கொடுமை... கொடுமைன்னு கோயிலுக்குப் போனா... அங்க ஒரு கொடுமை தலைவிரிச்சி ஆடுச்சாம்... அதுபோல இங்க தான் தன்னுடைய சொந்த தொகுதியான வாரணாசி நகராட்சித் தேர்தலில் 58 தொகுதியில் 50 தொகுதிகளில் பாரதீய ஜனதாக்கட்சி தோல்வி, கேரள மாநில உள்ளாட்சித் தேர்தலில் பாரதீய ஜனதாக்கட்சி படுதோல்வி, பீகார் சட்டமன்றத் தேர்தலில் பாரதீய ஜனதாக்கட்சி படுமோசமான தோல்வி... ஒரே தோல்விமயம் தான். இந்த தோல்விகளுக்கெல்லாம் பிரதமர் நரேந்திரமோடியும், கட்சியின் தலைவர் அமித்ஷாவும் தான் பொறுப்பேற்க வேண்டுமென்று ஒரு பக்கம் இத்தனை நாட்களாக வாய் மூடிக்கிடந்த பாரதீய ஜனதாக்கட்சியின் மூத்தத் தலைவர்களெல்லாம் மோடியையும் அமித்ஷாவையும் இடிக்க, இன்னொரு பக்கம் கட்சியின் எம்.பிக்களும் தோல்விக்கு காரணமான இவர்களை இடிக்க, வழக்கம் போல் மவுனம் காத்த மோடி, தன்னுடைய துக்கத்தை போக்க - புண்ணான மனசை இடம் மாறி ஆற்ற திடுதிப்பென்று இங்கிலாந்து தலைநகரம் இலண்டன் நோக்கிப் பறந்தார். தானும் துக்கத்திலிருந்து ஆறுதல் பெறலாம், தன் மீதும் தன் ஆட்சியின் மீதும் அதிருப்தியில் இருக்கும் இந்திய மக்களின் பார்வையில் மாறுதல் தரலாம் என்ற கணக்கோடு இலண்டனுக்கு கிளம்பினார்.
வழக்கம் போல் மோடிக்கு நெருக்கமான இந்திய முதலாளிகள் தான் இந்த பயணத்திற்கும், இங்கிலாந்து மகாராணி, பிரதமர், முதலாளிகள், பாராளுமன்ற உறுப்பினர்கள் போன்றவர்களின் சந்திப்புகளுக்கும் முன்னின்று ஏற்பாடுகளை செய்திருந்தார்கள். வழக்கம் போலவே இந்த பயணத்திலும், இந்திய வெளியுறவுத்துறை அமைச்சரோ அல்லது துறை அதிகாரிகளோ அல்லது பிரதமர் அலுவலக அதிகாரிகளோ யாருமில்லாமல், இந்திய முதலாளிகள் பரிவாரத்தோடு இலண்டன் சென்றார். வகை வகையான உடையலங்காரம் என்ன... நடையலங்காரம் என்ன...உரையலங்காரம் என்ன... இந்தியாவில் எது நடந்தாலும் வாயை திறக்காத மோடி, இலண்டனில் திறந்த வாயை மூடவே இல்லை. பிஸி ஷெட்டுயூல்... அன்பே வா - எம்ஜிஆர் மாதிரி ஏகப்பட்ட கூட்டங்கள் தான் போங்க... வாரணாசி, கேரளா, பீகார், தேர்தல், தோல்வி போன்ற எல்லாவற்றையும் மறந்து இலண்டனில் ஆரவாரத்தில் மூழ்கி கிடக்கையில், இன்னொரு பக்கம் இவரு போகிற இடங்களிலெல்லாம் ஏகப்பட்ட எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களும் முழக்கங்களும் வாசகங்களும் இலண்டனையே அதிர வைத்தன.
மற்றொரு பக்கம், 200க்கும் மேற்பட்ட எழுத்தாளர்களும் ''சகிப்புத்தன்மையற்ற'' மோடிக்கு எதிராக கடிதம் எழுதி இங்கிலாந்து பிரதமருக்கு அனுப்பி வைத்தனர்.
வேறொரு பக்கம், 50க்கும் மேற்பட்ட இங்கிலாந்து பாராளுமன்ற உறுப்பினர்களும் மோடிக்கு எதிராக தங்கள் பிரதமரிடம் கடிதம் கொடுத்திருந்தனர்.
இவைகள் அத்துனையையும் வழக்கம்போல் ஊடகங்கள் திட்டமிட்டு மறைத்துவிட்டன.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக