புதன், 27 ஏப்ரல், 2011

காங்கிரஸ் கூட்டாளிகளின் தில்லுமுல்லு பொய் பிரச்சாரம்
















                   ஆறு கட்டமாக நடைபெறும் மேற்கு வங்கத் தேர்தலில் - வகை வகையான  ஊழல் புகார்கள், உயர்ந்துகொண்டே போகும்  விலைவாசி,  பெருகிவரும் வேலை இல்லா திண்டாட்டம்,  தீர்வுக் காணமுடியாமல்  திணறிக்கொண்டிருக்கும் காஷ்மீர் பிரச்சனை, வடமாநிலங்களில் பரவிகொண்டிருக்கும் மாவோயிஸ்ட் , நக்சலைட் போன்ற தீவிரவாத இயக்கங்கள்  இப்படியாக பல்வேறு குற்றச்சாட்டுகளோடு மத்தியில் ஆட்சிச்செய்யும் காங்கிரஸ் கூட்டாளிகள்  - மக்களை சந்திக்கக்கூட யோக்கியதை இல்லாத காங்கிரஸ் கூட்டாளிகள்   மேற்கு வங்கத் தேர்தல் பிரச்சாரத்தில் பொய் மூட்டையாய் அவிழ்த்துவிட்டு அவதூறுப் பிரச்சாரங்களையே செய்து வருகிறார்கள். 
                மேற்குவங்கத்தில் கடந்த 34 ஆண்டுகால மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சித் தலைமையிலான இடது முன்னணி ஆட்சிக்காலத்தில் மக்களுக்காக எதுவுமே செய்யப்படவில்லை என்கிறார் மம்தா பானர்ஜி. 
                மம்தா பானர்ஜியின் அந்த பேச்சுக்கு பக்கமேளம் வாசிக்கிறாங்க சோனியா காந்தி. 
                ஏழை மக்களைப் பற்றி இடது முன்னணி அரசு  கவலைப்படுவதே இல்லை என்று முழங்குகிறார் அமுல் பேபி ராகுல் காந்தி. 
                மத்திய அரசில் உள்ளவர்கள் ஊழல்களிலும் முறைகேடுகளிலும் ஈடுபட்டால் அதைப்பற்றி எனக்கு ஒன்றும்  தெரியாது என்று எப்போதும் சொல்லிக்கொண்டு திரியும்  பிரதமர் மன்மோகன் சிங் தேர்தல் பிரச்சாரக்கூட்டத்தில் மேற்குவங்க மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்திருக்கிறது. மேற்குவங்க இடது முன்னணி ஆட்சியில் கல்வி, சுகாதாரம், தொழில் துறை மேம்பாடு அடையவில்லை என்று முழங்கி இருக்கிறார். சுதந்திர இந்தியாவிலேயே மிகப்பெரிய - மிகமிக மோசமான ஊழல்கள் நிறைந்த ஆட்சிக்கு தலைமைதாங்கும் பிரதமர் மன்மோகன் சிங்குக்கு மேற்குவங்கத்தைப்பற்றி பேச என்ன யோக்கியதை இருக்கிறது என்று அவரது நிழலே அவரைப்பார்த்து கேள்வி கேட்கும்.
                 இன்னொரு அதி மேதாவி ப. சிதம்பரம்.... நாட்டிலேயே மிகவும் மோசமாக ஆட்சி செய்யும் மாநிலமாக மேற்குவங்கம் திகழ்கிறது என்று தேர்தல் பிரச்சாரத்தில் முழங்கியிருக்கிறார். அது மட்டுமல்ல மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியைச் சார்ந்த 24 பேர் தேர்தல் பிரச்சாரத்தில் கொல்லப்பட்டதாக பொய்யான அவதூறுத் தகவலை ப.சிதம்பரம்  மக்களை திசைத்திருப்பும் வகையில் உளறியிருக்கிறார் என்று சொன்னால் அது மிகையாகாது. 
                 இப்படியாக பல தில்லுமுல்லுப் பேச்சுக்களின் மூலம் மேற்குவங்கத்தில் இடது முன்னணி அரசின் மீது களங்கம் கற்பித்து  அரசை வீழ்த்திவிட்டு ஆட்சிக்கு வந்துவிடலாமென்று மம்தா பானர்ஜியும் காங்கிரஸ் வகையறாக்களும் கனவு காண்கிறார்கள்.
                "மேற்குவங்கம் பெரும் அரசியல் போராட்டக்களத்தில் உள்ளது. மாநிலம் முன்னோக்கிப் போகவேண்டுமா அல்லது பின்னோக்கிப் போகவேண்டுமா என்பதைத் தீர்மானிக்கும் போராட்டம் இது.
                  இடது முன்னணி மீண்டும் அதிகாரத்திற்கு வரவேண்டுமென்பதே எனது விருப்பம். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை ஆட்சியிலிருந்து அகற்ற வேண்டுமென்ற நோக்கமொன்றை மட்டுமே கொண்டுள்ள கட்சிகளை மக்கள் புறக்கணித்துவிடுவார்கள் என்ற நம்பிக்கை எனக்கு உண்டு.
                 தீவிரமான அரசியலில் இருந்து விலகிய போதும் கம்யூனிசம் மீதான நம்பிக்கையை நான் இழக்கவில்லை. கம்யூனிசத்திற்கு மாற்றாக வேறு ஒன்றுமில்லை." 
               இது  முன்னாள் மக்களவைத் தலைவர் தோழர். சோம்நாத் சாட்டர்ஜி  இடது முன்னணியின் வெற்றிக்காக தேர்தல் பிரச்சாரக் களத்தில்  முழங்கும் முழக்கமாகும். காங்கிரஸ் கூட்டாளிகளின் தில்லுமுல்லு பொய் பிரச்சாரங்களுக்கு கடும் கண்டனங்களையும் தெரிவித்து பேசியிருக்கிறார்.

2 கருத்துகள்:

நட்புடன் ரமேஷ் சொன்னது…

நல்ல பதிவு தொடர்ந்து எழுதுக தோழர்

puduvairamji.blogspot.com சொன்னது…

மிக்க நன்றி தோழர்..