புதன், 28 ஆகஸ்ட், 2013

உணவு பாதுகாப்புச் சட்டம் - சோனியா காந்தியின் ''முதலைக் கண்ணீர்''...!














         ஏழை மக்கள் இரவில் பசியுடன் படுக்கைக்கு செல்லக்கூடாது என்பதற்காகத் தான் உணவு பாதுகாப்பு மசோதா கொண்டுவரப்படுகிறது என்று ''அன்னை'' சோனியா நேற்று முன் தினம் ரொம்ப உருக்கமாக அந்த மசோதாவைப் பற்றி பேசும் போதே உடல் நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டிருக்கிறார். அப்பப்பா ஏழைகள் மீது என்ன அவ்வளவு அக்கறை முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு...? அந்த ஏழைகளிடம் தான் ஒட்டிய வயிறும் ஓட்டும் இருக்கிறது. ஏழைகளின் கையையும், வாயையும் கட்டிப்போட்டுவிட்டு அவர்கள் எதிரிலேயே உணவை ''பாதுகாப்பாக'' வைத்திருப்பது தான் இந்த சட்டம் என்பது அந்த மக்களுக்கு தெரியாதா என்ன...? நிச்சயம் தெரியும்.

செவ்வாய், 27 ஆகஸ்ட், 2013

மைதா புரோட்டா - விரும்பி உண்ணப்படும் நச்சு உணவு தடை செய்யப்படவேண்டும்...!


 
         தமிழகத்தில் நகரங்களில் மட்டும் அல்லாது பட்டிதொட்டியெங்கும் நீக்கமற நிறைந்திருக்கும் கடைகளில் புரோட்டா கடைகளுக்கு முக்கிய இடம் உண்டு. தமிழகம் மற்றும் கேரளாவில் மக்களால் விரும்பி உண்ணப்படும் உணவு புரோட்டாவாகும். இதிலும் எத்தனை வகை உண்டு. முட்டை புரோட்டா, கொத்து புரோட்டா, விருதுநகர் எண்ணெய் புரோட்டா, தூத்துக்குடி புரோட்டா, சில்லி புரோட்டா என்று கூறும் போதே நாக்கில் எச்சில் ஊறும். குற்றாலம் செல்லும் அனைவரும் தவறாமல் பிரானூர் பார்டரில் கிடைக்கும் புரோட்டா கடைகளுக்கு சென்று ஒருகை பார்க்காமல் திரும்புவதில்லை.
கோதுமையில் இருந்து தயாரிக்கப்படும் மைதாவில் இருந்து புரோட்டா தயாரிக்கப்படுகிறது. நமது ஊர்களில் அரிசி போல் அன்றாட உணவில் கோதுமையை பயன்படுத்தி வரும் வட இந்தியாவில் புரோட்டா விரும்பி சாப்பிடப்படுவதில்லை என்பது கவனிக்கப்பட வேண்டிய தகவலாகும். இரண்டாம் உலக போரின் போது கோதுமை பற்றாக்குறையை களைய மைதா அதிகமாக பயன்படுத்தப்பட்டது. அவ்வேளையில் புரோட்டா தமிழகத்தின் உணவுவகைகளில் ஒன்றாக மாறியது. மைதாவின் தூய வெண்மை நம் மனதைக் கொள்ளை கொள்ளச்செய்யும்.
          ஒரு நாகம் படம் எடுத்தால் பார்க்க அழகாக இருக்கும் . அதற்காக அதை கையில் எடுத்து விளையாட முடியுமா ? ஆனால் வெண்மையான மைதாவில் மறைந்திருக்கும் நச்சுப்பொருட்களை நாம் விரும்பி உண்கிறோம். அதன் மூலம் நச்சை நாமே நமது உடம்பில் ஏற்றிக்கொள்கிறோம். இந்த மைதாவில் இருந்து புரோட்டா மட்டுமல்ல, சிறியோரில் இருந்து பெரியோர் வரை விரும்பி உண்ணும் கேக் உள்ளிட்ட பல பொருட்கள் தயார் செய்யப்படுகின்றன.புரோட்டா எவ்வாறு தயாரிக்கப்படுகிறது என்பதை இங்கு விளக்க வேண்டியதில்லை. அது அனைவரும் நேரில் பார்த்த விஷயம்தான். ஆனால் மைதா எவ்வாறு தயாரிக்கப்படுகிறது என்பதுதான் இங்கு கூறப்பட வேண்டிய தகவலாகும்.
            அங்குதான் நச்சுத்தன்மை கொண்ட வேதிப்பொருட்கள் அதில் சேர்க்கப்படுகின்றன. அவைதான் உடம்பில் சேரும் நச்சுப்பொருட்களாகும் .முதலில் கோதுமையை நன்றாக தீட்டுகிறார்கள். கோதுமையில் இருந்து தவிடும் நுண்ணுயிரிகளும் தீட்டுதலின் மூலம் நீக்கப்படுகின்றன. பின்னர் அதை மாவாக அரைக்கிறார்கள். அந்த மாவு நல்ல மஞ்சள் நிறத்தில் இருக்கும். பின்னர் அந்த மாவில் பென்சாயில் பெராக்சைடு (BENZOYL PER OXIDE) எனும் வேதிப்பொருளை கலக்குகிறார்கள். இந்த வேதிப்பொருள் கோதுமை மாவில் உள்ள மஞ்சள் வண்ணத்தை நீக்கி தூய வெண்மையாக மாற்றுகிறது.
         இந்த வேதிப்பொருள் ஒரு நச்சாகும். தலைமுடியை கறுப்பாக மாற்றும் சாயத்தில் சேர்க்கப்படும் வேதிப்பொருள் இது. இது மைதாவில் உள்ள மாவுப்பொருளுடன் இணைந்து உருவாக்கும் நச்சுப்பொருள் சர்க்கரை வியாதிக்கு காரணியாகிறது. மைதாவை மிருதுவாக மாற்றுவதற்கு அல்லோக்சான் எனும் வேதிப்பொருள் கலக்கப்படுகிறது. இது கலக்கப்பட்டவுடன் மைதா வெகுமிருதுவாக மாறுகிறது.
               சர்க்கரை வியாதிக்கு மருந்து தயாரிக்கும் ஆலைகளில் உள்ள சோதனைச்சாலைகளில் தயாரிக்கப்படும் மருந்துகள் முதலில் வெள்ளெலி, சிறுபன்றி, குரங்கு ஆகிய விலங்கினங்களிடம் சோதித்துப் பார்க்கப்படுகின்றன. இந்த மிருகங்களுக்கு சர்க்கரை வியாதியை உண்டாக்க இந்த அல்லோக்சான் ஊசி மூலம் செலுத்தப்படுகிறது. இந்த அல்லோக்சான் சேர்க்கப்படும் மைதாவை உண்பவர்களுக்கு சர்க்கரை நோய் உருவாகத்தானே செய்யும்.
              இவை தவிர மைதாவில் செயற்கை வண்ணங்கள், தாது எண்ணெய்கள், சுவையூட்டிகள், பதனப்பொருட்கள், வெள்ளை சீனி, சாக்கரின், அஜினோமோட்டோ ஆகிய பொருட்களும் சேர்க்கப்படுகின்றன. இவை மைதாவை மேலும் அபாயகரமானதாக மாற்றுகின்றன. இவை தவிர குளோரின் டை-ஆக்சைடு, பொட்டாசியம் புரோமைட், அம்மோனியம் கார்பனேட், சுண்ணாம்பு, சார்பிடன் மோனோ சாச்சுரேட் போன்றவைகளும் கலக்கப்படுகின்றன. கோதுமை தீட்டப்படும் போதே 76 விழுக்காடு வைட்டமின்களும், தாது பொருட்களும் அகற்றப்படுகின்றன. அத்துடன் 97விழுக்காடு நார்ச்சத்தும் களையப்படுகிறது. களையப்பட்ட சத்துகளை மீண்டும் சேர்க்க செயற்கையாக உருவாக்கப்படும் வைட்டமின்களும், தாதுப்பொருட்களும் கூட்டப்படுகின்றன. ஆனால் இவை இயற்கையாக கிடைப்பவற்றுக்கு இணையானவை அல்ல.
          நார்ச்சத்து இல்லா உணவு நமது செரிமான சக்தியை அழித்து விடுகின்றன. எனவே இவற்றை குழந்தைகளுக்கு அளிப்பதை தவிர்ப்பது நல்லது. மைதாவில் சத்துக்கள் எதுவும் இல்லை. வெறும் சக்கையைத்தான் நாம் உண்கிறோம். ஐரோப்பிய ஒன்றியம், பிரிட்டன், சீனா ஆகிய நாடுகளில் மைதாவில் தயாராகும் பொருட்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. நீரிழிவு நோய் மருத்துவர்களும், இருதய நோய் மருத்துவர்களும் புரோட்டா சாப்பிடுவதை எதிர்த்து குரல் கொடுத்து வருகின்றனர். நாம் என்ன உண்ண வேண்டும் என்பதை நாம்தான் தீர்மானிக்க வேண்டும். இன்றைய கார்ப்பரேட் நிறுவனங்கள் தொலைக்காட்சிகளில் வெளியிடும் விளம்பரங்களை கண்டு நாம் ஏமாந்து விடக்கூடாது. மைதா நமக்கு நன்மை பயக்காது. அதன் உற்பத்தியாளர்களுக்கு அள்ளிக்கொட்டும் காமதேனு. நமக்கு அது நச்சாகும்.
          கேரளாவில் புரோட்டாவின், மைதாவின் தீமைகள் குறித்து பிரச்சாரம் தொடங்கி விட்டனர். புரோட்டா குறித்து ஒரு ஆய்வு செய்ய வேண்டும் என்று அப்போல்லோ மருத்துவமனை இதயநோய் மருத்துவர் ஏ.மாதவன் ஒரு பேட்டியில் கூறியுள்ளார். இப்போதாவது நாம் விழித்துக்கொண்டு நம்மையும், நமது அடுத்த தலைமுறையையும் காப்போம். பாரம்பரியமான கேப்பை, கம்பு, சோளம், வரகு, திணை ஆகியவற்றில் இருந்து தயாராகும் உணவுகளை உட்கொண்டு ஆரோக்கியமாக வாழ்வோம்.
நன்றி :


திங்கள், 26 ஆகஸ்ட், 2013

ராமாயணத்திற்கு வரலாறு உண்டு... ஆனால் ராமனுக்கு....?


               “ராமாயணத்துக்கு வரலாறு உண்டு; ராமனுக்கு வரலாறு இல்லை” என்பது நமது நாட்டின் முதலாவது பிரதமர் ஜவஹர்லால் நேருவால் அமைக்கப்பட்ட 30 அறிஞர்கள் குழு கண்டறிந்த உண்மை.        - தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்க பொதுச்செயலாளர் தோழர். சு. வெங்கடேசன் பேச்சு...    
 
                பண்பாட்டு அமைப்பான தமுஎகச இது பற்றி ஏன் விவாதிக்கிறது என்ற கேள்வியை எழுப்பி ராமர் பாலம் என்ற கட்டுக்கதை வரலாறாக முன்வைக்கப்படுவதால் தான் இதனை நாம் எடுக்கிறோம் என்ற முன்வைப்போடு நிறைவுரையைத் தொடர்ந்தார் சு.வெங்கடேசன்.
           “கட்டுக்கதைகள் அல்ல வரலாறு; விஞ்ஞான பூர்வமான தரவுகளால் நிரூபிக்கப்பட் டது தான் வரலாறு என்பதை உரக்கப் பேசவேண்டும்; உணர்த்த வேண்டும். ''பூர்வீக ராமகதை, புத்த ஜாதகக்கதை, வால்மீகி ராமாயணம்'' என்ற மூன்று தொன்மையான கதைகளில் சீதையின் பிறப்பு மூன்று விதமாகக் கூறப்படுகிறது. ஒரு கதை சீதையை ராமனுக்கு சகோதரி என்கிறது. மற்றொன்று சீதையை ராவணனின் மகள் என்கிறது. மூன்றாவது கதை ஜனகனின் மகள் என்கிறது. புத்த ஜாதகக்கதையில் ராமனுக்கு சீதை சகோதரி.
           அன்றைய தசரதனின் தலைநகரம் வாரணாசி; ராமன் வனவாசம் போன இடம் இமயமலை; வால்மீகி ராமாயணத்தில் இவர்கள் கணவன் மனைவியாக இருக்கிறார்கள். தசரதனின் தலைநகரம் அயோத்தி. ராமன் வனவாசம் போன இடம் தண்டகாரண்யம். ஆதிராமாயணத்திற்குப் பிறகு ராமாயணம் தண்டகாரண்யத்திலிருந்து இறங்கி இலங்கைக்கு வந்து சேர்கிறது. 
               நாடு சுதந்திரம் அடைந்தபிறகு 1951-ல் பிரதமர் நேரு ஒருவேலை செய்தார்; வரலாற்றுப் பேராசிரியர் ஜி. எச். பட் தலைமையில் ஒரு குழு அமைத்தார். பல ஆயிரம் ராமாயணங்கள் இருக்கிறதே. இவற்றைத் தொகுத்து ஆய்வு செய்ய 30 அறிஞர்களைக் கொண்ட குழு அமைக்கப்பட்டது. அந்தக் குழு ஏறத்தாழ இரண்டாயிரத்து ஐநூறு ராமயண ஏடுகளை ஆராய்ந்து 87 ஏடுகளைக் கண்டறிந்து மிகப் பெரிய ஆய்வைச் செய்தார்கள்.
           மேற்குப்பகுதியிலிருந்து தெற்கு நோக்கி நகர்ந்த ராமாயணக்கதைகள் வடக்கு நோக்கி நகர்ந்து சீனத்துக்குப் போன ராமாயணக்கதைகள் கிழக்கு நோக்கி வடகிழக்கு நோக்கிப் போன ராமாயணக் கதைகள் எப்படி மாறி மாறி சென்றிருக்கின்றன என்பது குறித்து மிகச் சிறந்த ஆய்வை அவர்கள் செய்திருக்கிறார்கள். அந்த ஆய்வு சொல்கிற உண்மை என்னவென்றால் ராமாயணத்திற்கு வரலாறு உண்டு; ஆனால் ராமனுக்கு வரலாறு இல்லை. இது ஜவர்ஹர்லால் நேரு அமைத்தக்குழு விஞ்ஞான பூர்வமாக ஆய்வு செய்து தீர்மானித்த விஷயம். தசரத ராமாயணம் என்ற ஒன்று இருக்கிறது. இதன் சமஸ்கிருத மூலப்பிரதி கிடைக்கவிலலை. சீன மொழிபெயர்ப்பு கிடைக்கிறது. அதில் விசேஷம் என்ன வென்றால் சீதை என்கிற கதாபாத்திரமே இல்லை. அப்புறம் எங்கே சீதையை ராவணன் கடத்துவது? சண்டைபோடுவது? மகாபாரதம் ராமாயணக்கதையைப் பேசுகிறது. சாந்தி பருவத்தில் முழு ராமாயணக் கதையும் பேசப்படுகிறது. அதில் சீதை வனவாசம் போனவிஷயமே கிடையாது.
இங்கே பேசுகிற ராமகதை உண்மையென்றால் மகாபாரதத்தை நீங்கள் (இந்துத்வா வாதிகள்) நிராகரிக்கிறீர்கள் என்று அர்த்தம். மகாபாரதத்தை ஏற்றுக் கொண்டால் ராமகதையை நிராகரிக்கிறீர்கள் என்று அர்த்தம். ராமாயணத்தைத் தமிழில் தந்த கம்பன் மிகப் பெரிய கவிப்பேரரசு. சந்தேகமே இல்லை. அவனது ராமாயணத்தில் குறிப்பிடப்பட்டுள்ள அகலிகை கதை 10 -ஆம் நூற்றாண்டுக்குப் பின் எழுதப்பட்ட எந்த ராமாயணத்திலும் இல்லை. வால்மீகி ராமாயணத்தில் இந்திரனுக்கு கவுதம முனிவர் சாபம் கொடுக்கும் போது தலைமைப் பதவியை இழப்பாய் என்றும் எந்த வெற்றியையும் பெறமாட்டாய் என்றும் கூறியதாகத் தான் இருக்கிறது. ஆனால் கம்பனோ எதற்கு நீ ஆசைப்பட்டாயோ அந்தப் பெண் குறி உன் உடல் முழுவதும் தோன்றட்டும் என்று இந்திரனுக்கு சாபம் கொடுத்ததாகக் கூறுகிறான்.
          தமிழகத்தின் காதல் கடவுள். இந்திரனுக்கு விழா எடுக்கப்பட்டதை சிலப்பதிகாரம் பக்கம் பக்கமாக பேசும். சாதி கடந்து ஆண்களும் பெண்களும் இந்திரனை வழிபட்டார்கள். அப்படிப்பட்ட இந்திரன் அசிங்கமானவன்; ஆயிரம் பெண்ணுறுப்புகளை உடையவன்; வழி படத்தகுந்தவன் அல்ல என்று கூறி மக்களின் பொதுப் புத்தியிலிருந்தே இந்திரனை அகற்றிய வேலையைக் கம்பன் செய்திருக்கிறான். 
       அதேபோல் அணில் கதை - ராமன் பாலம் கட்டும் போது உடலை மணலில் உருட்டி பாலத்தின் மேல் உதிர்த்து உதவியதால் தடவிவிட்ட கோடுகளே அணிலுக்கு அழியாமல் இருக்கின்றன என்ற கதை - உங்களுக்குத் தெரியும். வால்மீகி ராமாயணம் தொடங்கி கேரளாவில் எழுதப்பட்ட எழுத்தச்சன் ராமாயணத்திலிருந்து, ஆந்திராவில் எழுதப்பட்ட பசவய்யா ராமாயணம் வரை எதிலும் அணில் கதை  இல்லை. இது கம்பன் விட்ட (கற்பனைக்) கதை. இப்படி ஆளாளுக்கு விட்ட கதைகளின் தொகுப்பு தான் ராமாயணம். ராமாயணக்கதை விந்தியமலைக்குத் தெற்கே நிகழ்ந்திருக்க வாய்ப்பே இல்லை என்று அமிர்தலிங்க அய்யரும் பரமசிவ அய்யரும் ஆராய்ந்து உறுதிப்படுத்தியிருக்கிறார்கள்.
           ஒருவாதத்திற்காக ராமன் தெற்கே வந்து இலங்கைக்குப் போனான் என்று வைத்துக் கொண்டாலும் பாலம் கட்டியது எங்கே? ராமேஸ்வரத்திலிருந்தா? கன்னியாகுமரியிலிருந்தா? சீவகசிந்தாமணி சொல்கிறது “குரங்கு செல்கடல் குமரியம் பெருந்துறை” குமரி முனையிலிருந்து ராமன் பாலம் கட்டினான் என்று சீவகசிந்தாமணி சொல்கிறது; சிலப்பதிகாரம், மணிமேகலை, பெருங்கதை போன்ற தமிழ் இலக்கியங்களும் சொல்கின்றன. இவையெல்லாம் புத்த, சமண இலக்கியங்கள் பொய் சொல்லிவிட்டன என்று வைத்துக் கொண்டாலும் வேறெந்த தமிழ் இலக்கியமும் ராமேஸ்வரத்திலிருந்து பாலம் கட்டியதாக சொல்லவில்லை. குமரி அம்மன் கோயில் தலபுராணம் என்ன சொல்கிறது? குமரி அம்மனை வழிபட்டு விட்டுத் தான் ராமன் பாலம் கட்டினான் . அதனால் தான் பாதுகாப்பாக அதனைக் கட்ட முடிந்தது என்கிறது.
        ராமேஸ்வரத்திலிருந்து பாலம் கட்டியது தான் உண்மை என்றால் குமரியம்மன் தலபுராணத்தை எரித்துப் போட நீங்கள் தயாரா என்று சனாதனிகளைப் பார்த்து நாம் கேள்வி எழுப்ப வேண்டியுள்ளது. அதுமட்டுமல்ல குமரிமாவட்டத்தில் உள்ள மருந்துவாழ்மலை, தாடகை மலை, மகேந்திரகிரி, முன்சிறை, சுசீந்திரம், ஜடாயுபுரம், சங்குத்துறை போன்ற பெயர்கள் ராமாயணத்தோடு தொடர்புடையவை. முன்சிறையில் இருக்கிற ஊற்றுக்கு ஒரு புராணக்கதை உண்டு; ராவணன் சீதையைத் தூக்கிச் சென்றபோது புஷ்பகவிமானம் பழுதாகிவிடுகிறது. அந்த இடத்திலே இறக்கி பழுது நீக்கி மீண்டும் சென்றான். அப்போது சீதை வடித்த கண்ணீர் தான் ஊற்றாக இன்னமும் வருகிறது என்று நம்பி மக்கள் வழிபடுகிறார்கள். ராமநாதபுரம் மாவட்டத்தில் ராமாயணத்தோடு தொடர்புடைய எந்த ஊரும் இல்லை. இடங்களும் இல்லை. இதனால் ராமன் பாலம் கட்டியது ராமேஸ்வரத்திலிருந்து அல்ல கன்னியாகுமரியிலிருந்து தான் என்று சொல்வது நமது நோக்கம் அல்ல. காலம் காலமாக சொல்லப்பட்டு வரும் கதைகளை ஒவ்வொரு பகுதியினரும் தங்கள் பகுதியோடு ஏற்றிப்பார்க்க நினைப்பது மக்கள் வழக்கம் என்பதுதான்.
              ராமனை வரலாற்று நாயகனாக சுவாமி விவேகானந்தரும் ஏற்றுக் கொள்ளவில்லை. 1892 - ஆம் ஆண்டு பிப்ரவரி 4ம் தேதியிட்ட ஹிந்து நாளிதழில் அவரது பேட்டி வெளிவந்திருக்கிறது. ராமனோ கிருஷ்ணனோ வரலாற்று நாயகர்களாக இருக்க வேண்டிய அவசியம் இல்லை; தனி நபர்களை வரலாற்று நாயகர்களாக ஏற்கும் அளவுக்கு இந்து மதம் பலவீனமாக இல்லை. உலகில் இரண்டே வரலாற்று நாயகர்கள் தான் இருக்கிறார்கள் ஒருவர் நபிகள்நாயகம்;  இன்னொருவர் கவுதம புத்தர் என்று அந்த பேட்டியில் கூறியிருக்கிறார்.
          எனவே ராமன் பாலம் என்ற கட்டுக் கதையை வரலாறாகத் திரித்துக் கூறும் இந்துத்துவவாதிகளை மக்களிடம் அம்பலப்படுத்துவதற்கும் - தமிழர்களுக்கும், தமிழ் இலக்கியங்களுக்கும் அவர்கள் இழைத்த துரோகத்தை வெளிப்படுத்துவதற்கும் சேதுசமுத்திரத்திட்டத்தை நாம் கருவியாக எடுக்க வேண்டும்.  கட்டுக்கதைகளை உடைப்பதன் மூலம் சேதுசமுத்திரத்திட்டம் நிறைவேற்றப்படுவதற்கான தளத்தை அமைக்கவேண்டும்.

நன்றி :

ஞாயிறு, 25 ஆகஸ்ட், 2013

The Death - Throes of Neo-Liberalism...!


BY  Prabhat Patnaik, Economist                           
  
         THE “Black Monday” when the rupee tumbled to as low as 63 per US dollar and the Sensex took a further fall after already having plunged the day before, is indicative of the seriousness of the malady that afflicts the Indian economy. Three main kinds of explanation have been offered by economic commentators for this malady. Let us examine these seriatim.
            The first, put forward by no less a person than Raghuram Rajan, prior to his recent appointment as governor of the Reserve Bank of India, traces it to the fact that the era of “quantitative easing” is coming to an end in the US. The prospect of this happening was announced by Ben Bernanke, chairman of the Federal Reserve Board, on May 22. Till now the Federal Reserve was pursuing a policy of buying government bonds in the market, and in the process keeping the long-term interest rates low in the US economy, while pumping liquidity into the system. This also meant that finance was flowing into other economies where interest rates were more attractive, and thereby shoring up their currencies. In the wake of Bernanke’s announcement, of no more than merely an intention, the long-term interest rates are already hardening in the US, causing an appreciation of the US dollar vis-a-vis the rest of the world’s currencies, especially those of “emerging markets economies ” like Brazil, South Africa, Indonesia and India.
          The problem with this explanation however is that the collapse of the rupee did not begin with May 22. In fact, the rupee has been going down for quite some time. True, there has been a sharp fall in its external value in the more recent period, as has been the case with several other currencies, but focussing only on Bernanke’s statement on May 22 as an explanation for its travails is seriously misleading: it glosses over the declining tendency of the currency operating over a longer period.
           The second explanation also focuses on the strengthening of the dollar, but traces it to a revival of growth in the US economy. In fact the episode of the rupee’s tumble and the fall in Sensex by 700 that occurred prior to the “Black Monday” was attributed by many to the release of US unemployment figures which showed a decline in this rate. Wealth-holders, it was suggested, were now beginning to move back to the US from several “emerging market economies”, buoyed by the prospects of a revival in its growth, and this fact underlay the depreciation of the latter’s currencies.
              This explanation too, like the first one, misses the longer-term tendency for the rupee’s decline. Besides, this explanation runs counter to the first explanation. If long-term interest rates are hardening in the US then that would snuff out its growth prospects. Even the growth that is alleged to be occurring in the US is a matter of dispute, since there has been a change in the GDP estimates of that country, which, many argue, has spuriously overestimated recent growth. In addition, however, such growth as has been occurring is likely to be related to the policy of “quantitative easing” whose end will certainly put a damper upon it. In fact, the best description that has been offered of the state of the US economy is that it “is bumping along the floor”. When it bumps up a little, a lot of noise is made about its recovery; but this noise subsides when it gets back to the floor. This has been happening for quite some time now.
              The third explanation for India’s current economic woes focuses on India-specific factors. The most important of these of course is the massive current account deficit, of 4.8 percent of GDP. Since the government itself, committed to attracting foreign investment of all descriptions, thinks that capital inflows can at best finance a current deficit of only 2.5 percent of GDP, a deficit of 4.8 percent is bound to put pressure on the rupee.

WIDENING CURRENT ACCOUNT DEFICITS                                  

But, as already seen, the depreciation in currencies is not confined to the rupee alone; and if the wave of depreciations across countries has to be explained in terms of a widening of the current account deficits in all these countries, then two questions immediately arise: first, why should there be such a widening of deficits across countries? And second, why should there be such a wave of massive depreciations everywhere even though there are major differences across them in the ratio of current deficits to GDP? The pressure on the rupee owing to India’s widened current account deficit in short, while indisputable, needs to be located within a larger context.
         Then there are other kinds of India-specific explanations: Pranab Mukherjee’s stint as finance minister, when he presented a budget that ( by trying inter alia to plug the “Mauritius route” for the entry of foreign direct investment ) undermined the “confidence of investors” about India’s commitment to “reforms” (!); Chidambaram’s loss of nerve in pursuing “reforms”; the recent “desperate” measures consisting of a clutch of capital controls and import restrictions that the government has introduced for shoring up the rupee which have frightened investors; and so on. But these explanations, usually picked up from random gossip, or stray reactions of speculators, are both intellectually unconvincing in themselves, and also oblivious of the depreciation of currencies vis-a-vis the US dollar that is occurring across the world; they need not be taken seriously.
              It follows then that the standard explanations which have been advanced by commentators to explain India’s current economic travails are unconvincing. While the India-specific explanations do not reckon with the similar experience of other countries, the more general explanations, relating to all countries experiencing currency depreciations, focus only on short-term factors, and lack any structural location. What is needed is a general explanation (to which some India-specific factors may be additional contributors) which is located in the structure of contemporary capitalism. And any such explanation has to reckon with the deep and protracted crisis that world capitalism is currently experiencing.
           The talk of the US coming out of this crisis, is, as we have seen, unfounded. Europe continues to be enmeshed in it with no end in sight. And now even the hitherto rapidly-growing third world economies are coming under its impact. The growth rate is palpably slowing down in China; it has slowed down in India; and the Chinese slow-down is beginning to affect Brazil and other Latin American countries which are major commodity exporters to China. In short, the world recession is now spreading. There was a period when because of the domestic fiscal stimulus, non-metropolitan economies gave the impression that they would escape the recession. They might have done so if the recession itself had been a brief affair; but given its protracted nature it has eventually affected them too. And the modus operandi of this spread is the widening current deficit.
                If the growth rate slows down in the advanced capitalist economies but does not do so in these third world economies, then their imports continue to grow rapidly even as their exports dwindle. This has two effects: one, a reduction in their level of aggregate demand; and two, a widening of their current account deficit. (Some countries like China may escape such widening of current deficit but others are bound to be affected by it). Even if domestic fiscal stimuli can counter the first effect they cannot counter the second. Continuing recession in the advanced capitalist world therefore worsens the current deficits of the hitherto rapidly-growing third world economies.
GREATER DISTRESS TO THIRD WORLD PEOPLE                         

              At the same time however, it tends to dry up the flow of finance from the metropolitan economies to these economies, because of the general loss of exuberance among speculators which a recession inevitably engenders. For a while, no doubt, such drying up may not happen because of the formation of property-price or stock-market “bubbles” in these economies, but as these “bubbles” begin to collapse, the flow of external finance too dries up. The combination of larger current deficits and drying up financial inflows inevitably puts pressure on the currency; and to put a restraint upon the depreciation of the currency domestic expenditure is curtailed, which chokes off growth. The combination of currency depreciation, accelerated inflation (because of such depreciation), and choking off of growth that we find in India and a host of other “emerging-market economies” is a fall-out therefore of the world capitalist crisis.
                This is not a new story. World capitalist crises inevitably bring greater distress to the people of the third world, even compared to the pre-crisis levels of acute distress. This is exactly what had happened in India in the 1920s and 30s when the peasants and agricultural labourers had experienced acute declines in their incomes. The move away from the free market, the entrusting of the responsibility of protecting the people against the vicissitudes of the market, the delinking from the world economy through capital controls and trade restrictions so that the State could discharge this responsibility, had been a result of that experience.
In short, neo-liberalism is not a new discovery of wisdom. Economies in the world, including in particular the Indian economy, had experienced “economic liberalisation” with a vengeance in the colonial period, until some halting departures were made in the wake of the crisis in the late twenties and the thirties. It is only after independence that a full-scale dirigiste regime was introduced. But its rationale lay in the experience of the crisis of the inter-war years.
As the world economy was growing in the nineties and the first few years of the current century, neo-liberalism which had replaced dirigisme appeared to many, especially to those from the urban middle class who benefited from it (though not to the workers and peasants who were victims of it), as the acme of wisdom. But now with a prolonged crisis reminiscent of the 1930s once more engulfing world capitalism, the dangers of neo-liberalism, the fact that it makes both its earlier beneficiaries and its earlier victims, worse off, are beginning to become clearer.
A struggle between two contradictory positions therefore is going to dominate economic discourse in the country in the days to come. The first of these, which offers little hope, presses for sinking deeper into neo-liberalism as the means to overcome the crisis; the second of these, the only one that offers any hope, presses for extricating the economy from its clutches as the means to overcome the crisis. 

courtesy :

People's Democracy

சனி, 24 ஆகஸ்ட், 2013

நாட்டையே தொலைத்தவர்கள் கோப்புகளை தொலைத்துவிட்டார்கள் - சாதனை ஆட்சியாளர்கள்...!


                                                
சரித்திர சாதனை....!
                                                        
        
          சுதந்திர இந்தியாவில் இதுவரை 14 பிரதமர்கள் பதவி வகித்திருக்கிறார்கள். அவர்கள் யாருக்குமே இல்லாத பெருமைகள் இன்றைய பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு மட்டுமே உண்டு. தனது ஒன்பது ஆண்டு பதவிக் காலத்தில், இதற்கு முன் எந்தப் பிரதமரின் ஆட்சியிலும் இல்லாத அளவுக்கு ஊழல்களும் முறைகேடுகளும் நடந்திருக்கின்றன என்று அவர் பெருமைப்பட்டுக் கொள்ளலாம். அதைவிடப் பெரிய சாதனை, ஒரு மிக முக்கியமான வழக்கு விசாரணையுடன் தொடர்புடைய 257 கோப்புகளை காணவில்லை, மாயமாக மறைந்து விட்டன என்று கிஞ்சித்தும் கூச்சமில்லாமல் சொல்லும் முதல் அரசும் மன்மோகன் சிங் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசாகத்தான் இருக்கும்.
             நிலக்கரிச் சுரங்க ஒதுக்கீட்டு விவகாரத்தில் நடந்த முறைகேடுகள் தொடர்பான 257 கோப்புகள் சொல்லி வைத்தாற்போல காணாமல் போவது என்பது எப்படி நடந்திருக்க முடியும்? மாயமாய் மறைந்துவிட்ட 257 கோப்புகளில், 157 கோப்புகள், நரசிம்மராவில் தொடங்கி அடல் பிகாரி வாஜ்பாய் வரையிலான நான்கு பிரதமர்கள் பதவியில் இருந்த 1993 முதல் 2004 வரையிலான காலகட்டத்தில் செய்யப்பட்ட நிலக்கரிச் சுரங்க ஒதுக்கீடு தொடர்பானவை. ஏனைய 100 கோப்புகள் பிரதமர் மன்மோகன் சிங்கின் ஆட்சிக்காலத்தைச் சேர்ந்தவை. இதில் வேடிக்கை என்னவென்றால், 2006 முதல் 2009 வரை, சம்பந்தப்பட்ட துறை, நேரடியாக பிரதமர் மன்மோகன் சிங்கின் பொறுப்பில் இருந்தது என்பதுதான்.
           இந்தக் கோப்புகள் என்னென்ன பிரச்னைகள் தொடர்பானவை தெரியுமா? நிலக்கரிச் சுரங்க ஒதுக்கீடு தொடர்பான விண்ணப்பங்கள், அந்த விண்ணப்பங்கள் பற்றிய விவரங்கள், நிராகரிக்கப்பட்ட விண்ணப்பங்கள் என்ன காரணங்களுக்காக நிராகரிக்கப்பட்டன என்பது தொடர்பான குறிப்புகள், சுரங்க ஒதுக்கீட்டிற்காக என்னென்ன விதிமுறைகளும், வரைமுறைகளும் கடைப்பிடிக்கப்பட்டன என்கிற விவரங்கள், ஒதுக்கீடு பெறப்பட்டதால் லாபமடைந்த நிறுவனங்களும் அவர்களது பின்னணியும், மாநில அரசு அல்லது மத்திய நிலக்கரி அமைச்சகத்தால் இன்னாருக்கு ஒதுக்கீடு செய்யவேண்டும் என்று கோரும் பரிந்துரைகள் போன்றவைதான் காணாமல்போன கோப்புகளில் காணப்பட்ட விவரங்கள்.
           உதாரணத்திற்கு, காங்கிரஸ் எம்.பி. நவீன் ஜிண்டாலின் நிறுவனம் அளித்திருந்த தவறான தகவல்கள், இன்னொரு காங்கிரஸ் எம்.பி.யான விஜய் தாப்தாவின் கோரிக்கையைப் பரிசீலிக்கும்படி பணித்த மாநில, மத்திய அரசுகளின் பரிந்துரைகள் போன்றவையும் இந்த காணாமல்போன கோப்புகளில் காணப்பட்டவைதான்.
             ஆரம்பம் முதலே, நிலக்கரிச் சுரங்க ஒதுக்கீடு தொடர்பான சி.பி.ஐ.யின் விசாரணையை முடக்கவும், தடம் புரளச் செய்யவும் என்னென்ன செய்ய முடியுமோ அதை எல்லாம் அரசு செய்து வந்திருக்கிறது. இதனை உணர்ந்துதான் உச்ச நீதிமன்றம் தனது நேரடிக் கண்காணிப்பில் சி.பி.ஐ. இந்த விசாரணையைத் தொடர வேண்டும் என்று உத்தரவிட்டது.
             அப்படியும்கூட, சி.பி.ஐ. உச்ச நீதிமன்றத்திற்கு அளித்த வழக்கு நிலவர வரைவு அறிக்கையை சட்ட அமைச்சரும், பிரதமர் அலுவலக அதிகாரிகளும் மாற்றியும் திருத்தியும், அந்த அறிக்கையை நீர்த்துப்போகச் செய்தனர் எனும்போது, இப்போது ஒட்டுமொத்தமாக கோப்புகளே காணாமல் போயிருப்பதாகக் கூறுவதில் வியப்பொன்றும் இல்லை.
               அது மத்திய அரசோ, மாநில அரசோ பிரிட்டிஷாரால் உருவாக்கப்பட்டிருக்கும் இந்திய நிர்வாக அமைப்பின் சிறப்பே, தேவைப்படுகிற எந்தவொரு கோப்பையும் 24 மணி நேரத்திற்குள் கண்டுபிடித்து விடலாம், நகலெடுத்து விடலாம் என்பதுதான். ஒவ்வொரு கோப்பும் ஒன்றுக்கு நான்கு இடங்களில் பதிவாகும் விதத்தில் அமைந்ததுதான் இந்திய நிர்வாக அமைப்பு. ஆனால், அரசு கூறுகிறது, குறிப்பிட்ட 257 கோப்புகள் சம்பந்தப்பட்ட எல்லா தடயங்களும் மறைந்துவிட்டன என்று.
              கோப்புகளைக் கண்டுபிடித்துக் கொண்டு வாருங்கள் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டதால் தேடுதல் குழு ஒன்று அமைத்தார்கள். அந்தக் குழுவின் பரிந்துரை என்ன தெரியுமா? விண்ணப்பித்தவர்களிடமிருந்து அவர்கள் கொடுத்த தகவல்களை மறுபடியும் கேட்டு வாங்கலாம் என்பது. குற்றவாளியிடம் காரணம்கூறச் சொல்லும் கதையாக அல்லவா இருக்கிறது இது!
              கோப்புகளைக் காணவில்லை என்றால் உடனே என்ன செய்ய வேண்டும்? அதைப் பாதுகாக்கத் தவறியவர்கள்மீது நடவடிக்கை எடுப்பதுதானே நியாயம்? கோப்புகளைத் தேடி எடுக்கக் குழுவை அமைத்திருக்கிறார்களே தவிர, அதற்குப் பொறுப்பான அதிகாரிகளைக் கைது செய்து விசாரணை நடத்தவில்லையே, ஏன்? இதிலிருந்தே எதையோ மறைக்கப் பார்க்கிறார்கள் என்று தெரிகிறது.
                 பிரதமர் உள்ளிட்ட முக்கியமான நபர்கள் மாட்டிக் கொள்வதைவிட கோப்புகளைத் தொலைத்ததற்கு உச்ச நீதிமன்றத்தின் கண்டனத்தையும், எதையும் மறந்துவிடும் மக்கள் மன்றத்தின் விமர்சனங்களையும் ஏற்றுக் கொள்வது என்று முடிவெடுத்து விட்டார்களோ என்னவோ?
              மிக முக்கியமான கோப்புகளைக்கூட பத்திரமாகப் பாதுகாக்கத் தெரியாத அரசின் பாதுகாப்பில் 120 கோடி இந்தியர்களின் தலையெழுத்தும் வருங்காலமும் ஒப்படைக்கப்பட்டிருக்கிறது. நாடாளுமன்றம் நடந்தால் என்ன நடக்காமல் முடங்கினால்தான் என்ன?
நன்றி :




வெள்ளி, 23 ஆகஸ்ட், 2013

பிரதமர் பதவிக்காக வெட்கங்கெட்டு அலையும் நரேந்திர மோடி...!

  
          பிரதமர் பதவிக்காக தீயா வேலை செய்யும் நரேந்திர மோடியை நினைச்சாலேயே நமக்கு அருவருப்பா இருக்கு. மோடியின் மோசடி செயல்களுக்கு ஒரு அளவே இல்லாம போயிட்டு இருக்கு. வெள்ளத்தில் மாட்டிக்கொண்ட 15,000 குஜராத்திகளை அனுமான் போல் தோளில் தூக்கிக்கொண்டு காப்பாற்றினார் என்ற அப்பட்டமான பொய்யை தொலைக்காட்சிகளிலும், பத்திரிக்கைகளிலும் அவிழ்த்துவிட்டு, பின்னர் அப்படியெல்லாம் நடக்கவில்லை என்ற உண்மை செய்தி ஊடகங்களில் வந்த பின்னும் வெட்கமே இல்லாமல் நடமாடிக்கொண்டிருக்கும் நரேந்திர மோடி, தற்போது   இன்னொரு பொய் மூட்டையை அவிழ்த்து விட்டிருக்கிறார். 
         2014 பொதுத்தேர்தலுக்குப் பின் நரேந்திர மோடி தான் பிரதமராக வருவார் என்று பழம்பெரும் இந்தி திரைப்படக்கலைஞர் அமிதாப்பச்சன் பேசுவது போன்ற ஒரு ''கள்ள'' வீடியோ பதிவை வலைத்தளங்களில் பரவவிட்டிருக்கிறார். இந்த விஷமத்தனமான வீடியோவைப் பார்த்து அமிதாப்பச்சனே அதிர்ந்து போயிருக்கிறார். ஏன்னா... அந்த வீடியோவில வருபவர் அவர் தான்... ஆனால் நரேந்திர மோடி பற்றிய பேச்சு அவருடையது இல்லை. ''இது ஒரு போலி வீடியோ... 2007 - ஆம் ஆண்டு வேறு ஒரு நிகழ்ச்சிக்காக   எடுக்கப்பட்ட வீடியோவை, நரேந்திர மோடிக்கு ஆதரவாக நான் பேசியது போல் வேறு ஒருவரை வைத்து பேசவைத்து பிரச்சாரத்திற்காக தவறாக பயன்படுத்தி இருக்கிறார்கள். இது கண்டிக்கத்தக்கது. இது போன்று செய்தவர்கள் மீது கடுமையாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.'' என்று அமிதாபச்சன் கடுமையாக கோபப்பட்டிருக்கிறார். தன்னுடைய மோசடி வெளியே தெரிந்துவிட்டதால் மோடி அமிதாபச்சனிடம் அசடு வழிந்திருக்கிறார்.
           எப்படியாவது தில்லுமுல்லு பண்ணி பிரதமர் நாற்காலியில உட்காரத் துடிக்கும் நரேந்திர மோடியின் சித்து விளையாட்டுகளும், தில்லுமுல்லுகளும், மோசடி செயல்களும் தாங்க முடியலடா சாமி...!

புதன், 21 ஆகஸ்ட், 2013

காந்தியைக் கொன்றவர்கள் தான் நரேந்திர தபோல்கரையும் கொன்றுள்ளார்கள் .....!

காந்தியைக் கொன்றவர்கள் தான் 
நரேந்திர தபோல்கரையும் கொன்றுள்ளார்கள் .....!
மராட்டிய மாநில முதலமைச்சர் குற்றச்சாட்டு !

டாக்டர் நரேந்திர தபோல்கர் செவ்வாய்கிழமை காலை நடைப்பயிற்சிக்கு போகும் போது சுட்டுக் கொல்லப்பட்டார் !
புனே நகரத்தில் நடந்த இந்த சம்பவம்  மராட்டிய மாநிலத்தை பரபரப்பில் ஆழ்த்தி  உள்ளது !

மராட்டிய மாநில முதலமைச்சர் பிருத்விராஜ் சவான் " காந்தியைக் கொன்றவர்கள் தான் தபோல்கரையும்கொன்றுள்ளார்கள் " என்று குறிப்பிட்டுள்ளார் !

மிராஜ் நகரத்தில் மருத்துவ கல்லூரியில் படித்து பட்டம் பெற்ற தபோல்கர்  மருத்துவச் சேவையை விட்டு விட்டு மக்களின் மூட  நம்பிக்கையை ஒழிக்க பணி செய்ய ஆரம்பித்தார்! 

அவருடைய அண்ணன் தேவதத்தா சொசலிஸ்ட் கட்சியில் இருந்தார் ! 
தபோல்கர் மக்களிடையே செல்வாக்கு செலுத்திவரும் போலிச்சாமியார்கள், பூசாரிகள் ஆகியவர்களை எதிர்த்து இயக்கங்களை நடத்திவந்தார் !

இதற்காக அகில பாரதிய மூடநம்பிக்கை ஒழிப்பு சங்கத்தில் சேர்ந்து பணியாற்றினார் ! இந்த அமைப்பின் தலைமை பா.ஜ.க விடம் இருந்தது ! ''திருடனிடமே சாவியைக் கொடுத்த நிலைமையை'' உணர்ந்த தபோல்கர் மராட்டிய மூடநம்பிக்கை ஒழிப்பு இயக்கத்தை ஆரம்பித்தார் !

சர்வதேச பகுத்தறிவாளர் அமைப்புகளுடன் தொடர்பு கொண்டார் ! மூடநம்பிக்கையினை ஒழிக்க சட்டமன்றத்தில் ஒரு மசோதாவை கொண்டுவரச் செய்தார் ! எல்லா கட்சிகளும் அதனை ஆதரித்தன ! பா.ஜ.க வும், சிவசேனை மட்டும் அதனை கடுமையாக எதிர்த்தன !

வினாயக சதுர்த்தி பூஜை செய்யும் பக்தர்களிடம் சிலையை ஆற்றிலோ குளத்திலோ போடாதீர்கள் என்று பிரச்சாரம் செய்தார் ! அதுவும் புனே நகரத்தில் கடுமையாக செய்தார் ! விநாயக சதுர்த்தி அடுத்தமாதம் வரவிருக்கும் நேரத்தில் பலநகரங்களில் இவருடைய குரல் பிரதி பலித்தது !

பொதுக் குளத்தில் தலித்துகள் தண்ணிர் எடுக்கக் கூடாது என்று மேல்சாதியினர்  குரல் கொடுத்த மாநிலம் இது ! ஒவ்வொரு கிராமத்திலும் ஒரு பொதுக்கிணறு தோண்டவேண்டுமென்று இயக்கம் நடத்தினார் தபோல்கர் ! ஒரே கிணறு தான் என்றால் எல்லாப்பயல்களும் ஒரே இடத்தில தானே தண்ணீர் எடுக்க வேண்டும் ! 

தபோல்கரின் இத்தகைய செயல்பாடுகள் இந்து வெறியர்களின் பகைமையை  சம்பாதித்திருக்கக்கூடும் என்று சமூக ஆர்வலர்களும் செயல்வீரர்களும் கருதுகிறார்கள் !

செவ்வாய்கிழமை காலை நடைப்பயிற்சிக்கு சென்றவரை மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் சுட்டு   கொன்றிருக்கிறார்கள் !

மதத்தின் பெயரால், மூடநம்பிக்கையை வளர்த்து மக்களைச் சுரண்டும் போக்கை எதிர்த்து இயக்கம் நடத்திய டாக்டர்.நரேந்திர தபொல்கர் என்ற உண்மையான பகுத்தறிவாளர் அதற்காக தன் உயிரையே கொடுத்திருக்கிறார் ! 

(லண்டன் பி.பி.சி தமிழோசை நிருபர்  தபோல்கர் பற்றி நேற்று மாலை கேட்ட பொதும்  இதனையே என் பேட்டியில் குறிப்பிட்டேன் )

நன்றி : காஷ்யபன் வலைப்பூ

வியாழன், 15 ஆகஸ்ட், 2013

கூண்டுக்கிளியாக இந்திய பிரதமர் மன்மோகன் சிங்...!

 



    
      தனக்கென்று தனியாக சுதந்திரமே இல்லாமல் நம் நாட்டு பிரதமர் இன்று காலை சுதந்திரதினத்தை  கொண்டாடினார். முதல்ல மன்மோகன் சிங்கிற்கு சுதந்திரத்தை கொடுங்கப்பா.. பாவம்.. அவரால சுதந்திரமா  நடமாடவே முடியல... சுதந்திரமா கொடியேத்த முடியல... எங்கோ உயரமான இடத்துல - மக்களுக்கும் அவருக்கும் தொடர்பே இல்லாத இடத்துல கண்ணாடிக் கூண்டுக்குள்ள ''ஷோகேஸ்'' பொம்மை மாதிரியே நின்னுகிட்டு பேசறாரு... அப்பக்கூட அவரா அவர் விருப்பத்திற்கு சுதந்திரமா பேச முடியுதா... முடியலையே... அமெரிக்க எஜமா  சொல்லுற மாதிரியும், இத்தாலி அம்மா சொல்லுற மாதிரியும், இந்திய பெருமுதலாளிங்க சொல்லுற மாதிரியுமில்ல அவர் பேசவேண்டியிருக்கு... அடப்பாவமே... சாப்புடறது எப்படின்னு தான் தெரியல... இதத்தான் சாப்பிடணும்ன்னு மாதாமாதம் எழுதிக்கொடுத்துடுவாங்களோன்னு சந்தேகமாத்தான் இருக்குது... முதல்ல பிரதமர் கையில சுதந்திரத்தை கொடுங்கப்பா... பொது மக்களே நெருங்கமுடியாத பிரதமர்... இவர் பொதுமக்களுக்காக எப்படி சிந்திப்பார்.... பொதுமக்களுக்காக என்ன பேசுவார்... மக்களைப் பற்றி சிந்திக்காத பிரதமரின் சுதந்திரதின உரை....

தேசபக்த உணர்வு கொள் - தேசத்தை காத்தல் செய்...!



ஓ... இளைஞனே...
பெண்ணே...
உனக்குள்
ஒரு சக்தி இருக்கிறது...
தேசத்தை மாற்று...
தேசபக்த உணர்வு கொள்
தேசத்தை காத்தல் செய்...
புறப்பட்டு
தேசம் உனக்காக
காத்திருக்கிறது...
பாரத நாட்டின்
விடுதலைக்காக மீண்டும்
போராட வா..!
மற்றுமொரு
சுதந்திர போராட்டம்...
நாமே பாரதியாய்
பகத்சிங்காய் நேதாஜியாய்
மாறுவோம்...

நமக்குள்
வல்லமை இருக்கிறது
இந்த ''மா நிலத்தை''
மாற்றுவோம்...
அரசியல் விடுதலை
பொருளாதார விடுதலை
சமூக விடுதலை -
இவைகளை கொண்ட
மாற்றுப் பாதையில்
நல்லரசை ஏற்றுவோம்
இந்திய ''மா மன்றத்தில்''... 

சனி, 10 ஆகஸ்ட், 2013

நாடாளுமன்றம் தாக்குதலுக்கு உள்ளாகி இருக்கிறது...!


கட்டுரையாளர் : P. ராஜீவ்          
                              நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர்       
     ஆட்சியாளர்கள் நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்றங்களை செயல்படாது தடுத்திட மேற்கொள்ளும் முயற்சிகளும், தேர்தல் முடிவுகளைத் தீர்மானிப்பதில் பணபலத்தின் செல்வாக்கு வளர்ந்து கொண்டிருப்பதும், மக்களின் நியாயமான அபிலாசைகளைக் கருக வைத்திருக்கிறது. நாடாளுமன்றம் என்பது இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் பாதுகாவலனாகும். அரசியலமைப்புச் சட்டத்தின் முகவுரை, நாட்டு மக்களே ஒப்புயர்வற்றவர்கள் என்று மிகவும் கம்பீரமாகப் பறைசாற்றுகிறது. அவர்கள் தங்கள் ஒப்புயர்வற்ற நிலையினைத் தங்களுக்காகத் தேர்ந்தெடுக்கப்படும் பிரதிநிதிகளான நாடாளுமன்ற உறுப்பினர்கள் மூலம் வெளிப்படுத்துகிறார்கள். இப்போதெல்லாம், நாடாளுமன்றம் செயல்படா நிலையே தலைப்புச் செய்திகளாக உள்ளது. அது உண்மையும் கூட. இதுவரையிலான இந்திய நாடாளுமன்ற மக்களவைகளிலேயே தற்போதைய 15-ஆவது மக்களவைதான், மிகவும் குறைந்த நாட்களே இயங்கிய ஒன்று என்கிற ‘வரலாறு’(?) படைத்துள்ளது.
      மக்களவை செயலகம் தயார்செய்துள்ள புள்ளி விவரங்களின்படி, 15-ஆவது மக்களவையின் 12-ஆவது அமர்வுவரை 1,157 மணி நேரம்தான் அமர்ந்திருக்கிறது. 14-ஆவது மக்களவையின் 1,736 மணி 55 நிமிடங்களுடன் ஒப்பிடுகையில் இது மிகவும் பின்தங்கிய ஒன்று என்பதைப் புரிந்து கொள்ள முடியும். உண்மையில் முதலாவது மக்களவை 677 நாட்கள் அமர்ந்து, தன்னுடைய 14 அமர்வுகளில் 3,784 மணி நேரம் இயங்கி இருக்கிறது. நாடாளுமன்றத்தின் மேலவை என்று கூறப்படும் மாநிலங்களவையிலும் நிலைமைகளில் எந்த வித்தியாசமும் இல்லை. வரலாற்றில் முதன்முறையாக, மாநிலங்களவை பட்ஜெட்டை எவ்வித விவாதமுமின்றி திருப்பி அனுப்பி இருக்கிறது. பல சட்ட முன்வடிவுகள் கிடப்பில்நாட்டில் ஜனநாயகத்தின் செயல்பாடு அரிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது என்பதை இது மட்டும் காட்டவில்லை. ஆட்சியாளர்கள் பல கொள்கை முடிவுகளை நாட்டின் ஒப்புயர்வற்ற அமைப்பான நாடாளுமன்றத்தைக் கலந்தாலோசிக்காமலேயே எடுத்துக்கொண்டிருக்கின்றன
ர்.
இதற்கு மிகச் சரியான எடுத்துக்காட்டு, ‘ஆதார்’ (Aadhar)அட்டை வழங்குத லாகும். ‘ஆதார்’ அட்டை என்பது அனைத்து அரசு நலத்திட்ட உதவிகளையும் பெறுவதற்கு அத்தியாவசியமான ஒன்று என்று கருதப்படுகிறது. ‘ஆதார்’ எண் இல்லாமல் ஒரு மாணவன் மத்திய, மாநில அரசு களிடமிருந்து எவ்வித உதவியும் பெற முடியாது. நேரடிப் பயன் மாற்றல் (Direct Benefit Transfer) என்னும் திட்டமானது ‘ஆதார்’ எண்ணையே அடிப்படையாகக் கொண்டிருக்கிறது.
வங்கிக் கணக்குகள் இதனுடன் இணைக்கப்பட்டிருக்கின்றன. ஆனால், ஆதார் திட்டத்திற்கு சட்டரீதி யாக என்ன பின்னணி இருக்கிறது? ஆதார் அமலாக்கத்திற்கான சட்டமாக தன்னிகரற்ற அடையாள அட்டை சட்ட முன்வடிவு (UID bill - Unique Identification Bill) கருதப்படுகிறது. ஆனால், இச்சட்ட முன்வடிவின் பல ஷரத்துக்களுக்கு நாடாளுமன்ற நிலைக்குழு தன்னுடைய அறிக்கையில் கடும் ஆட்சேபணைகளைத் தெரிவித்திருந்தது. அரசாங்கம் நிலைக்குழுவின் ஆட்சேபணைகள் குறித்து, கிஞ்சிற்றும் கவலைப்பட்டதாகத் தெரியவில்லை. அதனை முழுமையாக அப்படியே கிடப்பில் போட்டு வைத்துவிட்டது. இச்சட்டமுன்வடிவினை எந்த வடிவத்திலும் இதுவரை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்து நிறைவேற்றிட அரசாங்கம் முன் வரவே இல்லை. ஆனால், ‘ஆதார்’ ஏற்கனவே மக்களின் வாழ்க்கையில் எதார்த்தமான ஒன்றாக, ஒவ்வொரு இந்தியப் பிரஜைக்கும் தன் வாழ்வின் தவிர்க்க முடியாத அங்கமாக மாறிவிட்டது. அரசாங்கத்தின் இத்தகைய திருட்டுத்தனமான அணுகுமுறையை அது, மத்திய, மாநில அரசு ஊழியர்களுக்காகக் கொண்டுவந்துள்ள பங்களிப்பு ஓய்வூதியத்திட்டத்தை (Contributory Pension Scheme) அறிமுகப்படுத்தியதிலும் பார்க்க முடியும். நம் நாட்டிலுள்ள அனைத்து மாநில அரசுகளும் தன்னுடைய ஊழியர்களிடமிருந்து ஓய்வூதிய நிதியாக கோடிக்கணக்கான ரூபாய்களை வசூலித்துக்கொண்டிருக்கின்றன.
       ஆனால், அது தொடர்பான சட்டமுன்வடிவு இன்னமும் நாடாளுமன்றத்தில் நிலுவையிலேயே இருந்து கொண்டிருப்பதை நாம் காண்கிறோம். இத்தனை ஆண்டு காலமாக இவ்வாறு கோடிக்கணக்கான ரூபாய்களை அரசு ஊழியர்களிடமிருந்து வசூலித்துக் கொண்டிருப்பதற்கான சட்டப்பூர்வமான நிலை என்ன? நாட்டு மக்களைக் கடுமையாகப் பாதிக்கும் பல்வேறு கொள்கை முடிவுகளை அரசாங்கமானது நாடாளுமன்றத்தைப் புறந்தள்ளிவிட்டு எடுத்துக்கொண்டிருக்கிறது என்பதைக் காட்டுவதற்கு இவை ஒருசில எடுத்துக்காட்டுகளேயாகும். நாட்டின் அரசியலமைப்புச் சட்டமானது, ஜனநாயக அமைப்பின் பல்வேறு அங்கங்களுக்கும் இருக்கின்ற அதிகாரங்கள் குறித்து மிகவும் தெளிவாக வரையறை செய்து தந்திருக்கிறது. நாடாளுமன்றம் ஒரு சட்டத்தை நிறைவேற்றும்போது அது நாட்டின் சட்டமாக மாறுகிறது. நாட்டிலுள்ள அனைத்துப் பிரஜைகளும் அதற்குக் கட்டுப்பட்டு நடக்கவேண்டியவர்களாகிறார்கள். ஆனால், இத்தகைய அரசியலமைப்புச் சட்டத்தின் கட்டளையையே ஆட்சியாளர்கள் மீறும் போக்கு அதிகரித்துக் கொண்டிருக்கிறது. ஒருமனதாக நிறைவேற்றப்பட்ட தீர்மானமே ஓரங்கட்டப்பட்டுவிட்டது 2012-13-ஆம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டைத் தாக்கல் செய்கையில், அப்போது நிதியமைச்சராக இருந்த பிரணாப் முகர்ஜி, கடந்தகால வரி நிலுவைகளை வசூலிப்பதற்காக, கடந்தகால வரிவிதிப்பு முறையை (retrospective taxation) அறிமுகப்படுத்தினார்.
       இச்சட்ட முன்வடிவினை நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் ஒருமனதாக நிறைவேற்றின. ஆனால், ப.சிதம்பரம் நிதியமைச்சரான பிறகு, காட்சிகள் மிக வேகமாக மாறின. இந்தப் புதிய வரிவிதிப்பு சீர்திருத்தத்தை ஆராய்வதற்காக ஒருநபர் குழுவை அமைத்தார். வரிகள் தொடர்பான வல்லுநர், பார்த்தசாரதி சோம், அறிக்கையைப் பெற்ற ஒரு வார காலத்திற்குள்ளாகவே நாடாளுமன்றத்தின் இரு அவைகளாலும் ஒருமனதாக நிறைவேற்றப்பட்ட கடந்தகால வரி விதிப்புமுறை சட்டத்தை மூன்றாண்டு காலத்திற்கு அரசாங்கம் கிடப்பில்போடத் தீர்மானித்தது. நாட்டின் மிக ஒப்புயர்வற்ற அமைப்பான நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் ஒருமனதாக நிறைவேற்றிய ஒரு சட்டத்தை ஒரு வல்லுநர் ரத்து செய்ய முடியுமா? நாடாளுமன்றத்தின் குழுக்கள், ஒரு சிறிய அளவிலான நாடாளுமன்றம் என்றே கருதப்படுகின்றன. இக்குழுக்களில் அநேகமாக அனைத்து அரசியல் கட்சிகளின் உறுப்பினர்களும் அங்கம் வகிப்பது வழக்கம். நன்கு வளர்ந்த ஜனநாயக நாடுகளில், நாடாளுமன்றக் குழுக்களின் முடிவுகளை நாடாளுமன்றம்தான் ரத்து செய்திட முடியும். ஆனால், இந்தியாவில் தான், நாடாளுமன்றக் குழு அளித்திட்ட பரிந்துரைகளை அரசாங்கம் ஏற்றுக்கொள்வதற்கோ அல்லது நிராகரிப்பதற்கோ உரிமை பெற்றிருக்கிறது.
          ஒரு சட்டமுன் வடிவில் புதிதாக ஏதேனும் ஒரு பிரிவை அரசாங்கம் இணைக்கும்பட்சத்தில், மீண்டும் அச்சட்டமுன்வடிவு, பரிசீலனைக்காக நாடாளுமன்றக்குழுவுக்கு அனுப்பி வைக்கப்பட வேண்டும். ஆனால், இதுநாள்வரை இவ்வாறு பின்பற்றப்பட்டு வந்த அரசியலமைப்புச் சட்ட நடைமுறைக்கு முரணாக, இந்தியக் குடியரசின் வரலாற்றில் முதன்முறையாக, நாடாளுமன்ற நிலைக்குழுவின் பரிந்துரைகளை ஆய்வு செய்வதற்காக அரசாங்கம் ஒரு வல்லுநர் குழுவை அமைக்கிறது. நாம் மிகவும் ஆச்சர்யப்படத்தக்க விதத்தில், நிதித்துறை சம்பந்தப்பட்ட நாடாளுமன்ற நிலைக்குழு நேரடி வரிவிதிப்புச் சட்டம் (Direct Tax Code) குறித்து தன் அறிக்கையை சமர்ப்பித்தபோது, நிதி அமைச்சகமும் உடனடியாக அந்த அறிக்கை மீது ஒரு குழுவை அமைத்ததைப் பார்த்தோம். இதுதொடர்பாக மோதல் வெடித்த போது, அமைச்சகத்தின் சார்பில் சில சமாதானங்கள் சொல்லப்பட்ட போதும், இவ்வாறு குழு அமைக்கப்பட்டதை நியாயமான அல்லது நேர்மையான ஒன்று எனக் கருத முடியுமா? இது நாடாளுமன்றத்தின் அதிகாரத்தைப் பறிக்கும், மக்களின் குரலை நெறிக்கும் செயலாகாதா? இவை அனைத்தும் நாடாளுமன்றத்தின் சட்டமியற்றும் அதிகாரங்களைக் கீழறுத்திடுவதற்கான ஒரு திட்டத்தின் அடையாளங்களேயன்றி வேறல்ல. அரசின் இத்தகைய இழிவான நடவடிக்கைகள் இதர பல கொள்கைப் பிரச்சனைகளிலும் வெளிப்பட்டிருக்கின்றன. 1990-களுக்கு முன்பெல்லாம், நாட்டிலுள்ள சாமானியன், தொலைக்காட்சி முன் அல்லது வானொலி முன் அமர்ந்து, பட்ஜெட் முன்மொழிவுகள் குறித்து தெரிந்துகொள்வதற்காக ஆவலோடு காத்திருப்பார்கள். வரி விதிப்பு முறைகளில் ஏதேனும் மாற்றம் வருமா? பல்வேறு அத்தியாவசியப் பொருள்களின் விலைகளில் மாற்றம் இருக்குமா? ரயில் கட்டணம் உயருமா? இதுபோன்று எண்ணற்றவை குறித்து எதிர்பார்ப்புடன் அமர்ந்திருப்பார்கள்.
       ஆனால், இப்போதெல்லாம், எவரொருவரும் பட்ஜெட் குறித்து அலட்டிக்கொள்வதில்லை. சமீபகாலங்களில், நாடாளுமன்றம் மட்டுமல்ல, அரசாங்கம் கூட, பெட்ரோலியப் பொருட்களின் விலைகளை நிர்ணயம் செய்திடுவதில் அதிகாரம் பெற்றிருக்கவில்லை. அரசாங்கம் அதற்கான அதிகாரத்தை எண்ணெய் நிறுவனங்களிடம் ஒப்படைத்துவிட்டது. சென்ற ரயில்வே பட்ஜெட்டின்படி இனி ரயில் கட்டணங்கள் ஓர் ஒழுங்குமுறை அதிகாரக்குழுமத்தின் (regulatory authority) மூலமாக தீர்மானிக்கப்பட இருக்கின்றன. அரசாங்கம் தற்போது பொருள்கள் மற்றும் சேவைகள் வரி (Goods and Services Tax) அமல்படுத்துவதற்காக ஓர் அரசியலமைப்புத் திருத்தச் சட்டமுன்வடிவை நிறைவேற்றத் தயாராகிக் கொண்டிருக்கிறது. வரைவு சட்டமுன்வடிவின்படி, வரி விகிதங்களைத் தீர்மானித்திட, நாடாளுமன்றத்திற்கு எவ்வித அதிகாரமும் கிடையாது. மத்திய அரசு மற்றும் மாநில அரசுகளுக்கான வரி விதிகத்தைத் தீர்மானிப்பதற்கான அதிகாரங்களை பொருள் மற்றும் சேவை வரிக் கவுன்சில் (GST Council) மட்டுமே பெற்றிருக்கும். இவ்வாறு வரிவிதிக்கும் நடைமுறைகளில் இனி நாடாளுமன்றத்திற்கோ, சட்டமன்றங்களுக்கோ எவ்வித வேலையும் கிடையாது. இதன் மூலமாக பட்ஜெட் என்பது வெறுமனே காலத்தைச் செலவழிக்கும் ஒன்றாகவே மாறுகிறது. இவ்வாறு மக்கள் பிரதிநிதிகளுக்கு, அரசியலமைப்புச் சட்டம் வழங்கிய பொறுப்புகள் அவர்களிடமிருந்து, பறிக்கப்பட்டுள்ளன. சமூகத்தின் பல்வேறு பிரிவுகளிலிருந்தும் அரசின் இத்தகைய முயற்சிகளுக்கு கடும் எதிர்ப்புகள் வந்தபின்னர், அரசாங்கம் இச்சட்டமுன் வடிவில் ஒரு சிறிய மாற்றத்தைச் செய்திருக்கிறது. அதாவது பொருள் மற்றும் சேவை வரிக் கவுன்சில் அதிகாரங்கள் சிபாரிசு செய்யக்கூடியவை மட்டுமே என்று அரசு கூறியிருக்கிறது. ஆனால், உண்மையில், இதன் சிபாரிசுகள் எதிர்காலத்தில் நிதியமைச்சர்களின் கைகளைக் கட்டிப்போடும் என்பதிலோ, அதன்மூலம் நாடாளுமன்றத்தின் அதிகாரங்களை நீர்த்துப்போகச் செய்திடும் என்பதிலோ ஐயமில்லை. நாடாளுமன்ற அமைப்புமுறைக்கு ஏற்பட்டுள்ள மற்றுமொரு மிகப்பெரிய அச்சுறுத்தல், இந்திய சமூகத்தின் அடிப்படை அமைப்பாக விளங்கும் இதன் பிரதிநிதிகளின் வர்க்கப் பின்னணி மிக மோசமாக வீழ்ச்சியடைந்திருப்பதாகும். நாடாளு மன்ற உறுப்பினர்கள் தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட புள்ளிவிவரங்களின்படி, 15-ஆவது மக்களவையில் 306 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கோடீஸ்வரர்களாவார்கள். இது, 14-ஆவது மக்களவையை விட நூறு விழுக்காட்டுக்கும் அதிகமானதாகும். ஒவ்வொரு நாடாளுமன்ற உறுப்பினரின் சராசரி சொத்து மதிப்பு 5.8 கோடி ரூபாய்களாகும். நாட்டின் மக்கள்தொகையில் 77 விழுக்காட்டிற்கும் மேற்பட்டவர்கள் நாளொன்றுக்கு 20 ரூபாய்க்கும் கீழே தான் செலவழிக்கிறார்கள் என்று கூறப்படுகிற ஒரு சமூகத்திற்கு இவர்கள்தான் பிரதிநிதிகள் என்று கூறப்படுவது கேலிக்கூத்தாக இல்லையா? மற்றொரு புள்ளி விவரம் என்ன கூறுகிறதெனில், சென்ற மக்களவைத் தேர்தல் வேட்பாளர்களில் 5 கோடி ரூபாய்க்கும் மேல் சொத்து உள்ளவர்கள் 32 விழுக்காட்டினர் என்பதாகும். 50 லட்சம் ரூபாய்க்கும், 5 கோடி ரூபாய்க் கும் இடையே சொத்து உள்ள வேட்பாளர் களின் வெற்றி வாய்ப்பு 18.5 விழுக்காடு, பத்து லட்சத்திற்கும் கீழே சொத்துள்ளவர்களின் வெற்றி வாய்ப்பு வெறும் 2.6 விழுக் காடு மட்டுமே.
            இதன் மூலம், தாராளமயப் பொருளாதாரத்தின் தேர்தல் அமைப்பு முறையில் மிகப்பெரிய காரணிகளில் ஒன்றாக பணபலம் இருக்கிறது என்பது தெளிவு. ஒரு குறிப்பிட்ட காலம் வரை, இந்திய ஜனநாயக அமைப்புமுறை ஒரு முற்போக்கு குணாம்சத்தோடு இருந்தது. ஆனால், ஆளும் வர்க்கத்தினரால் அது தாக்குத லுக்கு உள்ளாக்கப்பட்டது. நாடாளுமன்றத்தின் பிரதிநிதித்துவ குணாம்சத்தைப் பாதுகாத்திட வேண்டும். நாடாளுமன்றம் மூலமாகத்தான் மக்களின் அபிலாசைகளையும் தேவைகளையும் பூர்த்தி செய்திட முடியும். இதன்மூலம்தான் நாட்டின் சட்டங்களையும், மக்களுக்கான நீதியையும் வழங்கிட முடியும். நாடாளுமன்றத்திற்கான அதிகாரங்களையும், பொறுப்புகளையும் மறுப்பதோ அல்லது அவற்றைப் பறிப்பதோ மக்களின் நியாயமான அபிலாசைகள் அரிக்கப்படுவதற்கே இட்டுச்செல்லும்.

நன்றி : தி இந்து நாளிதழ் ஆகஸ்ட்7
தமிழில் : ச.வீரமணி

ஞாயிறு, 4 ஆகஸ்ட், 2013

ஊ...ஊ...ஊ... காங்கிரஸ் கட்சிக்கு சங்கு ஊதியாச்சி.!

                                                                                                                                                        

                                                                                                                                                        

                                                                                                                                                     

                                                                                                                                                     
                                                                                                                                                      

                                                                                                                                                     

               அன்றே சொன்னார் காந்தி...  காங்கிரஸ் கட்சியை கலைச்சிடுங்கடா பாவிகளான்னு...
பின்னாடி வந்த காந்தி குடும்பம் (இது வேற காந்தி) அதை கச்சிதமா செய்றாங்க... காங்கிரஸ் கட்சிக்கு சங்கு ஊதியாச்சி... அடக்கம் பண்ணவேண்டியது தான்...