வியாழன், 4 ஆகஸ்ட், 2011

"டிஜிடல் பேனர்" போதையில் கூச்சமில்லாமல் திரியும் முதலமைச்சர்..!

  குப்பைத்தொட்டி போல் அருவருக்கும் புதுச்சேரி..                                        இன்று ஆகஸ்ட் 4 - ஆம் தேதி புதுச்சேரி முதலமைச்சர் என். ரங்கசாமிக்கு பிறந்தநாள். இதயங்கனிந்த பிறந்தநாள் வாழ்த்துகள்.  புதுச்சேரியே அல்லல்லோபடுகிறது. குப்பைத்தொட்டி போல் நாறுகிறது.  சுமார் இரண்டு கோடிக்கும் மேல் செலவு செய்து, ஊர் முழுதும் 25,000 க்கும் மேற்பட்ட டிஜிடல் பேனர்கள். விதவித மான கெட்டப்பில் பல அவதாரங்களை எடுத்து ரங்கசாமி ஆங்காங்கே காட்சியளிக்கிறார். சிவாஜி கணேசனும், கமல்ஹாசனும் தோற்று போய்விடுவார்கள். பல தமிழ் - ஆங்கில திரைப்பட நடிகர்கள் வேஷம் கட்டி நடித்த ஸ்டில்களில் அவர்களின் தலையை எடுத்துவிட்டு இவரது தலையை ஒட்டிவைத்து, இந்த பேனர்கள் சாலையின் இருப்பக்கங்களிலும் நிறுத்த பட்டிருக்கும். அதைப்பார்ப்பவர்களுக்கு வாந்தியே வந்துவிடும். அவ்வளவு அருவருப்பு. அவ்வளவு கோமாளித்தனம். இதைப்பார்க்கும் பொது 23 - ஆம் புலிகேசி திரைப்படம் தான் ஞாபகத்திற்கு வரும். நாளைய தலைமுறையினர் இந்த பேனர்களின் புகைப்படங்களைப் பார்த்தால் புதுச்சேரி முதலமைச்சர் பொழுது போகாமல் இப்படியெல்லாம் அலங்காரம் செய்து கொண்டு திரிந்திருக்கிறார் என்று நினைக்கக்கூடும்.     இதில் இவருக்கு சின்ன காமராசர் என்ற பட்டபேரு. இப்படி பேனர் வைத்து அவரை போற்றுவதை அவர் விரும்புகிறார். ஆனால் மக்கள் வசைபாடுகிறார்கள் என்பதை அவர் உணரவில்லை. இவரே இரவில் தன் நண்பர்களோடு சேர்ந்து நகர்வலம் வந்து இந்த பேனர்களை ரசிக்கிறார்.
               டிஜிடல் பேனர்கள் சுற்றுசூழலை பாதிக்கும் என்ற அடிப்படை அறிவு கூட இல்லாத ஒரு மாநில முதலமைச்சருக்கும் அவரைச் சார்ந்தவர்களுக்கும் இல்லையே என்பது தான் வேதனையாக இருக்கிறது.