சனி, 1 செப்டம்பர், 2012

நரவேட்டை நரேந்திர மோடியின் பிரதமர் கனவு தகர்ந்தது....!

        கடந்த பத்து ஆண்டுகளுக்கு முன்பு குஜராத்தில்  இதே நரேந்திர மோடியின் அன்றைய ஆட்சிகாலத்தில், கோத்ரா ரயில் எரிப்புச் சம்பவத்தை காரணம் காட்டி, நரோடா பாட்டியாவில் திட்டமிட்டு நடத்தப்பட்ட இனப்படுகொலையில் ஈடுபட்டவர்களுக்கு எதிரான தீர்ப்பு நேற்று முன் தினம் ஆகஸ்ட் 30 - ஆம் தேதி சிறப்பு நீதிமன்றத்தால் அளிக்கப்பட்டது. இந்த தீர்ப்பு என்பது, இத்தனை ஆண்டு காலமாக அந்த இனப் படுகொலையை நேரில் பார்த்து, தீர்ப்புக்காக காத்திருந்த அந்த பகுதி மக்களுக்கு சற்று ஆறுதலைக் கொடுத்திருக்கிறது. 
           நரோடாவில் இஸ்லாமிய மக்களுக்கு எதிராக இந்து மதவெறியர்கள் நடத்திய கொடுஞ்செயல்களை இன்றைக்கும் எங்களால் மறக்க முடியவில்லை என்று அதை நேரில் பார்த்தவர்கள் அந்த சிறப்பு நீதிமன்றத்தில் சாட்சி அளித்திருக்கிறார்கள் . பதைபதைக்க இஸ்லாமியப் பெண்களின் மேலாடை உருவி, கூட்டாக கற்பழித்துக்  கொல்லப்பட்டுக் கிடந்த பெண்களைப்  பார்த்த அந்த மக்கள், அந்த பெண்களின் மானத்தை மறைக்க நாங்கள் எங்கள் துப்பட்டாவை பயன்படுத்தி  மூடினோம். அங்கிருந்த ஆண்களும் கூட தங்கள் முகத்தை திருப்பிக்கொண்டு தாங்கள் அணிந்திருந்த சட்டையை கழற்றி அந்த பெண்களின் மானத்தை மறைத்தார்கள். துணியின்றி கிடந்த சடலத்தை செய்தித்தாள்களைக்  கொண்டு மூடி மறைத்தோம் என்றெல்லாம் நரோடா மக்கள் சாட்சியளித்திருக்கிறார்கள்.
              அது மட்டுமல்ல வயது வித்தியாசமில்லாமல் மொத்தம் 97 பேர் கொல்லப்பட்டனர். அவர்களில் இஸ்லாமிய பெண்கள், குழந்தைகள், வயது முதிர்ந்தவர்கள் என கொல்லப்பட்டார்கள். எரியும் நெருப்பில் வீசி எறியப்பட்டார்கள். பன்னிரெண்டு நாள்  சிசுக்கூட இந்த கொலை பாதகச்செயலிலிருந்து தப்பவில்லை. மதவெறிக் கூட்டத்தினர், அந்த சிசுவை கொன்று தீயில் எரிந்தது  என்பது மிகக்கொடுமையானது. இத்தனை மாபாதகச் செயல்களுக்கும் கொல்வதற்கு  நீண்ட வாளும், தீயிட்டுக் கொளுத்துவதற்கு மண்ணெண்ணையையும் அருகிலிருந்து கொடுத்து உதவிய ''மாபாதகி'' தான் இந்த மாயா பென்  கோத்னானி என்பவள்.   இவள் நரேந்திர மோடிக்கு மிகவும் நெருக்கமானவள். அதுமட்டுமல்ல, அத்வானியின் சீடராக இருந்து வகுப்புவாத அரசியலுக்கு  வந்தவள் என்கிற பெருமையும் இவளுக்கு உண்டு. மேலும் அத்வானியைப் போலவே  சுதந்திரத்திற்குப் பிறகு பாகிஸ்தானின் சிந்து மாகாணத்திலிருந்து இந்தியாவிற்கு வந்த குடும்பங்களில் இவளது குடும்பமும் ஒன்று. 
                அந்த படுகொலைகள் நடந்த காலத்தில் இந்த கோத்னானி குஜராத்தில் மோடி அமைச்சரவையில் அமைச்சர் பதவியில் இல்லை. முதலமைச்சர் பொறுப்பிலிருந்து தான் விலக முடியாது என்பதற்கு மோடி இதையே ஒரு வாதமாக இப்போது வைக்கிறார். ஆனால் இந்த படுகொலை சம்பவத்திற்கு பிறகு குற்றஞ்சாட்டப்பட்டு, விசாரணையில் உள்ள ஒருவளை  மோடி எப்படி  அமைச்சராக்கினார் என்பது அன்றே மிகப்பெரிய கேள்விக்குறியாய் எழுந்தது. தான் நினைத்தது போல் படுகொலைகளை முன்னின்று நடத்தியதற்கு பரிசாகவும், தான் அந்த சம்பவம் நடந்த இடத்திலேயே இல்லை என்றும், காந்தி நகரில் இருந்தேன் என்றும்  நீதிமன்றத்தில் அவள் சொன்ன பொய்க்கு நன்றிக்கடனாகவும் தான் இந்த மகா கொடுமைக்காரி கோத்னானிக்கு அமைச்சர் பதவியை கொடுத்தார் என்பதை யாராலும் மறுக்க முடியாது. மோடி இவளை குஜராத் அரசின் குழந்தைகள் மற்றும்  பெண்கள் நலத்துறை அமைச்சராக்கி அழகு பார்த்தார்.
               ஒருவழியாக நடைபெற்ற  நரவேட்டையின் விசாரணையிலிருந்து நரேந்திர மோடி விலக்கப்பட்டது என்பது  ஒரு சோகம் என்றாலும், விசாரணையின் முடிவில் வந்த தீர்ப்பு என்பது ஜனநாயகத்தின் மீது நம்பிக்கையுள்ளவர்களும், மனிதநேயமுள்ளவர்களும், மதநல்லிணக்கம் வேண்டுவோர்களும், மதசார்பற்ற கொள்கையாளர்களும் ஓரளவு எதிர்ப்பார்த்த  தீர்ப்பாக அமைந்துள்ளது என்று சொல்லலாம். அவர்களது நம்பிக்கை வீண் போகவில்லை.
            அதேப்போல், சம்பவத்தை நேரில் பார்த்த நரோடாவில் வசிக்கும் மக்கள் '' கடந்த பத்து ஆண்டுகளாக நாங்கள் நிம்மதியில்லாமல் இருந்தோம். இந்த தீர்ப்பின் மூலம் இப்போது தான் எங்களுக்கு நிம்மதி வந்தது'' என்று பெருமூச்சிவிட்டு பேசினார்கள். 
courtesy : The Hindu
            ஆனால், பாகிஸ்தான்  பயங்கரவாதி அஜ்மல் கசாப்பின் தூக்குதண்டனையை கொண்டாடும் பாரதீய ஜனதா கட்சியும், சிவசேனாவும் குஜராத் சிறப்பு நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பைக்கேட்டு வாயடைத்துப் போய்விட்டனர் என்பது தான் உண்மை. 
            பாராளுமன்ற பொதுத்தேர்தலுக்கு இன்னும் இரண்டு ஆண்டுகள் இருக்கும் போதே பிரதமர் பதவியை நோக்கிய அவரது கனவு என்பது இந்த தீர்ப்புக்குப் பிறகு தகர்க்கப்பட்டு விட்டது. இன்னும் சொல்லப்போனால், அருகில் வந்துகொண்டிருக்கக்கூடிய  குஜராத் சட்டமன்றத்  தேர்தலில் கூட, இந்த தீர்ப்பின் காரணமாக மோடியின் கதி மட்டுமல்ல, பாரதீய ஜனதா கட்சியின் கதி கூட அதோ கதியாகத் தான் இருக்கும் என்று அரசியல் நோக்கர்கள் சொல்கிறார்கள்.

8 கருத்துகள்:

நாகூர் மீரான் சொன்னது…

உங்கள் எண்ணத்திற்கும் செயலுக்கும் எங்கள் நன்றிகள்

நன்றியுடன்
நாகூர் மீரான்

உதயம் சொன்னது…
இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
புதிய கோணங்கி ! சொன்னது…

:)))

உதயம் சொன்னது…

இந்த கொடுமையை எழுத முன் வந்ததுற்கே உங்களுக்கு நன்றி சொல்ல வேண்டும். ஊடகங்களின் "கசாப் அலையால்" பாபு பஜ்ரங்கியும் குஜராத் பெண் அமைச்சர் மாயாவும் மறைக்கப்பட வைக்கப்பட்டுள்ளார்கள். கசாப் கொன்றதும் உயிகள் தான் இவ்விருவரும் கொன்றொழித்ததும் மனித உயிர்களைத் தான், எனும் போது ஏனிந்த பாரபட்சம். இந்துத்துவ தீவிரவாதம் மட்டும் மறைக்கப்படும் தீவிரவாதமாக ஏன் இருக்க வேண்டும் ?. தீவிரவாதிகளுக்கு இரட்டை அளவு கோல் தேவையா?

உதயம் சொன்னது…

குஜராத் முஸ்லிம் இனப்படுகொலை புகழ் நரேந்திர மோடியை கடுமையாக விமர்சித்து அம்மாநில முன்னாள் மூத்த ஐ.பி.எஸ் அதிகாரி சஞ்சீவ்பட் திறந்த கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.

நரோடா பாட்டியா கூட்டுப் படுகொலையில் 32 பேருக்கு ஆயுள்தண்டனை வழங்கப்பட்டதைத் தொடர்ந்து, மோடிக்கு எதிராக பிரமாணப்பத்திரம் தாக்கல் செய்ததால் பழிவாங்கப்பட்ட சஞ்சீவ் பட் அவரை விமர்சித்து கடிதம் எழுதியுள்ளார்.

“தங்களுக்கு வலதுகரமாக செயல்பட்ட மாயா கோட்னானி, பாபு பஜ்ரங்கி, தவறாக கருத்தரித்த ஹிந்துத்துவா கொள்கையால் தவறாக வழிநடத்தப்பட்ட உங்களது ஹிந்துத்துவா காலாட் படையினர் ஆகியோருக்கு ஆயுள்தண்டனை வழங்கப்பட்டது உங்களுக்கு தெரியுமா?” என்று சஞ்சீவ் பட் கேள்வி எழுப்புகிறார்.

“தீர்ப்பு வெளியான தினத்தில் எல்லாவற்றில் இருந்து ஒதுங்கியிருக்கத்தான் சமர்த்தாக நீங்கள் கூகிள் ஃப்ளஸின் ஹேங் அவுட் சாட்டில் மும்முரமாக ஈடுபட்டீர்களோ? நீங்கள் அனைவரும் சிறையில் தள்ளியவர்களின் குடும்பத்தினரைக் குறித்து ஒரு நிமிடம் யோசித்தீர்களா? நீங்கள் ஒரு காலத்தில் திருமணம் புரிந்தீர்கள் என கருதப்படுகிறது. மற்ற அனைவரையும் போல வாழ்க்கையில் அன்பைக் குறித்தும், குடும்பத்தை உருவாக்குவது குறித்தும் உங்களுக்கு தெரிந்திருக்கலாம்.

ஆனால், இப்பொழுது உங்களுக்காக ஆயுள் முழுவதும் முகஸ்துதி பாடியவர்களின் குடும்பத்தினரின் நிலைமையை கண்டீர்களா? முகமூடிக்குள்ளே இருக்கும் உங்களின் உண்மையான முகத்தை எப்பொழுதாவது பார்த்ததுண்டா? தாங்களின் ஊடக மேலாளர்கள் வேண்டுமென்ற மிக கவனத்துடன் உருவாக்கிய பிம்பத்தின் பின்னால் உள்ள உங்களது உண்மையான முகத்தை நீங்கள் பரிசோதித்ததுண்டா? இதர மனிதர்களை பலிகொடுத்து அதிகாரத்தை தக்கவைத்துக் கொள்வதை சரி என நீங்கள் கருதுகின்றீர்களா? ஒரு மனிதன் தங்களின் மத நம்பிக்கையை பின்பற்றவில்லை என்ற காரணத்தால் அவனை கொலைச் செய்ய வசதிகளை ஏற்படுத்திக் கொடுப்பது சரியா? ” என்று சஞ்சீவ் பட் 2002 முஸ்லிம் இனப்படுகொலை குறித்து கேள்வி எழுப்புகிறார்.

“தங்களின் அரசியல் நோக்கத்தை பூர்த்திச் செய்வதற்கான சிறிய விஷயமாகவா இதனை கருதுகின்றீர்கள்?

நேர்மை என்பது உங்களின் வாழ்க்கையில் எப்பொழுதேனும் இருந்திருந்தால், நான் கேட்ட இக்கேள்விகளில் ஏதேனும் ஒரு சிலவற்றிற்கு மட்டுமாவது பதில் அளியுங்கள்!” – இவ்வாறு சஞ்சீவ் பட் தனது கடிதத்தில் கூறியுள்ளார்.

Source:Thoothuonline

உதயம் சொன்னது…

நரேந்திர மோடி குறித்து விசாரிக்க, உச்ச நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட விசாரணை அமைப்பு (எஸ்.ஐ.டி) மோடி அரசாங்கத்தை வழக்கிலிருந்து காப்பாற்ற, கடும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக, முன்னாள் டி.ஜி.பி. ஸ்ரீ குமார், பகிரங்கமாக தெரிவித்துள்ளார்.

குஜராத்தில், கலவரம் நடந்த 2002 ம் ஆண்டில் நூற்றுக்கணக்கான முஸ்லிம்களை காப்பாற்ற, சூழ்நிலை அவசரம் கருதி ,வாய்மொழி உத்தரவும், அதை தொடர்ந்து சில நிமிடங்களில் FAX மூலம் முறையான உத்தரவுகளை பிறப்பித்தும் கூட, எனது உத்தரவுகளை CRPF கமாண்டர் செயல் படுத்த வில்லை.

கலவர பாதிப்பில் அபயம் தேடி வந்த முஸ்லிம் மக்களை காப்பாற்ற, தான் 28 /02 /2002 அன்று CRPF கமாண்டருக்கு உத்தரவிட்டதாகவும், ஆனால் அதற்க்கு முந்தய தினமான 27/02/2002 அன்று மாலை, நரேந்திர மோடி, உயர் போலீஸ் அதிகாரிகளின் கூட்டத்தை கூட்டி, முஸ்லிம்களுக்கு எதிரான கலவரத்தில், அவர்களை காப்பாற்றக்கூடாது.

ஹிந்துக்களுக்கு, அவர்களின் கோபம் தீரும் வரை கலவரங்களில் ஈடுபட அனுமதிக்க வேண்டும், என்றும் கண்டிப்பான முறையில் வாய்மொழி உத்தரவு போட்டு விட்டதாக, கூட்டத்தில் கலந்துக் கொண்ட பல ஐ.பி.எஸ். அதிகாரிகளும் உறுதி செய்தனர். இது போன்ற முழுமையான ஆதாரங்களை திரட்டி, எஸ்.ஐ.டி, க்கு கடந்த 2008 மே மாதம் முதல் இது வரை 9 ஆவணங்களை சமர்ப்பித்தும், அவர்கள் மோடியை காப்பாற்றும் முயற்சியிலேயே தீவிரம் காட்டுகின்றனர்.

எந்த சக்திகள் மோடியை காப்பாற்ற தொடர்ந்து முயற்சி செய்கின்றன என்று எனக்கு புரியவில்லை, என்றும் முன்னாள் DGP ஸ்ரீ குமார், வேதனை தெரிவித்துள்ளார். இது வரை தனது எந்த முயற்சியின் மூலமும் நீதி கிடைக்காததால், நேரடியாக மக்கள் மன்றத்தில் முறையிட முடிவு செய்து விட்டேன். எனவே ஜனநாயக நாட்டில், மக்கள் தான் இறுதி எஜமானர்கள் என்பதால், இந்த ஆதாரங்களை மக்கள் மன்றத்திலேயே சமர்ப்பிக்கிறேன் ........

சுதந்திர இந்தியாவில் முன்னாள்" DGP " க்கே இந்த நிலையா?

உதயம் சொன்னது…
இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
ராவணன் சொன்னது…

சோனியா என்ற இத்தாலி கும்பலைவிட இந்தியனான மோடி மோசமானவரா?