செவ்வாய், 3 மே, 2011

நம்ம கடற்கரைய விக்கபோராங்கோ....             நடுத்தர மக்களும் வசதியற்ற  மக்களும் செலவில்லாமல் பொழுதுபோக்கும் இடம் இயற்கை எழில் கொஞ்சும் நம்ம கடற்கரை தானுங்க.. அதான் நம்ம பீச்ச தான்  சொல்றேங்க.. நம் நாட்டை சுற்றி இருக்கிற மூன்று கடற்கரை பகுதிகளையும்  அந்நிய  முதலாளிகளுக்கு குறிப்பாக அமெரிக்க முதலாளிகளுக்கு  நமது மத்திய அரசாங்கம் விக்கப்போராங்கலாம்..
என்னங்க இது  அநியாயமா இருக்கு.. அவங்க என்ன கடற்கரைய வாங்கி நம்பள மாதிரி சுண்டலு.. கடலை.. பாப்கார்னு.. பலூனுன்னு  விக்கவாப்  போறாங்க.. அதுக்கெல்லாம் இல்லைங்க.. என்ன பயங்கரமுன்னு கீழே படிங்க..
                   மன்மோகன் சிங்  தலைமையிலான மத்திய அரசின் தனியார்மயக் கொள்கை என்பது கட்டுக்கடங்காத குதிரைபோல் தாறுமாறாக ஓடிக்கொண்டிருக்கிறது, இதுவரையில்  பூமியையும் பூமிக்கடியில் இருக்கும் நிலத்தடி நீரையும் ஆகாயத்தையுமே  அமெரிக்க முதலாளிகளுக்கு விற்றுக்கொண்டிருந்த ஆட்சியாளர்கள் இப்போது கடற்கரையையும் விற்பதற்கான ஏற்பாட்டை செய்கிறார்கள். அதன்  ஒரு பகுதியாக தான்  இந்திய கடலோரப் பகுதிகளை தனியார்மயப்படுத்தவும், கடற்கரையோரப் பகுதிகளில் உள்ள நிலப்பகுதிகளை வெளிநாட்டினர்க்கு விற்பனை செய்வதன் மூலம் ரியல் எஸ்டேட்டிலும் அந்நிய நேரடி முதலீட்டை அனுமதிப்பதும் போன்ற நடவடிக்கைகளில் மத்திய அரசு  இறங்கி இருக்கிறது.
                   இதன் மூலம் கடற்கரையோரங்களில் ஒவ்வொரு 30 கி.மீ. இடைவெளியில்  ஒரு துறைமுகம் கட்டிகொள்வதற்கு அமெரிக்க முதலாளிகளுக்கு அனுமதியளிப்பது என்று மத்தியில் ஆளும் காங்கிரஸ் -       தி மு க அரசு  முடிவெடுத்திருக்கிறது. முதலாளிகள்  அவர்கள் விருப்பம் போல் எத்தனை கிலோ மீட்டர் நீளம் வேண்டுமானாலும் கடற்கரையை  வாங்கிக்கொள்ளலாம். அவர்களிடம் விலையோ அல்லது  வாடகையோ மிகக்குறைவாகத் தான் மத்திய ஆட்சியாளர்கள்  வசூலிப்பார்கள். இந்த கடற்கரைப் பகுதிகளை வித்துட்டா அங்கே துறைமுகம் கட்டுவாங்கலாமா. நிறையபேருக்கு வேலை கிடைக்குமாமா.. அப்படித்தான் மத்திய அரசாங்கம் சொல்லிக்கிறாங்க.. ஆனா அதிலே இருக்கிற சூழ்ச்சி என்னன்னா...
             # அப்படி கட்டப்பட்ட துறைமுகத்தில் கப்பல் போக்குவரத்துக்கு கடலில் தேவையான ஆழம் போதாது. எனவே 16 மீட்டர் வரை கடலை ஆழப்படுத்திக் கொள்வார்கள். அப்படி ஆழப்படுத்துவதற்கு கடல் மணலை  தூர்வாருவார்கள். அப்படி தூர்வாரி  எடுக்கப்படும் மணல் குவியல்களை என்ன செய்யப் போராங்கத் தெரியுமா.. அலை வந்து மோதும் அந்த கரையை ஒட்டியப் பகுதி மற்றும்  கடல் தண்ணீரிலேயே கொட்டி பெரிய பரப்பளவுள்ள மணற்பகுதியை உருவாக்குவாங்க.. அப்படி உருவாக்கப்படும் நிலப்பகுதியே குறைந்தது 200 ஏக்கருக்கு மேல் கிடைக்குமாம்... அதை வெச்சி என்னா செய்வாங்கனா..!
குறைந்த வாடகைக்கு துறைமுகத்தை நடத்தும் அந்த அந்நிய முதலாளிகள் புதிதாய் உருவாக்கிய அந்த நிலப்பகுதியை ரியல் எஸ்டேட் மூலம் விற்பனை செய்வார்கள்.. அதுவும் யாருக்குன்னா.. அமெரிக்க முதலாளிகளுக்கு மட்டும் தான்...!
               # அப்படி வாங்கிய அந்த நிலப்பகுதியில் அந்த முதலாளிகள் நட்சத்திர ஓட்டல்கள் கட்டிப்பாங்கலாம்.. ரிசார்ட்.. மால்.. இப்படி என்னென்னமோ சொல்றாங்க.. அதெல்லாம் கட்டிப்பாங்கலாம்.. சிறப்பு பொருளாதார மண்டலம் தொடங்கலாமாம்.. தொழிற்சாலைகளெல்லாம் வருமாம்.. வெளிநாட்டில் தடை செய்யப்பட்ட ரசாயன தொழிற்சாலைகளெல்லாம் இங்கே தொடங்குவாங்கலாம்.  டவுன்ஷிப் கூட உருவாக்கலாமாம்..சிறிய விமானங்களும், ஹெலிகாப்டர்களும் அங்கு இறங்குவதற்கு வசதியாக சிறிய விமான  நிலையங்களையும்  கட்டுவாங்கலாம்.. இது எப்படி இருக்கு.. நல்லா இருக்கு இல்ல.. இன்னும் பாருங்களேன். ரொம்ப த்ரில்லிங்கா இருக்கும்..

                 # அதுமட்டுமல்ல.. வழக்கமாக இந்திய மீனவர்கள் மீன் பிடிக்க பயன்படுத்தும் இந்த பரந்த கடற்பகுதியில் 12 நாட்டிக்கல் மைலுக்கு மேல் இனி மீன் பிடிக்கச் செல்லக்கூடாது. மீனவகளை சீரழிக்கும் இன்னும் பல பயங்கரங்களை கொண்ட சர்வாதிகாரச் சட்டமொன்று பாராளுமன்றத்தில் தயார் நிலையில் உள்ளது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட இடதுசாரி கட்சிகளின் போராட்டங்கள் காரணமாக தற்சமயம் நிறுத்திவைக்கப்பட்டுள்ளது.. 
               # 12 நாட்டிக்கல் மைலுக்கு பிறகு ஏராளமாகவும் செழுமையாகவும் கிடைக்கும் மீன் இறால் போன்ற கடல் உணவுப் பொருட்களை
அமெரிக்காவிலிருந்து வரும் கப்பல்கள் மூலமாக கொள்ளையடித்து செல்வார்களாம்.. அந்தப் பகுதியில்  குடும்பத் தொழிலாக - பாரம்பரியத் தொழிலாக மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டிருக்கும் நம் நாட்டு மீனவர்கள் இனி மீன் பிடிக்க அனுமதிக்க மாட்டார்களாம்.. அவங்க வாய்ல கடல் மண்ணு தான்.. நமக்கெல்லாம்  இனிமேல் மீன் இறால் கிடைக்காது.. ஆனா வசதியுள்ளவர்கள் அதிக விலை கொடுத்து வாங்கிக்கொள்வார்கள்..
               இப்படி துறைமுகம் வருவதால் என்ன நன்மைன்னு கேட்டிங்கன்னா.. .. நிறைய இளைஞர்களுக்கு   வேலைவாய்ப்பு கிடைக்கும்.. அவங்க யாருன்னா.. அமெரிக்க இளைஞர்களுக்குத்தான் இங்கே வேலைவாய்ப்பு கொடுப்பாங்க.. இது நல்லா இருக்கு இல்ல.. நம் நாட்டு இளைஞர்கள் வாயில கைய வெச்சிகிட்டு இதை கடற்கரைக்குப் போய் எப்போதும் போல எது நடந்தாலும் வேடிக்கை பார்த்துகிட்டு இருக்கிற மாதிரி இதையும் வேடிக்கை பார்த்துகிட்டு   இருக்கவேண்டியது தான்.
               இந்த துறைமுகம் வருவதனால் நமக்கென்ன பாதகம் வரும்ன்னா..
               # பாரம்பரிய தொழில் செய்யும் நம் மீனவர்களுக்கு வேலையிழப்பு ஏற்படும் .. வருமானம் இழப்பு ஏற்படும்.. அவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும்..
               # கடற்கரையை ஒட்டியே காலங்காலமாக வாழ்க்கை நடத்தும் மீனவர்கள் அப்பகுதியிலிருந்து அப்புறப்படுத்தப்படுவார்கள்.. அதனால நமக்கென்னா.. நாம நல்ல இருப்போமில்ல..அது போதுமுன்னு நாம இருந்தா..நமக்கும் வெக்கிறாங்க ஆப்பு..
             #  எதிர்காலத்தில் மேலும் நிலத்தடிநீர் குறைந்து போய் குடிநீர் பஞ்சம் ஏற்படும்.. ( கவலைபடவேண்டாம் அங்கிருக்கும் mall லில் பாக்கெட்டிலும் பாட்டிலிலும் கண்டிப்பாக குடிநீர் கிடைக்கும். காசு கொடுத்து வாங்கிக்கொள்ளலாம்)
            # கடற் பகுதியிலிருந்து 30 கி.மீ. வரை விவசாயம் பாதிக்கப்படும்.. இதனால் எதிர்காலத்தில் மிகப்பெரிய  உணவு பஞ்சம் ஏற்படும்
            # இயற்கை வளங்களான  கடல் உணவுகள்  மீன், இறால் போன்றவை கொள்ளைபோகும்.. கடல் உணவிலும் பஞ்சம் ஏற்படும்..
            # கடல் நீரும் காற்றும் மாசுபடும்.. சுற்றுசூழல் பாதிக்கப்படும்.. புதிய புதிய நோய்கள் அதிகரிக்கும்.. மனிதன் மற்றும் மற்ற உயிரினங்கள் வாழுங்காலம் குறைந்துவிடும்..
             # வாரந்தோறும் நம் வீட்டுக் குழந்தைகளை பீச்சுக்கு போகலாம்னு அழைத்துச் செல்கிறோமே.. அது இனி முடியாது.. பீச்சுக்கு  போய் பாக்கனும்னா நுழைவுகட்டணம் வசூலிப்பார்கள்.. காசுக் கொடுத்து தான் இனி நாம் பீச்சில் காற்று வாங்க வேண்டும்.. பீச்சை இப்பவே படம்பிடித்து வெச்சிக்கொங்கோ..
இனிமேல்.. கடலோரம் வாங்கிய காற்று குளிராக இருந்தது நேற்று.. அப்படின்னு தான் நாம் பாடவேண்டியிருக்கும்.. ஒன்னே ஒன்னு மட்டும் சொல்லிக்கிறேனுங்க.. இவ்வளவு சொல்லியும் நமக்கு கோபமே வராதுன்னா 

பாத்துக்கோங்களேன்.. 

கருத்துகள் இல்லை: