ஞாயிறு, 28 ஆகஸ்ட், 2011

காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியா காந்தி எங்கே..? திரை மறைவில் நடக்கும் மர்மம் என்ன..?

         கடந்த ஒரு மாத காலமாக மத்தியில் ஆளும் ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியின் தலைவர் திருமதி.சோனியா காந்தி அவர்கள் பற்றிய செய்தி என்பது கிணற்றில் போட்ட கல்லாக இருக்கிறது. அவர் வகிக்கும் பதவி என்பது பிரதமர் பதவிக்கு நிகரானது. மத்தியில் ஆளும் கூட்டணியின் தலைவர். பொதுவாக, பிரதமர் மற்றும் அமைச்சர்கள் போன்ற உயர் பதவியில் இருப்பவர்கள் யாராக இருந்தாலும், மருத்துவமனையில் சிகிச்சை பெறுகிறார்கள் என்றால் - அதுவும் அறுவை  சிகிச்சை செய்யப்பட்டால் அவரின் உடல்நிலை குறித்த மருத்துவ அறிக்கையை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டும் என்பது கடந்த கால  மரபு.ஆனால் இதுவரை அவர் சிகிச்சை பற்றியோ உடல்நிலை பற்றியோ எந்த வித அறிக்கையையும் அரசு பாராளுமன்றத்திற்கு அளிக்கவில்லை. காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர்களே கூட, பாராளுமன்றத்திலோ அல்லது வெளியிலோ சோனியா காந்தியைப் பற்றி பேசவில்லை. அதில் இருக்கும் மர்மம் தான் என்ன என்றும் நமக்கு புரியவில்லை. காங்கிரஸ் கட்சியும் கூட சோனியாவைப் பற்றி பேசாமல் வாய் மூடி இருக்கிறார்கள்  என்பதை பார்க்கும் பொது தான்  நமக்கு சந்தேகம் எழுகிறது.
                     அப்படி என்ன தான் அவரது அறுவை சிகிச்சையில் இரகசியம் அல்லது மர்மம் இருக்கிறது. பொதுவாகவே ஒருவரது நோயைப் வெளியே சொல்வது என்பது மருத்துவ தர்மம் ஆகாது என்றாலும், அதிலும்  ஒரு பெண்மணியின் உடல்நிலையை பற்றி  வெளியிடுவது என்பது  நாகரீகமாக இருக்காது என்றாலும் தன கட்சித் தலைவரின் உடல்நிலை குறித்து  அறிந்துகொள்ளும் அக்கறை என்பது அவர் கட்சியினற்கு இருக்க வேண்டுமே.
அது இல்லாதிருப்பது ஏன் என்பதில் தான் நமக்கு சந்தேகம் வருகிறது.                           மற்றொரு சந்தேகமும் இயற்கையாகவே எழுகிறது.. நம் நாட்டிலேயே சிறந்த மருத்துவம் மருத்துவமனைகளும் கிடைக்கும்  போது  சோனியா  காந்தி மட்டும் எதற்காக வெளிநாடு செல்லவேண்டும். கடந்த காலங்களில் இந்திய பிரதமர்களே - வாஜ்பேயி மற்றும் மன்மோகன் சிங் போன்றவர்களே உள்நாட்டில் தானே அறுவை சிகிச்சை செய்து கொண்டார்கள். வாஜ்பேயி மாற்று மூட்டு அறுவை சிகிச்சையை மும்பையில் தான் செய்துகொண்டார். ஐ. எம்.எப் -பென்ஷனரும் அமெரிக்க அடிமையுமான மன்மோகன் சிங் கூட தன் இதய அறுவை  சிகிச்சையை  அமெரிக்காவில் செய்துகொள்ளாமல் புதுடெல்லியில் தானே செய்துகொண்டார்.
              அப்படியே வெளிநாட்டில் தான் சிகிச்சை செய்து கொள்வேன் என்ற முடிவெடுத்து சென்றாலும், விமானத்தில் செல்லும் போது அவசர உதவிக்கும்,  அதேப்போல் வெளிநாட்டு மருத்துவ சிகிச்சையில் உதவி செய்யவும்,  வெளிநாட்டு மருத்துவர்களுக்கு இந்தியாவில் தாங்கள்  செய்த மருத்துவத்தைப் பற்றி விளக்கமளிக்கவும்,  தன் குடும்ப மருத்துவரையோ அல்லது வேறு உள்நாட்டு மருத்துவரையோ சோனியா காந்தி அழைத்துச் செல்லாமல், மகன், மகள் மற்றும் மருமகன் - இவர்களை மட்டுமே அழைத்துச் சென்றது ஏன்..? என்கிற சந்தேகமும் நமக்கு எழுகிறது.

அமெரிக்காவிலிருந்து வரும் தகவல்கள்..

                    அமெரிக்க பத்திரிக்கையாளர்களும், அமெரிக்காவில் வாழும் இந்தியர்களும் அமெரிக்காவில் சோனியா காந்தி எந்த  மருத்துவமனையில் சிகிச்சை  பெறுகிறார் என்பதை நேரில் கண்டறிய, சில முக்கிய மருத்துவமனைகளில் அலசி தேடியிருக்கிறார்கள். எங்குமே சோனியா காந்தி தங்கி சிகிச்சை பெறுவதற்கான அறிகுறியே இல்லை என்று தான் அவர்களும் சொல்கிறார்கள். பிரதமருக்கு இணையானவர் சிகிச்சை என்பதால், அமெரிக்காவில் இருக்கும் இந்திய தூதரகம்  பரபரப்பாக இருக்கவேண்டும். அவர்களும் மருத்துவமனையிலிருந்து மருத்துவ அறிக்கையை பெற்று வெளியிட்டிருக்க வேண்டும். ஆனால் அங்கிருக்கும் இந்திய தூதரகமும் அமைதியாக தானே இருக்கிறது.
                இப்படியாக சோனியா காந்தி  வெளிநாட்டுப் பயணம்  பற்றிய பல சந்தேகக் கேள்விகள் எழுகின்றன.
                இந்த சூழ்நிலையில் தான் சுப்பிரமணியம் சாமி சொல்வது சரியாக இருக்குமோ என்கிற சந்தேகமும் கூடவே எழுகிறது.
                வெளிநாட்டு வங்கிகளில் இந்திய மோசடிக் கூட்டத்தினர் போட்டிருக்கும் கருப்புப்பணம் பற்றிய விபரங்கள் வெளிவரத் தொடங்கிய சூழ்நிலையில் தான் சோனியா காந்தியின் இந்த பயணம் மேற்கொள்ளப்பட்டிருக்கிறது என்கிற சுப்பிரமணியம் சாமி தருகிற தகவல்களையும் நாம் ஒதுக்கிவிடுவதற்கில்லை.
               அன்னா அசாரேவின் பரப்பான உண்ணாவிரத நாடகத்தில் பாராளுமன்ற நிகழ்வுகளும், சோனியா காந்தியின் வெளிநாட்டுப் பயணமும், விலைவாசி உயர்வு, வேலையில்லா திண்டாட்டம், பள்ளி-கல்லூரிக் கட்டணக் கொள்ளை போன்ற மக்களின் அன்றாடப் பிரச்சனைகளும் ஓரங்கட்டபட்டுவிட்டன என்பதை இந்திய மக்கள் அனைவரும் கவனிக்க வேண்டும்.

1 கருத்து:

இறைகற்பனைஇலான் சொன்னது…

ராசீவ் கொலையில் கன்ங்கிரசின் மரகதம் சந்திரசேகர் வீட்டிலிருந்து கொலையாளிகள் வந்தது, அவரின் ஒரு ம்ருமகன் சிங்களவ்ர் என்பது, அவரின் மகள் பத்மாவிற்கு ச. ம. உறுப்பினர் பதவி கொலைக்குப்பின் தந்தது, யாவும் "என்னைக்கொல்லசதி" என்று ஆரம்பித்து இடையிலே சந்திராசாமி சு.சாமி குழுக்கள் பயன்படுத்திக்கொண்டது என ந்ம்பப்படுவது ,கொலை நடந்த அன்று ஒரு பெண் கிருஸ்னகிரியில் இருந்துகொண்டு சென்னையிலிருந்து ஏதும் செய்தி உண்டா ,என்று வினவியதாக அய்.என்.டி.யூ.சி வட்டாரத்தில் பேசப்படுவது,காங். தமிழ் நாட்டுத் தலைவர் அந்த இடத்தில் இல்லாதது, எல்லாம் கூட்டிக்க்ழித்துப்பார்த்தால் சோனியாவை சந்தேகப்படாமல் இருக்க முடியாது.