சனி, 1 பிப்ரவரி, 2014

இன்னும் எத்தனைக் காலம் தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே...?
பாண்டிச்சேரியில் இன்று பந்த்...!
புதுச்சேரி காங்கிரஸ் கட்சி 
அறிவிச்சிருக்கு...!
இரண்டு நாட்களுக்கு முன்பு 
வெடிக்காத பைப் வெடிகுண்டு ஒன்று
மத்திய அமைச்சர் நாராயணசாமி
வீட்டருகே கண்டெடுத்தார்கள்.
வெடிகுண்டு வெடிக்கவுமில்லை.
உயிர் சேதமும் ஏதுமில்லை.
அமைச்சருக்கோ, அவரது உடமைகளுக்கோ 
எந்தவித சேதாரமும் இல்லை.
அப்புறம் எதுக்காக இந்த பந்த் 
என்று புரியாமல் புதுச்சேரி மக்கள்.
வெடிகுண்டை வெச்சதுக்காகவா....?
அல்லது
வெடிக்காமல் போனதற்காகவா...?
புரியவில்லை மக்களுக்கு.
நாளை முகூர்த்த நாள் ஆனதால்
இன்று மாலையும், நாளை காலையும்
ஏராளமான திருமணங்களையும், 
மற்ற விஷேசங்களையும்
வெச்சிருக்கிறவங்க அவதிப்படுறாங்க...!
இன்னும் எத்தனைக் காலம் தான்
ஏமாற்றுவார் இந்த நாட்டிலே...?

1 கருத்து:

kari kalan சொன்னது…

எல்லாம் ஒரு தேர்தல் ஸ்டண்ட் தாண்ணே. நம்ம ந- நாராயணசாமிக்கு சொல்லியா தரணும்:))