வெள்ளி, 19 ஜூன், 2015

அத்வானியின் எச்சரிக்கை விளையாட்டல்ல...!


               மீண்டும் நாட்டில் அவசரநிலை வரலாம் என்று பத்திரிக்கை ஒன்றின் நேர்காணலில் பிரதமர் கனவில் இருந்தவரும், பாரதீய ஜனதாக்கட்சியின் மூத்தத்தலைவர்களில் ஒருவருமான எல்.கே.அத்வானி கூறியிருப்பது என்பது இந்த தேசத்து ஜனநாயகத்திற்கு எதிராக அடிக்கப்பட்ட ''அபாய மணி'' என்பதை புரிந்துகொள்ளவேண்டும்.  சுமார் நாற்பது ஆண்டுகளுக்கு முன்பு அன்றைய பிரதமர் இந்திராகாந்தியால் பிரகடனப்படுத்தப்பட்ட அவசரநிலையால் பாதிக்கப்பட்டு பத்தொன்பது மாதங்கள் சிறை தண்டனை அனுபவித்த அத்வானி, இப்போது மீண்டும் அதே அவசரநிலை வருவதற்கு வாய்ப்பிருக்கிறது என்று கூறியிருப்பது என்பது விளையாட்டல்ல. அதை ஒரு அபாய அறிவிப்பாக எடுத்துக்கொள்ளவேண்டும்.
               நாடாளுமன்றத்தில் அதிக பெரும்பான்மை பெற்று, எதிர்கட்சிகள் எண்ணிக்கையில் நலியுற்று இருக்கும் நிலையில், ஆர்.எஸ்.எஸ்.-இன்  செயல் திட்டங்களை நிறைவேற்ற மோடி தன்னுடைய ராட்சச பலத்தை பயன்படுத்துவார் என்று மோடி பிரதமர் பதவி ஏற்ற பிறகு இடதுசாரிக்கட்சிகளால் சொல்லப்பட்டு வந்தது உண்மையாகி வருகிறது என்றே தோன்றுகிறது.
               அத்வானி பாரதீய ஜனதாக்கட்சிக்குள்ளேயே புறக்கணிக்கப்படுவதால் விரக்தியில் இப்படியெல்லாம் பேசுகிறார் என்றெல்லாம் அக்கட்சியினரால் சொல்லப்பட்டாலும், அவர் விளையாட்டாய் சொன்னதல்ல... அவர் கூற்றில் பொருள் இருக்கிறது என்பதை மக்கள் புரிந்துகொள்ளவேண்டும். பிரதமர் மோடியின் செயல் திட்டங்கள் அனைத்தும், அத்வானி சொன்னது போல அவசரநிலையை - சர்வாதிகாரத்தை நோக்கியே செல்கிறது என்பது கண்கூடாக தெரிகிறது. 

1 கருத்து:

raghupathiv சொன்னது…

வலுக்கும் உட்கட்சி பூசல், ஓரங்கட்ட ப்பட்டு, புறக்கணிக்கப் பட்டதின் ஆதங்கம், தொடர்ந்து வாய்ப்பு கிடைத்த போதெல்லாம், அத்வானி இவ்வாறு பேசுவது புதிதல்ல