ஞாயிறு, 7 ஆகஸ்ட், 2011

தள்ளாடும் அமெரிக்க பொருளாதாரம் - இந்தியாவையும் பற்றிக்கொள்ளும் அபாயம் ..!

 மமதையில் அலையும்  அமெரிக்காவுக்கு  மீண்டும் பொருளாதார (நெருக்) அடி - இது இந்தியாவையும் பாதிக்கும்.     
     
          பொருளாதாரக்கொள்கைகளை மதிப்பீடு செய்து தரச்சான்றிதழ் வழங்கும் ஸ்டாண்டர்டு & பூவர்ஸ்  எனும் நிறுவனம், அமெரிக்க அரசின் சமீபத்திய கடன் கொள்கைகளை ஆய்வு செய்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் தர வரிசையில் அமெரிக்காவுக்கு குறைந்த மதிப்பீட்டை அளித்துள்ளது.    
                       இந்தப்பின்னணியில் சர்வதேச கடன் தர வரிசையில் அமெரிக்காவுக்கு முதல் முறையாக குறைவான ரேட்டிங் மதிப்பீடு வழங்கப்பட்டுள்ளதை  தொடர்ந்து ,  அமெரிக்கப் பொருளாதாரத்தின் மீது அந்நாட்டிலுள்ள முதலீட்டாளர்கள் மட்டுமின்றி, உலகம் முழுவதிலுமுள்ள முதலீட்டாளர்கள் நம்பிக்கையை இழக்கத் துவங்கியுள்ளனர். அதனால் அதிபர் ஒபாமாவுக்கு நெருக்கடியை கொடுத்துள்ளது.
                  முதன்முதலாக தரவரிசைப் பட்டியலில் அமெரிக்கப் பொருளாதாரம் சரிவைச் சந்தித்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உலகம் முழுவதிலுமுள்ள பங்குச்சந்தைகளில் அமெரிக்க நிறுவனங்களின் பங்குகள் மளமளவென சரிந்து வருகின்றன. இது முதலீட்டாளர்கள் மத்தியில் பெரும் பீதியை ஏற்படுத்தியுள்ளது. இதனால் அமெரிக்கப் பொருளாதாரம் மிக ஆழமான நெருக்கடிக்குள் வேகமாக பயணித்துக்கொண்டிருக்கிறது என்பது தான் உண்மை.
                   இந்தப்பின்னணியில் மீண்டுமொரு கடும் நெருக்கடியை சந்திக்க வேண்டிய ஆபத்து அமெரிக்காவுக்கு ஏற்பட்டுள்ளது. இதை தவிர்க்க நாடாளுமன்றத்தில் குடியரசுக்கட்சியும் ஜனநாய கக்கட்சியும் இணைந்து, அமெரிக்கப்பொருளாதாரத்தில் பொதுச்செலவினங்களை கடுமையாக குறைப்பதன்மூலம் நெருக்கடியிலிருந்து தப்பித்துக்கொள்ள தீர்மானித்தன. இதுதொடர்பாக சில நாட்களுக்கு முன்பு சட்டமும் நிறைவேற்றப்பட்டது. இதன் பொருள், கல்வி, சுகாதாரம் உள்ளிட்ட பொதுச்செலவினங்களுக்கு ஒதுக்கப்படும் நிதியை கடுமையாக வெட்டிக்குறைத்து, பெரும் நிறுவனங்களின் இழப்பை ஈடுகட்டுவது என்பதே அந்த சட்டத்தின் அம்சமாகும்.

 மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் எச்சரிக்கை :                              
 
                அமெரிக்காவில் ஏற்பட்டுள்ள சறுக்கல் உலகளாவிய பொருளாதார மந்தத்தை நோக்கி மேலும் தீவிரமாக செல்லும் என்றும், இது இந்தியாவையும் கடுமையாக தாக்கக்கூடும் என்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்கட்சி எச்சரிக்கை விடுத்துள்ளது.அமெரிக்காவுக்கு ஏற்பட்டுள்ள கடன் நெருக்கடி காரணமாக உலக அளவில் மீண்டும் பொருளாதார தேக்கநிலை ஏற்படும் அதனால் இந்தியாவும் கடுமையான பாதிப்புக்கு உள்ளாகும் என்றும் மார்க்சிஸ்ட் கட்சி கூறியுள்ளது.
                 அமெரிக்காவில் பொருளாதார மீட்சி எதிர்பார்த்த அளவுக்கு ஏற்படவில்லை. வேலையில்லா திண்டாட்டம் அதிகரித்து வருகிறது. தொழில் நிறுவனங்களில் உற்பத்தி குறைந்து வருகிறது. மக்களிடையே பணப்புழக்கம் குறைந்து வருகிறது. இதை எப்படிச் சமாளிப்பது என்பதில் அமெரிக்க ஆட்சியாளர்களிடையே கருத்தொற்றுமை இல்லை.  இந்திய அரசு சர்வதேசச் செலாவணி நிதியம், பன்னாட்டு வங்கிகளின் யோசனைகளையே காது கொடுத்து கேட்டு வருகிறது. தன்னுடைய பொருளாதார நடவடிக்கைகளையும் அமெரிக்க அரசின் கண்ணசைவுக்கு ஏற்ப மாற்றி வருகிறது. இந்த நிலையில் அமெரிக்காவுக்கு ஏற்படும் பாதிப்பு இந்தியாவையும் பற்றும் வாய்ப்பு இருப்பதாகவே மார்க்சிஸ்ட் கட்சி அச்சம் தெரிவித்துள்ளது.
             
அமெரிக்க பத்திரிக்கைகளின் கணிப்பு:

               அமெரிக்காவின் சரிவு, உலக நிதிக்கட்டமைப்பில் கடும் அதிர்வை ஏற்படுத்தும் என்று அந்நாட்டின் பிரபலமான பொருளாதார ஏடான ‘தி வால் ஸ்ட்ரீட் ஜர்னல்’ குறிப்பிட்டுள்ளது.
              அமெரிக்கப்பொருளாதாரத்தின் தரக்குறைவு, உலக நிதிச்சந்தைகளை திக்குத் தெரியாத எல்லையில் கொண்டுபோய் நிறுத்தும் என்றும், ஏற்கெனவே நீடிக்கும் பொருளாதார நெருக்கடி மற்றும் ஐரோப்பிய நெருக்கடியால் தற்போதைய நிலைமை மேலும் மோசமடையும் என்றும் ‘வாஷிங் டன் போஸ்ட்’ ஏடு எழுதியுள்ளது.

2 கருத்துகள்:

கான் சொன்னது…

‘வட்டி அழிகிறது’ !!! ஐரோப்பாவின் சீரழிவு… அமெரிக்காவின் பேரழிவு…. தப்பிப் பிழைக்குமா இந்தியா? http://tamil.unitymedianews.com/2011/08/08/tamil-america-europe-economic-catostrophe-recession-usury-india-effects-leaders-obama-putin-china-berlisconi/

Anuradhaateen சொன்னது…

‘வட்டி அழிகிறது’ !!! ஐரோப்பாவின் சீரழிவு… அமெரிக்காவின் பேரழிவு…. தப்பிப் பிழைக்குமா இந்தியா?
http://tamil.unitymedianews.com