நல்ல காலம்
பொறக்கப்போவுது...
நல்ல காலம்
பொறக்கப்போவுது...
பொறக்கப்போவுது...
நல்ல காலம்
பொறக்கப்போவுது...
சில்லறை வர்த்தகத்துல அந்நிய நேரடி முதலீடு வந்தா நம்ம கஷ்டமெல்லாம் தீர்ந்து போயுடும்னு பாராளுமன்றத்துல மந்திரிங்கல்லாம் சொல்லுறாங்க.
ஒரு மந்திரி சொல்லுறாரு... ஒரு கோடி இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்குமாம். நல்ல விஷயம்தானுங்கள...
அப்புறம் இன்னொரு மந்திரி சொல்லுறாரு... சில்லறை வர்த்தகத்துல அந்நிய நேரடி முதலீடு வந்தாக்கா... அந்த பணவீக்கம் குறைந்து போயுடுங்கலாம்... இதுவும் நல்ல விஷயம்தானுங்கள...
அப்புறம் இன்னொருத்தர் சொல்லுறாரு... ''வால் மார்ட்'' சூப்பர் மார்கெட் வந்துடுச்சினா... குறைவான விலைக்கு பொருட்களெல்லாம் கிடைக்குமாம்... அப்புறம் என்னங்க நமக்கு கஷ்டம்... இதை ஏங்க நாம எதிர்க்கணும்...?
மேலே பாத்தீங்களா எவ்வளவோ பெரிய சூப்பர் மார்கெட்... சென்னை சென்ட்ரல் ரயில்வே ஸ்டேஷன் மாதிரி இருக்குல்ல... சூப்பருங்க...
50,000 முதல் 75,000 சதுர மீட்டர் வரை பரப்பளவு உள்ள மெகா சுப்பர் மார்கெட்டுங்க இது.. இதுல கெடைக்காத பொருட்களே இல்லைங்கலாம்... அம்புட்டு பொருட்களும் கிடைக்குமாம். ஒரு லட்சம் நம் வீட்டுக்குத் தேவையான ஒரு லட்சம் பொருட்கள் இங்கே கிடைக்குமாம்.
இங்கே கிடைக்காத பொருட்களே இல்லைங்க... அன்றாட உணவு தயாரிப்புகளுக்கு தேவையான...சமையல் எண்ணெய், பருப்பு வகைகள் முதல் அனைத்து வகை மளிகை சாமான்கள்... காய்கறி வகைகள்... பழ வகைகள்... ஆடு, மாடு, பன்றி, கோழி இறைச்சி வகைகள்... மீன் வகைகள்... கொறித்து சாப்பிடுவதற்கு தின்பண்டங்கள்... பாணி பூரி... பிசா வகைகள்... டீ, காபி... குளிர் பானங்கள், ஐஸ் கிரீம்... இப்படி எல்லாம் ஒரே குடையின் கீழ் கிடைக்கும்.
எல்லா வகை மருந்துப்பொருட்களும் அங்கெ கிடைக்கும்... டாக்டர்களும் உள்ளே இருப்பார்கள்... மற்றும் திருமணம் ஆகி புதுக்குடித்தனம் நடத்த வீட்டுக்குத் தேவையான அத்துணை பொருட்களும்... பீரோ, கட்டில், கிரைண்டர், மிக்சி, வாஷிங் மிஷின், பிரிட்ஜி, மேசை, நாற்காலி, பாத்திரங்கள், செல்போன், டி.வி., அழகு சாதனப்பொருட்கள், பரிசுப் பொருட்கள்... என அப்பப்பா... இப்படி பல வகைகள் அங்கெ கொட்டிக்கிடக்குமுங்க ...
பசி ஆறுவதற்கு டிபன் கடை கூட உள்ளே இருக்கும்... மயங்கி கிடப்பதற்கு மதுபானக்கடைகளும், பார்களும் அங்கே மிதந்து வரவேற்கும்.
இவை எல்லாவற்றையும் வாங்கிவிட்டு பில் போடுவதற்கு ''அனாவசியமாக'' கியூவில் நிற்கவேண்டாம். ஏ.டி.எம். மிஷின் போல ஆங்காங்கே பில் போடுகிற மிஷின் வைக்கப்பட்டிருக்கும். நாமே பில் போட்டு பணத்தை மட்டும் கொடுத்துவிட்டு வரவேண்டியது தான். இங்கே போயி பொருட்களை வாங்கினா... காசையும் மிச்சப்படுத்தலாமாம்... நேரத்தையும் மிச்சப்படுத்தலாமாம்... இது ரொம்ப நல்லா இருக்கு இல்ல...
நீங்களும், உங்க வீட்டு அம்மணியும் காலையில எழுந்து பிரஷ் பண்ணிட்டு... உங்க காரை எடுத்துகிட்டு வால்மார்ட் போனிங்கன்னா... அங்க சர்வீஸ் ஸ்டேஷன் -இல் காரை விட்டுட்டு... அங்கேயே முடிவெட்டுற கடை இருக்கும்... அங்கே முடி வெட்டிகிட்டு... பக்கத்துலேயே ''மசாஜ்'' பண்ணி... ''பாத்'' பண்ணி விடுவாங்க.... அதெல்லாம் முடிச்சிகிட்டு... அங்கேயே ''ரெடிமேடு டிரஸ்'' எல்லாம் விற்பாங்க... அதை வாங்கி போட்டுக்கிட்டு...
நல்லவேளையா அங்கேயே அம்மணிக்கு ''பியூட்டி பார்லர்'' இருக்கும்... அங்கே போய் அழகு படுத்திக்கொள்ளலாம்... பிறகு அங்கேயே டிபன் முடிச்சிட்டு ... அப்புறமா வீட்டுக்குத் தேவையான மளிகை சாமான்கள், காய்கறிகள், பழங்கள், ஸ்நாக்ஸ், மட்டன், சிக்கன், பிஷ், குழந்தைகளுக்கு விளையாட்டுப் பொருட்கள்... இப்படியாக எல்லாத்தையும் வாங்கிட்டு... இடையில டீ..காப்பி சாப்பிட்டிட்டு, இப்படியே ஷாப்பிங் பண்ணிட்டே இருந்தீங்கன்னா...''லஞ்ச் டைம்'' வந்துடும்... அதுக்கும் கவலைப்பட வேண்டாம்... அங்கேயே ''ஹோட்டல்...'' சாரி ''ரெஸ்டாரென்ட்'' இருக்கும்... அங்கே சாப்டுட்டு... மீண்டும் ''ஷாப்பிங்'' பண்ணிட்டு...
அதுக்குள்ளே மாலை நேரம் வந்துடும்... அப்போது சாப்பிடவேண்டிய ''ஸ்நாக்ஸ், டீ, காப்பி'' எல்லாம் சாப்பிடுட்டு... மீண்டும் ஷாப்பிங் செய்து டி.வி. விளம்பரத்தில் பார்த்த விடுபட்ட பொருட்களையும் தேடி அலசி பார்த்து வாங்கிட்டு... நீங்க வாங்கினப் பொருட்களையெல்லாம் கையிலயோ.. தலையிலேயோ தூக்கிகிட்டு அலையவேண்டாம்.. அங்கேயே ''ட்ராலி'' நிறைய இருக்கும்... அம்புட்டு பொருளையும் அதுக்குள்ளேயே அடுக்கிக்கலாம்...
அதுக்குள்ளயே.. இரவும் வந்துடும்... அப்படியே சுத்தி நோட்டம் விட்டீங்கன்னா... கவர்ச்சியா லைட்டெல்லாம் போட்டு ''பார்'' உங்களை வரவேற்கும்... அங்கே போகாம வீட்டுக்கு போயிட்டா நமக்கும் மரியாதை கிடையாது... அந்த ''பாருக்கும்'' மரியாதை கிடையாது... அரசாங்கம் நடத்துற ஒயின் ஷாப்பை விட... பார் - ஐ விட இது சூப்பரா இருக்கும்... நைட்டு படுத்தா தூக்கம் வர்றதுக்கு இங்க போயி கொஞ்சம் ஊத்திகிட்டு... அங்கேயே ''டின்னர்'' - ஐயும் முடிச்சிகிட்டு... நீங்க காலைல சர்வீஸ் ஸ்டேஷன் -ல உங்க காரை விட்டீங்கள ஞாபகம் இருக்கா... அது இப்போ சர்வீஸ் எல்லாம் முடிஞ்சி புதுப்பொலிவுடன் ''கார் பார்கிங்''- ல உங்களுக்காக ''வெயிட்'' பண்ணும்...
