இலங்கையில் நேற்று நடந்த ஜனாதிபதி தேர்தலில் ''மாற்றத்தை'' விரும்பிய இலங்கை மக்கள் ராஜபட்சேவை தோற்கடித்து, மைத்ரிபால சிறிசேன என்ற எதிர்க்கட்சியின் பொது வேட்பாளரை வெற்றிபெற செய்திருக்கிறார்கள். வழக்கமாக இந்திய அரசியலை போன்று ஊழல், குடும்ப ஆதிக்க அரசியல், அதிகார குவிப்பு போன்ற ராஜபக்சேவிடம் இருந்த பலகீனங்கள் மட்டுமன்றி, தமிழர்கள் மற்றும் இஸ்லாமியர்கள் மத்தியில் இவர் ஏற்பட்டுள்ள நம்பிக்கை இழப்பும் தான் ராஜபக்சேவின் தோல்விக்கு மிகப்பெரிய காரணம்.
ராஜபக்சே தோல்வி கண்டதும், தமிழகத்திலிருக்கும் கருணாநிதி, வைகோ, சீமான் போன்ற ''ஈழ விடுதலையை பற்றிப் பேசும் தமிழினத்தலைவர்கள்'' தாங்கள் வெற்றிகண்டது போல் துள்ளிக்குதிக்கிறார்கள். ராஜபக்சே தோல்வி கண்டிருக்கலாம். ஆனால் ஒரு காலத்தில் அவரோடு நெருங்கி இருந்து அமைச்சராக பணியாற்றியவர் தான் வெற்றிபெற்று இப்போது ஜனாதிபதியாக அமர்ந்திருக்கிறார் என்பதை யாரும் மறந்துவிடக்கூடாது.
இது அரசியல் மாற்றமா... அல்லது வெறும் ஆட்சி மாற்றம் தானா... காட்சி மாற்றம் தானா என்பது இனிமேல் தான் தெரியும். கடந்த ராஜபக்சேவின் ஆட்சியில் நொந்துபோன தமிழ் மக்களும், இஸ்லாமிய மக்களும் நம்பிக்கையுடன் அரசியல் மாற்றத்தை தான் எதிர்நோக்கியுள்ளனர். மாற்றத்தை விரும்பிய மக்கள் எதிர்ப்பார்ப்பது போல் அரசியல் மாற்றம் நிகழுமா...? அல்லது காட்சி மாற்றத்தோடு - ஆட்சி மாற்றத்தோடு நின்று போய் விடுமா...? பொறுத்திருந்து பார்ப்போம்.
2 கருத்துகள்:
//ராஜபக்சே தோல்வி கண்டதும், தமிழகத்திலிருக்கும் கருணாநிதி, வைகோ, சீமான் போன்ற ''ஈழ விடுதலையை பற்றிப் பேசும் தமிழினத்தலைவர்கள்'' தாங்கள் வெற்றிகண்டது போல் துள்ளிக்குதிக்கிறார்கள்.//
:)
ராஜபக்சே இனிமேல் பதவியில் இல்லை. இவங்களுக்கு அரசியல் ரொம்ப போறிங்கா இருக்க போகிறது.
//ராஜபக்சே தோல்வி கண்டிருக்கலாம். ஆனால் ஒரு காலத்தில் அவரோடு நெருங்கி இருந்து அமைச்சராக பணியாற்றியவர் தான் வெற்றிபெற்று இப்போது ஜனாதிபதியாக அமர்ந்திருக்கிறார் என்பதை யாரும் மறந்துவிடக்கூடாது. //
இரண்டு மாதங்களுக்கு முன்பு வரை ராஜபக்சேயோடு நெருங்கிய அமைச்சராக இருந்து பணியாற்றியவர்.
ஈழமக்கள் தமது பிரதிநிதியாக மைத்ரிபாலவை தெரிவு செய்து தமது ஜனாதிபதியாக்கியுள்ளனர்.அவர் தமிழர்களை கவனித்து கொள்வார்.வைகோ, சீமான், கருணாநிதி இலங்கையில் தலையிட குழப்பம் விளைவிக்க கூடாது.தங்கள் நாட்டு மக்களின் நலனை கவனித்து கொள்ளவும்.
கருத்துரையிடுக