சனி, 8 மார்ச், 2014

உயர்ந்து நிற்கும் தியாகச் சின்னம்...!

நிலத்தில் விவசாயி
நேரம் பார்க்க
உயர்ந்து வரும்
செங்கதிர் போல்...
விவசாயின் வியர்வை
பட்டு
உயர்ந்து நிற்கும்
நெற்கதிர்போல்...
உழைப்பாளிகள்
நாற்பத்து நால்வரை
சருகாய் எரித்து
உயர்ந்த
தீக்கதிர் போல் ...
உழைப்பாளி மக்களின்
உரிமைக்குரலை
ஓங்கி ஒலிக்க
உயர்ந்து நிற்கும்
வெண்மணி தியாகிகள்
நினைவாலயம்
வாழியவே...வாழியவே....!
தொழிலாளி வர்க்கத்திற்கு
வழிகாட்டும்
கலங்கரை விளக்கமாய்....
மார்க்சிய பாடம்
கற்றுத்தரும்
பயிலரங்கமாய்...
தொழிலாளர் விடுதலைக்கான
போராட்டக்களமாய்...
வெண்மணி
தியாகிகள் நினைவாலயம்
மக்கள் ஜனநாயக
புரட்சிக்கு
பாதை வகுக்கட்டும்...!
தியாகிகள் 
விட்டுச்சென்ற 
பாதையில் 
அணிவகுப்போம்...!
இன்குலாப் சிந்தாபாத்...!

கருத்துகள் இல்லை: