முழு ஆதரவையும் பெறலாம் என்பதே இதற்குக் காரணமாகும். இந்த முயற்சி தோல்வியடைந்ததால் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தேர்தலை புறக்கணிப்பதாக அறிவிக்கலாம்.
                        அல்லது தனது நிலையை மாற்றிக்கொண்டு பிர ணாப்முகர்ஜியை ஆதரிக்கலாம். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தனது நிலைபாட்டை எடுப்பதற்கு முன்பு ஆளும் கூட்டணியில் ஏற் பட்டுள்ள விரிசலையும் கவனத் தில் கொள்ள வேண்டியது அவ சியமாகும்.ஐக்கிய முற்போக்குக் கூட்டணி யில் இடம்பெறாத பல்வேறு கட்சி களும் கூட பிரணாப் முகர்ஜிக்கு ஆதரவு தெரிவித்துள்ளதை மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கவனத் தில் எடுத்துக்கொண்டது. சமாஜ் வாதி கட்சி, பகுஜன் சமாஜ் கட்சி, மதச்சார்பற்ற ஜனதா தளம், ஐக்கிய ஜனதா தளம் ஆகிய கட்சிகள் பிர ணாப்முகர்ஜிக்கு ஆதரவு தெரி வித்துள்ளன. வேறு மதச்சார்பற்ற எதிர்க்கட்சிகள் ஆதரிக்க முன்வந் தால் தான் வேறு வேட்பாளரை நிறுத்துவதற்கான சாத்தியக்கூறு களை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பரிசீலிக்க முடியும். ஆனால் அதிமுக மற்றும் பிஜூ ஜனதா தளம் கட்சிகளைத் தவிர ஏனைய மதச்சார்பற்ற எதிர்க்கட்சிகள் அனைத்தும் ஐ.மு.கூ. வேட்பா ளரை ஆதரிப்பதென முடிவு செய்துவிட்டன. அதிமுக மற்றும் பிஜூ ஜனதா தளம் ஆதரவு பெற்ற வேட்பாளரான சங்மாவை ஆதரிப்பதென பாஜகவும் தற் போது முடிவு செய்துவிட்டது. பிர ணாப் முகர்ஜி பரவலான ஒப்பு தலைப் பெற்ற ஒரு வேட்பாளராக உருவெடுத்துள்ளார். பாஜக மற்றும் மம்தா பானர்ஜி, டாக்டர் கலாமை போட்டியிட வைப்பதற்கான முயற் சிகளில் தீவிரமாக ஈடுபட்ட தையும் கவனத்தில் கொள்ள வேண்டும். 2002 தேர்தலில் சமாஜ் வாதி கட்சியின் தேர்வு அப்துல் கலாமாக இருந்தபோதும் கூட தற்போது முயற்சிக்குப் பின்னால் செல்ல முலாயம் சிங் மற்றும் சமாஜ் வாதி கட்சி மறுத்துவிட்டது குறிப் பிடத்தக்க ஒன்றாகும்.ஐ.மு.கூட்டணி வேட்பாளரை பல கட்சிகள் ஆதரிப்பதால் அந் தக் கூட்டணி ஒன்றும் பல மடைந்துவிடப் போவதில்லை. மாறாக, தனது சொந்த வேட் பாளரை வெற்றி பெற செய்வதற்கு கூட கூட்டணிக்கு வெளியில் உள்ள கட்சிகளை காங்கிரஸ் கட்சி சார்ந்திருக்க வேண்டியுள்ளது என் பதே வெளிப்பட்டுள்ளது. மேலும், இந்த சக்திகள் காங்கிரஸ் கட்சியை சமமான நிலையில் வைத்து நடத்த முயலும். காங்கிரஸ் கட்சி இவர் களை புறந்தள்ளிவிட முடியாது.
சமதூரம் இல்லை
காங்கிரஸ் மற்றும் பாஜகவை எதிர்த்து போராடுவது என்ற கட்சி யின் அரசியல் நிலைபாட்டின் பொருள், அனைத்துப் பிரச்சனை களிலும் இந்த இரு கட்சிகளையும் சமதூரத்தில் வைத்து பார்க்க வேண்டுமென்பது அல்ல. உதார ணமாக, ஜனாதிபதி தேர்தலை பொறுத்தவரை பெரும்பாலான முதலாளித்துவ கட்சிகளின் ஆதர வுடன்தான் ஜனாதிபதி தேர்வு செய்யப்படுகிறார். அதே நேரத் தில், அரசியல் சாசனத்தின் தலை மைப் பொறுப்பில் உள்ளவர் மதச் சார்பின்மை விஷயத்தில் உறுதி யான நிலை எடுப்பவராக இருக்க வேண்டும். பாஜகவின் செல்வாக் கிற்கு வழிவகுப்பவராக இருக்கக் கூடாது. எனவேதான் பாஜக ஆத ரவு பெற்ற வேட்பாளரை மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எதிர்க்கிறது.பொருளாதாரக் கொள்கை களை எதிர்த்த போராட்டத்தை பொறுத்தவரை காங்கிரஸ் மற்றும் ஐக்கிய முற்போக்கு கூட்டணி அர சுக்கு எதிராக அழுத்தம் தரப்பட வேண்டும். ஜனாதிபதி தேர்தல் பிரச்சனையில் காங்கிரஸ் தலை மையிலான அரசை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆதரிப்பதாக குற்றம்சாட்டும் சமதூரத்தை பின் பற்ற வேண்டும் என்போர், காங் கிரஸ் கட்சிக்கு எதிராக, விலை வாசி உயர்வு மற்றும் மக்களுக்கு எதிரான நடவடிக்கைகளுக்கு எதி ரான போராட்டங்கள் மற்றும் வெகு ஜன போராட்டங்கள் உருவாகும் போது பாஜகவுடன் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கைகோர்ப்ப தாக குற்றம்சாட்டுகின்றனர்.
இத் தகைய பாணியில் மார்க்சிஸ்ட் கம் யூனிஸ்ட் கட்சியின் அரசியல் நிலைபாட்டை வியாக்கியானம் செய்யக் கூடாது.மத்திய அமைச்சரவை மற்றும் நிதியமைச்சர் பொறுப்பிலிருந்து பிரணாப் முகர்ஜியை அகற்றுவ தால் மத்திய அரசின் பொருளா தாரக் கொள்கை எதுவும் மாறிவிட போவதில்லை. ப.சிதம்பரமாக இருந்தாலும் சரி, பிரணாப் முகர்ஜி யாக இருந்தாலும் சரி அல்லது அமைச்சர் பொறுப்பில் இருக்கும் யாராக இருந்தாலும், ஆளும் வர்க்கத்தின் கொள்கையை காங் கிரஸ் கட்சி முன்னெடுத்துச் செல் வதால் அந்தக் கொள்கைகள் தொடரவே செய்யும். உண்மையில் நவீன தாராளமயமாக்கல் கொள் கையை மென்மேலும் தீவிரமாக அமல்படுத்துமாறு சர்வதேச நிதி மூலதனம் நிர்ப்பந்தித்து வருவது அப்பட்டமாக தெரியவருகிறது.சில்லரை வர்த்தகத்தில் அந்நிய முதலீட்டை அனுமதிப்பது குறித்த பிரச்சனையும் இந்த சர்ச்சையின் போது விவாதிக்கப்படுகிறது. 4 கோடி மக்களின் வாழ்வாதாரம் சம் பந்தப்பட்ட மிக முக்கியமான பிரச் சனை இது. இந்த முயற்சி எதிர்க் கப்பட வேண்டும்; முறியடிக்கப்பட வேண்டும். ஐக்கிய முற்போக்கு கூட்டணிக்கு வெளியில் உள்ள கட் சிகள் அனைத்தையும் அணி திரட்டுவதன் மூலமே இதை செய்ய முடியும். ஐக்கிய முற் போக்குகூட்டணியை ஆதரிக்கும் கட்சிகள் மற்றும் தேசிய ஜனநாயக கூட்டணியில் இடம் பெற்றுள்ள கட்சிகளும் கூட இந்த அணிவகுப் பில் இணைய வேண்டியிருக்கும். வால்மார்ட் நுழைவை எதிர்த்து வலுவான வெகுஜன இயக்கத்தை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நடத்தியது. மேலும் இத்தகைய நிறுவனங்கள் இந்தியாவில் கடை கள் திறப்பதையும் எதிர்த்து போராடியது. அனைத்து எதிர்க்கட் சிகளும் இந்தப் பிரச்சனையை ஒன்றுபட்டு எதிர்த்தன. நவீன தாராளமயமாக்கல் கொள்கைக்கு எதிரான போராட்டத்தை முன்னெ டுத்துச் செல்வது குறித்த உத்தியை ஜனாதிபதி தேர்தலுக்கான வேட் பாளர் தேர்வுடன் முடிச்சுப்போடு வது தேவையற்ற குழப்பத்தையே ஏற்படுத்தும்.
புறக்கணிப்பது குறித்து...
ஜனாதிபதி தேர்தலை மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஏன் புறக் கணிக்கவில்லை என்ற கேள்வி முன்வைக்கப்படுகிறது. ஐக்கிய முற்போக்கு கூட்டணி மற்றும் பாஜக ஆதரவு வேட்பாளருக்கு வாக்களிப்பதற்கு பதிலாக, யாருக் கும் வாக்களிக்காமல் இருந்து விட்டால் என்ன என்று வினவப் படுகிறது.ஜனாதிபதி தேர்தலை புறக் கணிப்பது என்பது மேற்குவங்கத் தில் மம்தா பானர்ஜி மற்றும் திரி ணாமுல் காங்கிரஸ் எடுத்துள்ள அதே நிலைபாட்டை எடுப்பதாக அமையும். இந்த நிலைபாடு அர சியல் ரீதியாக பலவீனமானது; ஏற் றுக் கொள்ள இயலாதது. இதே திரி ணாமுல் காங்கிரஸ் தான் மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு எதி ராக பயங்கரவாத வன்செயல் களை கட்டவிழ்த்துவிட்டுள்ளது. சட்டமன்ற தேர்தலுக்கு பிறகு கட்சி மற்றும் இடது முன்னணியின் ஊழியர்கள், ஆதரவாளர்கள் 68 பேர் படுகொலை செய்யப்பட் டுள்ளனர். ஜனநாயகத்தின் மீதான தாக்குதல் அனைத்து முனை களுக்கும் விரிவுபடுத்தப்பட்டுள் ளது. காங்கிரஸ் கட்சியும் கூட தப்ப முடியவில்லை. திரிணாமுல் காங் கிரஸ் எடுத்துள்ள அதே நிலையை கட்சியும் எடுப்பது என்பது மேற்கு வங்கத்தில் இடதுசாரிகளின் நல னுக்கு தீங்கிழைக்கும். அந்த மாநி லத்தில் திரிணாமுல் காங்கிரசை எதிர்த்து நடத்திவரும் போராட் டத்தை பலவீனப்படுத்தும். மேற்கு வங்கத்தில் கடுமையான தாக்குத லுக்குள்ளாகியுள்ள இடதுசாரி இயக்கம் மற்றும் உழைக்கும் மக்க ளின் உரிமைகளை பாதுகாக்க வேண்டிய கடமை மிகப்பெரிய இடதுசாரிக் கட்சி என்ற முறையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு உண்டு.
இடதுசாரிகளின் வலுவான தளத்தில் கட்சியை பாதுகாப்பது என்பது தேசிய அளவில் இடது சாரி இயக்கத்தை முன்னெடுத்துச் செல்ல உதவும்.மேலும், இது மேற்குவங்கம் சம்பந்தப்பட்ட பிரச்சனை மட்டு மல்ல; தேசிய அளவில் தேர்தலை புறக்கணிப்பது என்பது களத்தி லிருந்து கட்சி விலகிக் கொள்வது என்றே பொருள்படும். அரசியல் நிகழ்ச்சிப் போக்குகளில் கட்சியின் தலையீட்டிற்கு இது ஏதுவாக அமையாது.2009ம் ஆண்டிலிருந்தே இடது சாரி கட்சிகளை தனிமைப்படுத்த வேண்டும் என்ற நோக்கத்துடன் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற் றும் இடதுசாரி கட்சிகளை பல வீனப்படுத்த ஆளும் வர்க்கம் திட்டமிட்ட முறையில் தாக்குதல் நடத்தி வருகிறது. நவீன தாராள மயமாக்கல் கொள்கைகளுக்கு எதிராக போராடிவரும் இடதுசாரி சக்திகளை பலவீனப்படுத்த வேண் டும் என்ற ஆளும் வர்க்கத்தின் முயற்சிகளை மனதில்கொண்டு, எந்தவிதமான மாயைகளுக்கும் இடம் தராமல் ஆளும் கூட்டணி யில் உள்ள முதலாளித்துவ கட்சி களிடையே ஏற்பட்டுள்ள விரி சலை பயன்படுத்திக் கொள்ள கட்சி முயல்வதே சரியாக இருக் கும். இந்த தருணத்தில் தேர்தல் புறக்கணிப்பு என்பது இந்த நோக் கத்திற்கு உதவுவதாக அமையாது.
இடதுசாரிக் கட்சிகளின் நிலை
ஜனாதிபதி தேர்தலை பொறுத்த வரை இடதுசாரிக் கட்சிகளால் ஒன்றுபட்ட நிலையை எடுக்க முடியவில்லை. மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி மற்றும் அகில இந் திய பார்வர்டு பிளாக் ஆகிய கட்சி கள் பிரணாப் முகர்ஜியை ஆதரிப் பது என்று முடிவெடுத்துள்ளன. சிபிஐ மற்றும் ஆர்எஸ்பி ஆகிய கட்சிகள் தேர்தலை புறக்கணிக்க முடிவெடுத்துள்ளன. கடந்த காலத் திலும் கூட ஜனாதிபதி தேர்தலில் 4 இடதுசாரி கட்சிகளும் ஒன்று பட்ட நிலை எடுக்க இயலாமல் போயுள்ளது. உதாரணமாக 1992 தேர்தல் முதலே காங்கிரஸ் வேட் பாளரை ஆதரிக்க மறுத்து ஆர் எஸ்பி புறக்கணித்து வந்துள்ளது.ஜனாதிபதி தேர்தல் பிரச்சனை யில் இடதுசாரி கட்சிகள் மாறுபட்ட நிலைபாட்டை எடுத்துள்ளதால் இடதுசாரி கட்சிகளின் ஒற்றுமை பாதிக்கப்பட்டுவிடாது. பெரும் பாலான அரசியல் மற்றும் பொரு ளாதார பிரச்சனைகளை பொறுத்த வரை இடதுசாரிக் கட்சிகளுக்கு பொதுவான ஒன்றுபட்ட நிலைபாடு உள்ளது. இந்த அடிப்படையில் தான் உணவுப் பாதுகாப்பை வலி யுறுத்தியும், ஒருங்கிணைந்த பொதுவிநியோக முறையை உறுதி செய்யக் கோரியும் இடதுசாரிக் கட் சிகள் ஒன்றுபட்ட பிரச்சாரம் மற்றும் இயக்கத்திற்கு அழைப்பு விடுத் துள்ளன. ஜூலை 1ம்தேதி முதல் இந்தப் பிரச்சார இயக்கம் ஒன்று பட்ட முறையில் துவங்கிடவுள்ளது.

ஞாயிறு, 24 ஜூன், 2012

தேசியக்கொடியை காப்பாற்றிய பாரத அன்னையின் திருக்குமாரர்களை தேசம் பாராட்டுகிறது...!

                 மகாராஷ்டிர மாநில தலைமைச்செயலகமான மந்த்ராலயாவில் கடந்த வியாழக்கிழமை மதியம் 2.45 மணியளவில் அலுவலகம் நடந்து கொண்டிருந்த போதே பாதுகாப்பு  குறைபாடுகள் காரணமாக திடீரென்று  தீவிபத்து ஏற்பட்டது. தலைமைச்செயலக கட்டிடத்தின் 4வது மாடியில் பற்றிய தீ, மளமளவென்று ஆறாவது மாடியை வெகு விரைவாக எட்டி எரியத்தொடங்கியது. அந்த சமயத்தில்  தலைமைச் செயலகத்தில் வேலை செய்துகொண்டிருந்தவர்கள் அச்சமடைந்து  தங்களை காப்பாற்றிக்கொள்வதற்காக படியிறங்கி அங்கும் இங்கும்  ஓடினார்கள். அப்படியும்  வெளியே வரமுடியாதவர்களை தீயணைப்புப் படையினர் ஏணிகளை பயன்படுத்தி வெளிப்புற ஜன்னல்கள்  வழியாக காப்பாற்றி இறக்கினார்கள். காற்றின் வேகத்தால் தீப்பிழம்பு   கரும்புகையுடன்மந்த் ராலயா கட்டிடத்தையும் தாண்டி எரிந்துகொண்டிருந்தது. 
       
 


    இந்த சூழ்நிலையில், அந்த தலைமைச்செயலகக்  கட்டிடத்தின் உச்சியில் வழக்கமாக காலையில் ஏற்றப்பட்ட தேசியக்கொடி பறந்துகொண்டிருந்தது. எல்லோரும் தங்கள் உயிரைக் காப்பாற்றிக் கொள்வதற்கு பறந்து ஓடிக்கொண்டிருக்கும் பரபரப்பான வேளையில், தங்கள் உயிரையும் காப்பாற்றிக்கொள்ள முற்படாமல் கட்டிடத்தின் உச்சியில்   பறந்து கொண்டிருந்த தேசிய கொடி எரிந்து நாசமாகாமல் காப்பாற்றப்பட வேண்டும் என்ற எண்ணம் தோன்ற அந்த அலுவலகத்தில் வேலை பார்க்கும் சுரேஷ் பாரியா மற்றும் அவரது உதவியாளர்கள் என மொத்தம் ஆறு பேரும்  கட்டிடத்தின் உச்சியை நோக்கி ஓடினார்கள். அந்த ஆறு பேரும்   தீயையும், ஆபத்தையும், உயிரையும் பொருட்படுத்தாமல் அந்த ஆறு பேரும் சுமார் 2 மணிநேரம் போராடி மந்த்ராலயா கட்டிடத்தின் உச்சியில் அமைந்துள்ள கம்பத்தில் பறந்துகொண்டிருந்த தேசியக்கொடியை காப்பாற்றி பத்திரமாக இறக்கினார்கள் என்பதை தொலைக்காட்சியிலும், பத்திரிக்கைகளிலும் பார்க்கும் போது மெய்சிலிர்க்கிறது.   
              சுதந்திரப்போராட்டக் காலத்தில், அந்நியர்களின் தடியடிக்கும் அஞ்சாமல், தன் உயிரையும் பொருட்படுத்தாமலும் உயிர் போகும் நேரத்திலும் தான் பிடித்த இந்த தேசத்தின் கொடியை  தாழவிடாமல் காத்த திருப்பூர் குமரனை நாம் பார்த்ததில்லை. தங்கள் உயிரையும்  பொருட்படுத்தாமல், தங்களைப் பற்றி துளியும் கவலைப்படாமல், தீப்பிழம்பிலிருந்து நம் தேசக்கொடியை காப்பாற்றிய பாரத அன்னையின் திருக்குமாரர்களை பார்க்கும் போது நமக்கெல்லாம் பெருமையாய் இருக்கிறது. உண்மையுடனும் உறுதியுடனும்  தங்களது கடைமையாற்றிய இவர்களை நாடு சிலிர்ப்புடன் பாராட்டுகிறது. வணங்குகிறது.

வியாழன், 21 ஜூன், 2012

West Bengal : A Year of Violence & Crime


    

 
   






                     


 
               This is not something the people of Bengal had bargained for when they bought the slogan of “paribortan” advanced by the TMC - Congress combine and decided to end 34 years of uninterrupted reign of the Left Front. Killings, arson, rape, molestation, physical assaults on women, forcible collection of money, eviction from land -- have all become a daily occurrence. It does not surprise them anymore. Slowly but surely, people have started comparing the current dispensation with the dreaded period of the seventies, when the state witnessed semi-fascist terror. Will the state fall back to those days is an apprehension being shared by more and more people.
                Between the period May 14, 2011 when the TMC combine assumed office to May 12, 2012, as many as 65 Left Front leaders, activists and supporters have been brutally killed by TMC goons. 4904 persons had to be hospitalised on account of the injuries sustained in such attacks.
                 The steep rise in the overall crime graph points to the general deterioration in the law and order situation during the past one year, since the TMC combine assumed office. 40,124 people have been evicted from their homes. It is estimated that an amount of around Rs. 28 crores has been forcibly collected from 9529 persons.
           There has been an alarming increasing in the number of rape cases. 23 cases of rape have been reported from different parts of the state during the past one year. Apart from this, there has also been an overall rise in the incidents of atrocities against women. During the first year of the TMC regime, and shamefully with a lady at the helm, 517 cases of molestation of women and 790 cases of physical assault on women have been reported. One of these cases pertains to the rape of a speech and hearing impaired girl in Bankura by a resident doctor within the hospital premises. In an overwhelming majority of these cases the culprits owe their allegiance to the ruling TMC. Unfortunately, however, in many cases, the complainants have been discredited, their character assassinated and motives assigned. In cases were police officers have investigated independently and proceeded against the culprits, they have been promptly transferred. The CM has had the cheek to call these cases “politically motivated” or “fabricated”, even if it meant tarnishing the image of the victim and defending the perpetrators of these crimes.
              There has been a planned and systematic attack on land reforms implemented during the Left Front rule. Apart from 26,838 pata holders and bargardars (who had received tenancy rights during the tenure of Left Front government) who have been evicted from their lands, 3,418 peasants are not being allowed to cultivate their own land.
            The attack has now spread to democratic institutions and the electoral process, besides the massive attack on the political opponents of the TMC.  Even the levels of intolerance have seen a steady growth. The innocuous act of forwarding an email containing a caricature of the Chief Minister saw a university professor, Ambikesh Mahapatra landing behind bars. Newspapers and periodicals that a library could subscribe to have all been listed and sent in an order to libraries across the state. Boards put up by the Ganashakti daily have been made a special target for attack. 250 of such boards on which the daily was pasted for reading by the public who could not afford purchasing the paper, have been destroyed. The democratic right to protest is also sought to be curtailed. Another renowned professor, Partho Sarothi Ray was arrested and jailed for taking part in a peaceful demonstration against eviction of slum dwellers.
              Since October 2011, 38 incidents of attacks on the election process in different institutions in the state have been reported. 84 student union offices have been captured by the student wing owing allegiance to the TMC. Assault on students, teachers and staff in educational institutions are increasing.
               It is but natural that the brunt has been borne by the CPI(M), the mass organisations under its leadership and its partners in the Left Front. Apart from the 65 leaders and cadres of the Left who have been mercilessly killed, 611 offices of the CPI(M) have been ransacked and captured. 217 offices of the mass organisations have been captured in different parts of the state. 14 Party conferences at various levels were attacked. 3293 persons have been arrested on the basis of false and fabricated cases being foisted on them. Arms are being planted in houses and offices of the Party and in subsequent raids “recoveries” are reported. The reported number of such cases is 169.
             Besides, there has been a sharp increase in the number of kidnappings, looting of shops, dismantling of elected three tier panchayat bodies or forcible resignation of elected representatives.
              But this is not all. In the seven month period between October 12, 2011 and May 12, 2011, agricultural distress has led 53 peasants to commit suicide, which the government is not ready to admit.(INN)


Post Poll Violence perpetrated by AITC and INC miscreants against CPI(M) & Left Front activists in West Bengal as reported from May 14, 2011 to May 12, 2012

At a glance
1
Killed
65
2
Abetted to commit suicide
12
3
Peasant suicides (from October 12, 2011)
53
4
Rape
23
5
Molestation
517
6
Physical assault on women
790
7
Injured & hospitalized
4904
8
Evicted from house
40124
9
Ransacked, looted & burnt
2867
10
CPI(M) office ransacked & captured
611
11
Attack on Party conferences
14 (from November 2011)
12
Mass organisations & trade union offices captured
217
13
Attack on the election process in different institutions
38 (from October 2011)
14
Student Union offices captured
84
15
Ganashakti Board destroyed
250
16
Pre-planned so called `arms recovery’
169
17
Arrest on false and fabricated cases
3293
18
Forcefully collection of money. No – amount
9529 (+) Nos – 27 crore 87 lac 8 thousand
19
Not allowed to cultivate own land. No – Acre
3418 (+) Nos – 9222.73 Acre
20
Eviction of Patta Holder & Bargader. No – Acre
26838 (+) Nos – 9404.13
* Apart from the above statement, the incidents like kidnapping, assault on students-teachers-staffs, ransacking educational institutions, looting of shops, dismantling of elected three tier panchayat, forcing to resign from the elected bodies are not enlisted.

HALDIA SHOWS THE WAY: ‘YELLOW CARD’ to TMC GOVT.

           ELECTIONS to six municipal bodies in West Bengal, which was marked by terror, reflected signs of discontent against the TMC government.
             It was particularly manifest in Left Front’s win in Haldia in East Midnapore district. It was here that the anti-Left Front anarchy reached its crescendo since the days of Nandigram. Trinamool Congress wrested East Midnapore district council in 2008, won the parliamentary seats in 2009 and all assembly constituencies of the district in 2011. Right from 2009, incessant attacks have been launched against CPI(M) in Haldia. After 2011, the trade unions in this industrial and port town were made a special target. CPI(M) offices were destroyed or captured, hundreds of workers were chased away from their workplaces. The reign of terror was led by TMC Lok Sabha member Subhendu Adhikary who proclaimed that there would be no one in Haldia to hold Red flags. Frontline CPI(M) leaders were jailed under false cases.
             During the elections to the municipal body, CPI(M) and Left Front could not conduct peaceful campaign even for a single day. Candidates were threatened with dire consequences, their families attacked. As Congress had no alliance with TMC, their candidates and potential candidates were also attacked. Congress candidates had to withdraw nomination after their family members were kidnapped. Left Front conducted determined, door-to-door campaign. Even on the day of elections, TMC hoodlums raided different areas to threaten people, though they faced resistance from the poorer sections.   
           The people of Haldia rebuffed the TMC and the Left Front retained the municipality with a 15-11 margin. Out of these, 14 were won by CPI(M) and 1 by CPI. In three wards, Left Front candidates were defeated narrowly, with margins of 40 to 52 votes only.  Left Front chairman Biman Basu congratulated the people of Haldia and said that they have silently rejected the politics of terror.
The dejection of the TMC with the defeat in Haldia was very much evident. Immediately after the results were declared, TMC activists attacked the car of Tamalika Panda Seth, CPI(M) leader and outgoing chairperson of the municipal body. CPI(M) activists were attacked in different places. CPI(M) local committee office in Haldia was ransacked.
               In nine wards of Durgapur Municipal Corporation, TMC went into full-scale terrorisation.  CPI(M) booth camps were attacked. In many wards, TMC activists entered into booths and took control of EVMs. CPI(M) polling agents were not allowed to enter. Booth capturing took place in many wards. TMC activists started terrorising the people from the night before. They threatened voters not to come out of houses, particularly in areas where Left has a strong presence. In some wards, police helped TMC and chased away voters from the queue. Practically, Durgapur witnessed a serious attack on the democratic rights of the people.
                The Left Front has demanded repoll in 29 booths in Durgapur where CPI(M) polling agents were chased away and voters were dispersed by TMC anti-socials brought from outside the city. TMC won this corporation with 29 seats while Left Front won in 11 seats. The Congress and BJP won a seat each, while an independent won a seat.  
             In Panshkura, the atmosphere was vitiated. There also Left Front cadre and even Congress cadre were not allowed to campaign freely. TMC threatened to ‘whitewash’ the opposition. TMC retained the municipality winning 12 seats while Left Front bagged 5. CPI(M) won 3 seats while CPI bagged 2. TMC’s outgoing chairman was defeated by CPI candidate. Congress failed to get any seat here.
                Another setback to the TMC occurred in Congress’ hand at Coopers Camp when the latter won 11seats out of 12. Congress maintained their hold on the notified area body despite all out aggressive campaign against them by their partner in the state government. Top leaders of the both the parties were engaged in bitter exchange in Coopers Camp as well as in Nalhati in Birbhum district. TMC retained this board with thin margin, winning 8 seats while Left Front won 3, Congress 3 and BJP 1. Here too TMC’s outgoing chairman was defeated in two seats despite every attempt to get him through. In a ward, Left Front candidate was even arrested the night before the voting day and was freed on bail only in the next afternoon that too after a rebuff from court. Widespread discontent was reflected in Nalhati.
            Left Front suffered defeat in Dhupguri in Jalpaiguri district. Election process was more or less peaceful here. But TMC took no chance and just before the elections they admitted Kamtapur Peoples’ Party leader Mitali Roy in their fold. KPP is a secessionist party demanding separate Kamtapur state for quite long time. TMC won 11 and Left Front 4 seats while BJP won in a ward.
            Biman Basu alleged that in many areas of these six municipalities, people were terrorised and normal democratic atmosphere was lacking. TMC unleashed violence before and even after the declaration of results. This was an ominous sign for civil rights in the state.
                  Suryakanta Misra, leader of opposition, termed the entire results as ‘Yellow card’, a warning to TMC and its government. “If they do not mend their ways, people will show them Red card in the future”, said Misra. He also alleged that the ruling party has started fearing people within a year of assuming power. This is the reason behind their terror tactics in civic elections.
courtesy :
People’s Democracy
10th June, 2012

Trinamool has set in motion agrarian counter-reform, says N. Ram

             The Trinamool Congress-led government in West Bengal appears to have set in motion an “agrarian counter-reform,” N. Ram, former Editor-in-Chief of The Hindu, said here on Wednesday pointing out that there have already been attempts to undo the achievements of the Left Front.
           Speaking at a seminar to commemorate the 35th Anniversary of the setting up of the first Left Front government in the State, Mr. Ram said that before the Left Front came to power, “West Bengal presented the picture of a State in prolonged decline.” He said that in the early days of the Trinamool Congress-led government there have been reports of 61 farmer suicides — “a symptom of the agrarian counter-attack.” He pointed out that since its arrival in 1977, the Left Front government had managed a turnaround in the prevailing situation of a long period of great distress.“An example of what agrarian counter-reforms mean for the people of this State is that much of the development of the State can be compromised,” he said.
Loss of lives
             Speaking on a range of issues including attacks on the freedom of expression, efforts by anti-Left forces “to tap into Communalism” in recent years and attempts to “bureaucratise the panchayats,” Mr. Ram also drew attention to the large number of people who were killed or wounded in attacks. “We are concerned about the loss of lives. We want political parties to function freely; the way they functioned earlier — the way Mamata Banerjee was allowed to function in the State, campaign militantly — we want the same rights to be enjoyed by all political parties in the State,” he said.
            Mr. Ram also cautioned that there have been “early signals of intolerance towards those who are critical of the government and the Chief Minister in the State” — a dangerous trend that must be “arrested at the start.”
         The seminar was also addressed by eminent economist C. P. Chandrasekhar and the State’s former Finance Minister, Ashok Mitra, who was among the five Ministers who took the oath of office on June 21, 1977 when the first Left Front government was formed in the State. The session was moderated by Marxist scholar Shovanlal Duttagupta.
             “The fact that there was a fundamental transformation in the nature of India’s political economy with the coming of the Left Front in 1977 cannot be denied. It placed on the agenda — the last three years notwithstanding — an alternative way to take this country forward in the direction where we will finally be able to mobilise the support for its structural transformation,” Mr. Chandrasekhar said.

திங்கள், 18 ஜூன், 2012

உலகம் சுற்றும் ''வாலிபன்'' - ரெக்கை கட்டிப் பறக்கும் எஸ். எம். கிருஷ்ணா....!

            நம்ம நாட்டுல ஜனாதிபதியாகவோ.... பிரதமராகவோ.... மந்திரிகளாகவோ.... ஆகிட்டா போதும்... நாட்டுக்கு நல்லது செய்யணும்... மக்களுக்கு சேவை செய்யணும்னு எல்லாம் யோசிக்கிறாங்களோ இல்லைய... முதல் வேலையா அவங்க யோசிப்பது    வெளிநாட்டு   சுற்றுப்பயணம்  தான். மக்கள் வரிப் பணத்தை  - அரசு பணத்தை எவ்வளவு வேண்டுமானாலும் செலவு செய்து குடும்பத்தோடு வெளிநாடுகளுக்கு சென்று சுற்றிப் பார்க்கவேண்டும் என்பது தான் அவர்களின் இலட்சியமாக இருக்கிறது என்பதை நாம்  கண்கூடாக பார்க்கும் உண்மையாகும். அதுவும் வெளியுறவு துறை அமைச்சராக பதவி வகித்தால், அவ்வளவு தான். வெளிநாட்டு நாட்டு மந்திரியாகவே ஆகிவிடுவார். அவரை  இந்தியாவில் பார்க்கவே முடியாது. ஆகாயத்திலேயே  பறந்துகிட்டு தான் இருப்பாரு. எப்போதாவது இந்தியாவிற்கு வந்துட்டுப் போவாரு.
            இதற்கு முன்பு மொரார்ஜி தேசாய் தலைமையிலான ஜனதா கட்சியின் ஆட்சிக்காலத்தில் வெளியுறவுத்துறை அமைச்சராக இருந்த வாஜ்பாய் முதல் இன்றைய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ். எம். கிருஷ்ணா வரை அப்படித்தான் அரசின் பணத்தை செலவு செய்து உலகம் சுற்றியவர்கள்.
            அதுவும் மத்தியில் ஆளும் ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசின் வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ். எம். கிருஷ்ணா தான் மத்திய அமைச்சர்களிலேயே மிக அதிகமாக வெளிநாட்டிற்கு  சுற்றித் திரிபவர் இந்த நாட்டு மக்கள் அறிவார்கள். 2009 - ஆம் ஆண்டு மே 23 அன்று அமைச்சராக பதவியேற்ற நாளிலிருந்து இன்று வரை சுமார் 201 நாட்கள் வெளிநாட்டிலேயே தன் காலத்தை கழித்திருக்கிறார் என்பது ஓர் அதிர்ச்சியான தகவல் தான். அந்த 201 நாட்களும் அவர் சுற்றித் திரிந்த  நாடுகள் மொத்தம் 43. இவர் இத்தனை நாடுகளுக்கும் சுற்றி வந்தது யாரு வீட்டுப் பணத்தில்...? அது மக்கள் பணம்... நம் வீட்டுப் பணம் என்பதையும் மக்கள் மறந்துவிடக்கூடாது.
               இப்படியாக தான் இந்த கிருஷ்ணா மக்கள் வரிப்பணத்தை செலவு செய்து சென்ற ஆண்டு ஜூலை மாதம் அமெரிக்காவிற்கு சென்று விம்பிள்டன் டென்னிஸ் போட்டியை பார்த்து மாட்டிக்கொண்டார். இவர் அதிகமான முறைகள் பயணம் செய்ததும்,  மிக அதிகமான நாட்கள் தங்கியிருந்ததும் அமெரிக்கா தான். அதேப்போல் எஸ். எம் கிருஷ்ணா அதிகமான முறைகள்  சந்தித்த மனிதர் யார் தெரியுமா...? அமெரிக்காவின்  வெளியுறவு செயலாளர் ஹில்லாரி கிளிண்டன் மட்டும்தான்.....

சனி, 16 ஜூன், 2012

அய்யோ பாவம் பிரணாப்.... பிரதமர் பதவி ஒரு கனவாகவே போச்சே...?

             கனவு என்பது தனிப்பட்ட மனிதர்களின் சொத்து. அதை யாராலும் தடுக்க முடியாது. ஆனால் அந்த கனவு நிறைவேறாமல் அடுத்தவரால் கெடுக்க முடியும். அப்படிக் கெடுப்பதையும் யாராலும் தடுக்க முடியாது. அப்படி நிகழ்ச்சி தான் நேற்று நடந்தேறியது. 
         இந்தியா போன்ற ஜனநாயக நாட்டில் யார் வேண்டுமானாலும் தான் இந்த நாட்டின் பிரதமராக வேண்டும் என்று ஆசைப்படுவது என்பது தவறில்லை. எல்லோரும் இந்நாட்டு மன்னர்கள் என்று தான் நம்மை பெருமைபடுத்துகிறார்கள். 
        





 
                      அப்படி தான் நம் நாட்டின் நிதியமைச்சராக இருக்கும் பிரணாப் முகர்ஜியும் பல ஆண்டுகளாக ஒரு கனவு கண்டார். அந்த கனவு என்ன என்பதை இந்த நாடே அறியும். 1969 - ஆம் ஆண்டிலிருந்தே நாடாளுமன்றத்தின் மாநிலங்களவை உறுப்பினராகவே இருந்து வந்தார். என்றாலும்  மறைந்த பிரதமர் இந்திர காந்தி அம்மையாரின் நம்பிக்கைக்குரியவராக இருந்ததாலேயே, அவர்  காலத்திலிருந்தே காங்கிரஸ் அமைச்சரவைகளில் சகல அதிகாரங்களையும்  அனைத்து சக்திகளையும்  கொண்ட அமைச்சராகவே உலா வந்தார் . அதனாலாலேயே  இந்திரா  காந்தி இறந்த போதே  இந்த பிரதமர் பதவி என்ற  ''வடைக்காக'' பிரணாப் ஏங்கினார்  என்பதை காங்கிரஸ்காரர்களால் மறுக்கவோ மறைக்கவோ முடியாது. இந்திரா காந்தி இறந்த பிறகு தனக்கு கிடைக்கும் என்று எதிர்ப்பார்த்து காத்திருந்த பிரதமர் பதவியை   இந்திராவின் மகன் ராஜீவ் காந்தி தட்டிப் பறித்துக்கொண்டார். அந்த கோபத்தில் தான் காங்கிரஸ் கட்சியை விட்டு விலகி ராஷ்ட்ரிய சமாஜ்வாடி  காங்கிரஸ் என்ற கட்சியை ஆரம்பித்தார். 
               அதன் பிறகு ராஜீவ் காந்தி எதிர்பாராதவிதமாக கொல்லப்பட்டு விட, காலியாகிப்போன பிரதமர் பதவி நரசிம்மராவிற்கு கிடைத்துவிட்டது. பிறகு நரசிம்மராவே பிரணாப் முகர்ஜியை  அழைத்தபோது மீண்டும் காங்கிரசில் ஐக்கியமானார். 1969 - ஆம் ஆண்டிலிருந்து மக்களை சந்திக்காத மாநிலங்களவை உறுப்பினராகவே  இருந்து வந்த பிரணாப் முகர்ஜி 2004 - ஆம் ஆண்டிலிருந்து மேற்கு வங்கத்தின் சாங்கிப்பூர் தொகுதியிலிருந்து மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்களவை உறுப்பினாராக இருந்து வருகிறார். 2004 - ஆம் ஆண்டில் கூட சோனியா காந்தி பிரதமராக அமரமுடியாத சூழ்நிலையில் தனக்கு அந்தப் பதவி கிடைக்கும் என்று ஏங்கி எதிர்ப்பார்த்திருந்த வேளையில் இப்போது  அந்த பதவியை தட்டிப் பறித்தவர் மன்மோகன் சிங்.
            எப்படியோ பல்வேறு அதிகாரங்களையும், சக்திகளையும் கொண்ட  உயர் பதவிகளில் இருந்தாலும், தான்  பிரதமர் ஆவது என்பது  மட்டும் பிரணாப்பின்  நீண்ட நெடிய கனவாகவே இருந்து வந்தது. 
     

          இந்த சூழ்நிலையில் ஜனாதிபதி தேர்தல் வரவே, பிரணாப் முகர்ஜியை அரசியலிலிருந்தே - காங்கிரஸ் கட்சியிலிருந்தே - அமைச்சரவையிலிருந்தே - ஏன் நாடாளுமன்றத்திலிருந்தே அப்புறப்படுத்துவதற்கு சோனியாவிற்கு மிகப்பெரிய வாய்ப்பாக அமைந்துவிட்டது. இப்போது  பிரணாப் முகர்ஜியின்  பிரதமர் பதவி கனவிற்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுவிட்டது. பாவம் பிரணாப்...! இனி நாடாளுமன்றத்தின் பக்கமே தலைவைத்துப் படுக்க முடியாது. இவரைப் பொறுத்தவரை பிரதமர் பதவி ஒரு கனவாகவே போய்விட்டது.

வியாழன், 14 ஜூன், 2012

ஜனாதிபதி தேர்தலில் ஓட்டுக்காக காசு கேட்கும் மம்தா பானர்ஜி....!



  














   தற்போதைய குடியரசுத்தலைவரின் பதவிக்காலம் வரும் ஜூலை மாதம் முடிவடையும் சூழலில், ஆறு மாதத்திற்கு முன்பே இந்திய நாட்டின்  அடுத்த ஜனாதிபதி யார் என்பதை ஊடகங்கள் ஆரூடம் சொல்ல ஆரம்பித்தது. இந்த இடைப்பட்ட காலங்களில் ஒவ்வொரு ஊடகங்களும் தங்களுக்கு வேண்டப்பட்டவர்களை எல்லாம் ஜனாதிபதியாக்கிப் அழகு பார்த்தார்கள். ஆனால் ஒரு பக்கம் மத்தியில் கூட்டணிக் கட்சிகளின் தயவில் ஆட்சி செய்துகொண்டிருக்கும் - ஆளும் கூட்டணியின் தலைமைக் கட்சியான காங்கிரஸ் கட்சியோ குடியரசுத்தலைவர் தேர்தலுக்கான வேட்பாளரை இதுவரை அறிவிக்காமலேயே காலதாமதம் செய்து வருகிறது. இன்னொரு பக்கம் குழம்பியக் குட்டையில் குடியரசுத்தலைவர் என்ற பெரிய மீன்  இல்லாவிட்டாலும், ஒரு ''குடியரசுத் துணைத்தலைவர்'' என்ற சின்ன மீனையாவது பிடிக்க  முடியுமா என்று ''வாடியிருக்கும் கொக்கைப்'' போல பாரதீய ஜனதா கட்சி நடப்பவைகளை எல்லாம் பார்த்துக்கொண்டே இருக்கிறது. 
                 இந்த சூழ்நிலையில் தான் நாட்டில் ஒரு எதிர்பாராத சம்பவம் நடந்தேறியது. தமிழகத்தில் தேர்தல் அறிவிப்பு வருவதற்கு முன்பே தனது கட்சி வேட்பாளரை அறிவிப்பது போல குடியரசுத் தலைவர் தேர்தலுக்கான அறிவிப்பு வருவதற்கு முன்பே தன்னுடைய கட்சி ஆதரிக்கும் வேட்பாளராக நாடாளுமன்ற முன்னாள் சபாநாயகரும், பழங்குடி இனத்தை சேர்ந்தத் தலைவருமான பி.ஏ.சங்மா  அவர்களை தமிழக முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா திடிரென  அறிவித்தார். மற்றக் கட்சிகளையும் அவரது வேட்பாளரை ஆதரிக்கும் படியும் வேண்டுகோள் விடுத்தார். ஒடிஷா மாநில முதலமைச்சர் நிதிஷ் குமாரும் ஆதரவுக்கரம் நீட்டினார். 2014 - ஆம் ஆண்டில் நடைபெறவிருக்கிற நாடாளுமன்றத் தேர்தலை குறிவைத்தே ஜெயலலிதா இந்த குடியரசுத் தலைவர் தேர்தலில் களம் இறங்கியிருக்கிறார் என்பதை யாராலும் மறுக்கமுடியாது. 
            காங்கிரஸ் கட்சித் தலைமையோ தன்னுடைய வேட்பாளரை அறிவிக்க முடியாமல் தினறிக்கொண்டு,  கூட்டணிக்கட்சிகளின் தலைவர்களிடம்  ஆலோசனை கேட்டு வருகிறார். சோனியா அம்மா ஒரு கழுதையைக் காட்டினாலும் நாங்கள் ஓட்டுப்போட தயாராக இருக்கிறோம் என்ற தகவலை தன்  ''அடுத்த வாரிசு'' மூலம் சொல்லியனுப்பி திமுக தலைவர் மு. கருணாநிதி தெரிவித்துவிட்டார். 
           ஆனால்  நேற்று இன்னொரு திருப்பமாக மேற்கு வங்க மாநில முதலமைச்சர் மம்தா பானர்ஜி கூட்டணித் தலைவர் சோனியாவை சந்தித்த போது வாய்ப்புள்ள வேட்பாளராக பிரணாப் முகர்ஜி மற்றும் ஹமீது அன்சாரியின் பெயர்களை சோனியா மம்தாவிடம் முன்மொழிந்திருக்கிறார். மேற்குவங்கத்தில் ஆரம்பக் காலம்தொட்டு அரசியலில் தனக்கு எதிர் துருவத்தில் இயங்கிக்கொண்டிருக்கும் பிரணாப் முகர்ஜி- யை வேட்பாளராக ஏற்றுக்கொள்ள மம்தா தயாராக இல்லை. 
             அதே சமயம் ஜெயலலிதாவைப் போல் குடியரசுத்  தலைவர் தேர்தலில் தானும் முக்கிய பங்கு வகிக்க வேண்டும் என்று நினைத்த மம்தா பானர்ஜி சோனியாவை சந்தித்தப் பிறகு,  ஜெயலலிதா நிதிஷ் குமாரோடு இணைந்தது போல் இவர் முலாயம் சிங்கோடு இணைந்து கொண்டு, தன் பங்குக்கு  மூன்று பேர்களின் பெயர்களை வேட்பாளராக தன்னிச்சையாகவே அறிவிக்கிறார். பிரதமர் மன்மோகன் சிங், முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம், நாடாளுமன்ற முன்னாள் சபாநாயகர் சோம்நாத் சட்டர்ஜி போன்றப் பெயர்களை மம்தா தடாலடியாக அறிவித்தார். இந்தப் பெயர்களை அறிவிப்பதற்கு முன்பு சம்பந்தப்பட்டவர்களுக்கு சொல்லாமலேயே - அவர்களுக்கு தெரியாமலேயே அறிவித்தது என்பது வேடிக்கையானது.  மம்தா தன்  பெயரையும் அறிவித்ததைக்கண்டு சோம்நாத் சட்டர்ஜியே அதிர்ந்து போய்விட்டார். 
                மம்தாவின் இந்த சித்து வேலைகள் எதற்காக என்றால்...? மத்திய அரசிடம் அவர் கோரிக்கை வைத்து இதுவரை கைக்கெட்டாமல் இருக்கும் ''சிறப்பு நிதிக்காக'' தான் இந்த சித்து வேலைகள் என்பதை நாடே அறியும். மம்தா தான் ஆட்சிக்கு வந்து ஓராண்டு ஆகியும் மக்களை கவருவது போல் எந்த ஒரு திட்டங்களையும் கொண்டுவரமுடியாமல் திண்டாடிப் போய்விட்டார். கடந்த  33 ஆண்டுகளாக மேற்குவங்கத்தை ஆட்சி செய்து வந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைமையிலான இடதுசாரி அரசு மக்கள் நலன் சார்ந்த பல  திட்டங்களையும் செய்து முடித்து விட்ட சூழ்நிலையில், மம்தா தான் ஆட்சிக்கு வந்து மாற்றத்தை விரும்பிய மக்களுக்கு என்ன செய்வது என்று புரியாமல் திணறிப் போய்விட்டார். இந்த   சூழ்நிலையில் தான் , தமிழ்நாட்டைப் போல் பல இலவசங்களை கொடுத்து மக்களை கவரலாம் என்ற முயற்சியில் இறங்கிய  மம்தா அதற்கான நிதியை பிரதமரிடம் கேட்டார்... சோனியாவிடம் கேட்டார்.... திட்டக்குழு துணைத்தலைவர் மாண்டேக் சிங் அலுவாலியாவிடம் கேட்டார்.... யாரிடமும் மம்தாவின் கோரிக்கை நிறைவேறவில்லை. இறுதியில் குடியரசுத்தலைவர் தேர்தலை நிதியைப் பெறுவதற்கான ஒரு ஆயுதமாக மம்தா தன்  கையில் எடுத்துக் கொண்டார் என்பதை தெரிந்துகொள்ளவேண்டும்.
           சோனியா அறிவிக்கும் வேட்பாளருக்கு தன் கட்சியின் ஓட்டு வேண்டுமென்றால், தான் கேட்கும் அதற்கான நிதியை தந்தாக வேண்டும் என்பது தான் மம்தாவின் இந்த பேரமாகும். அதுமட்டுமல்ல, இது போன்ற குழப்பத்தை உண்டுபண்ணி, அதன் மூலம் காங்கிரஸ் கட்சியும், பாரதீய ஜனதாக் கட்சியும் நெருங்கி வருவதற்கான வாய்ப்பையும் மம்தா உருவாக்கி, அதன் மூலம், ஜனாதிபதி பதவியை காங்கிரசும், துணை ஜனாதிபதி பதவியை பாரதீய ஜனதாக் கட்சியும் பங்குப்போட்டுகொள்ளவும் மம்தா பிஜேபி- க்கு ஆதரவாக  மறைமுகமான  வேலைகளில் இறங்கியிருக்கிறார் என்பதையும் யாராலும் மறுக்க முடியாதது.

ஞாயிறு, 10 ஜூன், 2012

''இந்தி எதிர்ப்புப் போராட்டம்'' - ஓர் அரசியல் வியாபாரம் - தமிழை ஒழித்துக் கட்டி ஆங்கிலத்தை தான் வளர்த்தது...!


''யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழிபோல்
 இனிதாவது எங்கும் காணோம்'' - இந்த வரிகள் பாரதியின் வரிகள். மற்ற மொழிகளை காட்டிலும்  இனிதானது தமிழ் மொழி என்று பாரதி தமிழ் மொழியின் இனிமை குறித்து செய்த பிரகடனம். அவரது தாய் மொழியாம் தமிழ மொழி மீதான பற்றுதல் அல்லது ஈடுபாடு காரணமாகவோ அல்லது இன்றைய திராவிட கட்சிகளைப் போல் பகட்டுகாகவோ  ஓட்டு அரசியல்களுக்காகவோ பாரதியால் எழுதப்பட்ட வார்த்தைகள் அல்ல இது. 
                  பாரதி தமிழ் மட்டும் கற்றவனல்ல. ஆங்கிலம், இந்தி, சமஸ்கிருதம், தெலுங்கு, பிரஞ்சு போன்ற மொழிகளை கற்றிருந்ததாலும் அறிந்திருந்ததாலும் தான் அவரால் இவ்வாறு எழுதமுடிந்தது.
            அதனால் மொழிகள் எதுவும் நமக்கு எதிரிகளல்ல. எல்லா மொழிகளையும் நாம் கற்றுக்கொள்ள வேண்டும். ஆனால் மற்ற மொழிகளின் மீதுள்ள ஈர்ப்பில்  நமது தாய்மொழியை  தூக்கி எரிந்துவிடக்கூடாது.
               ஆனால் தமிழ்நாட்டில் என்ன நடந்தது...? நாடு சுதந்திரம் அடைவதற்கு முன்பே 1937 -ஆம் ஆண்டில் ராஜாஜி தலைமையிலான இந்திய தேசிய காங்கிரஸ் ஆட்சி அன்றைய சென்னை மாகாணத்தில் பள்ளிகளில் மீது சட்டத்தின் மூலம்    நடத்தப்பட்ட கட்டாய இந்தி மொழி திணிப்பை எதிர்த்து தந்தை பெரியார் அவர்களும், அன்றைய நீதிக்கட்சியினரும் போராடினார்கள். அன்றைய சூழ்நிலையில் அது சரியானதே. ஒரு மொழி தெரியாத மக்களின் மீது அந்த மொழியை திணிப்பது என்பது சரியானதல்ல என்பதைத் தான் அந்த  போராட்டங்கள் எடுத்துக் காட்டுகின்றன.
                அனால் பிற்காலத்தில் 1950 - 1960 - களில் திராவிட முன்னேற்றக்கழகம் தமிழ்நாட்டு மக்களை ஈர்த்து ஆட்சியில் அமர்வதற்கு ''இந்தி எதிர்ப்பை'' ஒரு  ஆயுதமாக பயன்படுத்தியது. அதில் வெற்றியும் கண்டது. ''இந்தி எதிர்ப்பு'' என்ற கோஷம் ஒன்றை மட்டுமே வைத்தே ஆட்சிக்கு வந்த கட்சி தி. மு. க., அன்றைய பிரதமர் நேருவுக்கும் திமுக-வின் இந்த வளர்ச்சி தேவைப்பட்டது. இப்படி திமுக வளர்ந்தால் தான், தமிழகத்தில் வேகமாக வளர்ந்து வரும் கம்யூனிஸ்ட் கட்சியின் வளர்ச்சியை தடுக்கமுடியும் என்பது தான் நேருவின் கணக்கு. எந்த மாநிலத்தில் கம்யூனிஸ்ட் இயக்கம்  வளர்ந்தாலும், பற்றி எரியக்கூடிய அளவிலான  அந்த மாநிலம் சம்பந்தமான ஒரு பிரச்சனையை கொளுத்திப்போட்டு ஊதி பெரிதாக கொழுந்துவிட்டு எரியச்  செய்து விட்டு, மக்களை திசைத் திருப்பி கம்யூனிஸ்ட் இயக்கத்தின் வளர்ச்சியை ஒழித்துக்கட்டுவது தான் அன்றைக்கும், இன்றைக்கு காங்கிரஸ்காரர்களின் வேலை.
             அப்படித் தான் நேருவும் இந்தி எதிர்ப்பு போராட்டத்தை ஊதிவிட்டு கம்யூனிஸ்ட் இயக்கத்தின் வளர்ச்சியை ஒழித்துக்கட்டி திமுக- வை வளரச்செய்தார் என்பதை யாராலும் மறுக்க முடியாது.  
            அந்த வகையில் இந்தி எதிர்ப்பு போராட்டம் என்பது தமிழ்நாட்டு மக்களை  ஈர்த்தது என்றே சொல்லவேண்டும். அதிலும் குறிப்பாக மாணவர்களை வெகுவாக ஈர்த்தது. மாணவர்களெல்லாம் திமுக -வின் பக்கம் சாய்ந்தனர். திமுக -வின் இந்த வளர்ச்சி தான்,  காங்கிரஸ் கட்சியின் தலைவரும், தமிழ்நாட்டின் அன்றைய முதலமைச்சருமான காமராஜர் அவர்களையே ஒரு மாணவன் மூலம் தோற்கடிக்கச் செய்தது.
            இந்தி எதிர்ப்பு போராட்டம் என்பது, தமிழக மக்களின் தாய் மொழியாம் தமிழ் மொழியை அழியாமல் வளர்க்க வேண்டும் என்பது தான். அந்த போராட்டத்தின் உள்நோக்கம் அது தான். ஆனால் நடந்தது என்ன...? இந்தி எதிர்ப்பு கோஷத்தை முன் வைத்து ஆட்சிக்கு வந்த திராவிட முன்னேற்றக் கழகம் மற்றும் அண்ணா தி.மு.கழகம் போன்றக் கட்சிகள் ஆட்சிக்கு வந்ததும், ஹிந்தி மொழியை பள்ளி மற்றும் கல்லூரிகளிலிருந்து விரட்டியடிக்கப்பட்டது. ஆனால், மாறாக தமிழை வளர்ப்பதற்கு பதிலாக ஆங்கிலத்தை தான் வளர்த்தார்கள் என்பது தான் இந்த இரு திராவிடக் கட்சிகளும் செய்த மகத்தான சாதனையாகும்.