நம் சகோதர நாடான பாகிஸ்தானில் உள்ள பெஷாவரில் பள்ளிக்கூடத்தில் படித்துக்கொண்டிருந்த ஏதுமறியா 130 அப்பாவி இளம் பிஞ்சுகளை தாலிபான் தீவிரவாதிகள் துப்பாக்கியால் சுட்டுக் கொன்று பலிவாங்கியது என்பது அமைதியையும் சகோதரத்துவத்தையும் விரும்புகிற அனைவரும் கண்டிக்கத்தக்கது.
அறிவையும், அன்பையும் அழித்துவிட்டு தீவிரவாதத்தாலோ அல்லது பயங்கரவாதத்தாலோ அல்லது கட்டாய திணிப்புகளாலோ மதங்களை வளர்த்து விட முடியாது. மதங்கள் வளர்க்கும் தீவிரவாதங்களும், தீவிரவாதங்கள் தூக்கிப்பிடிக்கும் மதங்ககளும் மானுடம் விரும்பாதவைகளே. அறிவையும், அன்பையும் அறியாதவைகளே. அறிவும் அன்பும் மழுங்கிப்போனாதால் தான் தீவிரவாதிகளின், பயங்கரவாதிகளின் துப்பாக்கி குண்டுகளும், வெடிகுண்டுகளும் அப்பாவி மக்களை நோக்கியே... ஏதுமறியா குழந்தைகளை நோக்கியே பாய்கின்றன.
அன்று ஏகாதிபத்திய பயங்கரவாதத்தால் இராக்கில் இலட்சக்கணக்கான அப்பாவி மக்களும், குழந்தைகளும் கொல்லப்பட்டது என்பதற்கும், இஸ்ரேலின் அரசு தீவிரவாதமாக மாறி பாலஸ்தீனத்தில் குழந்தைகளையும், கொல்லப்பட்டனர் என்பதற்கும், அரசு பயங்கரவாதத்தால் குஜராத் மாநிலத்தில் ஆயிரக்கணக்கான இஸ்லாமியர்கள் கொல்லப்பட்டனர் என்பதற்கும், இன்று மத தீவிரவாதத்தால் பாகிஸ்தானில் படிக்கும் தன் சொந்த குழந்தைகளை பலி வாங்கியது என்பதற்கும் அடிப்படை என்பது அறிவையும், அன்பையும் அழித்து வளரும் மதங்களே என்பது தான் உண்மை. அறிவை இழந்து மனிதத்தை அழிப்பதன் மூலம் மதங்களை வளர்க்கமுடியாது. மதங்கள் ஒழிந்துவிட்டால் மானுடம் தழைத்தோங்கும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக