வெள்ளி, 6 டிசம்பர், 2013

ஒடுக்கப்பட்ட மக்களின் இருள் நீக்க வந்த கருப்பு சூரியன் - நெல்சன் மண்டேலா...!

இன்று காலை
நெல்சன் மண்டேலா மறைந்தார்...!
சூரியன் காலையில் 
உதிப்பது தான் வழக்கம்.
ஆனால் இன்று  காலையோ
இந்த கருப்பு சூரியன் 
மறைந்தது தான் துக்கம்.
ஒடுக்கப்பட்ட மக்களின்
இருள் நீக்கவந்த 
சூரியன் மறைந்து போனது. 
அதனால் 
உலகம் இருண்டு போனது.
ஆனாலும் 
மக்கள் மனதில் 
வாழ்ந்துகொண்டிருக்கிறார் 
நெல்சன் மண்டேலா.
ஒடுக்கப்பட்ட மக்களின் 
விடுதலைப் போராட்டத்தில் 
என்றும் வாழ்ந்துகொண்டிருப்பார்.
நூற்றாண்டை நெருங்கிய 
அவரது வரலாறே 
எதிர்கால உலகிற்கு 
வழிகாட்டும்.
வாழ்க 
நெல்சன் மண்டேலா 
புகழ்...!

கருத்துகள் இல்லை: