வெள்ளி, 6 மே, 2011

மகளை காப்பாற்ற தலித் ராசாவை காட்டிக்கொடுத்துவிட்டார்


      ஆ. ராசா தான் குற்றவாளி என்று நீதிமன்றத்தில் ராம் ஜெத்மலானி வாதிட்டது ராசா தலித் என்பதாலா ?  கருணாநிதியின் மனசாட்சி தான் அவரை கேள்வி  
                                                 கேட்க வேண்டும்.

                  2 ஜி - ஸ்பெக்ட்ரம் முறைகேட்டைப்பற்றி விசாரிக்கும் புதுடெல்லி சி.பி.ஐ.  சிறப்பு நீதிமன்றத்தில் கனிமொழி சார்பில் ஜாமீன் மனுவை பிரபல வழக்கறிஞர் ராம் ஜெத்மலானி மே 6-ஆம் தேதி தாக்கல் செய்தார். அப்போது நீதிமன்றத்திற்கு கனிமொழி வந்தபோது உடன்பிறப்புக்களின் பட்டாளமே வந்தது. அதாவது பதினேழு திமுக எம்.பி.க்கள் கனிமொழிக்கு துணையாக வந்திருக்கிறார்கள் என்பது கவனிக்கத்தக்கது. இது நீதிபதியை மிரட்டுவதற்காகவா என்ற சந்தேகம் பொதுமக்களுக்கு எழுகிறது. 
                 இது ஒருபுறம் இருக்க...
                 ஜாமீன் கேட்டு வாதிட்ட வழக்கறிஞர் ராம் ஜெத்மலானி, 2 ஜி ஊழல் மற்றும் கலைஞர் டி.வி. க்கு  பணம் பெற்ற விவகாரத்தில் முழுபொறுப்பும் ஆ.ராசாவையே சாரும். கனிமொழிக்கு எதுவும் தெரியாது. கனிமொழிக்கு எந்தத் தொடர்பும் இல்லை. ராசா தான் முக்கிய குற்றச்சதியாளராக இருக்கமுடியுமே தவிர கனிமொழியல்ல என்று வாதிட்டிருக்கிறார். 
                 2 ஜி ஸ்பெக்ட்ரம் முறைகேட்டை பொருத்தவரையில் ராசா தான் எல்லாவற்றையும் செய்துள்ளார் என ஜெத்மலானி மீண்டும் மீண்டும் வலியுறுத்தி வாதிட்டார் என்பது குறுப்பிடத்தக்கது. 
                 இந்த வாதத்திலிருந்து நமக்கு இரண்டு தகவல்கள் உறுதியாகத் தெரிகிறது. 
                  ஒன்று.. 2 ஜி - ஸ்பெக்ட்ரம் ஊழல் ராசா மூலம் நடந்திருக்கிறது என்பதை கருணாநிதியே ஒப்புக்கொண்டிருக்கிறார். அந்தப்பணம் எங்கே போனது என்பதைத் தான் விசாரிக்கவேண்டும். 
                  இன்னொன்று... 2 ஜி - ஸ்பெக்ட்ரம் வழங்கியதில் ஆ. ராசா ஊழல் புரிந்திருக்கிறார் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட இடதுசாரி கட்சிகளும் மற்ற எதிர்கட்சிகளும் சுட்டிக்காட்டியபோது, ராசா தலித் என்பதால் தான் இப்படி பேசுகிறார்கள்.. அவர் உத்தமர்... யோக்கியர்... என்றெல்லாம் வக்காலத்து வாங்கிய அதே கருணாநிதி தான் இன்று நீதிமன்றத்திலேயே ராசா தான் ஊழல் புரிந்தார் என்று சொல்லி இருக்கிறாரே.. ராசா தலித் என்பதாலா ? அல்லது தன் அன்பு மகளை காப்பாற்றுவதற்கு ராசாவை காட்டிக்   கொடுத்தாரா ? அப்படியென்றால் ஊழல் செய்து கொள்ளையடித்த பணத்தை எங்கே வைத்திருக்கிறார் ? அந்த ஊழல் பணத்தில் ஆரம்பிக்கப்பட்ட கலைஞர் டி.வி-யை மூடிவிடுவாரா ? இப்படி பல கேள்விகள் நமக்கு எழுகின்றன.

                சுவிஸ் வங்கி உள்ளிட்ட வெளிநாட்டு வங்கிகளில் இருந்து இந்தியர்கள் பதுக்கிவைத்துள்ள கறுப்புப் பணத்தை மீட்பதற்காக உச்சநீதி மன்றத்தில் பொது நல வழக்குத் தொடர்ந்து வாதிட்டுவரும் ராம் ஜெத்மலானி பெருமளவில் ஊழல் புரிந்திருக்கும் கனிமொழியை காப்பாற்றுவதற்காக ஏன் வாதாடுகிறார் என்பதும் கேள்விக்குறியாக இருக்கிறது. 

கருத்துகள் இல்லை: