வெள்ளி, 28 ஜூன், 2013

இன்றைக்கும் பொருந்தும் அன்றைய எம்.ஜி.ஆர் பாடல்கள்....!

சிலர்ஆசைக்கும் தேவைக்கும்
வாழ்வுக்கும் வசதிக்கும்
ஊரார் கால் பிடிப்பார்...
ஒரு மானம் இல்லை
அதில் ஈனம் இல்லை
அவர் எப்போதும் ஆள் பிடிப்பார்...
 
- எங்க வீட்டு பிள்ளை

 
 
மக்கள் நலம் மக்கள் நலம்
என்றே சொல்லுவார்
தன் மக்கள் நலம்
ஒன்றை தான்
பார்த்துக்கொள்ளுவார்....

- நேற்று இன்று நாளை


இந்த பாடல்களுக்கும் இங்குள்ள படங்களுக்கும் சம்பந்தமில்லைங்க. 
அப்படி நீங்க சம்பந்தப்படுத்தி பாத்தீங்கன்னா நான் பொறுப்பு இல்லைங்க...

புதன், 26 ஜூன், 2013

கொலைவெறி கொண்டு அலையும் அமெரிக்கா ....!


மோடி என்ன சக்திமானா...அல்லது அனுமானா...?






         கடந்த ஒரு வாரக்காலமாகவே  பத்திரிக்கைகளிலும் தொலைக்காட்சிகளிலும் வடஇந்தியாவில் வெள்ளம் பாதித்த மலைப்பகுதிகளில் நடைபெறும் மீட்புப்பணிகளைப் பற்றிய செய்திகள் தான் எல்லா பத்திரிக்கைகளிலும், தொலைக்காட்சிகளிலும் மிகுந்த கவலையுடன் சொல்லப்பட்டு வருகின்றன. மீட்க முடியாமல் எஞ்சியுள்ள பாதிக்கப்பட்ட ஆயிரக்கணக்கான மக்களைப் பற்றிய வேதனைகளும்  ஒரு பக்கம் நாட்டு மக்களின் மனதில் ஓடிக்கொண்டிருக்கும் இந்த பரப்பரப்பான சூழ்நிலையில், கடந்த இரண்டு நாட்களாக பெரும்பாலான பத்திரிகைகளில் நரேந்திர மோடி செய்த ''மானுட சேவை'' பெருமையுடன் மிகவும் பிரபலமாக பேசப்பட்டு வருகிறது.
        கடந்த ஒரு வாரக்காலமாகவே இமயமலையில் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கியுள்ள பல்லாயிரக்கணக்கான மக்களை காப்பாற்றுவதில் இந்திய இராணுவப்படையினர்  திக்குமுக்காடி வருகின்றனர். பல்வேறு சிரமங்களுக்கு மத்தியில் பாராட்டத்தக்க வகையில் கடுமையாக பணியாற்றி வருகின்றனர். போர்க்கால அடிப்படையில் இவ்வளவு வேகமாக மக்களை காப்பாற்றிக் கொண்டிருக்கும் இராணுவ வீரர்களே இன்னும் பல்லாயிரக்கணக்கான மக்களை காப்பாற்றுவதற்கு திணறிக்கொண்டிருக்கும் வேளையில் குஜராத் முதலமைச்சரும், தன்னைத் தானே பிரதமர் வேட்பாளர் என்று அறிவித்துக்கொண்டு பல்வேறு ''ஸ்டண்ட்களை'' கூசாமல் செய்து வருபவருமான நரேந்திர மோடி அதிரடியாக ஹெலிகாப்டரில் பறந்து பாதிக்கப்பட்ட பகுதிக்கு சென்று, தப்பிப்பிழைக்க துடித்துக்கொண்டிருந்த பல்வேறு மாநில மக்களில் 15000 குஜராத் மாநில மக்களை மட்டும் ''பொறுக்கி'' பார்த்து காப்பாற்றி அழைத்து வந்திருக்கிறார் என்பது தான் பெரும்பாலான மோடி ஆதரவு பத்திரிகைகளில் மோடியைப் பற்றி மிகவும் பெருமையாக பேசப்படும் இன்றைய தலைப்புச்செய்தியாகும். இந்த செய்திக்காக  மோடி எவ்வளவு கொடுத்தார் என்பது வேறு விஷயம். இந்திய பிரதமராக ஆகவேண்டும் என்று ஆசைப்படும் மோடி தன் மாநில மக்கள் வெறும் 15000 பேரை மட்டும் காப்பாற்றியதற்கு பதிலாக பாதிக்கப்பட்ட ஒட்டுமொத்த இந்திய மக்கள் அனைவரையும் அல்லவா காப்பாற்றியிருக்க வேண்டும்.

         என்னாங்கடா டேய்... கேக்கறவன் கேனையனா இருந்தா, எருமை மாடு ஏரோப்ளேன் ஓட்டுதுன்னு கூட சொல்லுவீங்க போலிருக்கே. ஸ்ரீமான் நரேந்திர மோடி என்ன சக்திமானா... அல்லது அனுமானா....?

என் பாதையின் குறுக்கே வந்த ஒரு குள்ள நரி மண்ணை கவ்வியது...!

ஒரு கதை உருவாகிறது...

ஞாயிறு, 23 ஜூன், 2013

ரூபாய் மதிப்பு வீழ்ச்சியும் மத்திய அரசின் கையாலாகாத்தனமும்....!

        
                                                                                                                                                   
கட்டுரையாளர் : பேராசிரியர் வெங்கடேஷ் ஆத்ரேயா 

         கடந்த சில நாட்களாக அமெரிக்க டாலருக்கு நிகராக இந்திய நாணயமான ரூபாயின் தொடரும் மதிப்பு வீழ்ச்சி ஊடகங்களில் பரபரப்பாக விவாதிக்கப்படுகிறது. நடப்பது என்ன? ஏன் நடக்கிறது? செய்ய வேண்டியது என்ன? திவால் கொள்கைகள் 1991 - இல் தாராளமயக்கொள்கைகள் சிறுபான்மை காங்கிரஸ் அரசால் தீவிரமாக அமல் செய்யப்பட்ட பொழுது அன்று சந்தித்துக் கொண்டிருந்த பெரும் அன்னியச் செலாவணி பற்றாக்குறையையும் அரசின் வரவு - செலவு பற்றாக்குறையையும் சரி செய்ய தாராளமய, தனியார்மய, உலகமயக் கொள்கைகளே வழி என்றார்கள் ஆட்சியாளர்கள். ஆனால், இக்கொள்கைகள் 22 ஆண்டுகள் தீவிரமாக அமல் செய்யப்பட்ட பின்பு இன்று இதே இரண்டு பிரச்சினைகள் மிகவும் கடுமையாகிவிட்டன என்று ஆளும் அரசின் கனவான்கள் ஓலம் இடுவதை நாம் காண்கிறோம்.
          இக்கொள்கைகள் திவாலாகிவிட்டன என்பதற்கான இத்தகைய ஒப்புதல் வாக்குமூலத்தைக் கொடுத்துக்கொண்டே, இதே கொள்கைகளை மேலும் தீவிரமாக கடைப்பிடிப்பதே பிரச்சினைக்குத் தீர்வு என்றும் கூறும் அரசை கையாலாகாத அரசு என்று தானே சொல்ல முடியும்? 2012-13 நிதி ஆண்டில் நமது சரக்கு ஏற்றுமதியை விட இறக்குமதி மிகவும் அதிகமாக இருந்தது. இது தான் 1991 - இலிருந்து ஒவ்வொரு ஆண்டும் நடக்கிறது. ஆனால் இந்த இடைவெளி மிகவும் அதிகமாக, நமது தேச உற்பத்தி மதிப்பில் - ஜீ.டீ.பீ.யில் - 10.8 சதவீதம் ஆகிவிட்டது இந்த ஆண்டில் தான். மென்பொருள் உள்ளிட்ட சேவைதுறை ஏற்றுமதி மூலமும் வெளிநாடுகளில் இருந்து நமது உழைப்பாளி மக்கள் தமது குடும்பங்களுக்கு அனுப்பும் பணத்தினாலும் இந்த இடைவெளி ஓரளவு குறைக்கப்பட்டு தேச உற்பத்தியில்  4.3 சதவீதம் என்ற அளவில் அன்னியச் செலாவணி நடப்பு கணக்கு பற்றாக்குறை உள்ளது. இதை ஈடு கட்ட வெளிநாட்டு மூலதனம் இந்தியாவிற்கு வருவது தான் ஒரே வழி என்று கருதும் அரசு, அன்னிய நிறுவன முதலீட்டாளர்களுக்கும் பொதுவாக அன்னிய மூலதனத்திற்கும் சலுகை மேல் சலுகை வழங்கி வருகிறது. சரிந்துவரும் ரூபாய் மதிப்பு ஆனால் நிலைமை சரியாகவில்லை. தொடர்ந்து அன்னிய மூலதனம் இங்கு வர தயங்குகிறது. ஏற்கெனவே உள்ள மூலதனமும் வெளியேறும் நிகழ்வுகள் வலுப்பெற்றுள்ளன. இதற்கிடையில் அமெரிக்க மத்திய ரிசர்வ் வங்கி தலைவர் பெர்னாங்கே அமெரிக்கா பணப்புழக்கத்தை விரைவில் கட்டுப்படுத்தும் என்று கூறியுள்ளது அன்னிய நிதி முதலீட்டாளர்களை அமெரிக்கா நோக்கி இழுக்கும் என்ற அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
            எனவே இந்தியா உள்ளிட்ட பல வளரும் நாடுகளில் இருந்து அன்னிய நிதி மூலதனம் வெளியேறும் என்ற நிலை உருவாகியுள்ளது. ஏற்கனவே இந்தியாவின் நடப்பு பற்றாக்குறை அதிகரித்து வருவது இந்திய ரூபாய் மதிப்பு சரியும் என்ற அனுமானிப்பை நிதி முதலீட்டாளர்கள் மத்தியில் ஏற்படுத்தியுள்ளது. எனவே அதனால் ஏற்படும் அன்னியச் செலாவணி இழப்பைத் தவிர்ப்பதற்காக அன்னிய நிதி மூலதனம் இந்தியாவை விட்டு வெளியேறி வருகிறது. பெர்னாங்கே அறிவிப்புக்குப் பிறகு இதன் வேகம் கூடியுள்ளது. இந்திய பொருளாதார வளர்ச்சி விகிதம் குறைந்துள்ளது. மேலைநாடுகளில் தொடரும் பொருளாதார மந்த நிலையாலும் வேறு காரணங்களாலும் நமது சரக்கு ஏற்றுமதியும் சரிந்துள்ளது. மறுபுறம் தொடர்ந்து பின்பற்றப்பட்டுவரும் தாராளமயக் கொள்கைகளால் இறக்குமதி அவ்வாறு சரியவில்லை. டாலருக்கு எதிரான ரூபாய் மதிப்பு வீழ்ச்சி இறக்குமதி சுமையை அதிகப்படுத்தியுள்ளது.
         உதாரணத்திற்கு, ஒரு டாலர் 45 ரூபாய் என்ற நிலையில் இருந்து 60 ரூபாய் என்று உயர்ந்தால், இறக்குமதி செலவு கணிசமாகக்கூடும் அல்லவா? அன்னிய மூலதனம் வெளியேறுவதால் அன்னிய செலாவணி பற்றாக்குறை மேலும் கூடும் என்பதால் ரூபாய் தொடர்ந்து சரியும் என்ற அச்சமும் உள்ளது.கடும் விளைவுகள்மேற்கூறிய போக்குகள் மக்களை கடுமையாக பாதிக்கின்றன. ரூபாய் மதிப்பு வீழ்ச்சி இறக்குமதியாகும் பொருட்களின் விலைகளை ரூபாய் கணக்கில் கடுமையாக உயர்த்துகிறது. பெட்ரோலியம் கச்சா எண்ணை விலை உயரும் பொழுது எல்லாவிலைகளும் ஏறுகின்றன. தாராளமயக்கொள்கைகளின் பகுதியாக மைய அரசு மானியங்களை குறைத்து வருவதால் விலைவாசி உயர்வு மேலும் கடுமையாகிறது. இதுவே ரசாயன உரம் உள்ளிட்ட வேறுபல பொருட்களுக்கும் பொருந்தும். அன்னியச் செலாவணி பிரச்சனையை எதிர்கொள்ள எப்படியாவது அன்னிய நிதி மூலதனத்தை பலவகையான ஊக்குவிப்புகள் அளித்து, கெஞ்சிக் கூத்தாடி இந்தியாவிற்கு ஈர்க்க வேண்டும் என்ற அரசு கொள்கையால் பிரச்சினை மேலும் தீவிரம் ஆகிறது. வரும் வெளிநாட்டு நிதி மூலதனம் வெளியே சென்றுவிடாமல் பார்த்துக்கொள்ள அரசு நிதி பற்றாக்குறையை கட்டுப்படுத்தவேண்டும் என்கிறது. அதை செல்வந்தர்கள், கொள்ளை லாபம் ஈட்டும் பெரும் பகாசுரக் கம்பெனிகள் மீது வரி போட்டோ, அவர்கள் தர வேண்டிய வரியைக் கறாறாக வசூல் செய்தோ சாதிப்பதற்குப் பதிலாக மக்களுக்கு அவசியமான மானியங்களை வெட்டுவதன் மூலமே செய்ய முயற்சிக்கிறது அரசு. இது விலைவாசிகள் மேலும் உயர வழி செய்கிறது
.        ஏற்கெனவே கடுமையான உணவுப் பொருள் விலை உயர்வை சமாளிக்க முடியாமல் தவித்து வரும் மக்களுக்கு இது வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுகிறது. தீர்வு என்ன? எப்படியாவது, அன்னிய நிதி மூலதனத்தின் காலில் விழுந்தாவது அவற்றை இந்தியாவிற்குள் ஈர்க்க வேண்டும் என்ற அரசின் கொள்கை பயன் அளிக்காது. பிரச்சினை தீவிரம் அடைந்துள்ளதற்கு முக்கிய காரணம் தாராளமய தனியார்மய உலகமயக் கொள்கைகள் தான். கடந்த இருபது ஆண்டுகளாக இறக்குமதி கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டு, சுங்க வரிகள் குறைக்கப்பட்டு, இறக்குமதி தாறுமாறாக அதிகரித்துள்ளது. தனியார்மயம் என்ற பெயரில் பொதுத்துறை நிறுவனங்கள் சீரழிக்கப்பட்டு, பொதுத்துறை முதலீடுகள் வெட்டப்பட்டு, உரம், பெட்ரோலியம் எண்ணய் உள்ளிட்ட பல அத்தியாவசியப் பொருட்களின் நுகர்வில் பெரும் பகுதி இறக்குமதி மூலம் பெறப்படும் நிலை உருவாகியுள்ளது. பன்னாட்டுச்சந்தையில் நாம் இறக்குமதி செய்யும் பொருட்களின் விலைகள் தாறுமாறாக ஏறுகின்றன. நிதித்துறை உலகமயமாக்கல் கொள்கைகள் நமது தனியார் கம்பெனிகளை வெளிநாடுகளில் சகட்டு மேனிக்கு கடன் வாங்க அனுமதித்துள்ளது அன்னியச்செலாவணி பிரச்சனையை தீவிரப்படுத்தியுள்ளது. ஏற்றுமதி கொள்கைகள் நமது சிறு மற்றும் நடுத்தர ஏற்றுமதியாளர்களை பாதுகாக்கவில்லை. போதுமான தொழில்நுட்ப முன்னேற்றத்திற்கான உதவிகள் செய்யப்படவில்லை. நமது அண்டை நாடான சீனம் ஏற்றுமதி அதிகரிப்பில் மகத்தான சாதனைகளை செய்துள்ளது.
        நிதித்துறை தாராளமயமாக்கல் நடவடிக்கைகளை பெரிதும் கட்டுப்படுத்தியுள்ளது. இன்று சீன நாணயம் டாலருக்கு எதிராக வீழ்ச்சி அடையவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. அன்னிய நிதி மூலதனங்கள் நாட்டை விட்டு வெளியேறினால் பங்குச்சந்தை வீழ்ச்சி அடையும் என்ற நிலை, கட்டுப்பாடுகள் இன்றி அன்னிய நிதி மூலதனம் நாட்டுக்குள்ளே வரலாம், வெளியேறலாம் என்பதில் இருந்து வருகிறது. அன்னியச்செலாவணி மூலதன கணக்கில் வலுவான கட்டுப்பாடுகள் தேவை. அப்பொழுது தான் அன்னிய மூலதனங்கள் வெளியேறி விடுமோ என்ற அச்சத்தில் கொள்கைகள் உருவாக்கப்படுவதை தவிர்க்க முடியும். சுருங்கச் சொன்னால், உள்நாட்டு உற்பத்தி சக்திகளை வளர்ப்பதும் உள்நாட்டு சந்தையை மையப்படுத்திய வளர்ச்சிப்பாதையில் செல்வதும், ஏற்றுமதியை இயன்ற அளவிற்கு அதிகரிப்பதும், இறக்குமதியை கட்டுப்படுத்துவதும், அன்னிய நிதி மூலதனத்தை தீவிர நெறிமுறைகளுக்கு உள்ளாக்குவதும், தற்சார்பை ஊக்குவிப்பதும் தான் சரியான பாதை.

நன்றி : 
 

சனி, 22 ஜூன், 2013

ராஜீவ் - ஜெயவர்த்தனே உடன்பாட்டைச் செயல்படுத்த இந்தியா தலையிட வேண்டும்....!

 பிரதமருக்கு சீத்தாராம் யெச்சூரி எம்.பி., கடிதம்                       
         இந்திய - இலங்கை ஒப்பந்தத்தைச் செயல்படுத்த இந்திய அரசு முன்வரவேண்டும் என்று பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியலமைப்புக்குழு உறுப்பினரும், நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினருமான சீத்தாராம் யெச்சூரி கடிதம் எழுதியுள்ளார்.அவர் எழுதியுள்ள கடிதத்தில் கூறியுள்ளதாவது:
          ஊடகங்களில் வெளியிட்டிருப்பது போல் இலங்கையின் வடக்கு மாநில கவுன்சில் தேர்தலுக்கு முன் இலங்கை அரசியல் சட்டத்தின் 13-வது திருத்தத்தின் சில முக்கிய பகுதிகள் திட்டமிட்டே நீர்த்துப் போகும் வகையில் சில ஆலோசனைகளை இலங்கை அரசு முன் வைத்திருப்பதைக் கண்டு உங்கள் கவலையினை வெளியிட்டிருப்பது முற்றிலும் சரியானதே. 13-வது திருத்தத்தையும் அதற்கு மேலும் சென்று ஒரு அரசியல் தீர்வினை கொடுப்பதாக இந்திய அரசிடமும் சர்வதேச சமூகத்திடமும் இலங்கை அரசு கொடுத்த வாக்குறுதிகள் பற்றிய சந்தேகத்தினை தற்போது இலங்கை அரசால் முன்வைக்கப்படும் மாற்றங்கள் எழுப்புகின்றன.
           போர்ப் படிப்பினைகள் மற்றும் நல்லிணக்கக்குழு தன்னுடைய பரிந்துரையாக வைத்திருந்த மாநிலங்களுக்கு அதிகாரப் பகிர்வினை அளிக்கும் அரசியல் தீர்வு என்ற நோக்கத்துக்கு தற்போது இலங்கை அரசு முன்வைக்கும் மாற்றங்கள் எந்த வகையிலும் பொருந்துவதாக இல்லை. இலங்கையில் வாழும் தமிழ் மக்களின் நல்வாழ்வு குறித்தும் அங்கு வாழும் தமிழ் சமூகம் இலங்கையில் கண்ணியமான வாழ்வும், சம உரிமையும் பெற்று குடிமக்களாக வாழ வேண்டும் என்பதிலும் இந்தியாவில் ஆழ்ந்த அக்கறை உள்ளது. நீங்கள் தெரிவித்துள்ள கருத்தின் வழியே நின்று, எதிர்காலத்தில் சமத்துவம், நீதி, சுயமரியாதையுடன் இலங்கையில் உள்ள தமிழ் சமூகம் வாழ்வதற்கான உறுதிப்பாட்டினைப் பெற இந்திய அரசு தனது அரசியல் உறவினை செயலூக்கத்தோடு பயன்படுத்த வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன். 13-வது திருத்தம் என்பது வரலாற்று ரீதியாக ஏற்கனவே உருவான ராஜீவ்-ஜெயவர்த்தனே ஒப்பந்தத்தின் தொடர்ச்சியாக உருவானது என்பது அனைவரும் அறிந்த ஒன்று. இறையாண்மை மிக்க இந்த இரு நாடுகளும் அவர்களுக்கிடையேயான நல்லுறவை வலுப்படுத்திக்கொண்டே, அந்த ஒப்பந்தத்தை செயல்படுத்துவதற்கான ஊக்கமுடன் இந்திய அரசு செயல்படவேண்டும் என எதிர்பார்க்கிறோம்.
இவ்வாறு கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.
--------------------------------------------------------------------------------------------


Sri Lankan Tamil issue - Yechury's Letter to PM

Dear Dr. Manmohan Singhji,

It was a relief to hear your comments expressing dismay, as reported by the media, at the suggestion that the Government of Sri Lanka planned to dilute certain key provisions of the 13th Amendment to the Sri Lankan Constitution ahead of elections to the Northern Provincial Council.

It was noted that the proposed changes raised doubts about the commitments made by the Sri Lankan Government to India and the international community, including the United Nations, on a political settlement in Sri Lanka that would go beyond the 13th Amendment. The changes would also be incompatible with the recommendation of the Lessons Learnt and Reconciliation Commission (LLRC), set up by the Government of Sri Lanka, calling for a political settlement based on the devolution of power to the provinces.

There is deep concern in India about the welfare and well being of the Tamil community in Sri Lanka and hoping that the Sri Lankan Tamil community would lead a life of dignity, as equal citizens, in Sri Lanka.

I would urge you to ensure that the Government of India plays a proactive diplomatic role in discharging its commitment for a future for the Sri Lankan Tamil community marked by equality, justice and self-respect. Needless to add, this 13th Amendment was the consequence of the historic Rajiv-Jayawardene Accord. It is, thus, expected that India plays a role in the implementation of the provisions of the Accord, while strengthening the best of relations between our two sovereign countries.

With regards,

Yours sincerely

Sd/-

(Sitaram Yechury)
 

நரேந்திர மோடியும், அமைதிப்படை அமாவாசையும்.....!

        



            அண்மைக்காலமாகவே பிரதமர் பதவிக்கு அலையற நரேந்திர மோடியை பார்க்கும் போது சத்யராஜ் - மணிவண்ணன் நடித்த அமைதிப்படை - 1 -இல் அமாவாசையாக நடிக்கும் சத்யராஜ் தான் என் ஞாபகத்திற்கு வருகிறது. அந்த படத்தில் அமாவாசை சத்யராஜ் தேங்காய் பொறுக்கும் ஒரு சாதாரண தெருப் பொறுக்கியாக இருந்து ஒரு கட்சித்தலைவராக இருக்கும் மணிவண்ணனிடம் சேர்ந்து மணிவண்ணனையே மிஞ்சி அவருக்கு கிடைக்க வேண்டிய எம்.எல்.ஏ பதவியை பறித்துக்கொள்வது வரை அனைத்து காட்சிகளும் நரேந்திர மோடியுடன் ஒத்துப்போகிறது. அந்தப் படத்தில் சத்யராஜ் காட்டுகிற அப்பாவித்தனம், தன்னை ஏற்றிவிட்ட தன்னுடைய தலைவனையே ஓரங்கட்டுவது, கடைசியில் தான் ஒரு தலைவனாய் மாறிவிடுவது போன்ற எல்லாக் காட்சிகளும் தற்சமயம் நரேந்திர மோடிக்கு அப்படியே பொருந்தும். மோடி தானாகவே தன்னை பிரதமர்   வேட்பாளராக அறிவித்து கொண்டு வலம் வர ஆரம்பித்ததில் இருந்து, அண்மையில் கோவாவில் நடைபெற்ற பாரதீய ஜனதா கட்சியின் செயற்குழுக் கூட்டத்தில் கலந்து கொண்டு பி.ஜே.பி.-யின் தேர்தல் குழுவின் தலைவாரனது வரை மோடியின் முகத்திலும் நடிப்பிலும் அப்படியே அமைதிப்படை அமாவாசையை தான் நினைவுப்படுத்துகிறது. அந்த கோவா செயற்குழுக் கூட்டத்தில் இந்த பூனையும் பால் குடிக்குமா என்பது போல அடக்கம் ஒடுக்கமா ஒரு அப்பாவி போல உட்கார்ந்துகொண்டு இருந்தார். அது மட்டுமல்ல வரும் 2014 - பாராளுமன்றத்தேர்தலுக்கான தேர்தல் குழுத்தலைவராக  கட்சியின் தலைவர் ராஜ்நாத் சிங் இவர் பெயரை அறிவிக்கும் போது, செயற்கையான சிரிப்பையும், அப்பாவித்தனமான முகத்தையும் கலவையாக்கி  வெளிப்படுத்தி அமைதிப்படை சத்யராஜ் மாதிரி தலைக்கு மேலே கையை உயர்த்தி சுற்றி வந்து வணக்கம் சொன்னாரு பாருங்க... அடேங்கப்பா... என்னா நடிப்புங்கடாங்கப்பா... கொய்யால... தாங்கமுடியல... அந்த காட்சியை பார்க்கும் போது ரோட்டில் தேங்காய் பொறுக்கித் தின்றுகொண்டு, போக்கிரித்தனமாய் திரிந்து கொண்டிருந்த அமாவாசை என்ற சத்யராஜ் வெளிப்படுத்திய அப்பாவித்தனம் தான் நம் நினைவிற்கு வருகிறது. அதுமட்டுமல்ல தன்னுடைய மூத்த தலைவர் அத்வானியையே ஓரங்கட்டிவிட்டு முன்னேறுவதைப் பார்த்தால் அமைதிப்படை அமாவாசைக்கும், நரேந்திர மோடிக்கும் வித்தியாசம் தெரியவில்லை.

வியாழன், 20 ஜூன், 2013

மாசற்ற மாமணிகளாய் மார்க்சிஸ்ட்டுகள்...!

  
      நாடு சுதந்திரம் அடைந்தது முதல் இன்றுவரை சந்தித்துவரும் ஊழல் நடவடிக்கைகள் பட்டியல் போட்டு முடிக்க முடியாது. 1948ம் ஆண்டிலிருந்தே ஊழல் புகார்கள் எழுந்து விட்டன. முதல் புகாரே இராணுவத்திற்கு ஜீப் வாங்கியதில் ஊழல் நடைபெற்றதாக கூறப்பட்டது. அதனை தொடர்ந்து, காங்கிரஸ் ஆட்சியில் நடை பெற்ற, பிரச்சித்தமான, சில ஊழல்கள் இதோ....
        முந்திரா ஊழல் (1957), 3 கோடி ரூபாய்கைரோன் வழக்கு (1964), நகர்வாலா வழக்கு (1971), 60 இலட்சம்தல்மோகன்ராவ் வழக்கு (1974), அந்துலே ஊழல் (1982), சிமென்ட் ஊழல்சூரத் லாட்டரி (1982), 5.4கோடிவெஸ்ட்லேன்ட் ஹெலிகாப்டர்போபர்ஸ் வழக்கு (1987), ஹவாலா வழக்கு (1995), உர இறக்குமதி ஊழல் (1995).........இப்படியாக பட்டியல் நீண்டுகொண்டே போகும். காங்கிரஸ் கட்சியின் தலைவர்களான இந்திரா காந்தி, ராஜீவ்காந்தி, நரசிம்மராவ், மன்மோகன் சிங் , அர்ஜூன் சிங், அருண்நேரு, பூட்டாசிங், பல்ராம் ஜாக்கர், சுக்ராம், சிதம்பரம் என எண்ணற்ற தலைவர்கள் மீது குற்றம் சுமத்தப்பட்டு சிலர் மீது வழக்குகளும் நடைபெற்றன.
      ஐக்கிய முற்போக்கு முன்னணி - UPA -II அரசின் சாதனையாக நடைபெற்ற மெகா ஊழல்கள் காமன்வெல்த் விளையாட்டு போட்டி - சுரேஷ் கல்மாடி (காங்கிரஸ்) ஊழல் செய்து சிறையில் அடைக்கப்பட்டார். 2-ஜி ஸ்பெக்ட்ரம் ஊழலில் ஆ.ராசா (திமுக) கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
         நிலக்கரி சுரங்க ஒதுக்கீட்டில் முறைகேடு நடைபெற்றது தொடர்பாக நடைபெற்று வரும் விசாரணையில் குறுக்கிட்டதற்காக சட்டத்துறை அமைச்சர், அஸ்வின் குமார் (காங்கிரஸ்) பதவி விலகல். ரயில்வேயில் பணி நியமனம் செய்ய தனது வீட்டில், மருமகன் மூலம் பேரம் பேசி கோடிக்கணக்கில் லஞ்சம் வாங்கியதாக குற்றம்சாட்டப்பட்டு இரயில்வே அமைச்சர் பவன்குமார் பன்சால் (காங்கிரஸ்) பதவி விலகல். கோதாவரி கிருஷ்ணா நதிப்படுகையில் எரிவாயு எடுப்பதற்கான அனுமதி வழங்குவதில்கோடிக்கான ஊழல். கார்கில்போரில் மரணமடைந்த தியாகிகளுக்கு கட்டப்பட்ட வீடுகள் ஒதுக்கியதில் ஊழல். இத்தாலி நிறுவனம் ஒன்றில் ஹெலிகாப்டர் வாங்கியதில் லஞ்சம் பெற்றுள்ளதாக குற்றச்சாட்டு. வால்மார்ட் நிறுவனம் இந்தியாவில் நுழைவதற்கு நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு தரப்பட்ட லஞ்சம். எல்லாவற்றிற்கும் மேலாக பிரதமர் மன்மோகன் சிங் மீதே ஊழல் புகார்.
        நிலக்கரி சுரங்க ஓதுக்கீடு 2004 முதல் 2009ம் ஆண்டு உட்பட்ட காலத்தில் நடந்துள்ளது. இந்த காலகட்டத்தில் அந்த துறை மன்மோகன் சிங்   பொறுப்பில் தான் இருந்தது. ஏல முறையில் ஒதுக்கீடு செய்யாத காரணத்தினால் அரசிற்கு ஒரு லட்சத்து 86 ஆயிரம் கோடி இழப்பு ஏற்பட்டிருப்பதாக மத்திய கணக்கு தணிக்கை ஆணையம் தெரிவித்துள்ளது.
         சிபிஐ இது குறித்து விசாரித்து வருகிறது. சிபிஐ நடவடிக்கையில் பிரதமர் அலுவலகமும் சட்டத் துறையும் தலையிட்டதை உச்ச நீதிமன்றம் கண்டித்துள்ளது. இந்திய நாட்டுமக்கள் இனி காங்கிரஸை நம்ப முடியாது என்ற முடிவிற்கு வந்துவிட்டனர். இதை தெரிந்துகொண்டுதான் காங்கிரசார், இன்று மத்தியில் மைனாரிட்டி அரசாக இருந்தாலும், எதிலும் ஊழல் எல்லாவற்றிலும் ஊழல் என மூழ்கிவிட்டனர். மத்திய அமைச்சர்கள் ஊழலில் சிக்கி பதவி விலகுவதும், மத்திய அமைச்சர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்படுவதும், ஜாமீனில் வெளியே வருவதும் இன்று அன்றாட நிகழ்ச்சியாக மாறிவிட்டது.
         காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டணி கட்சிகளுக்கு நாங்கள் சளைத்தவர்கள் இல்லை என பாரதிய ஜனதா கட்சியும் அதன் கூட்டணி கட்சிகளும் ஊழலில் சாதனை புரிந்து வருகின்றனர்.
ஊழலுக்கு பெயர் பெற்ற பிஜேபி கார்கில் போர் நடைபெற்ற நேரத்தில் சவப் பெட்டிகள் வாங்கியதில் கூட ஊழல் புரிந்து சாதனைப் படைத்தவர்கள் பிஜேபியினர். பிஜேபியின் முன்னாள் அகில இந்திய தலைவர், பங்காரு இலட்சுமணன், டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் நான்கு ஆண்டுகள் சிறைத்தண்டனையும், ஒரு லட்சம் ரூபாய் அபராதமும் வழங்கப்பட்டு தற்போது ஜாமீனில் உள்ளார். பிஜேபியின் மற்றும் ஒரு முன்னாள் தலைவர் நிதின் கட்கரிக்கு சொந்தமான புர்த்தி என்ற மின்சாரம் மற்றும் சர்க்கரை நிறுவனம் 7 கோடிக்கு மேல் வரி ஏய்ப்பு செய்திருப்பதாக குற்றம் சுமத்தப்பட்டு வருமான வரித்துறையினரால் அவர் விசாரிக்கப்பட்டு வருகிறார். இதன் காரணமாகவே அவரது கட்சி தலைமை பதவி பறிபோனது.
         கர்நாடகத்தின் முன்னாள் முதல்வர், எடியூரப்பா (பிஜேபியிலிருந்து தற்போது விலகி தனி கட்சி துவக்கியுள்ளார்) நில முறைகேடு மற்றும் சட்ட விரோத சுரங்க பணிகளில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்டு நீதிமன்ற படிகள் ஏறி வருகின்றார். பீகார் மாநிலத்தில் ரூ.950 கோடி மாட்டுத் தீவன ஊழல் வழக்கின் முக்கிய குற்றவாளிகளாக முன்னாள் முதலமைச்சர்கள் லாலு பிரசாத் யாதவ் மற்றும் ஜெகநாத் மிஸ்ரா ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளனர்.
       இதில் மொத்தம் உள்ள 53 வழக்குகளில் 44வது வழக்கில் தற்போது தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இதில் முன்னாள் எம்எல்ஏ துரவ் பகத் மற்றும் முன்னாள் எம்.பி. ஆர்.கே.ராணா ஆகியோருக்கு 5 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ.2 லட்சம் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. ராணா ராஷ்ட்ரீய ஜனதா தளம் கட்சியையும், துரவ் பிஜேபி கட்சியையும் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. ஹரியானா முன்னாள் முதல்வர் ஓம் பிரகாஷ் சவுதாலா மற்றும் அவரின் மகள் அஜய்க்கு 10 ஆண்டுகால சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. கடந்த 199 மற்றும் 2000 ஆண்டுகளில் 3,206 ஆசிரியர்களை நியமனம் செய்ய போலி ஆவணங்களைத் தயாரித்தது, சுமார் 150 கோடி ரூபாய் அள வுக்கு லஞ்சம் பெற்று பணி நியமனம் செய்தது ஆகிய குற்றச்சாட்டுகள் இவர்கள் மீது சுமத்தப்பட்டது.
                         இந்திய தேசிய லோக்தள் என்ற கட்சியின் தலைவரான ஓம் பிரகாஷ் சவுதாலா முன்னாள் துணைப் பிரதமர் தேவிலாலின் மகனாவார். இப்படி சுதந்திர இந்தியாவை கடந்த 65 ஆண்டுகளில் ஆண்டவர்கள் கொள்ளையடித்து வெளிநாட்டில் கொண்டுபோய் குவித்து வைத்துள்ள கருப்பு பணத்தின் மதிப்பு சுமார் 400 லட்சம் கோடி என மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது. இந்திய நாட்டின் நாடாளுமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ள தகவலின்படி தற்போது சுமார் 75 லட்சம் கோடி அளவிற்கான கருப்பும் பணம் கண்டறியப்பட்டுள்ளது. 200 ஆண்டுகாலம் இந்தியாவை அடிமைப்படுத்தி வைத்து சுரண்டிய ஏகாதிபத்திய சக்திகளை விஞ்சும் அளவிற்கு இந்திய அரசியல்வாதிகளின் கைவரிசை ஓங்கி விட்டது. இன்றைய உலகமய கொள்கைகளின் காரணமாக ஊழல் தலைவிரித்தாடி வருகின்றது.
          ஊழலின் உச்சக்கட்டத்தை இந்தியா இன்று சந்தித்துக் கொண்டுள்ளது. இதற்கு மத்தியில்தான் மேற்குவங்கத்திலும், கேரளாவிலும், திரிபுராவிலும் பல ஆண்டுகள் ஆட்சியில் இருந்து மார்க்சிஸ்ட்டுகள் ஊழல்களுக்கு அப்பாற்பட்டு நின்று தூய்மையான ஆட்சியைத் தந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
         மார்க்சிஸ்ட்டுகள் மாசற்றவர்கள் என நிருபித்துள்ளனர். மாசற்ற மாமணிகளாய் மார்க்சிஸ்ட்டுகள். மார்க்சிஸ்ட் கட்சியின் மகத்தான தலைவர்களான இ.எம்.எஸ்.நம்பூதிரிபாட், இ.கே. நாயனார், வி.எஸ்.அச்சுதானந்தன், ஜோதி பாசு, புத்ததேவ், நிருபன் சக்கரவர்த்தி, தசரத் தேவ், மாணிக்சர்க்கார் என 8 முதலமைச்சர்கள்  இந்த 65 ஆண்டுகாலத்தில் இந்தியாவின் மூன்று மாநிலங்களில் முதல்வர்களாக இருந்துள்ளனர். இவர்கள் தூய்மையானவர்கள் ஊழலுக்கு அப்பாற்பட்டவர்கள் மட்டுமல்ல திறம்பட நிர்வாகித்து மாநிலத்தின் நலன்களை பாதுகாத்தவர்கள். மார்க்சிஸ்ட் கட்சியின் மகத்தான தலைவர் இ.எம்.எஸ் அவர்கள்; 5-4-1957 முதல் 31-07-1959; வரையிலும், 6-03-1967 முதல் 1-11-1969 வரையிலும் 2 முறை கேரளத்தின் முதலமைச்சராக   இருந்திருக்கிறார்.
       இந்தியாவிலேயே முதன் முதலில் நிலச்சீர்திருத்தத்தை நிறைவேற்றி ஒவ்வொரு குடும்பத்திற்கும் 10 செண்ட் நிலத்தை வழங்கியவர். தனக்கு சொந்தமான சொத்துக்களை கட்சிக்கு கொடுத்தவர் இ.எம்..எஸ். அவரை தொடர்ந்து தோழர் இ.கே.நாயனார், கேரளத்தின் முதலமைச்சராக 25-01-1980 முதல் 20-10-1981 வரையிலும், 26-03-1987 முதல் 17-06-1991 வரையிலும், 20-05-1996 முதல் 13-05-2001 வரையிலும் மூன்று முறை இருந்தார். கேரளத்தை முழுமையான கல்வியறிவு கொண்ட மாநிலமாக மாற்றி காட்டியவர். தோழர் வி.எஸ்.அச்சுதானந்தன் 18-05-2006 முதல் 14-05-2011 வரை முதலமைச்சராக இருந்தார்.  தோழர் ஜோதிபாசு மேற்கு வங்கத்தில் 21-06-1977 முதல் 6-11-2000 வரை 23 ஆண்டுகளுக்கு மேலாகத் தொடர்ந்து முதலமைச்சராக இருந்தார். இருண்டு கிடந்த மேற்குவங்கத்தில் மின்சார உற்பத்தியை பெருக்கி மின் மிகை மாநிலமாக மாற்றியவர். கேரளத்தை தொடர்ந்து நிலச்சீர்திருத்தத்தை அமல்படுத்தி வெற்றி கண்டவர்.
        தோழர் புத்ததேவ் 6-11-2000 முதல் 13-05-2011 வரை 2 முறை மேற்குவங்கத்தின் முதல்வராக பொறுப்பேற்றார். திரிபுராவில் தோழர் நிருபன் சக்கரவர்த்தி 5-01-1978 முதல் 5-02-1988 வரை 2 முறை முதலமைச்சராக இருந்தார். முதலமைச்சர் பதவியிலிருந்து வெளியேறியபோது இரண்டு தகர பெட்டிகளுடன் மட்டும் சென்றவர் என்று ஊடகங்கள் வியந்து பாராட்டிய பெருமைக்குரியவர்.தோழர் தசரத் தேப் 10-04-1993 முதல் 11-03-1998 வரை திரிபுராவின் முதலமைச்சராக இருந்தார். தோழர் மாணிக் சர்க்கார் 11-03-1998 முதல் இன்று வரை 4 வது முறையாக திரிபுரா வின் முதலமைச்சராக இருந்து வருகிறார்.
        வடகிழக்கு மாநிலங்களில் தீவிரவாதிகளின் அச்சுறுத்தல் இருக்கின்ற நிலையில் திரிபுராவை  அமைதி மாநிலமாக மாற்றிக்காட்டி மாற்றாரும் புகழும் சாதனையாளர். இவர்களது அமைச்சரவைகளில் நூற்றுக்கணக்கான அமைச்சர்கள் பணியாற்றியுள்ளனர்.  ஆயிரக்கணக்கான சட்டமன்ற உறுப்பினர்கள் பணியாற்றியுள்ளனர். இவை மட்டும் இல்லாமல் நூற்றுக்கணக்கான தோழர்கள் மார்க்சிஸ்ட் கட்சியின் சார்பில் நாடாளுமன்றத்திற்கு தேர்வு செய்யப்பட்டு நாடளுமன்ற உறுப்பினர்களாக பணிபுரிந்துள்ளனர், பணிபுரிந்து வருகின்றனர். மாநிலங்களவை யிலும் நாடாளுமன்ற உறுப்பினர்களாக தேர்வு செய்யப்பட்டு பணிபுரிந்தனர், பணிபுரிந்து வருகின்றனர்.
       இவர்கள் யாராவது ஊழல் செய்தார்கள் என்று ஏதாவது புகார் உண்டா? யாராவது சொல்ல முடியுமா? சுதந்திர இந்தியாவின் 65 ஆண்டுகளில் அரசு மட்டத்தில் பல்வேறு பொறுப்புகளை ஏற்று திறம்பட பணியாற்றிய மார்க்சிஸ்ட்டு கள் ஊழலுக்கு அப்பாற்பட்டவர்கள் என்பதற்கு வேறு என்ன சாட்சி வேண்டும்? பிரதமர் பதவியைக் கூட வேண்டாம் என்று சொல்ல யாருக்கு துணிவு வரும் மார்க் சிஸ்ட்டுகளை தவிர. மார்க்சிஸ்ட்டுகளின் ஆதரவு இருந்தால்தான் மன்மோகன் சிங்கின் தலைமையிலான முதல் ஐக்கிய முன்னணி ஆட்சி தொடரும் என்ற நிலை யிலும் கூட, கவர்னர் பதவிக்கோ அரசு நியமனங்களுக்கோ ஆளாக பறக்காமல் மக்கள் நலன் ஒன்றையே முன்னிறுத்தி அரசியல் களத்தில் தூய்மையுடன் செயல் பட்டவர்கள்தானே மார்க்சிஸ்ட்கள்.
           இவர்கள் தானே ஊழலில் சிக்கி தத்தளித்துக் கொண்டிருக்கும் இன்றைய இந்தியாவிற்கு மாற்று வழியைக் காட்டமுடியும். 

நன்றி : 


செவ்வாய், 18 ஜூன், 2013

மோடி குறித்து அத்வானி கூறியது சரிதானே....?

ஹரிஷ் தாமோதரன் 

     குஜராத் முதல்வர் மோடியை பிரதமர் வேட்பாளர் என முன்னிறுத்துவது நாட்டிற்கும் நல்லதல்ல, பி.ஜே.பிக்கும் நல்லதல்ல. அதே போன்று பாபர் மசூதி இடிக்கப்பட்ட 1992 டிசம்பர் 6-ம் நாள் தான், தனது வாழ்க்கையிலேயே சோகமான நாள் என அத்வானி கூறியதையும் நான் என்றும் நம்பியதில்லை. அத்வானி ஒரு ‘ஹிந்துத்வா மிதவாதி என்று சொல்வதையும் நான் ஏற்பதில்லை. அது என்ன ‘ஹிந்துத்வா மிதவாதி? ‘நல்ல தாலிபான்கள்’ என்று சொல்லி அமெரிக்கர்கள் தங்கள் தேவைக்காக தாலிபான்களின் ஒரு பகுதியினரைப் பயன்படுத்தி வருகிறார்களே அது போன்றது தான் இந்த மிதவாதி வர்ணனையும். ‘ஹிந்துத்வா என்பது மக்களை பிளவுபடுத்தும் சித்தாந்தம். மகாத்மா காந்தி, பண்டித நேரு, பாபா சாகேப் அம்பேத்கர் போன்ற தலைவர்கள் பிரதிபலித்த உயர்ந்த கருத்தோட்டங்களுக்கு எவ்வகையிலும் பொருந்தாத சித்தாந்தம் அது. அத்வானியிடம் நாம் ஒரு விஷயத்தினை மட்டும் சந்தேகிக்க முடியாது. அது கட்சியின் மீது அவருக்கு இருக்கும் விசுவாசம். குப்பையாய்க் கிடந்ததை பெரும் அமைப்பாக மாற்றியவர். இதுதான் அவரை 2014 மக்களவைத் தேர்தல்களில் மோடியை பிரதமர் வேட்பாளராக முன்னிறுத்துவதை எதிர்க்க வைத்தது. 86 வயதில் அவர் பிரதமராக ஆசைப்படுவதாக கூட எடுத்துக் கொள்ள முடியாது. குஜராத்திற்கு வெளியேயுள்ள இந்திய வாக்காளர்களின் நாடித் துடிப்பை அறிந்தவர் என்பதால் தான் அவர் மோடியை எதிர்க்கிறார்.   
         சரிந்த காவி !:        
         1999ல் மக்களவைத் தேர்தல்களில் 182 இடங்களைப் பெற்ற பி.ஜே.பி 2004ல் 138, அதைத் தொடர்ந்து 2009ல் 116 எனத் தேய்ந்து கொண்டே வந்திருக்கிறது. இடங்கள் மட்டுமல்லாது, இதே காலத்தில் தேசிய அளவில் அதனுடைய வாக்கு விகிதங்களும் 23.75 சதவீதத்திலிருந்து 18.88 சதவீதமாகக் குறைந்திருக்கிறது. இந்த செல்வாக்குச் சரிவிற்கு யாராவது ஒரு குறிப்பிட்ட நபரைக் குற்றம் சாட்டலாம் என்றால் அது மோடியாக மட்டுமே இருக்க முடியும். 2002ம் ஆண்டில் குஜராத்தில் மோடியின் ஆட்சியில் நடைபெற்ற அந்தப் படுகொலைகள், முதன் முதலாக தொலைக்காட்சியில் நேரடி ஒளிபரப்பில் வெளிப்படுத்தப்பட்ட முஸ்லிம் மக்களின் கோபம், இவை அனைத்தும் தேர்தல்களில் வெளிப்பட்டன. சிறுபான்மை மக்கள் மத்தியில் அது ஒரு புதுவிதமான எதிர்ப்பு வடிவத்தினை உருவாக்கியது. பி.ஜே.பிக்கு வாக்களிப்பது இல்லை என்பதைத் தாண்டி, அக்கட்சியினைத் தோற்கடிக்கும் வாய்ப்புள்ள கட்சிக்கு வாக்களிப்பது என்ற புதிய வாக்களிப்பு உத்தியும் தோன்றியது. 2004 தேர்தல்களில் இது தெளிவாக வெளிப்பட்டது. மக்கள் தொகையில் ஐந்தில் ஒரு பங்கு இருக்கும் உத்தரப்பிரதேசம், பீகார் போன்ற மாநிலங்களில் பி.ஜே.பி கடுமையான தோல்வியினைச் சந்தித்தது. அது மட்டுமல்லாமல், அக்கட்சியுடன் கூட்டணியில் இருந்த தெலுங்கு தேசம், திரிணாமூல், ஐக்கிய ஜனதாதளம் ஆகிய கட்சிகளும் தத்தம் மாநிலங்களில் மண்ணைக் கவ்வின. முஸ்லிம்களின் இந்த வாக்களிப்பு உத்தியின் காரணமாக, கம்யூனிஸ்ட் கட்சி, காங்கிரஸ், லாலு பிரசாத்தின் ராஷ்டிரிய ஜனதா தளம் ஆகியவை பயனடைந்தன.
        கூட்டாளிகளை இழந்து தனிமையில் ... :                 
      15 முதல் 20 சதவிதம் வரையிலான சிறுபான்மை மக்கள் இவ்விதம் வாக்களிக்கத் தொடங்கிவிட்டனர் என்றவுடனேயே, கூட்டாளிகள் பி.ஜே.பியைக் கைகழுவிவிட்டனர். சிவசேனா, அகாலிதளம், ஐக்கிய ஜனதா தளம் ஆகிய கட்சிகள் மட்டுமே பி.ஜே.பியுடன் சேர்ந்து நின்றன. ஆனால் ஐக்கிய ஜனதா தளமும் கூட, மோடியை பீகாரில் தேர்தல் பிரச்சாரத்திற்கு அனுமதிக்க மறுத்து விட்டது. 2009 தேர்தல்களும் ஏறக்குறைய 2004 முடிவுகளை மீண்டும் உறுதி செய்யும் வகையில் தான் இருந்தன. இந்தத் தேர்தல்களில் மோடியை விட வருண் காந்தியின் மதவெறிப் பேச்சுக்கள் குறைந்த பட்சம் உத்தரப்பிரதேசத்தில் பி.ஜே.பியின் தோல்விக்கு பெரும் காரணமாக அமைந்தன. இந்தியாவின் கிழக்குப் பிராந்தியத்தில் பி.ஜே.பி அநேகமாக இல்லை என்றே சொல்ல வேண்டும். நேற்று வரை தெற்கில் ஆட்சியில் இருந்த ஒரே மாநிலமான கர்நாடகாவில், அது தூக்கி வீசப்பட்டுவிட்டது. உத்தரப்பிரதேசத்தில் இப்போது மூன்றாவது இடத்திற்காக காங்கிரசுடன் போட்டியில் இருக்கிறது. மோடி பிரதமர் வேட்பாளர் என்ற பிரச்சனையில் பீகாரில் ஐக்கிய ஜனதா தளத்துடன் உறவு முறியும் நிலையில் உள்ளது. இதன் காரணமாக அம்மாநிலத்தில் அது பல இடங்களில் தோல்வியைத் தழுவும். 2009 தேர்தல்களில் கூட, பி.ஜே.பி வெற்றி பெற்ற இடங்களில் பாதி எண்ணிக்கை முஸ்லிம்கள் அதிக எண்ணிக்கையில் இல்லாத மேற்கு மற்றும் மத்திய இந்தியாவில் இருந்து தான் என்பது குறிப்பிடத்தக்கது. விவரங்களை கீழ்வரும் பட்டியலில் காணலாம்.
          குஜராத்துக்கு வெளியே பிஜேபிக்கு சுமை யாக இருப்பவர் மோடிதான். பிஜேபி கட்சிக் குள் இருப்பவர்களில் இந்த உண்மையினை அறிந்த ஒரே நபர் அத்வானிதான். பிஜேபி கட் சிக்கு தனது கூட்டணியின் தளத்தை விரிவு படுத்திட அனைவராலும் பெருமளவில் ஏற்றுக் கொள்ளத்தக்க ஒரு நபரை முன்னிறுத்த வேண்டிய தேவை உள்ளது. ஏனெனில் கடந்த காலத்தில் அத்தகைய ஒரு நபரை முன் னிறுத்தியதால்தான் தமிழகம், ஒடிசா, ஆந்திரா போன்ற மாநிலங்களில் வெற்றி பெற முடிந்தது. பல தேர்தல் களங்களை சந்தித்த அனுபவத்தின் பின்னணியில்தான் அத்வானி இவ்வாறு கருதுகிறார். மோடியின் ஆட்சியில் கடந்த பத்தாண்டுகளில் குஜராத்தில் ஏற்பட்டுள்ள வளர்ச்சி, 2002 படுகொலைகள் என்ற பிசாசினை விரட்டி அடித்துவிடுமென பிஜேபியின் தத்து வார்த்த ஆசானான ஆர்எஸ்எஸ் நம்புகிறது. அதனால்தான் அத்வானியின் அறிவார்ந்த ஆலோசனையை ஏற்காததோடு, அவரை அவமானப்படுத்தியும் உள்ளது. “வளர்ச்சியின் சிற்பி” என்ற மிகைத் தோற்றம் மோடிக்கு இருப்பதன் காரணமாக பிஜேபிக்கு இந்தியா முழுவதும் 175லிருந்து 200 வரையிலான இடங்கள் அக்கட்சிக்கு மட்டுமே கிடைக்குமென நம்புகிறார்கள். மேலும், கூட்டணியில் முன்பிருந்த கட்சிகள் மீண்டும் பிஜேபியை நோக்கி வருவதற்கான நிர்பந்தத்தை இது ஏற்படுத்தும் எனவும் நம்புகிறார்கள்.
          வளர்ச்சி குறித்த மாயை! :          
        குஜராத்தின் வளர்ச்சி குறித்து பேசும் போது இரண்டு விஷயங்கள் கவனத்தில் கொள்ளப்பட வேண்டும். மோடி குறித்து சரடு விடுபவர்கள் அவரது ஆட்சிக் காலத்தில்தான் குஜராத் வளர்ச்சியடைந்தது என்றும் பி.டி. பருத்தியின் வெற்றி குஜராத்துக்கு மட்டுமே சொந்தமானது என்றும் மிகைப்படுத்துகின்றனர். ஆனால் ராஜ்கோட் மெசின் டூல்ஸ், டீசல் என்ஜின் தொழில் மற்றும் சூரத், பாவ்நகரிலுள்ள செயற்கை வைரத்தொழிற்சாலைகள் மட்டுமின்றி அமுல், அம்பானி, அதானி, நிர்மா, டோரெண்ட், ஜைடஸ் கேடிலா, ஐபிசிஎல், ஜிஎஸ்எப்சி அல்லது ஜிஎன்எப்சி போன்ற தொழிற்சாலைகள், மோடி ஆட்சிக்கு வருவதற்கு முன்பே அம்மாநிலத்தில் இருந்தன என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். தங்களது ஆட்சிக் காலத்தில் மாநிலத்தில் படிப்படியான வளர்ச்சியை ஏற்படுத்தியிருப்பதாக எவரேனும் உரிமை கொண்டாட முடியுமென்றால் அது ஏற்கனவே பின்தங்கிய மாநிலங்களாக உள்ள மத்தியப்பிரதேசம் மற்றும் சத்தீஸ்கரின் முதலமைச்சர்களாக மட்டுமே இருக்க முடியும். சிவராஜ் சிங் சௌகான் முதல்வராக பதவி ஏற்பதற்கு முன்பு மத்தியப்பிரதேசத்தில் வெறும் 5 இலட்சம் டன்னாக இருந்த கோதுமை கொள்முதல், அவரது ஆட்சிக் காலத்தில் 85 இலட்சம் டன்னாக அதிகரித்தது. அது மட்டுமின்றி மத்திய அரசு அளிக்கும் குறைந்தபட்ச ஆதரவு விலையைக் காட்டிலும் கூடுதலாக குவிண்டாலுக்கு நூறு ரூபாயை விவசாயிகளுக்கு அவரது அரசு அளிக்கிறது. இதே போன்று, சத்திஸ்கரில் அரிசி கொள்முதலில் முன்னேற்றத்தை ராமன் சிங் அரசு சாதித்துள்ளது. மேலும் ரேசன் கடைகளே இல்லாதிருந்த அந்த மாநிலத்தில் செயல்படுகின்ற பொது விநியோக அமைப்பினை அவர் உருவாக்கியுள்ளார்.
           குஜராத் ஒன்றும் பீகார், மத்தியப்பிரதேசம், ராஜஸ்தான் உத்தரப் பிரதேசம் போன்று பின்தங்கிய மாநிலம் அல்ல. குஜராத் வளர்ச்சி குறித்த மோடியின் படாடோபமான பேச்சுகளுக்கு அத்வானி இதனையே எதிர்வாதமாக வைத்தார். இரண்டாவதாக, பழைய கால பாவங்கள் அதைச் செய்தவர்களை பழி தீர்க்காமல் விடுவதில்லை என்பது வரலாறு உணர்த்தும் செய்தி. இதுவும் அத்வானிக்குத் தெரியும். பாபர் மசூதி இடிப்பிற்கு இட்டுச் சென்ற அத்வானியின் 1990 ரதயாத்திரை அவப்பெயரிலிருந்து அவர் இன்னும் மீள முடியவில்லை என்பதை அவர் நன்கு அறிந்தவர் தானே? அதைத் துடைத்தெறியும் முயற்சியில் அவர் முகமது அலி ஜின்னாவைப் பாராட்டப் போக, ஆர். எஸ்.எஸ் கோபத்தை சம்பாதித்துக் கொண்டதும் அதன் காரணமாக அதன் கட்டளைக்குப் பணிந்து அவர் பிஜேபி தலைவர் பதவியினை ராஜினாமா செய்ததும் தானே மிச்சம்? வரலாற்றினை மறுபடைப்பு செய்வதே அல்லது அதன் போக்கை மாற்றுவதே மோடியினால் கண்டிப்பாக இயலாது. அவர் பிரதமர் வேட்பாளராக முன்னிறுத்தப்படும் பட்சத்தில் அது கண்டிப்பாக பிஜேபிக்கு பாதகமாகவும், மூழ்கும் கப்பலான காங்கிரசுக்கு ஒரு நம்பிக்கை ஒளிக்கீற்றாகவும் மாறும் என்பதில் ஐயமில்லை.
தமிழில் : எம். கிரிஜா நன்றி - பிசினஸ் லைன் 12-06-2013

திங்கள், 17 ஜூன், 2013

உண்மையிலேயே இது தான் சரியான முடிவு....!

          
எல்லா இடங்களிலும் நானே நிற்பேன் ஒரு இடம் கூட தோழமை கட்சிகளுக்கு விட்டுத் தரமாட்டேன் என்று சொல்லிவந்த தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா இன்று தனது முடிவை
மாற்றிக்கொண்டு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் மாநிலங்களவைத் தேர்தலுக்கு போட்டியிடும் தோழர். டி. ராஜா அவர்களுக்கு ஆதரவு அளித்திருப்பதுடன், தனது கட்சியின் சார்பில் தேர்தலில் போட்டியிட 5-ஆவது வேட்பாளர் வேட்புமனு தாக்கல் செய்தவரை வேட்புமனுவை திரும்பப் பெற செய்திருப்பது என்பது வரவேற்கத்தக்கது.
          சந்தர்ப்பத்திற்கு தகுந்தாற்போல் ஆட்சியாளர்களை போற்றிப் பாடுவதும், தூற்றி பேசுவதுமான வேலைகளில் ஈடுபடும் சந்தர்ப்பவாத கட்சிகளுக்கு மத்தியில், இன்றைய சூழ்நிலையில் அதிகார  வர்க்கத்தின் எதேச்சதிகார போக்கை தட்டிக் கேட்பதற்கும், மக்களுக்கெதிரான நடவடிக்கைகளை தடுத்து நிறுத்துவதற்கும் இடதுசாரிகளின் எண்ணிக்கையை அதிகபடுத்தவேண்டியது என்பது அவசியமானதும் அத்தியவசியமானதுமாகும்.
          அதிக எம்.எல்.ஏ - க்களை வைத்திருக்கும் ஆளும்கட்சி என்ற உரிமையில் அதிகப்படியான எண்ணிக்கையில் தாங்களே போட்டியிடுவது என்பது நியாயமாக இருந்தாலும், நாடு போகும் இன்றைய சூழலில் இடதுசாரிகளை தவிர்ப்பது என்பதும், நிராகரிப்பது என்பதும் சரியான சிந்தனையாகாது. அதிலும் குறிப்பாக தோழர். டி.ராஜா மற்றும் தோழர். டி.கே. ரங்கராஜன் போன்றவர்கள் பாராளுமன்ற ஜனநாயகத்திற்கு அவசியம் தேவையானவர்கள். அதை உணர்ந்து தனது முந்தைய முடிவை மாற்றிக்கொண்டு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் தோழர். டி.ராஜா அவர்களை ஆதரிப்பதென்று முதலமைச்சர் செல்வி.ஜெயலலிதா முடிவெடுத்தது என்பது வரவேற்கத்தக்கது. பாராட்டுதற்குரியது.

துணிச்சல்மிக்க மக்கள் கலைஞன் மணிவண்ணன்...!

            
எம்.ஜி.ஆர் - சிவாஜி காலங்களில் குணச்சித்திர நடிகராக, சிரிப்பு நடிகராக, வில்லன் நடிகராக பல்வேறு பரிமாணங்களில் பிரகாசித்தவர்  மறைந்த திரைப்பட நடிகர் எம்.ஆர். இராதா அவர்கள் தான். அவர் அதிகாரவர்க்கத்தை கிண்டலடித்து விமர்சிப்பதிலும், பகுத்தறிவு கருத்துக்களை பரப்புவதிலும் தனக்கென ஒரு பாணியை எப்படி வைத்திருந்தாரோ அதேப்போல் மணிவண்ணனும் தனக்கென்று ஒரு தனி பாணியை கடைபிடித்தவர். தான் இயக்கம் படங்களில் நிகழ்கால அரசியலை ஒரு பிடி பிடிப்பார். அது ஆளும் கட்சியாக இருந்தாலும், எதிர்க்கட்சியாக இருந்தாலும், இந்நாள் முதல்வர் என்றாலும், முன்னாள் முதல்வர் என்றாலும் தன்னுடையப் திரைப்படங்களில் மிகக் கூர்மையான வசனங்களால் மிகக் கடுமையாக கிண்டலடிப்பார். அது ஒரு சாட்டையடியாக தான் இருக்கும். ஆரம்பத்தில் அவர் ஒரு பொதுவுடைமைவாதியாக இருந்திருக்கிறார். இடதுசாரிக்கட்சிகளின் மேடைகளில் அவரைப் பார்க்கலாம். வருமானத்திற்காக திரைப்படத்தை சுவாசிப்பவர் என்றாலும், வாசிப்பை நேசிப்பவர். நிறையப் புத்தகங்களை படிக்கக்கூடியவர். அவர் மாரடைப்பால் இறக்கும்போது அவரது படுக்கையில் புத்தகங்கள் அவரோடு இருந்திருக்கின்றன.
           அவரது மறைவு என்பது திரையுலகத்திற்கு மட்டுமல்ல. மாற்று சிந்தனையாளர்கள் மத்தியிலும் ஒரு பேரிழப்பு தான்.

ஞாயிறு, 16 ஜூன், 2013

தந்தையர் தினம் - உலகிலேயே தலைசிறந்த தந்தை கருணாநிதி...!

              
            இந்தப் பதிவு வஞ்சப்புகழ்ச்சியாக எழுதப்பட்டது அல்ல. உண்மையிலேயே முழுமனதுடன் எழுதப்பட்டது. தன்னிடம் இருபத்து மூன்றே எம்.எல்.ஏ - க்களை வைத்துக்கொண்டே  தன் மகள் கனிமொழிக்கு மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கான தேர்தலுக்கு சீட்டுக் கொடுத்து தைரியமாக தேர்தல்களத்தில் நிற்க வைத்திருக்கிறார் என்றால் தன் மகளின் மீது அவரிடம் உள்ள பாசத்தின் உயரத்தை நம்மால் புரிந்துகொள்ள முடிகிறது. இவரைப் போன்ற தந்தையை உலகத்தில் வேறு எங்குமே பார்க்க முடியாது. ''பிச்சை எடுத்தாவது உன்னை நான் படிக்க வைப்பேன்மா'' என்று சொல்லுகிற தந்தைகளை விட ''பிச்சை எடுத்தாவது உன்னை எம்.பி. ஆக்குவேன் மா'' என்று சொல்லுகிற இந்த தந்தை தான் உலகிலேயே மிக சிறந்த தந்தை என்பதை யாராவது மறுக்க முடியுமா...!

சனி, 8 ஜூன், 2013

எங்க நாட்டு ''உலகம் சுற்றும் வாலிபனுங்க'' மன்மோகன் சிங்....!

கடந்த 2004 - ஆம் ஆண்டு முதல் ஏப்ரல் 2013 - ஆம் ஆண்டு வரை நம்ப நாட்டு பிரதமர் மொத்தம் 67 நாடுகளுக்கு பிரயாணம் பண்ணியிருக்கிறாருங்க. இந்த 67 - ல  62 பயணத்திற்கு மட்டும் ரூ.642 கோடி ரூபாய் இந்திய அரசு செலவு செய்திருக்கிறதாம். இன்னும் 5 பயணத்திற்கான செலவு கணக்கிடப்பட்டு வருகிறதாம். அது எவ்வளவு இருக்குமோ....? மொத்தத்துல எங்க பிரதமரு உலகம் சுற்றும் வாலிபருங்கோய்...!

1000 தலை வாங்கிய அபூர்வ சிந்தாமணிகளே... உங்களை நாடு தான் தாங்குமா...?

 

Food Security : Special Resolve Needed, Not Special Session...!

         

People's Democracy

Weekly Organ of the Communist Party of India (Marxist) 

       There is a large amount of speculation over the convening of a special session of parliament while the government, through the minister for parliamentary affairs, has suggested the possibility of convening an all-party meeting to forge a political consensus on the response to the Maoist menace following the brutal attack in Chhattisgarh recently. However, as per media reports, a special session of the parliament may be convened to facilitate the passage of the Food Security Bill. Readers will recollect that when the UPA-2 government assumed office, the then president of India, in her first address to the joint session of the parliament, had outlined various measures that the government would implement in the first 100 days. Among other things, this list prominently featured the Food Security Bill.
            More than four years have passed since then. The government has not managed to bring such a bill for the consideration and adoption of the parliament. There was nobody to stop the government from doing so. There was nobody who could have prevented the government if it had thought of bringing such a bill to the parliament. In other words, the government has nobody to blame but itself for not fulfilling its own promise to the country and the people.
               The constitution of India does not provide for any special session of the parliament. The constitution simply states in article 85 (1): “The president shall from time to time summon each house of parliament to meet at such time and place as he thinks fit, but six months shall not intervene between its last sitting in one session and the date appointed for its first sitting in the next session.” Therefore, upon the advice of the union cabinet, the president may summon the parliament, in addition to the three sessions – the budget, the monsoon and the winter sessions – as established by tradition. But since the monsoon session usually convenes in the month of July, any session prior to that makes little sense now.
          By making this issue of convening a special session of parliament an agenda for media speculation, this UPA-2 government seems to be trying to derive some political capital by seeking to impress upon the people its commitment to grant them food security. On the contrary, what must be asked of the government is why it has delayed to enact a legislation on this score, despite its own assurances, for more than four years. It is the government, therefore, that has betrayed the people on this score.
            It is clear that only after a considerable amount of internal wrangling that the government, as reported, has finally come forward with the proposal of providing 25 kg of foodgrains in all --- rice at Rs three per kg, wheat at Rs two per kg and millets at Re one per kg. It proposes to cover in this scheme 67 per cent of the Indian families – 75 per cent in rural India and 50 per cent in urban India. As we have repeatedly pointed out and argued in these columns in the past, this is simply inadequate to eliminate hunger and malnutrition from our country. Any meaningful food security is only possible when all families in the country – at least 90 per cent – are provided 35 kg of foodgrains at prices not exceeding Rs two per kg. Any measure that is short of this cannot provide comprehensive food security for our people. This UPA-2 government has, however, refused to accept this point.
                 Further, any meaningful food security for the people can be ensured only if the public distribution system (PDS) is universalised and it comprehensively covers the country’s population. Instead of doing this, however, the government has come up with a direct cash transfer scheme as the alternative for distribution of essential commodities at fair prices through the ration shops. We shall return to this scheme later. But if these were to be implemented, then the public distribution system itself would be rendered superfluous. This is because the government would ask the people to buy their requirements from the open market against the cash that has been delivered to them. This is the classic recipe for the dismantling of the public distribution system.
           Further, as inflation grows, the monies transferred to the people will increasingly command a lesser and a lesser value in the market. The net result would be that people will not receive what is required to guarantee a minimum level of food security. Therefore, in the final analysis, the public distribution system will remain dismantled and the people, unable to meet their needs, would simply slide into greater misery.
            The dismantling of the public distribution system will have another serious consequence as well. At the moment, foodgrains are procured by the government at a stipulated minimum support price from the farmers. This stock of foodgrains is then distributed through the ration shops to the people at specified prices. With the dismantling of the public distribution system, the government would not any longer need to procure foodgrains. Thus, it would also escape from its responsibility of providing a fair price to the farmer, thus depriving the farmer of any economic security, however weak it may be at the moment.
            The direct cash transfer scheme, thus, allows the government to abdicate its responsibility to provide foodgrains to the people and thus protect them from being the victims of hunger and malnutrition on the one hand; on the other hand, the government can also abdicate its responsibility to provide the farmer a minimum support price. Through such a mechanism, the government will continuously be reducing, if not eliminating, its already meagre subsidies to keep the people away from hunger and misery. At the same time, it can also be relieved of its subsidies to provide a minimum support price to the farmers.
              In other words, what the government is doing is to hoodwink the people. Neither the food security bill nor the cash transfer scheme can provide the much-needed relief to the people. On the contrary, over a period of time, due to the rising prices, such cash transfers will increasingly become too inadequate to meet the nutritional requirements of the family. This UPA-2 government is thus out to ensure that the vast mass of our people are pushed into still greater misery.
           In the final analysis, therefore, what is required is not a special session of the parliament; what is required is a special resolve by the government to provide genuine food security to the people. Required adequate allocations must be made by the government to ensure the universalisation of the public distribution system through which the people are provided the wherewithal to first survive and then to improve their livelihood status. Food Security: Special Resolve Needed, Not Special Session
           There is a large amount of speculation over the convening of a special session of parliament while the government, through the minister for parliamentary affairs, has suggested the possibility of convening an all-party meeting to forge a political consensus on the response to the Maoist menace following the brutal attack in Chhattisgarh recently. However, as per media reports, a special session of the parliament may be convened to facilitate the passage of the Food Security Bill. Readers will recollect that when the UPA-2 government assumed office, the then president of India, in her first address to the joint session of the parliament, had outlined various measures that the government would implement in the first 100 days. Among other things, this list prominently featured the Food Security Bill.
            More than four years have passed since then. The government has not managed to bring such a bill for the consideration and adoption of the parliament. There was nobody to stop the government from doing so. There was nobody who could have prevented the government if it had thought of bringing such a bill to the parliament. In other words, the government has nobody to blame but itself for not fulfilling its own promise to the country and the people.
             The constitution of India does not provide for any special session of the parliament. The constitution simply states in article 85 (1): “The president shall from time to time summon each house of parliament to meet at such time and place as he thinks fit, but six months shall not intervene between its last sitting in one session and the date appointed for its first sitting in the next session.” Therefore, upon the advice of the union cabinet, the president may summon the parliament, in addition to the three sessions – the budget, the monsoon and the winter sessions – as established by tradition. But since the monsoon session usually convenes in the month of July, any session prior to that makes little sense now.
                 By making this issue of convening a special session of parliament an agenda for media speculation, this UPA-2 government seems to be trying to derive some political capital by seeking to impress upon the people its commitment to grant them food security. On the contrary, what must be asked of the government is why it has delayed to enact a legislation on this score, despite its own assurances, for more than four years. It is the government, therefore, that has betrayed the people on this score.
           It is clear that only after a considerable amount of internal wrangling that the government, as reported, has finally come forward with the proposal of providing 25 kg of foodgrains in all --- rice at Rs three per kg, wheat at Rs two per kg and millets at Re one per kg. It proposes to cover in this scheme 67 per cent of the Indian families – 75 per cent in rural India and 50 per cent in urban India. As we have repeatedly pointed out and argued in these columns in the past, this is simply inadequate to eliminate hunger and malnutrition from our country. Any meaningful food security is only possible when all families in the country – at least 90 per cent – are provided 35 kg of foodgrains at prices not exceeding Rs two per kg. Any measure that is short of this cannot provide comprehensive food security for our people. This UPA-2 government has, however, refused to accept this point.
              Further, any meaningful food security for the people can be ensured only if the public distribution system (PDS) is universalised and it comprehensively covers the country’s population. Instead of doing this, however, the government has come up with a direct cash transfer scheme as the alternative for distribution of essential commodities at fair prices through the ration shops. We shall return to this scheme later. But if these were to be implemented, then the public distribution system itself would be rendered superfluous. This is because the government would ask the people to buy their requirements from the open market against the cash that has been delivered to them. This is the classic recipe for the dismantling of the public distribution system.
           Further, as inflation grows, the monies transferred to the people will increasingly command a lesser and a lesser value in the market. The net result would be that people will not receive what is required to guarantee a minimum level of food security. Therefore, in the final analysis, the public distribution system will remain dismantled and the people, unable to meet their needs, would simply slide into greater misery.
              The dismantling of the public distribution system will have another serious consequence as well. At the moment, foodgrains are procured by the government at a stipulated minimum support price from the farmers. This stock of foodgrains is then distributed through the ration shops to the people at specified prices. With the dismantling of the public distribution system, the government would not any longer need to procure foodgrains. Thus, it would also escape from its responsibility of providing a fair price to the farmer, thus depriving the farmer of any economic security, however weak it may be at the moment.
            The direct cash transfer scheme, thus, allows the government to abdicate its responsibility to provide foodgrains to the people and thus protect them from being the victims of hunger and malnutrition on the one hand; on the other hand, the government can also abdicate its responsibility to provide the farmer a minimum support price. Through such a mechanism, the government will continuously be reducing, if not eliminating, its already meagre subsidies to keep the people away from hunger and misery. At the same time, it can also be relieved of its subsidies to provide a minimum support price to the farmers.
              In other words, what the government is doing is to hoodwink the people. Neither the food security bill nor the cash transfer scheme can provide the much-needed relief to the people. On the contrary, over a period of time, due to the rising prices, such cash transfers will increasingly become too inadequate to meet the nutritional requirements of the family. This UPA-2 government is thus out to ensure that the vast mass of our people are pushed into still greater misery.
             In the final analysis, therefore, what is required is not a special session of the parliament; what is required is a special resolve by the government to provide genuine food security to the people. Required adequate allocations must be made by the government to ensure the universalisation of the public distribution system through which the people are provided the wherewithal to first survive and then to improve their livelihood status.

புதன், 5 ஜூன், 2013

இலங்கை : தேசிய இனப்பிரச்சனையும் மாறியுள்ள உலகச் சூழலும்....!

        

 கட்டுரையாளர் : தோழர்.டி.கே.ரங்கராஜன், எம்.பி.,        
                             மத்தியக்குழு உறுப்பினர், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி         
         இலங்கைத் தமிழர் பிரச்சனையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நிலைபாட்டை விமர்சித்து ‘ஜூனியர் விகடன்’ ஏட்டில் கழுகார் பதில்கள் பகுதியில் எழுதப்பட்டிருந்தது. இதற்கு பதிலளிக்கும் வகையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக்குழு உறுப்பினர் உ.வாசுகி எழுதிய விளக்கத்தை அந்த ஏடு வெளியிட்டிருந்தது. இதைத் தொடர்ந்து மார்க்சிஸ்ட்டுகளின் சிந்தனைக்கு என்ற தலைப்பில் பத்திரிகையாளர் ப.திருமாவேலன் தொடர்ந்து 10 இதழ்கள் நீண்ட நெடிய கட்டுரைகளை எழுதித்தள்ளியுள்ளார். அந்தக் கட்டுரையில் மார்க்ஸ், ஏங்கல்ஸ், லெனின், ஸ்டாலின் போன்ற தலைவர்களின் மேற்கோள்கள் பொருத்த மற்ற வகையில் எடுத்தாளப்பட்டிருந்தன.
         இவற்றைப் படித்தபோது, மாவோ கூறிய வார்த்தைகள் தான் நினைவுக்கு வந்தன. 1948-ல் மக்கள் சீனத்தில் மாவோ தலைமையில் ஆட்சியமைத்த கம்யூனிஸ்ட்டுகள் சுயநிர்ணய உரிமை குறித்த முந்தைய நிலைபாடுகளை பின்பற்றவில்லை. திபெத்தியர்களுக்கு தனிநாடு வேண்டும் என்ற தலாய்லாமாவின் கோரிக்கையை சீன கம்யூனிஸ்ட் கட்சி ஏற்கவில்லை. தலாய்லாமாவின் மடத்தைச் சேர்ந்த பஞ்சன்லாமா சீனாவுடன் திபெத் சேர்ந்து இருக்க வேண்டும் என்ற நிலைபாட்டை ஏற்று சீனாவிலேயே தங்கிவிட்டார். இந்தப் பின்னணியில், சீனக் கம்யூனிஸ்ட் கட்சிக்குள் சில தோழர்கள் மார்க்ஸ், லெனின் உரைகளிலிருந்து மேற்கோள்காட்டி சுயநிர்ணய உரிமையை வலியுறுத்தினர். அதற்கு பதிலளித்த மாவோ இப்படிக்கூறினார்... “இப்போதும் கூட சிலர் மார்க்சிய லெனினிய அறிஞர்கள் உரையிலிருந்து சில மேற்கோள்களை எடுத்துச் சொல்லி அவைகளே அனைத்துத் தீங்குகளையும் எளிதாக தீர்க்க வல்லது என்று கருதுகின்றனர். அறியாமையில் உழலும் அத்தகையோர் தான் மார்க்சியம்-லெனியத்தை ஒரு வகையான சமயக்கோட்பாடாக கருதுகின்றனர். அவர்களிடம் மழுப்பல் எதுவுமில்லாமல் தெளிவாகச் சொல்லிவிட வேண்டும். உங்கள் கோட்பாடு எந்தப் பயனும் அற்றது. நம்முடைய கொள்கை வறட்டு சித்தாந்தமல்ல. செயலுக்கான வழிகாட்டி என மார்க்ஸ், லெனின் மற்றும் ஸ்டாலின் ஆகியோர் திரும்பத் திரும்ப வலியுறுத்தியுள்ளனர். அத்தகைய சிறப்புமிக்க மிக மிக முக்கியமான வழிகாட்டுதலை இந்த மனிதர்கள் மறந்துவிடுகிறார்கள்” சுய நிர்ணய உரிமை குறித்து மாமேதைகள் மார்க்ஸ், ஏங்கல்ஸ், லெனின், ஸ்டாலின் ஆகியோரை மேற்கோள் காட்டும் அறிவு ஜீவிகள் மாவோ கூறியதை மறந்தும் கூறுவதில்லை. ஏனெனில் அவரது அணுகுமுறை தங்களது வாதத்திற்கு உதவாது என்பதை அவர்கள் நன்கறிவார்கள். நீங்கள் எந்தப்பக்கம் நிற்கிறீர்கள் என்ற கேள்வியோடு திருமாவேலனின் கட்டுரை நிறைவு பெற்றுள்ளது. மார்க்சிஸ்ட்டுகளைப் பொறுத்தவரை இலங்கையில் தொடர்ந்து இன்னலுக்கு உள்ளாகியுள்ள தமிழர்களின் பக்கம் நிற்கிறோம் என்று எங்களால் தைரியமாகச் சொல்ல முடியும். இலங்கையில் இனப்பிரச்சனை துவங்கியதிலிருந்து அந்த மக்களின் பக்கமே நின்று வந்துள்ளோம் என்று எங்களால் கூறமுடியும். ஆனால் தமிழீழம் மற்றும் விடுதலைப்புலிகள் இயக்கத்தை ஆதரிப்பவர்கள் மட்டுமே இலங்கைத் தமிழர்கள் பக்கம் நிற்கிறார்கள். மற்றவர்கள் எல்லாம் இலங்கை அரசின் ஆதரவாளர்கள், கைக்கூலிகள் என்று முத்திரை குத்துவது இங்கு சிலருக்கு பழக்கமாகிவிட்டது. இலங்கைத் தமிழர் பிரச்சனையில் எல்டிடிஇ இயக்கத்தின் அணுகுமுறை, சமரசமான தீர்வு ஏற்பட தடையாக இருந்ததை பல இயக்கங்கள் அப்போதும் விமர்சித்துள்ளன. இப்போதும் விமர்சிக்கின்றன.     
       எல்டிடிஇ வலுவாக இருந்த காலத்தில் அத்தகைய விமர்சனங்களை முன்வைத்த இலங்கையைச் சேர்ந்த தமிழர் தலைவர்கள், சகபோராளிக் குழுக்களை எவ்வாறு அணுகியது, எவ்வாறு கணக்குத் தீர்த்தது என்பது அனைவரும் அறிந்ததே. இந்தியாவிலும் தமிழகத்திலும் தியாகத்தால் புடம்போட்டு வளர்க்கப்பட்ட இயக்கம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி. சாய்வு நாற்காலியில் அமர்ந்து கொண்டு உபதேசம் செய்பவர்கள் அல்ல. விடுதலைப் போராட்ட காலம் துவங்கி இன்று வரை மக்களுக்காக தொடர்ந்து போராடி சித்ரவதைகளை, சிறைக்கூடங்களை இன்முகத்தோடு ஏற்றவர்கள் மார்க்சிஸ்ட்டுகள். இந்த நீண்ட நெடிய போராட்டத்தில் பலரை களப்பலியாக தந்த இயக்கம் இது. குன்னியூர் சாம்பசிவ அய்யர் எனும் நிலப்பிரபுவை எதிர்த்துப் போராடிய களப்பால் குப்பு எனும் மாவீரன் 31 வயதில் சிறையில் விஷம் கொடுத்து கொல்லப் பட்டார். வாட்டாகுடி இரணியன், சிவராமன், ஆறுமுகம், மலேயா தோழர்கள் எஸ்.ஏ. கணபதி, வீரசேனன் என நிலப்பிரபுத்துவத்தை எதிர்த்து போராடியதால் சுட்டுக்கொல்லப்பட்ட தியாகிகளைக் கொண்ட இயக்கம் இது. வெண்மணியின் கண்மணிகள், பொன்மலையின் தியாகதீபங்கள் பூந்தாலங்குடி பக்கிரி, தியாகி வெங்கடாச்சலம், அன்னை லெட்சுமி, திண்டுக்கல் அக்னீஸ்மேரி, தூக்குமேடை தியாகி பாலு, மாரி, மணவாளன், தில்லைவனம், மதுரை ஐ.வி.சுப்பையா, பூந்தோட்டம் சுப்பையா, ராமசாமி இவர்களது வழியில் தியாகி லீலாவதி, சின்னியம்பாளையம் தியாகிகள், கோவை ஸ்டேன்ஸ் மில் தியாகிகள், ஆஷர்மில் பழனிச்சாமி, திருப்பூர் பழனிச்சாமி, இடுவாய் ரத்தினசாமி, நன்னிலம் நாவலன், பள்ளிப்பாளையம் வேலுச்சாமி என பல தோழர்கள் மக்கள் போராட்டங்களில் மரணத்தை பரிசாகப் பெற்றவர்கள். இந்தியாவிலும் தமிழகத்திலும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை வழிநடத்திய, வழி நடத்துகிற தலைவர்கள் பலரும் சிறையையும் அடக்குமுறையையும் தங்களது வாழ்வின் ஒரு பகுதியாக கொண்டவர்கள். இலங்கைப் பிரச்சனையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தன்னுடைய கொள்கை வழி நின்று ஒரு முடிவை எடுத்துள்ளதால் கட்சி இன்றைக்கல்ல, தமிழகத்தில் கடுமையான இனவெறி அடிப்படையிலான முழக்கங்கள் எழுப்பப்பட்ட காலத்திலேயே அவதூறுகளை சந்தித்துள்ளது. ஆனால், இத்தகைய அவதூறுகளை பின்னுக்குத்தள்ளி இலங்கைத் தமிழர் பிரச்சனைக்கு ஒரு அரசியல் தீர்வுகாண வேண்டும். அங்குள்ள தமிழ் மக்கள் தங்களது பாரம்பரிய வாழ்விடத்தில் அனைத்து உரிமைகளுடன் வாழவேண்டும் என்பதை தொடர்ந்து கூறி வந்துள்ளது. நாடாளுமன்றம், சட்டமன்றம், மக்கள் மன்றங்களில் தனது கருத்தை அழுத்தமாக எடுத்து வைத்துவந்துள்ளது. இலங்கையில் இறுதிப்போர் முடிவடைந்த நிலையில் தொடர்ச்சியாக பல்வேறு இயக்கங்களை நடத்தி வருகிறது. ஆனால், தனி ஈழம் என்ற யோசனையை மட்டுமே முன்வைக்கும் அறிவு ஜீவிகள் மற்றும் இயக்கங்கள் மார்க்சிஸ்ட் கட்சியை விமர்சிக்கின்றன. அதற்காக அவர்கள் மார்க்சியத்தையும் துணைக்கு அழைத்துக்கொள்கின்றன. அவர்களது மார்க்சிய ஈடுபாடு நம்மை புல்லரிக்க வைக்கிறது. இந்தியப் பிரச்சனையில் இவர்களில் பலர் மார்க்சீயத்தை நடைமுறைப்படுத்த முன்வருவதில்லை என்பதையும் இவர்கள் யார் பக்கம் நிற்கிறார்கள் என்பதையும் நாம் தெரிந்தே வைத்திருக்கிறோம். இலங்கைத் தமிழர் பிரச்சனை இந்த நூற்றாண்டின் மிகப்பெரிய துயரம் என்பதில் மாற்றுக் கருத்தில்லை.
             அரசியல் அதிகாரம், மொழி, கல்வி, வேலைவாய்ப்பு போன்றவற்றில் சிங்கள மேலாதிக்க ஆட்சியாளர்களால் தமிழ் மக்களுக்கு உரிமை மறுக்கப்பட்டது என்பதிலோ, 30 ஆண்டுகளுக்கும் மேல் அமைதியான வழியில் போராடியவர்கள் ஆயுதம் ஏந்த வேண்டிய நிலை ஏற்பட்டதற்கு சிங்கள மேலாதிக்கம்தான் காரணம் என்பதும் மறுக்கமுடியாத ஒன்று. ஆனால் நெடிய போராட்டத்தில் நிலைமைக்கேற்ப உத்திகளை வகுக்க வேண்டும் என்பது உலக போராட்ட அனுபவமாகும். சமரசம் என்ற சொல்லை கெட்ட சொல்லாக கருதக்கூடாது என்று மாவீரன் பகத்சிங் ஒரு முறை குறிப்பிட்டார். பல்வேறு நிர்பந்தங்கள் மற்றும் யதார்த்த நிலை காரணமாக சமரசத் தீர்வுக்கு இலங்கை ஆட்சியாளர்கள் நெருங்கி வந்த சமயங்களில் அது தட்டிவிடப்பட்டது யாரால் என்பதை மறைக்க முடியாது. 
         நேபாளத்தில் மாவோயிஸ்ட்டுகள் ஆயுதந்தாங்கிய போராட்டத்தை நடத்தினர். மறுபுறத்தில் கம்யூனிஸ்ட் கட்சிகளும் போராடின. மாவோயிஸ்ட்டுகள் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகளிடையே ஒருங்கிணைப்பை ஏற்படுத்துவதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் பங்காற்றியது. உலகளவிலும் நேபாளத்திலும் ஏற்பட்ட மாற்றங்களை கருத்தில் கொண்ட மாவோயிஸ்ட்டுகள் ஜனநாயக பாதைக்கு திரும்பினர். இதன்மூலம் நேபாளத்தில் மன்னராட்சி முறை தூக்கியெறியப்பட்டு ஜனநாயக அரசியல் துவங்கியது. இந்தியாவின் அண்டை நாடான மியான்மரிலும் ராணுவ ஆட்சியை எதிர்த்து தொடர்ச்சியாக இயக்கம் நடந்து வருகிறது. மியான்மரின் வரலாற்றை, இப்போதைய போராட்டத்தை உற்றுக் கவனிப்பவர்கள் நிலைமைக்கேற்ப சமரசம் மற்றும் தொய்வற்ற ஜனநாயகப் பூர்வ போராட்டம் என்ற பாதையில் அந்நாட்டின் ஜனநாயக இயக்கம் பயனித்து வருவதை புரிந்துகொள்ள முடியும்.தமிழ் ஈழ வரலாறு, பண்டைய மன்னர்கள் பெருமை, சிங்களத்தை வென்ற பெருமைகள் என்று இப்போதும் பேசப்பட்டும், எழுதப்பட்டும் வருகிறது. ஆனால் பிரச்சனைக்குத் தீர்வு காண கடந்த காலம் குறித்த பெருமிதம் மட்டும் போதாது. மாறாக, அந்தநாட்டின் யதார்த்த, இப்போதைய பூகோள நிலைமையை மட்டுமல்ல, உலகளவில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் அதன் பலாபலன்களையும் புரிந்துகொள்வது அவசியமாகும். குறிப்பாக ஏகாதிபத்தியத்தின் தன்மையையும் வளர்முக நாடுகளின் நிலைமையையும் கருத்தில் கொள்ளவேண்டும். அரசியல் போராட்டங்களில் வரலாறு ஒரு ஆயுதமாக பல இடங்களில் பயன்படுத்தப்படுகிறது. இது குறித்து பிரபல வரலாற்று அறிஞர் பேராசிரியர் எரிக்ஹோப்ஸ்பாம் தெரிவித்துள்ள கருத்து கவனத்தில் கொள்ளத்தக்கது. “ஹெராயின் என்ற போதைப் பொருளுக்கு பொப்பி மலர் மூலப்பொருள்.
         அது போல தேசியவாத கருத்துக்கள், இனக் குழு சார்ந்த கருத்துக்கள் மற்றும் அடிப்படைவாதங்கள் ஆகியவற்றிற்கு வரலாறு ஒரு மூலப்பொருளாக அமைகிறது. இப்படிப்பட்ட கருத்துக்கு கடந்தகாலம் என்பது ஒரு அத்தியாவசியமான கூறு. இக்கருத்துக்கு பொருத்தமான கடந்தகாலம் இல்லையென்றால் அதனை வேண்டிய வகையில் ஆக்கிக்கொள்ள முடியும். எதையும் நியாயப்படுத்த கடந்த காலம் உதவுகிறது. மகிழ்ச்சியுடன் கொண்டாடு வதற்கு அதிகம் இல்லாத நிகழ்காலத்திற்கு ஒரு புகழ் பூத்த பின்னணியை கடந்தகாலம் வழங்குகிறது. ”அவர் மேலும் கூறுகிறார்,” வரலாறு எழுதும் தொழிலானது, அணு ஆய்வு பௌதீக இயல் போல அல்லாது யாருக்கும் தீங்கு விளைவிக்காத ஒரு தொழில் என நான் எண்ணிப்பார்த்தேன். ஆனால் இத் தொழில் தீங்கு விளைவிக்கக் கூடியது என்பதை இப்போது உணர்கிறேன். பிரித் தானியாவில் ஐரிஷ் குடியரசுப் படையினர் ரசாயன உரத்தை வெடிகுண்டாக மாற்றுவதற்குப் பயன்படுத்திய தொழிற்சாலைகள் போல் எங்கள் படிப்பறைகள் வெடிகுண்டு தொழிற்சாலைகளாக மாறக் கூடியவை. இது எங்களைப்போன்ற வரலாறு எழுதுவோரை இருவகையில் பாதிக்கிறது. ஒன்று வரலாற்று உண்மை களை எடுத்துரைக்கும் பொறுப்பு எமக்கு இருப்பதை பொதுவாக உணர்ந்துகொள் வது, இரண்டாவதாக அரசியல் தத்துவ நோக்கங்களுக்காக வரலாற்றை தவறாக பயன்படுத்தப்படுவதை கண்டிக்கும் பொறுப்பு எமக்கு இருப்பதை உணர்ந்து கொள்வது ”இலங்கையில் துவங்கிய தமிழர் உரிமை போராட்டத்தின் வரலாற்றுப் பின்னணியை புரிந்துகொள்ளும் அதே நேரத்தில் கடந்தகால வரலாற்றின் வழியில் நின்று மட்டும் பிரச்சனைக்கு தீர்வு காண முடியாது என்பதையும் புரிந்துகொள்ள வேண்டும். தற்போதுள்ள உலகில் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ள மனித உரிமைகளின் அடிப்படையில் இப்பிரச்சனைக்கு தீர்வு காணப்பட வேண்டும். இரண்டாவது உலகப்போருக்குப் பின்பு விடுதலையடைந்த பல நாடுகளிலும் தீர்க்கப்படாத மொழிப்பிரச்சனை, இனப்பிரச்சனை, மதப்பிரச்சனைகள் உண்டு. இப்பிரச்சனைகள் தொடர வேண்டும் என் பதில் அமெரிக்கா உள்ளிட்ட ஏகாதிபத்தியங்கள் குறியாக உள்ளன.தன்னுடைய நோக்கத்திற்காக இலங்கை அரசை அமெரிக்க ஏகாதிபத்தியம் பயன் படுத்திக் கொண்டது, பயன்படுத்திக் கொள்கிறது என்பது எந்த அளவுக்கு உண்மையோ அதே அளவுக்கு உண்மை எல்டிடிஇ இயக்கத்தையும் அமெரிக்கா தன்னுடைய நோக்கத்திற்கு சில சமயங் களில் பயன்படுத்திக் கொண்டது என் பதும் பல்வேறு நாடுகளில் இத்தகைய அரசியல் விளையாட்டை ஏகாதிபத்தியம் நடத்தி வருகிறது என்பதும் உண்மை. சுதந்திர இந்தியாவில் மொழிவழி மாநிலங்கள்தான் இந்திய ஒருமைப் பாட்டை பாதுகாக்க உதவும் என்ற கருத்தை கம்யூனிஸ்ட்டுகள் அழுத்தமாக முன்வைத்தார்கள்.
           அப்போது இதற்கு மாற்றாக திராவிட நாடு கோரிக்கை முன்வைக்கப்பட்டது. இன்றைக்கு தேசிய இனப்பிரச்சனைக்கு சுய நிர்ணய உரிமை ஒன்றே தீர்வு என்று சிலர் முன்வைப்பதைவிட பல மடங்கு வாதங்களை திராவிட இயக்கம் முன்வைத்தது. இதற்கு எதிரான கருத்துப்போராட்டத்தை கம்யூனிஸ்ட் இயக்கம் நடத்தியது. ஒன்று பட்ட கம்யூனிஸ்ட் கட்சி ஏடான ‘ஜன சக்தி’யில் வந்த கட்டுரைகளே இதற்கு சான்று. எதார்த்ததிற்கு பொருந்தாத இந்தக் கோரிக்கை என்ன ஆனது என்பதை சொல்லித் தெரியவேண்டியதில்லை. சோவியத் ஒன்றியம் உருவான போது இதர சிறுபான்மை தேசிய இனங்களுக்கு நம்பிக்கை கொடுக்க வேண்டிய தேவை ரஷ்யக் கம்யூனிஸ்டுகளுக்கு இருந்தது. பல்வேறு தேசிய இனங்கள் ஜார் ஆட் சியில் ஒடுக்கப்பட்டு வந்தன. ஆகவே தான் தோழர் லெனின் சோவியத் அர சியல் சட்டத்தின் பிரிவு 17ல் தேசிய குடியரசுகளுக்கு பிரிந்துபோகும் உரிமையை சேர்த்தார். சோவியத் ஒன்றியம் ஒன்றாக இருந்தவரை தேசிய இனங்கள் பிரிந்து போகவில்லை. ஆனால் சோவியத் ஒன்றியத்தில் சோசலிசத்திற்கு பின்னடைவு ஏற்பட்ட பின்னணியில் பல்வேறு நாடுகள் மீண்டும் பிரிந்து போயின. மார்க்சியம் என்பது வறட்டு சூத்திரம் அல்ல. அது ஒரு வளரும் விஞ்ஞானம். திட்டவட்டமான நிலைமைக்கேற்ப, திட்டமிட்ட பகுப்பாய்வை கொண்டிருக்க வேண்டும் என்பதுதான் மார்க்சியத்தின் அடிப்படைகளில் ஒன்று. இன்றைக்கு மாறியுள்ள உலக சூழ்நிலை மற்றும் ஒரு துருவ உலகை உருவாக்க முயற்சிக்கும் ஏகாதிபத்தியத்தின் திட்டம் ஆகிய வற்றை கருத்தில் கொண்டே மார்க்சிய இயக்கங்கள் தங்களது நிலைபாட்டை உருவாக்க முடியும். உலக வரலாற்றில் இயற்கையை புரிந்து கொள்ள நிக்கோலஸ், கோபர் நிக்கர்ஸ், கலிலியோ போன்றவர்கள் எடுத்த முயற் சிக்கு மேல் புதிய கண்டுபிடிப்புகளை ஐசக் நியூட்டன் கண்டுபிடித்தார். ஆனால் முன்னோர்களின் கண்டுபிடிப்பு களை நியூட்டன் நிராகரிக்கவில்லை. மாறாக 1678ல் ஐசக் நியூட்டன், ராபர்ட், ஹூக்குக் எழுதிய கடிதத்தில் எனக்கு முன்னோடியாக இருந்த பேரறிவாளர் களின் தோள்களின் மீது நின்றுதான் என் னால் முன்னோக்கி பார்க்க முடிகிறது’ என்று கூறியிருந்தார். மார்க்சியத்தின் அடிப்படை நிர்ணயிப் பின் நிலையில் நின்று மாறிவரும் உலக நிலைமையை பகுப்பாய்வு செய்து அதற் கேற்ப தீர்வு சொல்வதே மார்க்சியத்தை பொருத்தும் சரியான வழியாகும். தேசிய சுயநிர்ணய உரிமை குறித்து லெனினது வார்த்தைகளை வரிந்து வரிந்து மேற்கோள் காட்டும் நண்பர்கள் ஏகாதிபத்தியத்தின் வளர்ச்சி மற்றும் அபாயம் குறித்து அவர் எழுதிக்குவித் துள்ள கட்டுரைகளையும் படிப்பது நல்லது. தமிழகத்தில் உள்ள தமிழ்மக்களின் பிரச்சனைக்காக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தொடர்ச்சியாக போராடி வருகிறது. உத்தப்புர தீண்டாமை சுவர் இடிப்பு துவங்கி அருந்ததிய மக்களின் உள் ஒதுக்கீடு வரை, வாச்சாத்தி மலை வாழ் மக்களின் பிரச்சனை துவங்கி, ஆதி வாசி மக்கள் வனத்திலிருந்து வெளியேற் றப்படுவதை எதிர்ப்பது வரை, ஆலைத் தொழிலாளர் முதல் முறைசாராத் தொழிலாளர் பிரச்சனை வரை போராடுகிறது மார்க்சிஸ்ட் கட்சி. ஈழத்திற்கு குறைவான எந்தத் தீர்வையும் ஏற்க முடியாது என்று கூறும் சில கட்சிகள் தமிழகத்தில் நிலச் சீர்திருத்தத்தை சீர்குலைக்க மேற் கொண்ட முயற்சிகளை தமிழகம் அறியும். விவசாயத் தொழிலாளர்களின் மனைப்பட்டா துவங்கி, விவசாயத்தை பாதுகாப்பது வரை போராடுகிறது மார்க்சிஸ்ட் கட்சி. இலங்கைத் தமிழர்களுக்காக தாங்கள் மட்டுமே குரல் கொடுப்பதாக கூறும் சில கட்சிகள் தமிழகத்தில் பிரச்சனைகளே இல்லாததுபோல கண்டு கொள்ளாமல் இருப்பது அவர்களது வர்க்கப் பார்வையின் அடிப்படையிலேயே ஆகும்.
         இலங்கை பிரச்சனையில் இந்தியாவில் உள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட இடதுசாரி இயக்கங்கள் அகில இந்திய அளவில் ஒரே மாதிரி நிலையையே எடுத்துள்ளன. ஆனால் ஜூனியர் விகடன் கட்டுரையாளர் உட்பட சிலர் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை மட்டும் குறிவைத்து விமர்சனம் செய்கின்றனர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை விமர்சிப்பவர்களுக்கு ஒரு அரசியல் நோக்கம் உள்ளது. ஆனால் அவர்களது அந்த நோக்கம் நிறைவேறாது.

செவ்வாய், 4 ஜூன், 2013

தலைவரை குஷிப்படுத்திய திமுக தொண்டர்கள்...!




          தங்கள் தலைவரின் மனநிலையை புரிந்துகொண்டு, அவரின் 90 - ஆவது பிறந்தநாளான நேற்று திமுக தொண்டர்கள் பண மாலையையும் பண சால்வையையும் அணிவித்து அழகு பார்த்து தலைவரை குஷிப்படுத்தினர். இவர்கள் புத்திசாலி தொண்டர்கள். ஆனால் அப்பாவிகள். இவர்கள் இத்தனைக்காலமாக தங்கள் சொத்துக்களை இழந்து, நேரங்களை இழந்து, குடும்ப உறவுகளை இழந்து திராவிட முன்னேற்றக்கழகம் என்ற உருக்குலையாத ஒரு இரும்புக்கோட்டையை உருவாக்கியவர்கள். தங்கள் இழப்புகளையெல்லாம் மறந்து தங்கள் தலைவனை முதல்வராக்கி அழகு பார்த்தவர்கள். தங்கள் தலைவனை அரியாசனத்தில் ஏற்றிவிட்ட  ஒன்றும் அறியாசனங்கள் இவர்கள். தங்கள் தலைவன் என்ன தவறுகள் செய்தாலும் அதில் ஏதாவது நியாயம் கற்பிப்பார்களே தவிர தங்கள் தலைவனை விட்டு விலகிச் செல்லமாட்டார்கள்.     
          இவர்களுக்குத் தெரியும் தங்கள் தலைவனை எப்படி மகிழ்விப்பது என்று. அதனால் தான் அவரது பிறந்தநாளுக்கு பண மாலையையும் பண சால்வையையும் அணிவித்து அவரை குஷிப்படுத்தினார்கள். பதிலுக்கு தங்கள் தலைவர் தங்களுக்கு என்ன செய்யப்போகிறார் என்ற எதிர்ப்பார்ப்போடு இவர்கள் செய்ததல்ல.
         ஆனால், இத்தனைக்காலமாக பல்வேறு இழப்புகளையும், இடையூறுகளையும் தூக்கி எரிந்து விட்டு தன்னையே பின்தொடர்ந்து வரும் இந்த தொண்டர்களுக்கு இதுவரை ஒன்றும் செய்யாத இந்த தலைவர் இனி தான் என்ன செய்யப்போகிறார்...? என்ற கேள்வி எழுகிறது. கடந்த 50 - 60 ஆண்டுகளாக இவருக்கு வாக்களித்த திமுக தொண்டன் இன்னும் அதே குடிசையிலும், ஓட்டு  வீட்டிலும் தான் இருக்கிறான். அவன் வாழ்க்கையில் இதுவரை முன்னேற்றமில்லை. தன் தலைவன் ஆட்சிக்காலத்தில் தன் பெண்டு - பிள்ளைகளுக்குக் கூட வேலை வாங்கிக்கொண்டதில்லை, வேலை ''வாங்கும்'' அளவிற்கு பொருளாதார வசதி இல்லாததால். எனக்கு தெரிந்து பல திமுகத் தொண்டர்கள் வீட்டில் சென்ற கருணாநிதி ஆட்சிக் காலத்தில் கொடுக்கப்பட்ட இலவச தொலைகாட்சி பெட்டி தான் அவர்கள் வாங்கிய முதல் தொலைக்காட்சிப் பெட்டியாக இருந்தது என்பது யாராலும் மறுக்கமுடியாத உண்மை. அப்படிப்பட்ட தொண்டர்களுக்கு இவர் என்ன செய்யப்போகிறார்....?
         இவர் இந்த 90-ஆவது வயதிலாவது இத்தனைக் காலமாக தன் குடும்பங்களுக்காக சேர்த்து வைத்திருக்கும் கணக்கிலடங்கா சொத்துக்களையும், காத்து வைத்திருக்கும் பல்வேறு கட்சிப்பதவிகளையும் தன்னுடைய விசுவாசமிக்க கட்சித் தொண்டர்களுக்கு அள்ளிக்கொடுக்கட்டும். அது தான் இவரது கட்சிக்கும், இத்தனைக்காலமாக எதையும் எதிர்பாராமல் கட்சியை காத்து நின்ற இவரது கட்சித் தொண்டர்களுக்கும் இவர் செய்யும் நல்ல செயலாக இருக்கும்.
            ''மக்கள் நலம் மக்கள் நலம் என்றே சொல்லுவார்.
             தன் மக்கள் நலம் ஒன்றேத் தான் பார்த்துக் கொள்ளுவார்'' என்ற மறைந்த எம்ஜிஆரின் பாடல் வரிகளை தன்னுடைய 90-ஆவது பிறந்தநாளில் பொய்யாக்கட்டும்.