ஞாயிறு, 7 செப்டம்பர், 2014

சேரன் செங்குட்டுவனாக மாறிய நம்ப மோடி மகராசன்...!

                
         அடிக்கடி ஏதாவது ''அவதாரம்'' எடுத்து மக்களை வியப்பில் ஆழ்த்தும் பிரதமர் நரேந்திரமோடி நேற்று முன் தினமும் ''சேரன் செங்குட்டுவன்'' போன்ற அவதாரம் எடுத்து இந்திய மக்களை வியப்பில் ஆழ்த்தினார் என்றால் அது மிகையாகாது.   2008 - ஆம் ஆண்டு தமிழ்நாட்டில் உள்ள வெவ்வேறு இரண்டு கோயில்களிலிருந்து  காணாமல் போனதாக சொல்லப்படும், 1000 ஆண்டுகள் பழமை வாய்ந்த நடராஜர் பஞ்சலோக சிலையும், அர்த்தநாரீஸ்வரர் கல் சிலையும் கடல் கடந்து ஆஸ்திரேலியா நாட்டு அருங்காட்சியகத்தில் உட்கார்ந்து இருப்பதை நம்ப ''CID-007'' நரேந்திரமோடி கண்டுபிடித்து அந்த இரண்டு சிலைகளையும் அந்த நாட்டு பிரதமரை வைத்தே விமானத்தில் ஏற்றி கொண்டு வந்து இந்தியாவில் சேர்க்கச் செய்தார். இத்தனை ஆண்டுகாலமாக யாரும் கண்டுபிடிக்காத சாமி சிலைகளை மோடியால் மட்டுமே   கண்டுபிடிக்க முடிந்தது மட்டுமல்ல, அந்த சிலைகளை ஆஸ்திரேலியா நாட்டு பிரதமரே சுமந்து கொண்டுவந்து சேர்க்க செய்தார் என்றெல்லாம் பத்திரிக்கைகளும், தொலைகாட்சிகளும் மோடியை வெகுவாக புகழ்ந்து தள்ளுகிறார்கள். அந்த செய்தியை படத்துடன் பத்திரிக்கைகளிலும், தொலைக்காட்சிகளிலும் பார்த்து அதிசயித்துப்போன நம் மக்கள் சிலபேர் அப்படியே காணாமல் போன என் பைக்கையும்  கண்டுபிடிச்சி கொடுக்க சொல்லுங்க... வீட்டிலிருந்து திருடுபோன எங்க நகைகளையும்  கண்டுபிடிச்சி கொடுக்க சொல்லுங்கன்னு ஆளாளுக்கு கேட்க ஆரம்பிச்சிட்டாங்க.
                மோடியின் இந்த வீரதீரச்செயலை பார்க்கும் போது, மூவேந்தர்கள்  காலத்தில் கண்ணகி சிலை செய்வதற்கு இமயமலையிலிருந்து கனகவிஜயன் என்ற மன்னன் தலையில் கல்லேற்றி தன்  நாட்டிற்கு கொண்டுவந்த சேரன் செங்குட்டுவன் தான் நம் நினைவுக்கு வருகிறது. இன்று அந்த சேரன் செங்குட்டுவனாகவே மாறி நமக்கு காட்சி தருகிறார் நம்ப மோடி மகராசன்.              

1 கருத்து:

கவிஞர்.த.ரூபன் சொன்னது…

வணக்கம்
அருமையாக சொல்லியுள்ளீர்கள்.....

-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-