செவ்வாய், 31 டிசம்பர், 2013

Rajiv Gandhi twice asked Jyoti Basu to become Prime Minister of India...!

        
               Rajiv Gandhi had wanted Jyoti Basu to become the Prime Minister and had pleaded with him twice during the politically tumultuous times of 1990 and 1991, former CBI director and West Bengal DGP Arun Prosad Mukherjee has revealed in his autobiography.
            The recently-released book — "Unknown Facets of Rajiv Gandhi, Jyoti Basu, Indrajit Gupta" — is based on Mukherjee's diary entries, maintained from the time he joined IPS in 1956, and his interactions with Rajiv, Basu and Gupta in various capacities as Darjeeling SP, Bengal DGP, state vigilance commissioner, CBI boss, special secretary in the home ministry, and finally, advisor to the home minister (Indrajit Gupta).
         Mukherjee was special secretary, home ministry, in October 1990 when Rajiv informally asked him to arrange a meeting with Basu, says the book. The communist leader said it was not his call and only the party's central committee and Politburo could take such a decision. CPM vetoed it and Chandrashekhar — Rajiv's third choice — became PM with Congress support. 
         In 1991, when Chandrashekhar turned out to be a failure, Rajiv again approached Basu but he declined and referred the matter to his party leadership. Mukherjee writes that he took Rajiv's emissary for a meeting with senior CPM leaders at former MP Biplab Dasgupta's house. "But my worst conjecture proved right ... and thus ended the second opportunity of putting up the Left Front's best foot forward in the larger interest of Bengal."
        Five years later, thanks to a hung Parliament, several local satraps, including Mulayam Singh Yadav, proposed Basu's name again for Prime Minister. And again the CPM central committee voted against it. In an interview at the end of 1996, Basu termed it a "historic blunder". "However, it is not generally known that such blunders had taken place twice in 1990-91... largely because of the unrealistic, short-sighted and 'blunder-proof' mindset of CPM leaders," writes the former DGP.
             The CPM leadership has been taken aback by Mukherjee's revelation. Rajya Sabha MP Shyamal Chakraborty, who wrote to Prime Minister Manmohan Singh earlier this year for a commemorative postage stamp on Basu's centenary, told TOI on Monday: "I had no idea about this, so I can't comment on something I don't know of."
               Former Lok Sabha Speaker and expelled CPM leader Somnath Chatterjee didn't know of it either. "It (not allowing Basu to become PM) was the weirdest example of democratic centralism. I respectfully agree with Jyoti-babu's 'historic blunder' comment. I wish the blunder hadn't been committed and history would have been written differently. Look what's happened to the party now — it's become politically irrelevant."
               Chatterjee agreed with Mukherjee's remark in his book that the country's "murky political and administrative ethos" then would have been transformed with Basu at the helm.
            Speaking to TOI, the 82-year-old Mukherjee said: "All three (Gandhi, Basu and Gupta) were different personalities. Jyoti Basu was firm, Rajiv was extremely courteous while Indrajit Gupta was a straight-talker. But they trusted me and allowed me to speak my mind. They knew about my integrity."
            About the "blunder" he said, "The CPM leadership refused to see reason and there was no way one could convince them." His writing is more explicit: "All the implications and finer points made out by me in favour of Jyoti Basu accepting Rajiv Gandhi's offer of prime ministership though presumably for a short period of 8-12 months went over the heads of Left Front leaders — thanks to their blinkered vision." 
        
What happened....?
  # 1990: Basu tops Rajiv list of 3 prospective PMs but CPM says no. Chandrashekar, the last name on Rajiv's list, after Devi Lal, becomes PM.
   #  1991: Chandrashekar flops. Rajiv again requests Basu. Mukherjee says he will arrange a meet if Rajiv ensures Basu is PM for at least a year. Rajiv agrees. Basu says party must decide. CPM again says no.
   #  1996: After the fall of 13-day-old Vajpayee govt, United Front asks Basu to be PM. Yet again, CPM says no.  

காலம் கடந்து வந்த மோடியின் ''மனவலி'' எதற்காக...?

     
               2002- ஆம் ஆண்டு குஜராத்தில் சிறுபான்மையினத்தவர்களுக்கு எதிராக நடத்தப்பட்ட  திட்டமிட்ட தாக்குதல்களில் அப்பாவி மக்கள் கொல்லப்பட்ட போது எனக்குஏற்பட்ட மனவலியை எந்த வார்த்தைகளாலும் விவரிக்கமுடியாது என்று இரத்த வாடை வீசும் ''நரவேட்டை'' நரேந்திர மோடி வேதனையோடு கூறியதைப் பார்க்கும் போது அந்த நடிப்பை என்னவென்று சொல்வதென்று தெரியவில்லை. இவன் ரொம்ப நல்லவன்ன்ன்ன்ன்ன்னு சொல்லுகிற அளவுக்கு என்னமா நடிக்கிறான் பாருங்க.... இதை  நான் சொல்லல....! நம்ம ''ஆம் ஆத்மிங்க'' தான் இப்படியெல்லாம் புலம்புறாங்க. 2002 - ஆம் ஆண்டு நடந்தபோது வாராத அழுகை இப்போது ஏன் வந்தது...? காலம் கடந்து ஏன் ஓநாய் அழுகிறது....? என்று நம்ம ''பொது ஜெனங்க'' தான் கேட்கறாங்க.
          காவிப்படைகளுக்கு பயிற்சி கொடுத்து தன் கட்டளைப்படி சிறுபான்மையோர் ஒவ்வொருவராய்  இரக்கமின்றி வெட்டி வெறியைத் தீர்த்துக்கொண்ட போது வராத ''மனவலி'' இப்போது எங்கிருந்து வந்தது....? இப்போது வந்ததற்கான அவசியம் தான் என்ன....?
           பெஸ்ட் பேக்கரியில் இருந்த 36 இஸ்லாமியர்களையும் கூண்டோடு எரித்து சாகடித்த போது வராத ''மனவலி'' இப்போது மட்டும் திடீரென்று ஏன் வந்தது....?  
          கலவரத்தை பார்த்து அஞ்சிய இஸ்லாமியர்கள் உயிருக்கு பயந்து  குழந்தைகளுடன்  பாதுகாப்பு கோரி தன் விட்டிற்கு வந்து நின்ற போது அவர்களை காவல்துறையினர் உதவியுடன் காப்பாற்றும்படி ஜாப்ரி என்ற எம்.பி மோடியிடம் தொலைபேசியில் பதறிய போதும்,  இரக்கமின்றி அவர்களை உயிரோடு வெட்டி சாய்த்து எரித்துக் கொன்றபோது வராத ''மனவலி'' இப்போது மட்டும் ஏன் வந்தது...?
           இந்து இளைஞனை காதல் மணங்கொண்டு கருவுற்ற இஸ்லாமிய பெண்ணான கௌசர் பானுவை நடுத்தெருவில் ஆடைகளைக் களைந்து, கரு தாங்கிய வயிற்றை கிழித்து அந்த பெண்ணையும் சாகடித்து,  எடுத்த கருவையும் துண்டுதுண்டாக  வெட்டி நெருப்பில் போட்டக் கொடூரம் நடந்த போது வராத ''மனவலி'' மோடிக்கு இப்போது வந்தது ஏன்....?
             மோடியினால் ஏவிவிடப்பட்ட ''காவிப்பட்டாளங்கள்'' இஸ்லாமிய சகோதரிகள் பலபேருடைய  ஆடைகளை களைந்து அம்மணமாக்கி  மாறி மாறி பாலியல் பலாத்காரம் செய்தார்களே, அப்போது வராத ''மனவலி'' இப்போது மட்டும் மோடிக்கு வந்தது ஏன்...? என்று மக்கள் கேட்கிறார்கள்.
              இத்தனைக் கொடூரங்களும் தங்கள் கண் முன்னே நடப்பதை, தன் கையிலிருந்த காவல் துறையை வெறுமனே கைகட்டி வேடிக்கைப்பார்க்கச் செய்தபோது வராத ''மனவலி'' இப்போது ஏன் வந்தது மோடிக்கு....?
             இந்த நிகழ்ச்சிகளை எல்லாம் பார்த்து கொஞ்சம்  கூட சலனமில்லாமலும், கோபப்படாமலும் வேடிக்கைப் பார்த்துக்கொண்டிருந்த இந்திய மக்களின் மனதில் உட்கார்ந்து ஓட்டுகள் கேட்கபோகிறார் என்று தான் இந்த ''மனவலிக்கு'' காரணம் என்பதை யாராலும் மறுக்கமுடியாது.           

இயற்கை விஞ்ஞானி நம்மாழ்வார் நம்மோடு வாழ்வார்...!

         
               அழிந்து வரும் நம் பாரம்பரிய இயற்கை வேளாண்மையை போற்றும் விஞ்ஞானியாய், உயிர்ப்பாய் துடிக்கும் நம் பூமியை - சுற்றுச்சூழலை பாதுகாக்கும் போராளியாய் தமிழக மக்களிடம் விழிப்பையும், எழுச்சியையும் உண்டாக்கிய இயற்கை விஞ்ஞானி நம்மாழ்வார் இன்று நம்மோடு இல்லை. அவரது மறைவு இயற்கை வேளாண்மைக்கும், பூமிக்கும், இயற்கையையும், பூமியையும் விரும்பும் மனிதர்க்கும் பேரிழப்பாகும். 
              ''உணவை பரிமாறும் நம் நாட்டு விதைகள் எதிர்காலத்தில் ''பேராயுதமாக'' உருமாறும்'' என்பது அவர் நமக்குத் தந்த எச்சரிக்கை என்பதை நாம் மறந்துவிடக்கூடாது. முயற்சியைப் பற்றி அவர் தந்த மிக எளிமையான விளக்கம் இன்றும் நினைவில் நிற்கிறது. என்றும் மனதை கவர்ந்தது. ''முயற்சியை  விதை. விடாமல் முயற்சியை விதை. விளைந்தால் மரம். இல்லையென்றால் மண்ணுக்கு உரம்'' - அற்புதமான வார்த்தைகள். 
            இயற்கைப்போராளி நம்மாழ்வார் விட்டுச் சென்ற இயற்கையை காக்கும் போராட்டத்தை, பூமியின் உயிர்ப்பைக் காக்கும் போராட்டத்தை மேலும் முன்னெடுத்து செல்வோம். இயற்கையோடும் மண்ணோடும் கலந்துவிட்ட  அவரது மூச்சுக்காற்று நிச்சயம் நமக்கெல்லாம்  வழிகாட்டும். வாழ்க நம்மாழ்வார்...!

தலைமுறைகள் - அர்த்தமுள்ள திரைப்படம்...!

 விமர்சனம் : தோழர் ஜி. ராமகிருஷ்ணன்                                                  

               கடந்த டிசம்பர் 20ல் திரையரங்குகளில் வெளியாகியுள்ள ‘தலைமுறைகள்’ திரைப்படம் மூன்று தலைமுறைகள் பற்றிய கதை.தாத்தா, மகன், பேரன் ஆகிய மூன்று தலைமுறைகளுக்குள் இருக்கும் இடைவெளியையும், பிறகு மூன்று தலைமுறைகளும் ஒரு புள்ளியில் (கருத்தால்) இணைவதையும் அழகுற இயக்குநர் பாலுமகேந்திரா கையாண்டுள்ளார். பத்தாம்பசலித்தனமான நடைமுறையை கொண்ட தாத்தா, சாதி மறுப்பு திருமணம் செய்து கொண்டு சென்னையில் மருத்துவத் தொழிலில் ஈடுபட்டிருக்கும் மகன், தமிழ் தெரியாத ஆங்கிலம் மட்டுமே தெரிந்த சென்னையில் பிறந்து வளரும் பேரன் ஆகிய மூன்று தலைமுறைகளை கொண்ட படம்.
        சாதி மறுப்புத் திருமணம் செய்து கொண்டு தன்னை சந்திக்க வந்த மகனையும், மருமகளையும் கடுமையாக திட்டி விரட்டிவிடுகிறார். தாத்தாவிற்கு உடல்நலம் பாதித்த போது அவருக்கு உதவி செய்ய மகனும், மருமகளும், பேரனும் கிராமத்திற்கு வருகிறார்கள். தாத்தா தன்னுடைய மகன் மற்றும் மகள் வழி பேரக் குழந்தைகளுக்கு பிள்ளை என்ற சாதிய அடையாளத்தோடு தான் பெயர் வைத்தார். தன்னுடைய பேரன் ஆதித்யாவை அழைத்து ‘உன்னுடைய பெயர் ஆதித்யா அல்ல ஆதித்யாபிள்ளை’ எனக் கூறுகிறார். தாத்தாவினுடைய கிராம நண்பர் (கிறித்துவ பாதிரியார்) தாத்தவைச் சந்தித்து ‘இந்த சாதி மதமெல்லாம் நம்மோடு போகட்டுமே, ஏன் இன்றைய தலைமுறைக்கு கொண்டுட்டு போற’ என்று கூறியதை தாத்தா அசைபோடத் துவங்கிவிட்டார். ஒரு நாள் தன்னுடைய மருமகள் (கிறித்துவர்) 8 கி.மீட்டர் தூரம் நடந்து அடுத்த கிராமத்தில் உள்ள சர்ச்சுக்கு சென்று வருகிறார். தனக்கு எல்லா உதவிகளையும் செய்து வரும் மருமகள் மழை, வெயிலை பாராமல் 8 கி.மீட்டர் தூரம் நடந்து சென்று வருவதைப் பார்த்து, ஏம்மா ஏன் கஷ்டப்படுறே எனக் கேட்கிறார். அடுத்தநாள் பேரன் தன்னுடைய தாயிடம் ‘அம்மா தாத்தா பூஜை ரூம வந்து பாருங்க:’ என்று அழைக்கிறான்.
              இந்துக் கடவுளை வணங்கும் தாத்தா (சைவப்பிள்ளை) பூஜை அறையில் இந்துக் கடவுளுக்கு மத்தியில் ஏசுநாதர் படம் இருக்கிறது. இதைப் பார்த்த மருமகள் உணர்ச்சிவசப்படுகிறார்.கிராமத்தில் இருப்பவர்கள் தாத்தாவைச் சந்தித்து நம்ம ஊர்ல மருத்துவமனை இல்லையே என்று கேட்டதை அறிந்த மருமகள் அதே கிராமத்தில் ஒரு சிறிய மருத்துவமனையை துவக்குகிறார். ‘சென்னையிலிருக்கும் மருத்துவமனையை யார் பார்ப்பது, நீ சென்னைக்குத் தான் வர வேண்டும். பையன் சென்னையில் தான் சரியாக படிக்க முடியும், இங்கு படிப்பதற்கு வசதியில்லை’ என்று தனது கணவன் கூறியதை எல்லாம் புறந்தள்ளிவிட்டு மருமகள் கிராமத்திலேயே தங்கி கிராமத்து மக்களுக்கு மருத்துவ சிகிச்சையளிக்கிறார். மகனையும், அந்தப் பகுதியில் உள்ள தமிழ் வழி பள்ளியிலேயே சேர்க்க முடிவு செய்கிறார். இதைக் கண்ட தாத்தா நெகிழ்ந்து விடுகிறார். தாத்தாவிற்கும், பேரனுக்கும் இரண்டு தலைமுறை இடைவெளியாயிற்றே! தாத்தாவுக்கு ஆங்கிலம் தெரியாது, பேரனுக்கு தமிழ் தெரியாது. பேரனுக்கு தாத்தா தமிழ் கற்றுத் தர, தாத்தாவிற்கு பேரன் ஆங்கிலம் கற்றுத் தருகிறான்.
                   இந்தக் காட்சியெல்லாம் நேர்த்தியாக படமாக்கியிருக்கிறார் இயக்குநர் பாலுமகேந்திரா. சாதி, மத ஆச்சாரத்தோடு வாழ்க்கை நடத்திய தாத்தா நவீனமாகிறார். சாதி, மத வேறுபாடு கூடாது என்பதை எளிமையாக அனைவரும் ஏற்கும்படி அழகாக தாத்தா மூலம் இயக்குநர் வெளிப்படுத்துகிறார். பேரனிடம் உங்க அப்பா இந்து, உங்க அம்மா கிறிஸ்தவர், நீ யார்? என்று கேட்க, நான் ஆதி என்று மட்டும் பதில் சொல்ல வைத்திருப்பது அருமை.தாத்தா இறந்த பிறகு பேரன் ஆதித்யா வளர்ந்து பெரியவனாகி சென்னைக்குச் சென்று விடுகிறான். சென்னையில் தாத்தா, பேரன் உறவு குறித்து அவன் எழுதிய தமிழ்க் கவிதை நூலுக்கு விருது கிடைக்கிறது. விருதைப் பெற்றுக் கொண்ட ஆதித்யாவை பேசச் சொல்லுகிறார்கள். தாத்தா இறுதியாக பேரனுக்கு சொன்ன வார்த்தைகளை நினைவுப்படுத்தி பேரன் மேடையில் கண்ணீர் வடிக்கிறான். கடைசியாக இறப்பதற்கு முன்னதாக தாத்தா பேரனிடம் கூறியது, ‘ஆதி தமிழை மறந்திடாதே, தாத்தாவையும் மறந்திடாதே’திரைப்படத்தில் பாடல் இல்லை. ஆனால் இளையராஜாவின் பின்னணி இசை அருமை. இயக்குநர் பாலுமகேந்திரா தாத்தாவாக நடித்திருப்பது அபாரம். பாலுமகேந்திராவின் கேமராவின் கை வண்ணம் சொல்லத் தேவையில்லை.
              நுகர்வு கலாச்சாரம் அனைத்து துறை சார்ந்தவர்களையும், ஆட்டிப் படைக்கின்ற போது என்னுடைய படம் இப்படித் தான் இருக்கும். நான் பணம் சம்பாதிக்க படம் எடுக்க மாட்டேன் என்று தொடர்ந்து கூறி வருபவர் இயக்குநர் பாலு மகேந்திரா. அவருடைய சமீபத்திய படங்களில் ஏதாவது அர்த்தமுள்ள செய்தி ஒன்று இருக்கும். இன்றுள்ள சமூகத்தை ஒருபடி முன்னேற்ற அவரது படம் பயன்படும். அர்த்தமுள்ள படங்களை தொடர்ந்து எடுத்து வரும் பாலு மகேந்திராவின் கலைப் பணி தொடரட்டும். ஜாதியம் தகர்க்கும் தலைமுறைகள் வெற்றி பெறும்.
 நன்றி : 

ஞாயிறு, 29 டிசம்பர், 2013

முரண்பாடுகளுடன் டெல்லியில் ''ஆம் ஆத்மி கட்சி'' ஆட்சி...!


                       தலைநகர் டெல்லியில் அண்மையில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில், கடந்த காலங்களில் தொடர்ந்து ஆட்சியில் இருந்துவந்த காங்கிரஸ் கட்சி டெல்லி மாகலின் மிக கடுமையான கோபத்திற்கு பலியாகி போனது. மீண்டும் உயிர் பெற்று எழுந்திருப்பது என்பது அவர்களால் நினைத்துக்கூட  பார்க்கமுடியாது. காங்கிரஸ் கட்சியின் முதலமைச்சர் உட்பட பல முக்கிய  காங்கிரஸ் கட்சித் தலைவர்களெல்லாம் படுதோல்வி அடைந்து, 70 தொகுதிகளில் போட்டியிட்டு வெறும் எட்டே தொகுதிகளில் மட்டுமே வெற்றிபெற்று மண்ணைக் கவ்வியது.  கடந்த ஐந்து ஆண்டுகால மகா ஊழல்கள், கடுமையான விலைவாசி உயர்வு என மத்தியிலும் மாநிலத்திலும் காங்கிரஸ் கட்சியின் பல்வேறு சீர்கேடுகள் நிறைந்த   ஆட்சியினால் பாதிக்கப்பட்ட மக்கள் காங்கிரஸ் கட்சியை தூக்கி எறிந்திருக்கிறார்கள் என்பது தான் உண்மை.
           இன்னொரு பக்கம், மத்தியில் ஆட்சியை பிடிக்க அலைந்து கொண்டிருக்கும் பாரதீய ஜனதா கட்சி, டெல்லியில் பிரபலமான நபர் ஒருவரை முதலமைச்சர் வேட்பாளராக அறிவித்து, முதலில் டெல்லியை பிடிக்கும் ஆசையில் அனைத்து 70 தொகுதிகளிலும் களத்தில் இறங்கியது. ஆனால் ஊழலை பொருத்தவரை பாரதீய ஜனதாக் கட்சியும் விதிவிலக்கல்ல. அவர்கள் ஆட்சி செய்யும் மாநிலங்களும், ஆட்சி செய்த மாநிலங்களுமே மிகப்பெரிய சாட்சியாக நிற்கிறது என்பதாலும், மதவாதம் மற்றும்  சிறுபான்மையினருக்கு எதிரான போக்குகள் கொண்ட  ஒரு சீர்குலைவு சக்தியாக காட்சிதரும் பாரதீய ஜனதாக் கட்சிக்கும் ஆட்சியமைக்க முழு அளவிற்கான மெஜாரிட்டியை மக்கள் தாராமல் 30 தொகுதிகளை மட்டுமே கொடுத்தார்கள். அந்த முப்பது இடங்களில் பெற்ற வெற்றி கூட, காங்கிரஸ் கட்சியின் மீதான கோபத்தினால் மக்கள் அளித்த காங்கிரஸ் எதிர்ப்பு வாக்குகள் தான் என்பதும் உண்மை.
          இப்படிப்பட்ட சூழ்நிலையில் ஊழல் எதிர்ப்பை மட்டுமே முழக்கமிட்டு தலைநகர் டெல்லியில், வெளிநாட்டுப் பணத்தை செலவு செய்து, கார்ப்போரேட் கம்பெனிகள் மற்றும் இந்திய - அந்நிய பெருமுதலாளிகளின் ஆதரவுடன் இரண்டு முறை உண்ணாவிரதமிருந்த ''ஊழலை ஒழிக்க ஆதாரம்'' எடுத்த அண்ணா ஹசாரே உடன் மேடையில் காட்சியளித்து, ஊடகங்களின் மூலம் மக்களின் மத்தியில் பிரபலமான கெஜ்ரிவால், ஹசாரேவை முந்திக்கொண்டு ''ஊழலை ஒழிக்கப்போகிறேன்'' என்று ''ஆம் ஆத்மி கட்சியை'' துவக்கி மக்களிடம் அறிமுகமே இல்லாத பலரையும் தேர்தல் களத்தில் இறக்கி 70 தொகுதிகளிலும் போட்டியிட்டார். உளவியல் ரீதியாக இந்திய மக்களை மிகவும் பாதித்த விஷயம் காங்கிரஸ் கட்சியும் பாரதீய ஜனதாக் கட்சியும் செய்த ஊழல் என்பது மட்டுமே மக்களின் மூளைகளில் பிரதானமாக ஆக்கிரமித்த ஒன்றாகிவிட்டது. ஊழலை மட்டுமே வைத்துக்கொண்டு மக்களை மூளைச் சலவை செய்து அதிக இடங்களில் வெற்றிபெற்று ஆட்சியை பிடித்துவிடலாம் என்று கெஜ்ரிவால் கனவுகண்டு களத்தில் இறங்கினார். ஆனால்  28 இடங்களிலேயே வெற்றி பெற முடிந்தது. இவருக்கு கிடைத்ததும் காங்கிரஸ் எதிர்ப்பு வாக்குகளே என்பதும் உண்மை.
          கெஜ்ரிவால் மிகவும் மிகவும் கெட்டிக்காரர். அனுபவமில்லாமலேயே மிகவும் தேர்ந்த அரசியல்வாதியை போல் நடந்துகொண்டிருக்கிறார். அண்ணா ஹசாரே ஏதோ  சிரமப்பட்டு உண்ணாவிரதமெல்லாம் இருந்து மக்கள் மத்தியில் ஒரு ''பரமாத்மா'' போல் காட்சி தந்து பிரபலமாகிக்கொண்டிருந்த கூழ்நிலையில், தான் ஒரு அரசியலில் குதித்து ஒரு கலக்கு கலக்கலாம் என்று ஹசாரே நினைத்துக்கொண்டிருக்கும் போதே அவரை முந்திக்கொண்டு ஊழல் எதிர்ப்பு கோஷத்தை யாரும் எதிர்பாராத விதமாக அரசியலில் தொபுக்கடீரென்று குதித்தார் இந்த குருவை மிஞ்சிய சிஷ்யன் கெஜ்ரிவால். ''வடை போச்சே'' என்று ஹசாரே கெஜ்ரிவாலை திட்டித்தீர்த்தார். சாபமிட்டார். தேர்தலில் கெஜ்ரிவாலுக்கு நான் ஆதரவு தரமாட்டேன் என்று சபதமிட்டார். சட்டமன்றத்தேர்தலில் கெஜ்ரிவால் 28 இடங்களே கிடைத்ததில் ஹசாரேக்கு மகிழ்ச்சி தான். நான் ஆதரவு கொடுத்திருந்தால் இன்னும் அதிக இடங்களில் வெற்றிபெற்று ஆட்சியை பிடித்திருப்பார் என்று ஹசாரே கர்ஜித்தார். இதிலே என்னன்னா.... விதைத்தவன் ஒருத்தன் அறுவடை செய்தவன் வேறோருத்தனா போய்ட்டான் என்பது தான் உண்மை. அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பான்னு கெஜ்ரிவால்  சொல்லுவாரு போலிருக்கு. அந்த அளவிற்கு தேர்ந்துவிட்டார்.
         ஆனால் இந்த டெல்லி சட்டமன்றத் தேர்தல் முடிவின் மூலம் நாம் ஒன்றை கவனிக்க வேண்டும். சட்டமன்ற தேர்தலில் எந்த ஒரு கட்சியும் 36 இடங்களில் வெற்றி பெற்றால் தான் தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியமைக்கமுடியும். ஆனால் இந்த தேர்தலில் டெல்லி மக்கள் எந்த ஒரு கட்சிக்கும் தனிப்பெரும்பான்மையை தராதது என்பதிலிருந்து நாம் ஒன்றை புரிந்துகொள்ளவேண்டும். ''எங்களுக்கு எந்த ஒரு  கட்சியின் ஆட்சியும் வேண்டாம்'' என்று ''NOTA'' வை பயன்படுத்தியிருக்கிறார்கள் என்பது தான் உண்மை.
   # அப்படியிருக்க மக்களின் விருப்பத்திற்கு எதிராக கெஜ்ரிவால் ஆட்சியமைத்திருப்பது என்பதே ஒரு முரண்பாடு தான்.
              # அதுமட்டுமல்லாமல், ஊழல்கள் மலிந்த காங்கிரஸ் கட்சியே வேண்டாம் என்று தான் டெல்லி மக்கள் அக்கட்சியை தூக்கி எறிந்திருக்கிறார்கள். அப்படியிருக்கையில் மக்கள்
தூக்கி எறிந்த கட்சியின் ஆதரவோடு ஆட்சி அமைத்திருப்பது என்பது இன்னொரு முரண்பாடு.
          # காங்கிரஸ் கட்சி செய்த ஊழலைப்பார்த்து தான் ஊழலை ஒழிக்கபோறேன்னு கட்சியை ஆரம்பித்து மக்களிடம் ஒட்டு கேட்டு வந்தார். இப்போது அதே காங்கிரஸ் கட்சியோடு கைகொர்த்திருப்பது மற்றுமொரு முரண்பாடு.
          # யாருக்குமே தனிப்பெரும்பான்மை கிடைக்காத சூழ்நிலையில் எண்ணிக்கை மட்டுமே உண்மையான ஜனநாயகமாக கருதமுடியாது. ஜனநாயகத்தில் இதுவே ஒரு முரண்பாடு தான்.

சிலியின் சிலிர்ப்பு...!

              
           சிலி என்ற சின்னஞ்சிறு லத்தீன் அமெரிக்க நாட்டில் கிடைக்கும் இயற்கையான தாதுவளம் செம்பு மட்டும்தான். அதுவும் உலகில் அதிக அளவில். ஆனால் இப்போது சிலி என்ற நாட்டுக்கு ஒரு வர்ணப் பொலிமை கைவந்திருக்கிறது. கபடமற்ற குழந்தையைப் போல் புன்னகைக்கும் ஓர் அறுபத்து இரண்டு வயது பெண்மணியின் முகம் தான் இன்று உலக அரங்கில் நிமிர்ந்து நிற்கிறது. ஆம்....  மிச்சேல் பேச்லெட். எதிர்பார்ப்புகளையும் கனவுகளையும் நனவாக்க சிலியின் மக்கள் மிக பெரும்பான்மையுடன் இரண்டாவது முறையும் தேர்ந்தெடுத்த ஜனாதிபதி. சால்வடார் அலண்டேயை ராணுவப் புரட்சிமூலம் அகற்றிய பினோசெட்டின் ராணுவ ஆட்சிக்குப் பிறகு இரண்டு தடவை சிலியின் ஜனாதிபதியாகும் ஒரே தலைவி இவர் தான். ராணுவ ஆட்சியின் கொடுமையை அனுபவித்த மிச்சேல் நெடிய போராட்டத்திற்குப் பின் 2006-ல் சிலியின் ஜனாதிபதியானார்.
             தொடர்ந்து இரண்டு தடவை பதவி வகிக்க அரசியல் அமைப்புச் சட்டம் அனுமதிக்காததால் 2010ல் அவர் ஆட்சியிலிருந்து விலகினார். இதோ இப்போது அவர் மிக பலம் வாய்ந்த மக்கள் ஆதரவுடன் மீண்டும் ஆட்சியில் அமர்ந்துள்ளார். சோசலிஸ்ட் கட்சியின் தலைமையில் கம்யூனிஸ்ட் கட்சியும் கிறிஸ்துவ ஜனநாயகவாதிகளும் சேர்ந்த கூட்டணிக்குத் தலைமை தாங்கிய மிச்சேல் 62 சதவீதம் வாக்குகளைப் பெற்றார். தன் எதிர் அணி தலைவியும் தன் பால்யகால தோழியுமான ஏவ்லின் ரோஸ் மேத்திக்கு 38 சதவீதம் வாக்குகளே கிடைத்திருக்கிறது. 1950களில் ராணுவ முகாமில் சேர்ந்து பழகி விளையாடிய தோழிகளாவார்கள் இருவரும். இருவருடைய தந்தையர்களும் ராணுவ அதிகாரிகளாக இருந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. 1951 செப்டம்பர் 29 தான் மிச்சேல் பேச்லெட்டின் பிறந்த நாள். தலைநகரான சாண்டியாகோவில் தொல்லியல் ஆராய்ச்சியாளரான ஏஞ்சல் ஜெரிய கோமசிற்கும் ராணுவத்தில் பிரிகேடியர் ஜெனரலான ஆல்பர்டோ பேச்லெட்டுக்கும் மகளாக பிறந்தர். அப்பாவின் வேலை நிமித்தமாக ஓரிடத்திலிருந்து இன்னொரு இடத்திற்கு மாற்றல் சகஜமாக இருந்ததால் பள்ளிப்படிப்பு பல இடங்களில் முடிக்க வேண்டியதாயிற்று.
              படிப்பில் மிக திறமைசாலியான மிச்சேல் கைப்பந்து விளையாட்டிலும் பள்ளிப்பாடகர் குழுவிலும் முன்னணிப் பாத்திரம் வகித்தார். 1970-ல் சிலி பல்கலைக்கழகத்தில் நுழைவுத் தேர்வில் முதல் மாணவியாக வந்து மருத்துவப் படிப்பில் சேர்ந்தார். சமூக அறிவியலிலும் பொருளாதாரத்திலும் விருப்பம் கொண்டிருந்த மிச்சேலை அப்பாதான் மருத்துவத்துறைக்குத் திருப்பினார். துன்பத்தால் அவதிப்படும் மக்களுக்கு ஆறுதலளிக்கவும் நாட்டுக்குச் சேவை செய்யவும் உகந்தவழி இதுதான் என்று அவர் பின்பு புரிந்துகொண்டார். 1973 செப்டம்பர் 11 அன்று அமெரிக்காவின் உதவியுடன் சால்வடார் அலண்டேயின் ஜனநாயக அரசைக் கவிழ்த்து ஜெனரல் அகஸ்டோ பினோசெட் ஆட்சியைக் கைப்பற்றினார். இதற்கு எதிராக குரலெழுப்பிய ஜெனரல் ஆல்பர்டோவை தேசத்துரோகக் குற்றம் சுமத்தி சிறையில் அடைத்தார். மிச்சேலின் எதிராளியான ரோஸ் மேத்தியின் அப்பா ஜெனரல் பெர்னாண்டோ மேத்தி அப்போது ஆல்பர்டோவை அடைத்திருந்த சிறையின் பொறுப்பாளராக இருந்தார். சாண்டியாகோ சிறையில் பல மாதங்களாக அனுபவித்த சித்ரவதையால் 1974 மார்ச் 12 அன்று ஆல்பர்டோ மாரடைப்பால் காலமானார். இந்தச் சோதனைக் காலத்தில் மிச்சேலும் தாயும் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டார்கள். கண்களைக் கட்டி அவர்களை சாண்டியாகோவிலுள்ள ரகசியச் சிறைக்கு கொண்டு சென்று தாயையும் மகளையும் தனித்தனியாக சிறையில் அடைத்துச் சித்ரவதை செய்தது பினோசெட்  அரசு.
             காலப்போக்கில் மனிதாபிமானமுள்ள சில ராணுவ அதிகாரிகள் நாட்டை விட்டு வெளியேற வேண்டும் என்ற நிபந்தனையின் பேரில் அவர்களை விடுதலை செய்தனர். பின்பு ஆஸ்திரேலியாவிலுள்ள தனது மூத்த சகோதரனுடன் மிச்சேலும் தாயும் சிறிது காலம் தங்கிவிட்டு 1975 மே மாதம் கிழக்கு ஜெர்மனியில் தன் மருத்துவப் படிப்பைத் தொடர்ந்து கொண்டு அங்கு ஒரு சமுதாய மருத்துவக் கூடத்தில் வேலை செய்தார்.நான்காண்டு கால வெளிநாட்டு வாழ்க்கைக்குப் பிறகு 1979-ல் மிச்சேல் சிலிக்கு திரும்பினார். 1983-ல் மருத்துவத்தில் பட்டமேற்படிப்பு முடித்து பொது சுகாதார மையத்தில் சேவை செய்தார். 1990-ல் சிலியில் மீண்டும் ஜனநாயகம் திரும்பியதால் இயக்க வேலைகளில் முழுமையாக ஈடுபடத் தொடங்கினார். 1994 முதல் 1997 வரை சுகாதார துணை அமைச்சரின் மூத்த உதவியாளராக பணிசெய்த அவர் மேலும் ராணுவ விஞ்ஞானத்தில் பட்டப்படிப்பு முடித்து 1998 முதல் ராணுவ அமைச்சரகத்திலும் சேவை செய்தார். 2000 - 2004 கால அளவில் சுகாதார அமைச்சராகவும் ராணுவ அமைச்சராகவும் செயல்பட்டார். 2010 மார்ச் மாதம் ஜனாதிபதி பதவியில் இருந்து விலகிய பின்பு மிச்சேல் சமுதாய சேவையில் முழுமையாக தன்னை இணைத்துக் கொண்டார்.
         ஐ.நா. பாலினச் சமத்துவம் மற்றும் மகளிருக்கு கூடுதல் அதிகாரம் அளிப்புக் குழுவின் முதல் நிர்வாக இயக்குநர் ஆக கடந்த மார்ச் வரை பணியாற்றினார். பல மொழிகளை கையாள்வதில் திறமையுள்ள மிச்சேல் தாய்மொழியான ஸ்பானிஷைத்தவிர ஆங்கிலம், ஜெர்மன், போர்ச்சுகீஸ், பிரெஞ்சு ஆகிய மொழிகளிலும் புலமை பெற்றிருந்தார். ''அனைத்து மக்களின் சிலி'' என்ற கனவுதான் என்னை இங்கே கொண்டு வந்துள்ளது. கனவுகளை நனவாக்குவது எளிதானவை அல்ல என்றாலும், உலகை மாற்றுவது எப்போது தான் எளிதாக இருந்தது?  என்று தேர்தல் வெற்றிக்குப் பிறகு மிச்சேல் பேச்லெட் தோழர்களை கேட்டார்.
 
‘தேசாபிமானி’ வாராந்திர சிறப்பிதழிலிருந்து தமிழில் : ஏ.குமார், திருச்சி

நன்றி : 

    

வெள்ளி, 27 டிசம்பர், 2013

தேசத்தைக் காக்கும் எல். ஐ. சி - யை பாதுகாப்போம்...!

           






             நாடு முழுதும் உள்ள எல்.ஐ.சி கிளைகளில் கடந்த ஒரு மாத காலமாகவே ஒரே பரபரப்பாக இருப்பதை காணலாம். முகவர்கள் எல்லோரும் தேனீக்களைப் போல சுறுசுறுப்பாய் - பம்பரமாய் சுழன்று வேலை செய்கிறார்கள். ஏனென்றால் எல்.ஐ.சி -யின் பிரபலமான 50 வகையான திட்டங்களை எல்லாம் வரும் டிசம்பர் மாதம் 31 - ஆம் தேதியன்று முடிவுக்குக் கொண்டுவருகிறார்கள். காலகாலமாக பல ஆண்டுகளாக மக்களுக்கு பல்வேறு வகையான பலன்களை அள்ளித்தந்துகொண்டிருந்த அத்தனை திட்டங்களையும் ஒழித்துக்கட்டிவிட்டு தனியார் இன்சூரன்ஸ் நிறுவனங்களை வாழவைப்பதற்காக மத்திய அரசு போடும் சதி திட்டமாகும். மத்திய அரசின் இந்த மோசடியான நடவடிக்கையை கண்டித்தும், 
                  இன்சூரன்ஸ் துறையில் தற்போது அனுமதிக்கப்படும் அந்நிய நேரடி முதலீடு 26 சதவீதத்திலிருந்து 49 சதவீதமாக உயர்த்தும் மத்திய அரசின் செயலைக் கண்டித்தும், 
               எல்.ஐ.சி திருத்த மசோதா - 2009 என்ற திருத்த மசோதாவை கடந்த ஆண்டு நிறைவேற்றியதன் மூலம், ஆண்டு உபரித்தொகையில் 90 சதவீதமாக பாலிசிதாரர்களுக்கு போனசாக கொடுக்கப்பட்டதை 85 சதவீதமாக குறைத்ததை கண்டித்தும், 
            01.04.2012 முதல் பிரிமியம் என்பது காப்புத்தொகையில் 10 சதவீதம் மேல் இருத்தல் கூடாது என்றும், அப்படி அதிகமானால் அவர் வாங்கும் பலன்களுக்கு வருமான வரி வசூல் செய்யப்படுவதை கண்டித்து, 
             எல்லாவற்றிற்கும் மேலாக எதிர்வரும் 2014 ஜனவரி 1 - லிலிருந்து மக்கள் சேமிப்பான பிரிமியத்திற்கு சேவை வரி வசூலிப்பதை கண்டித்தும், 
             இன்று மாலை புதுச்சேரி அண்ணா சாலையில் LICAOI - எல்.ஐ.சி முகவர்கள் சங்கம்       சார்பில் ''எல்.ஐ.சி-யை பாதுகாப்போம்'' என்ற முழக்கத்துடன் சுமார் 750 மீட்டர் நீள ''மனித சங்கிலி போராட்டம்'' நடத்தப்பட்டது. 
           போராட்டத்தை  சாகத்திய அகாடமி விருது பெற்ற எழுத்தாளர் - பெரியவர் திருமிகு.ம.இலெ.தங்கப்பா அவர்கள் தொடங்கிவைத்தார்.
          நாளை சேலத்தில் நடைபெற உள்ள இரண்டாவது தமிழ் மாநில மாநாட்டில் சேர்ப்பிக்கவிருக்கும் ''ஏகாதிபத்திய எதிர்ப்பு ஜோதியை'' புதுச்சேரியின் மூத்த தொழிற்சங்கத்தலைவர் தோழர்.சி.எச்.பாலமோகனன் எடுத்துக் கொடுத்தார். முடிவில் மெழுகுவத்தி ஏந்தி ''எல்.ஐ.சி-யை பாதுகாப்போம்'' என்ற உறுதிமொழி எடுக்கப்பட்டது.
              இந்தப் போராட்டத்தில் முகவர்கள், வளர்ச்சி அதிகாரிகள், மத்திய - மாநில அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், தொழிலாளர்கள், சி.ஐ.டி யு. தோழர்கள், மருந்து விற்பனை பிரதிநிதிகள், மாதர் சங்க- வாலிபர் சங்க- மாணர்வர்கள் சங்க தோழர்கள், பாலிசிதாரர்கள் மற்றும் பொதுமக்கள் போன்றோர் பெருந்திரளாக கலந்துகொண்டு சிறப்பித்தார்கள்.

ஞாயிறு, 22 டிசம்பர், 2013

சோவியத் யூனியன் உடைந்ததால் மாபெரும் பாதிப்பு - மக்கள் வருத்தம்...!

       
            “சோவியத் யூனியன் உடைந்ததால் மிகப்பெரும் பாதிப்பு” ஏற்பட்டுவிட்டது என்று 51 சதவிகித மக்கள் கருத்து தெரிவித்துள்ளனர். ஒன்று பட்ட சோவியத் யூனியன் கடந்த 1992-ம் ஆண்டு 15 நாடுகளாக பிரிந்தன. இப்போது ஒவ்வொரு நாடுகளும் சுதந்திர நாடுகளாக செயல்பட்டு வருகின்றன. பிரிவதற்கு முன்பு சோவியத் யூனியன் உலக நாடுகளுக்கெல்லாம் கலங்கரைவிளக்கமாகவும்,  அமெரிக்காவுக்கு சவாலாகவும், உலகிலேயே வலுவான வல்லரசாகவும்  விளங்கியது.
           சோவியத் யூனியன் பிரிந்த பிறகு அமெரிக்கா உலக நாடுகளை ''ஜனநாயகம்'' என்ற பெயரில் ஆட்டிப்படைத்து வருகிறது. ''புதிய பொருளாதாரம்'' என்ற பெயரில் மற்ற நாடுகளை அமெரிக்கா மிரட்டி, சுரண்டி வருகிறது. பணக்கார நாடுகள் மேலும் பணக்கார நாடுகளாகவும், ஏழை நாடுகள் மேலும் ஏழை நாடுகளாகவும் மாறிவிட்டன. இதில் ஒன்றுபட்ட சோவியத் யூனியனில் பிரிந்து சென்ற நாடுகளும் தப்பவில்லை. இது பற்றி ''கல்லப்'' என்ற தனியார் அமைப்பு சோவியத் யூனியனிலிருந்து பிரிந்து சென்ற 11 நாடுகளில் உள்ள மக்களிடம் கருத்துக் கணிப்பு நடத்தியது. இந்த கருத்துக் கணிப்பு இந்த ஆண்டு ஜூன் முதல் ஆகஸ்ட் மாதம் வரை 1000 பேரிடம் நேரிடையாக நடத்தப்பட்டது. இதில் 51 சதவிகித மக்கள் சோவியத் யூனியன் உடைந்ததால் மிகப்பெரும் பாதிப்பு ஏற்பட்டு விட்டது என்று வருத்தத்துடன் தெரிவித்தனர்.
         பிரிந்ததால் வன்முறைகள், இன மோதல்கள் அதிகம் ஏற்பட்டு மக்கள் அதிகம் பாதிக்கப்பட்டனர் என்றனர். 24 சதவிகித மக்கள் நன்மை ஏற்பட்டுள்ளது என்று கருத்து தெரிவித்தனர். 25 சதவிகித மக்கள் பயத்துடனும், மிரட்சியுடனும் தங்களுக்கு இது பற்றி தெரியவில்லை, இரண்டுமில்லை என்றும், இதில் சிலர் கருத்து தெரிவிக்கவும் மறுத்துவிட்டனர். பொதுவாக கசகஸ்தான், அஜர்பைஜான், துர்க்மெனிஸ்தான் ஆகிய நாடுகளில் உள்ள மக்கள் நன்மை ஏற்பட்டுள்ளதாகவும், ஆர்மீனியா, கிர்கிஸ்தான், உக்ரைன், ரஷ்ய ஆகிய நாட்டு மக்கள் மிகப்பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் கூறினார்கள். மேலும் இந்த கருத்துக்கணிப்பில் 30 வயதுக்கு உட்பட்ட இளைஞர்களில் 33 சதவிகிதத்தினர் சோவியத் யூனியனில் பிரிந்து சென்றது தீமையாகி விட்டது என்றும், 30 சதவிகித இளைஞர்கள் நன்மை தான் ஏற்பட்டுள்ளது என்றும்  வித்தியாசமாக கருத்து கூறினார்கள். கிர்கிஸ்தான் மக்களை தவிர பிரிந்து சென்ற மற்ற நாட்டு மக்கள் தங்கள் குழந்தைகளுக்கு உயர்கல்வி கிடைத்து இருப்பதாக தெரிவித்தார்கள். 11 நாடுகளில் உள்ள 30 சதவிகித மக்கள் சுதந்திரத்துக்கு பிறகு தங்கள் பிள்ளைகள் உயர் கல்வி கற்க வாய்ப்பு கிடைத்து இருப்பதாகவும், இதனால் நன்மைகள் ஏற்படும் என்று கூறினர். ஆனால் 18 சதவிகித மக்கள் இதில் நன்மை எதுவும் ஏற்படவில்லை என்று மறுப்பு தெரிவித்தனர்.
        ரஷ்யாவில் நடத்திய கருத்துக்கணிப்பில் 55 சதவிகித மக்கள் சோவியத் யூனியன் உடைந்ததால் தீமை தான் ஏற்பட்டுள்ளது என்றும், 19 சதவிகிதத்தினர் தங்கள் வாழ்க்கை மேம்பட்டு இருக்கிறது என்றும் கூறினர். 26 சதவிகித மக்கள் கருத்து கூற மறுத்து விட்டார்கள். ரஷ்யாவில் இருந்து பிரிந்து சென்ற உஸ்பெக்கிஸ்தான், லித்துவேனியா, எஸ்தோனியா, லாவித்வியா ஆகிய நாடுகளில் கருத்துகணிப்பு நடைத்தப்படவில்லை. 
 நன்றி :

செவ்வாய், 17 டிசம்பர், 2013

சவுரவ் கங்குலிக்கு வலை வீசிய நரேந்திர மோடி...!

         தேர்தல் நெருங்க நெருங்க காங்கிரஸ் கட்சியும் பாரதீய ஜனதாக் கட்சியும் பண்ணுகிற கூத்துகளைப்  பார்க்க சகிக்கமுடியவில்லை. நான்கு மாநிலத்தேர்தல்களில் மண்ணைக் கவ்விய காங்கிரஸ் கட்சியோ அண்மையில் விளையாட்டிலிருந்து ஓய்வுபெற்ற சச்சின் டெண்டுல்கரை தன்னுடைய கட்சியின் ''பிரச்சார பீரங்கியாக'' பயன்படுத்தி சச்சின் இரசிகர்களின் ஓட்டுக்களை ஸ்வாகா பண்ணி ஜெயித்துவிடலாம் என்று கனவு கண்டு சச்சினுக்கு ''பாரத ரத்னா'' அறிவிப்பெல்லாம் செய்து அமர்க்களப்படுத்தியது.
         இதைப் பார்த்த பாஜக-வின்  ''பிரதமர் கனவு வேட்பாளர்''  மோடிக்கு அரிப்புத் தாங்கல. உடனே கொல்கத்தாவில் வாசம் செய்யும் இந்திய கிரிக்கெட் அணியின் இன்னொரு முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலிக்கு எதிர் வருகின்ற மக்களவைத் தேர்தலில் பாஜக சார்பில் போட்டியிட வாய்ப்புத் தருவதாகவும், தேர்தலில் வெற்றி பெற்ற பின் பாஜக அமைச்சரவையில் விளையாட்டுத்துறை அமைச்சராக ஆக்குவதாகவும் கூச்சமில்லாமல் ஆசை வார்த்தைகளை கூறி அழைப்புவிடுத்தார்.
         இதற்கெல்லாம் மயங்காத கங்குலி கொல்கத்தா செய்தியாளர்களிடம், இப்படியொரு அழைப்பை மோடி தனக்கு விடுத்துள்ளார் எனவும், அதை தான் நிராகரிப்பதாகவும் கூறி மோடியின் முகத்தில் கரியை பூசினார். போகிறப் போக்கைப்பார்த்தால், ''பிரதமர் கனவு வேட்பாளர்'' மோடி, பிரபலங்களுக்கு வலைவீசி அவர்கள் கேட்காமலேயே மக்களவைத் தேர்தலில் போட்டியிட சீட்டும் கொடுத்து, மந்திரிப்பதவியையும் கொடுத்து, அமைச்சரவைப் பட்டியலையும் இப்போதே குடியரசுத் தலைவரிடமும் கொடுத்துவிடுவார் போலிருக்கிறதே. மோடியின் கோமாளித்தனத்தை தாங்கமுடியலடா சாமி...!

திங்கள், 16 டிசம்பர், 2013

ஆன்லைன் முறையிலான வங்கிப் போட்டித்தேர்வு மாற்றப்பட வேண்டும்...!

புதன், 11 டிசம்பர், 2013

பாரதியின் ''பெண் விடுதலை''

           

          விடுதலைப்போராட்டக் காலத்தில் தேச விடுதலைக்காக போராடியப் பல்வேறுத் தலைவர்களில்,  தேச விடுதலைக்கு மட்டுமின்றி சமூக விடுதலைக்கும், பெண் விடுதலைக்கும் சேர்த்துப் போராடிய ஒரே மாமனிதன் புரட்சிக்கவிஞன் பாரதி என்று சொன்னால் அது மிகையாகாது. அரசியல் விடுதலை மட்டும் அடைந்துவிட்டால் போதாது, சமூக விடுதலையும், பெண் விடுதலையும் சேர்ந்தது தான் இந்த தேச விடுதலை என்று உணர்ந்தவன் பாரதி. அதனால் தான் பாரதி தான் படைத்த பாடல்களில் பெண்களை உயர்த்தும் பாடல்களை நிறைய கொடுத்திருக்கிறார். அவர் எழுதிய புதிய ஆத்திச்சூடியில் ''தையலை உயர்வு செய்'' என்று சமூகத்திற்கு பாடம் சொல்லியிருப்பார்.  அதுமட்டுமல்ல, ''மாதர்தம்மை இழிவு செய்யும் மடமையை கொளுத்துவோம்'' என்று பெண்களை இழிவு செய்யும் சமூகத்தை கடுமையாக சாடியிருப்பார்.
               அப்படியெல்லாம் பெண்களை உயர்த்திப் பாடியது மட்டுமல்லாமல், பாரதி அவ்வாறே வாழ்ந்தும் காட்டினார் என்பது தான் உண்மை. அதற்கு சான்றுகளும் இருக்கின்றன. நீங்கள் மேலே இருக்கும் இரண்டு புகைப்படங்களையும் பார்த்தாலே புரியும். ஒரு புகைப்படத்தில் பாரதி தன் மனைவியுடன் பக்கத்தில் நிற்பது போலவும், மற்றொன்றில் குடும்பத்தோடு எடுக்கப்பட்ட புகைப்படத்தில் பாரதி நின்றுகொண்டும், அவரது மனைவி செல்லம்மாள் அவரின் அருகில் உட்கார்ந்து கொண்டும் இருப்பது போலவும் இருக்கும் அந்த இரண்டு புகைப்படங்களையும் பார்க்கும் போதே ஒரு விஷயத்தை நீங்கள் புரிந்துகொள்ளலாம். அதாவது முதலில்  உங்கள் தாத்தா காலத்து புகைப்படங்களை கையில் எடுங்கள். அந்த படத்தையும், பாரதியின் இந்த இரண்டு படங்களையும் ஒப்பிட்டுப்பாருங்கள். அந்த படங்களில் ஒரு வித்தியாசத்தை நீங்கள் உணர்வீர்கள். அதாவது உங்கள் தாத்தாப் படத்தைப் பாருங்கள். அதில் தாத்தா உட்கார்ந்திருப்பார். பாட்டி அவருக்கு அருகில் பவ்வியமாக நின்றுகொண்டிருப்பார். அந்த காலத்து பெரியவர்களின் எந்தப் படங்களை எடுத்துப் பார்த்தாலும் இப்படித்தான் நீங்கள் பார்ப்பீர்கள். அதாவது அந்தக் காலத்தில் பெண்கள் மரியாதை நிமித்தமாக தன் கணவருக்கு எதிரில் சமமாக உட்காரவோ அல்லது நிற்கவோ மாட்டார்கள். அதை தான் அந்தக்கால படங்களும் நமக்கு உணர்த்துகின்றன. புகைப்படம் எடுக்கும் போதும்கூட பெண்கள் அப்படித் தான் நடந்துகொண்டிருக்கிறார்கள். அந்தக் காலம் என்பது பெண்ணடிமைத்தனம் உச்சத்தில் இருந்த காலம். பெண்ணென்பவள் மற்றவர்கள் எதிரில் கணவனிடம் சமமாக நிற்பதோ, கணவன் நிற்க மனைவி நாற்காலியில் உட்காருவதோ குற்றச்செயல். அதையெல்லாம் சமூகம் ஏற்றுக்கொள்ளாத காலம். அப்படிப்பட்ட காலத்தில் தான் நம் பாட்டன் பாரதி அந்த பெண்ணடிமைத்தனத்தை உடைத்தெறிந்தார் என்பது மட்டுமல்ல பெண்ணை உயர்வு செய்து வாழ்ந்தும் காட்டினார். இதைத்தான் அந்த இரு புகைப்படங்களும் நமக்கு உணர்த்துகின்றன. அந்த இரண்டு படத்திலும் பாரதி தன் மனையின் தோளின் மீது தோழமையாக கைப்போட்டுக்கொண்டிருப்பார்.  அவரது மனைவி பயந்து போய் உட்கார்ந்து கொடிருப்பார். அப்படி எடுக்கப்பட்ட அந்தப் புகைப்படங்களை, அடிமைப் புத்தி மேலோங்கி இருந்த அந்தக் கால சமூகம் ஏற்றுக்கொள்ளவில்லை. ஆச்சாரமாக நடக்கும் நம் சமூகத்திற்கு இதெல்லாம் கூடாது... நம் சமூகத்திற்கு ஒத்துவராது என்று பாரதியின் சுற்றம் அவரை சீற்றமுடன் சாடியது. ஆனால் பாரதி அவர்களிடம் தேசம் வெறும் விடுதலை மட்டும் பெற்றால் போதாது ''பெண் விடுதலையும் வேண்டும்'' என்பதை வலியுறுத்தினார். 
             ''பாதகஞ் செய்பவரைக் கண்டால் - நாம்
                        பயங்கொள்ள லாகாது பாப்பா!
              மோதி மிதித்துவிடு பாப்பா! - அவர்
                        முகத்தில் உமிழ்ந்துவிடு பாப்பா!''
என்று பாரதி பெண்களுக்கு தைரியத்தைக் கற்றுக்கொடுத்தார். பெண்கள் அநியாயங்களை எதிர்த்துப்  போராட வீரத்தைக் கற்றுக்கொடுத்தார். பெண் விடுதலைக்கு மிக முக்கியமானது அவர்கள் அறியாமையிலிருந்து விடுதலைப் பெறவேண்டும். அதற்கு அவர்கள் பட்டங்கள் பெறும் இடங்களுக்கும், சட்டங்கள் இயற்றும் இடங்களுக்கும் முன்னேறிச் செல்லவேண்டும் என்று தேசம் அடிமையாய் இருந்தகாலத்திலேயே கனவு கண்டார். இது காலத்தை மீறியக் கனவு. அதனால் தான் ''பட்டங்கள் ஆள்வதும் சட்டங்கள் செய்வதும் பாரினில் பெண்கள் நடத்தவந்தோம்'' என்ற கனவு மெய்ப்படப் பாடினார். பெண் விடுதலை வேண்டும் பாரதியின் கனவு மெய்ப்பட வேண்டும்.

பாரதி - வெடித்து எழுந்த விண்மீன்...!

           
            சரியாக, 38 ஆண்டுகள், 9 மாதங்களே வாழ்ந்த பாரதி தன் மொழிக்கும் சமூகத்துக்கும் விட்டுச்சென்றது ஏராளம். தனது குறுகிய வாழ்நாளுக்குள் எவ்வளவு செய்திருக்கிறார் பாரதி. கவிதைகள் மட்டும்தான் அவரது சாதனை என்று இன்றைய தலைமுறையினர் பலர் நினைக்கக்கூடும். கிட்டத்தட்ட, கவிதைகளுக்கு நிகரான சாதனையை பாரதி உரைநடையிலும் செய்திருக்கிறார்.
           அது மட்டுமல்லாமல், அவருடைய இதழியல் பணி மகத்தான வீச்சுடையதாகவும் இருந்திருக்கிறது. சுதேசமித்திரன், சக்கரவர்த்தினி, இந்தியா போன்றவை உள்ளிட்ட பல பத்திரிகைகளில் பாரதி பணியாற்றியிருக்கிறார். வேறு சில பத்திரிகைகளில் பங்களிப்பும் செய்திருக்கிறார். தான் ஆசிரியராகப் பணியாற்றிய ‘இந்தியா’ இதழில், தென்னிந்தியப் பத்திரிகைகளிலேயே முதன்முறையாகக் கருத்துச்சித்திரத்தை அறிமுகப்படுத்திய பெருமை பாரதிக்கு உண்டு. சமூகத்துடன் ஊடாடுவதற்கு இதழியலையும் பாரதி மிகவும் திறமையாகக் கையாண்டார். அரசாங்கத்தின் தடை, பொருளாதாரக் காரணங்கள் போன்றவற்றால் ஒவ்வொரு பத்திரிகையும் முடக்கப்பட்டாலும் உடனடியாக வேறொரு பத்திரிகையில் எப்படியும் கால்பதித்து விடுவார். அந்த அளவுக்கு அவரது இதழியல் தாகம் தணியாததாக இருந்திருக்கிறது. அதனால்தான், பத்திரிகை தொடங்குவது குறித்துத் தன் நண்பருக்கு எழுதிய கடிதத்தில் ‘சொத்தை விற்றேனும்’ பணம் கொண்டுவரச் சொல்லியிருக்கிறார்.
               கவிதைகள், உரைநடை, இதழியல் எழுத்துக்கள் என்று பாரதியை எழுத்து சார்ந்த மனிதராக மட்டுமே பார்த்துவிட முடியாது. தான் வாழ்ந்த காலத்தில் மகத்தான புரட்சியாளராக பாரதி இருந்திருக்கிறார். இந்து மதத்தில் ஈடுபாடுடையவராக இருந்தாலும், சாதிப் பிரிவினைகளையும் தீண்டாமைக் கொடுமையையும் கடுமையாக எதிர்த்தார். இந்த எதிர்ப்புணர்வைத் தனது வாழ்க்கை முறையிலும் செயல்படுத்திக் காட்டினார். பிற சமூகத்தைச் சேர்ந்தவர்களுடன் பாகுபாடு பார்க்காமல் பழகுதல், அவர்கள் வீட்டில் உணவருந்துதல் போன்ற பழக்கங்களைத் தான் பின்பற்றியதோடு மட்டுமல்லாமல், பிறரையும் பின்பற்றுமாறு வலியுறுத்தியிருக்கிறார். இந்தச் செய்கைகளெல்லாம் அவருடைய சமூகத்தைச் சேர்ந்தவர்களிடம் மிகுந்த கோபத்தை ஏற்படுத்தியிருக்கின்றன. இதேபோல், மத வேற்றுமையும் பாராதவர் பாரதி. அவருக்கு இஸ்லாமிய, கிறித்தவ நண்பர்கள் உண்டு. 1920-ல் நபிகள் நாயகத்தின் பிறந்த நாளன்று பொட்டல் புதூரில் அங்குள்ள இஸ்லாமிய மக்களிடையே இஸ்லாம் மார்க்கத்தின் பெருமையைப் பற்றி பாரதி பேசியதோடல்லாமல், தான் எழுதிய ‘அல்லா… அல்லா… அல்லா!’ என்ற பாடலையும் பாடிக்காட்டியிருக்கிறார்.
             எப்பாடுபட்டாவது இந்தியாவுக்குச் சுதந்திரம் வாங்கித்தர வேண்டும் என்று தவிப்புடன் போராடியவர்களில் பாரதிக்கு முதல் வரிசையில் இடம் உண்டு. இந்தத் தவிப்பின் பிரதிபலிப்புதான் மிதவாதம், தீவிரப்போக்கு ஆகிய இரு வழிகளில் தீவிரப்போக்கை பாரதி தேர்ந்தெடுத்தது. விடுதலைபெற்ற இந்தியாவை, தீண்டாமை போன்ற பிரச்சினைகள் ஒழிந்த இந்தியாவை வாழ்த்திப் பாடும் முதல் பாடகனாக, தான் இருக்க வேண்டும் என்பதுதான் அவருடைய பெருங்கனவு. நாடு விடுதலை பெறுவதற்கு 26 ஆண்டுகளுக்கு முன்பே மறைந்துவிட்டாலும்கூட, ஏதோ ஒரு முன்னெச்சரிக்கை உணர்வால் மேற்குறிப்பிட்ட லட்சிய பாரதத்தை வரவேற்று முன்கூட்டியே பாடல்களைப் பாடிவிட்டுப் போயிருக்கிறார்.
                 பாரதியை நம் நாடு உரிய வகையில் கெளரவித்திருக்கிறதா என்று பார்த்தால், இல்லை என்பதுதான் உண்மை. தேசப்பற்றையும் சுதேசி உணர்வையும் வடிவமைத்ததில் தேசத்தின் எந்தத் தலைவருக்கும் நிகராகப் பங்குவகித்த பாரதி, இறுதியில் தமிழகத்துக்கு மட்டுமே உரியவராகப் பார்க்கப்பட்டவரானார். தமிழகத்தால் மட்டுமே தற்போது கொண்டாடப்படுகிறார். தாகூரின் புகழை இந்திய அளவில் பரப்பவும் நிலைநாட்டவும் இந்திய அரசும் மேற்கு வங்க அரசும் எவ்வளவோ திட்டங்களைச் செயல்படுத்திவருகின்றன. இதற்கெல்லாம் தாகூர் தகுதி வாய்ந்தவர் என்பதில் எந்தவிதச் சந்தேகமும் இல்லை. ஆனால், தாகூருக்கு இணையாகக் கருதப்பட வேண்டிய பாரதி போன்றவர்களும் கெளரவப்படுத்தப்பட வேண்டியது அவசியம்.
                  சமீபத்தில் பாரதியின் படம் பொறித்த நாணயம் வெளியிடப்பட வேண்டும் என்று எழுந்த சிறிய கோரிக்கையை, ‘பொருத்தமான காலம் இதுவல்ல’ என்று கூறி மத்திய அரசு நிராகரித்துவிட்டது. ஒரு நாணயத்துக்கே பாரதிக்கு இந்தப் பாடு! இந்தப் போக்கு இந்திய அரசுக்கு அழகல்ல. தேசத் தலைவர்கள், தேச உணர்வைத் தட்டி எழுப்பிய ஆளுமைகள் போன்றோர் விஷயங்களில் ஒரு சிலருக்கு மட்டுமே தொடர்ந்து கவனம் கொடுக்கப்பட்டு மற்றவர்கள் நிராகரிக்கப்படுவது முறையல்ல.
               ''மந்திரம்போல் வேண்டுமடா சொல்லின்பம்'' என்றார் பாரதி. அப்படி உயிர்த்துடிப்பு கொண்ட ஒரு சொல்லாகத் தான் வாழ்ந்து மறைந்திருக்கிறார் அவர். அந்தச் சொல்லின் பெயர் ''உத்வேகம'' - 100 ஆண்டுகள் கடந்தும் ஒளிவீசிக்கொண்டிருக்கும் உத்வேகம் அது.
நன்றி :
Return to frontpage

செவ்வாய், 10 டிசம்பர், 2013

Victory for Chavez' legacy....!

              
             In a major boost to his personal popularity and economic policies, Venezuelan President Nicolas Maduro’s party swept the nationwide elections for mayoralties and local councils on Sunday. With 60 percent votes counted, the ruling Socialist Party had won more than 49 percent ballots, while the joint opposition managed to get support from just 42 percent voters. Sunday's elections coincided with the anniversary of late President Hugo Chavez's famous speech last year in which he announced that his cancer had returned and named Maduro as his successor. As polling started, Maduro reminded Venezuelans in a tweet to celebrate "a day of loyalty and love towards Chavez and the Motherland". The election for 337 mayors and 2,000 city councilors was seen as a major political test for Maduro, who has tightened state control over private businesses and retailers in recent months. It was also a big challenge for the opposition leader Henrique Capriles, who was trying to double the number of municipalities controlled by his coalition. 
               In the end, the Sunday election turned out to be a big victory for Maduro. “The Venezuelan people have said to the world that the Bolivarian revolution continues stronger than ever,” Maduro said in a post-election speech, referring to Chavez's movement named after the independence hero Simon Bolivar. Addressing a massive rally of his supporters in Bolivar Square in downtown Caracas on late Sunday night, Maduro mocked Capriles and urged him to resign. “They underestimate us. They call me a donkey; there is social racism,” he said. "They said that today was a plebiscite and that Maduro would have to leave the presidency after today.” With his popularity on the surge due to strong price control measures like forcing super-market chains to sell goods at cheaper prices, Maduro seems to have passed a big hurdle and cemented his position as a successor to Chavez. 
           As the opposition branded these local elections as a plebiscite on Maduro’s performance and the socialist legacy of Chavez, the Venezuelan president is now likely to take more stringent measures against private businesses, whom he accuses of waging an “economic war” against his government with the help of the United States. Soon after the election results began to trickle in on Sunday night, Maduro pledged to deepen his "economic offensive" to force businesses to cut prices. “This week we are going to deepen the economic offensive to help the working class and protect the middle class,” Maduro told supporters at the rally in Caracas. “This week it's going to be the housing and food sectors. We're going in with guns blazing, keep an eye out.” In November, Maduro, who won the presidential election in April with a slender margin over Capriles, began a crackdown on retail chains, forcing them to slash prices of electronic goods, automobile parts and home hardware. As hundreds of thousands of people rushed to stores to pick cheap LCDs and laptops, Maduro’s personal approval rate jumped sharply. Within weeks, Maduro extended his economic offensive by ordering controls on rent of commercial buildings such as shopping malls. 
              Since November, Maduro has been ruling by decree, promising to tackle corruption and control price rises. With inflation hitting 54 percent and scarcities of basic products from wheat flour to milk spawning queues around the country, the economic problems had been weighing on Maduro's ratings. But instead of giving in to the demand of private businesses to “open up” the economy, Maduro began an aggressive drive to inspect shops and businesses suspected of price-gouging and arrests of several dozen retailers. The opposition accuses him of failing to deal with crime, inflation and a shortage of basic goods. Some economists say Maduro's price-cutting measures smack of short-term populism that do nothing to fix what they consider the roots of economic problems.
courtesy : Subramanian Ramakrishnan 

திங்கள், 9 டிசம்பர், 2013

இதுவே எனது தாகம்...! - நெல்சன் மண்டேலா


  கட்டுரையாளர் : சீதாராம் யெச்சூரி,         
                                  தலைமைக்குழு உறுப்பினர், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி.      
              நெல்சன் மண்டேலா மறைந்து விட்டார். நான் மாணவப் பருவத்தில் இருந்தபோது ஒரு பிரபலமான கீதம் இசைக்கப்பட்டது: “சாத்தியமில்லாத கனவை கனவு காணவீழ்த்த முடியாத எதிரியை வீழ்த்திடதாங்க முடியாத துயரத்தை தாங்கிடதைரியம் கூட செல்லத் துணியாத இடத்திற்கு ஓடிட திருத்த முடியாத தவறினை திருத்திட... அடையாத முடியாத நட்சத்திரத்தை அடைந்திட... இதுவே எனது தாகம்அந்த நட்சத்திரத்தை பின்தொடர்ந்திட... நம்பிக்கையின்மை என்பதே இல்லை எத்தனை தூரம் என்பதும் பிரச்சனையில்லை...” இத்தகைய லட்சியங்களுக்காக ஒரு மனிதன் வாழ்ந்தார் என்றால், அதைவிட இன்னும் முக்கியமானது தனது வாழ்நாளிலேயே இந்த மைல்கற்களையெல்லாம் எட்டினார் என்றால் அவர் `மடிபா’ என்று அன்போடு அழைக்கப்படுகிற நெல்சன் மண்டேலா மட்டுமே.
           அவரது அரசியல் வாழ்வும் பணியும் ஏற்கெனவே மிகச்சிறப்பான முறையில் ஆவணப்படுத்தப்பட்டுள்ளன; எனவே அவை பற்றி மீண்டும் இங்கே குறிப்பிடப்போவதில்லை. அவர் கடந்து வந்த காலங்களும், பங்களிப்புகளும் அவருடன் தோளோடு தோள் நின்ற அகமது கத்ரடா மற்றும் இதர தோழர்களால் இன்னும் தெளிவாக ஆவணப்படுத்தப்பட்டுள்ளன. இந்த விபரங்கள் எதிர்காலத்தில் இன்னும் செறிவூட்டப்படும் என்பது உறுதி. எனது தலைமுறையினர் வளர்ந்து கொண்டிருந்த காலத்தில், சுதந்திரத்திற்கும் விடுதலைக்குமான மனிதகுலத்தின் வீழ்த்த முடியாத உணர்ச்சிப்பிழம்பாக மண்டேலா திகழ்ந்தார். ஒரு இளம் மாணவராக அவர் ஆப்பிரிக்க தேசிய காங்கிரசின் இளைஞர் பிரிவை அணிதிரட்டினார்; அதைத்தொடர்ந்து ஆப்பிரிக்க தேசிய காங்கிரசின் ஆயுதப்படை பிரிவான உம்கோந்த்தோ வி சிஸ்வே யின் முதல் தளபதியாக பொறுப்பேற்றார்; இந்தப் படைப்பிரிவே அந்த தேசத்தின் உந்துசக்தியாக திகழ்ந்தது.
              தென்னாப்பிரிக்க மக்களுக்கு அடிப்படை மனித உரிமைகளை மறுத்த, ஈவிரக்கமற்ற ஒடுக்குமுறையை கட்டவிழ்த்துவிட்ட நிறவெறி ஆட்சிக்கு எதிராக உறுதிமிக்க போராளியாக மண்டேலா திகழ்ந்தார். அவர் கைது செய்யப்பட்டு, பிரபலமான ரிவோனியா வழக்கு என்ற அந்த குறிப்பிட்ட வழக்கு விசாரணையைத் தொடர்ந்து ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டார். அந்த விசாரணையின்போது தனது தரப்பு வாதத்தை முன்வைத்து உரையாற்றிய மண்டேலா முடிவாகச் சொன்னார்: “எனது வாழ்நாளில் ஆப்பிரிக்க மக்களுக்காக இந்த மாபெரும் போராட்டத்தை அர்ப்பணிக்கிறேன். வெள்ளை இன ஆதிக்கத்திற்கு எதிராக நான் போராடினேன்; கறுப்பின ஆதிக்கத்திற்கும் எதிராகவும் நான் போராடினேன். நம் அனைத்து மக்களும் நல்லிணக்கத்துடன் ஒன்றாக வாழவும், சமமான வாய்ப்புகளோடு வாழவும் ஒரு ஜனநாயகமான, சுதந்திரமான சமூகம் உருவாக வேண்டும் என்ற சித்தாந்தத்தை முழுமையாக உள்வாங்கியிருக்கிறேன். அந்த மகத்தான இலக்கிற்காக தேவைப் பட்டால் என் உயிரையும் விடத் தயாராக இருக்கிறேன்“. (ஜூன் 11, 1964) ரோபென் தீவில் அமைந்துள்ள மிகக் கொடூரமான நிறவெறி அரசின் சிறையில் நீண்டகாலம் அடைக்கப்பட்டிருந்த மண்டேலாவுக்கு ஆறு தருணங்களில் நிபந்தனையின் பேரில் விடுதலை செய்வதற்கான வாய்ப்பு அளிக்கப்பட்டது.
                  ஒவ்வொரு முறையும் அதை அவர் மறுத்தார்; கடைசியாக அளிக்கப்பட்ட வாய்ப்பை மறுத்த போது கூறினார் : மக்கள் அமைப்புகள் தடை செய்யப்பட்டிருப்பது தொடருமானால் எனக்கு மட்டும் விடுதலை கொடுத்து என்ன ஆகப்போகிறது? ஏற்கெனவே குற்றம்செய்துவிட்டதாக என்னை கைது செய்துவிட்டு எப்படிப்பட்ட விடுதலையை எனக்கு அளிக்கப் போகிறீர்கள்? பிராண்ட்போர்ட் நகரில் எனது ஆருயிர் மனைவி சிறை வைக்கப்பட்டிருப்பது தொடரும் போது எப்படிப்பட்ட குடும்ப வாழ்விற்காக எனக்கு விடுதலை அளிக்கப்போகிறீர்கள்? ஒரு நகர்ப்புறப் பகுதியில் வாழ்வதற்காக கட்டாயம் அனுமதி கேட்க வேண்டும் என்ற நிபந்தனையோடு எப்படிப்பட்ட சுதந்திரத்தை எனக்கு அளிக்கப்போகிறீர்கள். வேலை செய்வதற்குக் கூட எனது அடையாள அட்டையில் உங்களின் முத்திரையை பெற வேண்டிய தேவையோடு எப்படிப்பட்ட விடுதலையை எனக்கு அளிக்கப் போகிறீர்கள்? தென்னாப்பிரிக்க குடிமகன் என்ற எனது அடிப்படையான அடையாளம் மதிக்கப்படாத போது எப்படிப்பட்ட விடுதலையை எனக்கு அளிக்கப்போகிறீர்கள்? சுதந்திரமான மனிதர்களே பேச்சுவார்த்தை நடத்த முடியும்... நானும் எனது மக்களும் சுதந்திரமாக இல்லாத போது எந்தவொரு உத்தரவாதத்தையும் உங்களுக்கு தந்துவிட முடியாது”. இப்படிப்பட்ட, எவராலும் அசைக்க முடியாத உள்ள உறுதியை கொண்டவர் அவர்.
            அதன் மூலம் அனைவரையும் ஈர்த்தவர். அவரின் விடுதலை எப்போது நிகழ்ந்தது? நவீன உலகில் நிறவெறி ஆட்சி அமைப்பு ஒரு மோசமான எதேச்சதிகாரம், அராஜகவாதம் என்பதை இந்த உலகமே உணர்ந்தபோது, இன்னும் குறிப்பாக சொல்வதென்றால் அந்த ஒடுக்குமுறை ஆட்சியின் தீவிர ஆதரவாளர்களாக இருந்தவர்களே கூட இதை உணர்ந்தபோதுதான் அவரது விடுதலை நிகழ்ந்தது. பனிப்போர் முடிவுக்கு வந்திருந்த அந்தக் காலக்கட்டத்தில் இனியும் தொடரமுடியாது என்ற சூழல் முடிவைநோக்கி தள்ளிய நிலையில் - நாசகரமான அந்த நிறவெறி ஆட்சி முடிவுக்கு வந்தது; தென்னாப்பிரிக்க மக்களுக்கு விடுதலை பிறந்தது. நமது தலைமுறையினருக்கு இதில் கற்றுக்கொள்ள பாடம் உண்டு - வரலாறு எப்போதுமே முரண்பட்ட திசையில்தான் பயணித்துக் கொண்டிருக்கிறது. சோசலிச சோவியத் ஒன்றியத்தின் வீழ்ச்சியால் உலகையே நெருக்கடி சூழ்ந்துகொண்டிருந்த காலகட்டமும், ஏகாதிபத்திய மேலாதிக்கத்தை ராணுவ ரீதியிலும் பொருளாதார ரீதியிலும் எதிர்த்து நிற்கும் சூழல்கள் முடிவுக்கு வந்த காலகட்டமும் மண்டேலாவின் விடுதலையோடு கூடவே வந்தது; ஆப்பிரிக்க கண்டத்தின் ஒரு பெரும்பகுதி மக்கள் அடிமைத்தனத்திலிருந்து விடுதலை பெறுவதும் அதே தருணத்தில் நிகழ்ந்தது.
             பழங்கால சீனத்தில் ஒரு முதுமொழி உண்டு: “ஒவ்வொரு நெருக்கடியும் ஒரு வாய்ப்பினை கூடவே கொண்டுவரும்“ என்ற அந்த முதுமொழி இங்கு உண்மையானது. நெல்சன் மண்டேலாவை மூன்று முறை சந்திப்பதற்கு எனக்கு வாய்ப்பு கிடைத்தது. ஆப்பிரிக்க தேசிய காங்கிரசின் 48வது மாநாட்டின்போது முதல்முறையாக அவரைச் சந்தித்தேன். 1960ம் ஆண்டில் அக்கட்சி தடைசெய்யப்பட்ட பின்னர் முதல்முறையாக தென்னாப்பிரிக்க மண்ணில் 1991ல் ஜூலை மாதம் டர்பன் மாநகரில் அந்த மாநாடு நடைபெற்றது. அந்தசூழல் எனது வாழ்நாளிலேயே மிக முக்கியமான அனுபவமாக இருந்தது. 30 ஆண்டுகாலத்திற்கும் மேலாக தனிமைச்சிறையில் அடைத்து கொடுமைப்படுத்தப்பட்ட தோழர்கள் முதல்முறையாக ஒருவருக்கொருவர் இந்த மாநாட்டில் சந்தித்துக் கொண்டார்கள். இளமைப் பருவத்தில் பிரிந்த அவர்கள் ஒருவரையொருவர் முதுமைப் பருவத்தில் சந்தித்த போது ஒருவரையொருவர் அடையாளம்காண முடியாமல் தவித்தார்கள். டர்பன் மாநகரம் இன்றைக்கும் நிறவெறிப் பிரிவினரின் அடையாளங்களை தன்னில் வைத்திருக்கிறது; அதன் புகழ்மிக்க கடற்கரைகளில் “வெள்ளையினத்தவர் அல்லாதவர்கள் மற்றும் நாய்கள் - இங்கு வரக்கூடாது” என்று எழுதப்பட்ட பலகைகள் அந்தக் கொடுமையை அம்பலப்படுத்திக் கொண்டிருந்தன. நிறவெறி ஆட்சி முடிவுக்கு வந்தபோது நாடெங்கும் மிகப்பெரும் உற்சாக வெள்ளம் ஏற்பட்டது; எனினும் மண்டேலா அந்த மாநாட்டில் பேசுகையில், ஓர் எச்சரிக்கை குறிப்பையும் சுட்டிக்காட்டினார்:
“ஆயுதப்போராட்டத்தை நாம் நிறுத்தி வைக்கிறோம்; ஆனால் அதே நேரத்தில் ஆயுதப்போராட்டத்தை நாம் கைவிட்டுவிடவில்லை. அது நாட்டின் உள்ளே இருந்தாலும் சரி; வெளியில் இருந்தாலும் சரி, உம்கோந்த்தோ வி சிஸ்வே படைக்கு எந்த தருணத்திலும் ஒரு ஜனநாயக சமூகத்தை படைப்பதற்கான அமைதிப்பாதையை எதிர்ப்புரட்சி சக்திகள் குறுக்கிடுவதாகத் தெரிந்தாலும் அதற்கு எதிராக செயல்பட தயாராக இருக்க வேண்டிய பொறுப்பு உள்ளது. நிறவெறி ஆட்சி அமைப்பு மீண்டும் எழுவதற்கான வாய்ப்பு இருக்கிறது என்பதையும், தற்போதைக்கு அதற்கான சக்திகள் நமது போராட்டத்தால் பலவீனமடைந்துள்ளன என்பதையும் உணர்வது அவசியம். நமது மக்களின் போராட்டத்தால் ஆப்பிரிக்க தேசிய காங்கிரஸ் மீதான தடை நீக்கப் பட்டுள்ளது; இன்றைக்கு நமது சொந்த நாட்டிலேயே நாம் சந்திப்பதற்கு வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. அப்பட்டமான கம்யூனிச எதிர்ப்பு சித்தாந்தத்தை அடிப்படையாகக் கொண்ட ஒரு ஆட்சி, நமது கூட்டாளியான தென்னாப்பிரிக்க கம்யூனிஸ்ட் கட்சி மீதான தடையையும் விலக்குவதற்கு மக்கள்போராட்டம் உதவியுள்ளது; கம்யூனிஸ்ட் சித்தாந்தத்தை பிரச்சாரம் செய்வதற்கு தடைவிதித்த சட்ட விதிகளும் நீக்கப்பட்டுள்ளன”.
              மண்டேலா கைது செய்யப்படுவதற்கு அவர் மீது சுமத்தப்பட்ட முக்கியக் குற்றச்சாட்டுகளில் ஒன்று, அவர் ஒரு கம்யூனிஸ்ட் என்பதாகும். உண்மையில் அவர் கைது செய்யப்படுவதற்கு முன்பு, தென்னாப்பிரிக்க கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக்குழு உறுப்பினராக இருந்தார். பனிப்போர் முடிவடைந்த காலத்தில் கம்யூனிஸ்ட் எதிர்ப்பு ஆட்சியின் கூட்டாளிகள், விடுதலையடைந்த மண்டேலா மீது மீண்டும் ஒருமுறை அதே குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்கள்; மேற்கத்திய ஏகாதிபத்திய சக்திகள் இதை வைத்து மண் டேலாவை எச்சரிக்கையும் செய்தன. அச்சமயத்தில்தான், அந்த மாபெரும் மாநாட்டின் நிறைவாக நடைபெற்ற பிரம்மாண்ட பேரணியில் மேற்கத்திய ஏகாதிபத்திய சக்திகளின் தத்துவார்த்த தாக்குதலுக்கு எதிராக முழங்கினார் மண்டேலா : “உங்கள் கூட்டாளிகளோடு உங்கள் வேலையைப் பாருங்கள்; எங்கள் கூட்டாளிகளோடு எங்கள் வேலையைப் பார்க்கிறோம்“. நான் இரண்டாவது முறையாக மண்டேலாவை அதே ஆண்டில் டிசம்பரில் நடைபெற்ற தென்னாப்பிரிக்க கம்யூனிஸ்ட் கட்சியின் 8-வது மாநாட்டின்போது சந்தித்தேன். ஆயுதப்படையான உம் கோந்த்தோ வி சிஸ்வேயின் தலைவராக மண்டேலாவிற்கு அடுத்து பொறுப்பு வகித்த தோழர் கிறிஸ் ஹானி, தென்னாப்பிரிக்க கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளராக இந்த மாநாட்டில் தேர்வு செய்யப்பட்டார். சிற்சில நாட்களில் தோழர் ஹானி, நிறவெறி - எதிர்ப்புரட்சி சக்திகளால் கொடூரமான முறையில் படுகொலை செய்யப்பட்டார். அதற்கு பிறகு ஏற்கெனவே ஆப்பிரிக்க மக்கள், மனித இனம் தாங்க முடியாத அளவுக்கு துயரத்தை அனுபவித்துவிட்ட பின்னணியில், இப்போதைக்கு அமைதியே மிக முக்கிய இலக்கு என்ற நிலையில் மண்டேலா அந்தப் பாதையில் பயணித்தார். காலனியாதிக்க பிற்போக்கு சக்திகளின் வன்முறைகள் தொடர்ந்த நிலையில், ஆயுத மோதலும் தொடர்ந்த சூழலில், உண்மை மற்றும் மறுவாழ்வு ஆணையத்தை அமைக்க மண்டேலா முன்மொழிந்தார். அமைதி மற்றும் மறுவாழ்வுக்கான இந்த முக்கியமான ஏற்பாடு, பலரது பழிவாங்கும் உணர்வை தடுத்து நிதானிக்க வைத்தது.
             அதே நேரத்தில், தென்னாப்பிரிக்க கம்யூனிஸ்ட் கட்சியையும் அதன் கூட்டாளிகளையும், தென்னாப்பிரிக்க காங்கிரஸ் மற்றும் தென்னாப்பிரிக்க தொழிற்சங்கமான `கொஷாட்டு’வின் தோழர்களையும், எதிரிகளது ஆயுதத் தாக்குதலுக்கு எதிராக விழிப்போடு இருக்குமாறு எச்சரித்தார். எனவே, `அகிம்சை’ வடிவம் என்பது மண்டேலாவைப் பொறுத்தவரை ஒரு நடைமுறை உத்தியாக மட்டுமே இருந்தது. ஆனால் இது பலராலும் காந்திய வழி என்று தவறாக புரிந்துகொள்ளப்படுகிறது. டர்பனில் அவரை சந்தித்தபோது முதல்முறையாக என்னிடம் கூறிய வார்த்தைகள், இந்தியாவிலிருந்து வந்திருக்கிறீர்கள், இந்தியா எங்களுக்கு மோகன்தாஸ் கரம்சந்த் காந்தியை அனுப்பி வைத்தது; இந்தியாவுக்கு தென்னாப்பிரிக்கா மகாத்மாவை அனுப்பிவைத்தது. கடைசியாக நான் அவரை தென்னாப்பிரிக்க கம்யூனிஸ்ட் கட்சியின் 10-வது மாநாடு 1998 ஜூலையில் ஜோகன்னஸ்பர்க் நகரில் நடைபெற்ற போது சந்தித்தேன். அப்போது மண்டேலா தானாகவே முன் வந்து ஜனாதிபதி பதவியை ராஜினாமா செய்திருந்தார்; தபோ எம்பெகியிடம் ஜனாதிபதி பதவியை அளித்திருந்தார்; தென்னாப்பிரிக்க மக்கள் அதை துயரத்துடனே ஏற்றுக் கொண்டார்கள். இப்படி பதவியை விட்டுக்கொடுத்த ஒரேயொரு ஆப்பிரிக்கத் தலைவர் அநேகமாக மண்டேலா மட்டுமே. தானாகவே முன்வந்து பதவி விலகிக் கொண்ட மற்றொரு தலைவர், என்னைப் பொறுத்தவரை மேற்குவங்கத்தின் முதல்வராக இருந்த நமது அருமைத் தலைவர் ஜோதிபாசு மட்டுமே. ஜோதிபாசுவும் மண்டேலாவும் மிக நெருக்கமான, ஒற்றுமையான உறவினைக் கொண்டிருந்தார்கள்.
           மண்டேலா முதன்முறையாக இந்தியாவுக்கு வருகை தந்தபோது கல்கத்தாவுக்கு செல்ல வேண்டுமென்று அவர் மிகுந்த விருப்பம் தெரிவித்தார். அந்த மாநகரம் அவருக்கு கண்ணீர் பெருக்கோடு பெரும் வரவேற்பை அளித்தது. அந்த மாபெரும் கூட்டத்தில் அவர் பேசினார் : இந்த மாநகரின் வீதிகளில் இன்றைக்கு நீங்கள் அளித்துள்ள வரவேற்பு, எனது சொந்த இல்லத்திற்கு வந்ததைப் போல என்னை உணரவைக்கிறது. சக புரட்சியாளர்களோடு நான் இங்கே அமர்ந்திருக்கிறேன்... அன்றைய தினம் உங்களது கதாநாயகர்களாக இருந்தவர்கள் எங்களுக்கும் கதாநாயகர்களாக இருந்தார்கள்; இந்த உலகின் மாபெரும் மனிதர்களுக்கு மத்தியில் நாங்கள் நேதாஜி சுபாஷ் சந்திர போஸையும் பார்க்கிறோம்; கறுப்பின மாணவர்களாக இருந்த எங்களுக்கெல்லாம் உங்களது தலைவர்கள் ஆதர்ச சக்திகளாக திகழ்ந்தார்கள்... கல்கத்தாவிற்கு வந்த பிறகு இன்னும் அதிக சக்தி பெற்றிருக்கிறேன். மீண்டும் புத்தெழுச்சி பெற்ற மனிதனாக நான் உணர்கிறேன்“. (அக்டோபர் 1990) தென்னாப்பிரிக்க கம்யூனிஸ்ட் கட்சியின் 10-வது மாநாட்டில், ஆப்பிரிக்க தேசிய காங்கிரஸ் அரசாங்கத்தால் பின்பற்றப்படும் பொருளாதாரக் கொள்கைகள் குறித்து சீரிய விவாதம் நடைபெற்றது; அந்த விவாதங்களில் மண்டேலா முழுமையாக பங்கேற்றார்;
      கம்யூனிஸ்ட்டுகளால் அந்த மாநாட்டில் செய்யப்பட்ட விமர்சனங்களையும், வழிகாட்டுதல்களையும் அவர் ஏற்றுக்கொண்டார். தென்னாப்பிரிக்காவின் பொருளாதாரக் கொள்கைகள் புதிய தாராளமய உலக கட்டமைப்போடு மேலும் மேலும் இணையத் துவங்கியது; மக்களின் விடுதலைக்கான வாக்குறுதிகள் தொடர்ந்து தொலைதூரத்திலேயே இருக்கும் நிலை நீடித்தது. தென்னாப்பிரிக்க கம்யூனிஸ்ட் கட்சி, தபோ எம்பெகி அரசை இதுகுறித்து எச்சரித்தது. ஆளும் மூன்று கட்சி கூட்டணியிலிருந்து வெளியேற வேண்டிய நிலை ஏற்படும் என்று எச்சரித்தது. பின்னர் அதிலிருந்து வெளியேறியது. அரசாங்கத்தின் செயல்பாடுகளை கண்காணிக்கும் பணியை செய்தது. தென்னாப்பிரிக்க விடுதலை இயக்கத்தின் மகத்தான பாரம்பரியத்தில், இன்னும் தீர்வுகாண முடியாத பிரச்சனைகளாக இந்த உண்மைகள் பிரதிபலிக்கின்றன. கறுப்பின மக்கள் பொருளாதார ரீதியாக அதிகாரம் பெறுவதற்கு அடிப்படையானது உடனடி நிலச்சீர்திருத்தம் என்றும், அதை தன் வாழ்நாளில் கண்டுவிட வேண்டும் என்றும் மண்டேலா மிகவும் விரும்பினார். ஆனால் கடைசி வரை அவரால் அதைப் பார்க்க முடியவில்லை. இந்த இலக்கு, ஆப்பிரிக்க தேசிய காங்கிரசின் சுதந்திர சாசனத்தில் இன்னும் ஒரு முக்கிய அம்சமாக நீடிக்கிறது; தேசிய ஜனநாயக புரட்சியின் நிகழ்ச்சிநிரலாகவும் நீடிக்கிறது. தென்னாப்பிரிக்க பொருளாதார சக்தியின் அடிப்படை அம்சங்கள் அனைத்தும் இன்னும் அவர்களது முன்னாள் காலனிய ஆதிக்க சக்திகளின் கைகளிலேயே இருக்கிறது; ஒரு சிறிய பிரிவு கறுப்பின முதலாளிகள் தற்போது முன்னாள் காலனிய சக்திகளோடு கூட்டுச்சேர்ந்து செயல்பட்டு வருகிறார்கள்.
               இவையெல்லாம், மண்டேலா தனது வாழ்நாளில் தனது உண்மையான நிகழ்ச்சி நிரலை காண முடியாமல் செய்துவிட்டது. அந்நாட்டின் தற்போதைய தலைமுறையினர் எதிர்காலத்தில் செய்ய வேண்டியிருப்பது ஏராளம். தென்னாப்பிரிக்க கம்யூனிஸ்ட் கட்சியின் 10-வது மாநாடு, சோசலிசமே எதிர்காலம் என்று முழங்கியது; அதற்கான போராட்டத்தை அது தொடர்கிறது. எப்படியிருப்பினும் மேலும் மேலும் உச்சத்தை எட்ட வேண்டும் என்ற மனிதகுலத்தின் தீராத தாகத்திற்கு, மனிதகுல விடுதலை என்ற அந்த உன்னதமான லட்சியத்தை தொடர்ந்து முன்னெடுத்துச் சென்ற நெல்சன் மண்டேலா வழிகாட்டியாக திகழ்கிறார்; அந்த பாடல் மீண்டும் எதிரொலிக்கிறது... “கடைசித் துளி துணிச்சல் இருக்கும் வரை அடைய முடியாத அந்த நட்சத்திரத்தை அடைவதற்கு போராடுவேன்“.-
தமிழில் : எஸ்.பி.ராஜேந்திரன்
நன்றி :