திங்கள், 10 பிப்ரவரி, 2014

பெண்களை இழிவுப்படுத்தும் மோடியின் ஆபாச விளம்பரம்...!

          


         ''பிரதமர் கனவு வேட்பாளர்'' நரவேட்டை நரேந்திர மோடியின் விளம்பர உத்திக்கு ஒரு அளவே இல்லாமல் போய்விட்டது. இதுவரையில் மோடி போடும் கூச்சல்களையும், கூறும் பொய்களையும் கேட்பதற்கு நம் காதுகள் தான் கூசின. ஆனால் இப்போதோ தேர்தல் நெருங்க நெருங்க மோடியின் விளம்பரங்களையே பார்ப்பதற்கு கண்கள் கூசுகின்றன. மோடியின் அட்டகாசங்கள் தாங்கமுடியவில்லை. மோடியின் பதவி வெறி தலைவிரித்தாடுகிறது. 
             அண்மையில் வடஇந்திய இந்தி நடிகையான மேக்னாவை வைத்து ''ஆபாசப்படம்'' எடுத்து, அதில் நரேந்திர மோடியின் படத்தையும், தாமரையையும் பொறித்து வாக்காளர்களை மோடியின் பால் கவர்ந்திழுப்பதற்காக மோடியும், பாரதீய ஜனதா கட்சியும் புதுவிதமான தேர்தல் உத்தியை கையாண்டு இருக்கிறார்கள் என்பது வெட்கக்கேடானது. இச்செய்தி ''இந்தியா டுடே'' பத்திரிக்கையில்  வெளியிடப்பட்டிருக்கிறது. பெண்களை இழிவுப்படுத்தும், மோடியின் தரங்கெட்ட இந்த செயலை இந்திய மக்கள் அனைவரும் கண்டிப்பாக கண்டிக்கவேண்டும். ஜனநாயகத்தில் இது போன்ற செயல் என்பது ஒரு அவமான சின்னமாகும். 
             மோடியின் அயோக்கியத்தனமான இச்செயலை மகளீர் ஆணையத்திடமும், தேர்தல் ஆணையத்திடமும் பெண்கள் அமைப்பினரும், ஜனநாயக இயக்கத்தைச் சேர்ந்தவர்களும்,  சமூக ஆர்வலர்களும் முறையிடவேண்டும். புகார் செய்யவேண்டும். இதுபோன்ற தடைசெய்யப்பட வேண்டும். 
                  இப்படிப்பட்டவனை எல்லாம் நம்பி நாட்டைக்கொடுத்தா நாடு என்னாவது...?  நாட்டுல பெண்களே நடமாட முடியாது போலிருக்கே...!

1 கருத்து:

பெயரில்லா சொன்னது…

மோடியின் தேர்தல் பிரச்சார ஆபாச போட்டோவை India Today ல் வெளியிட்டது மக்கள் புத்தகத்தை வாங்கத்தானே. மக்கள் பார்க்கக்கூடாதவைகளை ஏன் வலையில் வெளியிடவேண்டும். நீங்களும் தவறு செய்கிறீர்கள். முதலில் உங்களை திருத்திக்கொள்ளுங்கள்.