திங்கள், 24 செப்டம்பர், 2012

பிறர் உழைப்பில் வாழும் இவர்களுக்கு இவ்வளவு வருமானமா...? அம்மாடியோ...!

        ஏறக்குறைய அறுபது ஆண்டுகளுக்கு முன்பு சோமசுந்தரம் என்ற இளைஞன் ஒருவன் சிதம்பரம் அண்ணாமலை பல்கலைகழகத்தில் படித்து வந்தான். .மிகுந்த கஷ்டப்பட்ட குடும்பம். கல்லூரியில் கூட படிக்க வைக்க முடியாத அளவுக்கு வறுமையான சூழ்நிலையில் தான் அந்த இளைஞன் கல்லூரிப் படிப்பை தொடர்ந்தான்.அந்த இளைஞன் சோமசுந்தரத்தின் தாய்மாமன் தந்தை பெரியாருக்கு நெருக்கமானவர். அதுமட்டுமல்லாது,  அவர் தந்தை பெரியாரின் கைத்தடியை பிடித்து வளர்ந்தவர். தந்தை பெரியாரையும் அண்ணாவையும் இவர் பார்க்காமல் இருந்திருந்தால் கம்யூனிஸ்ட்டாக மாறியிருப்பேன் என்று சொல்பவர். ( நல்ல வேளை  கம்யூனிஸ்ட் கட்சி பிழைத்தது ). இப்படிப்பட்ட தாய்மாமனை பெற்றிருந்த இந்த சோமசுந்தரத்திற்கான கல்வி செலவை தந்தை பெரியாரே   ஏற்றுக்கொண்டார். கல்லூரிப் படிப்பு முடிந்ததும்  தன்   தாய்மாமனோடு சேர்ந்து சமுக சீர்திருத்தத்துடன் கூடிய திராவிட   அரசியல்  வாழ்க்கையை தேர்ந்தெடுத்தார். மாமனின் சொந்த பத்திரிகையான முரசொலியில் சேர்ந்து  பணியாற்றினார். பிற்காலத்தில் அந்த சோமசுந்தரம் தான் ''முரசொலி மாறன்'' -  ஆக உருவெடுத்தார்.
                அந்த முரசொலி மாறன் எம்ஜியாரை  வைத்து ''எங்கள் தங்கம்'' என்ற திரைப்படத்தை தாயாரித்த போது , கையில் துளி காசு கூட இல்லாமல் கடன் வாங்கி தான் படத்தை முடித்தார்.
            இந்தக் கதையெல்லாம் தமிழக மக்களுக்கே மறந்து போயிருக்கும். ஏன் கருனாநிதிக்கேக் கூட மறந்து போயிருக்கும்.
             இப்படிப்பட்ட பரம ஏழையான முரசொலி மாறனுக்கு இரண்டு ''கோடீஸ்வர''  மகன்கள். ஒருத்தர் கலாநிதி மாறன். இன்னொருத்தர் தயாநிதி மாறன். இந்த  ''கோடீஸ்வர கேடி பிரதர்ஸ்''  இன்றைக்கு இந்தியாவில் பார்க்காத தொழிலே கிடையாது. அரசியலில் ஆரம்பித்து. தொலைகாட்சி, பத்திரிகை, விமானம், திரைப்படம், மத்திய அமைச்சர் என  பல துறைகளில் கொடிகட்டி பறக்கிறார்கள். இவர்கள் செய்யும் கேடித்தனத்திற்கு இவர்களின் தாத்தா கருணாநிதி தான் பாதுகாப்பு.
          அந்த இருவரில் கலாநிதி மாறன் மற்றும் அவரது மனைவி காவேரி மாறனும் தான் மேலே சொன்ன அனைத்து தொழிலின் நிர்வாகத்தையும்  கவனிப்பவர்கள்.  அமெரிக்க ஜனாதிபதியையே சந்திக்கும் அளவுக்கு அதிகாரமும், வசதியும் படைத்தவர்கள். பாரக் ஒபாமா இந்தியா வந்தபோது அவரை நேரடியாக சந்தித்து, தங்களுடைய  சொந்த விமான நிறுவனத்திற்கு விமானங்கள் வாங்குவதற்கு ஒபாமாவோடு ஒப்பந்தம் போட்டவர்கள்.
             அண்மையில் ''பார்ச்சூன் இதழ்''  இந்தியாவில்  அதிக சம்பளம் வாங்கும் சி.இ.ஓ - க்கள் என்கிற  தலைமை  நிர்வாகிகள் பட்டியலை வெளியிட்டது. அந்த இதழ் வெளியிட்ட தகவல் நமக்கெல்லாம் மிகப்பெரிய ஆச்சரியத்தை உண்டாக்கியது. படிப்பதற்கே கஷ்டப்பட்டவரின் மகனான கலாநிதி மாறன் சேர்த்த ''கோடிகளின்''  வளர்ச்சி என்பது அசூர வளர்ச்சியாக விண்ணை நோக்கி செல்கிறது.
        ''பார்ச்சூன் இதழ்'' சொல்லுகிற தகவல்,  ஒட்டுமொத்த இந்திய தலைமை நிர்வாகிகளின்
( சி.இ.ஓ - க்களின்  ) பட்டியலில் அதிக சம்பளம் வாங்குவோரில் நம்ப கலாநிதி மாறன் 2 - ஆவது இடத்திலும், அவரது மனைவி காவேரி கலாநிதி மாறன் 3 - ஆவது இடத்திலும் இருப்பது என்பது தான்  நமக்கெல்லாம் ஆச்சரியத்தை வரவழைத்தது. கலாநிதி மாறனின் ஆண்டு வருமானம் ரூபாய்  64.4 கோடியும்,  அவரது மனைவி காவேரி கலாநிதி மாறன் ஆண்டு வருமானம்  ரூபாய் 64.4 கோடியுமாகும்.
              அது  மட்டுமல்ல, இந்தியாவிலேயே அதிக சம்பளம் வாங்கும் பெண் நிர்வாகிகள் பட்டியலில் ''சன் குழுமம்''  தலைவர் கலாநிதி மாறனின் மனைவி காவேரி மாறன் முதலிடத்தில் இருக்கிறார் என்பது இன்னொரு ஆச்சரியம்.
             இவர்களின் தாத்தாவிற்கும், அப்பாவிற்கும், இவர்களுக்கும் ஓட்டுப்  போட்ட, உழைத்து ஓடாய் தேய்ந்து  போன  உழைப்பாளி மக்கள் இன்னும் ஓலைக் குடிசைக்குள் தான் வாழ்கிறார்கள். ஆனால் உழைக்காமலேயே இவர்கள் மட்டும் எப்படி கோபுரத்தில்....?

4 கருத்துகள்:

dondu(#11168674346665545885) சொன்னது…

ஏன் ஐயா இத்தனை பொறாமை? தந்தை வறுமையில் இருந்தால் பிள்ளைகளும் அவ்வாறே இருக்க வேண்டுமா?

முக்கியமாக கலாநிதி மாறன் மேலாண்மைத் துறையில் தேர்ச்சி பெற்று தனது நிறுவனத்தை நடத்தியுள்ளார். தனக்கு வந்த சாதகங்களை சாமர்த்தியமாக உபயோகித்து வந்திருக்கிறார்.

இதில் உங்களுக்கு என்ன பிரச்சினை?

அன்புடன்,
டோண்டு ராகவன்

Anand K சொன்னது…

பிராமிணர்கள் எல்லாம் தனக்கு வந்த சாதகங்களை சாமர்த்தியமாக உபயோகித்து வந்திருக்கிறார்கள்.
எல்லாதுறையுளும் இருக்கிறார்கள்.
ஏன் ஐயா இத்தனை பொறாமை? இதை எதற்கு தலைவர் தாத்தா எதிர்த்தார்.இத ஏற்று கொள்வார்களா ?

Anand K சொன்னது…

பிராமிணர்கள் எல்லாம் தனக்கு வந்த சாதகங்களை சாமர்த்தியமாக உபயோகித்து வந்திருக்கிறார்கள்.
எல்லாதுறையுளும் இருக்கிறார்கள்.
ஏன் ஐயா இத்தனை பொறாமை? இதை எதற்கு தலைவர் தாத்தா எதிர்த்தார்.இத ஏற்று கொள்வார்களா ?

Anand K சொன்னது…

பிராமிணர்கள் எல்லாம் தனக்கு வந்த சாதகங்களை சாமர்த்தியமாக உபயோகித்து வந்திருக்கிறார்கள்.
எல்லாதுறையுளும் இருக்கிறார்கள்.
ஏன் ஐயா இத்தனை பொறாமை? இதை எதற்கு தலைவர் தாத்தா எதிர்த்தார்.இத ஏற்று கொள்வார்களா ?