செவ்வாய், 31 டிசம்பர், 2013

காலம் கடந்து வந்த மோடியின் ''மனவலி'' எதற்காக...?

     
               2002- ஆம் ஆண்டு குஜராத்தில் சிறுபான்மையினத்தவர்களுக்கு எதிராக நடத்தப்பட்ட  திட்டமிட்ட தாக்குதல்களில் அப்பாவி மக்கள் கொல்லப்பட்ட போது எனக்குஏற்பட்ட மனவலியை எந்த வார்த்தைகளாலும் விவரிக்கமுடியாது என்று இரத்த வாடை வீசும் ''நரவேட்டை'' நரேந்திர மோடி வேதனையோடு கூறியதைப் பார்க்கும் போது அந்த நடிப்பை என்னவென்று சொல்வதென்று தெரியவில்லை. இவன் ரொம்ப நல்லவன்ன்ன்ன்ன்ன்னு சொல்லுகிற அளவுக்கு என்னமா நடிக்கிறான் பாருங்க.... இதை  நான் சொல்லல....! நம்ம ''ஆம் ஆத்மிங்க'' தான் இப்படியெல்லாம் புலம்புறாங்க. 2002 - ஆம் ஆண்டு நடந்தபோது வாராத அழுகை இப்போது ஏன் வந்தது...? காலம் கடந்து ஏன் ஓநாய் அழுகிறது....? என்று நம்ம ''பொது ஜெனங்க'' தான் கேட்கறாங்க.
          காவிப்படைகளுக்கு பயிற்சி கொடுத்து தன் கட்டளைப்படி சிறுபான்மையோர் ஒவ்வொருவராய்  இரக்கமின்றி வெட்டி வெறியைத் தீர்த்துக்கொண்ட போது வராத ''மனவலி'' இப்போது எங்கிருந்து வந்தது....? இப்போது வந்ததற்கான அவசியம் தான் என்ன....?
           பெஸ்ட் பேக்கரியில் இருந்த 36 இஸ்லாமியர்களையும் கூண்டோடு எரித்து சாகடித்த போது வராத ''மனவலி'' இப்போது மட்டும் திடீரென்று ஏன் வந்தது....?  
          கலவரத்தை பார்த்து அஞ்சிய இஸ்லாமியர்கள் உயிருக்கு பயந்து  குழந்தைகளுடன்  பாதுகாப்பு கோரி தன் விட்டிற்கு வந்து நின்ற போது அவர்களை காவல்துறையினர் உதவியுடன் காப்பாற்றும்படி ஜாப்ரி என்ற எம்.பி மோடியிடம் தொலைபேசியில் பதறிய போதும்,  இரக்கமின்றி அவர்களை உயிரோடு வெட்டி சாய்த்து எரித்துக் கொன்றபோது வராத ''மனவலி'' இப்போது மட்டும் ஏன் வந்தது...?
           இந்து இளைஞனை காதல் மணங்கொண்டு கருவுற்ற இஸ்லாமிய பெண்ணான கௌசர் பானுவை நடுத்தெருவில் ஆடைகளைக் களைந்து, கரு தாங்கிய வயிற்றை கிழித்து அந்த பெண்ணையும் சாகடித்து,  எடுத்த கருவையும் துண்டுதுண்டாக  வெட்டி நெருப்பில் போட்டக் கொடூரம் நடந்த போது வராத ''மனவலி'' மோடிக்கு இப்போது வந்தது ஏன்....?
             மோடியினால் ஏவிவிடப்பட்ட ''காவிப்பட்டாளங்கள்'' இஸ்லாமிய சகோதரிகள் பலபேருடைய  ஆடைகளை களைந்து அம்மணமாக்கி  மாறி மாறி பாலியல் பலாத்காரம் செய்தார்களே, அப்போது வராத ''மனவலி'' இப்போது மட்டும் மோடிக்கு வந்தது ஏன்...? என்று மக்கள் கேட்கிறார்கள்.
              இத்தனைக் கொடூரங்களும் தங்கள் கண் முன்னே நடப்பதை, தன் கையிலிருந்த காவல் துறையை வெறுமனே கைகட்டி வேடிக்கைப்பார்க்கச் செய்தபோது வராத ''மனவலி'' இப்போது ஏன் வந்தது மோடிக்கு....?
             இந்த நிகழ்ச்சிகளை எல்லாம் பார்த்து கொஞ்சம்  கூட சலனமில்லாமலும், கோபப்படாமலும் வேடிக்கைப் பார்த்துக்கொண்டிருந்த இந்திய மக்களின் மனதில் உட்கார்ந்து ஓட்டுகள் கேட்கபோகிறார் என்று தான் இந்த ''மனவலிக்கு'' காரணம் என்பதை யாராலும் மறுக்கமுடியாது.           

கருத்துகள் இல்லை: