திரையுலகில் தனக்கு நிகரில்லாமல் இயக்குனர் சிகரமாக அசைக்கமுடியாத அபூர்வ மனிதராய் உயர்ந்து வாழ்ந்த கே. பாலச்சந்தர் மறைந்தார். எம்.ஜி.ஆர் - சிவாஜி போன்ற முன்னணி நடிகர்கள் நடித்துக்கொண்டிருந்த காலத்திலேயே தனக்கென தனி பாணியை வைத்துக்கொண்டு, ஜெமினிகணேசன், சிவகுமார், முத்துராமன், நாகேஷ் போன்றவர்களை கதாநாயகர்களாக நடிக்கவைத்து திரைப்படங்களை இயக்கியிருக்கிறார். அதேப்போன்று அவர்கள் காலத்திலேயே கமல்ஹாசன் மற்றும் ரஜினிகாந்த் போன்றவர்களை அவர்களுக்கு இணையான கதாநாயகர்களாக மிக தைரியமாக திரையுலகிற்கு அறிமுகம் செய்துவைத்தார் என்றால் அது மிகையாகாது. பழமைகளை வலியுறுத்தும் அந்தக்காலத்திலேயே சடங்குகளையும், சம்பிரதாயங்களையும் உடைத்தெறியும் முற்போக்கான கருத்துகளை கொண்ட பலவகையான திரைப்படங்களை தந்திருக்கிறார். அதற்காக பழமைவாதிகளின் எதிர்ப்புகளுக்கும் அவர் அஞ்சியதும் இல்லை. அதேப்போல் மத்திய - மாநில அரசுகளை இடித்துரைத்தும், கிண்டலடித்தும் திரைப்படங்களை யாருக்காகவும் பயப்படாமல் இயக்கியது மட்டுமல்ல, காட்சிகளுக்கு தகுந்தாற்போல் ஆங்காங்கே கம்யூனிச சித்தாந்தங்களையும், உழைப்பாளி மக்களையும் தயங்காமல் உயர்த்திக்காட்டி வறுமையின் நிறம் சிவப்பென்று வரைந்து காட்டிய ஓவியர் கே.பி. பெரும்பாலான பாரதியின் கவிதைகளை தன்னுடைய திரைப்படங்களின் மூலம் மக்களுக்கு அறிமுகம் செய்து வைத்தவர்.
அப்படிப்பட்ட ஒரு சிறந்த இயக்குனரின் மறைவு என்பது ஈடுசெய்ய முடியாதது. மறைந்த இயக்குனர் சிகரம் கே.பி., அவர்களுக்கு எங்களின் கண்ணீர் அஞ்சலி.
2 கருத்துகள்:
இயக்குநர் சிகரம் பாலசந்தருக்கு எனது அஞ்சலி.
நீங்கள் சொன்னது எல்லாம் உண்மை.
இயக்குநர் சிகரத்திற்கு அஞ்சலிகள்.
கருத்துரையிடுக