நீங்க வீட்டுக்கு கிளம்பரத்துக்கு முன்னாடி, காலையிலிருந்து இரவு வரை வாங்கின அத்துணை பொருட்களின் ''பில்''லையும் செட்டில் செய்யணும்... உங்க ''பர்ஸ்''-ல இருக்கிற ''கிரடிட் கார்டை''யோ... ''ஏ. டி. எம் கார்டை''யோ கொடுத்தீங்கன்னா... நீங்க கஷ்டப்பட்டு சம்பாரித்த பணத்தையெல்லாம் உறிஞ்சி எடுத்துக்கொள்வார்கள்... அல்லது கையில பணத்தை வெச்சிருந்தீங்கன்னா... உங்க பர்சையும், பாக்கெட்டையும் காலிப் பண்ணிட்டு தான் உங்கள வெளியே விடுவாங்க... பிறகு நீங்க சந்தோஷமா உங்க காரை எடுத்துக்கொண்டு அங்கேயே பெட்ரோலும் போட்டுக்கிட்டு, பிறகு உங்க வீட்டுக்குப் போயி படுத்து தூங்கிட வேண்டியது தான்...
இது ரொம்ப நல்லா இருக்கு இல்ல...
இப்போ நாம் இவ்வளவு பொருட்களையும் வாங்கணும்னா... நாலு நாட்கள் ஆகும்... மாளிகைக்கு ஒரு இடம் போகணும்... காய் - பழத்துக்கு ஒரு இடம் போகணும்... துணி - மணிங்க வாங்கணும்னா ஒரு இடத்துக்கு போகணும்... மீன் வாங்கணும்னா ஒரு இடத்துக்கு போகணும்... ஹோட்டலுக்கு ஒரு இடம் போகணும்... காரை ஒரு இடத்துல விட்டுட்டு காலு வலிக்க நடக்கணும்... இந்த கஷ்டமெல்லாம் இந்த ''வால்மார்ட்'' - ல கிடையாதுங்க...
இங்கு விலைகளும், வெளியில நாம் வாங்குற விலையை விட இங்கு மிக குறைவுங்கலாம்... காசும் மிச்சம்... நேரமும் மிச்சமுங்க...
அது மட்டுமில்லைங்க... அமெரிக்க வால்மார்ட் - ல துப்பாக்கி, கைத்துப்பாக்கி, வெடிமருந்து போன்றவைகளும் விக்கிறாங்களாம்... ஹை... ஜாலி நம் வீட்டுக் குழந்தைங்களும் இனி துப்பாக்கி எல்லாம் வெச்சுகிட்டு விளையாடுவாங்க...
அது மட்டுமில்லைங்க... அமெரிக்க வால்மார்ட் - ல துப்பாக்கி, கைத்துப்பாக்கி, வெடிமருந்து போன்றவைகளும் விக்கிறாங்களாம்... ஹை... ஜாலி நம் வீட்டுக் குழந்தைங்களும் இனி துப்பாக்கி எல்லாம் வெச்சுகிட்டு விளையாடுவாங்க...
இந்தியாவுல இந்த வால் மார்ட் சூப்பர் மார்கெட்ட.. இந்திய பெருமுதலாளி மிட்டலுக்கு சொந்தமான பாரதி நிறுவனத்தோடு சேர்ந்து நடத்தப்போறாங்கலாம் ... அந்த சூப்பர் மார்கெட்டுக்கு இந்தியாவுல என்ன பேரு வெச்சிருக்காங்க தெரியுமா...? ''பெஸ்ட் பிரைஸ் - BEST PRICE''.
இந்த பெயரை திட்டமிட்டு தான் வெச்சிருக்காங்களாம்... ''பெஸ்ட் பிரைஸ்'' என்றால் வெளியில் உள்ள விலையை விட இங்கே விலை குறைவாக இருக்கும் என்று அர்த்தமாம்... இந்த பெயரை ஏன் வெச்சாங்கன்னா... அதுக்குப் பின்னாடியும் ஒரு மிகப்பெரிய சூழ்ச்சி இருக்கு...
இந்த பெயரை திட்டமிட்டு தான் வெச்சிருக்காங்களாம்... ''பெஸ்ட் பிரைஸ்'' என்றால் வெளியில் உள்ள விலையை விட இங்கே விலை குறைவாக இருக்கும் என்று அர்த்தமாம்... இந்த பெயரை ஏன் வெச்சாங்கன்னா... அதுக்குப் பின்னாடியும் ஒரு மிகப்பெரிய சூழ்ச்சி இருக்கு...
பாராளுமன்றத்திலேயும், வெளியிலேயும் இடதுசாரிகளும் மற்றவர்களும்... சில்லறை வர்த்தகத்தில் அந்நிய நேரடி முதலீடு அனுமதிப்பதை எதிர்த்தும், வால்மார்ட்டை எதிர்த்தும் போராட்டம் நடத்துகிறார்கள் அல்லவா...? அப்படின்னா என்ன அர்த்தம்... வால்மார்ட் நடத்துற ''பெஸ்ட் பிரைஸ்'' கடையையும் எதிர்க்கிறார்கள் என்று தானே அர்த்தம்.... இந்தியாவுல பெஸ்ட் பிரைஸ் கடைகளெல்லாம் மக்களுக்கு பொருட்களெல்லாம் விலை மலிவா கொடுக்குற கடைகள்... நமக்கெல்லாம் நல்லது செய்யற கடைகள் என்கிற எண்ணத்தை மக்களுக்கு உண்டுபண்ணிவிடுவதால்... அந்த கடைகளெல்லாம் இந்தியாவிற்கு வேண்டாம் என்று இடதுசாரிகள் சொன்னால் - போராடினால், இடதுசாரிகள் - கம்யூனிஸ்ட் கட்சிக்காரங்க தங்களுக்கு வேண்டாதவர்களாக மக்கள் புரிந்துகொள்ளவேண்டும் என்பதற்காக - மக்களை கம்யூனிஸ்ட் கட்சிக்கு எதிராக திருப்புவதற்காகவே பெருமுதலாளிகள் இந்த பெயரை தேர்ந்தெடுத்திருக்கிறார்கள் என்றால் அதன் சூழ்ச்சியை புரிந்துகொள்ளுங்கள்... அதுமட்டுமல்ல... இப்படி விலை குறைவாக இருக்கிறது என்ற காரணத்தால் நாமெல்லோரும் நிச்சயமாக அங்கே தான் பொருட்களை வாங்குவோம்... அப்படி வாங்கும் போது, பரம்பரை பரம்பரையாக - குடும்பம் குடும்பமாக சில்லறை வர்த்தகத்தில் ஈடுப்பட்டிருப்போரின் கடைகள் என்னவாகும்... மக்கள் வருகை இல்லாவிட்டால், பொருட்களின் வியாபாரம் நடக்காவிட்டால் அவர்கள் தங்கள் கடைகளை இழுத்து மூடவேண்டியது தான்.... அப்படி மூடினால் இந்தியாவில் சில்லறை வர்த்தகம் செய்யும் ஏழு கோடி குடும்பங்கள் பாதிக்கப்படும்... சில்லறை வர்த்தகம் என்றால் சிறு சிறு முதலாளிகள் மட்டுமல்ல... அதில் வேலை செய்பவர்கள், விற்பனையாளர்கள், மற்ற பணியாளர்கள், சுமை தூக்குபவர்கள், மாட்டு வண்டி - ரிக்சா - மூன்று சக்கர வண்டி - ஆட்டோ தொழிலாளர்கள் இப்படியாக பல கோடி பேர் வேலை இழப்பார்கள்... அதைப்பற்றி நமக்கென்னங்க கவலை... அப்படின்னு நாம் வழக்கம் போல் இருந்துவிடலாம்....
ஆனால்... இந்த கடைகளெல்லாம் மூடப்பட்ட பின், இந்த ''பெஸ்ட் பிரைஸ்'' கடையில விக்கிற பொருட்களின் விலைகள் எல்லாம் நான்கு மடங்கு - ஐந்து மடங்காக தாறுமாறாக உயர்ந்துவிடும். அது எவ்வளவு விலையானாலும், நாம் உண்டு உயிர்வாழ்வதற்கு அவ்வளவு விலைகளையும் கொடுத்து தான் வாங்கவேண்டும் என்ற கட்டாயத்துக்கு தள்ளப்பட்டுவிடுவோம் என்பதை மறந்து விடாதீர்கள்.
இந்திய மக்களே... தயவு செய்து சிந்தித்துப் பாருங்கள்... ''வால்மார்ட்'' நமக்கு தேவையா...? ''பெஸ்ட் பிரைஸ்'' நமக்கு தேவையா...? சில்லறை வியாபாரிகளும், தொழிலாளர்களும், பொதுமக்களும் வாழ்வாதாரத்தை இழக்கக்கூடிய ''அந்நிய நேரடி முதலீடு'' நமக்கு தேவையா..? சிந்தித்துப் பாருங்கள்...! செயல்படுங்கள்..!
7 கருத்துகள்:
எல்லா நவீனங்களிலும் சாதகபாதகங்கள் இருப்பது மாதிரி தான் இதிலும் இருக்கு... சைனாவில் 1993ம் ஆண்டு வால்மார்ட் துவங்கப்பட்டதுங்க... ஆனா இதுவரை... ஒழுங்கமைவு சில்லறை வர்த்தகம் இன்றுவரை பத்து சதவிகிதத்தை தாண்டலை... அதனால கிரானா ஸ்டோர்ஸ் அல்லது மாம் அண்ட் பாப் ஸ்டோர்ஸ் எனப்படும் குப்பன் சுப்பன் கடைகள் பெரிதளவு பாதிக்கப்படப் போவதில்லை... அதைச் சார்ந்து தொழில் நடத்துபவர்களும் அவ்வாறே...
இதில் நசிவடைபவர்கள் ரொம்பவும் குறைந்த சதவிகிதம் தான் இருப்பார்கள்... என்று எனக்குத் தோன்றுகிறது...
அன்னிய நேரடி முதலீடுகள் நிஜமாகவே பணமதிப்பை அதிகப்படுத்தும் என்பதில் சந்தேகமில்லை... ஒரு கம்யூனிஸ நாட்டில் வால்மார்ட் போன்ற நிறுவனங்க்களை வர அணுமதிக்கும் போது நாம் ஏன் கூடாது என்று எனக்கு புரியவில்லை...
முழுக்க ஆராய்ச்சி பண்ணலாம்... அதற்குபிறகு நாம அதைப் பற்றிப் பேசலாம்... பி.ஜே.பியின் கருத்துகள் ஒவ்வாதவை... இதுவே அவர்கள் ஆட்சியில் இருக்கும் போதும் இதே போன்று அன்னிய முதலீடுகள் கொண்டு வர முயற்சிகள் நடந்ததும் உண்டு...
எனக்கு சில கருத்துகளில் உடன்பாடு இல்லீங்க! ஆனாலும் நல்ல பதிவுங்க இது...
அன்புடன்
ராகவன்
சீனாவிலும் அந்நிய நேரடி முதலீடு வரவேற்கப்படுகிறது. ஆனால், அந்நிய நேரடி முதலீடு மீதான விதிமுறைகள் மிகவும் கடுமையானது. கொள்ளையடிக்கும் நோக்கத்தோடு அந்நிய நேரடி முதலீடு சீனாவுக்குள் நுழையமுடியாது. ஆனால் இந்தியாவில் அப்படி இல்லை. இங்கு அந்நிய நேரடி முதலீடு சம்பந்தமான சட்டங்களையும், விதிமுறைகளையும் நம்ம பொருளாதார மேதை மன்மோகன் சிங் தளர்த்தியிருக்கிறார். கொஞ்சம் முதலீட்டினை போட்டுவிட்டு, பெரிய மூட்டையாய் கொள்ளைகொண்டு போவதற்கு தான் நம் நாட்டிற்குள் அந்நிய நேரடி முதலீடு வருகிறது. ''பொழுதெல்லாம் எங்கள் செல்வம் கொள்ளைகொண்டு போகவோ... நாங்கள் சாகவோ...''
நிறைய விஷயங்களை சொல்லியிருக்கீங்க...இது போன்று ரிலையன்ஸ், பிர்லா க்ரூப் இவங்களெல்லாம் திறந்த கடைகள்... பெரிய வரவேற்பை பெற்றாலும், சில நாட்களுக்குப் பிறகு மக்கள் எல்லாம் நம்ம நாடார், செட்டியார் கடைகளும் தான் சிறந்ததுன்னு சொல்லியிருக்காங்க... ஏன்னா அங்கே தான் இவங்களுக்கு பொருத்தமான விலையில், இவங்க கேக்குற பிராண்டுகளில், பொருட்கள் கிடைக்கும்.... இது அனுபவப்பூர்வமாக உணர்ந்த உண்மை. உதாரணமாக, சாலிகிராமத்தில் பிக் பஜார் இருக்கு, விருகம்பாகத்தில் ரிலையன்ஸ் பிரஷ், மோர் பல்பொருள் அங்காடி இருக்கு, இருந்தாலும் உள்ளூர் சேர்ந்த ஒருவர் நடத்துற ஒரு பல்பொருள் அங்காடியில் தான் அதிகக் கூட்டம் வருது.... அங்கே தான் நமது மனதுக்குப் பிடித்தப் பொருட்கள் கிடைக்குது... காலப் போக்கில் இந்தப் பெருவணிகக் கடைகள் மறைந்து போகும் என்பது என் கருத்து
I accept 100% to what u have written.... but now... these small family shops like our annachi kadais, naadar kadais are almost gone from the cities... Now we are forced to choose from Reliance, More, Big Bazaar, Star Bazaar or Saravana Stores....! They say they give items at a cheaper rate.... On a personal front, I have used n liked Walmart when i was in US. They were the reasonable priced shops even in US. plus we will get more of foreign foods/household stuffs etc... so is it not good for us...? Now i feel that the local big shops are ruling the market.... When Asda or Walmart or Tesco or Best Price comes.... The number and variety of items we get will surely increase....!
I accept 100% to what u have written.... but now... these small family shops like our annachi kadais, naadar kadais are almost gone from the cities... Now we are forced to choose from Reliance, More, Big Bazaar, Star Bazaar or Saravana Stores....! They say they give items at a cheaper rate.... On a personal front, I have used n liked Walmart when i was in US. They were the reasonable priced shops even in US. plus we will get more of foreign foods/household stuffs etc... so is it not good for us...? Now i feel that the local big shops are ruling the market.... When Asda or Walmart or Tesco or Best Price comes.... The number and variety of items we get will surely increase....!
I accept 100% to what u have written.... but now... these small family shops like our annachi kadais, naadar kadais are almost gone from the cities... Now we are forced to choose from Reliance, More, Big Bazaar, Star Bazaar or Saravana Stores....! They say they give items at a cheaper rate.... On a personal front, I have used n liked Walmart when i was in US. They were the reasonable priced shops even in US. plus we will get more of foreign foods/household stuffs etc... so is it not good for us...? Now i feel that the local big shops are ruling the market.... When Asda or Walmart or Tesco or Best Price comes.... The number and variety of items we get will surely increase....!
Very good article. It is a fact that because of Walmart - most of the Mom and Pop shops in various cities and suburbs have been destroyed. Even now there are protest if there is news that Walmart is coming in any US city. Bottomline, any company is in the process of increasing their profits so ofcourse they will resort to price fixing. I have no respect for the Annachi's stores, they are ones who started all the price cartels and price fixing, adulteration in foods. There is no denying fact that Mom and Pop shops will be destroyed and all the shop owners especially the business community will have a wake up call.
கருத்துரையிடுக